Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.png

  🙏Picture1.jpg

சந்தையில் கிட்டும் கணிப்பொறியின் இதயமான முத்து சிப்பி(Micro Processor) பெரும்பாலும் அமெரிக்காவிலுள்ள இன்டெல்(Intel) என்ற நிறுவனத்தால் வடிவமைத்து உற்பத்தி செய்து, இன்றுவரை பல வகை திறன் கொண்ட சிப்பிகள் (ப்ராசசர்)  சந்தைப்படுத்தபடுகின்றன.

சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் முதல் இவற்றை தொழில்வாரியாக பயன்படுத்த ஆரம்பித்து இன்றுவரை பல முத்து சிப்பிகளை கண்டுள்ளேன். அதில் முக்கியமானது இன்டெல் பென்டியம்(Intel Pentium) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட ப்ராசசர் மிக முதன்மையாக அதிக திறன் கொண்டது.

அந்த வகை சிப்பியைக் கொண்டு நான் வடிமைத்த கணிப்பொறியை பற்றிய கட்டுரையை உங்களுக்கு சிறிய தொகுப்பாக இங்கே எழுதலாமென உள்ளேன்..🌹

 

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன், உங்கள் எழுத்தில் எப்போதும் புதுமை இருக்கும்.
அதனை வாசிக்க, ஆவலாக உள்ளோம். தொடருங்கள். 👍🏼 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணிப்பொறியின் முக்கிய பகுதி இதயமாக செயல்படும் இந்த நுண்செயலி (Micro Processor) என்றால் என்ன..?

நுண்செயலி (Micro Processor) அல்லது முத்துச் சிப்பி என்பது ஒரு கணினியின் மைய செயல் அலகின் (CPU-Central Processing Unit) பெரும்பாலான அல்லது அனைத்து செயல்பாடுகளையும் ஓர் ஒற்றை ஒருங்கிணைந்த சுற்றில் (IC -Integrated Circuit அல்லது மைக்ரோ சிப்) தன்னகத்தே கொண்டதாகும்.

220px-Intel_4004.jpg

மைக்ரோ சிப்

 

முதல் நுண்செயலி 1970 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டு அதை மின்கணிப்பான்களில் பயன்படுத்தினர். அதில் 4 பிட் (Bit) வார்த்தைகளில் இரட்டைக் குறியீட்டு முறையில் குறியீடு செய்யப்பட்ட தசம(BCD) எண்கணிதம் பயன்படுத்தப்பட்டது.

டெர்மினல்கள்(Terminals), அச்சுப்பொறிகள், பல்வேறு வகையான தானியங்கு முறைமைகள் போன்ற 4 பிட் மற்றும் 8 பிட் நுண்செயலிகளின் பிற பல உட்பொதிக்கப்பட்ட பயன்பாடுகள் விரைவில் அதைத் தொடர்ந்து உருவாயின. 16 பிட் அணுகலம்சம் கொண்ட செலவு குறைந்த 8-பிட் நுண்செயலிகள் 1970களின் மத்தியில் மைக்ரோ கணினிகள் உருவாவதற்கும் வழிவகுத்தன.

கணினி செயலிகள் சில எண்ணிக்கை முதல் சில நூறுகள் வரையிலான டிரான்சிஸ்டர்களுக்கு சமமான சிறிய மற்றும் நடுத்தர அளவு கொண்ட IC களைக் கொண்டே நீண்டகாலமாக கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. மொத்த CPU அலகையும் ஒரு சிப்பில் ஒருங்கிணைத்ததால், செயலாக்கத் திறனின் செலவு வெகுவாகக் குறைக்கப்பட்டது.

எளிய அமைப்பில் இருந்த தொடக்க காலத்திலிருந்து நுண்செயலிகளின் திறனில் ஏற்பட்ட அதீத அதிகரிப்பானது, மிகச் சிறிய உட்பொதிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கையடக்க சாதனங்களில் இருந்து மிகப் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் வரையிலான அனைத்திலும் ஒன்று அல்லது அதற்கதிகமான நுண்செயலிகள் செயல் அலகுகளாக அமைந்து புரட்சி செய்ததால், பிற வகை கணினிகள் அநேகமாக வழக்கழிந்துபோக வழிவகுத்தது.

1970களின் தொடக்கத்திலிருந்து, நுண்செயலிகளின் திறனில் ஏற்பட்ட அதிகரிப்பானது மூரி விதியைப் பின்பற்றியே அமைந்துள்ளதாக தெரிகிறது, குறைந்தபட்ச செலவிலான உபகரணச் செலவைப் பொறுத்து, ஓர் ஒருங்கிணைந்த சுற்றின் சிக்கலான தன்மையானது ஒவ்வொரு ஆண்டும் இரட்டிப்பாகிறது என அவ்விதி கூறுகிறது.

மூலம்: விக்கிப் பீடியா

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

அந்த வகை சிப்பியைக் கொண்டு நான் வடிமைத்த கணிப்பொறியை பற்றிய கட்டுரையை உங்களுக்கு சிறிய தொகுப்பாக இங்கே எழுதலாமென உள்ளேன்..

படிக்க ஆவலாக இருக்கின்றோம் ராசவன்னியன் ஐயா!😀

ஒரு காலத்தில் கணிணியைப் பிரித்து மேய்ந்து பாகங்களை மாற்றி பல விடயங்களை சுயமாகவே கற்றிருக்கின்றேன்.  அநேகமான தடவைகள் எதுவுமே முதலாவது தடவையில் சரியாக வந்ததில்லை! சரியாக வந்தால் அதில் என்ன சவால் இருக்கின்றது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

படிக்க ஆவலாக இருக்கின்றோம் ராசவன்னியன் ஐயா!😀

ஒரு காலத்தில் கணிணியைப் பிரித்து மேய்ந்து பாகங்களை மாற்றி பல விடயங்களை சுயமாகவே கற்றிருக்கின்றேன்.  அநேகமான தடவைகள் எதுவுமே முதலாவது தடவையில் சரியாக வந்ததில்லை! சரியாக வந்தால் அதில் என்ன சவால் இருக்கின்றது!

நன்றி திரு.கிருபன்.

80 களின் மத்திய பகுதியில் நான் யுனிக்ஸ்(UNIX) இயங்கு தளம் மற்று நாவல் நெட்வேர்(Novell NetWare) போன்றவற்றை கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்பொழுது விண்டோஸ்(Windows) தனி இயங்குதளமாக இல்லை. இது எம்.எஸ்-தாஸ்(MS-DOS) இயங்குதளத்தின் மேல் இயங்கும் ஒரு ஊடுதள பாவனை மென்பொருளாகவே(GUI) இருந்தது.

கணிபொறி வன்பொருளின்(Hardware) உள்ளே இருக்கும் சில பாகங்களை சரியாக நிறுவ, இந்த அய்யார் க்யூ(IRQ)விற்காக ஜம்ப்பர்(Jumper)களை மாற்றி மாற்றி, இயங்குதளத்தை கணிப்பொறியில் வெற்றிகரமாக இயக்க அப்பொழுது நான் பட்டபாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. 🤔

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிரயோசனமான கட்டுரை தொடருங்கள் வன்னியர் ........ஆவலுடன் வாசிக்கின்றோம்.......!  👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Picture1.png

நாமும் கணணி பற்றிய புதிய தகவல்களை அறியக்கூடியதாக இருக்கும்.
தொடருங்கள் ராசவன்னியரே :gutenmorgen:

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வன்னியன் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

ஆவலுடன் வாசிக்கிறேன். தொடருங்கள் வன்னியன்.

  • கருத்துக்கள உறவுகள்

கணணிக்கு  தேவையான  பாகங்களை வாங்கி 

நானே  பொருத்தி அதை எனக்குத்தேவையான விடயங்களை  உள்ளடக:கியதாக இயங்கச்செய்வதுவரை செய்ததுண்டு.  ஆனால்  ஏதாவது  ஒரு  குறைபாடு  இருந்து கொண்டே இருக்கும்??

அதன்  பின்னர்  எமக்குத்தேவையானவற்றுடன் பார்த்து முழுமையாக  வாங்கும்  நிலை மலிவாகவும்

நேரத்தை  மீதப்படுத்துவதாகவும் வந்த  பின்னர்??

இப்ப  எல்லாம்  மறந்து  போச்சு

தொடருங்கள்  மதுரையார் நல்லதொரு  விடயம்

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியர் நீங்கள் மட்டுமல்ல பலரும் இதே மாதிரியான உதிரி பாகங்கள் வாங்கி தாமே கணனியை வடிவமைப்பதைப் கேட்டும் பார்த்தும் உள்ளேன்.

அந்த வகையில் உங்கள் அனுபவத்தையும் அதை வடிவமைத்தவுடன் ஊரெல்லாம் ஓடிஓடி போய் சொல்லி பெருமைப்பட்டீர்கள் என்பதையும் அறிய ஆவலாக உள்ளோன்(ம்).

  • கருத்துக்கள உறவுகள்

1990 ம் ஆண்டு எனது பதினாறே வயதான தம்பி கணனிக்குத் தேவையான பாகங்களை வாங்கி எமக்கு ஒரு கணனி வடிவடிவமைத்துத் தந்தான். அதை ஐந்து ஆண்டுகளாக துணி போட்டு மூடி தொடாமலே கவனமாக வைத்திருந்ததை நினைக்க இப்போது சிரிப்புவரும்.  

தொடருங்கள் அண்ணா

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் அண்ணா ...எங்கே மிச்சத்தை காணோம் 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுதுகிறேன்..
வேலைப்பளு அதிகமாகிவிட்டபடியால் உடனே தொடர முடியவில்லை, மன்னிக்கவும். 😒
விடுமுறை நாட்களில் நேரமெடுத்து செய்றேன்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் என்னிடமுள்ள டெல்(Dell Optiplex 860) கணணியை பிரித்து அதன் உட்பாகங்களை படம் எடுத்து இணைக்கிறேன்..((இதுவும் 14 வருட பழமையான கணணிதான்).

(அடுத்து வரும் திரிகளில் நானே உதிரி பாகங்களை வாங்கி பொருத்திய கணணியை விளக்குகிறேன்.)

IMG-20220319-WA0001.jpg     IMG-20220319-WA0003.jpg

ணணியின் முன்பக்க, பின்பக்க தோற்றங்கள்.

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220319-WA0002.jpg   

கணணியின் உட்புற "மதர்போர்டு" (MotherBoard)

"மதர்போர்டு" என்பது கணணியின் அடித்தளம்(Foundation) போன்றது.

நமது வீட்டை கட்ட திட்டமிடும்போது என்னென்ன அறைகள், எத்தனை தளங்கள், பின்னாளில் வீட்டை விரிவாக்கம்(Extension) செய்ய எப்படி இப்பொழுதே அஸ்திவாரம் போடுவது என சிந்தித்து கட்டுவதுபோல தான் கணணியின் மதர்போர்டும்.

இதனை வாங்கும்போதே சிறந்த போர்டை தேர்ந்தெடுப்பது மிக அவசியம். ஏனெனில் இந்த போர்டு மீது இணைக்கும் மற்ற உபகரணங்கள்(Additional cards) நாம் விரும்பும் வேகத்தில், வசதியில் செயல்பட இந்த போர்டு வடிவமைப்பை சரிபார்த்து வாங்க வேண்டும்.

IMG-20220319-WA0007.jpg

எனது கையில் இருப்பதுதான், கணணியின் மூளை என சொல்லப்படும் நுண்செயலி (Micro Processor)

இது 15 வருடங்களுக்கு முன் சந்தைக்கு வெளிவந்த "இன்டெல் கோர்-2 (Intel Core 2)" என்ற வகையை சார்ந்தது.

IMG-20220319-WA0009.jpg   IMG-20220319-WA0020.jpg

கணணியில் பிரித்தெடுத்த Intel Processor நுண்செயலி - மேற்புறமும், அடிப்புறமும்.

 

pr.jpg

நுண்செயலி மதர்போர்டில் உட்காரும் இடம்.

IMG-20220319-WA0012.jpg

 

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுண்செயலியை பற்றி..

31Y3ryGpQbL.__AC_QL70_ML2_.jpg     images?q=tbn:ANd9GcRIL9q7NRaeNf73Talh2fjbKrh8bBKlmfsnAZISDDxmS72NznEarrDxw5jfDWKwIndiD0U&usqp=CAU   new_snapdragon_image_chips-graphic_sun2.jpg?itok=1yalEjM8

நுண்செயலி(Micro Processor) என்பது ஒருவகை 'எலக்ட்ரானிக் சர்க்யூட்' ஆகும், இது எலக்ட்ரானிக் சாதனம் செயல்பட வேண்டிய சக்தியை செயலாக்குகிறது. இது கட்டளைகளையும், நிரல்களையும் சரியான முறையில் செயல்படுத்துகிறது. ஒரு கணினியின் மத்திய செயல்முறை அலகு (CPU) ஒரு நுண்செயலியின் எடுத்துக்காட்டு.

இந்த எலக்ட்ரானிக் கூறு, ஒரு கணினியின் மதர்போர்டின் ஒரு பகுதியாகும். இது ஆயிரக்கணக்கான மற்றும் சில நேரங்களில் மில்லியன் கணக்கான டிரான்சிஸ்டர்களுடன் ஒருங்கிணைந்த சுற்று (Integrated Circuit) என்று வகைப்படுத்தப்படுகிறது.

ஒரு சாதனத்தில் அதன் செயல்பாட்டின் முக்கியத்துவத்துடன், சில நேரங்களில் மனிதர்களின் மூளை மற்றும் இதயத்துடன் ஒப்பிடும்போது, "சிறியது" என்பதைக் குறிக்கும் அதன் ஆங்கில அர்த்தத்திற்கு இது மைக்ரோ என்று அழைக்கப்படுகிறது.

நுண்செயலிகளை அவற்றின் உள் மற்றும் வெளிப்புற வேகத்தால் வேறுபடுத்தி அறியலாம். இது வினாடிக்கு செயலாக்கப்பட்ட பிட்(Bits)களையும், நினைவக அணுகல் திறன் (Bus Speed) மற்றும் கணணி மட்டத்தில் செயலாக்கக்கூடிய வழிமுறைகள் மற்றும் நிரல்களின் திறனையும் தீர்மானிக்கிறது.

நுண்செயலிகளின் வகைகளும் உற்பத்தியாளரால் வேறுபடுகின்றன. நுண்செயலியை வடிவமைத்து, உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் பெரும்பாலான நிறுவனங்கள் இன்டெல் (intel), ஏ.எம்.டி(AMD) மற்றும் குவால்காம்(Qualcomm).

ஒவ்வொரு வகை நுண்செயலியும் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தையும், உள் தரவின் நினைவக அணுகல் அகலத்தையும் கொண்டுள்ளது. இவை Mhz என்று கடிகார வேகம் போல அளவிடப்படுபவை.

 

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Stock-old-man-e1514997093264.jpeg

இப்போதைக்கு இது போதும்..! 🤗

ஏதேனும்

சந்தேகம்..

சம்சயம்..

டவுட்டு..

இருந்தால் பதியவும்.

என்னால் முடிந்தளவு, தெரிந்தளவு வைத்து தெளிவுபடுத்துகிறேன்.😍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

shutterstock_200562773.jpg

யாருக்கும் நுண்செயலி பற்றி எந்த சந்தேகமும் இல்லையென எடுத்துக்கொள்ளலாமா..?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் உக்ரேனில் உக்கிரமாய் நிப்பதால் கொஞ்சம் தாமதமாய்த்தான் இதற்கு வருவார்கள்......நியாயமாய் ஏதாவது சந்தேகம் கேட்கவேணுமென்றால் நான்தான் கேட்கவேண்டும். எனக்கே நல்லா விளங்கீட்டுது......!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, suvy said:

எல்லோரும் உக்ரேனில் உக்கிரமாய் நிப்பதால் கொஞ்சம் தாமதமாய்த்தான் இதற்கு வருவார்கள்......நியாயமாய் ஏதாவது சந்தேகம் கேட்கவேணுமென்றால் நான்தான் கேட்கவேண்டும். எனக்கே நல்லா விளங்கீட்டுது......!   😂

நன்றி சுவி.

கிடைக்கும் விடுமுறை நாட்களில் இத்திரி பற்றி செம்மையாக செய்ய வேண்டுமென்பது விருப்பம். 'ஒருவேளை எனது தமிழாக்கம், சரிவர புரியவில்லையோ..?' என்றவொரு அனுமானம்.

உக்ரைன் போர் முடிந்தபின், திரியை தொடரலாமா? 😛  🤭

  • கருத்துக்கள உறவுகள்

நோ........முட்களின் ஊடே  ரோஜாபோல் போர் தன்பாட்டுக்கு நடக்கட்டும், நீங்கள் தொடருங்கள் மாஸ்டர்  பலன் தானாக கொட்டும்......!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுண்செயலிகளின் வகைகள்:

பொதுவாக நுண்செயலிகள் இயங்கும் வேகத்தை, "ஜிகா ஹெர்ட்ஸ்" (Ghz) என்று கடிகார அளவீட்டு வேகத்தில் குறிப்பிடுவார்கள்.நுண்செயலிகளின் உள்ளீட்டு வடிவமைப்பும் பலவித ஆராய்ச்சி முன்னேற்றங்களின் பயனாக காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வருகிறது. இவற்றை தலைமுறை மாற்றம் எனவும் குறிப்பிடுவது உண்டு.

உதாரணமாக, முதல் தலைமுறை நுண்செயலிகள்(First Generation Processors) 1971ம் ஆண்டில் ஆரம்பித்து இதுவரை 50 வருடங்களில் 12வது தலைமுறை நுண்செயலிகள்(12th Generation Processors) சந்தைக்கு வந்துவிட்டன.

"பழையன கழிதலும், புதியன புகுதலும்.." போன்று இப்பொழுது 10 வது தலைமுறைக்கு முன்பிருந்த நுண்செயலிகளைக்கொண்ட கணணிகளை சந்தையில் யாரும் வாங்குவதில்லை.

அதேபோல நுண்செயலிகள் உள்ளீட்டு கட்டளைகளை நிறைவேற்றும் செயல்முறை(Internal processing power) வடிவமைப்பும் 4பிட் (4Bit) வகையில் ஆரம்பித்து 4, 8, 16, 32 Bit என ஒவ்வொருவகையாக பரிணாம வளர்ச்சியடைந்து இப்பொழுது பயனாளர்களின் பொது சந்தையில் 64பிட் (64Bit) நுண்செயலிகள் வரை வெளிவந்துவிட்டன.

இவ்வகை பிட்(Bits)களைக்கொண்ட நுண்செயலிகளை கையாள, கணணியின் இயங்குதளமும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டுமே..? ஆகையால் கணணிகளின் இயங்குதளமும்(Operating System) அவ்வாறே மாற்றம்பெற்று இப்பொழுது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (Microsoft Windows) இயங்குதளமும் 64பிட் வகையில் கிடைக்கின்றன.

இப்பொழுது ஒரு சந்தேகம் வரலாம், 64பிட்(Bit) நுண்செயலிகளைக் கொண்ட கணணியில் 32பிட்(Bit) இயங்குதளத்தை(Operating System) நிறுவ இயலுமா..? அது செயல்படுமா..? எனக் கேட்டால், நிச்சயம் செயல்படும், ஆனால் இது 'யானை பலத்தை பசுவின் பலமாக குறைத்து பயன்படுத்துவது' போன்றது.

இன்னொரு முக்கிய விசயம், 32பிட் (Bit) நுண்செயலிகளைக்கொண்ட கணணியில் 64பிட்(Bit) இயங்குதளத்தை(Operating System) நிறுவ முடியாது.

நுண்செயலி பயனாளர்கள் சந்தையில் இன்டெல்(Intel) நுண்செயலிகளைக்கொண்ட கணணிகளே மிக அதிக பயனாளர்களை கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆகையால இனிவரும் திரிகளில் இவ்வகை நுண்செயலிகளை பற்றியே பார்ப்போம்..!

கீழேயுள்ள படம் இன்டெல்(Intel) நுண்செயலிகளின் சில வகைகளை விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள்..

2362913-orig.png

உங்களில் எத்தனை பேர் இம்மாதிரி தொழிற்நுட்ப விடயங்களை தீர விசாரித்து கணணிகளை வாங்குவீர்கள்..? அல்லது கடைக்காரர் சொல்வதை அப்படியே நம்பி வாங்கிவிடுவீர்களா..? 🤔

இத்திரிகளின் முடிவில், 'எம்மாதிரி சிறந்த கணணிகளை ஒவ்வொரு பட்ஜெட்களுக்குள் முக்கிய அம்சங்களை கருத்தில்கொண்டு ஒப்பீடு செய்து வாங்குவது..?' என சொல்கிறேன்..

அதற்கு முன்னால் நான் சொல்லிவரும் விடயங்கள், உங்களுக்கு புரிகிறதா..? என சொன்னால் நல்லது.😇

இல்லையெனில், நான்பாட்டுக்கு "குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதை"யாக எழுதி இத்திரி முடிந்துவிடும்..! 😛

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி உறவுகளே,

அடுத்த விடுமுறையில் சந்திக்கலாம்..!

அதுவரை.. 😍

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வன்னியன் அண்ணா ...நான் பின் தொடர்கிறேன் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.