Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலிமுகத்திடலில் குழப்பமான நிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலிமுகத்திடலில் குழப்பமான நிலை

அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்கள் முன்னெடுத்துள்ள காலி முகத்திடல் போராட்ட இடத்தில் திடீரென பொலிஸ் ட்ரக் வண்டிகள் குவிக்கப்பட்டுள்ளன.

காலி முகத்திடலில் பொலிஸ் ட்ரக் வண்டிகள் எதற்காக நிறுத்தப்பட்டுள்ளன என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை. இதனால் அப்பகுதியில் போராட்டக்காரர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எனினும், ஆர்ப்பாட்டங்களை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

“இந்த நாட்டு மக்களின் அமைதியான போராட்டத்தை எந்த வகையிலும் சீர்குலைக்கும் எந்த முயற்சியை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மிகுந்த கவலையுடன் பார்க்கிறது. அத்தகைய முயற்சியானது நாடு, அதன் ஜனநாயகம், அதன் பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், ” என்று அவர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (R)

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/காலிமுகத்திடலில்-குழப்பமான-நிலை/150-294767

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இரண்டு நாளைக்கு வண்டிகள் காலையில் வரும் ,நாளைக்கு மாலையில் வரும்,சர்வதேச நாணயநிதியத்துடன் ரணில் பேசி பணம் கிடைத்தவுடன் (தருவதாக சொன்னவுடன்) திடிரேன இரவு நேரம் சனம் குறைவாக இருக்கும் பொழுது  இராணுவத்தை அனுப்பி பொலிஸ் வாகனத்தில் எல்லோரையும் தூக்கி போடுவார்கள்

அவசரகாலசட்டத்தை அமுல்படுத்துவார்கள், 20 ஆம் திருத்தசட்டத்தை அனுபவிக்க போகின்றார் கோத்தா

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்பாட்டாளர்கள் யாழ் மலையகம் சிங்கள கிராமங்கள் என்பவற்றிலுமிருந்து பேரூந்துகள் மூலமாக மக்களை கொண்டுவர முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏற்பாட்டாளர்கள் யாழ் மலையகம் சிங்கள கிராமங்கள் என்பவற்றிலுமிருந்து பேரூந்துகள் மூலமாக மக்களை கொண்டுவர முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.

ஆம்…. வில்லங்கத்துக்கு, அதற்குள் தமிழரை கோத்து விடப் பார்க்கிறார்கள்.
தமிழ் பி.பி.சி.யும்… மாய்ஞ்சு, மாய்ஞ்சு…. தமிழரை தேடிப் பிடித்து, பேட்டி காணுது.
இந்த பி.பி.சி. க்கு காணாமல் போனோரின் பெற்றோர் 2000 நாளாக
போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்கள்,
அங்கு போய்…. ஒரு பேட்டி எடுக்க வக்கில்லை.

ஏழு நாள் போராட்டத்துக்கு… மைக்கை, நீட்டிக் கொண்டு வந்திட்டினம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

இன்னும் இரண்டு நாளைக்கு வண்டிகள் காலையில் வரும் ,நாளைக்கு மாலையில் வரும்,சர்வதேச நாணயநிதியத்துடன் ரணில் பேசி பணம் கிடைத்தவுடன் (தருவதாக சொன்னவுடன்) திடிரேன இரவு நேரம் சனம் குறைவாக இருக்கும் பொழுது  இராணுவத்தை அனுப்பி பொலிஸ் வாகனத்தில் எல்லோரையும் தூக்கி போடுவார்கள்

அவசரகாலசட்டத்தை அமுல்படுத்துவார்கள், 20 ஆம் திருத்தசட்டத்தை அனுபவிக்க போகின்றார் கோத்தா

உங்க  வாய்க்கு  ஒரு  கிலோ சக்கரை  போட்டுவிடுகிறன்🤣

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் நீர்த்துப்போகச் செய்வார்கள். 

ஆனாலும் 

போராட்டம் புது வடிவம் எடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

எல்லாவற்றையும் நீர்த்துப்போகச் செய்வார்கள். 

ஆனாலும் 

போராட்டம் புது வடிவம் எடுக்கும்.

கருவாக்காடு ஸ்டைல் போராட்டம் முடிவுக்கு கொண்டு வந்து கிராம புற அடிதடி போராட்டங்கள் தொடங்கும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. வடக்கு கிழக்கில் நாங்கள் இந்த கொடியை ஏந்திப்போராடுவதில்லை, இந்த பாடலை பாடி பொராடுவதில்லை. நீங்கள் வேறு நாங்கள் வேற.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இங்கே தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. வடக்கு கிழக்கில் நாங்கள் இந்த கொடியை ஏந்திப்போராடுவதில்லை, இந்த பாடலை பாடி பொராடுவதில்லை. நீங்கள் வேறு நாங்கள் வேற.

அந்தப் பாடலைக் கூட… தமிழில் பாடக் கூடாது,
சிங்களத்தில் மட்டுமே பாட வேண்டும்  என்று சட்டம் இயற்றியவர்கள் தான் இவர்கள்.
அவர்களிடமிருந்து… நமக்கு உரிமை கிடைக்கும் என்று, நம்பவே முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, தமிழ் சிறி said:

அந்தப் பாடலைக் கூட… தமிழில் பாடக் கூடாது,
சிங்களத்தில் மட்டுமே பாட வேண்டும்  என்று சட்டம் இயற்றியவர்கள் தான் இவர்கள்.
அவர்களிடமிருந்து… நமக்கு உரிமை கிடைக்கும் என்று, நம்பவே முடியாது.

எங்கடையளும் கோ கோத்தபாய எண்டுசொல்லிக்கொண்டு போகுதுகளே எண்டதை நினைக்கத்தான்  விசராய் கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

எங்கடையளும் கோ கோத்தபாய எண்டுசொல்லிக்கொண்டு போகுதுகளே எண்டதை நினைக்கத்தான்  விசராய் கிடக்கு

குமாரசாமி அண்ணை,
இது பெரிய அளவில் இல்லை என்பதில் நிம்மதி.

அத்துடன்… சிங்களவருடன் வேலை செய்பவர்கள்,
அவர்களின் வீடுகளில் தங்கி இருப்பவர்களின் வற்புறுத்தலுக்காக….
சென்ற சிறிய கூட்டம்தான் அவர்கள்  என்பது எனது கணிப்பு.

அவர்களை….. தமிழ் பி.பி.சி.யும், தந்தி தொலைக்காட்சியும்தான்…
விழுந்து, விழுந்து… பேட்டி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கட்சி ரீதியாகவோ, அமைப்பு ரீதியாகவோ…..
ஒருவரும் கலந்து கொள்ளவில்லை என்று ஆறுதலடையுங்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இங்கே தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. வடக்கு கிழக்கில் நாங்கள் இந்த கொடியை ஏந்திப்போராடுவதில்லை, இந்த பாடலை பாடி பொராடுவதில்லை. நீங்கள் வேறு நாங்கள் வேற.

எனக்கு இந்தப் பாடல் மறந்தேபோய்விட்டது. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

இந்த பி.பி.சி. க்கு காணாமல் போனோரின் பெற்றோர் 2000 நாளாக
போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்கள்,
அங்கு போய்…. ஒரு பேட்டி எடுக்க வக்கில்லை.

ஏழு நாள் போராட்டத்துக்கு… மைக்கை, நீட்டிக் கொண்டு வந்திட்டினம்.

இந்தமுறை ஒப் கொம் காரருக்கு மெயிலை தட்டிவிட்டு பார்ப்பம் பாரபட்சமாய் நடக்கினம் என்று என்ன பதில் வருது என்று பார்ப்பம் இவ்வளவு நாளும் மெயினுக்கு  போட்டு ஒன்றும் பலனில்லை .

ஹிந்திய  டெல்லி அரசுக்கு சார்பாக பிரித்தானிய குடிமக்களின் வரிப்பணத்தில் சொகுசாக பரப்புரை செய்கினம் அவ்வளவு பேரையும் மாத்தணும் .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

ஆம்…. வில்லங்கத்துக்கு, அதற்குள் தமிழரை கோத்து விடப் பார்க்கிறார்கள்.
தமிழ் பி.பி.சி.யும்… மாய்ஞ்சு, மாய்ஞ்சு…. தமிழரை தேடிப் பிடித்து, பேட்டி காணுது.
இந்த பி.பி.சி. க்கு காணாமல் போனோரின் பெற்றோர் 2000 நாளாக
போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்கள்,
அங்கு போய்…. ஒரு பேட்டி எடுக்க வக்கில்லை.

ஏழு நாள் போராட்டத்துக்கு… மைக்கை, நீட்டிக் கொண்டு வந்திட்டினம்.

அன்று எங்கள் நிஞாயமான போராட்டம் நடைபெறும்போது சம்பந்தப்பட்ட எங்களை யாரும் திரும்பிப்பார்க்கவில்லை. இப்போ சம்பந்தமில்லாத எங்களை சம்பந்தப்படுத்தி போராட்டத்தை வேறு வழியில் திருப்பி சுயலாபம் தேட முயற்சிக்கிறார்கள். ஆயனில்லா  செம்மறிக்கூட்ட்ங்கள் நாங்கள் என்று அவர்களுக்கும் தெரியும் எங்களுக்கு தலைவன் என்று சொல்லிக்கொள்பவரும் அழைக்கிறார் அல்லோ பங்கெடுக்க! இதுவே ராஜபக்ஷக்களுக்கு  சாதகமான ஆர்ப்பாட்டமாக இருந்திருந்தால்; தாடியர் ஒரு பெருங்கூட்டம் சேர்த்து ஆர்ப்பாட்டமாக போய் இறங்கியிருப்பார். என்ன செய்வது? இப்போ சவுண்டு விடுகிறதோட நிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அந்தப் பாடலைக் கூட… தமிழில் பாடக் கூடாது,
சிங்களத்தில் மட்டுமே பாட வேண்டும்  என்று சட்டம் இயற்றியவர்கள் தான் இவர்கள்.
அவர்களிடமிருந்து… நமக்கு உரிமை கிடைக்கும் என்று, நம்பவே முடியாது.

நீங்க வேறு நாடையா

நாங்க வேறு நாடு.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

அன்று எங்கள் நிஞாயமான போராட்டம் நடைபெறும்போது சம்பந்தப்பட்ட எங்களை யாரும் திரும்பிப்பார்க்கவில்லை. இப்போ சம்பந்தமில்லாத எங்களை சம்பந்தப்படுத்தி போராட்டத்தை வேறு வழியில் திருப்பி சுயலாபம் தேட முயற்சிக்கிறார்கள். ஆயனில்லா  செம்மறிக்கூட்ட்ங்கள் நாங்கள் என்று அவர்களுக்கும் தெரியும் எங்களுக்கு தலைவன் என்று சொல்லிக்கொள்பவரும் அழைக்கிறார் அல்லோ பங்கெடுக்க! இதுவே ராஜபக்ஷக்களுக்கு  சாதகமான ஆர்ப்பாட்டமாக இருந்திருந்தால்; தாடியர் ஒரு பெருங்கூட்டம் சேர்த்து ஆர்ப்பாட்டமாக போய் இறங்கியிருப்பார். என்ன செய்வது? இப்போ சவுண்டு விடுகிறதோட நிக்கிறார்.

கோத்தாவுக்கு... ஆதரவாக கதைக்கப் போய், 
செருப்படி வாங்கிய, அருண் சித்தார்த்தை பார்த்த பின்... 
ஓட்டுக் குழுக்கள் எல்லாம், அடக்கி வாசிக்குது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை காலிமுகத்திடல் போராட்டக்காரர்களைக் கலைக்க அரசாங்கம் யோசனை?

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 
srilanka

பட மூலாதாரம்,GETTY IMAGES

(இன்றைய (ஏப்ரல் 17) இலங்கை நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.)

காலி முகத்திடல் பகுதியில் இருந்து போராட்டக்காரர்களை அகற்ற இலங்கை அரசு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தியதாக வீரகேசரி இதழ் இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை 18ம் தேதிக்குப் பின் கொழும்பு - காலி முகத்திடலை பகுதியில் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வோரை கலைப்பது தொடர்பாக அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.

இது தொடர்பில் உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகளிடன் முக்கியமான கலந்துரையாடல் ஒன்றும் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு, மேல் மாகாண மூத்த பிரதி போலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுடைய நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஜனாதிபதி செயலக பிரதான வாயிலை மறித்து கூடியிருக்கும் போராட்டக் காரர்களை அங்கிருந்து அகற்றுவது தொடர்பில் இந்த அவதானம் திரும்பியுள்ளது.

குறிப்பாக தற்போது, கோட்டா கோ எனும் பெயரில், காலி முகத்திடலை அண்மித்து கூடாரங்கள் பல அமைக்கப்பட்டு மாதிரிக் கிராமம் ஒன்றே போராட்டக்காரர்களால் உருவாக்கப்பட்டு, எதிர்ப்பு நடவடிக்கைகள் இரவு பகலாக தொடரும் நிலையில், போராட்டக் காரர்களை அங்கிருந்து அகற்றும் தேவை உருவாகியுள்ளதுடன், அதைக் கையாள போதுமான உத்திகள் தொடர்பில் உயர் மட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன.

போராட்டக் காரர்களிடையே குழப்பத்தை உருவாக்கி அதனை மையபப்டுத்தி ஆர்ப்பாட்டத்தை கலைப்பது, போராட்டக் காரர்களின் கூடாரங்கலுக்குள் போதைப் பொருட்களை வைத்து அதனை மையப்படுத்தி அவர்களைக் கைது செய்வதன் ஊடாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கட்டி ஆர்ப்பாட்டத்தை கலைப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக அறிய முடிகிறது.

16ஆம் தேதி காலை போலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினர் போராட்டப் பகுதியை மையப்படுத்தி நிலை கொள்ளச் செய்யப்பட்ட போதும், பின்னர் பரவலான எதிர்ப்புக்களை அடுத்து அவர்கள் அவ்விடத்திலிருந்து பின்நோக்கி நகர்த்தப்பட்டு வேறு இடத்தில் நிலைக்கொள்ளச் செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

களத்தில் இணையும் கத்தோலிக்க திருச்சபை

Srilanka

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையில் ஜனாதிபதிக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்துக்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை முழு ஆதரவை அளிப்பதாக ஐலேண்ட் நாளிதழ் இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று கோரி இலங்கை காலி முகத்திடலில் ஏராளமானோர் கூடி போராட்டம் நடத்திவருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இந்த நிலையில், இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் செய்தித் தொடர்பாளரான சிரில் கமினி ஃபெர்ணண்டோ, தங்களது முழு ஆதரவை இந்த போராட்டத்துக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிஷப் ஹவுஸில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கத்தோலிக்க திருச்சபையும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று எதிரார்க்கிறது என்று தெரிவித்தார். மேலும், ஏற்கனவே திருச்சபையினர் பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதன் மூலம், முன்பிருந்தே இந்த போராட்டத்தில் திருச்சபை பங்கெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார் என்று ஐலேண்ட் செய்தி தெரிவிக்கிறது.

அமைதியான போராட்டம் இது

srilanka

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமைதியான போராட்டங்களை அரசு குலைக்க முயற்சிப்பது உரிமை மீறல் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளதாக சிலோன் டுடே இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமைதியான முறையில் நடக்கும் போராட்டத்தில் இடையூறு விளைவிப்பது, அரசமைப்பால் குடிமக்களுக்கு வழங்கபட்டுள்ள அடிப்படை உரிமையை மறுக்கும் விதிமீறலான செயல் என்று, இலங்கை அரசுக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், அரசமைப்புச் சட்டத்தால் பாதுகாபு வழங்கப்பட்டுள்ள ஒரு அமைதியான கூட்டத்தை, சட்டவிரோதமாக ஒடுக்குவது அடிப்படை உரிமைகளை மீறும் செயல்தான்.

எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கும்படி, அரசை மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது என்று சிலோன் டுடே செய்தி தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-61131687

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக் காரர்களிடையே குழப்பத்தை உருவாக்கி அதனை மையபப்டுத்தி ஆர்ப்பாட்டத்தை கலைப்பது, போராட்டக் காரர்களின் கூடாரங்கலுக்குள் போதைப் பொருட்களை வைத்து அதனை மையப்படுத்தி அவர்களைக் கைது செய்வதன் ஊடாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கட்டி ஆர்ப்பாட்டத்தை கலைப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக அறிய முடிகிறது.

அடடா 

அந்த நல்ல செய்திக்காக காத்திருப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

விசுகர், கூடாரத்துக்குள்ளை.... கிசு,கிசு  நடந்ததாகவும், 
வசந்தி பரப்பி உள்ளார்கள். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

விசுகர், கூடாரத்துக்குள்ளை.... கிசு,கிசு  நடந்ததாகவும், 
வசந்தி பரப்பி உள்ளார்கள். 🤣

காலி முகத்திடலில் கொளுத்துகிற வெயிலில் ஒரு குடைக்குள்ளேயே “கிசுகிசு” பண்ணுபவர்கள் கூடாரத்துக்குள், அதிலும் இருட்டியவெளிச்சத்தில், சும்மாவா இருப்பார்கள். எல்லாம் கோத்தா கணக்கில் சேர்ந்துவிடும்🤭

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

காலி முகத்திடலில் கொளுத்துகிற வெயிலில் ஒரு குடைக்குள்ளேயே “கிசுகிசு” பண்ணுபவர்கள் கூடாரத்துக்குள், அதிலும் இருட்டியவெளிச்சத்தில், சும்மாவா இருப்பார்கள். எல்லாம் கோத்தா கணக்கில் சேர்ந்துவிடும்🤭

tenor.gif?t=AAXACZCfG3kKtObNOASu9g&itemid=17710543&fbclid=IwAR1jkn56cV4pqTdFnHKnx99EqydCJaTfXIgmhLhG_Qcikjdln_E6FZLwUzQ  Laughing Baby Lol Sticker for iOS & Android | GIPHY

கோத்தாகமவில்..... அந்த "பலூன்" கடை ஒன்றும் வைக்க வேணும். 😂
இல்லாட்டி... எய்ட்ஸ்சும், சிங்களவனும்  பெருகி விடுவார்கள். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

காலி முகத்திடலில் கொளுத்துகிற வெயிலில் ஒரு குடைக்குள்ளேயே “கிசுகிசு” பண்ணுபவர்கள் கூடாரத்துக்குள், அதிலும் இருட்டியவெளிச்சத்தில், சும்மாவா இருப்பார்கள். எல்லாம் கோத்தா கணக்கில் சேர்ந்துவிடும்🤭

போராட்டக்காரர்களை கேவலப்படுத்துதல் நன்றன்று?☹️

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

tenor.gif?t=AAXACZCfG3kKtObNOASu9g&itemid=17710543&fbclid=IwAR1jkn56cV4pqTdFnHKnx99EqydCJaTfXIgmhLhG_Qcikjdln_E6FZLwUzQ  Laughing Baby Lol Sticker for iOS & Android | GIPHY

கோத்தாகமவில்..... அந்த "பலூன்" கடை ஒன்றும் வைக்க வேணும். 😂
இல்லாட்டி... எய்ட்ஸ்சும், சிங்களவனும்  பெருகி விடுவார்கள். 🤣

இது தவறு.. தமிழ்சிறி ஐயா . நாங்களும் வீதிக்கிறங்கி ஆண்கள் பெண்கள் வித்தியாசம் பாராமல் இரவு இரவாக போராட்டம் நடத்தியவர்கள் தானே. எங்களுக்கு இந்த தேவை இருந்ததா? நீங்கள் பகிடியாக போட்டாலும் கூட சின்ன நெருடலை தருகிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.