Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூசி - Sushi செய்வது இத்தனை இலகுவானதா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறை மிகவும் இலகுவாக உள்ளதே.

ஆனாலும் இதை வெட்டுவது கொஞ்சம் சிரமம் போல.
மெல்லிய கூரான சின்ன கத்தி தான் பாவிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

செய்முறை மிகவும் இலகுவாக உள்ளதே.

ஆனாலும் இதை வெட்டுவது கொஞ்சம் சிரமம் போல.
மெல்லிய கூரான சின்ன கத்தி தான் பாவிக்க வேண்டும்.

நான் இத்தனை நாட்கள் இது எதோ பெரிய சமையல் என்று நினைத்தேன். செய்து பார்த்தபோதுதான் மிக விரைவாகச் செய்யக்கூடியது என்று தெரிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

லேற்றா வந்தாலும் ஒரு லேற்றஸ்ட்  செய்முறையுடன் வந்திருக்கிறீர்கள்......!  👍

நல்லா இருக்கு நன்றி......!   

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் இத்தனை நாட்கள் இது எதோ பெரிய சமையல் என்று நினைத்தேன். செய்து பார்த்தபோதுதான் மிக விரைவாகச் செய்யக்கூடியது என்று தெரிந்தது.

பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.பச்சை மீனாக இருப்பதால் எனக்கு பிடிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

பச்சை மீனாக இருப்பதால் எனக்கு பிடிப்பதில்லை.

sushi என்பது செய்யும் முறை.

smoked  salmon, இறால், கணவாய், roasted meats, பக்குவமாக அரியப்பட்ட சீவல்கள் என்று, sushi க்கு கற்பனையே  எல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இவ்வளவுநாளும் கடையிலைதான் வாங்கி சாப்பிட்டு இருக்கிறன். பாப்பம் நேரமிருந்தால் செய்து பாக்கத்தான் இருக்கு...
செய்முறைக்கு நன்றி👍🏾

  • கருத்துக்கள உறவுகள்

ம்..ம்ம்... சூசியத்தை தான் ஸ்டைலா சூசி எண்டு சொல்லுறியள் எண்டு ஓடி வந்து பார்த்தேன்.

ஜப்பானிய சுசி என்று தலைப்பைப்போடிருக்கலாமே...

சரி... உந்த சுசி ஒரு வில்லங்கம் பிடிச்ச சாமான். பச்சை மீன், பிடிப்பதில்லை.

ஜப்பான்காரர், கற்பனையே  எல்லை என்று கடஞ்ச சொன்ன மாதிரி, உத மாதிரி கண அயிட்டம் செய்து, ஒரு கன்வேயர் பெல்டில சுத்த வைச்சு, பரவசப்படுத்தி, கூடின காசுக்கு வித்துப்போடுவினம்.

நான் மீனை கொஞ்சம் வேக வைத்து ட்ரை பண்ணப்போறன். செய்முறைக்கு நன்றி. 🙏

இது ஒரு tray £10, £12 என்று விக்கிறாங்கள். நீங்கள் சொல்வதை பார்த்தால் அவ்வளவு வராது போல இருக்குது. இந்த பொருட்களை எங்கே வாங்கலாம். பாசி என்று நீங்கள் சொல்வது, seaweed என்பதா ?

****

அது சரி அத்தார் சரியான கசவாராம் போலை கிடக்குது.

இப்படி தேடி, தேடி, சமைச்சு கொடுக்கிற உங்களுக்கு, இன்னும் ஆறு விரலில மோதிரத்தை போட்டிருக்கலாமே, சா... என்ன அத்தார்...? 😭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, Nathamuni said:

இப்படி தேடி, தேடி, சமைச்சு கொடுக்கிற உங்களுக்கு, இன்னும் ஆறு விரலில மோதிரத்தை போட்டிருக்கலாமே, சா... என்ன அத்தார்...? 😭

சத்தியமாய் நானும் யோசிச்சனான்.பிறகு எனக்கு இப்ப காலம் கூடாது எண்டு யோசிச்சுப்போட்டு பேசாமல் இருந்திட்டன்.பத்து விரலுக்கு மோதிரமும் இரண்டு கைக்கும் நாலு சோடி காப்பும் கிலுங்கியிருக்க வேணும் 😂

22 minutes ago, Nathamuni said:

நான் மீனை கொஞ்சம் வேக வைத்து ட்ரை பண்ணப்போறன்.

கருவாடு வைச்சு சுத்திப்பாருங்கோ. அந்த மாதிரி இருக்குமெண்டு நினைக்கிறன்.🤔

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:
1 hour ago, Nathamuni said:

இப்படி தேடி, தேடி, சமைச்சு கொடுக்கிற உங்களுக்கு, இன்னும் ஆறு விரலில மோதிரத்தை போட்டிருக்கலாமே, சா... என்ன அத்தார்...? 😭

சத்தியமாய் நானும் யோசிச்சனான்.பிறகு எனக்கு இப்ப காலம் கூடாது எண்டு யோசிச்சுப்போட்டு பேசாமல் இருந்திட்டன்.பத்து விரலுக்கு மோதிரமும் இரண்டு கைக்கும் நாலு சோடி காப்பும் கிலுங்கியிருக்க வேணும் 😂

எல்லாம் லாக்கரில் கவனமா இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

 செய்முறைக்கு நன்றி

எங்கள் வீட்டிலும்  மக்களுக்கு பிறந்த நாள் என்றால் வாங்குவது. நான் பச்சை மீன் இறைச்சி சாப்பிடமாட்டேன். இதோடு ஒரு பச்சை நிறத்தில் பச்சை சட்னி போல ஒன்று ..ச் .சா பேர் வருகுதில்லை. அதை சோயா சாஸ் உடன் கலந்து  தொட்டு சாப்பிடடால் உச்சியில் அடிக்கும்.  என்னை தவிர மற்றவர்கள் சாப்பிடுவார்கள்  நான் வெஜி   மட்டும் சாப்பிடுவேன்.  ஆ ..நினைவு ..வந்திட்டுது  வஸாபி ..wasabi

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

sushi என்பது செய்யும் முறை.

smoked  salmon, இறால், கணவாய், roasted meats, பக்குவமாக அரியப்பட்ட சீவல்கள் என்று, sushi க்கு கற்பனையே  எல்லை.

இரண்டு மூன்று தடவை சாப்பிட்டுள்ளேன்.ஆனால் மீன் மட்டும் தான்.

கடன்சா நீங்க கடலுணவு பிரியர் என்று எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிலாமதி said:

 செய்முறைக்கு நன்றி

 வஸாபி ..wasabi

இதன் சுவை என்ன?

உறைப்பு இல்லை. ஆனாலும் நீங்கள் சொன்னது போல, உச்சியில் அடிக்கும்..... மனம் தொடாதே என்று சொல்லும், நா ஒரு சிறு துண்டை சுவை என்று சொல்லும்.

உச்சியில் உதறும் அந்த கணத்தில், ஏன்டா வாயில் வைத்தோம் என்று இருக்கும்... சிறிது நேரத்தில், இன்னோரு முறை ட்ரை பண்ணினால் என்ன என்று இருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, நிலாமதி said:

ஆ ..நினைவு ..வந்திட்டுது  வஸாபி ..wasabi

49 minutes ago, Nathamuni said:

இதன் சுவை என்ன?

wasabi என்பது உண்மையில் ஓர் radish (முள்ளங்கி, அனால் horseradish அல்ல) வகைசேர்ந்த கிழங்கு, கடுகு குடும்பம். 

அந்த கிழங்கை (இஞ்சி பிள்ளையை உரஞ்சி இஞ்சி விழுது செய்வது போல), (உரிய முறையில் செய்யும் போது ) உலர்ந்த சுறா தோலில் (சுறா தோல் சாதாணரமாகவே சொரசொரப்பானது, sandpaper போல) உடனடியாக உரஞ்சி பெறப்படும் விழுதே wasabi, முறையான sushi க்கு பாவிப்பது.

wasabi  குறித்த  காலநிலையில் மட்டுமே வாடாமல் இருக்கும் ஆகையால், அது விளையும் இடங்களான ஜப்பான், கொரிய, சீனா   போன்ற நாடுகளில் கிடைக்கும் உடனடி wasabi.   

இப்பொது, wasabi கிழங்கு விற்கப்படுகிறது ( அளவுக்கு ஒப்பீட்டளவில் விலை கூடியது), ஆனால் fresh ஆக இருக்குமா என்பது சொல்லமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kadancha said:

சுறா தோலை நீக்காமல் கறி  சமைக்க அதையே அமிர்தம் என்று உண்ட நட்புகளுக்கு இன்று 30 வருடம் கழித்து  நன்றி கூறுகிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

சுறா தோலை நீக்காமல் கறி  சமைக்க அதையே அமிர்தம் என்று உண்ட நட்புகளுக்கு இன்று 30 வருடம் கழித்து  நன்றி கூறுகிறேன் .

 சுறா (திமிங்கலளமும் என்று  நினைக்கிறன்) யூரியாவை தோல் வழியாக வெளியற்றுவது, அவற்றின் உடல் உப்பு சமநிலையை பேணிவதற்கு. 

வேறு கடல் , நீர் வாழ் உயிரினங்களும் செய்யக்கூடும், அனால் சுறா, திமிங்களுது இது கட்டாயம் இருக்க வேண்டும் ஏனெனில் அவை பாலூட்டிகள்.

சுறா இறக்குமாயின், வெளிப்படம்   யூரியா தோலில்  இருந்து அகற்றப்படாது.
 
சுறா தோலில்,  அந்த சிறுநீர் நெடிக்கான  இதுவே காரணம்.

இள வெயிலில் காய வைக்கும் போது, நீர் அகல, யூரியா தோலுடன் சேராது மேற்பகுதியில் இருக்கும், பின்பு அதாய் உப்பு நீரில்  கழுவி மீண்டும் காய வைப்பது.  வேறு இரசாயன வழிமுகளும் கையாளப்படலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

sushi என்பது செய்யும் முறை.

smoked  salmon, இறால், கணவாய், roasted meats, பக்குவமாக அரியப்பட்ட சீவல்கள் என்று, sushi க்கு கற்பனையே  எல்லை.

அண்மையில் திண்ணையில் சொல்லி இருந்தேன். பலகாலமாக உவ்வே என ஒதுக்கியதை அண்மையில் மகன் சாப்பிடவைத்தார் என. ஆனாலும் வேகவைத்த ஒரு வகை இறால் டம்பிளிங்க்கைதான் உண்டேன். சுவை நன்றாக இருந்தது.

1 hour ago, Kadancha said:

wasabi என்பது உண்மையில் ஓர் radish (முள்ளங்கி, அனால் horseradish அல்ல) வகைசேர்ந்த கிழங்கு, கடுகு குடும்பம். 

அந்த கிழங்கை (இஞ்சி பிள்ளையை உரஞ்சி இஞ்சி விழுது செய்வது போல), (உரிய முறையில் செய்யும் போது ) உலர்ந்த சுறா தோலில் (சுறா தோல் சாதாணரமாகவே சொரசொரப்பானது, sandpaper போல) உடனடியாக உரஞ்சி பெறப்படும் விழுதே wasabi, முறையான sushi க்கு பாவிப்பது.

wasabi  குறித்த  காலநிலையில் மட்டுமே வாடாமல் இருக்கும் ஆகையால், அது விளையும் இடங்களான ஜப்பான், கொரிய, சீனா   போன்ற நாடுகளில் கிடைக்கும் உடனடி wasabi.   

இப்பொது, wasabi கிழங்கு விற்கப்படுகிறது ( அளவுக்கு ஒப்பீட்டளவில் விலை கூடியது), ஆனால் fresh ஆக இருக்குமா என்பது சொல்லமுடியாது.

வசாபியில் பிரட்டிய கடலை வகைகளும் நல்லா இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல மறந்து விட்டேன். மிக முக்கியம்.

மீனை சமைக்காமல், பச்சையாக பாவிக்க எண்ணம் இருந்தால், வினிகரிலும், (தனிப்பட்ட முறையில்) எலுமிச்சம் புளியிலும் சிறிது நேரம் ஊறவைத்து  கழுவி பாவிக்கவும் சுஷிக்கு. 

 சுஷி முறையயாக செய்யும் போதும் இது செய்யப்படுவது, வினிகரில் ஊற வைப்பது (அது சிறு முட்களை மனமையாகவும் என்று சொல்லப்பட்டாலும், காரணம் கிருமி அகற்றுவது).

எலுமிச்சை இயற்கை கிருமி கொல்லி. (சில special forces, குறிப்பாக SAS, எலுமிச்சம் சாற்றை வைத்து இருப்பது, உடனடி  கிருமி அகற்றுவதத்திற்கும், தொற்று ஏற்படாமல் இருக்கவும், உணவிலும், உடம்பிலும்,  அதாவது ஆண்டாண்டு காலமான கள  அனுபவம்).

ஏனெனில், பச்சையில் விலங்கு உணவில் எந்த கிருமி இருக்கிறது என்று ஒரு போதுமே சொல்ல முடியாது, எவ்வளவு நன்றாக பராமரிக்கப்பட்டாலும். 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப நான் என்ரை ஆளுட்டை சுசி எண்ட சாப்பாட்டை இண்டைக்கு செய்து சாப்பிடுவமோ எண்டு கேட்டன்....
அதுக்கான பதில்...
பசுமதியை நல்லாய் குழைய விடுறன்
நல்லாய் ஆற விடுறன்
நாலு கரட் துண்டை கீலம் கீலமாய் வெட்டி போடுறன்
அவக்கோடாவையும் கீலம் கீலமாய் வெட்டி போடுறன்
ரின் மீனை அப்பிடியே தூவி விடுறன்
திரணை திரணையாய் உருட்டி வைக்கிறன்......
பருப்புக்கறியை தண்ணியாய் வைக்கிறன்(சோயா சோஸ்க்கு பதிலாய்) 
மத்தியான சாப்பாடு இதுதான்.

எங்கடை சாம்பார் புத்தி எப்பதான் மாறுமோ என மனதுக்குள் புறுபுறுத்தபடி குமாரசாமி வேலைக்கு நடந்தே சென்றார் 🚶🏾‍♂️:cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

புழுங்கல் அரிசி சோறு...

ஆட்டுக்கறி...

கீரி மீன் பொரியல்...

# சூசி எல்லாம் கால் தூசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

புழுங்கல் அரிசி சோறு...

ஆட்டுக்கறி...

கீரி மீன் பொரியல்...

# சூசி எல்லாம் கால் தூசி

 மாற்றுக்கருத்து மாணிக்கம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

புழுங்கல் அரிசி சோறு...

ஆட்டுக்கறி...

கீரி மீன் பொரியல்...

# சூசி எல்லாம் கால் தூசி

1 hour ago, குமாரசாமி said:

 மாற்றுக்கருத்து மாணிக்கம் 🤣

நம்ம பங்கர் முந்தியும் இரண்டு பிளேட் சோறு, ஆட்டு இறைச்சியோடை அடித்து விட்டு வந்திருக்கிறேன் என்று... சொன்னவர்.

ஆள் ஆட்டுகறிச்சோத்துப் பிரியர் போலை கிடக்குது.... 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

இரண்டு மூன்று தடவை சாப்பிட்டுள்ளேன்.ஆனால் மீன் மட்டும் தான்.

கடன்சா நீங்க கடலுணவு பிரியர் என்று எண்ணுகிறேன்.

பிரியர் என்று சொல்லவது பொருத்தமில்லை. 

இயற்கையாக வேண்டும் (உணவு சங்கிலியில் 3 அல்லது 4 ஆம் இடம், பஞ்சத்தில் தக்கென தப்பும்   இயல்தகவு குறைவு).

ஆம், சொல்லும் பொது தான் நினைவு வருகிறது, நன்னீர் கெளிறு (cat fish, தட்டையான தலையும், பூனையின் மீசை போன்றும் இருப்பவை) முழு மீனாக வாங்கி, தோல் உரித்து, உரிக்காமலும் shallow, deep fry, oven, grill செய்து சாப்பிட்டேன்.

தோல் உரித்ததில் மீன் மணம்  என்பது அறவே இல்லை, எமது தூள், மஞ்சள், மிளகு, எலுமிச்சை புளி கலவையில் ஊறவைத்தபோது. இறாலில் இருக்கும் இனிப்பு தன்மையும் சாடையாக (after taste) இருந்தது.

எந்தவொரு spice உம இல்லாமல், உப்பு மட்டும் பிரட்டி கிரில் செய்தது, மணம்  இல்லை, இறாலின் இனிப்புத்தன்மையோடு மீனின் சுவை (எந்த புது மீன், இறைச்சி நான் இவ்வாறு  செய்வது அதன் உண்மையான சுவையை அறிய). 

இந்த cat fish texture, மீனுக்கும், இறால் இற்கும் இடைப்பட்ட மெல்லப்படும்  தன்மை கொண்டது.

சுஷிக்கு இது பொருத்தமாக இருக்கும் போல இருக்கிறது.

ஆனால் கடல் கெளிறு, சற்று தூக்கலான வெடுக்கு  உள்ளது, இதுவரை எனது அனுபவத்தில். 
 
படத்தில் இருப்பது Maki அல்லவா ?
Sushi யில் மீன் துண்டு சோறுக்கு மேல் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.