Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8 பில்லியன் டொலர் குத்தகைக்கு பல சொத்துக்களை வழங்க அரசாங்கம் உத்தேசம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

8 பில்லியன் டொலர் குத்தகைக்கு பல சொத்துக்களை வழங்க அரசாங்கம் உத்தேசம்?

-சி.எல்.சிசில்-
பல பெறுமதி மிக்க அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் 8 பில்லியன் டொலர்களை உடனடியாகத் திரட்ட அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
mattala-300x168.jpg
குத்தகைக்கு முன்மொழியப்பட்ட சொத்துக்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் ஆகியவை அடங்கும். இவை நீண்ட கால குத்தகைக்கு விடப்படும்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும், இரத்மலானை விமான நிலையத்தை 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குத்தகைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு துறைமுகத்தின் தெற்குப் பகுதி 600 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு அடிப்படையில் குத்தகைக்கு விடப்படவுள்ளதுடன் கொழும்பு துறைமுக நகரத்தில் அரசாங்கத்துக்கு சொந்தமான பங்கு 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளது.
மேலும், ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் அரசுக்குச் சொந்தமான தொகுதி 500 மில்லியன் டொலருக்கும், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் அரச பங்குகள் 300 மில்லியன் டொலருக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக ‘திவயின’ செய்தி வெளியிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/174324

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி சொல்லிய - bridging finance இன் ஒரு செயல் முறை வடிவம்.

பணம் வரும் வரைக்கும்  ஒன்றும் நிச்சயமில்லை, அனால் அநேகமாக, இவற்றில் ஈடுபடும் கம்பனிகளுக்கு கிரெடிட் வழங்கும் வகைகளுக்கு IMF இன் வசதிப்படுத்துதல் இருக்கும்.

இப்படியான இக்கட்டான நிலையில் IMF இன் ஈடுபாட்டை கோரினால், IMF இப்படித்தான் கடந்த காலங்களில் செய்து இருக்கிறது.

1997 -1998 கிழக்காசிய நிதி நெருக்கடி, thai bhat US dollar peg, US dollars இல்லாமையால் நீக்க வேண்டி வந்ததால், உதாரணம்.    

IMF இடம் செல்லும் போது பிடி இருக்க வேண்டும், சொறி சிங்களத்துக்கு அந்த வாய்ப்பும், நேரமும் இருந்தும்,  எல்லாவற்றையும் விட்டு, மூழ்கிம் நிலையில் IMF இடம் போய் இருக்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்

ஏனெனில், அரசு, fiscal மற்றும் monetary கொள்கைகளை சீரமைத்து, முதல் படி எடுக்கும் வரையிலும் IMF தனது பண பரிவர்த்தனை செய்ய முடியாது.

அப்படி செய்யும் போது, , fiscal மற்றும் monetary கொள்கைகளை சீரமைத்து, IMF debt restructuring ஐ கடன் கொடுத்தவர்களோடு வசதிப்படுத்தும்.  

bridging finance, அதுவும் ஓர் அரசுக்கு இக்கட்டம்னா நிலையில், முக்கியமாக, ஓர் நாட்டின், அரசின் தேசிய வருமானம் உழைக்கும் சொத்துக்களை, சேவைகளை, பொதுவாக மேற்கு தனியார் கம்பனிகள், வங்கிகளின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வருவதில், IMF மறைமுக வசதிப்படுத்தல் பங்களிப்பு செய்யும்.

இதில்  ஹிந்தியை கம்பனிகளுக்கு இடம் உள்ளது.

மேற்கு, மற்றும் ஹிந்தியா வங்கிகள் கிரெடிட் வழங்கவும் இடம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும், இரத்மலானை விமான நிலையத்தை 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குத்தகைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில்... நாடே, குத்தகைக்கு போகுது.
நல்ல காலம், பலாலி விமான நிலையம், தப்பீட்டுது. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

http://globaltamilnews.net/wp-content/uploads/2020/01/jaffna-airport-1024x576.jpg

மொத்தத்தில்... நாடே, குத்தகைக்கு போகுது.
நல்ல காலம், பலாலி விமான நிலையம், தப்பீட்டுது. 😜

இதுவே சரியான சந்தர்ப்பம்.... உங்கள் கடனை நாம் கட்டி முடிக்கிறோம்.... வடக்கு, கிழக்கை முழுமையாக விலை பேசி தாருங்கள்.

என்ன $20 - $25 பில்லியன் வருமா?

****

9 பில்லியன்.... 

எரியும் வீட்டில் புடுங்கிறது லாபம்..... என்று தான் பார்ப்பார்கள்.... இவர்கள் கேட்பதை யாரும் கொடுக்க போவதில்லை.

நானும், பலாலி ஆமி கேம்ப் இருக்கிற காணியை கேட்டு பார்ப்பம் என்று யோசனையில இருக்கிறன். மலிவா அமத்தலாம்.....

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

//கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும், இரத்மலானை விமான நிலையத்தை 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குத்தகைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.//

இவற்றை,  யாருக்கு... குத்தகைக்கு கொடுக்கப் போகின்றார்கள் என்று செய்தியில் இல்லை.
பங்கு  பிரிப்பதில்... இந்தியாவும்,  சீனாவும் புடுங்குப் படப் போகுதே...

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

டென்டர் மூலம் குத்தகைக்கு விடுவார்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

டென்டர் மூலம் குத்தகைக்கு விடுவார்களோ தெரியவில்லை.

சீனாவுக்கும், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் தான்...  
போட்டி இருக்கும் என நம்புகின்றேன்.

மத்தள விமான நிலையத்தை எடுப்பதில்....  பெரும் போட்டி வரும்.
சீனா  அதனை, மற்றவர்களுக்கு  கிடைக்க விரும்பாது.

  • கருத்துக்கள உறவுகள்

வட்டிக்கு எடுத்தவனும் 

குத்தகைக்கு விட்டவனும் மீண்டும் மீண்டதாக சரித்திரம் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

சீனாவுக்கும், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் தான்...  
போட்டி இருக்கும் என நம்புகின்றேன்.

மத்தள விமான நிலையத்தை எடுப்பதில்....  பெரும் போட்டி வரும்.
சீனா  அதனை, மற்றவர்களுக்கு  கிடைக்க விரும்பாது.

கடந்த அரசில், மத்தள விமான நிலையம், நெல் களஞ்சியமாக ஆக இருந்தது.

யுத்த வெற்றி மமதையில், 10ம் வகுப்பு படித்த, எங்கண்ட மகிந்த, பக்கத்தில, ஒரு படிச்ச ஆட்களையும் வைத்து முடிவு செய்யாமல், தானே முடிவு செய்து, கடனை, உடனை வாங்கி கட்டுநாயக்காவில் ஒன்று இருக்க கூடியதாக, மத்தளவில்.... கட்டினது.

உந்த பணக்கார இங்கிலாந்தில், லிவர்பூல், பர்மிங்காம், வேல்ஸ் போன்ற 100 - 200 மைலுக்கு மேல உள்ள இடங்களில் இருந்து ஹீத்ரோ ஓடி வருவார்கள்.... பிளேன் பிடிக்க.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இதுவே சரியான சந்தர்ப்பம்.... உங்கள் கடனை நாம் கட்டி முடிக்கிறோம்.... வடக்கு, கிழக்கை முழுமையாக விலை பேசி தாருங்கள்.

என்ன $20 - $25 பில்லியன் வருமா?

****

9 பில்லியன்.... 

எரியும் வீட்டில் புடுங்கிறது லாபம்..... என்று தான் பார்ப்பார்கள்.... இவர்கள் கேட்பதை யாரும் கொடுக்க போவதில்லை.

நானும், பலாலி ஆமி கேம்ப் இருக்கிற காணியை கேட்டு பார்ப்பம் என்று யோசனையில இருக்கிறன். மலிவா அமத்தலாம்.....

யூதர்கள் மாதிரி தமிழ் செல்வந்தர்கள் காணிகளை வாங்கலாம் ( சிங்களவன் எப்பம் விட்ட காணிகளை). சுபாஸ்கரன் பிரான்சில் கால்பந்தணியை வாங்கிவதற்கு பதில் இலங்கையில் காணிகளை வாங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ragaa said:

யூதர்கள் மாதிரி தமிழ் செல்வந்தர்கள் காணிகளை வாங்கலாம் ( சிங்களவன் எப்பம் விட்ட காணிகளை). சுபாஸ்கரன் பிரான்சில் கால்பந்தணியை வாங்கிவதற்கு பதில் இலங்கையில் காணிகளை வாங்கலாம்.

நான் பகிடிக்கு சொல்லவில்லை.....

விலை பேச வேண்டும்...... ஜநா முன்னிலையில் உடன்படிக்கை இடவேண்டும்.....

காசு? தவணை முறையில் கட்டி முடிக்கலாம், ஒரே தடவையாக அல்ல...

உலகத் தமிழர் அணைவருமே, தமிழருக்கு ஒரு நாடாயின்...... ஆளுக்கு பத்து டொலர் போட்டாலே..... போதும்.

மேலும்...... பிற அரசுகளிடம், புதிய நாடு, கடன் வாங்க முடியும்.....

தேவை..... யூதர்கள் சிந்தணை.....

இதுக்கு தான் சொன்னேன்..... புலம் பெயர் தமிழரிடையே ஜனநாயக தேர்தலில் தேர்ந்து எடுக்கப்பட்ட, நாடு கடந்த தமிழீழ அரசின் வகிபாகம் முக்கியமானது....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

3 minutes ago, Nathamuni said:

ஒப்பந்தங்களை... கிழித்து எறிவதில்  சிங்களவன் ... விண்ணன்.
இது ஜே. ஆர். ஜெயவர்த்தனா காலத்தில் இருந்து, 
13´ம் திருத்த சட்டம், மட்டும் தொடர் கதை.
அதை இந்தியா கூட தட்டிக் கேட்க முடியாத அளவு, 
"தில்" லானாவான் சிங்களவன்.

ஐ.நா. பெரிய அரிச்சந்திரன் என்ற நினைப்போ....
அதுகும்... பலமுள்ளவன் பக்கம் சாயும், ஒரு வெத்து வேட்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

அப்ப கேட்டது..... பிச்சை..... இப்ப...வாயில தோசை.... கையில காசு!

ஜநா, பிரகடனம் இல்லாமல், ஈழம் பாஸ்போட் செல்லாது....

மேலும்..... தமிழக மக்கள் அழுத்தத்தில், இந்தியா அங்கீகாரம் செய்தால்..... பிறகு.... பிக்குகள் உடன்படிக்கையை.... கிழித்தால் என்ன, எரித்தால் என்ன ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

வாயில தோசை.... கையில காசு!

ஜநா, பிரகடனம் இல்லாமல், ஈழம் பாஸ்போட் செல்லாது....

மேலும்..... தமிழக மக்கள் அழுத்தத்தில், இந்தியா அங்கீகாரம் செய்தால்..... பிறகு.... பிக்குகள் உடன்படிக்கையை.... கிழித்தால் என்ன, எரித்தால் என்ன ?

 இந்தியா அங்கீகாரம் செய்தால்.....  என்பது,
அத்தைக்கு... மீசை முளைத்த கதை, நாதம்ஸ். 😜

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

 இந்தியா அங்கீகாரம் செய்தால்.....  என்பது,
அத்தைக்கு... மீசை முளைத்த கதை, நாதம்ஸ். 😜

நீங்கள், ஒரு முக்கிய விசயத்தை மறக்கப்படாது.....

நாம் இப்போது வைப்பது கோரிக்கை அல்ல.....

சிங்களவர் வாங்கிக் கொண்டிருப்பது கடன்.....

நாம் சொல்லப்போவது..... எமது பகுதியை விலை பேசி தந்து விடுங்கள்.

நாம்... தரும் பணத்தை வைத்து, உங்கள் கடனை கட்டி, நிம்மதியாக இருங்கள்.....

ஏனைனில் இலங்கை, இனி கடன் பெறவே முடியாது...... கடன் கட்டவும் மார்க்கம் இல்லை....

பணம் வாங்குவதால், முதல் அங்கீகாரம் சிங்களதேசத்தில் இருந்து தானே வரும்.

சிங்கப்பூரை பிரிந்து போகச் சொன்னதும், முதலில் அங்கீகரித்ததும், மலேசியா....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சீன கம்பனிகளுக்கு, சீன வங்கிகளே பணம் கொடுக்க முடியும், auditing சீனாவுக்குள் இருப்பதால்.

இந்த bridging finance, IMF இன் ஆரம்ப நிபந்தனையாக (memorandaum of understanding), அதாவது IMF க்கும் ஏற்ற தெரிவுகள் (மேற்கு, கிந்திய கம்பனிகள், வங்கிகளுடன்) தான் இருக்க செய்ய வேண்டும் என்பது.

சீனாவின் BRI, சீன அம்பாந்தோட்டையை, port  city கட்டுப்பாட்டில் எடுக்கிறது என்று வாய் கிழிய கத்திய மேற்கு, ஹிந்தியை ஊடகங்கள், இப்பொது மூக்கை பொத்தினால் வாயை திறக்க தெரியாத அப்பாவிகளாக இருக்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நீங்கள், ஒரு முக்கிய விசயத்தை மறக்கப்படாது.....

நாம் இப்போது வைப்பது கோரிக்கை அல்ல.....

சிங்களவர் வாங்கிக் கொண்டிருப்பது கடன்.....

நாம் சொல்லப்போவது..... எமது பகுதியை விலை பேசி தந்து விடுங்கள்.

நாம்... தரும் பணத்தை வைத்து, உங்கள் கடனை கட்டி, நிம்மதியாக இருங்கள்.....

பணம் வாங்குவதால், முதல் அங்கீகாரம் சிங்களதேசத்தில் இருந்து தானே வரும்.

சிங்கப்பூரை பிரிந்து போகச் சொன்னதும், முதலில் அங்கீகரித்ததும், மலேசியா....

சிங்களவன், இந்தியன், எரிக் சோல்கைம், ஐ.நா. என்று...
எல்லாரும்... எம்மிடம், நீதி இருந்தும்.. கண்டு கொள்ளாமல்.
ஏமாற்றி, அளாப்பி... விட்டுப் போன இனம் தமிழினம்.

போதாக்குறைக்கு... கருணாநிதியும்.. 3 மணித்தியால உண்ணாவிரதம் இருந்து,
போர் முடிந்த கதையை.. சொல்லி ஏமாற்றியவர். 
நடந்த சம்பவங்களை, மறக்காமல் மீண்டும்...
பல பில்லியன் டொலர் கணக்கில், ஏமாற சொல்லாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

பழைய கதையளை விடுவம்.

நீங்கள், காசை ரெடி பண்ணுங்கோ....

மிச்ச அலுவலை வெட்டி ஆட.... நான் ஆட்களை ரெடி பண்ணுறன்....

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

பழைய கதையளை விடுவம்.

நீங்கள், காசை ரெடி பண்ணுங்கோ....

மிச்ச அலுவலை வெட்டி ஆட.... நான் ஆட்களை ரெடி பண்ணுறன்....

நாதம்ஸ்.... நீங்கள், காசை ரெடி பண்ணுங்கோ,
நான்... ஆக்களை, ரெடி பண்ணுறன். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

மொத்தத்தில்... நாடே, குத்தகைக்கு போகுது.
நல்ல காலம், பலாலி விமான நிலையம், தப்பீட்டுது. 

ரொம்பத்தான் சந்தோஷப்படாதீர்கள் சிறி! காசு பத்தாவிட்டால் இதையும் சேர்த்தே குத்தகைக்கு விடுவார்கள். எங்கட தலைகள் தடுப்பினம் என்றா நினைக்கிறீர்கள்? கேட்ப்பவனும் பலாலி சும்மாதானே கிடக்கு அதையும் ஒரு விலைபோட்டு தாங்கோ என்று கேட்டாப்போச்சு.

2 hours ago, தமிழ் சிறி said:
//கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும், இரத்மலானை விமான நிலையத்தை 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குத்தகைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.//

இவற்றை,  யாருக்கு... குத்தகைக்கு கொடுக்கப் போகின்றார்கள் என்று செய்தியில் இல்லை.
பங்கு  பிரிப்பதில்... இந்தியாவும்,  சீனாவும் புடுங்குப் படப் போகுதே...

ஏன் இதுக்குள்ள அநாமதேயமாய் நம்மவர்கள் புகுந்து விளையாடக்கூடாது? அவர்களுக்கு வேண்டியது பணம், அதை யார் கொடுத்தாலென்ன. தமிழன் என்று இனங்காட்டாமல் ஒரு நாட்டை வைத்து எடுக்கலாமே? நம்ம நிலங்களை பறித்தவன் நடு வீட்டில் நாம் குடியேற வேண்டும்!

நல்லது.

பொருளாதாரம் இறைமை எல்லாவற்றையும் விட மேற்குலகின் நுளைவு மக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும். அதுவே எமக்குத் தற்போது தேவையானது.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

சிங்களவன், இந்தியன், எரிக் சோல்கைம், ஐ.நா. என்று...
எல்லாரும்... எம்மிடம், நீதி இருந்தும்.. கண்டு கொள்ளாமல்.
ஏமாற்றி, அளாப்பி... விட்டுப் போன இனம் தமிழினம்.

போதாக்குறைக்கு... கருணாநிதியும்.. 3 மணித்தியால உண்ணாவிரதம் இருந்து,
போர் முடிந்த கதையை.. சொல்லி ஏமாற்றியவர். 
நடந்த சம்பவங்களை, மறக்காமல் மீண்டும்...
பல பில்லியன் டொலர் கணக்கில், ஏமாற சொல்லாதீர்கள்.

பின்பக்கத்தில் சிங்களவன்  பலதடவை குறி இழுத்தும் மறந்து மறந்து குறி இழுவை வாங்க முடியடிப்பது நம்ம இனம் . உலகில் வேறு எந்த இனமும் குத்தகைக்கு எடுத்துபோகட்டும் சிங்களவன் நிம்மதியா இருப்பான் ஆனால் நாங்கள் வாங்கி விட்டம்  என்றால் எல்லா இனவாத சிங்களவன்களும் நித்திரை இல்லாமல் தமிழ்  இனத்துவேச கருத்துக்களை விஷம் கக்கும்  நாகம் போல் கக்கிக்கொண்டு  திரிவார்கள் சும்மா ஜஸ்டின் ரூடோ வேட்டி கட்டி தமிழர் மாதம் கொண்டாட கனடிய சிங்களவர்கள் எவ்வளவு தமிழர் எதிர்ப்பு துவேசம் கக்கினவர்கள்?

உடம்பு முழுக்க  தமிழர் இனவெறி  விஷம் கொண்ட நல்லபாம்பு  கூட்டம் அவசரப்பட்டு வாங்கிரம் என்று அவர்களை தூக்கி விட மறுபடியும் தங்கள் கோர முகத்தை காட்டுவார்கள் .

10 minutes ago, பெருமாள் said:

 ஆனால் நாங்கள் வாங்கி விட்டம்  என்றால் எல்லா இனவாத சிங்களவன்களும் நித்திரை இல்லாமல் தமிழ்  இனத்துவேச கருத்துக்களை விஷம் கக்கும்  நாகம் போல் கக்கிக்கொண்டு  திரிவார்கள்

குறை நினைக்க வேண்டாம், நாம் என்றால் புலத்தில் உள்ள தமிழ் தேசியவாதிகளையும் சேர்த்தா ? 
அவர்கள் யாருக்குக் கணக்குக் காட்டுவார்கள் ? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

பின்பக்கத்தில் சிங்களவன்  பலதடவை குறி இழுத்தும் மறந்து மறந்து குறி இழுவை வாங்க முடியடிப்பது நம்ம இனம் . உலகில் வேறு எந்த இனமும் குத்தகைக்கு எடுத்துபோகட்டும் சிங்களவன் நிம்மதியா இருப்பான் ஆனால் நாங்கள் வாங்கி விட்டம்  என்றால் எல்லா இனவாத சிங்களவன்களும் நித்திரை இல்லாமல் தமிழ்  இனத்துவேச கருத்துக்களை விஷம் கக்கும்  நாகம் போல் கக்கிக்கொண்டு  திரிவார்கள் சும்மா ஜஸ்டின் ரூடோ வேட்டி கட்டி தமிழர் மாதம் கொண்டாட கனடிய சிங்களவர்கள் எவ்வளவு தமிழர் எதிர்ப்பு துவேசம் கக்கினவர்கள்?

உடம்பு முழுக்க  தமிழர் இனவெறி  விஷம் கொண்ட நல்லபாம்பு  கூட்டம் அவசரப்பட்டு வாங்கிரம் என்று அவர்களை தூக்கி விட மறுபடியும் தங்கள் கோர முகத்தை காட்டுவார்கள் .

பெருமாள்,

நீங்களும், சிறியரும் பழைய அனுபவங்களில் பேசுகிறீர்கள். சிங்களவன் மண்டைக்கனத்தில் இருந்த கால வேலைகள் வேறு,

இப்போதும் யாரு காசு தந்தாலும் பல்லை காட்டிக்கொண்டு வாங்கும், பிச்சப்பாத்திரம் உடன் நிக்கும் நிலைமை.

பழைய கதை நினைவில் கொண்டு, இதனை சரியாக கையாள்வதே நமது திறமை.

சந்தர்ப்பம், ஒருமுறை தான் வரும்.... சீனாக்காரன், இந்தியாக்காரன் வாங்குவதிலும், பார்க்க, தமிழர்கள் வாங்குவது, அவர்களுக்கும், தமிழர்களுக்கும் நல்லது.

கணக்க வேணாம்.... திண்ணையில் நம்ம ராசவன்னியரே... மெதுவா விலை பேசுறாரே....கவனித்தீர்களா? துபாய் எமிரோடை டீல் போடலாம்.... போல தான் தெரியுது... 😜

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.