Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆரியகுளத்தில்... வெசாக் கூடு : இராணுவத்தின் கோரிக்கை... நிராகரிப்பு.  ஆளுநர்... எச்சரிக்கை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்பு

ஆரியகுளத்தில்... வெசாக் கூடு : இராணுவத்தின் கோரிக்கை... நிராகரிப்பு.  ஆளுநர்... எச்சரிக்கை !

ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கை யாழ்ப்பாணம் மாநகர சபையால் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு அனுமதிக்காவிட்டால் யாழ் மாநகர சபையை கலைக்க நேரிடும் என வடக்கு மாகாண ஆளுநரால் எச்சரிக்கப்பட்டது.

அத்தோடு ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தின் கோரிக்கைக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் கட்டளையிட்டார்.

எனினும் நேற்றைய தினம் அவசர அவசரமாக மாநகர சபை உறுப்பினர்கள் இணைய வழி ஊடாக சந்தித்து இந்த விடயம் குறித்து கலந்துரையாடினர்.

இதன்போது சபை கலைக்கப்பட்டாலும் பிரச்சினை இல்லை என்றும் சபை தீர்மானத்தை மீற முடியாது என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

அத்தோடு முறைப்படி எழுத்து மூல கோரிக்கையை முன்வைத்தால் வேறு வழிகள் குறித்து பரிசீலனை செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.

https://athavannews.com/2022/1282010

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச பொறுங்க ராணுவத்துக்கு கொஞ்ச நாளில் சம்பளம் கிடைக்குதா என்று பார்த்து சொல்லுங்க .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருசம் மட்டும் ஆரியகுளம் பகுதியில் வெசாக் கூடு அமைக்கும் பணியினை யாழ்மக்களே ஒருதடவை மேற்கொள்ளலாம், 

தமது தேசம் முழுவதும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதும் தமிழர்கள்மீதும் அவர்கள் பக்க நியாயங்கள்மீதும் ஏதோ கொஞ்சம் காரணங்கள் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்றும் காலிமுகதிடலில் கூடிய சிங்களர்கள் ஓரளவு அனுதாபத்துடன் பார்க்க தொடங்கியிருக்கிறார்கள்.

பிரபாகரன் செய்தது எல்லாம் ஒட்டுமொத்த தவறல்ல என்று உணரவும் தொடங்கியிருக்கிறார்கள்.

புலிகள் மே 18ல் தாக்குதல் நடத்த போகிறார்கள் என்று ஒரு செய்தி வந்தபோது, யாழ்பக்கம் போய் பாருங்கள் யாழ் இளைஞர்கள் எவ்வளவு கஷ்டபடுகிறார்கள், வேண்டுமென்றே புலி பூச்சாண்டி காட்டி எங்களை ஏமாற்றாதீர்கள் என்று சமூக வலைதளங்களீல் சிங்களவர்கள் சிரிப்பாகவும் சீரியசாகவும் பேச தொடங்கிவிட்டார்கள் என்று செய்தி ஊடகங்கள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன.

கீழே வரும் இந்த காணொலியில் 5:43 லிருந்து சிங்களவர்களின் கருத்துக்கள் பற்றி செய்தி விளக்குகிறது ....

தமக்கு ஒரு பிரச்சனை வந்தால் தமிழர்மீது கரிசனை காட்டுவது ஒரு நடிப்பாக இருந்தால், எமக்கு கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்தை நாம் உங்களுக்கு எதிர்கள் அல்ல என்று வெசாக் கூடுகளை தமிழர் பகுதியில் இந்த வருசம் மட்டும் தமிழர்களே கட்டி நடிக்கலாம் அதில் தப்பு எதுவுமே இல்லை.

தமிழ்கட்சிகள்மீது என்றைக்கும் எம்மில் பலருக்கு உள்ளதுபோல் நம்பிக்கை இருந்ததில்லை ஆனாலும் அவர்கள் செய்த செயலில் ஒன்று மட்டும் ஈர்த்தது, தமிழகத்திலிருந்து உணவுபொருட்கள் இலங்கை தமிழருக்கு மட்டுமே அனுப்புவதாக இருந்தால் அது எமக்கு வேண்டாம் ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்காகவும் அனுப்புவதாயிருந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று சொன்னது வரலாற்று காய் நகர்த்தல்.

நாம் உங்களுக்கு எதிரிகள் இல்லை என்று பலதடவை நிரூபித்திருக்கிறோம், இன்று ஒருதுளி அளவாவது எமக்கு தமிழர்கள் எதிரி அல்ல, ஆட்சிட்யாளர்கள் மட்டுமே என்று அவர்கள் உணரும் சூழலில் இதுவரைகாலமும் எம்மை எதிரியாகவே பார்த்த அந்த பேரினத்தை அவமானபடுத்தவாவது வெசாக்கூட்டை தமிழர்கள் ஏற்றலாம் தப்பில்லை.

இனம் என்ற ரீதியில் பல கொள்கைகள் கோட்பாடுகள் காய்நகர்த்தல்கள் இருந்தாலும், தனிமனிதன் என்ற ரீதியில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கும் அல்லவா, அந்த வகையில் எந்த கால கட்டத்திலும் இலங்கை தமிழரை சரிசமாக அரியணையேற்றவோ அணைத்து செல்லவோ  சிங்கள சமூகம் அனுமதிக்காது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எப்போதுமே உண்டு.

இன்று தமக்கு வலிக்குது என்றால் அவர்களுக்கும் அப்படித்தானே வலிச்சிருக்கும் என்று மெலிதாய் உணர்கிறார்கள், நாளை தமது பிரச்சனை தீர்ந்துவிட்டால் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று எகத்தாளமாக சிரிப்பார்கள், இதுவே எமது முப்பாட்டன் காலத்திலிருந்து சிங்கள தேசத்தில் உணர்ந்த பாடம்.

மற்றும்படி நாமும் ராஜதந்திர அரசியல் செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

மிகச்சரியான நேரத்தின் பார்வை

நன்றி  சகோ

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, valavan said:

இந்த முறை வெசாக் பந்தல் கட்ட இடம் கொடுத்தால் அடுத்த வருடம் ? பின்வரும் வருடங்கள் ?

ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதையாகாதா ? 

எங்கள் அனுபவங்கள் அப்படி ! 

☹️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

ஓரளவுக்கு அனுதாபத்துடன் சிங்களவர்கள் பார்க்கிறார்களா சுத்த நடிப்பு அவர்கள் அக்கினி கீல நடவடிக்கையின்போது வாங்கிய அடியில் எப்படியெல்லம் நடித்தார்கள் . 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கை யாழ்ப்பாணம் மாநகர சபையால் நிராகரிக்கப்பட்டது.

17 hours ago, தமிழ் சிறி said:

ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு அனுமதிக்காவிட்டால் யாழ் மாநகர சபையை கலைக்க நேரிடும் என வடக்கு மாகாண ஆளுநரால் எச்சரிக்கப்பட்டது.

தமிழர் எப்போதும் விட்டுக்கொடுத்தே ஒட்டாண்டியாகியிருக்கிறான். அவர்கள் நயமாகவும், பயமுறுத்தியும் பறித்துக்கொண்டே இருக்கிறார்கள். எமது மண்ணில் எம் மக்களை நினைவு கூர எமக்கு அனுமதி மறுப்பு ஆனால் எமது மண்ணில் இல்லாத ஒரு நிகழ்வை கொண்டாடும்படி திணிக்க ஆளுநனுக்கு என்ன உரிமை இருக்கிறது? இந்த மண்ணின் மக்களின் விடுதலைக்காக உழைத்தாரா? எதையும் இழந்தாரா? அல்லது தாக்கப்படாரா? இதே மண்ணில் கடந்த ஆண்டு மாவீரர் நாளை அனுசரிப்பதற்க்கு நீதிமன்றங்கள் தடை விதித்து, மக்களை  போலீசார் விரட்டும் போது இங்கே தானே இருந்தார் இந்த ஆளுநன். ஏன் நிஞாயத்துக்காக, நல்லிணக்கத்துக்காக வாய் திறக்கவில்லை? எம்மை அழித்த இராணுவம் கட்டளையிட, அந்த கட்டளையின் தலைவனின் முகவர் இந்த ஆளுநன் எச்சரித்தால் நாங்கள் செய்வது பயமேயொழிய நல்லிணக்கமாகாது. தேவையில்லாமல் தனது வரம்பை மீறி மூக்கை நுழைப்பதை அனுமதிக்க முடியாது. நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று இவரின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். நாம் எமது உறவுகளின் அழிப்பை எண்ணி அழுது புலம்பிக்கொண்டிருக்கும்போது, இவர்களின் கேளிக்கையில் கலந்து கொள்ளும்படி வற்புறுத்துவது எந்த வகையில் நிஞாயம்? உண்மையில் சிங்கள மக்கள் எங்களை புரிந்து கொண்டிருந்தால் அவர்கள் வந்து எம்மை இந்த நேரத்தில் ஆறுதல் படுத்தியிருக்க வேண்டும். இருந்தாலும், அவர்களிடம் எமது கருத்தை எடுத்துச் செல்வோம், அவர்கள் எப்படி தங்கள் கருத்துக்களை பிரதி பலிக்கிறார்கள் என்பதை பொறுத்து அவர்களுடன் நல்லிணக்கம் செய்வோம். அதைவிட்டு இன்று இந்த எச்சரிக்கையை நல்லிணக்கம் என்று கருதுவோமானால் இந்த திணிப்பு நிரந்தர சட்டமாகும். சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அந்த மக்களால் துரத்தியடிக்கப்பட்டார்கள் ஆனால் அதன் முகவர் அதன் அதிகாரத் திமிரை எங்களிடம் காட்டுகிறது, இதுவும் அகற்றப்பட வேண்டும். நீதிமன்றங்கள் போனவருடம் எமக்கு தடை போட்டதுபோல் இவரின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அன்றேல் இன்னும் நிக்கிறா அம்மணி அவரின் காதில் போட்டுவிட வேண்டும்.  தென்பகுதியின் எதிர்ப்பை இங்கு மாற்றி விட்டு குளிர் காயும் இழிபுத்தி. கள்ள  புத்தமும் இலங்கையில் இருந்து கழுவப்படவேண்டும், உண்மையான தர்ம வழியான புத்தம்  தழைக்க வேண்டும்.

17 hours ago, தமிழ் சிறி said:

ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தின் கோரிக்கைக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் கட்டளையிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்கு ஒருக்கா நுள்ளிவிடுங்கோ இந்த ஆளுனர் நல்லாட்சியை குழப்புறார் என்று...தண்ணியில்லாக்காட்டுக்கு..துரத்தியடிப்பார்..🙃

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பிக்களுக்கு ஜால்றா போடுறார். தமிழே ஒழுங்காக பேசமாட்டார் சிங்களத்துக்கும் பவுத்தத்துக்கும் பந்தம் பிடித்து பதவி, பணம் பார்க்க எமது உரிமைகளை விற்கிறார். இவர் எமக்கு சேவை செய்ய வரவில்லை எம்மை சுரண்டி பாராட்டு பெற பாடுபடுகிறார். அதன் பயனை விரைவில் பெறுவார். எத்தனை நடந்தாலும் சில ஜென்மங்கள் திருந்தாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of flower and body of water

May be an image of body of water

சிங்கள/இந்தியத்தால் கொன்றொளிக்கப் பட்ட,  எம்மவர்களின் ஆயிரக்கணக்கான...
 உடல்கள் மிதந்த, நந்திக்கடலில்... புத்தன் மிதக்கிறான் 😡...

Nellai Nellaiyaan

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லுவதற்கு ஓடர் போட்டவர் இப்ப ..கொல்லையில் ஒழித்திருக்கிறார்...இவைக்கும் அப்படி ஒரு காலம் வரும்...விரைவில்..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

மாநகர சபை ஒரு ஜனநாயக விழுமியம். ஆரிய குளத்தைப் பயன்படுத்த அனுமதி மறுத்தால் மாநகரசபையைக் கலைப்பேன் என்று சபையின் நிர்வாகத்துக்கு சவால் விடுவது முற்றுமுழுதான ஜனநாயக விரோத செயல், அதுவும் இதுபோன்ற மிரட்டல்கள் ஒரு ஆளுநரிடம் இருந்து வருகிறது என்றால் அவருக்கு ஜனநாயக மொழி புரியாது என்பதுதான் பொருள். இவருடன் வேறுவழியில் பேசினால் தான் அவருக்கு புரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 16/5/2022 at 13:12, Kapithan said:

இந்த முறை வெசாக் பந்தல் கட்ட இடம் கொடுத்தால் அடுத்த வருடம் ? பின்வரும் வருடங்கள் ?

ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதையாகாதா ? 

எங்கள் அனுபவங்கள் அப்படி ! 

☹️

எதிர்ப்புகள் இருக்கவே புகுந்து விளையாடுறானுவள்.கொஞ்சம் இடம் குடுத்தால் உள்ள இடம் முழுக்க வெசாக் கூடு இல்ல  விகாரைகளே கட்டிக்கொண்டு திரிவானுவள்:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.