Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புடின் போர் குற்றவாளி – ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய தடை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புடின் போர் குற்றவாளி  – ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய தடை!

புடின் போர் குற்றவாளி  – ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய தடை!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யாவும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வெளியுறவுத் துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், கூட்டு இராணுவ தளபதிகளின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் அமெரிக்கா உடனான அதிகாரப்பூர்வ தொடர்பு நீடிக்கும் எனவும் விளக்கமளித்துள்ளது.

இதனிடையே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு போர்க்குற்றவாளி என அமெரிக்க நாடாளுமன்றம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்தத் தீர்மானத்தை குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாம் முன்மொழிந்தார். இதனை குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அனைவருமே ஆதரித்துள்ளனர்.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஏனைய நாடுகள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை முன்னெடுக்க உதவும்.

உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 24ஆம் திகதி முதல் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1272124

  • கருத்துக்கள உறவுகள்

 அரை மில்லியன் ஈராக்கிய குழந்தைகளை கொன்ற புஸ் போர்க்குற்றவாளி இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

Putin போர்க் குற்றவாளி  

George Bush ? 

Barack Obama ? 

Tony Blair ?

தேவ தூதர்கள் 😆

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகிலேயே மிக மோசமான கொடூரமான போர்க்குற்றங்களை செய்தவர்கள்  ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட வெள்ளை இனத்தவர் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

உலகிலேயே மிக மோசமான கொடூரமான போர்க்குற்றங்களை செய்தவர்கள்  ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட வெள்ளை இனத்தவர் மட்டுமே.

உக்ரேனுக்காக கண்ணீர் வடிக்கும் நீதிக் குஞ்சுகள் இந்தப் பக்கம் எட்டியும் பாராயினம் 😆

இதுக்கு என்ன பெயர் ? 

ஒருபக்கச் சார்பு அல்லது எசமான் விசுவாசம்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, Kapithan said:

உக்ரேனுக்காக கண்ணீர் வடிக்கும் நீதிக் குஞ்சுகள் இந்தப் பக்கம் எட்டியும் பாராயினம் 😆

இதுக்கு என்ன பெயர் ? 

ஒருபக்கச் சார்பு அல்லது எசமான் விசுவாசம்? 

அவர்கள் நாம் எழுதிய கருத்துக்களை மனிதாபிமாற்ற செயலாக பார்த்தார்கள்.நாமோ  மேற்குலகின் பக்க சார்பு இரத்தக்கண்ணீரை பகிரங்கமாக சொன்னோம்.அவ்வளவுதான்

எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்தப்பக்கம் வருவார்கள்? 😁

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தவறை பிற தவறுகளைச் சுட்டிக் காட்டி நியாயப்படுத்த முடியாது.

ரஷ்யாவின் சர்வாதிகாரி பூட்டினின் ஆக்கிரமிப்பை ஆதரிக்காமல் ஆதரிக்கும் மனிதநேயம் படைத்தவர்களுடன் உரையாடுவதே நேரவிரயம்.

பூனை “மியா” என்று கூப்பிட்டால், சிரைக்க ஓடிவரவேண்டுமா என்ன?😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, கிருபன் said:

ஒரு தவறை பிற தவறுகளைச் சுட்டிக் காட்டி நியாயப்படுத்த முடியாது.

ரஷ்யாவின் சர்வாதிகாரி பூட்டினின் ஆக்கிரமிப்பை ஆதரிக்காமல் ஆதரிக்கும் மனிதநேயம் படைத்தவர்களுடன் உரையாடுவதே நேரவிரயம்.

பூனை “மியா” என்று கூப்பிட்டால், சிரைக்க ஓடிவரவேண்டுமா என்ன?😜

வந்து சிரைச்சுத்தான் பாருங்கோவன்.

ஒரு சண்டையால ஏழை ஆபிரிக்க நாட்டு மக்களுக்கே  கோதுமை உணவுகள் போகவில்லை.அதை யோசிக்காதவன் மனிசன் இல்ல......

எட்டத்த நிக்கிறவன் சண்டைய ஊக்கிவிப்பான்....அதன் பலனை அனுபவிப்பவன் அயலவனும் உரியவனும்....

வா வந்து சிரைச்சு பார்

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

வா வந்து சிரைச்சு பார்

நமக்கு கொம்புக்கு மண்ணெடுக்க தோதான வேறு ஆட்கள் இருக்கின்றார்கள்😎

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போரில் ரஷ்யா வெற்றி பெற்று விட்டது என்று கற்பனை செய்வோம்’’  ...அதன் பின். அயல் நாடுகளுடன் போரை மேலும் விஸ்தரிக்க மாட்டாதா. ? அப்படி செய்யுமானால். ......அதனைப் பார்ப்போர்.  உக்ரேன் உடன் போர் செய்யும் போதோ. ரஷ்யாவுக்கு தகுந்த பதில் கொடுத்திருக்கவேண்டும்.  இவ்வளவு தூரம் விட்டது பிழை என்று கூறமாட்டார்களா?.  உக்ரேன் ரஷ்யாவையும். அயல்நாடுகளையும். ஒருபோதும் ஆக்கிரமிக்காது .......ஆனால் ரஷ்யா உக்ரேன்...மற்றும் அயல் நாடுகளை ஆக்கிரமிக்காது.  என்று என்னால் சொல்ல முடியவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

George Bush ? 

Barack Obama ? 

Tony Blair ?

இதில் மறைக்க என்னவிருக்கிறது?

இவர்கள் எல்லோருமே அப்பாவிகளை ஆயிரக்கணக்கில் கொன்றவர்கள் தானே? 

புஷ் ஈராக்கில் அநியாயமாக ஆக்கிரமிப்பை நடத்தியவர். ஆப்கானிஸ்த்தானில் அப்பாவிகளைக் கொன்றவர். டோனி பிளேயர் புஷ்ஷின் பின்னால் அலைந்து அதே மக்களைக் கொன்றவர்.

ஒபாமா, தானாக எதனையும் தொடங்காவிட்டாலும், முன்னவர்கள் ஆரம்பித்ததை உடனேயே நிறுத்தத் திராணியற்று இருந்தவர்.

ஆனால், இவர்கள் செய்ததற்காக புட்டின் இன்று செய்வது போர்க்குற்றம் இல்லை என்று ஆகிவிடுமா?

அதுவும் போர்க்குற்றம் தான் இன்று உக்ரேனில் நடப்பது போர்க்குற்றம் தான். 

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்படி பின்வருபவை அடங்கலாக, இவற்றுக்குள் மட்டும் அடக்கப்படமுடியாத ஏனய குற்றங்களும் போர்க்குற்றங்களாக பிரகடணப்படுத்தப் பட்டுள்ளன

1. போரில் ஈடுபடாத அப்பாவிகளை வேண்டுமென்று இலக்குவைத்துக் கொல்லுதல்.

2. சித்திரவதை, பாலியல் வன்கொடுமை, கட்டாயப்படுத்தி பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல்.

3. அப்பாவிகள் மீதான உடல்ரீதியான தாக்குதல்கள், பிணைக்கைதிகளாகப் பிடித்தல், சட்டத்திற்குப் புறம்பான வகையில் நாடுகடத்துதல், உணவை , மருந்தை யுத்தத்தில் ஆயுதமாக பாவித்தல், சரணடைந்தவர்களைக் கொல்லுதல்.

4. தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள், உயிரியல், ரசாயண ஆயுதங்களைப் போரில் பாவித்தல், போரில் சம்பந்தப்படாத பொதுமக்களை இலக்குவைத்துத் தாக்குதல், ராணுவ இலக்குகள் அல்லாத சிவிலியன் பகுதிகளான வைத்தியசாலைகள், போரில் காயப்பட்டோரைப் பராமரிக்கும் இடங்கள், அகதிகளாகத் தஞ்சம் அடையும் இடங்கள் மீதான தாக்குதல்கள்.

5. போர் நடக்கும் பகுதியின் சிவிலியன் கட்டிடங்கள், பொதுமக்கள் சொத்துக்கள் மீதான இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள்.

6. ஒரு சுதந்திரமான, இறமையுள்ள, பிரதேச ஒருமைப்பாட்டைக் கொண்ட நாட்டின் மீது இன்னொரு நாடு திட்டமிட்ட ரீதியில் தாக்குதல் நடத்துவது, பலவந்தமாக ஆக்கிரமிப்பது, அந்நாட்டின் ஒரு பகுதியைப் பிரித்து தன்னுடன் இணைத்துக் கொள்வது, அந்நாட்டுக்கான துறைமுகங்களைக் கைப்பற்றி முற்றுகைக்குள் வைத்திருப்பது.

இவற்றைச் செய்த அனைவருமே போர்க்குற்றவாளிகள்தான். எவருமே விதிவிலக்கல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

இந்த போரில் ரஷ்யா வெற்றி பெற்று விட்டது என்று கற்பனை செய்வோம்’’  ...அதன் பின். அயல் நாடுகளுடன் போரை மேலும் விஸ்தரிக்க மாட்டாதா. ? அப்படி செய்யுமானால். ......அதனைப் பார்ப்போர்.  உக்ரேன் உடன் போர் செய்யும் போதோ. ரஷ்யாவுக்கு தகுந்த பதில் கொடுத்திருக்கவேண்டும்.  இவ்வளவு தூரம் விட்டது பிழை என்று கூறமாட்டார்களா?.  உக்ரேன் ரஷ்யாவையும். அயல்நாடுகளையும். ஒருபோதும் ஆக்கிரமிக்காது .......ஆனால் ரஷ்யா உக்ரேன்...மற்றும் அயல் நாடுகளை ஆக்கிரமிக்காது.  என்று என்னால் சொல்ல முடியவில்லை...

நேட்டோவுடன் இணைந்து அமெரிக்கா, மேற்குநாடுகள் ராணுவ தளங்களை அமைக்க அனுமதி கொடுக்காதவரை மற்றய நாடுகளுக்கு அடிவிழாது!

3 hours ago, ரஞ்சித் said:

இதில் மறைக்க என்னவிருக்கிறது?

இவர்கள் எல்லோருமே அப்பாவிகளை ஆயிரக்கணக்கில் கொன்றவர்கள் தானே? 

புஷ் ஈராக்கில் அநியாயமாக ஆக்கிரமிப்பை நடத்தியவர். ஆப்கானிஸ்த்தானில் அப்பாவிகளைக் கொன்றவர். டோனி பிளேயர் புஷ்ஷின் பின்னால் அலைந்து அதே மக்களைக் கொன்றவர்.

ஒபாமா, தானாக எதனையும் தொடங்காவிட்டாலும், முன்னவர்கள் ஆரம்பித்ததை உடனேயே நிறுத்தத் திராணியற்று இருந்தவர்.

ஆனால், இவர்கள் செய்ததற்காக புட்டின் இன்று செய்வது போர்க்குற்றம் இல்லை என்று ஆகிவிடுமா?

அதுவும் போர்க்குற்றம் தான் இன்று உக்ரேனில் நடப்பது போர்க்குற்றம் தான். 

அப்போ ஏன் இஸ்ரேலை பாலஸ்தீனத்திற்கு செய்யும் அநியாயங்களுக்கு அமெரிக்காவோ, மேற்கோ போர்குற்றவாளியென்று சொல்லவில்லை??

நீங்கள் மேலே வரிசைப்படுத்திய காரணங்கள் இவர்களுக்கும் பொருந்தும்தானே!!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

உலகிலேயே மிக மோசமான கொடூரமான போர்க்குற்றங்களை செய்தவர்கள்  ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட வெள்ளை இனத்தவர் மட்டுமே.

ஆமாம். மகிந்த, கோத்தா எல்லாம் இந்த லிஸ்டில் இல்லை. அவர்கள் 2009 இல் தமிழ் மக்களை மீட்க மனிதாபிமானப் போர் நடாத்தினார்கள். பூட்டின் உக்கிரேனிய நாஜிகளை அழிக்க “விஷேட இராணுவ நடவடிக்கை” எடுத்துள்ளார். இவர்களுக்கு சமாதான நோபல் பரிசு கொடுக்க புலம்பெயர் தமிழர் சார்பில் பரிந்துரைப்போம். நானும் ஒரு கையெழுத்து வைக்கிறேன்😉

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Eppothum Thamizhan said:

நேட்டோவுடன் இணைந்து அமெரிக்கா, மேற்குநாடுகள் ராணுவ தளங்களை அமைக்க அனுமதி கொடுக்காதவரை மற்றய நாடுகளுக்கு அடிவிழாது!

அதே வேளை நேட்டோவில் உறுப்புநாடாக இருந்தாலும் அடிவிழாது.

உலகப்போர் ஒன்று ஆரம்பிக்காமல் இருப்பதற்கான அடிப்படையே எதிர்முகாம்களில் இருக்கும் நாடுகளில் அணுவாயுதம் இருப்பதுதான். இதனால்தான் அமெரிக்கா வடகொரியா மீது ஒன்றும் செய்யமுடியாமல் பொத்திக்கொண்டிருக்கின்றது. ரஷ்யா அணுவாயுதம் இல்லாத, நேட்டோ உறுப்பினர் அல்லாத உக்கிரேன் மீது ஆக்கிரமிப்பு செய்கின்றது.

யார் அதிகம் போர்க்குற்றங்கள் புரிந்தார், யார் குறைவாகப் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்பதை வைத்து உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பில் நாம் ஒரு நிலை எடுக்கவேண்டியதில்லை.

அடக்குமுறைக்கு ஆளான தமிழர்கள், இன்னோர் இனம் ஆக்கிரமிப்புக்கும், அடக்குமுறைக்கும் ஆளாக்கப்படும்போது அவர்களுக்கு தார்மீக ஆதரவு கொடுக்கவேண்டும். அமைதியை விரும்புபவர்கள் சண்டையை ஆதரிக்கவும் மாட்டார்கள், ஊக்குவிக்கவும் மாட்டார்கள். இதில் சண்டையை வலிந்து ஆரம்பித்த பூட்டினை ஆதரிக்க எதுவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

நேட்டோவுடன் இணைந்து அமெரிக்கா, மேற்குநாடுகள் ராணுவ தளங்களை அமைக்க அனுமதி கொடுக்காதவரை மற்றய நாடுகளுக்கு அடிவிழாது!

அப்போ ஏன் இஸ்ரேலை பாலஸ்தீனத்திற்கு செய்யும் அநியாயங்களுக்கு அமெரிக்காவோ, மேற்கோ போர்குற்றவாளியென்று சொல்லவில்லை??

நீங்கள் மேலே வரிசைப்படுத்திய காரணங்கள் இவர்களுக்கும் பொருந்தும்தானே!!

அதுவும் போர்க்குறம் தானே? யார் மறுக்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை இல்லையாம்.(30 வருடங்களாக)  -உபயம்: எரிக் சொல்கைம்

ஒரு மாதமே ஆகாத உக்ரேனில் நடைபெறுவது இனப்படுகொலையாம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

அதுவும் போர்க்குறம் தானே? யார் மறுக்கிறார்?

ஆனால் அதை அமெரிக்காவோ, மேற்கோ சொல்லவில்லையே! இப்போ ரஸ்சியாவிற்குத்தான் போர்க்குற்றவாளியென்று கூவுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பூனை  கொம்பு  என்பனவற்றை வாசிக்க.....

மிருகங்கள்  எவ்வளவோ  மேல்  என்று  புரிகிறது

ஏனெனில் மிருகங்கள் தமது  சொந்தங்களை ஒருபோதும் ஏற்றத்தாழ்வாக  பார்ப்பதே  இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

மொத்த பொதுமக்களின் இழப்பு உக்ரைனில் 1000 க்கு உள். இருந்தாலும்.. புட்டின் ஒரு போர்க்குற்றவாளி என்று ஒரு வித சர்வதேச விசாரணைகளும் இன்றி.. அமெரிக்கா.. பிரிட்டன் எல்லாம் அறிவிக்க முடியுது. புட்டினுக்கு பயணத்தடை.. சொத்து தடை வேறு.

இதே அமெரிக்காவின் முழுக் கண்காணிப்பின் கீழ்.. நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் சூத்திரதாரிகள் எல்லாம் அமெரிக்கா குடியுரிமை.. பிரித்தானிய பயணங்கள் செய்ய முடியுது.

உக்ரைன் காரனை ரஷ்சியன் கொன்றால்.. அது இனப்படுகொலை.. போர்க்குற்றம். தமிழனை சிங்களவனும்.. சர்வதேச வல்லரசுகளும் சேர்ந்து கொன்றால்.. அது நீதி..

எனக்குப் புரியவில்லை புட்டினை சர்வாதிகாரி என்பவர்கள்.. ஈழ இறுதிப் போரில்.. நாங்கள் 40 நாட்கள் விடாமல்.. கத்தியும் அந்தக் குரலை செவிமடுப்பது போல் பாசாங்கு காட்டி ஒரு இனப்படுகொலையை நடத்தி முடிக்க முண்டு கொடுத்த ஒபாமா.. பிளேயர்... சோனியா.. கருணாநிதி.. உள்ளிட்டவர்கள் எப்படியானவர்கள்..?!

ஈழத்தமிழினப் படுகொலைக்கு வழிவிட்டு.. போலிப் போர் நிறுத்தம் என்று கூவின.. கட்டுமரம் கருணாநிதியை ஒரு இனப்படுகொலை சர்வாதிகாரின்னு சொன்னால்... இங்கு புட்டினை சர்வாதிகாரி என்று மொழிபவர்கள் ஏற்றுக் கொள்வார்களா..??

ஈழப்போரில்..ஐநா விசாரணை அறிக்கையில் போர்க்குற்றவாளிகளாக இனங்காட்டப்பட்டவர்கள் எல்லாம்.. இதே மேற்கு நாட்டு தூதரங்களில் தூதர பதவிகளை அனுபவிக்க அனுமதித்தவர்கள்.. முக்கிய சிங்களத் தலைமைகளுக்கு குடியுரிமை கொடுத்து பாதுகாத்தவர்கள்.. புட்டினை நோக்கி கை நீட்ட என்ன அருகதை இருக்குது..??!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் போராட்டத்தின் நியாயத்தை எப்போதுமே ஏற்றுக் கொள்ளாமல்.. றோனால்ட் ரேகன் காலம் தொடங்கி ஒபாமா காலம் வரை பயங்கரவாதமுன்னு உச்சரிச்ச அமெரிக்கனுக்கு வால் பிடிக்கும் நாம்.. எமது போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் என்றாலும் சோசலிச கொள்கைக்கு உதவி நின்ற இந்திராவின் பின்னணியில் பங்கு வகித்த சோவியத் நாடு எவ்வளவோ மேல்..

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

இங்கே பூனை  கொம்பு  என்பனவற்றை வாசிக்க.....

மிருகங்கள்  எவ்வளவோ  மேல்  என்று  புரிகிறது

இதுதான் கொம்புக்கு மண் எடுப்பது..

spacer.png

நேற்று இரண்டுபேர் கொம்புக்கு மண் எடுத்துக்கொண்டிருந்தார்கள்😉👇🏾

On 17/3/2022 at 14:24, Kapithan said:

உக்ரேனுக்காக கண்ணீர் வடிக்கும் நீதிக் குஞ்சுகள் இந்தப் பக்கம் எட்டியும் பாராயினம் 😆

On 17/3/2022 at 14:37, குமாரசாமி said:

எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்தப்பக்கம் வருவார்கள்? 😁

7 hours ago, விசுகு said:

ஏனெனில் மிருகங்கள் தமது  சொந்தங்களை ஒருபோதும் ஏற்றத்தாழ்வாக  பார்ப்பதே  இல்லை

ஆமாம். அவை மார்க்சியம், லெனினிஸம், மாவோயிஸம் எல்லாம் படித்து சமத்துவ சிந்தனையில் திளைக்கின்றன. மானும், புலியும் அருகருகே இருந்து நீர் அருந்துகின்றன.😉

spacer.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொம்பு சீவி மண்ணெடுத்தால் மட்டும் போதாது செக்கு மாடுகளாய்..........😜

Pasumai Vikatan - 25 January 2021 - மாதம் ரூ.40,000... ஏற்றுமதியாகும்  மரச்செக்கு எண்ணெய்! | Mara Chekku oil business gives rupess 40000 per month  - Vikatan

ஒரு வட்டத்திற்குள்ளேயே நின்று.......😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஆமாம். அவை மார்க்சியம், லெனினிஸம், மாவோயிஸம் எல்லாம் படித்து சமத்துவ சிந்தனையில் திளைக்கின்றன. மானும், புலியும் அருகருகே இருந்து நீர் அருந்துகின்றன.

எனக்கு ஒருவர் கடைபகுதியில் வைத்து மத புத்தகம் ஒன்ற திணித்தார். தமிழராக தான் இருக்க வேண்டும். அந்த புத்தகத்தில் கடவுளின் உலகம் என்று ஒரு படம் போட்டிருந்தது அப்பா அம்மா குளக்கரையில் இருக்கிறார்கள். அவர்கள் பிள்ளைகள் ஒரு சிறுவன் ஒரு சிறுமி குளக்கரையில் விளையாடி கொண்டிருக்கிறார்கள் அருகில் சிங்கம், புலி, மான் குளத்தில் தண்ணீர் குடித்து கொண்டிருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2022 at 07:09, கிருபன் said:

நமக்கு கொம்புக்கு மண்ணெடுக்க தோதான வேறு ஆட்கள் இருக்கின்றார்கள்😎

இந்த அநாகரீகமான வார்த்தைப் பிரயோகத்தை எப்படி நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்? நிர்வாகம் எப்படி ஏற்றுக்கொள்கிறது? நிழலி இக்கருத்தாளரின் கருத்துடன் ஒத்துப்போவதால் இதனை அனுமதிக்கிறாரா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.