Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

தம் இனத்தின் சுய இருப்புக்காக, சிங்கள பெளத்த பேரினவாதத்தின் கடும் அழித்தொழிப்பாலும் அடக்குமுறையாலும் வேறு எந்த வழியும் இன்றி போராட நிர்பந்திக்கப்பட்ட தமிழர்களின் விடுதலைப் போராட்டமும், முற்றிலும் மேற்கின் பக்கம் சாய்ந்து அருகிலிருக்கும் ரஷ்யாவின் கழுத்தை நெரிக்க முயன்று அதன் குரல்வளையையும் கருங்கடல் எனும் உயிர் நாடியையும் பிடுங்க முயன்ற கொழுப்பெடுத்த உக்ரேனையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பதே அடிப்படையில் தவறு.

உக்கிரேன் கொழுப்பெடுத்தது என்பதே தவறு. உக்கிரேன் தனித்துவமான இனம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ரஷ்யாவுக்கு அருகில் இருந்ததால்தான் ரஷ்யப் பேரரசின் கீழ் இருக்கவேண்டி வந்தது. ஸ்டாலின் காலத்தில் பல மில்லியன் மக்கள் பட்டினியால் சாகவேண்டி வந்தது. 1991 இல் நாட்டின் எல்லைக்கோடுகள் ரஷ்யாவுடன் சேர்ந்துதான் தீர்மானிக்கப்பட்டன. கிரைமியா உக்கிரேனுடன் இருக்கவே வாக்களித்தது. இப்படி வரலாறு இருக்க, ஏதோ உக்கிரேன் ரஷ்யாவைச் சீண்டி வலிந்து போரைத் தொடங்கியது போலச் சொல்லுகின்றீர்கள். 

  • Replies 477
  • Views 30.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, கிருபன் said:

உக்கிரேன் ரஷ்யா மீது வலிந்து போர் தொடுக்கவில்லை. அவர்கள் தற்காப்பு யுத்தம் புரிகின்றார்கள். அவர்களுக்கு நேட்டோ தாராளமாக ஆயுதங்கள் வழங்கினாலும், உக்கிரேன் இப்போரில் வெல்லமுடியாது. 

போரில் வெல்ல முடியாது என தெரிந்தும் நேட்டோவும் அதன் அரு வருடிகளும் உக்ரேனுக்கு தொடர்ந்து ஆயுதம் வழங்குவது இன்னும் அழிவுகளை உருவாக்கும் என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும்.🤪

அப்படியிருந்தும் அந்த தவறை செய்யும் கும்பல்களுக்கு வக்காளத்து வாங்குபவர்களை என்ன சொல்ல? ☺️

25 minutes ago, கிருபன் said:

ஏதோ உக்கிரேன் ரஷ்யாவைச் சீண்டி வலிந்து போரைத் தொடங்கியது போலச் சொல்லுகின்றீர்கள்

உக்ரேன் ஒருக்காலும் ரஷ்யாவை சீண்டவில்லை.
ரஷ்யாவின் எல்லைகளின் இருக்கும் நாடுகளை நேட்டோ எனும் போர்வையில் அமெரிக்கா தன் வசப்படுத்தி தன் வேலைகளை ரஷ்யாவுக்கு எதிராக செய்கின்றது.

நாலெழுத்து படிச்சவங்கள்  எண்டு தம்பட்டம் அடிச்சுப்போட்டு உலக அரசியல் என்னெண்டு தெரியாதவர்கள்.😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nunavilan said:

ஓம். உலகம் முழுக்க பன்னீரும், றோஜாவும் கொடுத்து அவற்றுக்கு தட்டுபாடு வரப்போகின்றது😀

ஆப்கானிஸ்தான்,ஈராக்,லிபியா,சிரியா,யேமன் எண்ட நாடுகளிலை அமெரிக்கனும் நேட்டோவும் அடிக்கேக்கை சனம் ஒண்டுமே சாகேல்லை.....அதெல்லாம் புஸ்வாணம் மாதிரி....சும்மா....சும்மா வெருட்டுறதுக்கு....வெடி கொழுத்தினவங்கள் 😷

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

நாலெழுத்து படிச்சவங்கள்  எண்டு தம்பட்டம் அடிச்சுப்போட்டு உலக அரசியல் என்னெண்டு தெரியாதவர்கள்.

உலக அரசியல் தெரிவதற்கு எல்லா பக்க வரலாறுகளையும் படிக்க முயலவேண்டும். மீம்ஸ் மூலம் அரசியல் கற்கமுடியாது. 

உங்களைப் போன்றவர்களுக்கு தெரிந்தது மிகமிக எளிமையான சமகால அரசியல்  மட்டுமே. அதைச் சார்ந்த அரசியல்நிலைபாடுகளும் சரிநிலைகளும் மட்டுமே உங்களுக்கு அளவுகோல். உங்களுடன் அணிசேராதவர்களை நையாண்டி செய்வது வெறும் கையாலாகத்தனம். ஆனால் இந்த நக்கல், நையாண்டிகள், பழிப்புக்கள் என்னை ஒதுங்கவைக்காது 😎

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விசுகு said:

நீங்கள் கோபிக்கவில்லை என்றால் நானும் ஒரு உண்மையை சொல்கிறேன்

இப்ப ஈழத்தில் அதை தானே செய்து கொண்டு இருக்கிறார்கள்???

அப்படியா விசுகு அண்ணா? ...  அப்ப எதுக்கு புலம்பெயர் நாட்டில் இருந்து வெறும் வாயால தமிழ்தேசிய வடை சுட்டுக்கொண்டு இருக்கிறம் ( நீங்கள் நான் உட்பட) 🤔

 ஒருவழியா புலம்பெயர் தமிழர்கள் செய்வது ஒரு வெத்து வெட்டு அரசியல் என்பது இப்போது தெரியவந்து இருக்கிறதே அந்தளவுக்கு மகிழ்ச்சி. 🙄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, கிருபன் said:

உலக அரசியல் தெரிவதற்கு எல்லா பக்க வரலாறுகளையும் படிக்க முயலவேண்டும். மீம்ஸ் மூலம் அரசியல் கற்கமுடியாது. 

உங்களைப் போன்றவர்களுக்கு தெரிந்தது மிகமிக எளிமையான சமகால அரசியல்  மட்டுமே. அதைச் சார்ந்த அரசியல்நிலைபாடுகளும் சரிநிலைகளும் மட்டுமே உங்களுக்கு அளவுகோல். உங்களுடன் அணிசேராதவர்களை நையாண்டி செய்வது வெறும் கையாலாகத்தனம். ஆனால் இந்த நக்கல், நையாண்டிகள், பழிப்புக்கள் என்னை ஒதுங்கவைக்காது 😎

கண்ட கண்ட எழுத்துக்களையும்,தாறுமாறான கருத்து உள்ள புஸ்தகங்களையும் படித்து விட்டு இங்கே வந்து வாந்தியெடுத்தால் பல எதிர்வாதங்கள் வரத்தான் செய்யும். அறப்படித்த முட்டாள்களின் மகுடங்களை அரசியல் நீரோட்டங்களில் நாம் பாத்தாயிற்று....

16 minutes ago, கிருபன் said:

உங்களுடன் அணிசேராதவர்களை நையாண்டி செய்வது வெறும் கையாலாகத்தனம். ஆனால் இந்த நக்கல், நையாண்டிகள், பழிப்புக்கள் என்னை ஒதுங்கவைக்காது 😎

யாரையும் ஒதுங்க வைக்கும் நோக்குடன் யாரும் இங்கு வருவதில்லை என நினைக்கின்றேன். உங்கள் நண்பர்களை தவிர.

1 hour ago, கிருபன் said:

உக்கிரேன் கொழுப்பெடுத்தது என்பதே தவறு. உக்கிரேன் தனித்துவமான இனம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ரஷ்யாவுக்கு அருகில் இருந்ததால்தான் ரஷ்யப் பேரரசின் கீழ் இருக்கவேண்டி வந்தது. ஸ்டாலின் காலத்தில் பல மில்லியன் மக்கள் பட்டினியால் சாகவேண்டி வந்தது. 1991 இல் நாட்டின் எல்லைக்கோடுகள் ரஷ்யாவுடன் சேர்ந்துதான் தீர்மானிக்கப்பட்டன. கிரைமியா உக்கிரேனுடன் இருக்கவே வாக்களித்தது. இப்படி வரலாறு இருக்க, ஏதோ உக்கிரேன் ரஷ்யாவைச் சீண்டி வலிந்து போரைத் தொடங்கியது போலச் சொல்லுகின்றீர்கள். 

2014 இல் ஏற்கனவே இருந்த ஆட்சியை கவிழ்த்து விட்டு அங்குள்ள ரஷியர்களுக்கு எதிராக இனவாதம் பேசிய மேற்குலகின் செல்லப் பிள்ளை செலன்ஸ்கி ஆட்சியேறும் போதே உக்ரேன் வலிந்து ஒரு போரை தன் மீது இழுத்து விட்டது.

சரி கிருபன், இன்று இந்தளவுக்கு ரஷியாவை எதிர்த்து உக்ரேனுக்கு மேற்குலகு மொத்தமாக உதவ முன்வந்தமைக்கான காரணம் உக்ரேன் மக்கள் மீதான பற்றுதலாலா? இந்தப் பற்றுதல் செச்னிய ரசிய எதிர்ப்பு தரப்பின் மேல் ரசியா போர் தொடுக்கும் போது எழவில்லை? 

நேரம் கிடைத்தால் இதனையும் வாசியுங்கள். செலன்ஸ்கியின் நாசிகள் மீதான பற்றுதலைக் காட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

2014 இல் ஏற்கனவே இருந்த ஆட்சியை கவிழ்த்து விட்டு அங்குள்ள ரஷியர்களுக்கு எதிராக இனவாதம் பேசிய மேற்குலகின் செல்லப் பிள்ளை செலன்ஸ்கி ஆட்சியேறும் போதே உக்ரேன் வலிந்து ஒரு போரை தன் மீது இழுத்து விட்டது.

ஆட்சியை இராணுவப்புரட்சி மூலமாகவா கவிழ்த்தார்கள்?

இப்படித்தான் உக்கிரேன் ஆட்சி ஜனநாயக வழியில் மாறியது..

  • ரஷ்ய ஆதரவாளர் விக்டர் யானகோவிச் 2010 தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுகிறார். நேட்டோவில் சேரும் திட்டம் கிடப்பில் போடப்படுகிறது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைய வேண்டும் எனும் குரல் இதற்குப் பின் வலுவடைகிது
  • 2013 நவம்பரில் உக்ரைன் மக்கள் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம் கையெழுத்தாவது ரத்துசெய்யப்பட்டது
  • போராட்டம் வெடித்தது. முதலில் சில ஆயிரம் பேர் கொண்டதாக ஆரம்பித்த இப்போராட்டம், சில நாட்களிலேயே ஒரு லட்சத்தைத் தாண்டியது.  இடதுசாரி, வலதுசாரி, உக்ரைன் தேசியவாதி என்று பல தரப்பினரும் பங்கேற்ற போராட்டமாக இது வளர்ந்ததால், ஒரு மாதக் காலத்தில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொட்டது . உக்ரைன் அரசு இதை ஒடுக்கும் விதமாகக் கடுமையாகவே நடந்துகொண்டது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 
  • பிறகு 2014 பிப்ரவரி மாதம் நாடாளுமன்றம் கூடியபோது அதிபர் விக்டர் யானகோவிச் பதவி இழப்பது உறுதியானது. சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு உருவாகியிருந்தது. விக்டர் யானகோவிச் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றார்
  • இது நடந்த ஓரிரு மாதங்களிலேயே உக்ரைன் ஆளுகைக்குள் இருந்த கிரைமியாவிலும் டோன்பாஸிலும் பிரிவினை கோரி வந்தவர்கள் அந்தப் பகுதிகளை சுயாட்சிப் பகுதியாக அறிவித்துக்கொண்டார்கள்; இதன் பின்னணியில் ரஷ்யா இருந்தது. 
  • ரஷ்ய ஆதரவு அதிபரான விக்டர் யானகோவிச் தப்பி ஓடிய பிறகு நடந்த தேர்தலில், பொர்ஷென்கோ அதிபரானார்; இவர் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்.
  • பொர்ஷென்கோவின் ஆட்சி முடிந்து 2019இல் நடந்த தேர்தலில், தற்போதையை அதிபரான ஜெலென்ஸ்கி பதவிக்கு வந்தார்
16 minutes ago, நிழலி said:

நேரம் கிடைத்தால் இதனையும் வாசியுங்கள். செலன்ஸ்கியின் நாசிகள் மீதான பற்றுதலைக் காட்டும்.

தமிழிலிலேயே உள்ளது.. நான் இன்னும் வாசிக்காததால் இணைக்கவில்லை.

உக்கிரேனின் வலதுசாரி இனவெறியர்களுக்கு ஆக 2 வீதம் ஆதரவே தேர்தல்களில் இருந்தது. அதை ஊதிப் பெருப்பிக்க சிலருக்கு தேவையாக இருக்கலாம். அதைவிட கூடிய ஆதரவு இனவெறியர்களுக்கு ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியாவில் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

உக்கிரேன் ரஷ்யா மீது வலிந்து போர் தொடுக்கவில்லை. அவர்கள் தற்காப்பு யுத்தம் புரிகின்றார்கள். 

போரினால் பாதிக்கப்படும் உக்கிரேனிய மக்கள் மீது போரினால் பாதிக்கப்பட்ட அனுபவம் உள்ள தமிழராகிய நாம் அனுதாபமும், ஆதரவும் காட்டவேண்டும். இனங்களின் சுதந்திரத்தை மதிக்கவேண்டும். ஆனால் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவுக்கும் சர்வாதிகாரி பூட்டினுக்கும் ஆதரவளிப்பது எந்த தார்மீக அடிப்படையில்?

நன்றாக சொன்னீர்கள்.
சீனாவே புரினின் உக்கிரேன் மீதான படையெடுப்பை சரி என்று சொல்லவில்லை. ஆனால் கண்டிக்கவில்லை.
நிழலி  புரினின்  உக்கிரேன் மீதான மோசமான ஆக்கிரமிப்பை நியாயபடுத்துகிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

சீனாவே புரினின் உக்கிரேன் மீதான படையெடுப்பை சரி என்று சொல்லவில்லை. ஆனால் கண்டிக்கவில்லை.

பிழை என்றால் பிழையென சொல்வதற்கு சீனாவுக்கு ஏன் வெட்கம்?

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்த பதிவு ஒன்று  பின்வருமாறு இருந்தது 

ஒரு குடும்பம் கணவனும் மனைவியும் நித்திரை கொள்ள போய் படுக்கையில் படுத்தார்கள....மனைவி சொன்னார் இந்த ரஷ்யாவுக்கு தேவையற்ற வேலை உக்ரேன் சுதந்திரமான நாடு நோட்டோவில் சேருவத...விடுவது அதன் சொந்த பிரச்சனை இதற்கு சண்டைப்போட்டுக்கொள்வது கூடாது....சற்று நேரத்தில் கணவன் சமையலறைக்கு சென்று பெரிய கத்தியை எடுத்து வந்து தலைமட்டில் வைத்து கொண்டு படுத்தான்....இதைப் பார்த்த மனைவி ஏன் கத்தியுடன் படுத்திருககிறீஙகள்  கொண்டு போய் வைத்து விட்டு வந்து படுங்கள் என்றாள்.....கணவன் சொன்னான்” பேசாமல் நித்திரையை கொள்ளுமாறு......மனைவி சொன்னார் எனக்கு பயமாக இருக்கிறது நீங்கள் நித்திரைகலக்கத்தில் எழும்பி என்னை வெட்டினாலுமென்று....கணவன் சொன்னார் இதோ பார. சொந்த கணவனையோ. நீ நம்பவில்லை   நான் கத்தி வைத்திருப்பது உனக்கு எப்படி பாதுகாப்பு இல்லையே அதேபோல உக்ரேன் நோடடோவிலிருப்பது ரஷ்யாவுக்கு பாதுகாப்பு இல்லை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

உலக அரசியல் தெரிவதற்கு எல்லா பக்க வரலாறுகளையும் படிக்க முயலவேண்டும். மீம்ஸ் மூலம் அரசியல் கற்கமுடியாது. 

உங்களைப் போன்றவர்களுக்கு தெரிந்தது மிகமிக எளிமையான சமகால அரசியல்  மட்டுமே. அதைச் சார்ந்த அரசியல்நிலைபாடுகளும் சரிநிலைகளும் மட்டுமே உங்களுக்கு அளவுகோல். உங்களுடன் அணிசேராதவர்களை நையாண்டி செய்வது வெறும் கையாலாகத்தனம். ஆனால் இந்த நக்கல், நையாண்டிகள், பழிப்புக்கள் என்னை ஒதுங்கவைக்காது 😎

சமகால அரசியல் தெரிந்தும் பலர் இந்தப் பிரச்சினையினை அணுகும் விதம் வியப்பளிக்கிறது. இதே திரியில் நான் பலமுறை கூறிய, ஆக்கிரமிப்பிற்குள் வாழும் இனமாகிய நாம் இன்னொரு அக்கிரமிப்புள் உள்வாங்கப்படும் இன்னொரு இனத்தின் அவலங்களை இன்றுவரை விளங்கிக் கொள்ள மறுப்பதும், அதனை நியாயப்படுத்துவதும் நாம் விடுதலையினை நோக்கிப் பயணிக்கும் கூட்டம்தானா என்கிற கேள்வியை எழுப்புகிறது.  உக்ரேனிய மக்களின் அவலங்களை வெறுமனே விமானமோட்டிகளின் தவறுக்காகப் நடக்கும் தண்டனைகள் என்றும், ரஸ்ஸிய - அமெரிக்க பலப்பரீட்சையில் ரஸ்ஸியாவைக் காரணமின்றி (புட்டின் ஒரு வரலாற்று நாயகர் என்கிற தமது பிரமிப்பை விட்டு நீங்க முடியாமல்) ஆதரிப்பதும் நடக்கிறது.

உக்ரேனியர்களின் மீதான ரஸ்ஸியர்களின் சரித்திர காலம் தொட்டு நடந்துவரும் ஆக்கிரமிப்பும்,  அடக்குமுறையும், படுகொலைகளும் , தொடர்ச்சியான மாற்றாந்தாய் நிலைப்பாடும் இவர்களில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லையென்றே எண்ணத் தொன்றுகிறது. அப்படித் தெரிந்திருந்தால், எமது விடுதலைக்கான போராட்டத்திற்கும், ரஸ்ஸியாவின் அடக்குமுறையிலிருந்தான உக்ரேனிய மக்களின் விடுதலைக்கான வேட்கைக்கும் இடையிலான ஒற்றுமையை உணர்ந்திருப்பார்கள். 

ரஸ்ஸிய, நேட்டோ, அமெரிக்க ஏகாதிபத்தியங்களுக்கானபலப்பரீட்சையில் அகப்பட்டுச் சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கும் உக்ரேனியர்கள் மீதும், அவர்களின் அழிக்கப்பட்டு வரும் தேசம் மீதும் எமக்கு கரிசணை இல்லை என்றால், எம்மீது எவருமே கரிசணைப்படவில்லையே என்னும் எமது ஆதங்கத்தினை நாம் வெளிப்படுத்துவதும் பயனற்றதாகவே இருக்கும். 

4 hours ago, Kandiah57 said:

நான் பார்த்த பதிவு ஒன்று  பின்வருமாறு இருந்தது 

ஒரு குடும்பம் கணவனும் மனைவியும் நித்திரை கொள்ள போய் படுக்கையில் படுத்தார்கள....மனைவி சொன்னார் இந்த ரஷ்யாவுக்கு தேவையற்ற வேலை உக்ரேன் சுதந்திரமான நாடு நோட்டோவில் சேருவத...விடுவது அதன் சொந்த பிரச்சனை இதற்கு சண்டைப்போட்டுக்கொள்வது கூடாது....சற்று நேரத்தில் கணவன் சமையலறைக்கு சென்று பெரிய கத்தியை எடுத்து வந்து தலைமட்டில் வைத்து கொண்டு படுத்தான்....இதைப் பார்த்த மனைவி ஏன் கத்தியுடன் படுத்திருககிறீஙகள்  கொண்டு போய் வைத்து விட்டு வந்து படுங்கள் என்றாள்.....கணவன் சொன்னான்” பேசாமல் நித்திரையை கொள்ளுமாறு......மனைவி சொன்னார் எனக்கு பயமாக இருக்கிறது நீங்கள் நித்திரைகலக்கத்தில் எழும்பி என்னை வெட்டினாலுமென்று....கணவன் சொன்னார் இதோ பார. சொந்த கணவனையோ. நீ நம்பவில்லை   நான் கத்தி வைத்திருப்பது உனக்கு எப்படி பாதுகாப்பு இல்லையே அதேபோல உக்ரேன் நோடடோவிலிருப்பது ரஷ்யாவுக்கு பாதுகாப்பு இல்லை...

அதற்குத்தான் விவாகரத்து இருக்கே. தன்னை எப்போதாவது கொலை செய்துவிடுவான் என்கிற பயத்துடன் வாழ்வதை விட அவள் பிரிந்து செல்லலாமே? அதைத்தானே உக்ரேனும் செய்கிறது. ரஸ்ஸியாவுக்குக் கட்டுப்பட்டிருந்தால், எப்போதாவது தனது ஆயுத, ஆள்ப் பலத்தை வைத்து தன்னை ஆக்கிரமித்துவிடும் (இன்று நடப்பதுபோல) என்பதனால், ரஸ்ஸியாவின் முகாமிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகி தனக்கு பாதுகாப்பான முகாம் என்று நினைக்கும் முகாமுடன், இக்கதையின்படி கூறினால் தனக்குச் சரியானவன், நம்பக்கூடியவன், நடுநிசியில் கழுத்தை அறுக்க மாட்டாதவன் எனும் புதிய கணவனுடன் சேர்ந்து வாழ்வது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

உலக அரசியல் தெரிவதற்கு எல்லா பக்க வரலாறுகளையும் படிக்க முயலவேண்டும். மீம்ஸ் மூலம் அரசியல் கற்கமுடியாது. 

உங்களைப் போன்றவர்களுக்கு தெரிந்தது மிகமிக எளிமையான சமகால அரசியல்  மட்டுமே. அதைச் சார்ந்த அரசியல்நிலைபாடுகளும் சரிநிலைகளும் மட்டுமே உங்களுக்கு அளவுகோல். உங்களுடன் அணிசேராதவர்களை நையாண்டி செய்வது வெறும் கையாலாகத்தனம். ஆனால் இந்த நக்கல், நையாண்டிகள், பழிப்புக்கள் என்னை ஒதுங்கவைக்காது 😎

உதாரணத்திற்கு, இதே திரியில் ரஸ்ஸியா இன்று உக்ரேனில் செய்துவரும் அக்கிரமத்தை, "இந்தியாகூட ஈழத்தமிழருக்குச் சார்பாகப் போராடி ஈழம் எடுத்துக் கொடுக்கவே இலங்கைக்கு 1987 இல் வந்தது, ஆனால் புலிகள்தான் அவர்களுடம் மோதலை ஆரம்பித்து பகையினை உருவாக்கியவர்கள்" என்று, அன்று இந்தியா செய்ததையும் இன்று ரஸ்ஸியா செய்ததையும் ஒப்பிட்டு, அன்று ஈழத் தமிழர்களை இந்தியாவும் இன்று உக்ரேனியர்களை ரஸ்ஸியாவும் காக்கப் போராடுவதாகக் கருத்து எழுதியிருக்கிறார். 

இந்த லட்சணத்தில் சிலரது உலக அரசியல் தொடர்பான பிரக்ஞை இருக்கிறது. என்னத்தைச் சொல்ல?!!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

இப்படி எழுதப்பட்ட கருத்தை நான் கவனிக்கவில்லை! “இந்தியா ஈழம் எடுத்துக் கொடுக்கவே 1987 இல் இலங்கை வந்தது” என்று எவரும் எழுதுவதை நம்பும் அளவிற்கு ஒரு ஈழத்தமிழர் இருக்கிறார் என்றால் மேலே சொல்வதற்கு எதுவுமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இப்படி எழுதப்பட்ட கருத்தை நான் கவனிக்கவில்லை! “இந்தியா ஈழம் எடுத்துக் கொடுக்கவே 1987 இல் இலங்கை வந்தது” என்று எவரும் எழுதுவதை நம்பும் அளவிற்கு ஒரு ஈழத்தமிழர் இருக்கிறார் என்றால் மேலே சொல்வதற்கு எதுவுமில்லை.

"நான் ரஷ்யனுடன் நிற்கிறேன், டான்பாஸ் உக்ரைனில் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பு நடத்தினார், அவர்கள் மே 2014 இல் அதை வென்றனர், ஆனால் மேற்கத்திய மற்றும் நேட்டோவால் ஆதரிக்கப்படும் உக்ரேனிய ஜனாதிபதி, அவை எதையும் கேட்க விரும்பவில்லை, எனவே ரஷ்ய மொழிபேசும் உக்ரேனிய மக்களின் விருப்பத்தை செயல்படுத்த ரஷ்யர்கள் அங்கு சென்று உள்ளனர்... 

இப்படித்தான் நாங்கள் சுதந்திரத்துக்காக போராடியபோது xஎன்ற ஒரு நாடு எங்களுக்காக இலங்கையில் புகுந்து யுத்தத்தில் ஈடுபடும்போது(அந்த நாட்டுக்கு சொந்த தேவைகள் சில இருந்தாலும் எங்களுக்கு உதவுதால்) இப்படித்தான் ஜயகோ இலங்கை அப்பாவி மக்கள் x நாட்டினால் கொல்லப்படுகிறார்கள் நாங்கள் x நாட்டின் ஆக்கிரமிப்பை வெறுக்கிறோம் என்று இங்கு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்போர் வெள்ளையும் சொல்லையுமாக காட்டிக்கொள்ள நடுநிலை நக்கிகளாக தம்மை மாற்றிக்கொள்வார்கள் போல.."

ஈழம் என்று கூறப்படவில்லை, மாறாக "எமக்காகப் போராட வந்த ராணுவமாம் !

புலிகள் போராடியதுபற்றிக் கூறப்படவில்லை, எனது தவறு.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

இக்கதையின்படி கூறினால் தனக்குச் சரியானவன், நம்பக்கூடியவன், நடுநிசியில் கழுத்தை அறுக்க மாட்டாதவன் எனும் புதிய கணவனுடன் சேர்ந்து வாழ்வது. 

அது தான் சரியான முடிவு. அதை தான் உக்ரேனும் எடுத்தது. ஆனால் இலங்கை தமிழர் பஞ்சாயத்து கொலைகார  ரஷ்ய கணவனுடன் தான் உலகம் உள்ளவரை உக்ரேன் வாழ வேண்டும் என்று தீர்ப்பு அளித்துவிட்டதே.
நாட்டோ நாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள் பலர் ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பை நியாயபடுத்த புரினின் பிரசார பீரங்கிகளாக செயல்பட்டுவருகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

💪 வல்லரசு  ரஷ்யாவின், இருப்புக்கு…..
😋 வலசு உக்ரைனால், ஆபத்து வரும் என்று தெரிந்தால்….  🤔
புட்டின்… தனது நாட்டை காக்க,
உக்ரைனை….. அடித்து, நொருக்குவதில்… தப்பே இல்லை. 👍🏽 😁

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

1990 ஆம் ஆண்டில் பிச்சைப்பாத்திரமேந்திய ரஷ்யாவை யார் ?எதற்காக ?எப்படி ?இன்றைய நிலைக்கு வளர்த்து விட்டார்கள்.நம்ம இலங்கை திருநாட்டையும். இப்படி ஒரு நிலைக்கு வளர்த்து விடுவார்களோ........🤣 பக்கத்து நாட்டுடன். மோதும் வாய்ப்புகள் ஏதாகினும் தென்படுகிறதா? 🤪

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

பிழை என்றால் பிழையென சொல்வதற்கு சீனாவுக்கு ஏன் வெட்கம்?

சீனாக்கு உக்ரேனும் தேவை....எனவே… பிழை என்று சொல்ல முடியவில்லை சீனாக்கு தமிழர்கள் தேவையற்றவர்கள்  ....100%...இலங்கை உடனே நின்றார்கள் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புட்டினின் உற்ற நண்பனும் எனக்கு பிடித்த அரசியல்வாதியுமான gerhard schröder  அவர்கள் தனிப்பட்ட விடயமாக ரஷ்யா சென்று புட்டினை சந்தித்துள்ளார். சிலவேளை நல்லது நடக்கலாம்.

Altkanzler Schröder: „Können froh sein, einen Putin zu haben“

Schröder und Putin - "Eine Männerfreundschaft ohne Rücksicht auf Verluste"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ரஞ்சித் said:

அதற்குத்தான் விவாகரத்து இருக்கே. தன்னை எப்போதாவது கொலை செய்துவிடுவான் என்கிற பயத்துடன் வாழ்வதை விட அவள் பிரிந்து செல்லலாமே? அதைத்தானே உக்ரேனும் செய்கிறது. ரஸ்ஸியாவுக்குக் கட்டுப்பட்டிருந்தால், எப்போதாவது தனது ஆயுத, ஆள்ப் பலத்தை வைத்து தன்னை ஆக்கிரமித்துவிடும் (இன்று நடப்பதுபோல) என்பதனால், ரஸ்ஸியாவின் முகாமிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகி தனக்கு பாதுகாப்பான முகாம் என்று நினைக்கும் முகாமுடன், இக்கதையின்படி கூறினால் தனக்குச் சரியானவன், நம்பக்கூடியவன், நடுநிசியில் கழுத்தை அறுக்க மாட்டாதவன் எனும் புதிய கணவனுடன் சேர்ந்து வாழ்வது. 

உக்ரேனை கலியாணம் கட்ட  வாற புது புருசன் பழைய புருசனை முடிச்சுக்கட்டத்தான் வாறான் எண்டு தெரிஞ்சால்.....அடிச்சு நொருக்கிறதிலை தப்பே இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஷ்யா - உக்ரைன் போர் ஐரோப்பாவில் வன்முறைக் கும்பல் உருவாகும் அபாயம்!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

💪 வல்லரசு  ரஷ்யாவின், இருப்புக்கு…..
😋 வலசு உக்ரைனால், ஆபத்து வரும் என்று தெரிந்தால்….  🤔
புட்டின்… தனது நாட்டை காக்க,
உக்ரைனை….. அடித்து, நொருக்குவதில்… தப்பே இல்லை. 👍🏽 😁

தென்னாசியாவில் வல்லரசாக வளர முனையும் இந்தியா, ஈழத்தில் நடந்த விடுதலை போரை மும்மூரமாக பாரிய கட்டமைப்புகளோடு நடாத்தி வந்த புலிகளால் ஒரு நாள் நமக்கும் ஆபத்துவரும் என்று தெரிந்து கொண்டு தனது நாட்டை காக்க ஈழ விடுதலை போராளிகளை, ஈழ கட்டமைப்பை அடித்து நொறுக்க உதவி செய்ததில் தப்பே இல்லை!!! 
அப்படித்தானே சிறியர் 🤨

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Sasi_varnam said:

தென்னாசியாவில் வல்லரசாக வளர முனையும் இந்தியா, ஈழத்தில் நடந்த விடுதலை போரை மும்மூரமாக பாரிய கட்டமைப்புகளோடு நடாத்தி வந்த புலிகளால் ஒரு நாள் நமக்கும் ஆபத்துவரும் என்று தெரிந்து கொண்டு தனது நாட்டை காக்க ஈழ விடுதலை போராளிகளை, ஈழ கட்டமைப்பை அடித்து நொறுக்க உதவி செய்ததில் தப்பே இல்லை!!! 
அப்படித்தானே சிறியர் 🤨

ஓமோம் நீங்கள் சொல்லுறது சரிதான். கட்டுமரத்திலை மாலைதீவு பிரச்சனை தீர்க்க போனவங்களுக்கு சொந்த நாடு இருந்தால் சும்மா விடுவாங்களோ எண்டு நினைச்சும் இந்தியா அடிச்சிருக்கும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு நாடும் தங்கள் இறையாண்மைக்கு , தங்கள் நாட்டுக்கு பிரச்சனை வரப்  போகுது என்றால் பார்த்திட்டு சும்மா இருக்காது ...அதுவும் அவர்கள் நாட்டில் இருந்து பிரிந்து போனதொரு நாடு வீம்புக்கு எதிரி நாடுகளோடு சேர்ந்து பிரச்சனையை உருவாக்க முயலும் போது புட்டினும்  சரி  அவரது அப்பாவாக இருந்தாலும் சரி தாக்க முயற்சிப்பார்கள்.
தமிழீழம் என்று ஒரு நாடு கிடைக்க கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்க காரணம் தமிழ்நாடு பிரிந்து விடும் என்பதால் தான் 
கிருபன் , புட்டின் மேல் உள்ள கோவத்தில் உக்ரேனுக்கு சப்போட் பண்ணுகிறார் .
போர் நடக்க முதலே அதை தடுக்க எவ்வளவோ வழி நோட்டோ நாடுகளுக்கும் , அமெரிக்காவுக்கும் இருந்தும் , வேடிக்கை பார்க்கும் அவர்களை விட புட்டின் எவ்வளவோ மேல்.
உக்ரேன் , தனது அயல் நாட்டுடன் நட்பை பேணி இருக்க வேண்டும் ...அவர்களுக்கு அவர்கள் விரும்பியதை செய்ய உரிமை இருக்கு...ஆனால் , அது தனது  அயல் நாடுகளுக்கு எந்த வித  பாதகங்களை ஏற்படுத்தும் என்பதை யோசித்து முடிவு எடுத்திருக்க வேண்டும் .
உக்ரேனிய மக்களை பிழையான வழிக்கு இட்டு சென்று அவர்களது மரணத்திற்கும் ,இழப்பிற்கும்  முதலில் உக்ரேனிய ஜனாதிபதி பொறுப்பு ஏற்க வேண்டும் ...அவரோடு சேர்ந்து அமெரிக்காவும் , நேச நாடுகளும் இந்த பழியை ஏற்க வேண்டும்.
அமேரிக்கா தூண்டி விட்டு போட்டு பேசாமல் இருந்து விடும் ...எரிபொருள் ,காஸ் விலையேற்றங்களால் பாதிக்க பட போவது ஐரோப்பிய ,பிரித்தானிய வாழ் மக்கள் தான்.
அமெரிக்காவுக்கு வாழ் பிடிக்காத ஒரு நல்ல தலைவர் எப்ப பிரித்தானியாவுக்கு கிடைப்பா என்று பாத்திட்டு இருக்கன்.😀
இந்த சண்டை உக்ரேனிய மக்கள் தங்களாவே வலிந்து தேடிக் கொண்டது....அதன் பலனை அவர்கள் அனுபவிக்கிறார்கள்   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.