Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசியாவின் சிறந்த 3 சுற்றுலா ஓய்வு விடுதிகளில் “ கேப் வெலிகம”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியாவின் சிறந்த 3 சுற்றுலா ஓய்வு விடுதிகளில் “ கேப் வெலிகம”

By T. SARANYA

08 OCT, 2022 | 01:11 PM
image

2022 ஆம் ஆண்டில் ஆசியாவின் மூன்று சிறந்த சுற்றுலா ஓய்வு விடுதிகளின் பட்டியலில் இலங்கையிலுள்ள கேப் வெலிகம சுற்றுலா ஓய்வு விடுதியும் இடம்பிடித்துள்ளது.

“கான்டே நாஸ்ட் டிராவலர் ” என்ற சுற்றுலா துறை தொடர்பிலான தகவல்களை வௌியிடும் இதழ் இதனை வௌியிட்டுள்ளது.

ஒக்டோபர் மாதம் வௌியிடப்பட்ட குறித்த பத்திரிக்கையின் வாசகர்களினால் தெரிவு செய்யப்படும் “வாசகர்கள் தெரிவு விருதுகள்” இல் இலங்கைக்கு 99.05 புள்ளிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் 3 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டது.

இதில் 99.69 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்தை  சிக்ஸ் சென்ஸ் நின் வான் பே வியட்நாமும் 99.23 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை சிக்ஸ் சென்ஸ் பூட்டானும் பிடித்துள்ளன.

கேப் வெலிகம என்பது இலங்கையின் கடலை அண்டிய பகுதியில் உள்ள ஓர் உயர்ந்த பகுதியில் உள்ள ஒரு சொகுசு சுற்றுலா ஓய்வு விடுதி ஆகும்.

இது கடந்த 2014 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட சுற்றுலா ஓய்வு விடுதியாகும். 12 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கும் கடல் முகப்பு சுற்றுலா ஓய்வு விடுதி ஆகும். 

இங்கு உலகின் ஏழு வகையான கடல் ஆமைகளில் ஐந்து வகையைச் சேர்ந்தவை இந்த கடற்கரையோரத்தில் காணப்படுகின்றன.

இந்த விடுதி அமைந்துள்ள பகுதியில் நீலத் திமிங்கலங்கள் கடலுக்கு ஒரு மைல் தொலைவில் காணப்படுகிறது. இந்த சுற்றுலா ஓய்வு விடுதி அரிதான செட்டாசியன் (cetaceans) திமிங்கலங்கள் ஆர்வலர்களின் சொர்க்கமாகும்.

https://www.virakesari.lk/article/137241

  • Replies 88
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் எமதாட்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் நம்மவர்களை இழுத்துவிட சிலர் துடிப்பது தெரிகிறது. இலங்கையை சுரண்டுபவர்களுக்கே அங்கு முதலிடுவதால் லாபம். எங்களை சுரண்டுபவர்களுடன்  முதலீடு செய்வதால் வீண்வம்பில் மாட்டுவது போலாகும். தமிழருக்கென்று பிரச்சனையில்லை, அங்குள்ளதெல்லாம் புத்தருக்குரியது என்று அடாவடி செய்கிறார்கள், பறிச்சதை திருப்பித்தர மறுக்கிறார்கள். ஐ. நா. வையே குற்றஞ்சுமத்துகிறார்கள் இதற்கு பிறகும் யாராவது முதலீடு செய்வார்களா? அல்லது முதலிட அழைப்பார்களா? கூப்பிட்டு வைச்சு பறிச்சுப்போட்டு கும்மி விடத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

சாத், 

நேரே, ஏன்  முதலீடு செய்ய வேண்டும் என்று கேழுங்கள்.  நுள்ளிவிட வேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

ஆசியாவின் சிறந்த 3 சுற்றுலா ஓய்வு விடுதிகளில் “ கேப் வெலிகம”

அட இது உண்மை தானா என்று போய் பார்ப்பம் என்றால் முகவரியைக் காணலையே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அட இது உண்மை தானா என்று போய் பார்ப்பம் என்றால் முகவரியைக் காணலையே?

காலி தாண்டி போகவேணும் என்று கூகுள் மப் காட்டுது.

170000ரூபா என்றும் காட்டுது!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இலங்கையில் எமதாட்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும். 

5 hours ago, satan said:

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் நம்மவர்களை இழுத்துவிட சிலர் துடிப்பது தெரிகிறது.

3 hours ago, Kapithan said:

நுள்ளிவிட வேண்டாம்.

உங்கள் ராஜ தந்திரம் தெரியாதா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

உங்கள் ராஜ தந்திரம் தெரியாதா என்ன?

ஆக ஜெனீவாவில் தொண்டை கிளியக் குளறி, சிங்களத்திற்கு தண்டனை மட்டும்தான் வேண்டிக் கொடுப்பீர்கள். அத்துடன் உங்கள் தனிநாட்டுக்கான போராட்டம் முடிந்தது. 

வெளிநாடுகளில் மட்டும்தான் முதலீடு செய்வீர்களென்றால் எதற்கு உங்களுக்கு வடக்கும் கிழக்கும ? 

இலங்கையின் பொருளாதாரம் இப்போது முஸ்லிம்களின் கையில். அது தங்களுக்குத் தெரியுமோ ? 

மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் யூதர்கள், இந்த உலகை தங்களின் பூரண கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்தைத் தங்களின் கையில் வைத்திருப்பதனால்தான். 

குறை சொன்னால் மட்டும் போதாது, கொஞ்சம் யோசிக்கத் தெரியவும் வேண்டும்.  

(உங்கள் கோபம் புரிகிறத. ஆனால் கோபம் முடிவுக்கு வந்தவுடன் அடுத்தது என்ன ?  🤣)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா! தெற்கு பக்கத்தில் நம்மவர்கள் முதலிட முடியுமா? ஏற்கெனெவே முதலிட்டவர்களை அடித்து கலைத்து, அவர்கள் முன்னாலேயே எரியூட்டி சாம்பலாக்கியாச்சு. வடக்கில் முதலிட எவ்வளவோ முயற்சித்தும் தடைகளையே கண்டது மிச்சம். என்ன முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் அறியத்தருவது? பலகால பெருமை கொண்ட கோயில்களையே தங்கடது என்று இடித்தெறிகிறார்கள், நீதிமன்றங்கள் வேடிக்கை மட்டுந்தான் பாக்கிறது. இதில இருக்கிறவர்களையும் முதலீட்டாளர் என்று கூப்பிட்டு முதலைக்கு இரையாக்கவோ? நம்ம நாட்டிலுள்ளவர்கள் அரிச்சந்திரன் வீட்டு பக்கத்து வீட்டுக்காரர் சொன்னசொல் தப்ப மாட்டார்கள் நம்பி முதலிடலாம் என்கிறீர்களா?  கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள் என்று ஐ. நா. ஆண்டாண்டு தோறும் கூப்பிட்டு வைச்சு பாடம் நடத்தி, வெருட்டி, படாத பாடு படுகுது. இதில நீங்கள் வேறை ......       
   
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இத்தனை மில்லியன் யூதர்களைக் கொன்றபின்புகூட இன்று யூதர்களே உலகத்தை ஆள்கிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

இவை எல்லாவற்றையும் தாண்டித்தான் நாம் முன்செல்ல வேண்டும். இதுதான் எங்களுக்கான கடைசிச் சந்தர்ப்பம். 

இன்னொரு பத்து வருடங்கள் போனால், நாம் கனடாவில்தான் தனிநாடு கோரவேண்டி ஏற்படும். 

இங்குள்ள அம்மவரின் நிறுவனங்களின் இலங்கைக் கிளையை அங்கு திறக்க வேண்டும். இதுதான் முதற்படி

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2022 at 18:48, ஈழப்பிரியன் said:

அட இது உண்மை தானா என்று போய் பார்ப்பம் என்றால் முகவரியைக் காணலையே?

உண்மைதான்

https://www.cntraveler.com/gallery/asia-top-resorts

https://www.resplendentceylon.com/capeweligama/

குறைந்த விலை அண்ணளவாக $450.00

https://be.synxis.com/?adult=2&arrive=2022-11-07&chain=8565&child=0&currency=USD&depart=2022-11-08&hotel=65051&level=hotel&locale=en-US&room=JS&rooms=1

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vaasi said:

கொழும்புக்கு போனாலே 1500-2000 ரூபா லொட்சுகளுக்கு மேல் தங்கிறல.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

கொழும்புக்கு போனாலே 1500-2000 ரூபா லொட்சுகளுக்கு மேல் தங்கிறல.

இப்படி நான்கு டொலர் ...நான்கு டொலர்..ஆக  செலவு செய்தல் இரண்டு கிழமைகள்  இலங்கையில் சுற்றி பார்க்க நூறு டொலர் காணும்....குமாரசாமி அண்ணை எனக்கு தந்த பட்டதை பறித்துபோடிவியாள்.   போல்லிருக்கிறது    🤣

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kandiah57 said:

இப்படி நான்கு டொலர் ...நான்கு டொலர்..ஆக  செலவு செய்தல் இரண்டு கிழமைகள்  இலங்கையில் சுற்றி பார்க்க நூறு டொலர் காணும்....குமாரசாமி அண்ணை எனக்கு தந்த பட்டதை பறித்துபோடிவியாள்.   போல்லிருக்கிறது    🤣

ஐயோ கந்தையர்

நான் போனது 2015 இலும் 2017 இலும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

இன்னொரு பத்து வருடங்கள் போனால், நாம் கனடாவில்தான் தனிநாடு கோரவேண்டி ஏற்படும். 

இந்த சிந்தனையே உங்களை வெளிகாட்டுது கனடாவும் சொரிலன்காவும் ஒன்றா ?

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2022 at 01:43, satan said:

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் நம்மவர்களை இழுத்துவிட சிலர் துடிப்பது தெரிகிறது. இலங்கையை சுரண்டுபவர்களுக்கே அங்கு முதலிடுவதால் லாபம். எங்களை சுரண்டுபவர்களுடன்  முதலீடு செய்வதால் வீண்வம்பில் மாட்டுவது போலாகும். தமிழருக்கென்று பிரச்சனையில்லை, அங்குள்ளதெல்லாம் புத்தருக்குரியது என்று அடாவடி செய்கிறார்கள், பறிச்சதை திருப்பித்தர மறுக்கிறார்கள். ஐ. நா. வையே குற்றஞ்சுமத்துகிறார்கள் இதற்கு பிறகும் யாராவது முதலீடு செய்வார்களா? அல்லது முதலிட அழைப்பார்களா? கூப்பிட்டு வைச்சு பறிச்சுப்போட்டு கும்மி விடத்தான்.

முதலீடு   செய்வது இலாபம் பார்ப்பதற்கு மட்டுமே  இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக அல்ல
நீங்கள் செய்யாவிட்டால் ஒரு இந்திய நிறுவனமோ அல்லது ஒரு சீன நிறுவனமோ செய்யப்போகின்றது
இனப்பிரச்சனையையும்  தொழில் முதலீட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால்    சரி வராது.
தெற்கிலோ மேற்கிலோ இல்லாமல் வடக்கு கிழக்கில் முதலிடுவதால் எம்மவரின் வாழ்வாதாரம் மேம்படும்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இந்த சிந்தனையே உங்களை வெளிகாட்டுது கனடாவும் சொரிலன்காவும் ஒன்றா ?

இதற்கு அப்பால் யோசிக்கவே மாட்டீர்களா ? 

இந்தியனும் சீனனும் இலங்கையில் முதலிடுவது இலாபம் பார்ப்பதற்கு மட்டுமா? இலாபம் மட்டுமே காரணமென்றால் இலங்கையைவிட வேறு நாடுகளில், குறிப்பாக , ஆபிரிக்க நாடுகளில் முதலீடு செய்தால் அதிகம் கிடைக்குமே.

இவர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்குக் காரணம் தங்களின் பிடியை அங்கு வைத்திருக்க வேண்டும் என்பதனலாகும். 

நாங்களும் முதலீடு செய்தால் எங்களின் பிடி அங்கு இருக்கும் என்பதுதான் காரணம். இங்கே நாங்கள் என்று கூறுவது புலம்பெயர் நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளவர்களைக் குறிக்கும். இன்னொரு நாட்டின் முதலீடுகளுக்கு பாதுகாப்பு அதிகம். 

உதாரணமாக உங்கள் கனேடிய கம்பனி ஒன்றின் கிளையை அங்கு ஆரம்பித்தால் உங்களுக்கு இரட்டிப்பு இலாபம். 

(இலங்கைத் தமிழர்களாக யோசிக்காமல் கனேடியத் தமிழர்களாக யோசிக்க வேண்டும்)

(இப்போது என்னை எப்படிப் பார்க்கிறீர்கள் 😀)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

(இப்போது என்னை எப்படிப் பார்க்கிறீர்கள்

இப்போதும் நான் உங்களை அப்படித்தான் பார்க்கிறேன்!

18 minutes ago, Kapithan said:

(இலங்கைத் தமிழர்களாக யோசிக்காமல் கனேடியத் தமிழர்களாக யோசிக்க வேண்டும்)

நீங்கள் உங்களை எந்த நாட்டுத்தமிழராக வேண்டுமானாலும் யோசியுங்கள், ஆனால் இலங்கையில் நீங்கள் முதலிடும்போது புலம்பெயர் தமிழர் என்றே பதிவார்கள். பிரித்தானியா அமைச்சரிடம் சொன்னார்கள் நாங்கள் பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழருடன் வர்த்தக முதலீடுகளை செய்ய விரும்புகிறோம் என்று, ஏன் அந்த நாடு அங்குள்ள தமிழரை ஊக்குவிக்கவில்லை? அல்லது அங்குள்ள தமிழர் அந்தநாட்டு அரசின் அனுசரணையோடு தொடங்க ஆலோசிக்கவில்லை? சுமந்திரன் அறிக்கை விட்டார், புலம்பெயர் தமிழருடன் பேச்சுவார்த்தை செய்து அவர்களை முதலிட வைக்க தான் அனுசரணை வழங்கத் தயார் என்றார். ஆனால்.... யாரும் சிங்களத்தை நம்பி இறங்கத் தயாரில்லை. சும்மா அழைப்பார்கள் ஆனால் அதற்கு மேலால் கட்டுப்பாடுகள் வைப்பார்கள், அதைவிட வட கிழத்திலுள்ள  அரசின் முகவர்கள் அதைவிட மேலான கட்டுப்பாடுகள் விதிப்பார்கள். முடிந்தால் முதலில் உங்கள் முதலீட்டை ஆரம்பியுங்கள். தன் சொந்த காணியை மீட்க வந்தவர் உயிரோடு திரும்பவில்லை. முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் பல முயற்சிகள் செய்து களைத்தவர். தனக்கு வேண்டும்போது வெற்றிலை வைத்து அழைக்கும் அதே சிங்களம், நாங்கள் முன்னேற தொடங்கியதும் விரட்டியடிக்கும். ஒவ்வொருவரும் விடும் அறிக்கை விளங்குதோ என்னோ?  உங்களுக்கு தெரியுமோ என்னோ சில வருடங்களுக்கு முன் வெளிநாடுகளில் பிரஜா உரிமை பெற்றவர்கள் வடக்கிற்கு பயணிப்பதானால் பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பித்து விசேட அனுமதி பெறவேண்டும் என்று ஒரு சட்டம் இருந்தது. யூதர்களையும் நம்மளையும் உவமித்து பேசாதீர்கள் அவர்களின் கட்டமைப்பு, உணர்வு நம்மிடம் இல்லை. சுய லாபத்திற்காக கூப்பிட்டவர்களுக்கு நம் இனத்தை விற்று வயிறு வளக்கும் நாங்கள் எல்லாம் அவர்களோடு ஒப்பிட்டு பேசப்பட கூடியவர்களா?

44 minutes ago, Kapithan said:

இவர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்குக் காரணம் தங்களின் பிடியை அங்கு வைத்திருக்க வேண்டும் என்பதனலாகும். 

 தங்கள் பிடியை இலங்கையில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக எங்கள் உரிமையை நசுக்கி எங்களை கொன்று குவித்து எங்களை அகதிகளாக்கி விட்டு தங்கள் நினைவேந்தல்களையும், விழாக்களையும் நடத்துபவர்கள் வெளிநாட்டுத்தமிழராக உங்களை முதலிட அனுமதிப்பார்களா? அவர்களுக்காக வேலைசெய்யும் முகவர்தான் விட்டுவிடுவார்களா? அப்படியென்றால் ஏன் எங்கள் போராட்டம் துடைத்தெறியப்பட்டது? இப்போதும் புலி வருகுது என்று மாறி மாறி இந்தியாவும் இலங்கையும் நாடகம் நடத்துவது ஏன்? நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்க தமிழரை பகடைக்காய்களாகவோ, பணயக்கைதிகளாகவோ பாவிக்குமே தவிர ஒருபோதும் தமிழரை உயரவிடாது சிங்களம்.

54 minutes ago, Kapithan said:

புலம்பெயர் நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளவர்களைக் குறிக்கும். இன்னொரு நாட்டின் முதலீடுகளுக்கு பாதுகாப்பு அதிகம். 

கனடாவில் குடிஉரிமை பெற்றவர் ஒருவர் தன் காணியை இராணுவம் எடுத்ததால் கேட்டு வந்தார் உயிரோடு இல்லை. பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகளில் குடி உரிமை பெற்றவர்கள் சாகும் நிலையிலிருந்த உறவினர்களை கடைசியாக பாத்துவிட வேண்டும் என்று வந்து சிறையில் அடைக்கப்பட்டவர் பலர், சிலர் சிறையிலேயே இறந்தனர் அந்த அரசுகள் என்ன செய்தன? நாட்டில் இருக்க பாதுகாப்பில்லை என்று வெளியேறிவிட்டு முதலிட வந்து மாடுப்பட்டால் அந்த நாடுகள் என்ன செய்ய முடியும்? உயிருக்கே உத்தரவாதம் இல்லை முதலீடுகளுக்கு பாதுகாப்பு வருமா?
           
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, satan said:

1) பெருமாளுக்கு எழுதிய கருத்திற்கு நீங்கள் பதில் அளித்துள்ளீர்கள். நன்றி 🙏

2) நீங்கள் என்னை எப்படிப் பார்க்கிறீர்கள்? 😀

3) தமிழரின் பிடியை இலங்கையில், குறிப்பாக  வடக்கு கிழக்கில் வைத்திருப்பதற்கு உங்கள் யோசனை என்ன? 

(பெருமாளும் சாத்தான் அவர்களும் வேறு இருவர் என்பது என் நம்பிக்கை. அது பொய்யில்லைத்தானே  😉)

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

இதற்கு அப்பால் யோசிக்கவே மாட்டீர்களா ? 

இந்தியனும் சீனனும் இலங்கையில் முதலிடுவது இலாபம் பார்ப்பதற்கு மட்டுமா? இலாபம் மட்டுமே காரணமென்றால் இலங்கையைவிட வேறு நாடுகளில், குறிப்பாக , ஆபிரிக்க நாடுகளில் முதலீடு செய்தால் அதிகம் கிடைக்குமே.

இவர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்குக் காரணம் தங்களின் பிடியை அங்கு வைத்திருக்க வேண்டும் என்பதனலாகும். 

நாங்களும் முதலீடு செய்தால் எங்களின் பிடி அங்கு இருக்கும் என்பதுதான் காரணம். இங்கே நாங்கள் என்று கூறுவது புலம்பெயர் நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளவர்களைக் குறிக்கும். இன்னொரு நாட்டின் முதலீடுகளுக்கு பாதுகாப்பு அதிகம். 

உதாரணமாக உங்கள் கனேடிய கம்பனி ஒன்றின் கிளையை அங்கு ஆரம்பித்தால் உங்களுக்கு இரட்டிப்பு இலாபம். 

(இலங்கைத் தமிழர்களாக யோசிக்காமல் கனேடியத் தமிழர்களாக யோசிக்க வேண்டும்)

(இப்போது என்னை எப்படிப் பார்க்கிறீர்கள் 😀)

On 10/10/2022 at 03:13, Kapithan said:

இன்னொரு பத்து வருடங்கள் போனால், நாம் கனடாவில்தான் தனிநாடு கோரவேண்டி ஏற்படும். 

முதலில் கனடாவில் சொறி லங்கா போல் தமிழருக்கு எதிராக இனத்துவேசம் அல்லது இரண்டாம்தர குடிமக்கள் போல் அங்குள்ள அரசு நடாத்துகின்றதா? இவ்வாறான எழுந்தமான கருத்துக்கள் எங்களை நாங்களே பயங்கரவாதிகள் என்று சொல்வது போலாகும் இணையங்களில் எதையும் எழுதும் கத்துக்குட்டிகள் போல்  உங்கள் கருத்துக்கள் . 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலச் சூழ்நிலையில் புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு இலங்கையின் சுற்றுலாத் துறையில் முதலிடுவது போல் முட்டாள் தனம் உலகில் வேறொன்றும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

1) பெருமாளுக்கு எழுதிய கருத்திற்கு நீங்கள் பதில் அளித்துள்ளீர்கள். நன்றி 🙏

2) நீங்கள் என்னை எப்படிப் பார்க்கிறீர்கள்? 😀

3) தமிழரின் பிடியை இலங்கையில், குறிப்பாக  வடக்கு கிழக்கில் வைத்திருப்பதற்கு உங்கள் யோசனை என்ன? 

(பெருமாளும் சாத்தான் அவர்களும் வேறு இருவர் என்பது என் நம்பிக்கை. அது பொய்யில்லைத்தானே  😉)

1...இங்கு யாழ் களத்தில் எழுதப்படும் கருத்துகளுக்கு எவரும் பதில் கருத்து எழுத முடியும்  

2...உங்களை எவரும் பார்ப்பதில்லை ஆனால் உங்கள் கருத்துகள் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது 

3...இனவிருத்தியில். ஈடுபாடுவதன். மூலம் அல்லது ஊக்குவிப்பதற்கு.  ஊக்கத்தொகை வழங்கல் 🤣

9 hours ago, satan said:

இப்போதும் நான் உங்களை அப்படித்தான் பார்க்கிறேன்!

நீங்கள் உங்களை எந்த நாட்டுத்தமிழராக வேண்டுமானாலும் யோசியுங்கள், ஆனால் இலங்கையில் நீங்கள் முதலிடும்போது புலம்பெயர் தமிழர் என்றே பதிவார்கள். பிரித்தானியா அமைச்சரிடம் சொன்னார்கள் நாங்கள் பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழருடன் வர்த்தக முதலீடுகளை செய்ய விரும்புகிறோம் என்று, ஏன் அந்த நாடு அங்குள்ள தமிழரை ஊக்குவிக்கவில்லை? அல்லது அங்குள்ள தமிழர் அந்தநாட்டு அரசின் அனுசரணையோடு தொடங்க ஆலோசிக்கவில்லை? சுமந்திரன் அறிக்கை விட்டார், புலம்பெயர் தமிழருடன் பேச்சுவார்த்தை செய்து அவர்களை முதலிட வைக்க தான் அனுசரணை வழங்கத் தயார் என்றார். ஆனால்.... யாரும் சிங்களத்தை நம்பி இறங்கத் தயாரில்லை. சும்மா அழைப்பார்கள் ஆனால் அதற்கு மேலால் கட்டுப்பாடுகள் வைப்பார்கள், அதைவிட வட கிழத்திலுள்ள  அரசின் முகவர்கள் அதைவிட மேலான கட்டுப்பாடுகள் விதிப்பார்கள். முடிந்தால் முதலில் உங்கள் முதலீட்டை ஆரம்பியுங்கள். தன் சொந்த காணியை மீட்க வந்தவர் உயிரோடு திரும்பவில்லை. முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் பல முயற்சிகள் செய்து களைத்தவர். தனக்கு வேண்டும்போது வெற்றிலை வைத்து அழைக்கும் அதே சிங்களம், நாங்கள் முன்னேற தொடங்கியதும் விரட்டியடிக்கும். ஒவ்வொருவரும் விடும் அறிக்கை விளங்குதோ என்னோ?  உங்களுக்கு தெரியுமோ என்னோ சில வருடங்களுக்கு முன் வெளிநாடுகளில் பிரஜா உரிமை பெற்றவர்கள் வடக்கிற்கு பயணிப்பதானால் பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பித்து விசேட அனுமதி பெறவேண்டும் என்று ஒரு சட்டம் இருந்தது. யூதர்களையும் நம்மளையும் உவமித்து பேசாதீர்கள் அவர்களின் கட்டமைப்பு, உணர்வு நம்மிடம் இல்லை. சுய லாபத்திற்காக கூப்பிட்டவர்களுக்கு நம் இனத்தை விற்று வயிறு வளக்கும் நாங்கள் எல்லாம் அவர்களோடு ஒப்பிட்டு பேசப்பட கூடியவர்களா?

 தங்கள் பிடியை இலங்கையில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக எங்கள் உரிமையை நசுக்கி எங்களை கொன்று குவித்து எங்களை அகதிகளாக்கி விட்டு தங்கள் நினைவேந்தல்களையும், விழாக்களையும் நடத்துபவர்கள் வெளிநாட்டுத்தமிழராக உங்களை முதலிட அனுமதிப்பார்களா? அவர்களுக்காக வேலைசெய்யும் முகவர்தான் விட்டுவிடுவார்களா? அப்படியென்றால் ஏன் எங்கள் போராட்டம் துடைத்தெறியப்பட்டது? இப்போதும் புலி வருகுது என்று மாறி மாறி இந்தியாவும் இலங்கையும் நாடகம் நடத்துவது ஏன்? நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்க தமிழரை பகடைக்காய்களாகவோ, பணயக்கைதிகளாகவோ பாவிக்குமே தவிர ஒருபோதும் தமிழரை உயரவிடாது சிங்களம்.

கனடாவில் குடிஉரிமை பெற்றவர் ஒருவர் தன் காணியை இராணுவம் எடுத்ததால் கேட்டு வந்தார் உயிரோடு இல்லை. பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகளில் குடி உரிமை பெற்றவர்கள் சாகும் நிலையிலிருந்த உறவினர்களை கடைசியாக பாத்துவிட வேண்டும் என்று வந்து சிறையில் அடைக்கப்பட்டவர் பலர், சிலர் சிறையிலேயே இறந்தனர் அந்த அரசுகள் என்ன செய்தன? நாட்டில் இருக்க பாதுகாப்பில்லை என்று வெளியேறிவிட்டு முதலிட வந்து மாடுப்பட்டால் அந்த நாடுகள் என்ன செய்ய முடியும்? உயிருக்கே உத்தரவாதம் இல்லை முதலீடுகளுக்கு பாதுகாப்பு வருமா?
           
பெருமாளின். இந்த கருத்தே எனது கருத்துகள் ஆகும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, MEERA said:

இன்றைய காலச் சூழ்நிலையில் புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு இலங்கையின் சுற்றுலாத் துறையில் முதலிடுவது போல் முட்டாள் தனம் உலகில் வேறொன்றும் இல்லை. 

சரியான கருத்து.👍🏼

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

முதலில் கனடாவில் சொறி லங்கா போல் தமிழருக்கு எதிராக இனத்துவேசம் அல்லது இரண்டாம்தர குடிமக்கள் போல் அங்குள்ள அரசு நடாத்துகின்றதா? இவ்வாறான எழுந்தமான கருத்துக்கள் எங்களை நாங்களே பயங்கரவாதிகள் என்று சொல்வது போலாகும் இணையங்களில் எதையும் எழுதும் கத்துக்குட்டிகள் போல்  உங்கள் கருத்துக்கள் . 

🤦🏼‍♂️.....எல்லாவற்றையும் குழந்தைக்குச் சொல்வதுபோல சொல்லவேண்டி இருக்கிறது..ஸ்...... முடியல.....

""கனடாவில்தான் தனிநாடு கோரவேண்டி ஏற்படும் என்று கூறியது, இலங்கையில் எங்கள் எண்ணிக்கை குறைவடைந்துகொண்டு செல்கிறது. கனடாவில் அதிகரிக்கின்றது  என்பதைக் காட்டுவதற்காக."

இலங்கையில் எப்படி எங்கள் பிடியை வைத்திருக்கலாம் என உங்கள் உத்தியைக் கூறவில்லையே பெருமாள்..? என்ன செய்யலாம்? 

46 minutes ago, Kandiah57 said:

1...இங்கு யாழ் களத்தில் எழுதப்படும் கருத்துகளுக்கு எவரும் பதில் கருத்து எழுத முடியும்  

2...உங்களை எவரும் பார்ப்பதில்லை ஆனால் உங்கள் கருத்துகள் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது 

3...இனவிருத்தியில். ஈடுபாடுவதன். மூலம் அல்லது ஊக்குவிப்பதற்கு.  ஊக்கத்தொகை வழங்கல் 🤣

பெருமாளின். இந்த கருத்தே எனது கருத்துகள் ஆகும் 

1)  நன்றி கூறியுள்ளேன் கவனிக்கவும். 

2)

3) குசா வைத்தான் கூப்பிட வேண்டும்..... .ஆலோசனைக்கு 😀(வல்வெட்டித்துறையில் அப்படி ஒரு முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. 😉)

56 minutes ago, MEERA said:

இன்றைய காலச் சூழ்நிலையில் புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு இலங்கையின் சுற்றுலாத் துறையில் முதலிடுவது போல் முட்டாள் தனம் உலகில் வேறொன்றும் இல்லை. 

அப்படியென்றால், 

எங்கள் பிடியை வைத்திருக்க, (சுற்றுலா தவிர்ந்த பிற துறைகளில்) முதலீடு செய்ய வேண்டும் எனும் கருத்தைச் ஏற்றுக்கொள்கிறீர்கள் எஎனக் கொள்ளலாமா ? . 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும்,

இலங்கையில் எங்கள் இருப்பைப் பலப்படுத்த என்ன செய்யலாம்  எனும் கேள்விக்கு பதிலளிப்பதைத் தவிர்த்திவிட்டு மிகுதி எல்லாவற்றிற்கும் பதிலளிக்கிறீர்கள்..? 

☹️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.