Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக் மீது படையெடுப்பதற்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் சொன்ன Weapons of Mass  Distraction கதைகள் நினைவிற்கு வருகிறது.

தற்போது மேற்குலகினரே தங்கள் அரசுகளையும், தங்கள் தகவல்தொடர்புச் சாதனங்களையும் ந்ம்பாதபோது, மேற்கின்  லங்காபுவத் கயிறுகளை விழுங்க தற்போதும் எங்களில்  ஆட்களிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமானது. 

Empire of Lies என்று ரஸ்ய அதிபர் சொன்னது சரியான அளவீடுதான். 

  • Replies 187
  • Views 16.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பகிடி
    பகிடி

    நான் யாழ் தளத்தை பல ஆண்டுகளாக அறிவேன் என்றாலும் இப்பொழுது தான் உறுப்பினர் ஆக இணைந்து கொண்டேன். நான் உக்ரைனில் 2006 புரட்டாசி மாசம் மருத்துவம் படிக்க போனேன்.2014 - 2015 அளவில் இலங்கைக்கு திரும்பின

  • முள்ளிவாய்க்காலை இன்னொரு நாட்டின் யுத்தத்துடன் ஒப்பிடுவது சுத்த அயோக்கியத்தனம் என்பது எனது உறுதியான நிலைப்பாடு. 

  • கிருபன்
    கிருபன்

    தமிழ் சிறி ஐயா, திரும்பத் திரும்ப மூளையில் பதியும்படி படியுங்கள்!👇🏾   பேய்க்காட்டியது ரஷ்ய ரவுடிகள்தான்..   தனது அனுபவங்களையும், உக்கிரேன் பற்றிய தகவல்களையும் தொகுத்துத் தந்த “பக

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2022 at 17:53, குமாரசாமி said:

நாங்கள் வாற வருசம் தொடக்கம்  தான் ரஷ்ய காஸ்,எண்ணை,மண்ணெண்ணை ஒண்டும் வாங்கமாட்டம். அது வரைக்கும் வாங்குவம்.🤣

என்ன யோசைனையிலை உக்ரேன் சனாதிபதி ஐரோப்பிய நாடுகள் எல்லாம் உடனடியாய் ரஷ்யாவிட்ட இருந்து வாற எல்லாத்தையும் நிப்பாட்டுங்கோ எண்டு சொல்லுவார்? ரஷ்யாவிலை இருந்து வாற காஸ் நிண்டால் ஐரோப்பவிலை இருக்கிற பெரும்பாலான தொழிற்சாலைகள் உடனடியாக இழுத்து மூட வேண்டியதுதான். இப்ப உக்ரேனுக்கு போற ஆயுதங்கள் கூட ரஷ்ய எரிவாயுவின் உதவியினால் உருக்கி செய்யப்பட்டதே.இப்ப ஐரோப்பிய நாடுகளுக்கை தஞ்சம் புகுந்த உக்ரேன் மக்கள் கூட ரஷ்ய எரிவாயுவின் உதவியிலான வெப்பத்திலேயே நிம்மதியாக துயில் கொள்கின்றனர்.☹️

நோர்வேயை தவிர ஏனையோர் எண்ணையை ரஸ்யாவிடம் இருந்து தான்  பெறவேண்டும் அடுத்த சில வருடங்களுக்காவது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

ஈராக் மீது படையெடுப்பதற்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் சொன்ன Weapons of Mass  Distraction கதைகள் நினைவிற்கு வருகிறது.

தற்போது மேற்குலகினரே தங்கள் அரசுகளையும், தங்கள் தகவல்தொடர்புச் சாதனங்களையும் ந்ம்பாதபோது, மேற்கின்  லங்காபுவத் கயிறுகளை விழுங்க தற்போதும் எங்களில்  ஆட்களிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமானது. 

Empire of Lies என்று ரஸ்ய அதிபர் சொன்னது சரியான அளவீடுதான். 

மேலே ரஞ்சித் எழுதின கொலைகள் நடக்கவில்லை என்கிறீர்களா? இவ்வளவு எங்களுக்கு நடந்தும், படை எடுக்கும் ஒரு ராணுவம், அது எந்த ராணுவமா இருக்கட்டும், என்ன செய்யும் என்று எங்களுக்கே புரியாவிட்டால் வேறுயாருக்கு புரிய வைக்கலாம்? இலங்கை ராணுவம் போகும்பொழுது, அதன் பரப்புரைகள் சர்வதேசத்தில் எப்படி வேலை செய்ததென்று எமக்கு நன்றாகவே தெரியும், அது ஒரு மீட்பு போராக வெளியில் நம்பவைக்கப்பட்டது, எவ்வளவு கொலைகள் நடந்தேதென்று உள்ளே இருந்த நம்மவர்களுத்தான் தெரியும். புடின் போன்ற தனி மனித ஆளுமையில் இருக்கும் ராணுவம், மனிதாபினாமமாக நடக்கிறது என்று நீங்கள் நம்புவதே ஆச்சரியமாக இருக்கிறது. அதிகாரத்தை பிடித்து, நாட்டை சர்வாதிகார  நாடா மாற்றி, தமது சொத்துக்களை பெருகியதால் பூட்டினுக்கும் கோத்தாவுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நீர்வேலியான் said:

அதிகாரத்தை பிடித்து, நாட்டை சர்வாதிகார  நாடா மாற்றி, தமது சொத்துக்களை பெருகியதால் பூட்டினுக்கும் கோத்தாவுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது?

புரினுக்கு வெள்ளை தோல் கோத்தாவுக்கு கறுப்பு தோல்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நீர்வேலியான் said:

மேலே ரஞ்சித் எழுதின கொலைகள் நடக்கவில்லை என்கிறீர்களா? இவ்வளவு எங்களுக்கு நடந்தும், படை எடுக்கும் ஒரு ராணுவம், அது எந்த ராணுவமா இருக்கட்டும், என்ன செய்யும் என்று எங்களுக்கே புரியாவிட்டால் வேறுயாருக்கு புரிய வைக்கலாம்? இலங்கை ராணுவம் போகும்பொழுது, அதன் பரப்புரைகள் சர்வதேசத்தில் எப்படி வேலை செய்ததென்று எமக்கு நன்றாகவே தெரியும், அது ஒரு மீட்பு போராக வெளியில் நம்பவைக்கப்பட்டது, எவ்வளவு கொலைகள் நடந்தேதென்று உள்ளே இருந்த நம்மவர்களுத்தான் தெரியும். புடின் போன்ற தனி மனித ஆளுமையில் இருக்கும் ராணுவம், மனிதாபினாமமாக நடக்கிறது என்று நீங்கள் நம்புவதே ஆச்சரியமாக இருக்கிறது. அதிகாரத்தை பிடித்து, நாட்டை சர்வாதிகார  நாடா மாற்றி, தமது சொத்துக்களை பெருகியதால் பூட்டினுக்கும் கோத்தாவுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது?

என்ன ஆச்சரியம் நீங்கள் மேற்கு சொல்வதை நம்புகிறீர்கள்?? போரை நடத்துவதே மேற்குலகம். 
அவர்கள் எவ்வளவு சேர்த்தால் மேற்குக்கு என்ன? 

கோத்தா மக்களை கஞ்சிக்கு வழியில்லாமல் ஆக்கி விட்டார். புட்டின் மொத்த மேற்குலகுக்கு எதிராக சண்டை பிடிக்க வேண்டியுள்ளது . இது பாரிய வித்தியாசம் தானே.

அமெரிக்காவின் தலைவர்கள்    எத்தனை மில்லியனர், பில்லியனராக உள்ளார்கள். யாரும் கேள்வி கேட்டார்களா?

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

புரினுக்கு வெள்ளை தோல் கோத்தாவுக்கு கறுப்பு தோல்.

இதற்கு மேலை போகாது என்று தெரியும். என்னென்று கேட்க கூடாது.😄

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, kalyani said:

என்ன ஆச்சரியம் நீங்கள் மேற்கு சொல்வதை நம்புகிறீர்கள்?? போரை நடத்துவதே மேற்குலகம். 
அவர்கள் எவ்வளவு சேர்த்தால் மேற்குக்கு என்ன? 

கோத்தா மக்களை கஞ்சிக்கு வழியில்லாமல் ஆக்கி விட்டார். புட்டின் மொத்த மேற்குலகுக்கு எதிராக சண்டை பிடிக்க வேண்டியுள்ளது . இது பாரிய வித்தியாசம் தானே.

அமெரிக்காவின் தலைவர்கள்    எத்தனை மில்லியனர், பில்லியனராக உள்ளார்கள். யாரும் கேள்வி கேட்டார்களா?

இதற்கு மேலை போகாது என்று தெரியும். என்னென்று கேட்க கூடாது.😄

அதாவது ரஞ்சித் மேலே எழுதிய, கொலைகள் எப்பிடி நடந்ததென்று மக்கள் கொடுத்த வாக்குமூலங்கள் எல்லாம் பொய், வெறும் பரப்புரை, ரஷ்யா உக்கிரைன் மக்களை அநியாயத்துக்கு நன்றாக நடத்துகிறது? நல்லது, இப்பிடியே தமிழ் மக்களுக்கு நடந்த போர்குற்றதுக்கு வெளியுலகில் நியாயம் கேட்க வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

அதாவது ரஞ்சித் மேலே எழுதிய, கொலைகள் எப்பிடி நடந்ததென்று மக்கள் கொடுத்த வாக்குமூலங்கள் எல்லாம் பொய், வெறும் பரப்புரை, ரஷ்யா உக்கிரைன் மக்களை அநியாயத்துக்கு நன்றாக நடத்துகிறது? நல்லது, இப்பிடியே தமிழ் மக்களுக்கு நடந்த போர்குற்றதுக்கு வெளியுலகில் நியாயம் கேட்க வாழ்த்துக்கள்.

ரஞ்சித் எழுதுவது உண்மையோ பொய்யோ, ஒரு பக்கச்சார்பான செய்திகளை அடிப்படையாக வைத்து விளையாடுகிறார. 

அவரின் நோக்கம் என்ன என்பதுதான் கேள்வி? 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நீர்வேலியான் said:

"மேலே ரஞ்சித் எழுதின கொலைகள் நடக்கவில்லை என்கிறீர்களா? இவ்வளவு எங்களுக்கு நடந்தும், படை எடுக்கும் ஒரு ராணுவம், அது எந்த ராணுவமா இருக்கட்டும், என்ன செய்யும் என்று எங்களுக்கே புரியாவிட்டால் வேறுயாருக்கு புரிய வைக்கலாம்?"

கொலைகளை யாரும் நியாயப்படுத்த முடியாது. ஆனால் அந்தக் கொலைகள் நடைபெற்றுள்ளனவா, நடைபெற்றிருந்தால் அது யார் செய்தது என்பது முக்கியமானது. அதனை பக்கச்சார்பான ஊடகங்களின் கட்டுரைகளை வைத்து நம்ப முடியாது.  

"இலங்கை ராணுவம் போகும்பொழுது, அதன் பரப்புரைகள் சர்வதேசத்தில் எப்படி வேலை செய்ததென்று எமக்கு நன்றாகவே தெரியும், அது ஒரு மீட்பு போராக வெளியில் நம்பவைக்கப்பட்டது, எவ்வளவு கொலைகள் நடந்தேதென்று உள்ளே இருந்த நம்மவர்களுத்தான் தெரியும்."

நீங்கள் கூறுவதை நான் ஆமோதிக்கிறேன். பக்கச்சார்பான ஊடகங்கள் உண்மையை கூறும் என்று எப்படி எதிர்பார்க்கலாம் ?  ரஞ்சித் குறிப்பிட்ட ஊடகங்களின் கட்டுரைகளை அப்படியே google translation செய்து தானும் கொஞ்சம் கூடுதலாக ரஸ்யாவுக்கு சேறடிக்கிறார். சேறடிப்பதல்ல பிரச்சனை, அவரின் இந்த கட்டுரையின் ஊடாக எமக்கு என்ன கூற வருகிறார் ?  கட்டுரை எப்போதும் உண்மையை/  கூறவேண்டும். 

இவரது பக்கச்சார்பான எழுத்துக்கள் இவரது துரோகத்தின் நாட்காட்டி மீதான நம்பகத்தன்மையை அடியோடு இல்லாமல் செய்கிறதே. இது அவருக்குப் புரியவில்லையா ? விடுதலைப்புலிகளையும் Tamil Net ஐயும் நாங்கள் இன்றளவும் நம்புவதற்குக் காரணம்  அவர்களது தகவல்களில் இருந்த உண்மையே. போராட்ட காலத்தில், கொழும்பில் இருந்த மேற்கு நாட்டின் தூதர்களுக்கு தினமும் காலையில் Tamilnet ன் செய்திகளை print எடுத்துக் கொடுப்பது நடைமுறையாயிருந்ததாக அறிந்திருக்கிறேன். அந்த அளவு Tamil-net ல் நம்பிக்கையிருந்தது. அந்த நம்பிக்கையை மேற்கொண்டு தொடர முடியாதபோது tamilnet செயற்படுவதை நிறுத்திவிட்டது.  

"புடின் போன்ற தனி மனித ஆளுமையில் இருக்கும் ராணுவம், மனிதாபினாமமாக நடக்கிறது என்று நீங்கள் நம்புவதே ஆச்சரியமாக இருக்கிறது."

இரணுவம் என்பதே கொல்வதற்கும் வெல்வதற்கும் தயார்படுத்தப்பட்ட இயந்திரம்தான். இதில் மனிதாபிமானம் எங்கே வருகிறது. 

"அதிகாரத்தை பிடித்து, நாட்டை சர்வாதிகார  நாடா மாற்றி, தமது சொத்துக்களைபெருகியதால் பூட்டினுக்கும் கோத்தாவுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது?"

புடின் மீதான தங்களின் குற்றச்சாட்டிற்கு என்ன அடிப்படை ? யூகம்தானே ? அந்த யூகம் எப்படி ஏற்பட்டது ? ஆனால் ராசபக்ச குடும்பத்தின் ஊழலுக்கு நாம் எல்லோரும்  சாட்சிகள். 

முடிந்தால் இதற்குப் பதில் கூறுங்கள். 

ரஸ்ய ஊடகங்க்ளை ஏன் தடை செய்தார்கள்?  

ரஸ்யாவின் கருத்துக்களை நாம் அறியக்கூடாது என்பதற்காகத்தானே ? நாம் அறிந்துகொள்வதால் இவர்களுக்கு என்ன பிரச்சனை? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 உக்ரேனில் வாழும் ரஷ்ய மக்கள் துன்புறுத்துபடுவதை எதிர்த்து  ஜேர்மனியில் வாழும் ரஷ்ய மக்கள் பொது வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

190 Autos waren für den pro-russischen Auto-Korso durch Stuttgart angemeldet

Auf dem Parkplatz unter dem Fernsehturm in Stuttgart trafen sich zirka 500 Russen und zeigten Flagge

Etwa 20 Leute hatten sich zu einer Gegendemo versammelt

சாதாரணமாக பொது இடங்களில் உலாவும் வாகனங்களின் இலக்கங்களை மறைப்பது ஊடகங்களின் செயலும் சட்டமும். இங்கே மேற்குலகின் நடுநிலமையும்  அதன் வக்காளத்தும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனில் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களால் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய தொகுப்பு

At what point do Russian war crimes in Ukraine qualify as genocide? -  Atlantic Council

தற்போது உக்ரேன் மீது ரஸ்ஸியா நடத்திவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் போர்க்குற்றங்களாகக் கருதப்படக்கூடியவை, மனிதநேயத்திற்கெதிரான குற்றங்களாகக் கருதப்படக்கூடியவை என்று சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களாலும், செயற்பாட்டாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. சர்வதேச நியமங்களினை மீறி ரஸ்ஸிய ராணுவம், இலங்கையில் தமிழர்களுக்கெதிராக சிங்கள இனவழிப்பு ராணுவம் புரிந்த மிருகத்தனமான படுகொலைகளுக்கு நிகராக  உக்ரேனியர்கள் மீது மேற்கொண்டுவரும் அட்டூழியங்கள் கருதப்படக்கூடியவை என்றால் அது மிகையில்லை. 

ரஸ்ஸிய ஆக்கிரமிப்பு ராணுவம் உக்ரேனில் புரிந்துவரும் முக்கியமான மனிதவுரிமைகளுக்கு எதிரான, சர்வதேசச் சட்டங்களுக்கு முரணான செயற்பாடுகளைப் பார்க்கலாம்.

1. சிவிலியன்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீது, அதியுச்ச மக்கள் அழிவை மட்டுமே நோக்காகக் கொண்டு வேண்டுமென்றே நடத்தப்படும் கடுமையான குண்டுவீச்சுக்கள்.

2. குறைந்தது 110 நாடுகளில் பாவிப்பதற்குத் தடைசெய்யப்பட்டுள்ள கொத்தணிக்குண்டுகளை மக்கள் செறிந்துவாழும் நகர்ப்பகுதிகள் மீது தொடர்ச்சியாகப் பாவித்து வருதல். இவற்றிற்கு மேலதிகமாக பரந்த நிலப்பரப்பில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற வாயுக் குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் பல்குழல் உந்துகணைச் செலுத்திகளைப் பாவித்து பெருமளவு உயிரிழப்புக்களை நோக்கமாகக் கொண்டு ஏவப்படும் தாக்குதல்கள்.

3. பொதுமக்களின் வாழிடங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், பாலர் பள்ளிகள், அணுமின் நிலையங்கள், கலாசாரத் தொன்மை கொண்ட கட்டடங்கள், பாரம்பரிய தேவாலயங்கள் உட்பட்ட மக்களின் பாவனைக்கென்று இருந்த கட்டடங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள்.

4. தன்னால் ஆக்கிரமிக்கப்பட்டுவரும் உக்ரேனின் நிலப்பகுதியில் வாழும் மக்களை விருப்பத்திற்கு மாறாக, கட்டாயமாக ரஸ்ஸியாவினுள் நாடு கடத்துதல். 

5. உக்ரேனியர்களைக் கொல்வதை தமது படைநடவடிக்கையின் ஒரு நோக்கமாகக் கொன்டு செயற்படும் ரஸ்ஸிய ராணுவத்தால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கனக்கான உக்ரேனியர்களின் மரணங்கள். உதாரணத்திற்கு ரஸ்ஸிய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பூச்சா பாகுதியை விட்டு ஆக்கிரமிப்பாளர்கள் நீங்கியபின்னர் அங்கே கண்டெடுக்கப்பட்ட குறைந்தது 500 அப்பாவிகளின் சடலங்களும், அவர்கள் கொல்லப்பட்ட விதமும் ரஸ்ஸிய ராணுவம் போர்க்குற்றங்களிலும், மனித நேயத்திற்கெதிரான குற்றங்களிலும் ஈடுபட்டிருக்கின்றனன் என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன. இவை தவிரவும் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் தற்போது கண்டுபிடிக்கப்படும் பாரிய மனித புதைகுழிகள், மற்றும் உக்கிரமான ஆக்கிரமிப்பும் அழித்தொழிப்பும் நடைபெற்றுவரும் மரியோபுல்லில் இதுவரை கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் பற்றி வெளித்தெரிய ஆரம்பித்திருக்கும் விபரங்களும் ரஸ்ஸிய ராணுவம் போர்க்குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றதென்பதையே சுட்டி நிற்கிறது.

6. ரஸ்ஸியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வசித்துவந்த ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களைக் கைதுசெய்தது மற்றும் கொடுமைப்படுத்திவருவது. இதுவரை 24 ஊடகவியலாளர்களும், 21 மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் இவ்வாறு ஆக்கிரமிப்பு ரஸ்ஸிய ராணுவத்தால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், பலர் கடுமையான சித்திரவதைகளுக்கும் உள்ளாகியிருக்கின்றனர்.

சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களின் துணையோடு, உக்ரேனில் ரஸ்ஸிய ராணூவத்தால் நடத்தப்பட்டு வரும் போர்க்குற்றங்களை ஆவணப்படுத்திவரும் உக்ரேனின் மனிதவுரிமை அமைப்பும், நீதிபதிகளும் இதுவரையில் குறைந்தது 2500 சாட்சியங்களை ஆவணப்படுத்தியுள்ளதுடன், பல நூற்றுக்கணக்கான ரஸ்ஸியப் போர்க்குற்றவாளிகளின் பெயர்களையும் வெளியிட்டிருக்கின்றது.

உக்ரேனில் ரஸ்ஸியா புரிந்துவரும் போர்க்குற்றங்கள் மற்றும் இனவழிப்போடு ஒப்புநோக்கக் கூடிய குற்றங்களுக்காக, இம்மாதம் 7 ஆம் திகதியிலிருந்து, ஐ நா மனிதவுரிமைச் சபை ரஸ்ஸியாவை தனது அமர்வுகளிலிருந்து நீக்கியிருக்கிறது.  

உக்ரேனில் ரஸ்ஸியாவின் போர்க்குற்றங்களும், மனிதநேயத்திற்கெதிரான குற்றங்களும், இனவழிப்பின் வழிசெல்லும் குற்றங்களும் தொடரும்.................................

Retaking Kyiv suburb, Ukraine troops find 280 in mass grave, 20 left dead  on street | The Times of Israel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உக்ரேனில் உள்ள எதிர்க்கட்சிகளை ஏன் தடை செய்துள்ளார்கள் என்பதை உக்ரேன் அபிமானிகள் அறியத்தர வேண்டும்.அது மட்டுமல்லாமல் அந்த எதிர்க்கட்சி தலைவர்கள் என்ன ஆனார்கள் என்பதும் இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
 
உலகில் எத்தனையோ நாடுகளில் போர்களும் அழிவுகளும் நடைபெற்று வருகின்றது. அங்கில்லாத அக்கறை உக்ரேனுக்கும் மட்டும் ஏன்??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

அண்ணை, உங்களோட இன்னொரு வாதத்திற்கு வருகிற நோக்கம் எனக்கு இல்லை. அப்பாவிகள் கொல்லப்படுவதால் அதனை எழுதுகிறேன். நீங்கள் கூறியபடி, அப்பாவிகள் எங்கு கொல்லப்பட்டாலும் அதுபற்றி நாம் பேச வேண்டும். ஆகவே, நான் இதுவரை சிரியாவிலோ, பாலஸ்த்தீனத்திலோ, ஈராக்கிலோ, ஆப்கானிஸ்த்தானிலோ கொல்லப்பட்ட லட்சக்கனக்கான மக்களின் அவலங்கள் தொடர்பாக குரல் கொடுக்காமைக்காக வருந்துகிறேன். இனி அந்தத் தவறைச் செய்யப்போவதில்லை.

எமக்கு நடந்த இனவழிப்புப் போன்று இனி எங்கு நடந்தாலும் நாம் பேசவேண்டும். அவ்வளவுதான் நான் உங்களுக்குக் கூறவிரும்புவது.

உங்களுடனோ, இன்னும் இங்கு எழுதும் இன்னும் சிலருடனோ இன்னொரு கசப்பான வாதத்திற்கு வரும் நோக்கம் எனக்கு சற்றும் இல்லை. உங்களுக்குக் காட்டமாகப் பதில் எழுதும் நோக்கம் கூட எனக்கில்லை. எனது உணர்வின் பால் உந்தப்பட்டே இதனைச் செய்கிறேன். உலக அரசியல் பற்றி நான் கவலைப்படவில்லை.

வணக்கம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் மீது நடத்தப்படும் எழுந்தமானமான தாக்குதல்கள் மற்றும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் வலிந்த தாக்குதல்கள் 

சர்வதேச மனிதவுரிமைகள் அமைப்புக்கள் மற்றும், உக்ரேனில் இயங்கிவரும் ஐ நா மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் தகவல்களின்படி, உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாக  எழுந்தமானமான தாக்குதல்கள் , பொதுமக்கள் கட்டட அமைப்புக்களான குடிமனைகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் சிறுவர் பள்ளிகள் மீதான வலிந்த தாக்குதல்கள் என்பன இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாசி மாதம் 25 ஆம் திகதி, சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட அறிக்கையில், "மக்கள் அதிகமாகச் செறிந்துவாழும் நகர்ப்பகுதிகள் மீது, பொதுமக்கள் இறப்பினைச் சற்றும் சட்டை செய்யாது, பாரிய ஆயுதங்களான பாலிஸ்ட்டிக் ஏவுகனைகள் அடங்கலான பாரிய உயிரிழப்புக்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தும் கனரக  ஆயுதங்களைக் கொண்டு ரஸ்ஸியா தாக்கி வருகிறது" என்று குற்றஞ்சாட்டியிருக்கிறது. ஆனால், இத்தாக்குதல்களை முற்றாக மறைத்த ரஸ்ஸிய ராணுவம், துல்லியமாக இலக்குகளைத் தாக்கும் திறன்கொண்ட ஆயுதங்களையே தாம் பாவித்ததாக கூறிவருகிறது. ரஸ்ஸியாவின் மறுப்பினை கண்டித்திருக்கும் மனிதவுரிமைக் கண்காணிப்பகம் வூலெடார், கார்கிவ், உமான் ஆகிய பகுதிகளில் ரஸ்ஸியா மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் போர்க்குற்றங்கள் ஆகும் என்று கூறுகிறது.... 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ரஞ்சித் said:

எனது உணர்வின் பால் உந்தப்பட்டே இதனைச் செய்கிறேன். உலக அரசியல் பற்றி நான் கவலைப்படவில்லை.

நல்ல விடயம்.

உக்ரேனுக்காக மட்டும் இரட்டை முகம் கொண்ட மேற்குலகு கண்ணீர் வடிக்கும் போது நீங்களும் சேர்ந்து கட்டுரை வடிப்பது தான் உங்கள் சாரம்சம். வடியுங்கள். மேற்குலகின் வக்கிரத்திற்கு சார்பாக வடியுங்கள் வடித்துக்கொண்டேயிருங்கள்.😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நல்ல விடயம்.

உக்ரேனுக்காக மட்டும் இரட்டை முகம் கொண்ட மேற்குலகு கண்ணீர் வடிக்கும் போது நீங்களும் சேர்ந்து கட்டுரை வடிப்பது தான் உங்கள் சாரம்சம். வடியுங்கள். மேற்குலகின் வக்கிரத்திற்கு சார்பாக வடியுங்கள் வடித்துக்கொண்டேயிருங்கள்.😂

அப்படியே செய்கிறேன் அண்ணை

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

உக்ரேனில் உள்ள எதிர்க்கட்சிகளை ஏன் தடை செய்துள்ளார்கள் என்பதை உக்ரேன் அபிமானிகள் அறியத்தர வேண்டும்.அது மட்டுமல்லாமல் அந்த எதிர்க்கட்சி தலைவர்கள் என்ன ஆனார்கள் என்பதும் இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
 
உலகில் எத்தனையோ நாடுகளில் போர்களும் அழிவுகளும் நடைபெற்று வருகின்றது. அங்கில்லாத அக்கறை உக்ரேனுக்கும் மட்டும் ஏன்??

ரஷ்ய சார்பு உக்ரேன் கட்சிதலைவரை உக்ரேனும் மேற்குலக நாடுகளும் பிடித்து வைத்திருக்கின்றன.. அவரைப்போல் ரஷ்ய சார்பாளர்கள் பலர்.. போர் நடந்த பகுதிகளில் சுட்டுக்கொல்லப்பட்டு தெருக்களில் கிடக்கும் பலர் ரஷ்யசார்பானவர்கள் என்று சொல்கப்படுகிறது.. ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட ஒரு அதிகாரியை கூட உக்ரைன் மிருகத்தனமாக சுட்டு படுகொலை செயதது அனைவரும் அறிந்ததே.. இது எல்லாம் மனித உரிமை மீறலுக்குள் வராது.. ஏனெனில் இவற்றை செய்வது மேற்குலகும் அவர்களுக்கு சார்பானவ்ரகளும் அல்லவா.. அதனால் குருக்கள் செய்வது குற்றமாகாது..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ரஷ்ய சார்பு உக்ரேன் கட்சிதலைவரை உக்ரேனும் மேற்குலக நாடுகளும் பிடித்து வைத்திருக்கின்றன.. அவரைப்போல் ரஷ்ய சார்பாளர்கள் பலர்.. போர் நடந்த பகுதிகளில் சுட்டுக்கொல்லப்பட்டு தெருக்களில் கிடக்கும் பலர் ரஷ்யசார்பானவர்கள் என்று சொல்கப்படுகிறது.. ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட ஒரு அதிகாரியை கூட உக்ரைன் மிருகத்தனமாக சுட்டு படுகொலை செயதது அனைவரும் அறிந்ததே.. இது எல்லாம் மனித உரிமை மீறலுக்குள் வராது.. ஏனெனில் இவற்றை செய்வது மேற்குலகும் அவர்களுக்கு சார்பானவ்ரகளும் அல்லவா.. அதனால் குருக்கள் செய்வது குற்றமாகாது..

ரஷ்ய சார்பானவர்களை உக்ரேனியர்கள் கைகளை கட்டி கொலை செய்கின்றார்களாம். இதை விட  உக்ரேனிய சுரங்கப்பாதை மாஃபியாக்களின் அட்டகாசம் அதிகமாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Russian shelling has reduced Mariupol to 'ashes of a dead land', Ukraine  says | Ukraine | The Guardian

கடந்த மாசி மாதம் 26 ஆம் திகதி பேசிய உக்ரேனிய பிரதமர் டெனிஸ் ஷிமையல் ரஸ்ஸிய ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுவருவதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகப் பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

பங்குனி முதலாம், இரண்டாம் நாட்களில் மரியோபுல் பகுதியில் மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் மீது தொடர்ச்சியாக 15 மணித்தையாலங்கள் கடுமையான ஷெல்வீச்சினை மேற்கொண்டிருக்கிறது. இத்தாக்குதளின் மூலம் இப்பகுதியிலிருந்த பெரும்பாலான கட்டிடங்கள் முற்றாக அழிக்கப்பட்டிருப்பதுடன், குறைந்தது 100 பொதுமக்களாவது நேரடியான குண்டுவீச்சுக்களீல் அகப்பட்டும், கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்குண்டும் கொல்லப்பட்டதாக மரியோபுல்லின் உதவி முதல்வர் சேர்கி ஒர்லோவ் கூறுகிறார்.

பங்குனி 3 ஆம் திகதி ஐ நா மனிதவுரிமைகள் அமைப்பின் அறிக்கை உக்ரேனில் ரஸ்ஸியா நடத்திவரும் தாக்குதல்களில் குறைந்தது 1006 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதை தாம் உறுதிப்படுத்துவதாகக் கூறியதுடன், உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனைக் காட்டிலும் பலமடங்கு அதிகமாக இருக்கலாம் என்றும் கூறியிருக்கிறது.

Russia's bombing of Ukraine hospital reflects a terrible wartime pattern :  Goats and Soda : NPR

உலக சுகாதார ஸ்த்தாபனம் வெளியிட்ட அறிக்கையில் உக்ரேனில் இயங்கிவந்த பல வைத்தியசாலைகள் மீது ரஸ்ஸியா தாக்குதல் நடத்தியிருப்பதை உறுதிப்படுத்தியிருப்பதுடன், இவ்வமைப்பின் இயக்குநர் நாயகம் டெட்ரோஸ் அதனொம் ஜிப்ரேஸுஸ் பேசும்போது, "வைத்தியசாலைகள் மீதும், வைத்திய சேவகர்கள் மீதும் தாக்குதல் நடத்துவது சர்வதேசச் சட்டங்களை மீறும் ஒரு நடவடிக்கை, மனிதநேயச் சட்டங்களை மீறும் ஒரு செயல்" என்று கடிந்துகொண்டிருக்கிறார்.

பங்குனி 24 ஆம் திகதி, சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட அறிக்கையில், "ரஸ்ஸியா தொடர்ச்சியாக சர்வதேச மனிதநேயச் சட்டங்களை வேண்டுமென்றே மீறி, பொதுமக்கள் மீதும், பொதுமக்கள் அமைவிடங்கள் மீதும் வேண்டுமென்றே திட்டமிட்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது" என்று ரஸ்ஸியாவைக் கடுமையாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது. மேலும் பொதுமக்கள் அடைக்கலமாகியிருந்த வைத்தியசாலைகள், பாடசாலைகள் மீது வேண்டுமென்றே ரஸ்ஸிய ராணுவம் நடத்திவரும் தாக்குதல்களை ஒளிப்படச் சாட்சிகளாக சர்வதேச மன்னிப்புச் சபை ஆவணப்படுத்திவருவதுடன், இலக்கற்று, சகட்டுமேனிக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் கனரக ஆயுதங்களையும், கொத்தணிக் குண்டுகளையும் மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் மீது ரஸ்ஸியா தொடர்ச்சியாகப் பாவித்துவருவதையும் ஆவணப்படுத்தியிருக்கிறது.

Anatomy of an attack: Is Russia using cluster bombs in Ukraine? - BBC News

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனிய பொதுமக்கள் மீது ரஸ்ஸியா நடத்திவரும் பரவலான கொத்தணிக் குண்டுத்தாக்குதல்கள்

Graphic of cluster munition

உக்ரேன் மீதான தனது ஆக்கிரமிப்பு ஆரம்பித்த நாளிலிருந்து ரஸ்ஸிய ராணுவம் பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளை பாரிய அளவில் பொதுமக்கள் மீது பாவித்து வருகிறது. இத்தாக்குதல்களில் உடனடியாகவே பலநூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலியாகிவருவதுடன், உடனேயே வெடிக்காத பலகொத்தணிக் குண்டுகளால் நீண்டகாலப்போக்கில் பாரிய ஆபத்தினையும் பொதுமக்கள் எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டிருக்கிறது. ரஸ்ஸியாவோ, உக்ரேனோ 2008 இன் கொத்தணிக்குண்டுகளைத் தடைசெய்யும் ஆவணத்தில் கையொப்பம் இடாது இருப்பினும் கூட, சர்வதேச மனிதநேயச் சட்டங்களின்படி பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதிகள் மீது கொத்தணிக் குண்டுகளை இலக்கற்று, எழுந்தமானமாகப்  பாவிப்பது தடைசெய்யப்பட்டே இருக்கிறது.

மாசி 24 ஆம் திகதி காலை 10:30 மணிக்கு வொலெடார் பகுதியில் அமைந்திருக்கும் வைத்தியசாலைப் பகுதிமீது ரஸ்ஸியா 9 - எம் - 79 ரக ஏவுகணைத் தாக்குதலை நடத்தியபோது உடனடியாகவே  நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச்சபை கூறுகிறது. "சர்வதேச மனிதநேயச் சட்டங்களையும், சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்களையும் அப்பட்டமாக மீறும் ரஸ்ஸியாவின் போர்வெறிக்கு இது மறுக்கமுடியாத சாட்சியாகும்" என்று மன்னிப்புச்சபை மேலும் கூறுகிறது.
இத்தாக்குதல் பற்றி மனிதவுரிமைக் கண்காணிப்பகம் கூறுகையில், "இத்தாக்குதலில் ரஸ்ஸியா  9 - என் - 123 ரக ஏவுகணையொன்றைப் பாவித்திருக்கிறது. இதில் ஐம்பது 9 - என் - 24 ரக துணைக் குண்டுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் தனித்தனியாக 316 வெடிகுண்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன" என்று விபரமளித்திருக்கிறது. வைத்தியசாலையில் பணிபுரிந்த உத்தியோகத்தர்கள், ஒளிப்படங்கள், மீதமாக வீழ்ந்துகிடந்த வெடிக்காத குண்டுகள், வெற்றுக் கூடுகள் என்பவற்றை வைத்தே மன்னிப்புச்சபை இக்குண்டுகள் பற்றிய விபரங்களை ஆராய்ந்து வெளியிட்டிருக்கிறது.
சர்வதேச மன்னிப்புச்சபை ரஸ்ஸியாவிடம் முன்வைத்த கோரிக்கையில், "சர்வதேசச் சட்டத்திற்குப் புறம்பாக, பொதுமக்களை சகட்டுமேனிக்குக் கொன்றும், காயப்படுத்தியும் வரும் கொத்தணிக்குண்டுத்தாக்குதல்களை உடனேயே நிறுத்துங்கள்" என்று கேட்டிருக்கிறது. ஆனால், இந்தவேண்டுகோளினை உதாசீனம் செய்த ரஸ்ஸிய அரச பேச்சாளர் டிமிட்டிரி பெச்கோவ், "இந்தவகையான ஆயுதங்களை உக்ரேனிய ராணுவத்தினரே பாவிக்கின்றனர், அவர்களே தமது சொந்த மக்களைக் கொல்கின்றனர்" என்று ஏளனமாகப் பதிலளித்திருக்கிறார்.

Invasion of Ukraine: Tracking use of Cluster Munitions in Civilian Areas -  bellingcat

மாசி 25 ஆம் திகதி ஒக்டிர்க்கா பகுதியில் அமைந்திருந்த பாலர்பள்ளி மீது ரஸ்ஸியா நடத்திய ஏவுகணைத் தாக்குதல் பற்றி சர்வதேச மன்னிப்புச்சபை கருத்துத் தெரிவிக்கையில், "ரஸ்ஸிய ராணூவம் 220 மில்லி மீட்டர் பி எம் - 27 உறகன் ரக ஏவுகணைகளைப் பாவித்தே இத்தாகுதலினை நடத்தியது. பொதுமக்களும் சிறுவர்களும் தஞ்சமடைந்திருந்த இப்பாலர் பள்ளிமீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட  3 பொதுமக்கள் ஸ்த்தலத்திலேயே கொல்லப்பட்டதுடன் பலர் கடுமையான காயங்களுக்கும் உள்ளானார்கள். ஆளில்லாத வேவு விமானம் மூலம் பெறப்பட்ட ஒளிப்படத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் படி இவ்வகையான 4 ஏவுகணைகள் பாலர் பள்ளியின் கூரைப்பகுதியில் வீழ்ந்து வெடித்ததோடு, மேலும் மூன்று ஏவுகணைகள் பாலர்பள்ளியின் முன்றலில் வீழ்ந்து வெடித்துள்ளன. அத்துடன், பாலர்பள்ளியின் முன்றலில் குறைந்தது இரு பொதுமக்களாவது இறந்து கிடக்கக் காணப்பட்டதுடன், பெருமளவு இரத்தக்கறைகளும் காணப்பட்டன. மேலும் இத்தாக்குதலில் பாவிக்கப்பட்ட 9 எம் 27 கே ரக ஏவுகணையின் எஞ்சிய பாகங்கள் பாலர் பள்ளியிலிருந்து 200 மீட்டர்கள் தொலைவில் கிடந்திருப்பதையும் சர்வதேச மன்னிப்புசபை சாட்சிப்படுத்தியிருக்கிறது. ஒக்டிர்க்கா பகுதியின் மேற்கில் நிலைகொண்டிருக்கும் ரஸ்ஸியப் படைகளே இந்த ஏவுகணையினை ஏவியிருக்கின்றன. ரஸ்ஸியா இந்த ஏவுகணைகளை பொதுமக்கள் மீது பாவிப்பதானது பாரிய போர்க்குற்றமாகும்" என்றும் கூறுகிறது. 

What are cluster bombs and how much damage can they cause?

பங்குனி 4 ஆம் திகதி மனிதவுரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் கார்க்கிவ் பகுதியில் பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதிகள் மீது ரஸ்ஸிய ராணுவம் குறைந்தது 3 தடவைகளாவது கொத்தணிக்குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறுகிறது. மேலும் பங்குனி 18 ஆம் நாளன்று கொத்தணிக் குண்டுகளால் கார்க்கிவ் பகுதிகளில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 450 ஐத் தாண்டியிருப்பதாகவும், இன்னும் பலநூற்றுக்கணக்கானோர் இத்தாக்குதல்களில் காயமடைந்திருப்பதாகவும் கூறுகிறது. இவ்வாறே பங்குனி 7, 11 மற்றும் 13 ஆம் திகதிகளில் மைகொலைவ் பகுதிகள் மீது ரஸ்ஸியா நடத்திய கொத்தணிக்குண்டுத் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டிருப்பதோடு, ராணுவ நடவடிக்கைகள் ஏதுமற்ற நகர்ப்பகுதிக் கட்டிடங்கள் கடுமையாகச் சிதைக்கப்பட்டிருப்பதாகவும் கண்காணிப்பகம் கூறுகிறது. 

Cluster Bomb Attacks Rock Mykolaiv Railway Station | Reporter Diary | India  Today - YouTube

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரை/மொழிபெயர்ப்பை வெளியிடும் ரஞ்சித் அவர்கள், இலங்கை இனவழிப்பையொட்டி மேற்கு நாடுகள் இதுவரை வாய் திறக்காதிருப்பது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன என்பதைக் கூறுவீர்களா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Kapithan said:

இந்தக் கட்டுரை/மொழிபெயர்ப்பை வெளியிடும் ரஞ்சித் அவர்கள், இலங்கை இனவழிப்பையொட்டி மேற்கு நாடுகள் இதுவரை வாய் திறக்காதிருப்பது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன என்பதைக் கூறுவீர்களா? 

@ரஞ்சித்

இலங்கையில் எப்போது இனவழிப்பு நடத்தது?

58 தொடக்கம் பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகள் தானே நடந்தது.தமிழர் கடையெரிப்பு,தமிழர் சொத்து சூறையாடல்,தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு,தமிழர்கள் கொலை,அனுராதபுர ரயில் கொள்ளை/கொலைகள் எல்லாம் தமிழர்களின் பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகள் அல்லவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலரின் சில்லறைத்தனங்களைப் பார்க்கும்போது சிரிப்பதைத்தவிர வேறு எதையும் செய்யத் தோன்றுவதில்லை.

இன்று உக்ரேனில் நடப்பது 2009 இல் முள்ளிவாய்க்காலில் எமக்கு நடத்தப்பட்டதுதான் என்பதே இத்திரியின் தலைப்பு. ஆனால், எனக்குச் சேறுபூசி, “துரோகியாக்கும்” ஆசையில் திரியின் தலைப்புக் கூட சிலருக்கு மறந்து போயிற்று.

ரஸ்ஸியாவின் போர்க்குற்றங்கள் பற்றி மேலும் தொடர்வதற்கு இன்னும் இன்னும் அதிகமான ஊக்கத்தை இக்கருத்துக்கள் தருகின்றன என்பதுமட்டும் நூறுவீதம் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

ரஞ்சித்  நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கிறார் என்பதற்கு இது நல்ல உதாரணம். 

""சிலரின் சில்லறைத்தனங்களைப் பார்க்கும்போது சிரிப்பதைத்தவிர வேறு எதையும் செய்யத் தோன்றுவதில்லை.""

கேள்வியின் அர்த்தத்தைக்கூட புரிந்துகொள்ளும் அளவிற்கு கோபம் கண்ணை மறைக்கக்கூடாது ரஞ்ஜித் ? 

நேர்மையுடன் கருத்தாடப் பழகுங்கள். உங்களிடம் கேட்ட கேள்வி ""இலங்கை இனவழிப்பையொட்டி மேற்கு நாடுகள் இதுவரை வாய் திறக்காதிருப்பது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன"" 

இதற்கும் நீங்கள்  எழுதும் முள்ளிவாய்க்கல் ஒப்பீட்டிற்கும் என்ன சம்பந்தம்? 

இதற்குப் பதில் இருக்கிறதா உங்களிடம் ? 

 முழு உலகமே கைவிட்ட முள்ளிவாய்க்காலும், முழு உலகுமே ஒன்று சேர்ந்து சண்டையிடும் மரியுபொலும் ஒன்றா ? 

இந்த இலட்சணத்தில்தான் உமது புரிதல் இருக்குமென்றால், நீங்கள் எழுதும் துரோகத்தின் நாட்காட்டியின் நிலையை நினைக்கத்தான் சிரிப்பு வருகிறது. ஏனென்றால் துரோகத்தின் நாட்காட்டியை சரி பிழை பார்க்கவோ அல்லது ஒப்பிட்டு நோக்கவோ அல்லது எதிர்த்து வாதாடவோ யாழ் களத்தில் ஒருவரும் இல்லையே.

  ஒருவரது   எழுத்தின் நம்பகத்தன்மை அவரது எழுத்தில் உள்ள உண்மையின் அளவில் தங்கியிருக்கிறது. அதற்கு பக்கச்சார்பான கட்டுரைகள் பலம் சேர்க்காது.

புரிந்துகொள்ளுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

இதைத் தான் அந்த நேரமே  அந்த திரி பற்றி நான் சொன்னேன் ...ரஞ்சித் போன்றவர்களுக்கு ஒருவரும் எதிர் கருத்து எழுத கூடாது ...தாம் சொல்வது தான் சரி . அதை அப்படியே கேள்வி கேட்க்காமல் அனைவரும் ஏற்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள்...ஒரு பக்க சார்பாய் எழுதி அல்லது நடந்து கொண்டு அதை மற்றவர்கள் கேக்கிறார்கள் இல்லை என்ட புலம்பல் வேற ...சரதேசமும், நாங்களும் விரல் சூப்பும் பாப்பாக்கள் ஏன்டா நினைப்பு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Kapithan said:

ரஞ்சித்  நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கிறார் என்பதற்கு இது நல்ல உதாரணம். 

""சிலரின் சில்லறைத்தனங்களைப் பார்க்கும்போது சிரிப்பதைத்தவிர வேறு எதையும் செய்யத் தோன்றுவதில்லை.""

பானையில் இருப்பது தான் அகப்பையில் வருமாம் 😂

5 hours ago, Kapithan said:

"இலங்கை இனவழிப்பையொட்டி மேற்கு நாடுகள் இதுவரை வாய் திறக்காதிருப்பது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன"" 

இதற்கும் நீங்கள்  எழுதும் முள்ளிவாய்க்கல் ஒப்பீட்டிற்கும் என்ன சம்பந்தம்? 

இதுக்கு பதில் வந்தால் நான் மொட்டையடிக்கிறன்.😀

5 hours ago, Kapithan said:

 முழு உலகமே கைவிட்ட முள்ளிவாய்க்காலும், முழு உலகுமே ஒன்று சேர்ந்து சண்டையிடும் மரியுபொலும் ஒன்றா ? 

இதுக்கு வந்து  கம்பு சுத்துவார் பாருங்கோ......அது கண்கொள்ளா காட்சியாய் இருக்கும்.🤪

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.