Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்காலம், இனி இந்தியாவுக்கானது" - அதிபர் புதின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வருடாந்தர வால்டாய் டிஸ்கஷன் கிளப்பில் சர்வதேச வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், "பிரதமர் மோடி இந்திய நாட்டின் தேசபக்தர். அவரது 'மேக் இன் இந்தியா' யோசனை பொருளாதாரரீதியாக முக்கியமானது. அவர் தலைமையில் நிறைய முன்னேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. எதிர்காலம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்குச் சொந்தமானது.

புதின்
 
புதின்

மற்றவர்கள் இந்திய நாட்டின் மீதான எந்தவொரு தடையையோ அல்லது கட்டுப்படுத்துதலையோ விதிக்க முயன்றாலும், தனது தேசத்தின் நலனுக்காக சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை மேற்கொள்ளும் திறன்கொண்டவர்களில் மோடியும் ஒருவர். பிரிட்டிஷ் காலனியாக இருந்து, நவீன நாடாக இந்தியாவின் வளர்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. கிட்டத்தட்ட 1.5 பில்லியன் மக்களின் உறுதியான வளர்ச்சி முடிவுகள், இந்தியா மீதான அனைவரின் மரியாதைக்கும் அபிமானத்துக்கும் காரணமாகும்.

இந்தியாவுடன் எங்களுக்கு பல தசாப்தங்களாக இருக்கும் நெருங்கிய நட்புறவால் பிணைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் ஒருபோதும் கடினமான பிரச்னைகளுக்கு ஆதரவளித்ததில்லை. எதிர்காலத்திலும் இதுவே தொடரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்திய விவசாயத்துக்கு மிகவும் முக்கியமான உரங்களின் விநியோகத்தை அதிகரிக்குமாறு, பிரதமர் மோடி என்னிடம் கேட்டுக்கொண்டார். அதனால் நாங்கள் உரம் உற்பத்தி அளவை 7.6 மடங்கு அதிகரித்திருக்கிறோம். அதனால், விவசாய வர்த்தகம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்திருக்கிறது.

மோடி, புதின்
 
மோடி, புதின்

இந்தியாவுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. மேலும், உலகளாவிய விவகாரங்களில் அதன் பங்கு முக்கியமானது என்று நான் நம்புகிறேன். உக்ரைன் மீதான அணு ஆயுதத் தாக்குதல் என்ற எச்சரிக்கையின் மூலம் ரஷ்யா எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதைக் காட்ட விரும்பினோம். மற்றபடி அணு ஆயுதங்களால் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவது அர்த்தமற்றது. அதற்கான தேவை இல்லை என்று எங்களுக்குத் தெரியும். அத்தகைய தாக்குதலில் எந்த அர்த்தமும் இல்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யா: ``மோடி இந்திய நாட்டின் தேசபக்தர்; எதிர்காலம், இனி இந்தியாவுக்கானது" - அதிபர் புதின் | ‘Future belongs to India’: Russian President Putin praises PM Modi's governance (vikatan.com)

Edited by பிழம்பு

  • பிழம்பு changed the title to எதிர்காலம், இனி இந்தியாவுக்கானது" - அதிபர் புதின்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

பிரதமர் மோடி இந்திய நாட்டின் தேசபக்தர். அவரது 'மேக் இன் இந்தியா' யோசனை பொருளாதாரரீதியாக முக்கியமானது. அவர் தலைமையில் நிறைய முன்னேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. எதிர்காலம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்குச் சொந்தமானது.

🤣

மேற்குலகில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள் விழுந்து விழுந்து விழுந்து புரினை ஆதரித்தாலும் அவர் இவர்களை திரும்பி  பார்க்க கூட தயாராக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விளங்க நினைப்பவன் said:

🤣

மேற்குலகில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள் விழுந்து விழுந்து விழுந்து புரினை ஆதரித்தாலும் அவர் இவர்களை திரும்பி  பார்க்க கூட தயாராக இல்லை.

யூக்ரேனுக்கு சம்பல் அடி போடும் பிசியில் புட்டின் இருப்பதால் வேறு எதைப்பற்றியும் அவர் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. 🤣ஐரோப்பியர்களை விற்குகட்டைகளை பொறுக்கி வைக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.😜

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

🤣

மேற்குலகில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள் விழுந்து விழுந்து விழுந்து புரினை ஆதரித்தாலும் அவர் இவர்களை திரும்பி  பார்க்க கூட தயாராக இல்லை.

ஐயா உக்ரேனை மறந்து கனகாலமாச்சு போல.🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

🤣

மேற்குலகில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள் விழுந்து விழுந்து விழுந்து புரினை ஆதரித்தாலும் அவர் இவர்களை திரும்பி  பார்க்க கூட தயாராக இல்லை.

ஏன்  திரும்பி/திருப்பி பார்க்கோணும்? 😝

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகமும் அமெரிக்காவும் உக்ரைனில் ரஸ்யாவுடன் அடிபடுகுது. இரண்டு ஆடுகள் முட்டிமோதும்போது அவைகளில் நெற்றியிலிருந்து வழியும் குருதியை நக்கிச்சுவைக்க ஓநாய் இடையில்போய் இறுதியில் அவைகளின் அடிபாட்டுக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகியதைப்போல் இந்தியா எதிர்காலத்தில் வரும்.

இந்தியா சீனா ஆகியவையில் உற்பத்திகளை மேற்குலகமும் அமெரிக்காவுமே நுகர்கின்றன ஆனால் அவர்களது உற்பத்திக்கு இப்போ எரிவாயு தேவை காலப்போக்கில் ஏதோ ஒரு வழியில் ரஸ்யாவிடமிருந்து இவைகள் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ளும் காரணம் மிகப்பெரிய எரிவாயு வினியோக குளாயை கிழக்கு ஜேர்மனியுடன் ஒப்பந்தம் செய்து மேற்கு ஜேர்மனிதான் மத்திய ஐரோப்பாவுக்குக் கொண்டுவந்தது. அந்த ஒப்பந்தச் சரத்துகள் எந்தவித பாதிப்பும் இல்ல்லாது இருக்கின்றன

தவிர சீனாவினதும் இந்தியாவினதும் உற்பத்திக்கான நவீன தொழில்நுட்பங்களின் காப்புரிமைகள் எல்லாமே அமெரிக்கவிடமும் ஐரோப்பிய நாடுகளிலுமே இருக்கின்றன உதாரணமாக வெனிசுலாவில் பெற்றோலிய வளம் அபரிமிதமாக இருந்தாலும் அதை உறிஞ்சும் தொழில்நுட்பத்திலிருந்து பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் வரைக்கும் பிரித்தானியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சொந்தம் ஆனால் வெனிசுலா அவர்களுக்குக் கப்பம் கொடுக்க முடியாது என அடம்பிடிக்குது அதுதான் இந்த நிலைக்குக் காரணம்.

ஆகவே இந்தியா ஒரு காலத்தில் இந்தப் பொல்லாதவர்களிடம் அகப்பட்டு நாசமாகப் போகுது 

இப்போதும் இந்தியா ஒன்றும் பொருளாதாரத்தில் ஸ்திரமான நிலையில் இல்லை ஆனந் சிறீநிவாசன் அவர்களது உரைகளை செவிமடுத்தால் உண்மை விளங்கும் 

ஆனால் ஒன்று மட்டும் உண்மை இந்தியா ரஸ்யாவிடமிருந்து விவசாயத்துக்கான உரத்தை வாங்கி அதில் சிறிதை சொறி லங்காவுக்குப் பிச்சையாகப்போடும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, kalyani said:

யூக்ரேனுக்கு சம்பல் அடி போடும் பிசியில் புட்டின் இருப்பதால் வேறு எதைப்பற்றியும் அவர் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. 🤣ஐரோப்பியர்களை விற்குகட்டைகளை பொறுக்கி வைக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.😜

அவர் ஐரோப்பியர்களை மட்டுமா விறகு கட்டைகளை பொறுக்கி வைக்கும் படி செய்தார், தனக்காகவே மண் சுமந்தபடி மேற்குலக ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இலங்கை தமிழர்களையும் அல்லவா விறகு கட்டைகளை பொறுக்கி வைக்கும் படி செய்துவிட்டார் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2022 at 11:16, kalyani said:

யூக்ரேனுக்கு சம்பல் அடி போடும் பிசியில் புட்டின் இருப்பதால் வேறு எதைப்பற்றியும் அவர் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. 🤣ஐரோப்பியர்களை விற்குகட்டைகளை பொறுக்கி வைக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.😜

புட்டினை ஆதரிக்கும் பலர் மேற்குநாடுகளில் தான் வசிக்கிறார்கள், அந்த நாடுகளின் வசதி வாழ்க்கையை வாழ்கிறார்கள். இவர்களை இரஸ்ஸியாவல் வசிக்கவிட்டால் தான் அவர்களிக்கு விளங்கும் 

Edited by ragaa

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ragaa said:

புட்டினை ஆதரிக்கும் பலர் மேற்குநாடுகளில் தான் வசிக்கிறார்கள், அந்த நாடுகளின் வசதி வாழ்க்கையை வாழ்கிறார்கள். இவர்களை இரஸ்ஸியாவல் வசிக்கவிட்டால் தான் அவர்களிக்கு விளங்கும் 

மேற்குலகில் வசிப்பதால் வசதி வாய்ப்பிற்காக Morale ஐ இழக்க வேண்டும் என்கின்ற அவசியம் அல்ல. 

ஆனால் எம்மகளில் பலர் வசதி வாய்ப்பிற்காக எதையும் செய்ய ஆயத்தம்.  "தங்கள்  சமயத்தைக் காக்க வேண்டும் என்று வாய்கிளியக் கத்திக்கொண்டு Catholic Schools ல் பிள்ளைகளைச் சேர்ப்பது போல.."

😉

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

மேற்குலகில் வசிப்பதால் Moral ஐ இழக்க வேண்டும் என்கின்ற அவசியம் அல்ல. 

Moral இருந்தால் ஏன் நீங்கள் வெறுக்கும் மேற்குலகில் வசிக்கிறீர்கள்? உங்கள் சொந்த ஊர், ்அல்லது உங்கள்  moral கைகாட்டும் நாட்டில் வசிக்கலாமே.. இந்த moral, Russia இலங்கயை ஐநா வில் veto பவித்து காப்பாற்றுகையில் எங்கே போனது.?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ragaa said:

Dollar இங்கல்லவா இருக்கிறது. 

Ruble ன் பெறுமதி அதிகரிக்கும்போது Socialism கதைத்தபடி ரஸ்யாவுக்கு குடிபெயர நானும் ரெடி..

நீங்கள் எப்படி..? 

😉

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

Dollar இங்கல்லவா இருக்கிறது. 

Ruble ன் பெறுமதி அதிகரிக்கும்போது Socialism கதைத்தபடி ரஸ்யாவுக்கு குடிபெயர நானும் ரெடி..

நீங்கள் எப்படி..? 

😉

நான் சந்தர்ப்பவாதியல்ல

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ragaa said:

நான் சந்தர்ப்பவாதியல்ல

நன்று நன்று. 👍

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எதிர் பாக்கிறோம்.😄

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ragaa said:

புட்டினை ஆதரிக்கும் பலர் மேற்குநாடுகளில் தான் வசிக்கிறார்கள், அந்த நாடுகளின் வசதி வாழ்க்கையை வாழ்கிறார்கள். இவர்களை இரஸ்ஸியாவல் வசிக்கவிட்டால் தான் அவர்களிக்கு விளங்கும் 

மேற்குநாடுகளில் அந்த நாடுகளின் சட்டங்களுக்களை மீறமால். மிகுந்த பயபக்தியோடு கடைப்பிடித்து வருகிறார்கள்   என்னென்றால்.  மீறினால் சிலசமயம் இலங்கைக்கு திருப்பி அனுப்பினாலும்  என்ற பயம் மட்டுமல்ல அங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றி. அந்த நாடுகளின் கொள்கைகளை அமுல்படுத்துகிறார்கள்.    ஒரு நாட்டினை தலைமையேற்று. இவர்களின் எண்ணம் போல் ஆட்சி செய்யட்டும். பார்ப்போம்...ரஷ்யாவின். நாணயம் அமெரிக்கா டொலரை விட கூடிய பெறுமதியை அடைந்தாலும்  இவர்கள் ரஷ்யாவில் வாழ்வதை எண்ணிப்பார்க்கவே முடியாது   காரணம் புட்டின்.  இவர்களுக்கு விசா...இருப்பிடம்...வேலைவாய்ப்பு ...சுகாதாரம்...கருத்து சுதந்திரம்..கல்வி.....என்பவற்றை ஒருபோதும் வழங்கப்போவதில்லை....🤣

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kandiah57 said:

ரஷ்யாவின். நாணயம் அமெரிக்கா டொலரை விட கூடிய பெறுமதியை அடைந்தாலும்  இவர்கள் ரஷ்யாவில் வாழ்வதை எண்ணிப்பார்க்கவே முடியாது   காரணம் புட்டின்.

கந்தையா அண்ணா, ராகா,
ரஷ்யா ஒரு உதாவாக்கரை நாடு என்பதும் புரின் போன்றவர்கள்  ஆட்சி செய்யும் வரை உருப்படாது என்பதும்  இவர்களுக்கு எங்களை விட நன்கு தெரியும். அதனால் அவர்கள் திட்மிட்டு மேற்குலக நாடுகளுக்கு குடியேறினார்கள்.அங்குள்ள வசதிகளை சுதந்திரங்களை அனுபவித்தபடி அங்கிருந்தபடியே ரஷ்யாவிற்காக  கொடுங்கோலனுக்காக பிரசாரம் செய்கின்ற போது, இலங்கையுடன் உறுதியாக நிற்கின்ற  ரஷ்யாவை ஆதரிக்கின்ற போது, ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பை ஆதரிக்கின்ற போது  அவர்களின் Moral காணாமல் போய்விட்டது.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2022 at 17:28, விளங்க நினைப்பவன் said:

அவர் ஐரோப்பியர்களை மட்டுமா விறகு கட்டைகளை பொறுக்கி வைக்கும் படி செய்தார், தனக்காகவே மண் சுமந்தபடி மேற்குலக ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இலங்கை தமிழர்களையும் அல்லவா விறகு கட்டைகளை பொறுக்கி வைக்கும் படி செய்துவிட்டார் 🤣

ஐரோப்பிய ஒன்றியம் என்று சொல்லி ரஸ்யாவுக்கு பல தடைகளை போட்டீர்கள். அதில் எண்ணை தடையும் ஒன்று. இப்போ ஆளாளுக்கு பின் கதவாலும், கறுப்பு சந்தையிலும் எண்ணையை  வாங்குகிறீர்கள். என்ன மனிசரய்யா ஐரோப்பியர்கள்??🤣

On 29/10/2022 at 20:24, ragaa said:

புட்டினை ஆதரிக்கும் பலர் மேற்குநாடுகளில் தான் வசிக்கிறார்கள், அந்த நாடுகளின் வசதி வாழ்க்கையை வாழ்கிறார்கள். இவர்களை இரஸ்ஸியாவல் வசிக்கவிட்டால் தான் அவர்களிக்கு விளங்கும் 

எம்மவர் பலர் ரஸ்யாவில் படித்து விட்டு தான் சிறிலங்காவில் டாக்டர் வேலை பார்க்கிறார்கள். உங்களுக்கு தெரியாவிட்டால் அது உலகுக்கு தெரியாது என்று அல்ல.

On 30/10/2022 at 01:11, Kandiah57 said:

மேற்குநாடுகளில் அந்த நாடுகளின் சட்டங்களுக்களை மீறமால். மிகுந்த பயபக்தியோடு கடைப்பிடித்து வருகிறார்கள்   என்னென்றால்.  மீறினால் சிலசமயம் இலங்கைக்கு திருப்பி அனுப்பினாலும்  என்ற பயம் மட்டுமல்ல அங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றி. அந்த நாடுகளின் கொள்கைகளை அமுல்படுத்துகிறார்கள்.    ஒரு நாட்டினை தலைமையேற்று. இவர்களின் எண்ணம் போல் ஆட்சி செய்யட்டும். பார்ப்போம்...ரஷ்யாவின். நாணயம் அமெரிக்கா டொலரை விட கூடிய பெறுமதியை அடைந்தாலும்  இவர்கள் ரஷ்யாவில் வாழ்வதை எண்ணிப்பார்க்கவே முடியாது   காரணம் புட்டின்.  இவர்களுக்கு விசா...இருப்பிடம்...வேலைவாய்ப்பு ...சுகாதாரம்...கருத்து சுதந்திரம்..கல்வி.....என்பவற்றை ஒருபோதும் வழங்கப்போவதில்லை....🤣

உங்களுக்கும் சேர்த்து தான். ரஸ்யாவில் எம்மவர் பலர் படிக்கிறார்கள். படித்து முடித்தவர்கள் சிறிலங்காவில் வேலை(டாக்டர்) செய்கிறார்கள். யாழ் பெரியாஸ்பத்தியின் முதன்மை சத்திரசிகிச்சை நிபுணர் ரஸ்யாவில் படித்தவர்.

உங்களிடம் ஒரு கேள்வி
அமெரிக்காவை சுற்றி உள்ள நாடுகளில் அல்லது ஐரோப்பாவை சுற்றி ரஸ்யா தனது படை முகாம்களை அமைத்தால் இவர்களின் எதிர்வினை எப்படி இருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
On 30/10/2022 at 20:35, விளங்க நினைப்பவன் said:

கந்தையா அண்ணா, ராகா,
ரஷ்யா ஒரு உதாவாக்கரை நாடு என்பதும் புரின் போன்றவர்கள்  ஆட்சி செய்யும் வரை உருப்படாது என்பதும்  இவர்களுக்கு எங்களை விட நன்கு தெரியும். அதனால் அவர்கள் திட்மிட்டு மேற்குலக நாடுகளுக்கு குடியேறினார்கள்.அங்குள்ள வசதிகளை சுதந்திரங்களை அனுபவித்தபடி அங்கிருந்தபடியே ரஷ்யாவிற்காக  கொடுங்கோலனுக்காக பிரசாரம் செய்கின்ற போது, இலங்கையுடன் உறுதியாக நிற்கின்ற  ரஷ்யாவை ஆதரிக்கின்ற போது, ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பை ஆதரிக்கின்ற போது  அவர்களின் Moral காணாமல் போய்விட்டது.

இங்கை பார்ரா ஐரோப்பியரும், அமெரிக்கரும் MORAL பற்றி கதைக்கினம். ஆபிரிக்காவை  குட்டிச்சுவர் ஆக்கியது புட்டினா இல்லை இந்த நேட்டோவில் உள்ள நாடுகளா?
ஈராக்கை பிச்சைக்காரர் ஆக்கியது யார்?

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா அதி மதிநுட்ப புட்டின் அவர்களின் 20 வருடங்களுக்கு மேலான  ஆட்சியின் பின்..

எதிர்காலம், இனி இந்தியாவுக்கானது" - அதிபர் புதின்

எப்படி இருந்த  ரசியா..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.