Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

17 ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கிய கடன் குறித்து சீனாவின் ஆச்சரிய முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

17 ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கிய கடன் குறித்து சீனாவின் ஆச்சரிய முடிவு

17 ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கப்பட்ட வட்டியில்லா கடனை முற்றாக கைவிட சீனா தீர்மானித்துள்ளதாக சீன இராஜாங்க அமைச்சர் சாங் யீ அறிவித்துள்ளார்.

அண்மையில் செனகலில் நடைபெற்ற சீன-ஆபிரிக்கா ஒத்துழைப்பு மன்றத்தின் 8வது அமைச்சர்கள் மாநாட்டில் சீன இராஜாங்க அமைச்சர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

சீனாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையிலான பொதுவான அபிவிருத்திக்கான புதிய சகாப்தத்திற்கான நட்புறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

2021 நவம்பரில் செனகலின் டாக்கரில் நடைபெற்ற சீனா-ஆபிரிக்க ஒத்துழைப்புக்கான மன்றத்தின் அமைச்சர்கள் மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாக்குறுதியளிக்கப்பட்ட 10 பில்லியன் டொலர்களில் 3 பில்லியனுக்கும் அதிகமான கடன் வசதிகள் ஆபிரிக்க நிதி மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆபிரிக்காவின் முன்னுரிமை திட்டங்களுக்கு கிட்டத்தட்ட 2.5 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆபிரிக்க நாடுகளின் அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய சீன இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியதாவது:

“பல்வேறு சிரமங்கள் இருந்தபோதிலும், அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் செயல்படுத்துவதில் சீனா தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஆபிரிக்க நிதி நிறுவனங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட $10 பில்லியன் கடன் வசதிகளில் $3 பில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது. 7 மாதங்களுக்குள், சீனாவின் ஆபிரிக்க பொருட்களின் இறக்குமதி 70% ஆக அதிகரித்தது. சீன நிறுவனங்கள் ஆபிரிக்காவில் $2.7 பில்லியன் முதலீடு செய்துள்ளன. ஆபிரிக்காவுக்கு 10 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தை சீனா ஊக்குவிக்கும்.

இந்த ஆண்டு இதுவரை, சீனா தனது ஏற்றுமதியில் 98% வரிகளை தள்ளுபடி செய்ய 12 ஆபிரிக்க நாடுகளுடன் கடிதங்களை பரிமாறிக்கொண்டது. எத்தியோப்பியா, ஜிபூட்டி, சோமாலியா மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகளுக்கு அவசரகால உணவு மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1,000 கிராமங்களில் உள்ள 100 நிறுவனங்களுக்கு விவசாயத் துறையில் முதலீடுகளை அதிகரித்து, வறுமையைக் குறைக்கவும், ஆபிரிக்காவில் உள்ள கிராமப்புறக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும் வேலைகளை உருவாக்கவும் சீனா தொடர்ந்து உதவும்.
ஆப்பிரிக்காவுக்கு ஆதரவாக அதிக வளங்களைத் தொடர்ந்து திரட்டுவோம். சீன மற்றும் ஆப்பிரிக்க மக்களுக்கு இடையேயான நட்புறவை ஆழமாக்குவதற்கும், பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/203598

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, nunavilan said:

17 ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கப்பட்ட வட்டியில்லா கடனை முற்றாக கைவிட சீனா தீர்மானித்துள்ளதாக சீன இராஜாங்க அமைச்சர் சாங் யீ அறிவித்துள்ளார்.

ஐயே!  கொஞ்சம் சிங்கார சிரிலங்காவயும் கவனியுங்களன்....😁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

ஐயே!  கொஞ்சம் சிங்கார சிரிலங்காவயும் கவனியுங்களன்....😁

ஸ்ரீலங்கா... சேதன உரத்தை திருப்பி அனுப்பியது, முதல் குற்றம்.
இரண்டாவது... சீனனுக்கு  சொந்தமான அம்பாந்தோட்டை  துறைமுகத்துக்கு,
அவனுடைய... கப்பல் வரும் போது, இப்ப வரவேண்டாம் என்று சொன்னது எல்லாம்...
சீனாவை புண்படுத்தி இருக்கும். அதனால்... கடன் தள்ளுபடி இல்லை.🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

இந்த அப்பிடிக்க நாடுகள், சீனாவுடன் மட்டுமே பேரத்தை நடத்தியவை.

சில நிபந்தனைகள் இருக்கும் என்று நினைக்கிறன், உண்மையில் இது IMF க்கும், கிந்தியாவுக்கும் பலத்த அடி.

ஏனெனில், இதன் வழியாக, சீன காட்டி உள்ளது, கடன்களை  வைத்து, நாளாந்த தேவைகள், முக்கியமாக அத்தியாவசிய தேவைகளை நெருக்கடிக்குள் தள்ளி, சீன கடன்களை அறவிடாது.

மாறாக, அடந்த நெருக்கடிகளை ஏற்றப்படுத்தாமல், இரு தரப்பும் இங்க கூடிய கடன் மறு சீரமைப்புக்கு சென்னை வந்தடையும் என்று.

மேற்றக்கால், imf ஆல் இஹை செய்ய முடியாது.

பந்து சொறி சிங்களத்தின் கையில் என்ற சீன அறிவிப்பின் பின்னணியும் இது போன்றதே, சீனாவுடன் மட்டும் சொறி சிங்களம் பேரம் நடத்தினால், வாய்ப்புகள் இருக்கிறது என்பது.

சிங்களம் மேற்கை தள்ளிவைக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறது சீனா.

சீனாவின் இந்த முடிவு, G7 ஆல் அண்மையில் அறிவிக்கப்பட்ட ஒன்றுமே இல்லாத 600 billon, சீனாவின் பட்டுப் பாதை   போன்ற திட்டத்துக்கும், மறைமுக அடி.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ரீலங்கா... சேதன உரத்தை திருப்பி அனுப்பியது, முதல் குற்றம்.
இரண்டாவது... சீனனுக்கு  சொந்தமான அம்பாந்தோட்டை  துறைமுகத்துக்கு,
அவனுடைய... கப்பல் வரும் போது, இப்ப வரவேண்டாம் என்று சொன்னது எல்லாம்...
சீனாவை புண்படுத்தி இருக்கும். அதனால்... கடன் தள்ளுபடி இல்லை.🤣

இப்பத்தான் ஒரு வீடியோ பார்த்துட்டு வாறன்.

தலைவர் பிரபாகரன், இந்தியா ஒருபோதுமே தமிழீழத்துக்கு ஆதரவு தரப்போவதில்லை என்று நம்பியதால், இறுதிக்கணம் வரை போராட தீர்மானித்தார் என்று.

அது உண்மையாக இருக்கலாம்.

இன்று சீனாக்காரன் அடித்த ஆப்பு, அதனை பொய்யாக்க போகிறது. ஆனாலும் இந்தியா எதுவுமே செய்யமுடியாத கையறுநிலைக்கு போய் விட்டது.

இப்போது, மேற்கு, சீனா மட்டுமே களத்தில். இந்தியா பவலியனில் இருந்து குச்சி ஐஸ் ருசித்தபடி, பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தான். 🤗

காரணம், சீனா உள்ள புகுந்து இவ்வளவு ஆழமாக வேரூன்றும் வரை, சிங்கள காது குத்தல்களை கேட்டுக் கொண்டு இருந்து, தலைக்கு மேலே வெள்ளம் புக விட்டமையும், இலங்கைத்தீவில், இந்தியாவின் பரிதாபமான புலனாய்வுத் திறமை குறித்த மேலை நாடுகளின் மதிப்பீடும்.   😔

இந்தியாவின் முக்கிய பிரச்சனையே, அதனை தமிழனும் நம்பப்போவதில்லை, சிஙகளவனும் நம்பப்போவதில்லை. 🙄

இதனை ஊரில் சொல்வார்கள், வளவள உறவிலும் பார்க்க, வைரம் பாய்ந்த பகை நல்லது என்று.

இந்தியா சிங்களத்துடன் வைத்திருப்பது வளவள உறவு.

சீனா சிங்களத்துடன் வைத்திருப்பது வைரம் பாய்ந்த உறவு. 😔

சீன கப்பலை இப்ப வரவேண்டாம் என்று சொன்னதை, நாமே நம்பவில்லை. அது சும்மா என்று எங்களுக்கே தெரியுமே.

ஆனா, இந்தியா நம்பீடும். ஏனெண்டா அது சிங்கள ஸ்பெஷல் காது குத்தல் ஊத்தப்பம்... 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

பந்து சொறி சிங்களத்தின் கையில் என்ற சீன அறிவிப்பின் பின்னணியும் இது போன்றதே, சீனாவுடன் மட்டும் சொறி சிங்களம் பேரம் நடத்தினால், வாய்ப்புகள் இருக்கிறது என்பது.

இதுதான் சீனாவின் செய்தி.

ஆனால் இலங்கை சீனாவிடம் மட்டும் கடன் வாங்கவில்லை.

சர்வதேச சந்தை, ஜப்பான், இந்தியா இவையும் சீனாவுக்கு நிகராக கொடுத்துள்ளன.

சீனா தனது கடனை தள்ளுபடி செய்வதோடு இலங்கையின் ஏனைய கடன்களையும் அடைக்க உதவ வேண்டும். 

உதவ கூடிய நிலையில் சீனா இருக்கிறதா?

இருந்தாலும் இந்தியா இன்னும் வெள்ளி பார்த்தபடியே இருக்குமா?

சீனாவில் இப்போ பொருளாதாரம் அவ்வளவு நன்றாக இல்லை என்கிறார்கள்👇.

https://www.theguardian.com/business/2022/aug/28/crunch-time-china-tries-to-fend-off-property-crash-global-economy

43 minutes ago, Nathamuni said:

இப்போது, மேற்கு, சீனா மட்டுமே களத்தில். இந்தியா பவலியனில் இருந்து குச்சி ஐஸ் ருசித்தபடி, பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தான். 🤗

நான் நினைக்கிறேன் இப்போ நடந்து கொண்டிருப்பது ஒரு கூட்டணி உருவாக்கத்தின் ஆரம்ப நிலை (early stages of alliance building). 

மேற்கு பிளஸ் (யுஎஸ், யூகெ, ஈயு, ஜப்பான், கனடா, தென்கொரியா, தைவான், அவுஸ், நியூசி)

மேற்கு மைனஸ் ( ரஸ்யா, சீனா, வடகொரியா, ஈரான்)

நடுநிலை நாடுகள் - இந்தியா, பிரேசில், தென்னாபிரிக்கா

இதில் மேற்கு+ கூட்டணி வலுவான உறவில் உள்ளது (நேட்டோ, 5 eyes). 

ஆனால் மேற்கு மைனஸ் கூட்டணியில் ரஸ்யாவா, சீனாவா தலைவர் என்பதில் போட்டி.

அத்தோடு இதில் சைனாவின் தலைமையை ஏற்க இந்தியாவுக்கு விருப்பம் இல்லை. ரஸ்யா தலைமையை பகிர தயார் (ஐரோப்பாவில் ரஸ்யா, ஆசியாவில் சீனா) என்றாலும், சீனா போட்டியை சீனா vs அமெரிக்கா என வைத்திருக்கவே விரும்புகிறது.

இதில் இந்தியா தனித்து சீனாவை இலங்கையில் எதிர்க்கவும் முடியாது. அதேசமயம் இலங்கையை ஒட்டு மொத்தமாக சீனாவிடம் கைகழுவுவது இந்திய நலனுக்கு பேராபத்து.

ஆகவே இலங்கையின் கடனை சீனா அடைத்து, இலங்கை சீனாவின் வசமாகும் நிலை வந்தால் - இந்தியா மேற்கின் உதவியுடன் இலங்கையில் இறங்கும். அப்போ சீனா ஒரு பெரும் கடற்போருக்கும், எல்லைகளில் நிலப்போருக்கும் தயாராகவேண்டும்.

சீனா இப்போதைக்கு அதை விரும்பவில்லை.

மேலும் இப்படி இந்தியாவை boxed in to a corner ஆக்கி, வேறு வழியில்லாமல் மேற்கிடம் சேரவைக்க இப்போதைக்கு சீனா விரும்பவில்லை. 

ஆகவேதான் இலங்கையை சீனா கொஞ்சம் தள்ளி நின்று டீல் பண்ணுகிறது. 

கால ஓட்டத்தில் இந்த கூட்டணி இறுதியாகும்.

யார் கண்டது - இலங்கையில் சீனா தலையிட கூடாது, அருணாசல பிரதேச எல்லையில் ஒரு சுமூக உடன்பாடு என்ற ஒப்பந்த அடிப்படையில் சீனாவின் கூட்டுக்குள் இந்தியாவே போக கூடும்.

“அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை. நிரந்தர நலன்கள் மட்டுமே உண்டு”.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இது விசவிளையாட்டு 

சீனா நல்லது செய்யும் என்று எதிர்பார்ப்பது எல்லாம் 😷?

ஏழை மக்களை இவ்வாறு ஏமாற்றி அடிமையாக்கும் திட்டமே நவீன காலணித்துவம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இது விசவிளையாட்டு 

சீனா நல்லது செய்யும் என்று எதிர்பார்ப்பது எல்லாம் 😷?

ஏழை மக்களை இவ்வாறு ஏமாற்றி அடிமையாக்கும் திட்டமே நவீன காலணித்துவம் 

சீனாவுக்குள் பல எதிர்மறையான பொருளாதார நிகழ்வுகள் நடப்பதாக சொல்கிறார்கள்.

அத்தோடு இங்கே மேற்கில் ரிசெசன் (பொருளாதார பின்னடைவு நிலை) வரப்போகுதாம். 2 வருடம் வரைக்கும் நிலைக்குமாம்.

அப்படி வந்தால் முதலில் சனம் வெட்ட போவது?

உணவை அல்ல, வாழிட செலவை அல்ல. 

சீனாவில் இருந்து வரும் போன், டிவி, சப்பாத்து, உடுப்பு, சோப்பு, சீப்பைத்தான்.

ஆகவே இது செலவீனங்களை அறவிட முடியா கடனாக அறிவித்து, சீனா தற்காலிகமாக தனது உலக விஸ்தரிப்பை கைவிடும் நகர்வாயும் இருக்கலாம்.

எந்த சாம்ராஜ்யத்துக்கும் உள்நாட்டில் அமைதி, ஸ்திரதன்மை முக்கியம். குறிப்பாக சீனா போன்ற ஒரு சர்வச்திகார, ஒற்றையாட்சி நாட்டுக்கு. 

உள்நாட்டை ஸ்திரப்படுத்த வெளி விடயங்களில் சீனா தன் ஈடுபாட்டை குறைப்பதன் ஒரு அங்கமாயும் இது இருக்கலாம்.

ஒரு காலத்தில் இலங்கையில் இருந்து சோழ படைகள் வெளியேறவும் இப்படி ஒரு நிலையே காரணமாக இருந்தது (ஈழத்தை விட சோழத்தை தக்க வைப்பது முக்கியமாகி போனது).

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

சீனா தனது கடனை தள்ளுபடி செய்வதோடு இலங்கையின் ஏனைய கடன்களையும் அடைக்க உதவ வேண்டும். 

உதவ கூடிய நிலையில் சீனா இருக்கிறதா?

சீன சொல்லுவது, அதன் கடனை, IMF மற்றும் மேற்கு கடன்களுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்பது.  

மற்றவர்களிடம், அதுவும் சொறி சிங்களம் இறைமை (isb - international sovereign bonds) என்று அடகு வைத்து வந்த கடனை சீனவுக்கு தொடர்பு இல்லாதது. 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விசுகு said:

இது விசவிளையாட்டு 

சீனா நல்லது செய்யும் என்று எதிர்பார்ப்பது எல்லாம் 😷?

ஏழை மக்களை இவ்வாறு ஏமாற்றி அடிமையாக்கும் திட்டமே நவீன காலணித்துவம் 

விசுகர்,

நாங்கள் யாரினது/ எந்த system த்தினது  அடிமை?

19 hours ago, goshan_che said:

சீனாவுக்குள் பல எதிர்மறையான பொருளாதார நிகழ்வுகள் நடப்பதாக சொல்கிறார்கள்.

அத்தோடு இங்கே மேற்கில் ரிசெசன் (பொருளாதார பின்னடைவு நிலை) வரப்போகுதாம். 2 வருடம் வரைக்கும் நிலைக்குமாம்.

அப்படி வந்தால் முதலில் சனம் வெட்ட போவது?

உணவை அல்ல, வாழிட செலவை அல்ல. 

சீனாவில் இருந்து வரும் போன், டிவி, சப்பாத்து, உடுப்பு, சோப்பு, சீப்பைத்தான்.

ஆகவே இது செலவீனங்களை அறவிட முடியா கடனாக அறிவித்து, சீனா தற்காலிகமாக தனது உலக விஸ்தரிப்பை கைவிடும் நகர்வாயும் இருக்கலாம்.

எந்த சாம்ராஜ்யத்துக்கும் உள்நாட்டில் அமைதி, ஸ்திரதன்மை முக்கியம். குறிப்பாக சீனா போன்ற ஒரு சர்வச்திகார, ஒற்றையாட்சி நாட்டுக்கு. 

உள்நாட்டை ஸ்திரப்படுத்த வெளி விடயங்களில் சீனா தன் ஈடுபாட்டை குறைப்பதன் ஒரு அங்கமாயும் இது இருக்கலாம்.

ஒரு காலத்தில் இலங்கையில் இருந்து சோழ படைகள் வெளியேறவும் இப்படி ஒரு நிலையே காரணமாக இருந்தது (ஈழத்தை விட சோழத்தை தக்க வைப்பது முக்கியமாகி போனது).

ஆசை யாரைத்தான் விட்டது கோசான் ?

😉

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

விசுகர்,

நாங்கள் யாரினது/ எந்த system த்தினது  அடிமை

😉

உள்ளதில் ஒன்றைத் தான் தெரிவு செய்யமுடியும்

எனக்கு கொஞ்சமாவது ஜனநாயக பண்புகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை உறுதி செய்யக்கூடிய நிலைப்பாடு சரியாக தெரிவாகும்.

நான் பிரான்ஸை விரும்புவதும் அந்த அடிப்படையில் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

சீன சொல்லுவது, அதன் கடனை, IMF மற்றும் மேற்கு கடன்களுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்பது.  

மற்றவர்களிடம், அதுவும் சொறி சிங்களம் இறைமை (isb - international sovereign bonds) என்று அடகு வைத்து வந்த கடனை சீனவுக்கு தொடர்பு இல்லாதது. 

ஓம். அப்படித்தான் சொல்கிறது - ஆனால் இப்படி தொடர்பு படுத்தாமல் சீனாவின் கடனை தனியே இலங்கை டீல் பண்ணி, அதை சீனா தள்ளி வைக்க - சீனா இலங்கையிடம் எதிர்பார்ப்பது எதை?

ஏனென்றால் எல்லாருடமும் கடன் வாங்கியுள்ள இலங்கை ஒருவரோடு மட்டும் சலுகை முறையில் டீல் பண்ணினால் மற்றயவர்கள் குழம்பிவிடுவார்கள்.

அப்படி அவர்கள் குழம்பினால் போகட்டும் என இலங்கை தன்னோடு 100% வரட்டும் (வடகொரியா போல்) என சீனா எதிர்பார்கிறதா?

1 hour ago, Kapithan said:

ஆசை யாரைத்தான் விட்டது கோசான் ?

😉

சீரியசா கதைச்சு கொண்டு நிக்கிறம், தள்ளிபோய் விளையாடுங்கோ.

On 29/8/2022 at 14:54, goshan_che said:

யார் கண்டது - இலங்கையில் சீனா தலையிட கூடாது, அருணாசல பிரதேச எல்லையில் ஒரு சுமூக உடன்பாடு என்ற ஒப்பந்த அடிப்படையில் சீனாவின் கூட்டுக்குள் இந்தியாவே போக கூடும்.

👆 இதையும் எனது ஆசை என்பீர்களா கற்ப்ஸ்?

இதைதான் அப்போதே சொன்னேன் ஒரு விசயத்தை நுட்பமாக பாருங்கள் என்று (nuanced approach). 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஆசை யாரைத்தான் விட்டது கோசான் ?

சீனாவில் இருக்கும் பிரச்சனைகளை மேற்கு ஊடகங்கள்  ஊதி  காட்டுகின்றன.

ஆய்வுகளை மேற்கு ஊடகங்கள் தவிர்க்கின்றன, அல்லது அவை தமது அனுபவ கண்ணாடி ஊடாகவே பார்க்கின்றன.   

ஜப்பானிய ஊடகங்கள், அவர்களின் வீட்டு கிரெடிட் பிரச்சனை  மற்றும் தொலைந்த தசாப்த கண்ணாடி  ஊடக பார்க்கின்றனர் (இதை விளக்க வேறு பதிவு வேண்டும்).

சீன இந்த ஏற்றுமதியில் பிரச்சனை வரலாம் என்பதை கையாள்வதற்காக dual circulation policy என்று  2020 இல் இருந்து தொடங்கி விட்டது.

உ.ம். 2010 us இன் உள்ளக சந்தை 1.8 tr , சீனாவின் உள்ளக சந்தை இதிலும் குறைவு 2010 இல். 2020 இல், us இன் உள்ளக சந்தை 4.8 tr, சீனாவின் 6.8 tr.

இது சுருக்கமாக எனது தனிப்பட்ட புரிதல், குறிப்பாக சீனா வீட்டு சந்தை நெருக்கடி.

குறிப்பாக இந்த வீட்டு சந்தை நெருக்கடிக்கு சீன அரசே காரணம், ஏனெனில் சீன அரசு unproductive credit ஐ குறைக்க முயற்சிக்கிறது (GUARDIAN உம் இதை சொல்கிறது). 

2008 - 2009 இ மேற்கில் வீட்டு கடனில் (mortgage)   தொடங்கிய credit crunch க்கும், சீனாவின்  இப்போதை வீடு சந்தை, விலை நெருக்கடிக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கிறது.

வெளிப்பைடையாக பார்த்தால், சீன அரசு (unproductive) credit ஐ குறைக்கும் கொள்கையை கையில் எடுத்து இருக்கிறது, ஆனாலும், interbank lending பாதிக்கப்படவில்லை.

2008 -2009 மேற்கு    நிலையை ஒப்பிட்டால், மேற்கு அரசுகள் உறுதி மொழி வழங்கியும் interbank lending முடங்கி, banking system குலையும் நிலைக்கு வந்து,  மேலும் நிலை மோசமாவதை தடுப்பதற்கு  QE யும் தொடங்கி, நீண்டு, துர்பிரோயகம் செய்யப்படும் நிலைக்கு வந்தது  , அதையும் மேற்கு அரசுகள், மத்திய வங்கிகள் நியாயப்படுத்தின.   

மேற்கு நிலைக்கு காரணம், கடன்கள் வழங்கப்பட மற்றும் அவை package செய்யப்படு அதன் அடிப்படையில் credit  default swap க்கு வங்கிகள் தமக்கிடையே கொடுத்த உத்தரவாதம். இதனால், எதாவது ஒரு வங்கி credit default swap உத்தரவாதத்தை உறுதிபடுத்த முடியாமல் போனால் அல்லது வங்கி ககுலைந்தால், முழு (interbank) system மும் குலையும் நிலைக்கு வந்தது. 

சீன வங்கிகள் வீட்டு கடன்களில் தாராளம் காட்டியது, அனால் மேலே சொன்ன மேற்கின் முறையில் அல்ல. கடன் வழங்கும் நிபந்தனைகளில் தனிப்பட்ட வடிக்கையாளர் கிரெடிட் ரேட்டிங் அடிப்படையில்  தாராளம் காட்டியது.

மேற்கில் போல, கிரெடிட் ரேட்டிங் மிக மோசமான கடன்களையும், கிரெடிட் ரேட்டிங் மிக கூடிய மற்றும் மத்திம கடன்களையும் சிறிய  பகுதிகளாக பிரித்து கலந்து, அதன் அடிப்படையில் credit default swap ஐ உருவாக்கவில்லை சீன வங்கிகள்.   

மற்றது, சீனாவில் எந்த வீடு கடன்களும் ஆக குறைந்து 30%, கடன்பெறுபவர்கள் முற்பணமாக (DEPOSIT) ஆக போட வேண்டும்.   மேற்கில் நடந்த, 0% முற்பணம், வருமாமனம்  தேவை இல்லாத வீடு கடன் பெருவாரியாக நடக்கவில்லை. ஆயினும், கிரெடிட்தாராளமாக இருந்த வேளையில் ஆங்காங்கே இப்படி   (0% முற்பணம், வருமாமனம்  தேவை இல்லாத) சீனாவில் நடந்து இருக்கலாம்.

சீன அரசு இவ்வளவு கொள்கை அடிப்படையில் கட்டுப்படுத்தியும், கறாராக இருந்தும், சீனாவில் வீடு விலை சராசரயாக 30% குறைந்து உள்ளது, பங்குகள் 50% discounted ஆக  உள்ளது.

இதில் பிரச்னை, வீடு கட்டி விற்கும் கம்பனிகள், தொடர்புபட்ட வங்கிகள், மற்றும் வடிக்கையாளர்களுக்கே.

Aggregate அடிப்படையில், சீன அரசு கட்டுப்படுத்த முயசிஸ்க்கும் (unproductive) கிரெடிட் (இப்போதைய சராசரி வீடு விலை அடிப்படையில், மொத்த கிரெடிட் இல் 30% என்ற  எடுகோள் அடிப்படையில்) வேறு productive துறைகளுக்கு வந்தடையும் அல்லது சீன அரசு திசை திருப்பி விடும், முக்கியமாக அதி உயர் தொழில் நுட்பம, விஞ்ஞானம், ஆராய்ச்சி,  சக்தி, உணவு தன்னிறைவு, தேசிய கட்டுமானம் போன்றவை.

மற்றது, பங்கு சந்தை திரியில் ஓர் youtube பதிவு செய்து  இருந்தேன்,அதில் சீன நிதி ஒழுங்குமுறையாளர்கள் (regulators) எவ்வளவு விழிப்பாக இருக்கிறார்கள் என்பது, குறிப்பாக வங்கித்துறை, நிதி துறை மீது வீடு கடன், கிரெடிட், விலை போன்றவற்றின் சடுதியான தாக்கம் பற்றி.

சீனாவின், வீடு விலை, கடன் நெருக்கடி மேற்றகில் தாக்கத்தை ஏற்படுதக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில், பல சீனர்கள், சீனாவில் வீட்டை வைத்து கடன் எடுத்து, மேற்கில் வீடு வாங்கி உள்ளார்கள். அறிந்த வரை, சிங்கப்பூர் இல் இருந்த சிலநிதி நிறுவனங்கள் இதன் பின்னணியில் இருந்தது.     

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kadancha said:

நன்றி கடஞ்சா,

குறிப்பாக மேற்கின் subprime சிக்கலில் இருந்து சீனாவின் தற்போதைய சிக்கல் எப்படி வேறு படுகிறது என விளக்கியமைக்கு.

அதேபோல் ஜப்பானில் நிகழ்ந்த stagflation அதே போல் சீனாவில் நடக்கும் என்பதும் இல்லைத்தான்.

ஆனாலும் எல்லா முதலாளிதுவ சந்தையிலும் boom and bust தவிர்க்க முடியாதது என  நான் எண்ணுகிறேன். கிட்டதட்ட 1995/96 இல் இருந்து சீனா boom மட்டும்தான். எப்படியோ விரைவில் ஒரு bust வரவேண்டியது நியதி என நீங்கள் கருதவில்லையா?

இது சீனாவுக்கு மரண அடி என நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு bust அல்லது downturn சீனாவை அதன் வெளிவிவகாரத்தில் சற்றே நிதானிக்க செய்யலாம் என எண்ணுகிறேன்.

அமெரிக்காவும் இதை முன்பு செய்துள்ளது. isolationist கொள்கை என்பார்கள். உள்நாட்டில் கவனத்தை அதிகம் வைத்திருத்தல்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் fact உடன் விளக்கமாக தனது கருத்துக்களை முன்வைக்கிறார்.

இன்னொருவர் தனது சுய விருப்பையும் சேர்த்து கருத்தை முன்வைக்கிறார். 

நான் வேடிக்கை பார்க்கிறேன். அம்புட்டுதே 😉

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

நான் வேடிக்கை பார்க்கிறேன். அம்புட்டுதே 😉

அவரவருக்கு இயலுமானதை செய்வதுதான் சிறப்பு.

இதை யாரும் தப்பு கூற முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

அவரவருக்கு இயலுமானதை செய்வதுதான் சிறப்பு.

இதை யாரும் தப்பு கூற முடியாது. 

நானும் தப்பு கூறவில்லை. 😀

உங்கள் இருவருக்கும் இடையிலான ஆரோக்கியமான   கருத்துப்பரிமாற்றத்தைக் குழப்ப விரும்பவில்லை. ஆதலால் சின்ன இடைவெளி...👋

3 hours ago, விசுகு said:

உள்ளதில் ஒன்றைத் தான் தெரிவு செய்யமுடியும்

எனக்கு கொஞ்சமாவது ஜனநாயக பண்புகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை உறுதி செய்யக்கூடிய நிலைப்பாடு சரியாக தெரிவாகும்.

நான் பிரான்ஸை விரும்புவதும் அந்த அடிப்படையில் தான். 

பிரான்சை விரும்பும் உங்கள் காரணம் நியாயமானதே. 

ஆனால், கொச்சையாகச் சொன்னால், 

முன்னர் மேற்கு எங்களைத் தேடிவந்து அடிமையாக வேலை வாங்கியது. 

ஆனால், தற்போது நாங்களாக அவர்களைத் தேடிப்போய் அடிமைகளாய் இருக்கிறோம். இதுதான் நவீன காலனித்துவம். 

கொஞ்சம் நோகாமல் கூறினால், 

மேற்கு எம்மைத் தேடி வந்து, எம்மைக் கொண்டு உழைத்தது. தற்போது , நாம் மேற்கைத் தேடிப்போய், அவர்களுக்காக உழைக்கிறோம். இதுதான்  நவகாலனித்துவம். 

😀

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kapithan said:

மனித மனம் ஒரு குரங்கு என்பார்கள்

இப்படி என்றால் அப்படி

அப்படி என்றால் இப்படி

நான் இயந்திரம் பற்றி குறிப்பிட்டதன் அடுத்த கட்ட விபரம் இது.

பிரான்சினதும் சீனாவினதும் ஜனநாயக தனிமனித விழும்பியங்கள் பற்றி உங்களுக்கு நான் எழுத வேண்டிய அவசியம் இல்லை

இருந்தாலும் மனித மனம்.....?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

சனனாயகம் என்பது உலகளாவிய ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்பா ? கறுப்பு நல்லது, வெள்ளை தீதானது எனக் கூற முடியுமா? 

எவ்விதக் கட்டுப்பாடற்ற தனிமனித சுதந்தித்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

சனனாயகம் என்பது உலகளாவிய ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்பா ? கறுப்பு நல்லது, வெள்ளை தீதானது எனக் கூற முடியுமா? 

எவ்விதக் கட்டுப்பாடற்ற தனிமனித சுதந்தித்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. 

அதுக்கு தான் முதலிலேயே இது எனது நிலைப்பாடு மட்டுமே என்று எழுதியிருந்தேன் 

உங்கள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இது எனது நிலைப்பாடு

உங்களை போன்றவர்களால் மகிந்தா குடும்பம் தொடங்கி புரின், கிம் யொன் உன், சீ ஜின்பிங், முல்லாக்கள், அரச குடும்ப ஆட்சியாளர்களுக்கு  பிரச்சனை தான்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

மேற்கு எம்மைத் தேடி வந்து, எம்மைக் கொண்டு உழைத்தது. தற்போது , நாம் மேற்கைத் தேடிப்போய், அவர்களுக்காக உழைக்கிறோம். இதுதான்  நவகாலனித்துவம். 

இதுதான் உண்மை .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

உங்களை போன்றவர்களால் மகிந்தா குடும்பம் தொடங்கி புரின், கிம் யொன் உன், சீ ஜின்பிங், முல்லாக்கள், அரச குடும்ப ஆட்சியாளர்களுக்கு  பிரச்சனை தான்.

மிகச் சரியான புரிதல்  

👋

  • கருத்துக்கள உறவுகள்

இவை முற்றிலும் நான் அறிதவற்றில் இருந்து 

சீனாவில் boom - bust என்பது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

ஆனால், சீனாவின் பொருளாதார மற்றும் வங்கி துறைகளில்   ஏதாவது quarks இருக்கிறதா என்பது தெரியாது.

இங்கே US, UK இல் 0%, வருமானம் தேவை இல்லாத, வெளிப்படையாக பொய்யானா வீடு கடன் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டபோது எல்லோரும் நினைத்தது credit criteria lax செய்யப்பட்டுள்ளது  என்று.

financialization (கடன்களை பிரித்து கலந்து அதன் அடிப்படையில் credit  default  swap உருவாக்கியது) நடந்தது தெரியாது.     

ஆனால், fortress economy பக்கம் சாயக் கூடிய வாய்ப்புகள் கூட, அதனால், வார்ச்சி  வீதம் (இப்போது இருப்பதிலும்)  குறையும், ஆனால் பெருளாதார உறுதி தன்மை கூடும்.

fortress economy க்கு மேற்கும் ஓர் காரணம். தொழில்நுட்பத்தை தடை செய்யும் போது, சீனா fortress economy சாய்வது இயற்கை.  

(ரஷ்யா பொருளாதாரம் இவ்வளவு நின்று பிடிப்பதற்கு ஓர் காரணம், புட்டின் குழாம் ஆட்சி ஏறியதில் இருந்து, ரஷ்யா fortress economy க்கு ஒத்த பொருளாதார நிலையை ஏற்படுத்தியது. உ.ம். ரஷ்யாவின் தங்கம் வாங்கும் நடவடிக்கை. சீனாவும் செய்தது. இதில் ஒரு சுவாரசிய களவும் நடந்தது. எந்த நாடு என்று மறந்து விட்டேன், ஒன்றில் UK அல்லது US இடம் இருந்து சீன தங்கம் வாங்கியது, sampling ஆக வாங்கிய தங்க  பாளங்களின் தரத்தை சோதித்த போது, இரும்பு கலந்து இருப்பது தெரிய வந்து, சீனா பணம் கொடுக்க மறுத்து, பின்பு  தனத்தை விற்ற நாடு திரும்பி எடுத்து, சீனா  தனது முகவர்களை தங்கம் வார்க்கும் மேற்பார்வை செய்ய விட்டு தங்க பாளங்களை வாங்கியது).     

ரஷ்யாவுக்கு போடப்பட்ட தடைகளை, சீன சமாளிக்க எதிர்த்து நிற்க கூடிய நிலை என்று வரும் வரை,  fortress economy போன்ற நிலை எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

அதற்காக , சீனா isolationist ஆக வரும் என்றும் எதிர்பார்க்க முடியாது.  

சீன சர்வதேச வர்த்தகத்தில், அமெரிக்கா - 13 %, ஐரோப்பா - 17 %, மிகுதி ஆசிய, ஆபிரிக்கா, இலத்தின்  அமெரிக்கா.

தைவான்,  தென்கொரிய,ஜப்பான் இன் வர்த்தக பெரும் பங்கு சீனா. 

 உண்மையில் (மறைமுகமாக) தனிமைப்படுத்தப்படுவது அமெரிக்கா,  ஏனெனில், சீன மீதான அமெரிக்காவின் (பொருளாதார)  தடையால். மேற்கு - சீனா பொருளாதார பிணைப்பு முழுமையாக நடந்தால், இது கூடுவதற்கு வாய்ப்பு கூட.  மேற்கின் சர்வதேச வர்த்தக, பொருளாதார பிணைப்பு டொலர், மற்றும் அதிஉயர் தொழிநுட்பத்தால்.  அது குறையுமாயின் மேற்கு பாதிக்கப்படும்.  அதி உயர் தொழில்நுட்பத்தை சீன நிகர் போட்டியாளராக மாறி வருகிறது. டாலருக்கும் மாற்று பரிவர்த்தனை அமைப்பை கட்டி எழுப்பிக்கொண்டு இருக்கிறது. 

BRI இ முழுமையாக பார்க்க வேண்டும் - ஆப்பிரிக்காவில் சீன கடன் தள்ளுபடி  செய்யம் போது, பாலைவனத்தின் (Taklimakan) வழியே புகையிரத வழங்கலை திறக்கிறது. இது கசக்ஸ்தான், உஸ்பெஸ்கித்தானை இப்போதைக்கு இணைக்கிறது, சர்வதேச வியாபாரத்தை திறக்கிறது.

இலத்தீன் அமெரிக்காவிலும், சீனாவின் வர்த்தக, முதலீடு விரிவாக்கத்தையும் இதில் அடங்குகிறது. 

மற்றது, பிரச்சனைகள்ன் இருந்தாலும், ஆபிரிக்க நாடுகள் (மற்றவையும்) சீனாவை விரும்புகியறது, ஏனெனில் அணுகு முறையால்.

விளக்க  நேரம் இல்லை, அண்மையில் g7 அறிவித்த திட்டத்தை மேலாக பார்க்கும் போது ஏன் என்பது புரியும். 600 பில்லியன் வங்கிகள் ஊடக கடனாக வழங்கப்படும் (அதாவது நாடுகள் தனியார் வங்கி நிபந்தனைகளை திருப்தி செய்து கடன் வாங்க வேண்டும்) , மேற்கு governance ஐ மேற்பார்வை செய்யும், இப்போதைய அதே model, காலனித்துவ mindset. அதாவது, மற்ற நாடுகளுக்கு governance தெரியாது என்ற கதை.

மற்றது, சீனாவின் high end technology, science research, development, products, services. 
 
இரண்டு உதாரணங்கள். 

2011 இல் அமெரிக்கா, சீனாவை விண்வெளி ஆய்வு கூடத்தில் இருந்து தடுத்து முற்றாக தடை செய்தது, 2022 இல் சீனாவிடம் தனிப்பட்ட   விண்வெளி ஆய்வு கூடம், பல நாடுகள் சீனாவுடன் research, development க்கு பேச்சுவார்த்தையில்.

மற்றது, chips முறுகல், போட்டி, அமெரிக்காவின் தடை - சீன கம்பனி 7nm உற்பத்தி வரை வந்துள்ளது  ஆனாலும், உற்பத்தி வினைத்திறனில் தொழில் நுட்பத்தால் பிரச்சனை இருக்கிறது (duv  vs euv, தேடி பார்க்கவும்).  

முக்கியமாக, சீனாவின் வளர்ச்சி, சீனா உள்ளே இருக்கும் பல பிரச்சனைகளை தீர்த்து இருக்கிறது ( எந்த நாட்டுக்கும் இது பொருந்தும் ). இதுவே மிக முக்கிய காரணம் சீனாவின் வளர்ச்சிக்கும், அதனால் உருவாகும் செல்வாகிற்கும். இது வேறு பொருளியல், துறை சார் நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

அதனால், US மற்றும்  West ஆல், ஆக கூடியது, சீனாவின் வளர்ச்சியை தள்ளிப்போட எத்தனிக்கலாம், அனால், நிறுத்துவது முடியாதது (யுத்தம் போல வேறு வழியின்றி) என்பது பல ஆய்வாளர்களின் முடிவு, முக்கியமாக முதலீடு வங்கிகளின் பொருளியல் ஆய்வு துறை.    

மிக குறைந்த மட்டத்திலான உதாரணம், சீனாவின் வறுமை ஒழிப்பு திட்டம். நவீன வரலாற்றில், இதுவரை காணாதது. அதாவது, இலக்கு வைக்கப்பட்டு, கால எல்லைக்குள் இலக்கு அடையப்பட்டது. 

மற்றது, வர்த்தகம், பொருளாதாரத்தை பொறுத்தவரை, சீன, ரஷ்யா, பொதுவாக எந்த நாடும்  தனிமைப்பட்டு விரும்பவில்லை. ஆனாலும், பிரிக்ஸ், ஷங்காய் ஒத்துழைப்பு  கூட்டணி விரிவடையும் சாத்தியகூற்றுகள் இருக்கிறது; காரணம்; அமெரிக்காவும், eu  உம் ரஷ்யா மீதி விதித்த தடை, எல்லா நாடுகளையும்  விழிப்படைய செய்து விட்டது.

எழுதிக்கொண்டு இருக்கும் போது இந்த செய்தி வந்தது 

https://www.reuters.com/markets/asia/chinas-top-banks-face-narrowing-margins-calls-help-economy-grow-2022-09-06/

BEIJING, Sept 6 (Reuters) - Top tier Chinese banks preparing to respond to Beijing's call to boost lending to the real economy and debt-laden property sector are set to face a squeeze on their profit margins in the second half, bankers and analysts said.

Reporting by Ziyi Tang, Engen Tham and Xie Yu; Editing by Sumeet Chatterjee and Jacqueline Wong

......

சீனாவின் property sector 57 tr என்பதற்கு, வேறு  ஒப்பீடுகள் உள்ளது. உ.ம். derivatives market, சாதாரண சட்ட அடிப்படையிலான ஒப்பந்தம் வழியாக. 

இதை பற்றி மேலும் எழுதலாம், நேரம் இல்லை.

முக்கியமாக, ஈழத்தமிழர் உணர்ச்சி வசப்படாது, சீனாவை விளங்கி கொள்ள முயல  வேண்டும்.   மேற்கின் பிரசாரத்தை தரம் பிரித்து அறிய வேண்டும்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.