Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் நச்சுத்தன்மை – இலங்கையர்களுக்கு பேரிடியான தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் நச்சுத்தன்மை – இலங்கையர்களுக்கு பேரிடியான தகவல்

22-15.jpg

நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் இருந்து சிசுக்கள் மற்றும் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் விஷம் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

திரிபோஷவில் அடங்கியிருக்க வேண்டிய அளவை விட அஃபலரொக்சின் அளவு அதிகமாக இருப்பதன் காரணமாக திரிபோஷ தயாரிப்பு நிறுவனம் அவற்றை சேகரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாதம்பையில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

நச்சுத்தன்மை வாய்ந்த அஃபலரொக்சின்

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” குழந்தைகளுக்கான திரிபோஷ உணவில் அதிகளவான நச்சுத்தன்மை வாய்ந்த மூலம் பொருள் அடங்கியிருந்தமை தெரியவந்ததை அடுத்தே விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன.

குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு வழங்குவதற்காக அனுப்பப்பட்ட திரிபோஷா எனப்படும் போஷாக்கு உணவு இந்த நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார அதிகாரிகளின் அலுவலகங்களில் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

அந்த வகையில் திடீரென சேமித்து வைக்கப்பட்ட மூன்று சத்துகள் எதற்காக திரிபோஷவில் சேர்க்கப்பட்டது என விசாரணை நடத்தப்பட்டது. தற்போது விநியோகிக்கப்படும் மூன்று ஊட்டங்களில் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த அஃபலரொக்சின் என்ற பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார உத்தியோகத்தர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான உணவுப் பொருட்கள் தற்போது விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், விநியோகிக்கப்பட்ட பெரும்பாலான உணவுப் பொருட்களை குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் உட்கொண்டுள்ளனர்.

உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்

இது மிகவும் ஆபத்தான மற்றும் துரதிர்ஷ்டவசமான நிலைமையாகும். அஃபலரொக்சின் என்ற விஷம் அடங்கிய மூன்று சத்துகளை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டவர்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், சந்தையில் கிடைக்கும் சில குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகளில் அஃபலரொக்சின் உள்ளிட்ட பல்வேறு நச்சுப் பொருட்கள் இருப்பதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள கடைகளை சரிபார்ப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். சந்தையில் ஏதேனும் விஷத்தன்மை கொண்ட உணவுகள் காணப்பட்டால், அதனை விற்பனைக்கு வைத்திருக்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்” எனக் குறிப்பிட்டார்.
 
https://akkinikkunchu.com/?p=226535

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் உணவில் விஷம்.
பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள்.
அத்தியாவசிய மருந்து தட்டுப் பாடு.
மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு  போஷாக்கான உணவு இல்லை.
பணம் இல்லாததால்... பலர் பட்டினி.

அரச பணத்தை திருடியவர்கள்  மேல்... நடவடிக்கை இல்லை.
அவர்களுக்கு அமைச்சுப்  பதவி வேறு.
அரசியல் வாதிகள்... நாட்டை, என்ன செய்து வைத்திருக்கிறார்கள். 😡

  • கருத்துக்கள உறவுகள்

நான் மப்பில திரிபோஷாவை திரிஷா என்று வாசிச்சு போட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் நச்சுத்தன்மை – இலங்கையர்களுக்கு பேரிடியான தகவல்

ஒவ்வொரு தடவை இலங்கை போகும் போதும் மறக்காமல் வாங்கிவந்து இடைஇடை சாப்பிடுவோம்.

16 minutes ago, putthan said:

நான் மப்பில திரிபோஷாவை திரிஷா என்று வாசிச்சு போட்டேன்

திரிசா பழசானாலும் பரவாயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இந்தியாவில் அநேகமான நுகர்வு பொருட்களில் புற்றுநோயை கொண்டுவரும் பொருள்கள் கலக்கப்பட்டுள்ளன.

பற்பசையில் கூட நிகொர்டின் கலந்து உள்ளார்கள் காரணம் வியாபார போட்டி .

https://www.indiatoday.in/india/north/story/toothpastes-contain-cancer-causing-nicotine-study-140826-2011-09-11

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, putthan said:

நான் மப்பில திரிபோஷாவை திரிஷா என்று வாசிச்சு போட்டேன்

5 hours ago, ஈழப்பிரியன் said:

ஒவ்வொரு தடவை இலங்கை போகும் போதும் மறக்காமல் வாங்கிவந்து இடைஇடை சாப்பிடுவோம்.

திரிசா பழசானாலும் பரவாயில்லை.

செல்லத்தின்ர பளபளப்பை பாருமையா!
பாவிப்பது ராணி சோப் என கேள்விப்பட்டேன் :cool:

Trisha Krishnan Profiles | Trisha Krishnan Biography | Media9 Tollywood

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

செல்லத்தின்ர பளபளப்பை பாருமையா!
பாவிப்பது ராணி சோப் என கேள்விப்பட்டேன் :cool:

Trisha Krishnan Profiles | Trisha Krishnan Biography | Media9 Tollywood

ராணி சோப்பு மட்டுமில்லை...ஒரு மணித்தியாலம் முன்னர்... திரிபோசமாவையும் சீனியும் போட்டு கரைத்து ஊறவிட்டபின் ராணி சோப்புபோட்டு முகம் கழுவவேணுமாம்...இது நான் அவவிடமிருந்து இன்பொக்ஸ் இல் எடுத்த மெசேஜ்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

செல்லத்தின்ர பளபளப்பை பாருமையா!
பாவிப்பது ராணி சோப் என கேள்விப்பட்டேன் :cool:

Trisha Krishnan Profiles | Trisha Krishnan Biography | Media9 Tollywood

உதுக்கு தானே பழசென்றாலும் பறவாயில்லை என்றேன்.

ம் நான் சொன்ன யார் தான் கேட்கினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரிபோஷா நிறுவனத்திடமிருந்து அறிக்கை

திரிபோஷா குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் திரிபோஷா நிறுவனத்தின் நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கையொன்று அதன் தலைவரினால் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் வெளியாகியுள்ள விடயங்களின் அடிப்படையில் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷாக்களை பெற்றுக்கொள்வதா, இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமலீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, திரிபோஷா தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தாய்மார்கள் வினவுவதன் காரணமாக, சுகாதார அமைச்சு இதற்கான தெளிவான பதிலை வழங்க வேண்டுமென குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.  (a)

https://www.tamilmirror.lk/செய்திகள்/திரிபோஷா-நிறுவனத்திடமிருந்து-அறிக்கை/175-304583

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியில் உண்மையில்லை என நாளைக்கு செய்திவரும். இப்போ அதிரடி செய்தி போட்டு மக்களை கிறங்கடிக்க, மழுங்கடிக்க விரும்புகிறார்கள். காரணம்; அவர்களிடம் பிரச்சனைக்கான தீர்வு இல்லை செய்தி மட்டுந்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்லடொக்சின் அடங்கிய திரிபோஷா வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தவும் - பொது சுகாதார பரிசோதகர் சங்கம்

By T. SARANYA

22 SEP, 2022 | 03:15 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

சிறு பிள்ளைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஆபத்தான முறையில் எப்லடொக்சின் அடங்கிய திரிபோஷா வழங்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சிடம் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.

எப்லடொக்சின் அடங்கிய திரிபோஷா வழங்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமை குறித்து  பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு இருந்த போதே இதனை அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

சுகாதார வைத்திய நிலையங்களில் இருந்து திரிபோஷா மீள பெறுவது தொடர்பில் என்னிடம் வினவப்பட்டது.  திரிபோஷா தொடர்பில் இந்த சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக எழுகின்ற பிரச்சினையாகும்.

டிசம்பர் மாதம் திரிபோஷா மாதிரிகள் பெறப்பட்டு எப்லடொக்சின் உரிய அளவினை விட அதிகமாக காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. 

இலங்கை கட்டளை பணியகங்களின் தரங்கள் இவற்றிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தரங்களுக்கு அமைவாக 3 வயதுகளுக்கு குறைந்த சிறுகுழந்தைகளுக்கு எப்லடொக்சின் பில்லியனுக்கும் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும். 3 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பில்லியனுக்கும் 30 பங்கை விட குறைந்த அளவையே வழங்க வேண்டும்.

எந்த வகையிலும் நான் தவறான கருத்தினை வெளியிடவில்லை. ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் இவ்வாறான விடயம் ஒன்று நடந்தமை தொடர்பில் உணவு ஆணையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

திரிபோஷா உற்பத்தி முகாமையாளர், பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் என்னுடன் உரையாடினார்கள் இத்தகைய தவறு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறினார்கள். 

செப்டம்பர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் உற்பத்தி செய்யப்படுகின்ற மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் கிடைக்க பெற்ற பின்னர் விநியோகிக்கப்படுவதாக அவர் கூறினார்கள்.

மேலும் சிறு பிள்ளைகள் மற்றும் தாய்மார்களுக்கு எப்ளடொக்ஷின் வழங்க வேண்டிய அளவினை விட அதிகளவில் வழங்கிய அதிகாரிகள் இருந்தால் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம் அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு  கொண்டு வந்துள்ளோம் என்றார்.

https://www.virakesari.lk/article/136189

  • கருத்துக்கள உறவுகள்

திரிபோஷா பக்கெட்டுக்களில் எப் பிரச்சினையும் கிடையாது - திரிபோஷா நிறுவனத் தலைவர்

By T. SARANYA

22 SEP, 2022 | 08:15 PM
image

(எம்.மனோசித்ரா)

எப்லடொக்சின் எனப்படுவது சோள உற்பத்தியின் போது உருவாகும் ஒரு வகை வைரஸாகும். திரிபோஷா உற்பத்திக்காக சோளத்தைப் பெற்றுக் கொள்ளும் போது இந்த வைரஸின் செறிமானம் 30 சதவீதத்தை விடக் குறைவாகக் காணப்படுகின்றதா என்பது குறித்து அவதானம் செலுத்தப்படுவதோடு, தர பரிசோதனையும் மேற்கொள்ளப்படும்.

எனவே இது வரை விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா பக்கட்டுக்களில் எந்த பிரச்சினையும் கிடையாது என்பதால், அது குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று திரிபோஷா நிறுவனத் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

திரிபோஷாவானது 66 சதவீதம் சோளம் மற்றும் 32 சதவீதம் சோயா போஞ்சி மற்றும் பால்மா, விட்டமின் உள்ளிட்ட கனிமங்களால் தயாரிக்கப்படுகிறது.

இதில் எப்லடொக்சின் உள்ளடக்கப்படுவதில்லை. எப்பலோடொக்சின் எனப்படுவது சோள உற்பத்தியின் போது உருவாகும் ஒரு வைரசாகும். இந்த வைரஸ் புற்று நோயை ஏற்படுத்தக் கூடியது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திரிபோஷா உற்பத்திக்கான சோளம் இறக்குமதி செய்யப்படும் போதோ அல்லது உள்நாட்டில் கொள்வனவு செய்யப்படும் போதோ அதன் மாதிரிகள் பெறப்பட்டு தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

இதன் போது எப்லடொக்சின்  வைரஸ் அளவு 30 சதவீதத்தை விடக்குறைவாகக் காணப்பட்டால் மாத்திரமே அவை பெற்றுக் கொள்ளப்படும். 30 சதவீதத்திற்கும் குறைவாகக் காணப்படுபவற்றைக் கொண்டு தாய்மாருக்கான திரிபோஷா தயாரிக்கப்படும்.

எனினும் குழந்தைகளுக்கான திரிபோஷாவை தயாரிக்கும் போது அதற்காகப் பெற்றுக் கொள்ளப்படும் சோளத்தில் எப்லடொக்சின்  செறிமானம் ஒரு சதவீதமாகக் காணப்பட்டால் மாத்திரமே அவை பெற்றுக் கொள்ளப்படும்.

மேற்குறிப்பிட்டவாறு தேவைக்கு அதிக எப்லடொக்சின்  செறிமானம் காணப்படும் சோளம் திரபோஷா உற்பத்திக்காக பயன்படுத்தப்பட மாட்டாது. அவ்வாறானவற்றை நாம் பல சந்தர்ப்பங்களில் திருப்பி அனுப்பியிருக்கின்றோம்.

இது இவ்வாறிருக்க தற்போது பல்வேறு காரணிகளால் உள்நாட்டில் சோளப் பயர்செய்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. மொனராகலை மாவட்டத்தில் சோள உற்பத்தி 42 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

இவ்வாறு சோள உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளமையின் காரணமாகவே அதனை இறக்குமதி செய்ய வேண்டியேற்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சோளத்தில் தரமானவற்றைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வருடாந்தம் திரிபோஷா தயாரிப்பிற்கு 6 இலட்சம் மெட்ரிக் தொன் சோளம் தேவையாகவுள்ளது. எனினும் இவற்றில் சுமார் ஒன்றரை இலட்சம் மெட்ரிக் தொன் சோளத்தை மாத்திரமே உள்நாட்டிலிருந்து பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளது. 

எஞ்சியவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமையே காணப்படுகிறது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் போது தரமான சோளத்தைப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல் நிலைமை காணப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களில் அனைத்து மூடைகளிலுமுள்ள சோளம் தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

இவ்வாறு ஒரு பரிசோதனை அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்கு சுமார் 60 000 ரூபா அல்லது அதற்கு அதிக தொகையை செலுத்துகின்றோம். 

இதனை அரசாங்கம் ஒரு சேவையாகவே முன்னெடுக்கின்றது. எனவே கர்பிணிகள் , பாலூட்டும் தாய்மார் மற்றும் சிறுவர்கள் என எவருக்கும் ஆபத்தான அல்லது எப்லோடொக்சின் செறிமானம் அதிகமாகவுள்ள திரிபோஷா வழங்கப்படவில்லை. எனவே அண்மையில் இவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் அநாவசிய அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.

கடந்த மாதம் இறக்குமதி செய்யப்பட்ட 33 சோளம் அடங்கிய கொள்கலன்களில் தர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு , அவற்றில் 21 மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஏனையவரை நிராகரிக்கப்பட்டுள்ளன. திரிபோஷா தயாரிக்கப்பட்டதன் பின்னர் அதில் எப்பலோடொக்சின் வைரஸ் விருத்தியடைவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகும். 

எனினும் பாவனைக்காக பக்கட் உடைக்கப்பட்டு , அதன் பின்னர் அதனை முறையாக பேணாமல் அல்லது காற்று , பூச்சிகள் உட்புகக் கூடியவாறு பாதுகாப்பின்றி வைத்திருந்தால் பாதிப்புக்கள் ஏற்படக் கூடும்.

தயாரிக்கப்படும் திரிபோஷா பக்கட் ஒன்றின் ஆயுட்காலம் 4 மாதங்களாகும். நாளொன்றுக்கு 50 கிராம் என்ற அடிப்படையிலேயே மாதமொன்றுக்கு 2 பக்கட்டுக்கள் வழங்கப்படுகின்றன.

ஏதேனுமொரு காரணத்திற்காக இவற்றை பகிர்ந்தளிக்க முடியாமல் , அதன் காலாவதி திகதி அண்மிக்குமாக இருந்தால் ஒரு மாதத்திற்கு முன்னரே அவற்றை நாம் மீளப் பெற்று விடுவோம். 

மீளப் பெறுபவை அழிக்கப்படுமே தவிர மீள விநியோகிக்ப்பட மாட்டாது. எனவே திரிபோஷாவைப் பெற்றுக் கொள்ளும் எவரும் இது தொடர்பில் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/136207

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

இந்தச் செய்தியில் உண்மையில்லை என நாளைக்கு செய்திவரும். இப்போ அதிரடி செய்தி போட்டு மக்களை கிறங்கடிக்க, மழுங்கடிக்க விரும்புகிறார்கள். காரணம்; அவர்களிடம் பிரச்சனைக்கான தீர்வு இல்லை செய்தி மட்டுந்தான்.

வந்தேவிட்டது...மன்னருடன் கைகுலுக்கிவிட்டு...புலம்பெயர் தமிழரிடம் கடனாவும் காசு கேட்டுப்போட்டு...வழுகின  ரவுசரை இரண்டு கையாலையும் தூக்கிப்பிடித்துச் சிரித்தபடி வந்த நரியருக்கு...வந்தவுடன் இந்த செய்தி .....வந்தவுடன் மறுப்பும் விட்டு...ஆமியிடமும் பவர் கொடுத்தாயிற்று...இனி தேங்காய் தின்றாலென்ன ...சிரட்டை தின்றலென்ன..😄

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரிபோசா மா  வெளிநாடுகளிலும் விற்கப்படுகிறதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nunavilan said:

இந்த திரிபோசா மா  வெளிநாடுகளிலும் விற்கப்படுகிறதா?

கூடுதலான தமிழ்கடைகளில் வாங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட வேண்டிய திரிபோஷா இல்லை!

திரிபோஷாவில் நச்சுத்தன்மை உள்ளது உண்மையே – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயற்குழு!

நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா கையிருப்பு தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கதின் பணிப்பாளர் உபுல் ரோஹன தெரிவித்த கருத்து சரியானது என அந்த சங்கத்தின் செயற்குழு உறுதியளித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, அந்தச் சங்கத்தின் தலைவர் எம்.என்.எச்.நிஹால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் உபுல் ரோஹன கூறியதை விட அதிகமான அஃப்லாடாக்சின் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் விநியோகிக்கப்பட்ட திரிபோஷா மனித பாவனைக்கு உகந்ததல்ல எனவும் தொழிற்சங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் செயற்குழு தெரிவித்துள்ளது.

பொறுப்புள்ள தொழிற்சங்கமாக தாங்கள் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதில்லை என்றும் தாங்கள் முன்வைத்த அனைத்து அறிக்கைகளும் ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்தவை என்றும் நிஹால் மேலும் கூறினார்.

https://athavannews.com/2022/1300674

##############   ###############   ################

Bild

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 22/9/2022 at 15:51, satan said:

இந்தச் செய்தியில் உண்மையில்லை என நாளைக்கு செய்திவரும். இப்போ அதிரடி செய்தி போட்டு மக்களை கிறங்கடிக்க, மழுங்கடிக்க விரும்புகிறார்கள். காரணம்; அவர்களிடம் பிரச்சனைக்கான தீர்வு இல்லை செய்தி மட்டுந்தான்.

தீர்க்கதரிசி👌

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கெகலியவுக்கே சவாலா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.