Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று முதல், மின்வெட்டு – வெளியானது திடீர் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

இங்கு அந்த தொழில்சாலை இருந்து இருந்தால் யாழில் நன்நீர் வளம் காணாமல் போயிருக்கும் LANWA Sansta Cement க்கு  யாழில் இருந்து சுன்னாம்புகல் போகாதவரைக்கும் நிம்மதி பிரேமதாச உடனான யுத்த ஆரம்பத்தில் சுண்ணக்கல் அரவை இயந்திர பகுதிக்குள் எதிர்கால யாழ் நன்மை கருதி பாரிய சக்கை தொகுதியை இறக்கி வெடி வைத்து அழிக்கப்பட்டது .

இலங்கையிலுள்ள யாழ் குடா மயோசின் காலப்பகுதியில் தரை உயர்த்தலால் உருவானதாகக்கூறுகிறார்கள், முன்னர் அத்தரைப்பகுதி கடல் நீரின் அடியிலிருந்ததால், யாழ் குடா கடல் உயிரிகளின் உடல்கூறுகளை கொண்ட சுண்ணாம்புகல் நிலப்பிரதேசமாக உருவானதாகக்கூறுவார்கள்.

இவ்வகையான நிலவமைப்பு இலங்கையில் வேறு எங்கும் கிடையாது, அதனால் யாழ் பகுதியிலிருந்தே மூலப்பொருளை பெறுகிறார்கள் என கருதுகிறேன்.

  • Replies 70
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மீள இயக்கப்படுமா காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை?

 

வடக்கின் அடையாளத்தை சொல்வதற்கென்று பல இடக்குறியீடுகள் காணப்படுகின்றன. அவற்றில் யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான அடையாளமாக விளங்குவது காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை.

இயக்கமற்று முற்றாக முடங்கிப்போயிருக்கிற காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையின் கதைகளைத்தான் இங்கே காணப்போகிறோம்.

1950 ஆம் ஆண்டு வடக்கின் சூரிய உதயமென நிறுவப்பட்ட இந்தத் தொழிற்சாலை ஒரு காலத்தில் தமிழ் மக்களின் மகத்தான பொக்கிசமாகத் திகழ்ந்தது. யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக்தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது.

ஆரம்பிக்கப்ட்ட காலத்தில் இருந்து தொடர்ச்சியாக இயங்கி வந்த இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. இதன் காரணமாக தொழில் முடக்க நிலை ஏற்பட்டதுடன் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருமானம் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். குறித்த காலப்பகுதியில் காங்கேசன்துறை மயிலிட்டி தையிட்டி மாவிட்டபுரம் போன்ற பிரதேசங்களில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்த காரணத்தினால் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை அண்டிய பிரதேசங்கள் சூனியப்பிரதேசங்களாகின. குறித்த காலப்பகுதியில் இப்பிரதேசத்தை பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய இலங்கை இராணுவம் சீமெந்து தொழிற்சாலையை கையகப்படுத்தியது. அன்றில் இருந்து இன்று வரைக்கும் தொழிற்சாலையினுள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளின் பின்பு அண்மையில் உயர்பாதுகாப்பு வலயங்களின் கீழிருந்த பல பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியேற்றப்பட்டனர். அவர்களது  வாழ்க்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிற போதும் மூடப்பட்ட சீமெந்துத் தொழிற்சாலையின் கதவுகள் இன்னமும் மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.

இவ்வாறு மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற சீமெந்துத் தொழிற்சாலையினை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் காலத்திற்குக்காலம் முன்னெடுக்கப்படுவதான செய்திகளையும் அறிய முடிகிறது. 2008 ஆம் ஆண்டில் இந்திய நிறுவனம் ஒன்று காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை பொறுப்பேற்று மீள ஆரம்பிக்கப் போவதான அறிவிப்புக்கள் வெளிவந்தன. இவற்றிற்கான ஆவணக் கையெழுத்துக்களும் இடப்பட்டதாகவும் தொழிற்சாலையினை புனரமைக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன. எனினும் அந்த முயற்சி தள்ளிப்போனது.

இதனைத்தொடர்ந்து 2001ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனமும் அதன் ஏனைய பங்குதாரர்களும் இணைந்து தொழிற்சாலையினை மீள ஆரம்பிப்பதற்கான தமது நல்எண்ணத்தை தெரிவித்தனர். இதற்கான பெறுமதியாக சுமார் 1.5 பில்லியன் ரூபா முதலீடு மதிப்பிடப்பட்டது. எனினும் குறித்த பேச்சுவார்த்தை வெற்றி அடைய வில்லை.

ஆனாலும் இந்தியா சீனா சவுதிஅரேபியா உட்பட்ட சில நாடுகள் முதலீட்டு அடிப்படையில் சீமெந்துத் தொழிற்சாலையினை மீள இயக்குவதற்கு முன் வந்தன. இவற்றிற்கான நிதி முதலீடாக சுமார் நான்காயிரம் கோடி ரூபா வரை மதிப்பிடப்பட்ட போதும் செயலளவில் எவையும் வெற்றி பெறவில்லை.

இவற்றின் தொடர்ச்சியாக 2016 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அப்போதைய கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் சீமெந்து கூட்டுத்தாபனத் தலைவர் மற்றும் பணிப்பாளர் ஆகியோர் உட்பட தமிழ்த் தலைவர்களோடு யாழ் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து தொழிற்சாலையயை மீள ஆரம்பிப்பதற்கான முடிவுகள் உறுதி செய்யப்பட்டதுடன் சீமெந்து தொழிற்சாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு நிலமைகளையும் ஆராய்ந்தனர். ஆனால் இன்றுவரை அந்தத் தொழிற்சாலையின் கதவுகள் மீளத் திறக்கப்படவில்லை.

இவ்வாறாக தொடர்ச்சியாக இயக்கமற்ற நிலையில் காணப்படுகின்ற தொழிற்சாலையின் வளங்கள் சுரண்டப்படுவதாகவும் அதன் மூலமாக சட்டவிரோதமான செயற்பாடுகள் நிகழ்த்தப்படுவதாகவும் செய்திகள் பரவியுள்ளன. பொதுமக்கள் உள்நுழைய முடியாத உயர்பாதுகாப்பு வலயத்தினை சாதகமாக்கிக்கொண்டு தொழிற்சாலையிலுள்ள பாரிய இரும்பு உலைகள் பீப்பாய்கள் இயந்திரப்பாகங்கள் மற்றும் இரும்பு உபகரணங்கள் ஆகியவை வெட்டி அகற்றப்பட்டு பழைய இரும்பு விற்பனைக்காக அனுப்பப்பட்டதாகவும் அதன் மூலம் கிடைக்கப்பெற்ற சுமார் 1.8 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பணத்தில் கொள்ளுப்பிட்டியில் அலுவலக கட்டத்தொகுதி ஒன்று அமைக்கப்படுவதாகவும் அறிய முடிந்தது. இதனை ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் கத்துன் நெத்தி 2015ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அரசதொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு தெரிவித்திருந்தார்.

இப்படியிருக்க காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் உற்பத்திக்கான திட்டத்தை ஆரம்பிப்பதற்கு கைத்தொழில் அமைச்சு ஆரம்ப திட்டம் ஒன்றை  மிக அண்மையில் தயாரித்துள்ளது.

இதுதொடர்பாக கைத்தொழில் அமைச்சர் கடந்த பெப்ரவரி மாதம் 8ம் திகதி  நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் சீமெந்து தொழிற்சாலை வளாகத்திலுள்ள பயன்பாட்டுக்கு உதவாத பொருட்களை அகற்றல் தொடர்பாக கவனம் குவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் பின்வருமாறு காணப்டுகிறது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் சீமெந்து உற்பத்திக் கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு கைத்தொழில் அமைச்சு ஆரம்ப திட்டத்தை தயாரித்துள்ளது. அதற்கமைய குறித்த வளாகத்திலுள்ள பயன்பாட்டுக்கு உதவாத பொருட்களை அகற்றி தொழிற்சாலை வளாகத்தை துப்பரவாக்குவதற்கு அவ்விடத்தில் கண்காணிப்புச் சோதனையை நடாத்தி பரிந்துரைகள் அடங்கிய தரவு அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்திலுள்ள பயன்பாட்டுக்கு உதவாத கட்டிடங்கள்இ வடிவமைப்புக்கள் இயந்திர உபகரணங்கள் மற்றும் இரும்புத்துண்டுகள் மற்றும் வார்ப்புக்கள் போன்றவற்றை அரசாங்க பிரதம விலைமதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் அடிப்படையில் அரசாங்கத்தின் பெறுகைச் செயன் முறையைப் பின்பற்றி குறித்த பயன்பாட்டுக்கு உதவாத பொருட்களை அகற்றுவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவ்வாறு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை தொடர்பாக பல்வேறு விதமான தரவுகளும் தகவல்களும் காலத்திற்குக் காலம் வெளியிடப்பட்டு வருகிற போதும் குறித்த தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பாக மக்கள் தமது விருப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். இத்தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் குறித்த பிரதேசத்தில் வாழும் அனேகமான மக்களுக்கு நேரடியாகவும் மறை முகமாகவும் தொழில் வாய்ப்பு உறுதி செய்யப்படும். அது மட்டுமன்றி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி கொண்டு வரப்படுகின்ற சீமெந்து பைகளின்  போக்குவரத்து மற்றும் இதர செலவீனங்களைக் கருத்தில் கொண்ட விலைத்தளம்பல் நிலையானது சீர்செய்யபடுவதற்கான வாய்ப்புக்ளும் ஏற்படும் என்பதும் கவனிக்கத்தக்கது.

பொருளாதார ரீதியாக பல்வேறு சாதக நிலமைகளை வழங்கக்கூடிய குறித்த தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படுமாக இருந்தால் அதற்கான மூலப்பொருளாகிய சுண்ணக்கல் தொழிற்சாலையை அண்ணடிய பிரதேசங்களில் அகழ்ந்து எடுக்கப்படுகிற போது தரைக்கீழ் நீருடன் கடல்நீர் கலப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் இது சுற்றுச்சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிருந்தனர். தொழிற்சாலை இயங்கு நிலையில் இருந்த காலப்பகுதியில் சுண்ணக்கல் அகழ்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்கள் இன்றும் பாரிய குழிகளாக காட்சி அளிக்கின்ற நிலையில் இவை தொடர்பாகவும் சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே இவற்றினை கருத்தில் கொண்டு குறித்த மூலப்பொருளாகிய சுண்ணக்கல்லினை சாதகமான வேறு பிரதேசங்களில் இருந்து அகழ்ந்தெடுத்து தொழிற்சாலையயை மீள இயக்குவது குறித்த பரிசீலனைகளை மேற்கொள்ள முடியும் என்பது மக்களுடைய கருத்தாக இருக்கிறது.

சீமெந்துத் தொழிற்சாலை இயக்கப்படுகின்ற பட்சத்தில் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்ற கழிவுப்பொருட்களில் மிக முக்கியமாக தூசுக்கள் சுவாசம் சார்ந்த பாதிப்புக்களை அயலில் உள்ள மக்களுக்கு ஏற்படுத்தும் என்கின்ற அச்சமும் எழுப்பப்படுகின்றது. பெருமளவான தொழில்நுட்ப முறைகளை வேண்டி நிற்கின்ற இந்தத் தொழிற்சாலையில் உரியவகையிலான நவீன கழிவு சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்துகிறபோது அபாயங்கள் இல்லாதொழிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஓரு பிரதேசத்தின் அபிவிருத்தியில் அங்குள்ள நடுத்தர மற்றும் பாரிய கைத்தொழிற்சாலைகளின் பங்களிப்பு என்பது கணிசமானது. ஆனால் அவை புத்துயிர் பெறுகிறபோது அங்குள்ள இயற்கை வளங்களினதும் மக்களினதும் நிலையான வாழ்வியலை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்படுவது சிறப்பு.

தமிழ்க்குரலுக்காக- சர்மிலா வினோதினி.

https://thamilkural.net/thesathinkural/views/174068/

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படுமாக இருந்தால் அதற்கான மூலப்பொருளாகிய சுண்ணக்கல் தொழிற்சாலையை அண்ணடிய பிரதேசங்களில் அகழ்ந்து எடுக்கப்படுகிற போது தரைக்கீழ் நீருடன் கடல்நீர் கலப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் இது சுற்றுச்சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிருந்தனர்.

ஏற்கனவே தண்ணீருக்கு தவண்டையடிக்கும் பிரதேசத்தில் மேலும் தண்ணீர் தட்டுப்பாட்டை  கொண்டு வரும் .

21 minutes ago, vasee said:

இவ்வகையான நிலவமைப்பு இலங்கையில் வேறு எங்கும் கிடையாது, அதனால் யாழ் பகுதியிலிருந்தே மூலப்பொருளை பெறுகிறார்கள் என கருதுகிறேன்.

கப்பலில் இருந்து மூலப்பொருள்கள் இறங்கியதாக கூறுகிறார்கள் எங்கிருந்து என்பதை குறிப்பிடவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

நேரமிருப்பவர்கள்மட்டும் https://www.globalcement.com/news/itemlist/tag/Sri Lanka?start=20 கொள்ளைக்காரர்கள் எப்படி உள் நுழைந்து உள்ளார்கள் என்று பாருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

பொய்யுக்கு மேலை பொய் சொல்லி சொந்த இனத்தையே அழிக்கின்றார்கள். 


இருக்கும்  காங்கேசன் துறை சீமேந்து தொழிற்சாலையை அழித்து விட்டு புதிதாக என்னவெல்லாம் செய்கின்றார்கள் பாருங்கள்.

இலங்கையின் மிகப்பெரிய  சீமெந்து தொழிற்சாலை“LANWA Sansta Cement" நாளை அம்பாந்தோட்டையில் திறப்பு. 

Bild

Bild

Bild

Bild

 

இது திறப்பதற்காகவா சீமந்து தட்டுப்பாடு உருவாக்கப்பட்டது இல்லை உருவானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Netzqualität - Lösungen | ABB

நாட்டில்... இன்றும், மின்வெட்டு!

நாட்டில் இன்றும்(சனிக்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அந்த வலயங்களில் மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 1 மணி 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அந்த வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கிடையில், P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு இடையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நாளை 30/03/2022 GROUP T வலயத்தில் காலை 8am - 2pm வரையும் மாலை 6pm - 10pm வரையும் பத்து மணி நேர மின் தடை அமுலாகுவதாக CEB CARE செயலி மூலமாக தெரியவருகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Turn Off The Lights GIFs | Tenor  Lights Off GIFs | Tenor

நாட்டின் சில பகுதிகளில் இன்று தொடர்ச்சியாக 10 மணிநேர மின்வெட்டு!

நாட்டில் இன்றும்(புதன்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களில் இன்று காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை 6 மணித்தியாலங்களும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 10 மணிவரை 4 மணித்தியாலங்களும், இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை 2 மணிநேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் இன்று காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை 6 மணித்தியாலங்களும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 10 மணிவரை 4 மணித்தியாலங்களும், இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை 2 மணிநேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை தொடர்ச்சியாக 10 மணிநேர மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

https://athavannews.com/2022/1273907

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'கருவறையும் இருட்டு கல்லறையும் இருட்டு நடுவில் எதற்கு கரண்டு -இலங்கை மின்சார சபை-'

கருவறையும்... இருட்டு,
கல்லறையும்... இருட்டு,
நடுவில்... எதற்கு, கரண்டு...
-இலங்கை மின்சார சபை.- 😜

  • கருத்துக்கள உறவுகள்

Image

  • கருத்துக்கள உறவுகள்

நாளை 31/03/2022 GROUP T வலயத்தில் இரவு 12am - 3am வரையும் காலை 8am - 12pm வரையும் மாலை 4pm - 10pm வரையும் 13 மணி நேர மின் தடை அமுலாகுவதாக CEB CARE செயலி மூலமாக தெரியவருகிறது.

2 hours ago, ஏராளன் said:

நாளை 31/03/2022 GROUP T வலயத்தில் இரவு 12am - 3am வரையும் காலை 8am - 12pm வரையும் மாலை 4pm - 10pm வரையும் 13 மணி நேர மின் தடை அமுலாகுவதாக CEB CARE செயலி மூலமாக தெரியவருகிறது.

மிகவும் முக்கியமான நேரத்தில் மின்சாரத்தை நிறுத்துகின்றார்கள். பாடசாலையில் இருந்து அலுவலகங்கள் வரைக்கும் இயங்கவே முடியாத நேரம் இது.

இங்குள்ள Server கள் இப்படியான நீண்ட நேர மின்வெட்டை எப்படி சமாளிக்கின்றன? டீசல் / பெற்றோல் இல்லை என்பதால் ஜெனரேற்றர்களையும் இயக்க முடியாதே...?

  • கருத்துக்கள உறவுகள்

3 හවස 3 ට පක්ෂ පාට නොසලකා රට වෙනුවෙන් පාරට බහිමු.

https://www.facebook.com/sajithpremadasa

மீண்டும் ஒரு பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கு சஜித் அழைப்பு (ஞாயிறு மாலை) 

10 minutes ago, Sasi_varnam said:

3 හවස 3 ට පක්ෂ පාට නොසලකා රට වෙනුවෙන් පාරට බහිමු.

https://www.facebook.com/sajithpremadasa

மீண்டும் ஒரு பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கு சஜித் அழைப்பு (ஞாயிறு மாலை) 

சிங்களவர்களை மட்டுமே அழைக்கின்றார்!... மருந்துக்கும் தமிழில் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

Image

ஏன் ஏராளன் மின்வெட்டென்றால் சாமிபாடு கொண்டாட்டம் தானே?

4 hours ago, நிழலி said:

சிங்களவர்களை மட்டுமே அழைக்கின்றார்!... மருந்துக்கும் தமிழில் இல்லை

 

4 hours ago, Sasi_varnam said:

3 හවස 3 ට පක්ෂ පාට නොසලකා රට වෙනුවෙන් පාරට බහිමු.

https://www.facebook.com/sajithpremadasa

மீண்டும் ஒரு பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கு சஜித் அழைப்பு (ஞாயிறு மாலை) 

தமிழர்கள் தாங்களாகவே போய்ச் சேருவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் சில நாட்களுக்கு மக்கள் வாழ்வது மிகவும் கடினமாக இருக்கும் என்கிறது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

நாட்டில் இன்று 11 மணித்தியாலங்கள் மாத்திரமே மின்சாரம் இருக்கும்!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) 13 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய,

A,B,C,D,E மற்றும் F ஆகிய வலயங்களில் அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கும் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரையில் 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 06 மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 06 மணித்தியாலங்களுக்கும் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

P,Q,R மற்றும் S ஆகிய வலயங்களில் அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 06 மணித்தியாலங்களுக்கும் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 06 மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

M,N,O,X,Y மற்றும் Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5.30 மணி முதல் காலை 9 மணி வரை 03 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கும் மாலை 4 மணி முதல் 6 மாலை மணி வரை 02 மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

https://athavannews.com/2022/1274058

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎-‎03‎-‎2022 at 20:20, நிழலி said:

மிகவும் முக்கியமான நேரத்தில் மின்சாரத்தை நிறுத்துகின்றார்கள். பாடசாலையில் இருந்து அலுவலகங்கள் வரைக்கும் இயங்கவே முடியாத நேரம் இது.

இங்குள்ள Server கள் இப்படியான நீண்ட நேர மின்வெட்டை எப்படி சமாளிக்கின்றன? டீசல் / பெற்றோல் இல்லை என்பதால் ஜெனரேற்றர்களையும் இயக்க முடியாதே...?

காலமை  பாடசாலை நேரம் தானே1...பிள்ளைகள் பள்ளியில் தான் இருப்பார்கள்... இரவில் தான் படிக்க முடியாது ...மின்சாரத்தோடு சம்மந்தப்பட்ட தொழில்களை செய்பவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் 
 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழர்கள் தாங்களாகவே போய்ச் சேருவார்கள்.

இனவாத குதிரையை உசுப்பி மாறி மாறி ஆட்சியை கைப்பற்றி குட்டிசுவராக்கி, அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் அமெரிக்க முகவர் பசில், என பூசி மீண்டும் இனவாத குதிரையில் ஏறி அந்த வேகத்திலேயே சறுக்கி விழ கம்மன் பில, விமல் வீரவன்ஷா இன்னும் பலர் வரிசையில் காத்திருகிறார்கள். இப்போ  இனவாதம் கடந்து  சர்வதேச அளவில் நாடு பங்கு போடுமளவுக்கு நிலைமை. அதை புரிந்து கொள்ளாத கிணற்றுத் தவளைகளின் கனவு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் சில நாட்களுக்கு மக்கள் வாழ்வது மிகவும் கடினமாக இருக்கும் என்கிறது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

நாட்டில்... இன்றும், மின்தடை!

நாட்டில் இன்றும்(சனிக்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதன்படி, A முதல் F வரையான வலயங்களில் காலை 8மணிமுதல், நண்பகல் 12மணிவரையான காலப்பகுதியில் 4 மணிநேரமும், மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரையான காலப்பகுதியில் 3 மணிநேரமும், இரவு 9 மணிமுதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் ஒன்றரை மணிநேரமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

G முதல் L வரையான வலயங்களில் மதியம் 12 மணிமுதல் மாலை 4 மணிவரையான காலப்பகுதியில் 4 மணிநேரமும், மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் 3 மணிநேரமும், இரவு 10.30 முதல் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியில் ஒன்றரை மணிநேரமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

P Q R S வரையான வலயங்களில் காலை 8 மணிமுதல் மதியம் 12 மணி வரையான காலப்பகுதியில் 4 மணிநேரமும், மாலை 4 மணிமுதல் இரவு 7 மணி வரையான காலப்பகுதியில் 3 மணிநேரமும், இரவு 9 மணிமுதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் ஒன்றரை மணிநேரமும் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

https://athavannews.com/2022/1274398

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

மின்வெட்டு... தொடர்பான, அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினமும் 5 மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை நேற்று கோரிக்கை விடுத்தது. எனினும் அதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்திருந்தது.

இந்த நிலையிலேயே, 5 மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய, A முதல் W வரையான அனைத்து வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்பின்னர் மாலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

https://athavannews.com/2022/1274677

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

8ஆம் திகதி வரை நாளாந்தம் ஆறரை மணிநேரம் மின்வெட்டு!

நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நாளாந்தம் ஆறரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறரை மணிநேர மின்வெட்டு தொடர்பாக இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

இதன்படி  A முதல் L வரையான வலயங்களில் முற்பகல் 8 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரையில் சுழற்சி முறையில் 4 மணிநேரம் மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் பிற்பகல் 5 மணிமுதல் இரவு 10 மணிவரை இரண்டரை மணிநேரமும் மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் P முதல் W வரையான வலயங்களில் முற்பகல் 10 மணிமுதல் மாலை 6 மணிவரையில் 4 மணிநேரமும் மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை இரண்டரை மணிநேரமும் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் C.C.1 வலயத்தில் காலை 6 மணிமுதல் இரவு 9.30 வரையான மூன்றைரை மணிநேரத்திற்கு மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு தொடர்பான கால அட்டவணை.  

https://athavannews.com/2022/1275012

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.