Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பெண் முறைப்பாடு : இலங்கை கிரிக்கெட் வீரர் சிட்னியில் கைது

06 NOV, 2022 | 07:04 AM
image

இலங்கை கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வைத்து நேற்று சனிக்கிழமை (5) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டையடுத்தே தனுஷ்க குணதிலக்க கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் தனுஷ்க குணதிலக்க பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி நேற்றையதினம் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று காலை நாடு திரும்புகின்றது.

இந்நிலையில் தனுஷ்க குணதிலக்க அணியில் இல்லாத நிலையிலேயே இலங்கை அணி நாடு திரும்புகின்றது.

இருப்பினும் தனுஷ்க குணதிலக்க கடந்த மூன்று வாரங்களுக்கு முன் உபாதைக்குள்ளான நிலையில், அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அஷேன் பண்டார இணைத்துக்கொள்ளப்பட்டார். ஆனால் அணி நிர்வாகம் அவரை அவுஸ்திரேலியாவில் இருந்து நாட்டுக்கு திருப்பி அனுப்பாது அணியுடன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/139225

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பிக்குகள், இராணுவம், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் என்று…
அனைத்து சிங்களவனும்… காமப் பசியுடன் திரிகிறார்கள்.

விளையாடப் போன இடத்தில்… மரியாதையை காப்பாற்றுவதற்காகவது 
வாலை… சுருட்டி வைத்துக் கொண்டு இருந்திருக்கலாம்.

ஆனால்… நாட்டில் செய்த குணத்தை, வெளி நாட்டிலும் செய்து தப்பிக்கலாம் என்று
இந்தச் சிங்களவன் நினைத்து.. மாட்டுப் பட்டுப் போனான்.

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@பையன்26  இந்த தனுஷ்க குணதிலக்க என்ற  விளையாட்டு வீரர் 
வேறு விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவர் போல் தெரிகிறது. 😁
இப்போ… அவர் அவுஸ்திரேலியாவில் 💩 களி தின்னுகிறாராம். 😂
மற்ற விளையாட்டு வீரர்கள்… நாட்டுக்கு, திரும்பிக் ✈️ கொண்டு இருக்கின்றார்களாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, தமிழ் சிறி said:

@பையன்26  இந்த தனுஷ்க குணதிலக்க என்ற  விளையாட்டு வீரர் 
வேறு விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவர் போல் தெரிகிறது. 😁
இப்போ… அவர் அவுஸ்திரேலியாவில் 💩 களி தின்னுகிறாராம். 😂
மற்ற விளையாட்டு வீரர்கள்… நாட்டுக்கு, திரும்பிக் ✈️ கொண்டு இருக்கின்றார்களாம். 🤣

இவ‌ர் ஒரு சில‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் இங்லாந்தில் குழ‌ப்ப‌டி செய்த‌வ‌ர்
இப‌ருக்கும் ம‌ற்றும் இரு வீர‌ர்க‌ளுக்கும் ஒரு வ‌ருட‌ த‌டை விதிச்ச‌வை

இவ‌ரின் விளையாட்டு ஆசிய‌ கோப்பையில் இருந்து உல‌க‌ கோப்பை வ‌ரை 000 இப்ப‌டி தான் மைதான‌த்துக்கை வ‌ருவ‌தும் உட‌ன‌ வெளியில் போவ‌து , அது தான் மீத‌ம் உள்ள‌ உல‌க‌ கோப்பை விளையாட்டில் இவ‌ருக்கு விளையாடும் வாய்ப்பு ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து

இவ‌ன் ஒழுக்க‌ம் இல்லாத‌வ‌ன் அண்ணா , பெண்க‌ளுட‌ன் உல்லாச‌மாய் இருப்பது புகை பிடிப்ப‌து இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம்

போதை பொருட்க‌ள் இவ‌ன் பாவிக்கிற‌வ‌ன் போல் தான் தெரியுது

Edited by பையன்26
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை மறுப்பு

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை மறுப்பு

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, பிணை வழங்க அவுஸ்ரேலிய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுக்களின் கீழ், யுவதியொருவரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்க, சிட்னி சிட்டி பொலிஸாரினால் பெரமேட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்த நீதவான், தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வரும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டிக்காக இலங்கை அணியுடன் தனுஷ்க குணதிலக்க பயணித்தபோது காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார்.

எவ்வாறாயினும், அஷேன் பண்டார உத்தியோகபூர்வமாக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட போதிலும் தனுஷ்க குணதிலக்க தொடர்ந்தும் அணியுடன் இணைந்தே இருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1309142

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கைது - டேட்டிங் செயலியில் அறிமுகமானவருடன் முதல் சந்திப்பிலேயே அத்துமீறியதாக சர்ச்சை

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

தனுஷ்க குணதிலக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

தனுஷ்க குணதிலக்க, இலங்கை கிரிக்கெட் வீரர்

டி20 உலக கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, அந்த நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று அதிகாலையில் (நவம்பர் 6) ஆஸ்திரேலிய போலீஸார் கைது செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான தன்னிடம் முதலாவது சந்திப்பில் தன்னிடம் அத்துமீறி பாலியல் வல்லுறவில் தனுஷ்க ஈடுபட்டதாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்திடம் தோல்வியுற்ற இலங்கை போட்டியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறியது.

முன்னதாக, நவம்பர் 2ஆம் தேதி தன்னை ரோஸ் பேயிலிலுள்ள வீடொன்றில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த தனுஷ்க குணதிலக்க முயற்சித்துள்ளதாக சம்பந்தப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

 

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நியூ செளத் வேல்ஸ் காவல்துறை, இலங்கை நாட்டவர் ஒருவரை கைது செய்துள்ளதாக அதன் இணையதளத்தில் கூறியுள்ளது. ஆனால், அதில் கைதான இலங்கையரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

"கடந்த வாரம் சிட்னியின் கிழக்கில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் விசாரணையைத் தொடர்ந்து பாலியல் குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவினர் இலங்கைப் பிரஜை ஒருவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை 5 நவம்பர் 2022), 29 வயதான பெண் ஒருவர் ரோஸ் பேயில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வந்த புகாரைத் தொடர்ந்து, மாநில குற்றப்பிரிவின் பாலியல் குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு புறநகர் போலீஸ் ஆகியவற்றின் துப்பறியும் அதிகாரிகள் கீழ் கூட்டு விசாரணையைத் தொடங்கினர்," என்று அதில் கூறப்பட்டுள்ளது.

"ஆன்லைன் டேட்டிங் விண்ணப்பம் மூலம் பல நாட்களாக சம்பந்தப்பட்ட பெண்ணுடன் அந்த நபர் தொடர்பு கொண்டுள்ளார். பிறகு அந்தப் பெண் அவரைச் சந்தித்தார்; நவம்பர் 2ஆம் தேதி புதன்கிழமை மாலையில் அவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, நேற்று ரோஸ் பேவில் உள்ள முகவரியில் குற்றச் சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை 6 நவம்பர் 2022) அதிகாலை 1 மணிக்கு முன்னதாக சிட்னி, சஸ்ஸெக்ஸ் தெருவில் உள்ள விடுதியில் இருந்த 31 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சிட்னி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் மீது பெண்ணின் அனுமதியின்றி அவருடன் உறவு கொண்டதாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அந்த இலங்கை பிரஜை இன்று பரமட்டா பிணை நீதிமன்றத்தில் ஆஜராக ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது," என்று காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 அணியில் தனுஷ்க குணதிலக்க வந்தது எப்படி?

 

இலங்கை

பட மூலாதாரம்,DHANUSHKA GUNATHILAKA TWITTER

 

படக்குறிப்பு,

தனுஷ்க குணதிலக்க, இலங்கை கிரிக்கெட் வீரர்

டி20 உலக கோப்பை போட்டிக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த தனுஷ்க குணதிலக்க, முதல் சுற்றுப் போட்டிகளின் போது உடல் உபாதைக்கு ஆளானார். இதனால் அவருக்குப் பதிலாக அசான் பண்டார, இலங்கை கிரிக்கெட் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலேயே தனுஷ்க தங்கியுள்ளார்.

இந்த நிலையிலேயே, தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச அரங்கில் அறிமுகமான தனுஷ்க குணதிலக்க, இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, 8 டெஸ்ட் போட்டிகளிலும், 47 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், 46 இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்திருந்தது.

இவ்வாறு தோல்வியை தழுவிய இலங்கை அணி இன்றைய தினம் தாயகத்துக்கு வந்தடையவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ்க குணதிலக்க தவிர்ந்த, ஏனைய அனைத்து வீரர்களும் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளனர்.

இலங்கை அணி என்ன சொல்கிறது?

 

இந்திய கிரிக்கெட் கவுன்சில்

பட மூலாதாரம்,SLC

இந்த நிலையில், தனுஷ்க குணதிலக்க கைதான தகவலை இலங்கை அணியிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முறைப்படி உறுதிப்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் கைதான தனுஷ்க குணதிலக்க நவம்பர் 7ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் ஐசிசியுடன் ஆலோசனை நடத்தி நீதிமன்ற நடைமுறைகளை மிகவும் நெருக்கமாக கவனித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

விரிவாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வீரர் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/sport-63532101

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாலியல் குற்றச்சாட்டில் கைதான தனுஷ்கவின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை - இலங்கை கிரிக்கெட்

06 NOV, 2022 | 10:33 AM
image

பாலியல் குற்றச்சாட்டில் கைதான இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக்கவின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுடையான நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில்  தனுஷ்க குணதிலக்க சிட்னியில் கைதுசெய்யப்பட்டள்ளதாகவும் இது தொடர்பில் நாளை திங்கட்கிழமை (7) நீதிமன்றில் குணதிலக்க ஆஜராக வேண்டுமெனவும் சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, நீதிமன்ற நடவடிக்கைகளை சர்வதேச கிரிக்கெட் சபை உன்னிப்பாக கண்காணிக்கும் எனவும்  ஐ.சி.சி.யுடன்  கலந்தாலோசித்து இது குறித்த விரிவான விசாரணைகளை மேற்கொண்டு தனுஷ்க குணதிலக்கவின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/139232

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

@பையன்26  இந்த தனுஷ்க குணதிலக்க என்ற  விளையாட்டு வீரர் 
வேறு விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவர் போல் தெரிகிறது. 😁
இப்போ… அவர் அவுஸ்திரேலியாவில் 💩 களி தின்னுகிறாராம். 😂
மற்ற விளையாட்டு வீரர்கள்… நாட்டுக்கு, திரும்பிக் ✈️ கொண்டு இருக்கின்றார்களாம். 🤣

 

இவ‌ன் ஒரு காம‌ வெறிய‌ன்
விளையாட்டில் ஆர்வ‌ம் காட்டாம‌ கேடு கெட்ட‌ செய‌ல்க‌ளுக்கு நேர‌த்தை ஒதுக்கி கெட்ட‌ பெய‌ர் வாங்கிறான்

பின் குறிப்பு இதில் சொல்வ‌ப‌ர் இல‌ங்கை கிரிக்கேட் வாரிய‌த்தோடு சேர்ந்து செய‌ல் ப‌டுவ‌வ‌ர் , ஆன‌ ப‌டியால் இவ‌ர் சொல்லுவ‌து அனைத்தும் உண்மை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பையன்26 said:

இவ‌ர் ஒரு சில‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் இங்லாந்தில் குழ‌ப்ப‌டி செய்த‌வ‌ர்
இப‌ருக்கும் ம‌ற்றும் இரு வீர‌ர்க‌ளுக்கும் ஒரு வ‌ருட‌ த‌டை விதிச்ச‌வை

இவ‌ரின் விளையாட்டு ஆசிய‌ கோப்பையில் இருந்து உல‌க‌ கோப்பை வ‌ரை 000 இப்ப‌டி தான் மைதான‌த்துக்கை வ‌ருவ‌தும் உட‌ன‌ வெளியில் போவ‌து , அது தான் மீத‌ம் உள்ள‌ உல‌க‌ கோப்பை விளையாட்டில் இவ‌ருக்கு விளையாடும் வாய்ப்பு ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து

இவ‌ன் ஒழுக்க‌ம் இல்லாத‌வ‌ன் அண்ணா , பெண்க‌ளுட‌ன் உல்லாச‌மாய் இருப்பது புகை பிடிப்ப‌து இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம்

போதை பொருட்க‌ள் இவ‌ன் பாவிக்கிற‌வ‌ன் போல் தான் தெரியுது

என்ன வெளிநாட்டில் துணிவுள்ள பெண் என்றபடியால் இந்தவிடயம் வெளியில் வந்துள்ளது. எத்தனை தமிழ்ப் பெண்கள் சிறிலங்காவின் சிங்களப்படைகளால் சீரழிக்கப்பட்டு கொன்றொழிக்கப்பட்டுவிட்டார்கள்.  ஏற்கெனவே 10க்கு மேற்பட்டு சிங்களப் படைப்பிரிவுகளோடு இப்போது இந்த விளையாட்டுப் படையும் இணைந்துள்ளது. 
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be a meme of 2 people and text that says 'Ausவல எல்லோரும் Cup அடிக்க போராடிட்டு இருந்தப்போ காமதிலக்க MEME SIYA SIYA ஒருத்தன் மட்டும் பாவாடையை கழட்டுறதுக்கு போராடிட்டு இருந்தான்'

 

May be an image of 2 people, people standing and text

நீ australia போனது இதுக்குத்தானே...😂 😂  

Deva T Jayanthan

#############   ##############

 

தனுஷ்க குணதிலக்க குற்றவாளியாக அடையாளம் காணப்படும் பட்சத்தில், 
14 வருடங்கள் வரை அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்....

MJ M Waleedh

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பையன்26 said:

 

இவ‌ன் ஒரு காம‌ வெறிய‌ன்
விளையாட்டில் ஆர்வ‌ம் காட்டாம‌ கேடு கெட்ட‌ செய‌ல்க‌ளுக்கு நேர‌த்தை ஒதுக்கி கெட்ட‌ பெய‌ர் வாங்கிறான்

பின் குறிப்பு இதில் சொல்வ‌ப‌ர் இல‌ங்கை கிரிக்கேட் வாரிய‌த்தோடு சேர்ந்து செய‌ல் ப‌டுவ‌வ‌ர் , ஆன‌ ப‌டியால் இவ‌ர் சொல்லுவ‌து அனைத்தும் உண்மை 

சிங்களவர்கள் என்றவுடன் கிரிக்கெட் போட்டிகளை காண கேட்டுக்கேள்வி இல்லாமல் விசாக் கொடுக்கும் கொழும்பு அவுஸ்திரேலிய தூதரகம் இருக்கே.. அது தான் இதற்கு வெட்கப்படனும். தமிழர்களுக்கு விசாக் கொடுப்பதில்லை.. போனால் வரமாட்டங்கன்னு. ஆனால் சிங்களவர்கள் இப்படிப் போய் தான் அவுஸில் செற்றிலானது அதிகம்.

இவருக்கு தெரிந்திருக்கும் இலங்கை அணி வெல்லவே போறதில்லை.. தான் இப்படிக் கலக்கிடுவம்.. என்று.. டேட்டிங் அப்பிலேயே கிடையாய் கிடந்திருக்கிறார். 😅

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Danushka Gunathilaka: Sri Lanka batter charged with sexual assault at T20 World Cup

Last updated on1 minute ago1 minute ago.From the sectionCricket

Danushka Gunathilaka Gunathilaka has played eight Tests, 47 one-day internationals and 46 Twenty20s for Sri Lanka

Sri Lanka batter Danushka Gunathilaka has been charged in relation to an alleged sexual assault while at the T20 World Cup in Australia.

He has been charged with four counts of sexual intercourse without consent and denied bail at a Sydney court.

Gunathilaka, 31, was arrested shortly before 01:00 local time on Sunday morning at the team hotel.

It is alleged he sexually assaulted a 29-year-old woman on Wednesday, 2 November.

The arrest came hours after Sri Lanka's final game of the World Cup - a four-wicket defeat by England on Saturday.

Gunathilaka was ruled out of the tournament with injury on 20 October but had remained with the squad in Australia.

New South Wales police say he met with the woman after communicating for a number of days on a dating app.

A Sri Lanka Cricket statement said: "Sri Lanka Cricket confirms that it was notified by the ICC [International Cricket Council] that player Danushka Gunathilaka has been arrested on the allegations of sexual assault of a woman in Sydney, and Mr Gunathilaka is due to appear in court tomorrow (7 November).

"SLC will closely monitor the proceedings in court and, in consultation with the ICC, will expeditiously initiate a thorough inquiry into the matter and take stern action against the player if found guilty."

https://www.bbc.co.uk/sport/cricket/63532143

Posted

இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னியில் கைது

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனுமதியின்றி உடலுறவு கொண்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமூகவலைத்தளம் ஊடாக தனக்கு அறிமுகமான 29 வயது பெண் ஒருவரையே, அவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இந்த வார தொடக்கத்தில் சிட்னியில் உள்ள குடியிருப்பொன்றில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது .
“கடந்த வாரம் சிட்னியின் கிழக்கில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இன்று அதிகாலை 1 மணியளவில் தனுஷ்க குணதிலக்க(31), சசெக்ஸ் ஸ்ட்ரீட் விடுதியில் வைத்து கைது செய்யப்படுள்ளார் . கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, பிராந்திய குற்றப்பிரிவின் பாலியல் குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு புறநகர் காவல்துறையினர் கூட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். அவர் இன்று (6) அந்நாட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், உலகக்கிண்ணத் தொடரில் அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்த இலங்கை அணி தனுஷ்க குணதிலக்க இல்லாமலேயே அவுஸ்திரேலியாவிருந்து கொழும்புக்கு புறப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த தனுஷ்க குணதிலக்க கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் உபாதை காரணமாக தொடரிலிருந்து விலகியிருந்தார். அவருக்கு பதிலாக அஷேன் பண்டார அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். எனினும், தனுஷ்க குணதிலக்கவை மீண்டும் நாட்டுக்கு அனுப்பாமல் அவரை கிரிக்கெட் அணி நிர்வாகம், தம்முடனேயே வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது. இதேவேளை, கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷ்க குணதிலக்க இதேபோன்றதொரு குற்றச்சாட்டுக்கு உள்ளானார். இலங்கையில் நோர்வே பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் தனுஷ்கவையும் அவரது நண்பர் ஒருவரையும் பொலிஸார் விசாரித்தனர். எனினும், அவரது நண்பர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதுடன் குறித்த சம்பவத்துடன் தனுஷ்கவுக்கு சம்பவத்துடன் தொடர்பு இல்லை என்று விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

May be a meme of 2 people and text that says 'Ausவல எல்லோரும் Cup அடிக்க போராடிட்டு இருந்தப்போ காமதிலக்க MEME SIYA SIYA ஒருத்தன் மட்டும் பாவாடையை கழட்டுறதுக்கு போராடிட்டு இருந்தான்'

 

May be an image of 2 people, people standing and text

நீ australia போனது இதுக்குத்தானே...😂 😂  

Deva T Jayanthan

#############   ##############

 

தனுஷ்க குணதிலக்க குற்றவாளியாக அடையாளம் காணப்படும் பட்சத்தில், 
14 வருடங்கள் வரை அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்....

MJ M Waleedh

அவனவனுக்கு எதில் கெட்டித்தனமுள்ளதோ அதில் தானே முயற்சி பண்ணணும்.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விளையாட்டில் வென்று பேரெடுப்பது ஒரு வகை கெளரவம் . இப்படி பேரைக்கெடுப்பது இன்னொரு ரகம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an illustration of text

 

 

May be a cartoon of standing

2022´ல்... இதைத்தான் தூக்க முடிந்தது.  🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை மறுப்பு

அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனுஷ்க குணதிலக்க இடைநீக்கம்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவை, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையினால் இன்று(திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் யுவதியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தனுஷ்க குணதிலக்க நேற்று அதிகாலை அந்த நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை வழங்க அந்த நாட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக குழு அவசரமாக கூடி, குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1309283

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குற்றச்சாட்டை மறுக்கும் தனுஷ்க : அவுஸ்திரேலிய சிறையிலடைக்கப்பட்டார் !

07 NOV, 2022 | 07:53 PM
image

 

பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டை இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள சில்வவோட்டர் ( Silverwater ) சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனுஷ்கவின் வெளிநாட்டு கடவுச்சீட்டை அவுஸ்திரேலிய பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் 10 முதல் 12 மாதங்கள் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் நீளும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

சிட்னி கிழக்கு ரோஸ் பே பகுதியைச் சேர்ந்த 29 வயதான பெண்ணொருவரால் தனுஷ்க பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பேரில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சனிக்கிழமை (06) அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட தனுஷ்க குணதிலக மீது பொலிஸாரால் 4 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (06) பொலிஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் 2 ஆவது முறையாக தனுஷ்க குணதிலக, சிட்னி பொலிஸாரால் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார்.

இதன்படி, டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற நீதவான் றொபர்ட் வில்லியம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தனுஷ்க சார்பில் சட்டத்தரணி ஆனந்த அமர்நாத் பிணை கோரியிருந்தார்.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் அண்மைக்காலமாக கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் வெளிநாட்டவர் என்பதால் தனுஷ்கவிற்கு பிணை வழங்க நீதவான் மறுத்துள்ளார்.

இந்நிலையில், தனுஷ்க 05 நாட்களுக்கு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இது தொடர்பில் உயர் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்யவுள்ளதாக தனுஷ்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ள நிலையில், தனுஷ்க குணதிலக சிட்னியில் உள்ள சில்வவோட்டர் ( Silverwater ) சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/139383

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of 5 people, people standing and indoor

 

May be an image of 9 people, people standing and text

கூச்சபடாம வாங்க, நமக்கென்ன புதுசா....  😅

 

May be an image of 5 people and text that says 'M /ShortnewsTV தனுஷ்க குணதிலக்க குற்றவாளியானால், 14 வருடம் சிறைத்தண்டனை News புடிச்சி நல்லா ஜெயில்ல போடுங்க சார் டக்கு டக்குனு அவுட் ஆகிட்டு எங்க ஓடினானு இப்பதான் புரியுது'

 

 

May be an illustration of one or more people

 

May be an illustration of text

 

 

May be a cartoon of text

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேலும் சில வீரர்களிற்கு எதிராக முறைப்பாடுகள்

By RAJEEBAN

08 NOV, 2022 | 01:54 PM
image

உலககிண்ண தொடருக்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணியின் மேலும் சில வீரர்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

srilanka_team.jpg

அவுஸ்திரேலியாவி;ற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அணியில் இடம்பெற்றிருந்த மேலும் சில வீரர்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அமல் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/139429

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதுக்கும் நம்ம கெயிலிட்டடை ரியுசன் போய் இருக்கலாம்.😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தனுஷ்க குறித்து விசாரணைகளை மேற்கொள்ள மூவர் கொண்ட குழு நியமனம்

By T. SARANYA

08 NOV, 2022 | 04:33 PM
image

பாலியல் துஷ்பிரயோக  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவுஸ்திரேலியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக  ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிசிர ரத்நாயக்க தலைமையில் மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணிகளான நிரோஷன பெரேரா மற்றும்  அசேல ரகவே ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் ஏனைய அங்கத்தவர்கள் எனவும் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அணியின் முகாமையாளர் மற்றும் வீரர்களிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கிரிகெட் அணியின்  அதிகாரிகள் உட்பட எவரேனும் பொறுப்பை புறக்கணித்திருந்தால் அவர்களுக்கு எதிராகவும்  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/139428

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தனுஸ்க விவகாரத்தில் மூன்றாம்தரப்பின் தலையீடு எதுவுமில்லை - ஸ்ரீலங்கா கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை

By RAJEEBAN

08 NOV, 2022 | 01:30 PM
image

பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஸ்க குணதிலகவின் சட்டரீதியான செலவுகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் பொறுப்பேற்கவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் மிக முக்கிய பிரமுகர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என நன்கறியப்பட்ட விளையாட்டு வீரர் ஒருவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவை முற்றுமுழுதாக நிராகரிப்பதுடன் கண்டிப்பதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை  தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட டுவிட்டின் உண்மை தன்மையை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் தனுஸ்க குணதிலக தனக்கு உள்ள சட்டரீதியான உரிமைகளை பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் மூன்றாம் தரப்பின் செல்வாக்கிற்கு எந்த வகையிலும் உட்படவில்லை என தெரிவித்துள்ளது.

dhanushkaa.jpg

இதன் காரணமாக இந்த டுவிட் ஆதாரமற்றது தீயநோக்கத்துடன் எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டது பொதுமக்கள் மத்தியில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறித்து வெறுப்பை தூண்டும் நோக்கத்தை கொண்டது எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சு விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து தனுஸ்க குணதிலகவின் சட்டரீதியான உரிமைகளை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது இந்த விடயம் மூன்றாம் தரப்பின் தலையீடு இன்றி கையாளப்படுகின்றதுஎனவும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/139432

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தனுஷ்க மூச்சு திணறச் செய்ததால் பெண்ணின் மூளையில் ஸ்கேன் சோதனை

09 NOV, 2022 | 02:08 PM
image

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலிய யுவதியின் கழுத்தை நெரித்து மூச்சு திணறச் செய்ததால், அந்த யுவதியின் மூளை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தியதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை அணியின் ஹோட்டலில் வைத்து தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பான பொலிஸாரின் அறிக்கையை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

அப்பெண் மீது குணதிலக்க பல தடவைகள் தனது உடலை பலவந்தமாக திணித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் அப்பெண் தனது உயிர் குறித்து அஞ்சும் அளவுக்கு அவர் மூச்சுத் திணறச் செய்யப்பட்டார். மறுநாள் அவர் உளவள ஆலோசனை சேவைத் துறையினரை தொடர்புகொண்டார். அப்பெண்ணால் அழுகையை நிறுத்த முடியாமல் இருந்தது என மேற்படி ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Danushka_Gunathilaka.jpg

 

 'ஒக்டோபர் 29 ஆம் திகதி டேட்டிங் அப் ஒன்றின் மூலமாக இப்பெண்ணை தனுஷ்க குணதிலக்க தொடர்புகொண்டார். அதையடுத்த நாட்களில் அவர்கள் எழுத்து மற்றும் வீடியோ மூலமாக உரையாடினர்.

தன்னை சந்திப்பதற்கு பிரிஸ்பேன் நகருக்கு வருமாறு அப்பெண்ணிடம் குணதிலக்க கோரினார்.  அதற்கு அப்பெண் மறுத்தார்.

எனினும், நவம்பர் 2 ஆம் திகதி சிட்னியில் ஒபாரா பாரில் நேரில் சந்திப்பதற்கு இருவரும் இணங்கினர்.

பின்னர் அவர்கள் ஹண்டர் வீதியிலுள்ள பீட்ஸா விடுதியொன்றுக்கு சென்றனர். அதன்பின் அப்பெண்ணின் வீட்டுக்குப் படகுமூலம் செல்வதற்கு சேர்கியூலர் கீ துறைமுகத்துக்கு சென்றனர்.

இந்த ஜோடியினர் பல தடவைகள் மதுபானம் அருந்தினர். எனினும் இவர்கள் அல்கஹோலினால் பாதிக்கப்படவில்லை என அப்பெண் நம்புகிறார்.

படகுச் சவாரியின்போது, அப்பெண்ண் மது குணதிலக்க தனது உடலை அழுத்தியதுடன் பலவந்தமாக முத்தமிட்டார். 

அப்பெண்ணின் வீட்டுக்கு இவர்கள் இருவரும் வந்த பின்னர், குணதிலக்க பலவந்தமாக உறவுகொண்டார்.  ஒரு தடவை அப்பெண்ணினால் சுவாசிக்க முடியாத அளவுக்கு பலமாக மூச்சுத் திணறச் செய்யப்பட்டது' எனவும் மேற்படி ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பெண் அதிகாரிகளுக்கு நவம்பர் 5 ஆம்  திகித முறைப்பாடு செய்தார். அத்துடன் றோயல் பிரின்ஸ் அல்பிரெட் வைத்தியசாலைக்கு சென்றார். அங்கு அவர் பாலியல் தாக்குதல்கள் தொடர்பான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், மூச்சுத் திணறச் செய்யப்பட்டதால் மூளையில் ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காக மூளையில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது எனவும் மேற்படி ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணுறை அணிந்துகொள்ளுமாhறு குணதிலக்கவை தான் கோரியபோதிலும், மேற்படி பாலியல் தாக்குதல்களின்போது, தனது படுக்கைக்கு அருகில் தரையில் ஆணுறை கிடந்ததை தான் கண்டதாவும் அப்பெண் தெரிவித்தார் என மேற்படி ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்ததையடுத்து அவர் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார், இது தொடர்பான வழக்கு ஜனவரி 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/139536




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப இது ஒரு சின்ன ஆரம்பம்...தொடர்ந்து பெரிய சாமானெல்லாம் முளைக்கும்
    • அப்ப அடுத்த ஆட்சியும் என் .பி.பி தான்...அழிக்க வென்றே ஈௐௐஊ௹ஊ ஸாணா
    • அர்ச்சனா உண்மையில் கோமாளியா அல்லது யாழ்பாண/புலன்பெயர் தலைமுறையின்  மனோநிலையை நன்கு Stady பண்ணிய மனோதத்துவவியலாளரா?   பிரச்சனைகளை  தீர்ப்பதை விட  பிரச்சனைக்கு காரணமானவராக தம்மால்  கற்பிதம் செய்தவர்களை நடுசந்தியில் நாக்கை புடுங்கிற மாதிரி கேள்வி கேட்டாலே  ஆர்கஸம் அடையும் மனோநிலை கொண்ட  ஒரு கூட்டத்தை திறமையாக புரிந்து கொண்டு செயற்படுகிறார்.   இவரது செயற்பாடுகள் வெறும் பேஸ்புக், யுருயூப் விசிலடிப்புகளுக்காக மட்டுமே. தொண்டர் உதவியாளர்கள் என்ற பிரச்சனை 2002 ம் ஆண்டில் இருந்து உள்ள பிரச்சனை.  அதை பற்றி அர்சனாவுக்கும் நீண்ட காலமாக தெரியும்.  இதனை  சுகாதார அமைச்சுன் கவனத்துக்கு வருவதற்கான போராட்டங்கள் ஏற்கனவே நடைபெற்று அந்த விடயம்  ஒரளவு அது முன்னேற்ற மான நிலையிலும் உள்ள நிலையில் அதனை மென்மேலும் வலுப்படுத்தக்கூட வகையில் சுகாதார அமைச்சுடன்  நேரடியாக பேசக்கூடிய  இயலுமை பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அர்ச்சனாவுக்கு உண்டு.  இருப்பினும் அதை விடுத்து சத்தியமூர்த்தி அவர்களின்  அலுவலக்கதுக்குள் அத்து மீறி  நுளைந்தது அவரோடு இவருக்கு இருக்கும்  தனிபட்ட ஈகோவுக்காகவும் இவரது சமூகவலைதள விசுலடிச்சான் குஞ்சுகளுக்காகவுமே.  மேலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாடு  முழுவதும்  ஊழல் ஒழிப்பை முக்கிய பிரச்சனையாக கையிலெடுத்தி ருக்கக்கூடிய நிலையை புரிந்து கொண்டு   இவ்வாறு தடாலடியாக இவர் நடந்து கொள்வதும் ஒரு தந்திரம் தான். தானாக கனியும் கனிகளை தான் புகைபோட்டு தான் கனிந்தது என்ற பிம்பத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதும் நோக்கம்.    ஏற்கனவே மருத்துவர்களைக்கெதிராக இவரது குற்றச்சாட்டுகள் இவரால் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு மக்களுக்கு காட்டப்பட்டது. எதற்கும் இவரிடம் ஆதாரம் இல்லை. ஆதாரம் இல்லாத,  அவதூறுகளை கண்ணை மூடிக் கொண்டு  நம்பும் ஒரு   மக்கட் கூட்டதை நன்கு புரிந்து செயற்படுகிறார்.  பொதுத் துறை ஊழலை ஒழிக்க உண்மையாக மனப்பூர்வமாக இவர் விரும்பினால் ஆதாரங்களை திரட்டி அதை  அரசிடம் கையளிக்கலாம். பாராளுமன்றத்தில் ஆதாரங்களை முறைப்படி வெளியிடலாம்.
    • உண்மைகளை மூடி மறைத்தால் அது  மேற்குலகுக்கு ஆதரவானது என்றும் உண்மைகளை சொன்னால் அது மேற்குலகுக்கு எதிரானது என்று ஒரு புதிய கொள்கை வகுக்கப்படுகிறது யாழ் களத்தில்.  உண்மையைச் சொல்வது ❤️ லைக் வேண்டுவதற்காக அல்ல. 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.