Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தா நாடு திரும்பினார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த யூலையில் அரசுக்கு எதிரான போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் தப்பி ஓடி பதவியையும் இழந்த கோத்தபாய ராஜபக்ச தாய்லாந்தில் இருந்து சொறீலங்காவுக்கு திரும்பி இருப்பதாக பிபிசி செய்தி பிரசுரித்துள்ளது.

Gotabaya Rajapaksa: Sri Lanka's ousted former president returns

Sri Lanka's former president Gotabaya Rajapaksa, who fled abroad after mass protests in July, has returned to the country.

https://www.bbc.co.uk/news/world-asia-62765262

  • கருத்துக்கள உறவுகள்

சொரிலன்காவுக்கு இனி நல்லகாலம் 😀 

  • கருத்துக்கள உறவுகள்

போடுறா வெடியை..! 🙃

"வாத்தி ஈஸ் கமிங்..!" 🤗

 

 

  • கருத்துக்கள உறவுகள்

30 வருட போரை வென்ற நாயகன் என்று… 
காதால் இரத்தம் வாற அளவுக்கு, துதி பாடப் போகிறார்களே… 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

30 வருட போரை வென்ற நாயகன் என்று… 
காதால் இரத்தம் வாற அளவுக்கு, துதி பாடப் போகிறார்களே… 

இல்லை, பொறுத்திருங்கள்! நிலைமை தலை கீழாகவும் மாறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220903-104336.jpg

இனி பர்னிச்சர் மேல கைய வச்ச..☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நாடு திரும்பினார்... கோட்டா.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கோட்டாபய ராஜபக்ஷ தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜுலை மாதம் 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஜுலை மாதம் 13ஆம் திகதியன்று மாலைதீவுக்கு சென்றிருந்தார்.

அத்துடன், ஜுலை 14ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி, ஒகஸ்ட் 11ஆம் திகதி தாய்லாந்து சென்றடைந்தார்.

மூன்று வாரங்களாக அங்கு தங்கியிருந்த கோட்டாபயவின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ததை அடுத்து நேற்றிரவு  இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ ஆகியோருக்கு விசேட பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

மிரிஹான வீட்டிற்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பல தடவைகள் கோட்டாபய இலங்கைக்கு வருவதற்கான திகதிகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. எனினும், பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

https://athavannews.com/2022/1297311

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ ஆகியோருக்கு விசேட பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

தமிழினக் கொலையாளிகளில் ஒருவனும், நாட்டின் கொத்துகளைச் சூறையாடியவர்களில் ஒருவனுமான மக்கள் போராட்டத்தால் தப்பியோடிய முன்னாள் சானதிபதியான கோத்தாவுக்கு இன மக்களது பணத்தில் பாதுகாப்பு சுகபோக வாழ்வு. இதுதான் இலங்கை சனநாயகம்.

இருவருக்கு ஏறக்குறைய ஐந்தாறு சிற்றுந்தகளும், இரண்டு மூன்று உந்துருளிகளும் செல்கின்றன. மக்களது வரிப்பணம் மக்களால் விரட்டபட்டவனுக்கு செலவுசெய்யப்படுகிறது.  

2 hours ago, satan said:

இல்லை, பொறுத்திருங்கள்! நிலைமை தலை கீழாகவும் மாறலாம்.

 ஆள் பிரதமாரக நாடளுமன்றம் வருவாரென்று சொல்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

Bild

மக்கள்... சர்வதேச நாணய நிதியத்தினை வரவேற்க, மாலையுடன் காத்திருக்க...
பின்  (அம்பாந்தோட்டை)   பக்கத்தாலை.. கோத்தா வந்து இறங்க, 
ரணில்... பச்சைக்  கொடி காட்டி விட்டார்.    
 

  • கருத்துக்கள உறவுகள்

Astrovan Burn GIF - Astrovan Burn Rubber GIFs

வெள்ளை வானுக்கு, வேலை வரப் போகுது.
எத்தனை... போராட்டக் காரர்கள், காணாமல் போகப் போகிறார்களோ...  😮

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை திரும்பினார்: போராட்டக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்?

5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

நிரந்திர நாடில்லாமல் தவிக்கும் கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஜுலை 13ம் தேதி இலங்கையை விட்டு வெளியேறி வெளியில் இருந்தே அதிபர் பதவியில் இருந்து விலகிய கோட்டாபய ராஜபக்ஷ வெள்ளிக்கிழமைக்கும் சனிக்கிழமைக்கும் இடைப்பட்ட இரவில் தாய்நாடு திரும்பினார்.

முதலில் இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு சென்று, அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்று அங்கிருந்தபடியே பதவி விலகியபிறகு, தாய்லாந்து சென்றிருந்த கோட்டாபய தற்போது தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்திருக்கிறார்.

தாய்லாந்தில் இருந்து புறப்பட்ட அவர் சிங்கப்பூர் வழியாக இலங்கை வந்து சேர்ந்தார். சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு சொந்தமான பொது விமானத்தில் அவர் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு நள்ளிரவு வந்தார். சில அரசியல் தலைவர்கள் அவரை வரவேற்கச் சென்றிருந்ததாகத் தெரிகிறது.

 

விமான நிலையத்தில் இருந்து கோட்டாபயவை ஏற்றிக் கொண்டு சென்ற கார்.

 

படக்குறிப்பு,

விமான நிலையத்தில் இருந்து கோட்டாபயவை ஏற்றிக் கொண்டு சென்ற கார்.

 

சாலையில் அவரது கார்.

 

படக்குறிப்பு,

சாலையில் கோட்டாபய கார்.

முன்பு என்ன நடந்தது?

பொருளாதார நெருக்கடி இலங்கையை நெருக்கத் தொடங்கிய நிலையில், கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி நுகேகொடை - மிரிஹான பகுதியிலுள்ள கோட்டாபய ராஜபக்ஷ வீட்டை சுற்றி வளைத்த மக்கள், ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்கள்.

 

இதையடுத்து, ஏப்ரல் மாதம் 9ம் தேதி கொழும்பு காலி முகத்திடலில் தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் தொடங்கியது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் சுமார் 4 மாதங்களை கடந்த நிலையில் ஜுலை மாதம் 9ம் தேதி கொழும்பு நகருக்குள் லட்சக்கணக்கான மக்கள் நுழைந்தனர்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

இவ்வாறு கொழும்பு நகருக்குள் வந்த லட்சக்கணக்காக மக்கள், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லம் ஆகியவற்றை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்.

இதையடுத்து, கடந்த ஜுலை மாதம் 13ம் தேதி, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது துணைவியார் ஆகியோர் மாலத்தீவு சென்றனர்.

அதன்பின்னர், மாலைத்தீவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்து தனது விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், படிப்படியாக போராட்டம் வலுவிழந்த நிலையில், தாம் காலி முகத்திடல் போராட்டத்தை கைவிடுவதாக காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தார்கள்.

எனினும், அரச எதிர்ப்பு போராட்டங்கள் இன்றும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

மீண்டும் போராட்டம் நடக்குமா?

 

போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

முன்பு நடந்த போராட்டம். கோப்புப்படம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பினால், மீண்டும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படுமா என்பது தொடர்பில், பிபிசி தமிழ், போராட்டக்காரர்களை தொடர்புக் கொண்டு வினவியது.

நாங்கள் அவரை ''நாட்டை விட்டு போகச் சொல்லவில்லை. கோட்டா வெளியில் போவதை எல்லாரும் தடுத்தார்கள். அவர் வருவதற்கு நாம் எதிர்ப்பு இல்லை" என போராட்டத்தில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளர் ரஜீவ்காந்த், பிபிசி தமிழிடம் கூறினார்.

'' அவரை ஒருநாளும் நாட்டை விட்டு வெளியில் போகுமாறு சொல்லி போராட்டம் செய்யவில்லை. நாட்டை விட்டு தப்பியோடியதை நாங்கள் எதிர்த்தோம். ஆனால், கோட்டா திரும்ப வந்து, பதவிகளை எடுத்தால், அதற்கான எதிர்ப்புகளை தெரிவிப்போம். அதுதான் ஜனநாயக முறை. அவருக்கு எதிரான நடவடிக்கைகளை சட்ட ரீதியாக தான் செய்ய வேண்டும். கோட்டா வெளியில் போவதை எல்லாரும் தடுத்தார்கள். நாட்டிற்கு வருவது பரவாயில்லை.

 

சிவப்புக் கோடு

இதையும் படிங்க...

 

சிவப்புக் கோடு

அவர் வந்த பிறகு, வழக்கறிஞர்களின் ஊடாக, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்குப் போட வேண்டும். அதைவிட்டு, அவர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. ஏனென்றால், அவர் சாதாரண மனிதராக தான் உள்ளே வருகின்றார். ஜனாதிபதியாக இருந்தபோது செய்த தவறுகளுக்கு எல்லாம் இனி சட்டரீதியாக பார்த்துக்கொள்வோம்" என ரஜீவ்காந்த் கருத்து தெரிவித்தார்.

''ஜனாதிபதி என்ற விதத்தில், அவர் செய்த ஊழலுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கினார்கள். தனிப்பட்ட முறையில் அவருடன் எமக்கு கோபம் கிடையாது," என போராட்டத்தை முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்தர பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை, கோட்டாபய, நாட்டிற்குள் வருவதற்கு எதிர்ப்பு கிடையாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்திருந்தது.

https://www.bbc.com/tamil/sri-lanka-62776756

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka: Gotabaya Rajapaksa kehrt aus Exil zurück - DER SPIEGEL

Typify allegations are being constructed to tarnish the good name of  Gotabaya Rajapaksa _______note by Tongaa. – Lanka Voice – Experience the  power of media with the views of the people

கோட்டாவுக்கு... முன்னாள் ஜனாதிபதிக்கான, உரிமைகள் வழங்கப்படும்!

கோட்டாபய ராஜபக்சவுக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான உரிமைகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

போராட்டங்களை தொடர்ந்து இலங்கையை விட்டு வெளியேறி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

இல்லை, பொறுத்திருங்கள்! நிலைமை தலை கீழாகவும் மாறலாம்.

 

3 hours ago, nochchi said:

ஆள் பிரதமாரக நாடளுமன்றம் வருவாரென்று சொல்கிறீர்களா?

@nochchi சொன்னதுதான்... நடக்கப் போகுது @satan 🙂

 

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார்-சீதா அரம்பேபொல

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார்-சீதா அரம்பேபொல.

முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வர விரும்பினால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.

எனினும், முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வருவார் என்ற நம்பிக்கை இல்லை என்று கூறியதோடு இதுவரை கட்சியில் அப்படியொரு விடையம் நடப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியோ அல்லது வேறு எவருமோ இவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1297409

  • கருத்துக்கள உறவுகள்
iftamil - நாட்டை விட்டு தப்பி செல்ல முயன்ற பசிலுக்கு ஏற்பட்ட அவமானம்
 
Sri Lanka Crisis - Passengers Airport Staff Foil Basil Rajapaksas Bid To  Flee Sri Lanka, | பசில் ராஜபக்ச இலங்கையை விட்டு தப்பிச் செல்ல முயற்சி....  விமான நிலையத்தில் பிடிபட்டார் ...
 
May 9 அன்றே  பசில் ராஜபக்சவை  நாட்டை விட்டு, ஓட விட்டிருக்க வேண்டும்.
நீதிமன்றம் ஊடாக... ஊழலை பிடிக்கப் போவதாக தடுத்தார்கள்.
( ராஜபக்சாக்களின் ஊழலை பிடித்து தண்டிப்பதற்கு 10 மூளைக்காரனால் கூட முடியாது.)
 
இதனால்.. நாட்டுக்குள்ளேயே இருந்தார்.
SLPP ஆட்களை வேறு கட்சிகளுக்கு தாவிவிடாமலும் பார்த்துக்கொண்டார்.
தங்களையும்... அரசியல் உயிர்ப்புடன் வைத்துக் கொண்டுள்ளர்.
இவர்களை ஓடவிடாமல் தடுத்தவர்களே...
இவர்களின் மீள் எழுச்சிக்கு... அத்திவாரமிட்டவர்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text

கோத்தா வந்திட்டார்... இனி, நரி ஊளையிடுவதை நிறுத்தச் சொல்கிறார்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் கடன் ஒப்பந்தம்பற்றி பேசி முடித்து நிம்மதி பெருமூச்சு விடேல்லை, காத்திருந்ததுபோல் வந்திறங்கி விட்டார். இனி கடன்? கோன்விந் .... கோவிந்தா ...... நாட்டைப் பிடிச்ச சனியன் அவ்வளவு கெதியாய் விட்டகலாது.

  • கருத்துக்கள உறவுகள்

இனியென்ன அந்தாள் சுதந்திரமா சுற்றி திரியும்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் மாத்திப்போட சட்டையில்லாமல் போட்ட சட்டையோடேயே நாடெல்லாம் அலைந்து திரிந்து வாறார்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'உனக்காக அடி வாங்கி மிதி வாங்கி ஜட்டி கிழிய ரோட் ரோடா அலஞ்சதுக்கு உருப்படியா ஒரு போஸ் கூட குடுக்க மாட்டியா என் தெய்வமே 團'

நாடு திரும்பிய... கோத்தாவின், புதிய படம்.

May be a meme of 3 people and text

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.