Jump to content

உபத்திரவ நாய்:  மரநாய்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவரால நானும் பாதிக்கப் பட்டுள்ளேன்.மற்றது மேலை சிறி சொன்ன மாதிரி சத்தம் எழுப்பும் கருவியை வைப்பதால் வீட்டில் வளர்க்கும் நாய் பூனை போன்ற மிருகங்களுக்கு பாதிப்பு வராதா.

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

சலசலப்பு,  சேதாரம் இல்லாமல்… பாய வேணும். 🤣
ஓரு சின்ன அசுமாத்தம் கேட்டாலும்… ஊரே திரண்டு, உய்யலாலா பாடும். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சுவைப்பிரியன் said:

இவரால நானும் பாதிக்கப் பட்டுள்ளேன்.மற்றது மேலை சிறி சொன்ன மாதிரி சத்தம் எழுப்பும் கருவியை வைப்பதால் வீட்டில் வளர்க்கும் நாய் பூனை போன்ற மிருகங்களுக்கு பாதிப்பு வராதா.

சுவைப்பிரியன், சத்தம் எழுப்பும் கருவியை… காரின் எஞ்சின் பகுதிக்குள்தான் வைப்பார்கள்.
அதனால்…. வீட்டில் வளர்க்கும் பிராணிகளுக்கு, பாதிப்பு ஏற்படும் என நினைக்கவில்லை.
அப்படி பாதிப்பு ஏற்படுத்தும் கருவியாக இருந்தால்…. ஆரம்பக் கட்ட பரிசோதனையிலேயே,
அதனை தடை செய்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

கெட்ட சாமான் இது.

சின்ன வயசில் என் முதலாவது பிசினஸ் முயற்சியான கோழி பண்ணையை அடியோடு சாய்த்த வில்லன்😡.

இரவில் கண்ணை மட்டும் கண்டுள்ளேன்.

கோழிக்கூட்டினுள் இறங்கினால் கொலைப்பிரியன் அதுவும் வளர்பருவம் என்றால் ஒரு கோழி தப்பாது ஆனால் உண்பது அரிது அதைப்பார்த்து விட்டு பக்கத்து வீட்டு எரிச்சல் பிடித்தவர்கள் வேணுமென்று தங்கள் வளர் கோழிகளை குத்தி  கொன்று போட்டினம் என்று விடிந்தபின் உலக்கை மண்வெட்டி கத்தி போன்றவற்றுடன் சண்டை நடப்பதுக்கும் இந்த மிருகம்தான் காரணம் ஆடுகளை சிதைத்து கொல்லும்  விதம் பார்த்து புலி ஊருக்குள் என்று கதையை கிளப்புவார்கள் பகலில் திரிவது கிடையாது  காகம்கள் கண்டால் விடாது கூட்டமாக அன்று முழுவதும் உணவு தேடுவதை விட்டு மரநாயை கலைப்பதிலே குறியாய் நிக்கும்கள் அதன் வழியே இரவில் நகரும் போது சைக்கோ போல் காணும் மிருகங்களின் குரல்வளையை கடித்து உயிரை போக்காட்டி கொண்டு போகும் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நாதம்.
மிகவும் சுவாரிசமாக இருக்கிறது.
எமது வீட்டிலும் நிறைய கோழிகள் இவற்றால் பாதிப்படைந்துள்ளன.

இவை மரமேறுவதால் இலகுவாக நாயிடமிருந்து தப்பிவிடுகிறது.

நாயின் அவலக்குரலைக் கேட்டு லைட் அடித்துக் கொண்டு ஓடினால் பாய்ந்தோடி விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

கோழிக்கூட்டினுள் இறங்கினால் கொலைப்பிரியன் அதுவும் வளர்பருவம் என்றால் ஒரு கோழி தப்பாது ஆனால் உண்பது அரிது அதைப்பார்த்து விட்டு பக்கத்து வீட்டு எரிச்சல் பிடித்தவர்கள் வேணுமென்று தங்கள் வளர் கோழிகளை குத்தி  கொன்று போட்டினம் என்று விடிந்தபின் உலக்கை மண்வெட்டி கத்தி போன்றவற்றுடன் சண்டை நடப்பதுக்கும் இந்த மிருகம்தான் காரணம் ஆடுகளை சிதைத்து கொல்லும்  விதம் பார்த்து புலி ஊருக்குள் என்று கதையை கிளப்புவார்கள் பகலில் திரிவது கிடையாது  காகம்கள் கண்டால் விடாது கூட்டமாக அன்று முழுவதும் உணவு தேடுவதை விட்டு மரநாயை கலைப்பதிலே குறியாய் நிக்கும்கள் அதன் வழியே இரவில் நகரும் போது சைக்கோ போல் காணும் மிருகங்களின் குரல்வளையை கடித்து உயிரை போக்காட்டி கொண்டு போகும் .

அட பாவி மக்கா - அயலில் சண்டையை வேற கிளப்பி இருக்கா இது.

#மர(ண)நாய் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்த பிராணி ஒரு cheeky predator என்று சொல்கிறீர்கள்!!!

2-BC866-BF-9468-44-CF-A093-A29451-AFF0-B

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அப்ப இந்த பிராணி ஒரு cheeky predator என்று சொல்கிறீர்கள்!!!

2-BC866-BF-9468-44-CF-A093-A29451-AFF0-B

என்னது cheeky யா? 

சீரியல் கில்லர்🤣.

பசிக்காக இன்றி fun க்கு கொலை செய்யிற ஆள் 🦷🧛‍♂️🐲🩸

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

கோழிக்கூட்டினுள் இறங்கினால் கொலைப்பிரியன் அதுவும் வளர்பருவம் என்றால் ஒரு கோழி தப்பாது ஆனால் உண்பது அரிது அதைப்பார்த்து விட்டு பக்கத்து வீட்டு எரிச்சல் பிடித்தவர்கள் வேணுமென்று தங்கள் வளர் கோழிகளை குத்தி  கொன்று போட்டினம் என்று விடிந்தபின் உலக்கை மண்வெட்டி கத்தி போன்றவற்றுடன் சண்டை நடப்பதுக்கும் இந்த மிருகம்தான் காரணம் ஆடுகளை சிதைத்து கொல்லும்  விதம் பார்த்து புலி ஊருக்குள் என்று கதையை கிளப்புவார்கள் பகலில் திரிவது கிடையாது  காகம்கள் கண்டால் விடாது கூட்டமாக அன்று முழுவதும் உணவு தேடுவதை விட்டு மரநாயை கலைப்பதிலே குறியாய் நிக்கும்கள் அதன் வழியே இரவில் நகரும் போது சைக்கோ போல் காணும் மிருகங்களின் குரல்வளையை கடித்து உயிரை போக்காட்டி கொண்டு போகும் .

மரநாய் விசயத்திலை பெருமாள் பழம் திண்டு கொட்டை போட்டவர் போல கிடக்கு 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பெருமாள் said:

3 minutes ago, குமாரசாமி said:

மரநாய் விசயத்திலை பெருமாள் பழம் திண்டு கொட்டை போட்டவர் போல கிடக்கு 😂

பெருமாள்... மரநாயை பற்றி, பி. எச். டி.  பட்டம் பெறலாம் என பரிந்துரைக்கின்றேன். 🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

என்னது cheeky யா? 

சீரியல் கில்லர்🤣.

பசிக்காக இன்றி fun க்கு கொலை செய்யிற ஆள் 🦷🧛‍♂️🐲🩸

எனக்கென்னவோ முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு மற்ற பிராணிகளை கொலை செய்கிறது போல தெரிகிறது.. 

சரி போகட்டும் Weasel- The Night Stalker !!😊

B619688-D-F338-4-A52-BEDB-F7-CA076-E0057

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

பெருமாள்... மரநாயை பற்றி, பி. எச். டி.  பட்டம் பெறலாம் என பரிந்துரைக்கின்றேன். 🤣

வளர்ந்தது முல்லைதீவு செம்மலை அருகில் இருக்கும் கராச்சி காடு தான் முழு நேர பொழுது போக்கும் இடம்  முழு காட்டான் சார் .😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

சலசலப்பு,  சேதாரம் இல்லாமல்… பாய வேணும். 🤣
ஓரு சின்ன அசுமாத்தம் கேட்டாலும்… ஊரே திரண்டு, உய்யலாலா பாடும். 😁

ஊரிலை, தேவாங்கு என்று ஒரு மிருகம் உண்டு. இதன் விருப்ப உணவு மயில்.

மயில் பொதுவாக, பட்ட மரங்களிலேயே இரவில் தங்கும். அதில் இலைகள் இருக்காது, கிளைகள் மட்டுமே இருக்கும். இவ்வகை மரங்களை நாட, பாதுகாப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த மரங்களில், மயிலை பிடிக்க, மெதுவாக, கவனமாக தேவாங்கு ஏறும்.

பட்ட மரமாகையால், காய்ந்த பட்டைகள் கையோடு வந்து விடும். அது கீழே விழுந்தால், சத்தத்தில் மயில் தூக்கம் விழித்து அலெர்ட் ஆகி விடும் என்பதால், கையில் வந்த பட்டையினை அப்படியே கீழே, கொண்டு போய் மெதுவாக வைத்துவிட்டு மேலே ஏறி வருமாம்.

மீண்டும் பட்டை கையில் வந்தால்... அதுவே தொடரும்.

விசித்திர விலங்குலகம். நாம் வீட்டினை கட்டி, கதவை பூட்டிக்கொண்டு கட்டிலில் நீட்டி நிமிர்ந்து படுத்து விடுகிறோம். ஆனால் விலங்குகளில், அடுத்த கணம் மரணம் என்ற நிலையில் போராட்டம். பிறந்த அடுத்த நிமிடமே, வேறு மிருகங்களால் கவரப்பட்டு இரையாகும் மிருகங்கள் அநேகம்.  

நேற்று பார்த்த வீடியோ, பிரசவ வலியில் துடித்த வரிக்குதிரை..... வைத்தியம் பார்க்க வந்த சிங்கம், சாகவாசமாக தனது, பிள்ளைகளை அழைத்து... விருந்துக்கு தயார்.

அதுவே இயற்கை நியதி. 

Edited by Nathamuni
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Nathamuni said:

ஊரிலை, தேவாங்கு என்று ஒரு மிருகம் உண்டு.

இதையும் எனது உறவினர் பிடித்து, பிடிக்கும் போது அது கடித்தாலும், சாக்கில் போட்டு கட்டி வீடு கொண்டு வந்து அடைத்து சில நாட்கள் வைத்து பலர் பார்வை இட்டனர்.

வெண்மை கலந்த சாம்பல், மண்ணிற உரோமம். முகம் வெள்ளை உரோமமும், மற்றும்  வெண்மை கலந்த மண்ணிற உரோமமும். அளவில் பெரிய வட்ட கண்கள்.

தேவாங்கு  கடிக்கு ஊசி போடப்பட்டது எனது உறவினருக்கு.

பொதுவாக தேவாங்கு பகலில் உலாவுவது இல்லை என்று நினைக்கிறன்.

இதை விட பல இன பறவைகளும் பிடித்து வைத்து  இருந்தார். அவரின் சகோதரங்கள், அப்பா, அம்மா வடர்புறுத்தியதில் சில காலத்துக்கு பின் அநேகமாக விட்டு  விடுவார். 

ஒருமுறை குரங்கு என்று, மயிலும் பிடித்ததாக அவரின் சகோதரங்கள் சொல்லி தெரியும், நான் காணவில்லை. 

அவருடன் சேர்ந்து சிலவற்றை பிடிப்பதில் நானும் ஈடுபட்டுளேன்.

இப்பொது தான் எண்ணி பார்க்கிறேன், எனது உறவினர் ஒரு வருத்தமும், ஆபத்தும் வராமல் இருந்தது மிகப்பெரிய கண்டத்தில்  இருந்து தப்பி உள்ளார், நானும் தப்பி இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவாங்கு பலருக்கு பட்டமளிப்புக்கு பங்களிப்புச் செய்துள்ளது.😄

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

வளர்ந்தது முல்லைதீவு செம்மலை அருகில் இருக்கும் கராச்சி காடு தான் முழு நேர பொழுது போக்கும் இடம்  முழு காட்டான் சார் .😀

அடே நம்மூரா 😍,

ஒரு காலத்தில் முல்லைதீவு மாவட்டதிலேயே மாங்குளம், செம்மலையில்தான் போன் இருந்தது.

அப்ப உங்களுக்கு சிலாவத்தை கடற்கரை ஈச்சம் காடு, புயலில் சிக்கிய பழைய கப்பல் எல்லாம் தெரிந்திருக்கும்.

நீங்கள் சொல்லும் காட்டுக்குள்தான் நான் கழுகு பாம்பை துவம்சம் செய்ததை பார்த்தது.

கிளுவை வேலிகள், கல்யாணி பூ பற்றைகள் - குறிஞ்சி என்றால் நினைவில் வரும் மண்.

1 hour ago, Kadancha said:

பொதுவாக தேவாங்கு பகலில் உலாவுவது இல்லை என்று நினைக்கிறன்.

ஓம். 5 பட்டரி டோர்ச் வெளிச்சத்தில் இவரை நான் கண்டுள்ளேன். 

முகம் முழுக்க கண் - அப்படி ஒரு முழி.

ஊரில் வடிவில்லாத ஆண்களை தேவாங்கு என்பார்கள்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தர்மடத்தடியில் இருந்த பண்டிதர் பூங்காவில் இரண்டு மூன்று தேவாங்குகள் மற்றும் பலவகையான காட்டு விலங்குகள் பறவைகள் எல்லாம் இருந்தன........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, suvy said:

கந்தர்மடத்தடியில் இருந்த பண்டிதர் பூங்காவில் இரண்டு மூன்று தேவாங்குகள் மற்றும் பலவகையான காட்டு விலங்குகள் பறவைகள் எல்லாம் இருந்தன........!  😁

எனக்கு...  5 வயதாக இருக்கும் போது... எங்கள் வளவிலேயே, 
சுதந்திரமாக திரிந்த  தேவாங்கு ஒன்றை, ஒரு முறை மரத்தில்  கண்டேன். 
அதன் பின், அதனை காணக் கிடைக்கவில்லை.

10 வயது மட்டும்... மயில்கள் வந்து போவதை அவதானித்துள்ளேன்.
புளினி, செம்பகம், சாரைப் பாம்பு என்று பல உயிரினங்கள் வரும். 
பின்பு... எல்லாம் மறைந்து விட்டது.  

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

அடே நம்மூரா 😍,

ஒரு காலத்தில் முல்லைதீவு மாவட்டதிலேயே மாங்குளம், செம்மலையில்தான் போன் இருந்தது.

அப்ப உங்களுக்கு சிலாவத்தை கடற்கரை ஈச்சம் காடு, புயலில் சிக்கிய பழைய கப்பல் எல்லாம் தெரிந்திருக்கும்.

நீங்கள் சொல்லும் காட்டுக்குள்தான் நான் கழுகு பாம்பை துவம்சம் செய்ததை பார்த்தது.

கிளுவை வேலிகள், கல்யாணி பூ பற்றைகள் - குறிஞ்சி என்றால் நினைவில் வரும் மண்.

தென்னைமரவாடியில் சிங்களவன் இரவோடு இரவாக 84ல் கலைக்கையில் இடம்பெயர்ந்து விட்டோம்  நாயாற்று பாலம் தாண்டுவதில்லை  அங்கு வாழ்ந்த காலங்களில் .

பாஸ் வலிகாமம் தான் உங்க ஊர் என்று சொன்னது நினைவில் உள்ளது .

31 minutes ago, goshan_che said:

ஓம். 5 பட்டரி டோர்ச் வெளிச்சத்தில் இவரை நான் கண்டுள்ளேன். 

முகம் முழுக்க கண் - அப்படி ஒரு முழி.

அதன் முழியை  இரவில் பார்த்தவர்களுக்கு சிலருக்கு காய்ச்சல் கண்டது உண்டு ஆடு மாடுகளின் இரவு கண்ணை விட சுவரசியமான பார்வையாக இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

பாஸ் வலிகாமம் தான் உங்க ஊர் என்று சொன்னது நினைவில் உள்ளது .

தான் மட்டக்களப்பு எண்டும் ஒருக்கால் சொன்னவர் 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

தென்னைமரவாடியில் சிங்களவன் இரவோடு இரவாக 84ல் கலைக்கையில் இடம்பெயர்ந்து விட்டோம்  நாயாற்று பாலம் தாண்டுவதில்லை  அங்கு வாழ்ந்த காலங்களில் .

அப்ப எனக்கு சின்ன வயசு ஆனால் ஆக்கள் வந்தது, பள்ளிகுடத்தில தங்கி இருந்தது நியாபகம் இருக்கு.

பிறகு கொக்கிளாய் ஆஸ்பத்திரியோட நேவி நிப்பாட்டி போடுவான். 1990 சமாதான நேரம் கொக்கு தொடுவாய் போய் சிங்கள மீன்பிடி கிராமமாக மாறி போயிருந்த முகத்திவாரத்தில் இருந்து புல்மோடையை ஆற்றுக்கு அப்பால் பார்த்தேன்.

அதுதான் கடைசி. 

பிறகு 2014 இல் திரிகோணமலையில் இருந்து காட்டுபாதையால் தென்னை மரவாடி  சந்தி வரை போய், வெலிஓயா, ஜானகபுர வழியாக செம்மலையில் வந்து ஏறினேன்.

கோடை காலம் எண்டடதால் முடியுமாய் இருந்தது மாரி எண்டால் வெள்ளம் விட்டிராது.

செம்மலையில் இருந்து முல்லைதீவு ஆஸ்பத்திரி இருந்த சந்தி (பழைய ஆமி காம்ப்- சின்னதாக இருந்த இடம்) வரைக்கும் காப்பேட். அதே போல மாங்குளம் ரோட், புது குடியிருப்பு  ரோட் கார்பெட்.

ஆனால் குடியேற்றம் நாயாறு தாண்டி வந்து விட்டிருந்தது.

முல்லைதீவில் 90க்கு முன்னிருந்த ஒரு கட்டிடம்தானும் இல்லை. ஆனால் அதே வளவில் புதிதாக கட்டி உள்ளார்கள்.

3 hours ago, பெருமாள் said:

பாஸ் வலிகாமம் தான் உங்க ஊர் என்று சொன்னது நினைவில் உள்ளது .

கொழும்பு, இலண்டனை விட்டீர்கள்🤣.

யாதும் ஊரே யாவரும் கேளிர்.

நம் ஊர் என்பதன் வரையாரைதான் என்ன?

பெற்றோரின் பிறப்பை தவிர்த்து விட்டு - எனது ஊர் எது என யோசித்து நாஅனே கன்பியூஸ் ஆகி உள்ளேன்😂.

1 hour ago, குமாரசாமி said:

தான் மட்டக்களப்பு எண்டும் ஒருக்கால் சொன்னவர் 🤣

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

அப்ப எனக்கு சின்ன வயசு ஆனால் ஆக்கள் வந்தது, பள்ளிகுடத்தில தங்கி இருந்தது நியாபகம் இருக்கு.

பிறகு கொக்கிளாய் ஆஸ்பத்திரியோட நேவி நிப்பாட்டி போடுவான். 1990 சமாதான நேரம் கொக்கு தொடுவாய் போய் சிங்கள மீன்பிடி கிராமமாக மாறி போயிருந்த முகத்திவாரத்தில் இருந்து புல்மோடையை ஆற்றுக்கு அப்பால் பார்த்தேன்.

அதுதான் கடைசி. 

பிறகு 2014 இல் திரிகோணமலையில் இருந்து காட்டுபாதையால் தென்னை மரவாடி  சந்தி வரை போய், வெலிஓயா, ஜானகபுர வழியாக செம்மலையில் வந்து ஏறினேன்.

கோடை காலம் எண்டடதால் முடியுமாய் இருந்தது மாரி எண்டால் வெள்ளம் விட்டிராது.

செம்மலையில் இருந்து முல்லைதீவு ஆஸ்பத்திரி இருந்த சந்தி (பழைய ஆமி காம்ப்- சின்னதாக இருந்த இடம்) வரைக்கும் காப்பேட். அதே போல மாங்குளம் ரோட், புது குடியிருப்பு  ரோட் கார்பெட்.

ஆனால் குடியேற்றம் நாயாறு தாண்டி வந்து விட்டிருந்தது.

முல்லைதீவில் 90க்கு முன்னிருந்த ஒரு கட்டிடம்தானும் இல்லை. ஆனால் அதே வளவில் புதிதாக கட்டி உள்ளார்கள்.

கொழும்பு, இலண்டனை விட்டீர்கள்🤣.

யாதும் ஊரே யாவரும் கேளிர்.

நம் ஊர் என்பதன் வரையாரைதான் என்ன?

பெற்றோரின் பிறப்பை தவிர்த்து விட்டு - எனது ஊர் எது என யோசித்து நாஅனே கன்பியூஸ் ஆகி உள்ளேன்😂.

பெருமாளுக்கும் எனக்கும் விட்ட வண்டிலுக்கான விளக்கம். 🤣

Bild

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

பெருமாளுக்கும் எனக்கும் விட்ட வண்டிலுக்கான விளக்கம். 🤣

Bild

😂 எடுத்து சொன்னால்தானே வடிவா விளங்கும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

கந்தர்மடத்தடியில் இருந்த பண்டிதர் பூங்காவில் இரண்டு மூன்று தேவாங்குகள் மற்றும் பலவகையான காட்டு விலங்குகள் பறவைகள் எல்லாம் இருந்தன........!  😁

பண்டிதர் பூங்காவை நினைவு படுத்தியமைக்கு நன்றி. இங்கே இரு முதலையும் இருந்ததாக நினைவு.

தீக்கோழி என்பார்கள் யாழில் இல்லை என நினைகிறேன். அதுவும் இருந்தது.

அதே போல் ஆனைக்கோட்டையில் தியாகசீலம் என்று ஒரு அருமையான சிறுவர் பூங்காவும். மானிப்பாய் அந்தோனியாருக்கு அருகில் உறுதியின் உறைவிடம் என்று ஒரு அருங்காட்சியமும் இருந்தது.

87 க்கு முந்திய முயற்சிகள். இந்தியன் ஆமி வருகையோடு அழிந்து போனது.

@நன்னிச் சோழன் எதிர்காலத்தில் தகவல் தேவைப்படலாம்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.