Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயிர்ச் செய்கையில்... ஆர்வமுள்ள இளைஞர்களிடம், அரசுக்கு சொந்தமான... நிலங்களை ஒப்படைக்கவும் – ஜனாதிபதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகளவு செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி

பயிர்ச் செய்கையில்... ஆர்வமுள்ள இளைஞர்களிடம், அரசுக்கு சொந்தமான... நிலங்களை ஒப்படைக்கவும் – ஜனாதிபதி!

மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவது காலத்தின் தேவையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசுக்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து, பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரச செலவினத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக கொழும்பு- கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்களைப் பதிவு செய்தல், குடிவரவு, குடியகல்வுஎ மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உள்ளிட்ட ஏனைய அரச நிறுவனங்களையும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பரவலாக்குவதன் மூலம் அந்த சேவைகளை மிகவும் திறமையாக வழங்க முடியும் என்றும் இவ்வாறான முக்கிய நிறுவனங்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் பல நாடுகள் உணவுப் பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றன என்றும் நாட்டின் அறுவடை விநியோகத்தின்போது, சுமார் 40 சதவீதம் அழிக்கப்படுகிறதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கடுமையான அவதானம் செலுத்துவதன் மூலம் பாரியளவிலான உணவுப் பொருட்களை பாதுகாக்க முடியும் என்றும் அறுவடையை விநியோகிப்பதில் இடைத்தரகர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் விவசாயிக்கும் நுகர்வோருக்கும் நியாயமான விலையை வழங்குவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசுக்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து, பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முப்படைகள், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களமும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த நிறுவனங்களையும் விவசாயத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் வெற்றிகரமான பிரதிபலன்களை அடைய முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1287157

இது மனோ கணேசன் பாராளுமன்றத்தில் பல நாட்களுக்கு முன் முன்மொழிந்த திட்டம். இப்போதுதான் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தமிழர்கள் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று பார்ப்பம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் பிடித்து வைத்திருக்கின்ற... தோட்டக் காணிகள் எல்லாம்..
அதன் உரிமையாளர்களுக்கு கிடைக்கப் போகுது, போலை கிடக்கு. 🙃

5 minutes ago, தமிழ் சிறி said:

இராணுவம் பிடித்து வைத்திருக்கின்ற... தோட்டக் காணிகள் எல்லாம்..
அதன் உரிமையாளர்களுக்கு கிடைக்கப் போகுது, போலை கிடக்கு. 🙃

தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் உண்மையிலேயே மக்களுக்காக உழைக்கிறார்கள் என்றால் இந்தக் காரணத்தை வைத்து இராணுவ ஆக்கிரமிப்புக் காணிகளை அவர்கள் விடுவிக்க முயல வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, இணையவன் said:

தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் உண்மையிலேயே மக்களுக்காக உழைக்கிறார்கள் என்றால் இந்தக் காரணத்தை வைத்து இராணுவ ஆக்கிரமிப்புக் காணிகளை அவர்கள் விடுவிக்க முயல வேண்டும்.

தமிழர் தரப்பு அரசியல்வாதிகள்... தமக்கு சம்பந்தம் இல்லாத,
மற்றைய இனத்தின்... அரசியலுக்கு வக்காலத்து வாங்குவார்களே தவிர,

தமிழ் மக்களால் தெரிவு செய்யப் பட்ட, தமது மக்களுக்காக..
ஒரு கோட்டில்... வரவே மாட்டார்கள்.

இது.. கடந்த கால அனுபவம். 
அதனை பார்க்க... இவர்கள் மீது வெறுப்புதான் வருகின்றது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கமநல சேவை அலுவலகத்தில் இருப்பவர்களின் வேலை கானாது அல்லது வேலையே செய்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

பயிர்ச் செய்கையில்... ஆர்வமுள்ள இளைஞர்களிடம், அரசுக்கு சொந்தமான... நிலங்களை ஒப்படைக்கவும் – ஜனாதிபதி

அரசு அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் நிலங்களையும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

வலி வடக்கு பலாலி மேற்கை விட்டால் நான் லண்டனில் இருந்து சென்று உற்பத்தியை மேற்கொள்ள தயாரக இருக்கின்றேன் வளமான 100 பரப்பு சொந்த காணி இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி…?

உழவு இயந்திரத்திற்கு டீசல் இல்லை

பசளை / உரம் இல்லை 

 வாகனங்களுக்கான OIL இல்லை

இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்கள் இல்லை 

பொதி செய்வதற்கான பைகள் இல்லை 

இப்படி பல இல்லைகளை  மீறி எப்படி

ஆகாயத்திலிருந்தா வர வழைப்பது????

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

எப்படி…?

ஆகாயத்திலிருந்தா வர வழைப்பது????

மீரா....

காசிருந்தால்.... சொல்லுங்க..... என்ன சாமான் எங்க டெலிவரி வேண்டும் எண்டு.... தமிழகத்தில் அல்லது கேரளத்தில் இருந்து எடுப்பிக்கலாம்.

உதைதான் சொன்னார்கள்..... சிங்களவருக்கு, இலங்கையை விட்டால் நாதியில்லை என்று.... முடிந்தால், தமிழகத்தில் இருந்து ஒரு அரிசி மூட்டை இறக்கி காட்டட்டும்...

தமிழருக்கு..... உலகமெல்லாம்..... நாதியுண்டு.

21 hours ago, தமிழ் சிறி said:

இராணுவம் பிடித்து வைத்திருக்கின்ற... தோட்டக் காணிகள் எல்லாம்..
அதன் உரிமையாளர்களுக்கு கிடைக்கப் போகுது, போலை கிடக்கு. 🙃

இராணுவம் வீட்ட போகிற நிலைப்பாடு. சம்பளம் கொடுக்க காசில்லை. 😁

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

மீரா....

காசிருந்தால்.... சொல்லுங்க..... என்ன சாமான் எங்க டெலிவரி வேண்டும் எண்டு.... தமிழகத்தில் அல்லது கேரளத்தில் இருந்து எடுப்பிக்கலாம்.

உதைதான் சொன்னார்கள்..... சிங்களவருக்கு, இலங்கையை விட்டால் நாதியில்லை என்று.... முடிந்தால், தமிழகத்தில் இருந்து ஒரு அரிசி மூட்டை இறக்கி காட்டட்டும்...

தமிழருக்கு..... உலகமெல்லாம்..... நாதியுண்டு.

சிங்களவருக்கு... சீனா, ஜப்பான் எல்லாம் இருக்கு என்று முன்பு நினைத்தனான்.  
இப்ப பார்க்க... அவங்கள், தங்களுடைய காரியம் பார்ப்பதில், குறியாக இருக்கிறார்கள்.

4 minutes ago, Nathamuni said:

இராணுவம் வீட்ட போகிற நிலைப்பாடு. சம்பளம் கொடுக்க காசில்லை. 😁

எந்தக் காரணம் கொண்டும், 
இராணுவத்தை குறைக்க மாட்டேன்  என்று, கோத்தா சொல்லியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

எந்தக் காரணம் கொண்டும், 
இராணுவத்தை குறைக்க மாட்டேன்  என்று, கோத்தா சொல்லியுள்ளார்.

இப்படி கதைவிட்ட மகிந்த எங்க?

ஜஎம்எப்... நிபந்தனைபடி அரச ஊழியர் ஜந்து வருடம்... வெளிநாடு போகலாம் என்று முதல் பந்து அடிச்சாச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

மீரா....

காசிருந்தால்.... சொல்லுங்க..... என்ன சாமான் எங்க டெலிவரி வேண்டும் எண்டு.... தமிழகத்தில் அல்லது கேரளத்தில் இருந்து எடுப்பிக்கலாம்.

உதைதான் சொன்னார்கள்..... சிங்களவருக்கு, இலங்கையை விட்டால் நாதியில்லை என்று.... முடிந்தால், தமிழகத்தில் இருந்து ஒரு அரிசி மூட்டை இறக்கி காட்டட்டும்...

தமிழருக்கு..... உலகமெல்லாம்..... நாதியுண்டு.

நாதம்ஸ், கள்ளச் சந்தையில் பொருட்கள் வாங்கி விவசாயம் செய்ய முடியாது.

மேலும் பெற்றோல் 950/= , 1000/= என்று போகிறது. டீசல் 850/= வரை போகிறது. U.K. விலையிலும் கூட. எரிவாயு 15,000/=. எல்லாத் தமிழர்களுக்கும் வெளிநாட்டு உதவி இல்லையே…!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

நாதம்ஸ், கள்ளச் சந்தையில் பொருட்கள் வாங்கி விவசாயம் செய்ய முடியாது.

மேலும் பெற்றோல் 950/= , 1000/= என்று போகிறது. டீசல் 850/= வரை போகிறது. U.K. விலையிலும் கூட. எரிவாயு 15,000/=. எல்லாத் தமிழர்களுக்கும் வெளிநாட்டு உதவி இல்லையே…!

லண்டன் ரஞ்சன் கேள்வி, உங்கள் பதில்.... உடன் தொடர்பானதே எனது பதிவு.....

மற்றும்படி.... நீங்கள் சொன்னதில் தவறேதும் இல்லை. ஆயினும் சிங்களவர்களிலும் பார்க்க... தமிழர்கள் இந்த பிரச்சணையை சமாளிக்க அனுபவமும், வாய்ப்பும், உதவியும் உண்டு என்று சொல்ல வந்தேன்.

சிங்களவர்.... ஏதோ... தமக்கு மட்டுமே இலங்கையில் வாழ்க்கை என்று நிணைத்தாடியவர்கள், தமிழக உதவியை கூட.... தமக்கும் சேர்த்து அனுப்புமாறு கோரினர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

லண்டன் ரஞ்சன் கேள்வி, உங்கள் பதில்.... உடன் தொடர்பானதே எனது பதிவு.....

மற்றும்படி.... நீங்கள் சொன்னதில் தவறேதும் இல்லை. ஆயினும் சிங்களவர்களிலும் பார்க்க... தமிழர்கள் இந்த பிரச்சணையை சமாளிக்க அனுபவமும், வாய்ப்பும், உதவியும் உண்டு என்று சொல்ல வந்தேன்.

சிங்களவர்.... ஏதோ... தமக்கு மட்டுமே இலங்கையில் வாழ்க்கை என்று நிணைத்தாடியவர்கள், தமிழக உதவியை கூட.... தமக்கும் சேர்த்து அனுப்புமாறு கோரினர்.

உண்மை சிங்களவர்கள் அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டார்கள். 

அரசும் இதை உணர்ந்து சதோச விற்கு ஊடாக சில பொருட்களை விநியோகம் செய்கிறது.

கடவுச்சீட்டு எடுப்பதற்கு ஆயிரக்கணக்கில் நிற்கிறார்கள். எட்டாம் மாதம் முதற்கிழமைதான் முன்பதிவு செய்ய கூடியதாக உள்ளது. 

3 hours ago, MEERA said:

எப்படி…?

உழவு இயந்திரத்திற்கு டீசல் இல்லை

பசளை / உரம் இல்லை 

 வாகனங்களுக்கான OIL இல்லை

இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்கள் இல்லை 

பொதி செய்வதற்கான பைகள் இல்லை 

இப்படி பல இல்லைகளை  மீறி எப்படி

ஆகாயத்திலிருந்தா வர வழைப்பது????

வன்னி நிலம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இவையெல்லாம் இல்லாமலும் விவசாயம் செய்யப்பட்டது. விவசாயம் செய்தே ஆகவேண்டும் என்ற நிலை வரும்போது மாற்று வழிகள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, இணையவன் said:

வன்னி நிலம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இவையெல்லாம் இல்லாமலும் விவசாயம் செய்யப்பட்டது. விவசாயம் செய்தே ஆகவேண்டும் என்ற நிலை வரும்போது மாற்று வழிகள் உண்டு.

13 வருடங்களுக்கு முன்னர் நடந்தவைகளை இன்று நடைமுறைப்படுத்த இயலாத நிலமை. அவற்றை பேசி இனி பயன் இல்லை. 

பூக்கன்றுகளுக்கே செயற்கை உரங்களை பயன்படுத்தும் நிலையில் மக்கள் சோம்பேறிகளாக.

Edited by MEERA

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Nathamuni said:

தமிழக உதவியை கூட.... தமக்கும் சேர்த்து அனுப்புமாறு கோரினர்.

தவறான தகவல், நாதம்ஸ்.
சிங்களவர் கேட்க முதல்...  தமிழர்கள் பலரும், 
சிங்களத்துக்கும் சேர்த்து உதவி செய்வதுதான் 
சரியாக இருக்கும் என்று, தமிழக முதல்வர்  ஸ்ராலினிடம் கூறியவர்கள். 
(சுமந்திரன், குணா கவியழகன் போன்றோர்.)

ஏனென்றால்... எமக்கு மட்டும், தமிழகத்தில் இருந்து உதவி வந்து...
நாம் அதனை... பயன்படுத்தும் போது, பசியில் உள்ள சிங்களவருக்கு..
எம் மீது, பயங்கர ஆத்திரத்தை ஏற்படுத்துவதுடன்....  
கலவரத்தைக் கூட உருவாக்கலாம் என்று கருதியதால்...
அப்படி கேட்டது, சரியான அணுகு முறை என்றே நினைக்கின்றேன்.

அத்துடன்... தமிழருக்கு மட்டும், தமிழக அரசு உதவி செய்வதாக இருந்தால்...
அத்த உதவியை... இந்திய ஒன்றிய அரசும், இலங்கை அரசும் 
நிச்சயம்  அனுமதித்து இருக்க மாட்டாது. 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, MEERA said:

உண்மை சிங்களவர்கள் அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டார்கள். 

அரசும் இதை உணர்ந்து சதோச விற்கு ஊடாக சில பொருட்களை விநியோகம் செய்கிறது.

கடவுச்சீட்டு எடுப்பதற்கு ஆயிரக்கணக்கில் நிற்கிறார்கள். எட்டாம் மாதம் முதற்கிழமைதான் முன்பதிவு செய்ய கூடியதாக உள்ளது. 

கடவுச்சீட்டு எடுக்க லைனில் நிற்கத்தான் வேணும் போல கிடக்கு 8மாதம் 17 ற்கு பிறகுதான் எனக்கும் டேற் கொடுத்து இருக்கானுகள் நாட்டை விட்டு போக எத்தன பேரு யெப்பா 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கடவுச்சீட்டு எடுக்க லைனில் நிற்கத்தான் வேணும் போல கிடக்கு 8மாதம் 17 ற்கு பிறகுதான் எனக்கும் டேற் கொடுத்து இருக்கானுகள் நாட்டை விட்டு போக எத்தன பேரு யெப்பா 

நேற்று மாலை4ம் திகதிக்கு இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

நேற்று மாலை4ம் திகதிக்கு இருந்தது.

காலை 11 மணிக்கு இடையில் இத்தனை பேரா ஏற்கனவே போட்டோ எடுத்ததால் என்னவோ தெரியல

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, MEERA said:

எப்படி…?

உழவு இயந்திரத்திற்கு டீசல் இல்லை

பசளை / உரம் இல்லை 

 வாகனங்களுக்கான OIL இல்லை

இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்கள் இல்லை 

பொதி செய்வதற்கான பைகள் இல்லை 

இப்படி பல இல்லைகளை  மீறி எப்படி

ஆகாயத்திலிருந்தா வர வழைப்பது????

முடியும் யாழ்ப்பாணத்தானால் ...செய்து காட்டி வாழந்தவன்....கல் உடைத்து கிணறு வெட்டி துலா மித்து விவாசயம் செய்தவன் ...ஒரு காலத்தில் இந்த மண்ணின் இந்த செயலை பாடப்புத்தகத்தில் எழுதி படிப்பித்தவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, MEERA said:

எப்படி…?

உழவு இயந்திரத்திற்கு டீசல் இல்லை

பசளை / உரம் இல்லை 

 வாகனங்களுக்கான OIL இல்லை

இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்கள் இல்லை 

பொதி செய்வதற்கான பைகள் இல்லை 

இப்படி பல இல்லைகளை  மீறி எப்படி

ஆகாயத்திலிருந்தா வர வழைப்பது????

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2022 at 23:58, ஈழப்பிரியன் said:

அரசு அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் நிலங்களையும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவற்றைத்தான் அரசுக்கு சொந்தமான நிலங்கள் என்று சொந்தம் கொண்டாடுகிறார்களோ? சிங்கள இளைஞர்களுக்கே இந்த அறிவித்தல் எல்லாம், எங்களுக்கல்ல. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.