Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டாயபய ராஜபக்ஷ தாய்லாந்துக்குச் செல்லத் திட்டமா? நிரந்தரமாக தங்க விசா இல்லாமல் தவிக்கிறாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாயபய ராஜபக்ஷ தாய்லாந்துக்குச் செல்லத் திட்டமா? நிரந்தரமாக தங்க விசா இல்லாமல் தவிக்கிறாரா?

26 நிமிடங்களுக்கு முன்னர்
 
கோட்டாபய

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தாய்லாந்திற்கு செல்லவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அரச எதிர்ப்பு போராட்டம் வலுப் பெற்று, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் தமது பொறுப்பிற்கு கடந்த ஜுலை மாதம் 9ம் தேதி எடுத்திருந்தனர்.

இதையடுத்து, தலைமறைவான அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் ஜுலை மாதம் 13ம் தேதி மாலத்தீவு நோக்கி பயணித்திருந்தார்.

மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் நோக்கி பயணித்த கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியிருந்தார்.

சுற்றுலா விசாவின் மூலம் சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ஸவின் விஸாவை நீடிக்க முடியாது என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அவர் மீண்டும் இலங்கைக்கு வருகைத் தருவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிற்கு வருகைத் தருவதற்கு இது சரியான தருணம் கிடையாது என புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ச தனது மனைவியுடன், தாய்லாந்து நோக்கி பயணிக்க எதிர்பார்த்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் பிறந்த கோட்டாபய ராஜபக்ஷ, சிறிது காலம் அமெரிக்க பிரஜாவுரிமையை பெற்றிருந்தார்.

கோட்டாபய

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்க பிரஜாவுரிமையுடனேயே கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில், இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்தார்.

வெளிநாட்டு பிரஜாவுரிமையை கொண்டவர்கள், நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி பதவிகளுக்கு தெரிவாக முடியாது என்ற வகையில், அரசியலமைப்பின் 19வது திருத்தம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலப் பகுதியில் கொண்டு வரப்பட்டது.

இதன்படி, 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கினார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்தார்.

தனது அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்து, ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்ற கோட்டாபய ராஜபக்ஸவின், மகன் மற்றும் மகனின் குடும்பம் இன்றும் அமெரிக்காவிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ நிரந்தரமாக செல்வதற்கு நாடொன்று இல்லாமல், சிங்கப்பூரில் தங்கியிருந்ததுடன், தற்போது தாய்லாந்து நோக்கி பயணிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://www.bbc.com/tamil/sri-lanka-62492624

  • கருத்துக்கள உறவுகள்

இம்மாதம் 14திகதி, சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து போகிறார், கோத்தா

இலங்கையில் இருந்து தப்பி ஓடி, ஒருமாதம் சிங்கப்பூரில் தங்கி இருந்த, இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தா, தாய்லாந்து செல்ல இருக்கிறார்.

இது தொடர்பில் தாய்லாந்து வெளியுறவு அமைச்சு அதிகாரி, 'no comment' என்று பதிலளித்துள்ளார்.

https://www.dailymirror.lk/top_story/Sri-Lankas-ousted-president-expected-to-go-to-Thailand-sources/155-242793

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

கோட்டாவிற்கு... தாய்லாந்து செல்ல, விசா கோரிய இலங்கை அரசாங்கம் – வெளியான முக்கிய தகவல்.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தாய்லாந்து செல்வதற்கு இலங்கை அரசாங்கம் விசா கோரியுள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

90 நாள் விசாவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஓகஸ்ட் 11 ஆம் திகதி தாய்லாந்து செல்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவருக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1294279

  • கருத்துக்கள உறவுகள்

ஹா…ஹா..தாய்லாந்து happy ending ற்கு பெயர் போன நாடு. கோட்டவின் கதையும் அப்படியே முடியுமோ 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஹா…ஹா..தாய்லாந்து happy ending ற்கு பெயர் போன நாடு. கோட்டவின் கதையும் அப்படியே முடியுமோ 🤣

நாட்டு நிர்வாகத்தால், ஒரே தலைவலி....

தல தெறிக்க ஓடியதால்..... உடல் வலி...

போய்.... உடல் உபாதைகளை குறைத்து, வரட்டுமே... 😁

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமான அடிப்படையில் கோட்டபாயவிற்கு அனுமதியளித்துள்ளோம் - தாய்லாந்து பிரதமர்

By RAJEEBAN

10 AUG, 2022 | 05:50 PM
image

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு மனிதாபிமான அடிப்படையில்தாய்லாந்தில்  தங்குவதற்கு இடமளித்துள்ளதாக தாய்லாந்து பிரதமர்பிரயுத் சான் ஓசா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் மனிதாபிமான கரிசனைகளின் அடிப்படையிலானது,இது தற்காலிகமாக தங்குவதற்கான அனுமதிதான் என்ற  வாக்குறுதியை வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்

மனிதாபிமான அடிப்படையில் கோட்டபாயவிற்கு அனுமதியளித்துள்ளோம் - தாய்லாந்து பிரதமர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

நாட்டு நிர்வாகத்தால், ஒரே தலைவலி....

தல தெறிக்க ஓடியதால்..... உடல் வலி...

போய்.... உடல் உபாதைகளை குறைத்து, வரட்டுமே... 😁

ஏற்கனவே போய் வீடியோ வந்த பந்துலவிடமும் ஆலோசனை கேட்கலாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஏற்கனவே போய் வீடியோ வந்த பந்துலவிடமும் ஆலோசனை கேட்கலாம்🤣

பந்துல வீடியோவை பார்த்தேன். அவர்… காசை, விசுக்கும் விதமும்…
கடைசியில் அந்த… சிரிப்பும், ஓகோ… ரகம்.
தாய்லாந்துப் பெண்… பந்துல வயித்தில்,
விரலால்… மேலிருந்து, கீழே தொட்டுக் கொண்டு வந்ததுக்குத்தான் அந்தக் காசு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஒரு செய்தியா? 

அந்த மனுசன் எக்கேடுகெட்டுப்போனால்தான் எங்களுக்கு என்ன? 

7 hours ago, goshan_che said:

ஹா…ஹா..தாய்லாந்து happy ending ற்கு பெயர் போன நாடு. கோட்டவின் கதையும் அப்படியே முடியுமோ 🤣

அடிச்ச காசெல்லாத்தையும் தான் அனுபவிக்காமல் அடுத்தடுத்த தலைமுக்றைக்கு விட்டுச் செல்ல அவரென்ன கெளதம புத்தரோ ? 

🤣

1 hour ago, தமிழ் சிறி said:

பந்துல வீடியோவை பார்த்தேன். அவர்… காசை, விசுக்கும் விதமும்…
கடைசியில் அந்த… சிரிப்பும், ஓகோ… ரகம்.
தாய்லாந்துப் பெண்… பந்துல வயித்தில்,
விரலால்… மேலிருந்து, கீழே தொட்டுக் கொண்டு வந்ததுக்குத்தான் அந்தக் காசு. 🤣

என்ர ஈமெயில் அற்ரஸ் சிறியரிடம் இருக்கிறதா ? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

என்ர ஈமெயில் அற்ரஸ் சிறியரிடம் இருக்கிறதா ? 

🤣

முகநூலில் அந்தக் காணொளியை…. தற்செயலாக பார்த்தேன்.
மீண்டும் கண்ணில் பட்டால், நிச்சயம் இணைத்து விடுகின்றேன். 🙂
எதுக்கும்… @goshan_che யிடமும் சொல்லி வையுங்கள். 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ஏராளன் said:

சுற்றுலா விசாவின் மூலம் சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ஸ

7 hours ago, goshan_che said:

ஹா…ஹா..தாய்லாந்து happy ending ற்கு பெயர் போன நாடு. கோட்டவின் கதையும் அப்படியே

கோத்தா உப்புடியே நாடு நாடாய் சுத்துறது எண்டு முடிவெடுத்துட்டார் போல கிடக்கு..... ஒரு யூரியூப் சனல் தொடங்கியிருந்தார் எண்டால் கைச்செலவுக்கு கொஞ்ச காசாவது வந்திருக்கும்..........🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு மனிதாபிமான அடிப்படையில்தாய்லாந்தில்  தங்குவதற்கு இடமளித்துள்ளதாக தாய்லாந்து பிரதமர்பிரயுத் சான் ஓசா தெரிவித்துள்ளார்.

மனிதாபிமானமே இல்லாமல் மக்களை கொன்று குவித்தவர், மக்களின் பணத்தை கொள்ளையடித்து நாட்டை இக்கட்டில் விட்டு தப்பியோடியவருக்கு மனிதாபிமானமா? அல்லது கொள்ளையடித்த பணத்தை தங்கள் நாட்டிலே செலவழிக்க, செய்து கொடுக்கும் வசதியா? அவரின் வினையை உங்களால் தீர்க்க முடியாது, வெளிக்கிட்டால் உங்கள் நாடும் தீப்பற்றி எரியும்!

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and outdoors

ஒருவரைப் போல... ஆறு பேர், உலகில் இருப்பார்கள் என்று பகிடியாக சொல்வார்கள். 😜
அதில் ஒருவர்.... எண்ணை  வாங்க நிற்கிறார். 😂

சிலவேளை... அவர் தானோ, இவரோ தெரியாது.  எதுக்கும் உசாராக இருங்கள். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருளை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவும் – ஜனாதிபதி

நவம்பர் மாதம்... இலங்கை திரும்புகின்றார், கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜாக்ஷ, 90 நாள் தாய்லாந்து விசா முடிந்து நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டபாய ராஜாக்ஷ இன்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு இன்று தாய்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அங்கு 90 நாட்கள் தங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மனிதாபிமான அடிப்படையில் கோட்டபாய ராஜாக்ஷவிற்கு தாய்லாந்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என தாய்லாந்து பிரதமர் நேற்று கூறியியிருந்தார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட ராஜபக்ஷவின் சார்பில் இலங்கை அரசாங்கம் தாய்லாந்திடம் இந்த விசா கோரிக்கையை முன்வைத்ததாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியது.

அவர் நாட்டை விட்டு வெளியேறியதில் இருந்து அவருக்கான பல செலவுகளை அவரும் அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷவும் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரையும் அவரது மனைவியையும் ஏற்றிச் செல்ல விமானப்படை விமானத்தை தவிர வேறு எந்த அரச நிதியும் கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் தஞ்சம் கோருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால், கோட்டபாய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2022/1294331

  • கருத்துக்கள உறவுகள்

தோற்றுப்போன சனாதிபதியாக நான் பதவி விலகமாட்டேன்..எனது பதவிக் காலத்தை நிறைவு செய்தே வெளியேறுவேன் அல்லது தொடர்ந்து தேர்தலில் நின்று வெல்வேன் என்று இறுமாப்புப் பேசிக் கொண்டிருந்தவர்..

இன்று... தோற்று ஓடிப்போன முன்னாள் சனாதிபதி மட்டுமல்ல.. அகதியாக அலைகிறார்.

ஆனால்.. இந்த இனக்கொலைஞனுக்கு.. மனிதாபிமான உதவி செய்ய தாய்லாந்துக்கு எப்படி மனசு வந்திச்சோ. இவர் மீது ஐநா அமைப்பும் போர்க்குற்றம் சுமத்தியுள்ளதை தாய்லாந்து பிரதமர் அறிவாரா..?!

தாய்லாந்து பேச்சுக்கள் தான் புலிகளின் கடைசிப் பேச்சாகவும் அமைந்தது.. தாய்லாந்தில் வைச்சுத்தான் புலி அழிப்புச் சதியே தீட்டப்பட்டது. தாய்லாந்துக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் மறைமுக தொடர்புகளும் உள்ளன.. என்ற சந்தேகம் இப்போ தீவிரமாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

தாய்லாந்து பேச்சுக்கள் தான் புலிகளின் கடைசிப் பேச்சாகவும் அமைந்தது.. தாய்லாந்தில் வைச்சுத்தான் புலி அழிப்புச் சதியே தீட்டப்பட்டது. தாய்லாந்துக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் மறைமுக தொடர்புகளும் உள்ளன.. என்ற சந்தேகம் இப்போ தீவிரமாகிறது.

குமரன் பத்மநாதனும்… தாய்லாந்து பெண்ணை கலியாணம் கட்டி,
தாய்லாந்தில்… பலவருடமாக இருந்தவர்.

பின்பு மலேசியாவில்… வலிய பிடிபட்டு,
ஶ்ரீலங்காவில், கோத்தாவின் விருந்தாளியாக இருந்தவர்.
இப்ப சத்தமில்லாமல்  இருக்கிறார்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

கோத்தா உப்புடியே நாடு நாடாய் சுத்துறது எண்டு முடிவெடுத்துட்டார் போல கிடக்கு..... ஒரு யூரியூப் சனல் தொடங்கியிருந்தார் எண்டால் கைச்செலவுக்கு கொஞ்ச காசாவது வந்திருக்கும்..........🤣

🤣😆😆🤣

வாங்க நண்பர்களே, இண்டைக்கு நாம் வெள்ளை வானில் ஏறி ஒரு சூப்பரான இடத்த பார்க்கப்போறோம்….

அதுக்கு முன்னாடி இந்த சப்ஸ்கிரைப் பட்டன, பெல்ல அழுத்திட்டீங்க எண்டால் நான் போடுற வீடியோவ உடனுக்குடன் பார்க்கலாம் ….

சரி இப்ப நாங்க வீடியோவுக்குள்ள் போவம்.. 

நான் இப்ப நிக்கிறது…பாங்கொக்கில நாநா பிளாசாவில 🤣🤣😆

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣😆😆🤣

வாங்க நண்பர்களே, இண்டைக்கு நாம் வெள்ளை வானில் ஏறி ஒரு சூப்பரான இடத்த பார்க்கப்போறோம்….

அதுக்கு முன்னாடி இந்த சப்ஸ்கிரைப் பட்டன, பெல்ல அழுத்திட்டீங்க எண்டால் நான் போடுற வீடியோவ உடனுக்குடன் பார்க்கலாம் ….

சரி இப்ப நாங்க வீடியோவுக்குள்ள் போவம்.. 

நான் இப்ப நிக்கிறது…பாங்கொக்கில நாநா பிளாசாவில 🤣🤣😆

அந்த, வெள்ளை வானுக்கு... வேறை கலர், அடியுங்க சார். 😂

பிற் குறிப்பு: உங்களது யூ ரியூப்  சனலில்  கதைக்கும் போது, 
அடிக்கடி... ஆக்சுவலி, செமயா இருக்கு, வேற லெவல்... என்ற சொற்களையும்,
வீதி ஓர கடைகளில்... ஏதாவது வாங்கி சாப்பிடும் போது...
தலையை... ஆடு, மாடு மாதிரி.. இரண்டு பக்கமும் ஆட்டி சாப்பிடவும். 
அதுதான்..    யூ ரியூப்  சனலின், எழுதப் படாத  விதி. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

🤣😆😆🤣

வாங்க நண்பர்களே, இண்டைக்கு நாம் வெள்ளை வானில் ஏறி ஒரு சூப்பரான இடத்த பார்க்கப்போறோம்….

அதுக்கு முன்னாடி இந்த சப்ஸ்கிரைப் பட்டன, பெல்ல அழுத்திட்டீங்க எண்டால் நான் போடுற வீடியோவ உடனுக்குடன் பார்க்கலாம் ….

சரி இப்ப நாங்க வீடியோவுக்குள்ள் போவம்.. 

நான் இப்ப நிக்கிறது…பாங்கொக்கில நாநா பிளாசாவில 🤣🤣😆

 முடியல. 🤣பகிடிக்கில்லை. சிறிலங்கா திரும்ப முதல் ஒரு பில்டபோடு தான் வருவார் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஏற்பாரா ஜனாதிபதி? – இறுதி முடிவு இன்று!

போர்க் குற்றச்சாட்டை... கையிலெடுத்த, சிங்கப்பூர்: சற்று முன்னர் வெளியேறினா... கோட்டா !

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் பாங்கொக் செல்லும் விமானத்தின் மூலம் சிங்கப்பூரில் இருந்து வெளியேறியுள்ளார்.

அவரது விசா இன்றுடன் காலாவதியாயாகிய நிலையில் சிங்கப்பூரில் இருந்து செல்லவேண்டிய நிலை கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சட்டமா அதிபர் அவருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில் அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2022/1294419

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அந்த, வெள்ளை வானுக்கு... வேறை கலர், அடியுங்க சார். 😂

பிற் குறிப்பு: உங்களது யூ ரியூப்  சனலில்  கதைக்கும் போது, 
அடிக்கடி... ஆக்சுவலி, செமயா இருக்கு, வேற லெவல்... என்ற சொற்களையும்,
வீதி ஓர கடைகளில்... ஏதாவது வாங்கி சாப்பிடும் போது...
தலையை... ஆடு, மாடு மாதிரி.. இரண்டு பக்கமும் ஆட்டி சாப்பிடவும். 
அதுதான்..    யூ ரியூப்  சனலின், எழுதப் படாத  விதி. 🤣

முடியாது, முடியாது கோட்டவின் தனித்துவ அடையாளமே (unique selling point) அந்த வெள்ளை வான் தான் 🤣.

அவரது சானலுக்கு கூட “வெள்ளைவானில் ஒரு மொள்ளமாரி” என்றுதான் பெயர் வைக்க உள்ளாராம்🤣.

நீங்கள் சொன்ன சொற்பதங்களோடு, “மொத்தமா தூக்கி முதலைக்கு போடு”, “செத்தாண்டா”, போன்ற தனக்கே உரிய பதங்களையும் கோட்ட பாவிக்க உள்ளார்.

2 hours ago, தமிழ் சிறி said:

தலையை... ஆடு, மாடு மாதிரி.. இரண்டு பக்கமும் ஆட்டி சாப்பிடவும். 

இல்லை அவர் அருகில் நின்று தலையாட்ட சில தமிழர்களை நியமிக்க உள்ளார்🤣

1 hour ago, nunavilan said:

 முடியல. 🤣பகிடிக்கில்லை. சிறிலங்கா திரும்ப முதல் ஒரு பில்டபோடு தான் வருவார் என நினைக்கிறேன்.

ஓம்… இனி அரசியலுக்கு வரும் எண்ணம் இராது என்று நினைக்கிறேன்…அமெரிக்காவும் போக முடியாது எனில், எதாவது செய்து திரும்பி வர சாரகமான நிலையை உருவாக்கவே முனைவார். வந்தால் கொழும்பில் ஒரு ஜனாதிபதிக்குரிய சலுகை, பாதுகாப்போடு வாழலாம்.

அதுவரை பாங்கொங், புக்கட், பட்டாயா என்று காலம் க(ளி)ழிக்கலாம்😆

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய?

By T YUWARAJ

11 AUG, 2022 | 06:31 PM
image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 சுற்றுலா விஸாவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸவின் விஸா காலத்தை நீடிக்க முடியாது என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்திருந்தது. இதையடுத்து, கோட்டாய ராஜபக்ஸ தாய்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. தாய்லாந்து வெளிவிவகார அமைச்சும் இந்த தகவலை உறுதிப்படுத்தியது.

மூன்றாவது நாடொன்று கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அடைகலம் வழங்கும் வரை, தமது நாட்டில் அவருக்கு தங்கியிருக்க முடியும் என தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே, கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளதாக அறிய முடிகிறது. இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம், ராஜதந்திர கடவூச்சீட்டை வைத்திருக்கும் ஒருவருக்கு 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய? | Virakesari.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பிழம்பு said:

சுற்றுலா விஸாவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸவின் விஸா காலத்தை நீடிக்க முடியாது என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்திருந்தது. இதையடுத்து, கோட்டாய ராஜபக்ஸ தாய்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. தாய்லாந்து வெளிவிவகார அமைச்சும் இந்த தகவலை உறுதிப்படுத்தியது.

மூன்றாவது நாடொன்று கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அடைகலம் வழங்கும் வரை, தமது நாட்டில் அவருக்கு தங்கியிருக்க முடியும் என தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழ் மக்கள் பட்ட  அவலங்களை  கோத்தாவும் அனுபவிக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

குமரன் பத்மநாதனும்… தாய்லாந்து பெண்ணை கலியாணம் கட்டி,
தாய்லாந்தில்… பலவருடமாக இருந்தவர்.

பின்பு மலேசியாவில்… வலிய பிடிபட்டு,
ஶ்ரீலங்காவில், கோத்தாவின் விருந்தாளியாக இருந்தவர்.
இப்ப சத்தமில்லாமல்  இருக்கிறார்.

குமரன் பத்மநாதனும்… இவர் தான் இப்ப கோத்தாவை பாதுகாக்கிறாரோ யார் அறிவார். இவரை கோத்தா பாதுகாத்த நன்றிக்கடனுக்கு. தமிழர்கள் தங்களை அழிப்பவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதில் வல்லவர்களாச்சே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய்லாந்தில் கோத்தபாய.....

Bild

Bild

Bild

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.