Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய எம்.பி-க்கள் குறித்து சர்ச்சை பேச்சு - சிங்கப்பூர் பிரதமருக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டெல்லி: இந்திய எம்.பி-க்கள் குறித்து சிங்கப்பூர் பிரதமர் பேசியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், ''நேருவின் இந்தியாவில் தற்போது ஊடக அறிக்கைகளின்படி, மக்களவையில் கிட்டத்தட்டப் பாதி எம்.பி-க்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார்கள் நிலுவையில் உள்ளது.

 

India summons Singapores PM Lee Hsien Loongs statement on Indian MPs
மேலும் இந்திய‌ எம்.பி-க்கள் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதில் பல அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றாலும், இன்னும் இந்த நிலைதான் உள்ளது'' என்று பேசியிருந்தார்.

சிங்கப்பூர் பிரதமரின் இப்பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம், டெல்லியில் உள்ள தூதரக அலுவலகத்தில் இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வொங்கிற்கு சம்மன் அனுப்பி கடும் கண்டனத்தை பதிவு செய்தது.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பிரதமர் லீ சியென் லூங் பேசியதாவது, சுதந்திரத்திற்காகப் போராடி வென்றத் தலைவர்கள், பெரும் தைரியம், மகத்தான கலாசாரம் மற்றும் சிறந்த திறன் கொண்ட தலைவர்களாக வெளிப்பட்டனர்.
அவர்களில் டேவிட் பென்-குரியன்ஸ், ஜவஹர்லால் நேரு போன்றோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

புதிதாக ஒரு நாட்டை உருவாக்கும் தலைவர்கள், தங்கள் மக்களுக்கும் தங்கள் நாட்டுக்கும் ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், தங்கள் மக்களின் உயர்ந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கும் முயற்சி செய்கிறார்கள். ஆனால், அந்த தலைவர்கள் ஏற்படுத்திய உத்வேகத்தை அதற்கு அடுத்து வரும் தலைமுறை தக்கவைக்காமல் அதை அழித்துவிடுகிறது.

அரசியலின் அமைப்பு ஒவ்வொரு கட்டத்துக்கும் மாறிவருகிறது. அரசியல்வாதிகள் மீதான மரியாதை குறைந்து வருகிறது. வாக்காளர்களும் இதுதான் விதிமுறை என்று நினைக்கிறார்கள். தரம் குறைந்து, நம்பிக்கை சிதைந்து, நாடு அப்போது வீழ்ச்சியடையும்.

நேருவின் இந்தியாவில் தற்போது ஊடகங்கள் சொல்லும் செய்திகளின்படி, நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்டப் பாதி உறுப்பினர்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதில் பல அரசியல் உள்நோக்கம் கொண்டவை தான் என்றாலும், இன்னும் இந்த நிலைதான் இந்தியாவில் உள்ளது.
அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் சிங்கப்பூரின் மரபைக் காப்பாற்ற வேண்டும், அதைப் பாதுகாக்க வேண்டும். இதற்கு நாம் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும், விதிகளைச் சரியாகச் செயல்படுத்தவேண்டும், அதே விதிகளை அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்த வேண்டும், யாரும் சட்டத்திற்கு மேல் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்" என்று சிங்கப்பூர் பிரதமர் பேசியிருந்தார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரைப் புகழ்ந்து, தற்போதைய ஆட்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிங்கப்பூர் பிரதமர் விமர்சித்திருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

https://tamil.oneindia.com/

https://tamil.oneindia.com/news/delhi/india-summons-singapore-s-pm-lee-hsien-loong-s-statement-on-indian-mp-s-449152.html

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதை  சொன்னால்  எதுக்கு  எரியுது??

அந்தாள் இப்படி  ஆகிவிடவேண்டாம்  என்று தனது அடுத்த தலைமுறைக்கு  புத்தி  சொல்வது  எவ்வாறு தவறாகிவிடும்??

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் சாமானிய மக்களே இதை கூறுகிறார்கள். சிங்கப்பூர் பிரதமர் கூறியவுடன் (உண்மையை) தாதாக்களுக்கு கோவம் வந்து விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார் பிரதமர் லீ சியன் லூங். படம்: பிரதமர் லீயின் ஃபேஸ்புக் பக்கம்

ஐயா! அப்பிடியே இந்தியாவுக்கு பக்கத்து நாடான சிறிலங்காவுக்கும் ஒரு நாலு வரி சொல்லிப்போட்டு போங்கோ.....

ஏனெண்டால் அவையள் தான் இப்பவும் உங்கடை சிங்கப்பூர் கனவிலை திரியினம்.:cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 ஏக போகத்துக்கும் வைச்சு சாத்துறாங்கள்........ இஞ்சை போய் பாத்தியளெண்டால் தெரியும் 😁

 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்தியா என்ற ஒரு நாடே கிடையாது வடகத்தியர்கள்  தென்மாநிலத்தை கொள்ளையடிக்க செய்யப்பட்ட ஏட்பாடே இந்தியா எனும் மாயை பெயர் .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் பிரதமர் நேருவை பாராட்டியதால் சர்ச்சை; தூதரக அதிகாரியிடம் விளக்கம் கேட்ட இந்தியா

17 பிப்ரவரி 2022
 

லீ

பட மூலாதாரம்,PRIME MINISTER'S OFFICE, SINGAPORE

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் லீ சென் லூங், இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை பாராட்டிப் பேசியிருப்பது இந்தியாவில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் 'கிரிமினல் எம்பிக்கள்' இருப்பதாக அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதரக உயர் அதிகாரி சைமன் வாங்-கிடம், சிங்கப்பூர் பிரதமரின் கருத்து தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டறிந்ததாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமர் பேசும் வீடியோவை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிரும் காங்கிரஸ் தலைவர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நேருவை தேவையின்றி விமர்சிப்பதாக தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமையன்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டுப் பிரதமர் லீ செய்ன் லூங், "பெரும்பாலான நாடுகள் நிறுவப்பட்டு, உயர்ந்த லட்சியங்கள் மற்றும் உன்னத மதிப்புகளின் அடிப்படையில் பயணத்தைத் தொடங்குகின்றன. பெரும்பாலும் நிறுவனத் தலைவர்கள் மற்றும் முன்னோடி தலைமுறைக்கு பிறகு படிப்படியாக அவை மாறுகின்றன" என்று கூறினார்.

இஸ்ரேலையும் லீ தனது பேச்சின் போது குறிப்பிட்டார். நேரு மற்றும் பென் குரியன் ஆகியோரைப் பாராட்டினார். அவர்களைப் போன்ற தலைவர்கள் சிங்கப்பூரிலும் இருந்தார்கள் என்று பேசினார்.

"ஊடகச் செய்திகளின்படி, நேருவின் இந்தியாவில், மக்களவையில் கிட்டத்தட்ட பாதி எம்.பி.க்கள் மீது பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் உட்பட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன, அவை அரசியல் ரீதியானவை என்று கூறப்பட்டாலும்கூட" என லீ கூறினார்.

"இதே பாதையில் சிங்கப்பூர் பயணிப்பதைத் தடுக்க வேண்டியது முக்கியமானது" என்றும் அவர் பேசினார்.

லீயின் இந்தக் கருத்துகள் இந்தியாவில் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கின்றன. காங்கிரஸ் தலைவர்கள் இந்தக் காணொளியைப் பகிர்ந்து, நரேந்திர மோதி தலைமையிலான அரசை விமர்சித்துள்ளனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷும் இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமரின் கருத்து தொடர்பான இந்திய வெளியுறவுத் துறை, சிங்கப்பூர் தூதரிடம் ஆட்சேபம் தெரிவித்திருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.bbc.com/tamil/global-60422558

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையச் சொன்னோண டக்கெண்டு வெக்கம் வந்திட்டு.

அது கிடக்க நேரு மாமா எட்வினா உடன் போட்ட ஆட்டங்கள் சிங்கப்பூர் பிரதமருக்கு தெரியாது போல👀

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாலி said:

உண்மையச் சொன்னோண டக்கெண்டு வெக்கம் வந்திட்டு.

அது கிடக்க நேரு மாமா எட்வினா உடன் போட்ட ஆட்டங்கள் சிங்கப்பூர் பிரதமருக்கு தெரியாது போல👀

பிரியதர்சினி இந்திரா காந்தி ஆன கதையை  சிங்கப்பூர் பிரதமர் கேட்டா சொக்(shock)  ஆகிடுவாரு.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற கிரிமினல்கள் எல்லாரையும், எம்.பி. ஆக்கி வைத்துக் கொண்டு…
அதனை மற்றவன் சுட்டிக் காட்டியவுடன், குற்ற உணர்ச்சி ஏற்படும் என்று பார்த்தால்…. கோவம் வருகுது. 😂

செய்யிற, முள்ளமாரித் தனத்துக்குள்ளை…
காந்தி தேசம், கத்தரிக்காய் தேசம் என்று… பீலா வேறை. 🙁

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இருக்கிற கிரிமினல்கள் எல்லாரையும், எம்.பி. ஆக்கி வைத்துக் கொண்டு…
அதனை மற்றவன் சுட்டிக் காட்டியவுடன், குற்ற உணர்ச்சி ஏற்படும் என்று பார்த்தால்…. கோவம் வருகுது. 😂

செய்யிற, முள்ளமாரித் தனத்துக்குள்ளை…
காந்தி தேசம், கத்தரிக்காய் தேசம் என்று… பீலா வேறை. 🙁

காந்தி மட்டும் சும்மா ஆளா ?  வல்லிபுரக்கோவில் கோபுரத்தில் ஆளை சிலையாய் வைக்குமளவுக்கு விசுக்கோத்து இலவச படிப்பு கண்ணைமறைத்து உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

காந்தி மட்டும் சும்மா ஆளா ?  வல்லிபுரக்கோவில் கோபுரத்தில் ஆளை சிலையாய் வைக்குமளவுக்கு விசுக்கோத்து இலவச படிப்பு கண்ணைமறைத்து உள்ளது .

இதென்ன புதுக் கதையாய் உள்ளது.
கோயில் கோபுரத்துக்கும், காந்திக்கும் என்ன சம்பந்தம்?
ஏணி வைத்தாலும்…. எட்டாதே.
எமதர்மராஜனின் சிலை, காந்தி போல் தெரிகிறது ஆக்கும். 😜

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

இதென்ன புதுக் கதையாய் உள்ளது.
கோயில் கோபுரத்துக்கும், காந்திக்கும் என்ன சம்பந்தம்?
ஏணி வைத்தாலும்…. எட்டாதே.
எமதர்மராஜனின் சிலை, காந்தி போல் தெரிகிறது ஆக்கும். 😜

படத்தை தேடிட வைத்து விட்டீர்கள் அண்ணா .

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

படத்தை தேடிட வைத்து விட்டீர்கள் அண்ணா .

பெருமாள்…. நானும் அந்தச் செய்தியையும், படத்தையும்…. யாழ். களத்தில் பார்த்தேன்.
இந்த நேரம், படத்தை தேடி மினைக்கெடாதீர்கள்.

காந்தி சிலையை… கோபுரத்தில் இருந்து அகற்ரி, ஆறுமுக நாவலரின் சிலையை அங்கு வைக்க வேண்டும். 🙂

நம்ம ஆட்கள், சண்டைக்கு வருவார்களோ…. 😁 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

பெருமாள்…. நானும் அந்தச் செய்தியையும், படத்தையும்…. யாழ். களத்தில் பார்த்தேன்.
இந்த நேரம், படத்தை தேடி மினைக்கெடாதீர்கள்.

காந்தி சிலையை… கோபுரத்தில் இருந்து அகற்ரி, ஆறுமுக நாவலரின் சிலையை அங்கு வைக்க வேண்டும். 🙂

அதுக்குதான் வம்பு  எம்பஸி யாழில் வேலைவெட்டி இல்லாமல் உட்கார்ந்து இருக்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

அதுக்குதான் வம்பு  எம்பஸி யாழில் வேலைவெட்டி இல்லாமல் உட்கார்ந்து இருக்கினம் .

அட…. அந்த காந்தி சிலைக்கு, பாதுகாப்பு வழங்கவா… 
யாழ்ப்பாணத்தில் இந்தியன் எம்பஸி இருக்குது. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் பிரதிநிதிகள் என்போர் தனியே வானத்தில் இருந்தா குதிக்கினம் ..? 

IMG-20220219-073859.jpg

" மக்கள் எவ்வழியோ அரசன் அவ்வழி "☺️

இதில் கோர்ட் அடுத்த தலைமுறையில் தீர்ப்பு சொல்லும் வரையில் ஆரையும் "குற்றவாளி" என்படாதாம் . குற்றம் சாட்டபட்டவராம்.😊

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

IMG-20220219-073859.jpg

கேரளாவும், பீகாரும்…. கிரிமினல் வரிசையில் முன்னணியில் உள்ளார்கள்.

தமிழ் நாட்டு….  திருட்டு திராவிட கட்சிகள், பாதி அளவில் கிரிமினல்களை தம்மகத்தே கொண்டுள்ளார்கள்.

விஞ்ஞான பூர்வமாக…. தமிழ்நாட்டில் ஊழல் செய்பவர்களையும் கணக்கில் எடுத்தால், இன்னும் அதிகம் வரும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

காந்தி மட்டும் சும்மா ஆளா ?

மகாத்மா காந்தி

தனது உதவியாளர்கள் அபா மற்றும் மனுவுடன் காந்தி.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

காந்தி மட்டும் சும்மா ஆளா ?

இம்மாதிரி பாடல்களை கேட்டுத்தான், நம்பி வளர்ந்துள்ளோம்.. 👇👇

அதெல்லாம் பொய்யா கோப்பால்..? 🤭😛

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Paanch said:

 

தனது உதவியாளர்கள் அபா மற்றும் மனுவுடன் காந்தி.

மகாத்மா காந்தி

சார்!!!! 
உண்மை பேசி உத்தமனாக வாழ் என்று சொன்னவர் இவரா சார்? பிளீஸ் ரெல் மீ 😎

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

மகாத்மா காந்தி

சார்!!!! 
உண்மை பேசி உத்தமனாக வாழ் என்று சொன்னவர் இவரா சார்? பிளீஸ் ரெல் மீ 😎

இடுப்புத் துண்டுகூடப் பாரமாக இருக்கிறதே என்று முற்றும் துறந்த முனிவரான பட்டினத்தாரே இப்படிப் பாடியுள்ளபோது....  

"பிறந்த இடத்தை நாடுதே பேதைமட நெஞ்சம்

கறந்த இடத்தை நாடுதே கண்".

ஆசையைக் கொல்லமுடியாது அல்லலுற்றேன் என்று தனது சுயசரிதையில் குறிப்பிட்ட காந்தி அவர்கள், இள மங்கைகள் இருவரை அணைத்து மகிழ்ந்து கொண்டே, "உத்தமனாக வாழ்" என்று சொன்னதில் என்ன ஐய்யம் கொள்ளமுடியும் சாமிகளே.!!🤔

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ராசவன்னியன் said:

இம்மாதிரி பாடல்களை கேட்டுத்தான், நம்பி வளர்ந்துள்ளோம்.. 👇👇

அதெல்லாம் பொய்யா கோப்பால்..? 🤭

அந்த பாடல்கள் கேட்டு சாதரண பொதுமக்கள் சத்தியம் உண்மை என்று வாழ்வது சரி அரசியல்வாதிகள் வாழ்கிறார்களா ?

இந்தியா எனும் புதிய தேசத்துக்கு காந்தி என்பவர் விளம்பர பிராண்ட் மாத்திரமல்ல ஆங்கிலேயர்களுக்கும் புரியணுமா 500வருடங்களாக உலகம் முழுக்க அவர்கள் செய்த  படுகொலைகள் காந்தி எனும் மனிதரால் வெள்ளையடிக்கப்ட்டது காந்தியின்  உணவு மறுப்புக்கு பயந்து வெள்ளைக்காரர்  இந்தியா எனும் தேசத்தை கொடுத்து சென்றார்கள் எனும் கதை அம்புலிமாமா கதை. உண்மையில் இரண்டாவது உலகப்போர் நேரடியாக மறைமுகமாக இங்கிலாந்தின் ஆண்களின் எண்ணிக்கையில் முக்கால்வாசிக்கும் மேல் கபளீகரம் செய்து விட்டது.இந்த உண்மையை உணர பட்டதும்1945ல் ஜெர்மன் சரணடைவு1947 ல் இந்தியா சுதந்திரம் அப்படியே அவசர அவசரமாக இலங்கை தீவில்   1948ல் எந்தவித முன்யோசனையும் இன்றி பன்னி போல் பெருத்துக்கிடந்த சோம்பேறி சிங்களவர்களிடம் அதிகாரத்தை கொடுத்துவிட்டு ஒரே ஓட்டம்.

மேலும் 1927களில் இலங்கைக்கு மூன்றுவார விசிட் அடித்தார் அதுவும் பள்ளிகளுக்கு அங்கு என்ன சொன்னார் தெரியுமா ? அவர் சொன்னதை சீமான் சொல்லியிருந்தால் இனதுவேசத்தை தூண்டுகிறார் என்று சலங்கை கட்டி ஒரு கூட்டம் ஆடும் காந்தி சொன்னதை இந்தியா இலங்கை இருபகுதிகளிலும் கடைபிடித்தால் முக்கியம் அரசியல்வாதிகள் இரண்டு நாடும் எங்கேயோ போயிருக்கும்  அவர் சொன்னதை அப்படியே கொப்பி பேஸ்ட் .மகாத்மா காந்தி இலங்கையில் புத்தமத இறையியல் சங்கத்தால் நிறுவப்பட்ட பள்ளிகளுக்கும் சென்று அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உரையாற்றினார். தனது சொந்த மொழியைத் தவிர வேறு மொழியில் அறிவுறுத்தல்களைப் பெறும் ஒரு நாட்டின் குழந்தைகள் தற்கொலை செய்துகொள்வது உறுதி என்று காலியில் உள்ள மகிந்தா கல்லூரியில் தனது உரையின் போது காந்தி கூறினார்.

இப்படி சொன்னவரின் நாட்டில் ஹிந்தி மொழி திணிப்பு .

இலங்கையின் எல்லாப்பக்கமும் நூல் நூற்கும் ராட்டையுடன் திரிந்தவருக்கு இந்திய தென்மாநிலத்தில் இருந்து அடிமையாக லட்ஷக்கணக்கில் வேலை  செய்த தமிழர்களை சந்திக்க மனம் வரவில்லையாக்கும் அல்லது என் தேடலில் விடுபட்டு விட்டதோ யாரும் தெரிந்தால் கூறவும்.

இப்படி தோல்வி களை கருத்தாக கொண்ட விளம்பர மனிதரின் உருவத்தை கோயில் கோபுரத்தில் வைப்பது சுத்த அபத்தம் முடிந்தால் அவர் சொன்ன கருத்தை நடைமுறைப்படுத்துங்கள் அதன் பின் நாங்களே பார்த்துக்கொள்கிறோம் .

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

...

இந்தியா எனும் புதிய தேசத்துக்கு காந்தி என்பவர் விளம்பர பிராண்ட் மாத்திரமல்ல ஆங்கிலேயர்களுக்கும் புரியணுமா 500வருடங்களாக உலகம் முழுக்க அவர்கள் செய்த  படுகொலைகள் காந்தி எனும் மனிதரால் வெள்ளையடிக்கப்ட்டது காந்தியின்  உணவு மறுப்புக்கு பயந்து வெள்ளைக்காரர்  இந்தியா எனும் தேசத்தை கொடுத்து சென்றார்கள் எனும் கதை அம்புலிமாமா கதை. உண்மையில் இரண்டாவது உலகப்போர் நேரடியாக மறைமுகமாக இங்கிலாந்தின் ஆண்களின் எண்ணிக்கையில் முக்கால்வாசிக்கும் மேல் கபளீகரம் செய்து விட்டது.இந்த உண்மையை உணர பட்டதும்1945ல் ஜெர்மன் சரணடைவு1947 ல் இந்தியா சுதந்திரம் அப்படியே அவசர அவசரமாக இலங்கை தீவில்   1948ல் எந்தவித முன்யோசனையும் இன்றி பன்னி போல் பெருத்துக்கிடந்த சோம்பேறி சிங்களவர்களிடம் அதிகாரத்தை கொடுத்துவிட்டு ஒரே ஓட்டம்.

...

இது, அக்கால சுதந்திர போராட்டம் பற்றிய விவரம் தெரிந்த எல்லோரும் அறிந்த விடையம்தான்.

யாரையாவது போற்றி புகழ வேணும்தானே? பெயரை தக்க வைத்துக்கொண்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை ஈழம் பின்னாளில் கிடைத்தால், அப்பொழுது 'சம்பந்தன் அகிம்சையுடன் சாதுர்யமாக சிங்களரிடம் பேசி வாங்கி தந்தார்' எனவும் சொல்ல வாய்ப்பிருக்கிறது. 🤭😋

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.