Jump to content

317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு..!

317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு இலங்கையில் இருந்து சென்றதாக கூறப்படும் 317 அகதிகளை ஏற்றிய கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரியவந்துள்ளது.

குறித்த கப்பலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 317 பேர் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கப்பல் தொடர்ந்து பயணிக்க முடியாதா நிலையில் பழுதடைந்ததால் கப்பலை செலுத்திய கப்பல் ஓட்டி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் படையினருக்கு தகவல்

 

 

317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு..! | Ship 317 Srilanka Refugees Adrift Philippines Sea

இதேவேளை கப்பலை மீட்கும் பணியில் புலம் பெயர் சமூகத்தில் உள்ள சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கனடாவில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/ship-317-srilanka-refugees-adrift-philippines-sea-1667812554

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

306 இலங்கை அகதிகளுடன் நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல் 

07 NOV, 2022 | 06:12 PM
image

இலங்கையைச் சோந்த 306 பேருடன் கனடாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த கப்பலொன்று பிலிப்பையன்ஸிற்கும் வியட்நாமிற்கும் இடையிலுள்ள கடல்பரப்பில் சூறாவளி காற்றில் சிக்குண்டு கடலில் முழ்கிவருவதாகவும் கப்பலில் உள்ளவர்களை உடனடியாக காப்பாற்றுமாறும் அந்த கப்பலில் இருந்த ஒருவர் தோலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கப்பலில் சிறுவர்கள் உட்பட 306 இலங்கையைச் சேர்ந்தவர்கள்  இருப்பதாகவும் இவர்களின் உயிரை காப்பாற்றுமாறு ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுக்குமாறும் அந்த கப்பலில் பயணித்துள்ளவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படை உடனடி ஆய்வொன்றை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

https://www.virakesari.lk/article/139378

Link to comment
Share on other sites

கனடா  400 ஆயிரம் தொடக்கம் அரை மில்லியன் மக்களை வெளியில் இருந்து எடுப்பதாக அறிந்தேன். இவர்களையும் ஏற்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

கனடா  400 ஆயிரம் தொடக்கம் அரை மில்லியன் மக்களை வெளியில் இருந்து எடுப்பதாக அறிந்தேன். இவர்களையும் ஏற்க வேண்டும். 

பணம் கொடுத்து, ஏஜன்சிகளை நம்பி, இப்படி பாதுகாப்பு இல்லாமல் பயணிப்பது மிக ஆபத்தனதும், முட்டாள் தனமானதும் ஆகும். இவர்களது, முக்கியமாக, பெண்கள், குழந்தைகள், தினசரி இயற்கை அழைப்புகளுக்கே வசதியிருக்காதே.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லோருக்கும் எடுப்பார் கைப்பிள்ளையாகிவிட்டோம். 

இந்தியா  இலங்கையை கட்டுக்குள் கொண்டுவர எங்களைப் பயன்படுத்தியது. மேற்கும் இந்தியும் இலங்கையைத் தனது கட்டுக்குள் கொண்டுவர எமது போராட்டத்தை அழித்தது. மீண்டும் இலங்கையைக் கட்டுக்குள் கொண்டுவர, தேவாலயங்களில் குண்டுவெடிப்பைப் பயன்படுத்தியது.

தற்போது மீண்டும் தமது தேவைக்காக மேற்கு எம்மக்களை கடலில் மூழ்கடிக்கிறது.

 

Link to comment
Share on other sites

சிங்கப்பூர் அரசு மேற்படி அகதிகளை வியட்நாமில்  பாதுகாப்பாக சேர்த்துள்ளதாம். சிறிலங்கா அரசு பிலிப்பைன்ஸ், வியட்நாம், சிங்கப்பூர் அரசிடம் உதவி கோரி இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாம்-பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையேயுள்ள கடற்பிராந்தியத்தில் சிக்குண்டு தவிக்கும் 306 பேர் சம்பந்தப்பட்டவர்களின் உதவியை நாடி நிற்கின்றனர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

பணம் கொடுத்து, ஏஜன்சிகளை நம்பி, இப்படி பாதுகாப்பு இல்லாமல் பயணிப்பது மிக ஆபத்தனதும், முட்டாள் தனமானதும் ஆகும். இவர்களது, முக்கியமாக, பெண்கள், குழந்தைகள், தினசரி இயற்கை அழைப்புகளுக்கே வசதியிருக்காதே.

யாழ் இல் உள்ள போதை பழக்கத்தில் இருந்து தப்ப இவ்வாறு  தப்பிக்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இந்தக் கப்பல் என்டு சொல்லி MV Sun Sea இன்ர நிகழ்படத்தை பரப்புறாங்கள். செய்தியிணைப்போர் கவனமெடுக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகு – இலங்கையர் உட்பட 300 பேர் பாதுகாப்பாக மீட்பு

கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகு – இலங்கையர் உட்பட 300 பேர் பாதுகாப்பாக மீட்பு

சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்து சென்ற குழுவினரின் படகு விபத்துக்குள்ளானதையடுத்து, அதில் இருந்த 300 பேர் அந்நாட்டு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

இந்த படகில் விபத்தில் சிக்கிய இலங்கையர் ஒருவர் இலங்கை கடற்படையை தொடர்புகொண்டு தானும் தனது குழுவினரும் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்ததையடுத்து, உடனடியாக செயற்பட்ட கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவிகளைக் கோரியுள்ளது.

இதனையடுத்து, படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு தகவல் தெரிவித்துள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

விபத்தின்போது இலங்கையர் ஒருவரே படகில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், படகு வியட்நாமில் தரையிறங்கிய பின்னர், ஏனையவர்களின் அடையாளம் உறுதி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1309385

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

300 இலங்கை அகதிகளுடன் நடுக்கடலில் தத்தளித்த கப்பல் மீட்பு

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கப்பல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

300 அகதிகளுடன் பயணித்த கப்பல் ஒன்று மூழ்கும் தறுவாயில் இருந்த நிலையில், அந்த கப்பலில் பயணித்த அகதிகளை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா இதனை பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார்.

வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை அண்மித்த கடற்பரப்பில், தாம் பயணிக்கும் கப்பல் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக, அந்த கப்பலிலிருந்து தமது கடற்படையின் மீட்பு நிலையத்திற்கு நேற்றைய தினம் தகவலொன்று கிடைத்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதையடுத்து, இலங்கை அதிகாரிகள் வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கடற்படையின் மீட்பு நிலையங்களுக்கு தகவலை பரிமாறியுள்ளனர்.

 

இந்த நிலையில், 300 அகதிகளுடன் பயணித்த கப்பலில் இருந்தவர்களை தமது முயற்சியில் மீட்க முடிந்தாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கை கடற்படைக்கு அறிவித்துள்ளனர்.

சிங்கப்பூரை அண்மித்த கடலில் பயணித்த மற்றுமொரு கப்பலின் உதவியுடன், இந்த அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கைக்கு அறிவித்துள்ளனர்.

இந்த கப்பலில் இலங்கையர்கள் பயணிப்பதாக நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் குரல் பதிவொன்று பகிரப்பட்டு வந்தது.

கப்பலில் பயணிக்கும் ஒருவர், தம்மை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கும் குரல் பதிவொன்றை இவ்வாறு பகிரப்பட்டது.

''பிலிப்பைன்ஸ் கடலில் 317 அகதிகளுடன் பயணித்த கப்பலொன்று மூழ்கும் அபாயத்தில் உள்ளது. குழந்தை பிள்ளைகள் இருக்கின்றார்கள். பெண்கள் இருக்கின்றார்கள். வயதானவர்கள் இருக்கின்றார்கள்.

அகதிகளுடன் வந்த கப்பலொன்று மூழ்க போகின்றது என செய்திகளுக்கு அறிவியுங்கள். 317 பேரின் உயிர்களை காப்பாற்றி விடுங்கள். கப்பல் மூழ்குகின்றது. நாங்கள் பிலிப்பைன்ஸிற்கும், வியட்நாமிற்கும் இடையில் நிற்கின்றோம்" என கப்பலில் பயணித்த அகதியொருவர் தொலைபேசியூடாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த கப்பலில் இலங்கையர்கள் இருக்கின்றார்களா என, பிபிசி தமிழ், கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வாவிடம் வினவியது.

 

கப்பல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அகதிகள் இருப்பதாகவே தமக்கு தகவல் கிடைக்கப் பெற்ற போதிலும், அதில் இலங்கையர்கள் இருக்கின்றார்களா என்பது தொடர்பில் தமக்கு தெரியாது என அவர் பதிலளித்தார்.

மூழ்கும் அபாயத்திலுள்ள கப்பல் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அல்லது இலங்கையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பல் கிடையாது என்பது உறுதி எனவும் அவர் கூறினார்.

வெளிநாடொன்றிலிருந்து பயணித்த கப்பலிலேயே இந்த. அகதிகள் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த கப்பலில் இலங்கையர்கள் இருக்கின்றார்களா என்பது தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த சூழ்நிலையில், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கடல்மார்க்கமாக பலர் சட்டவிரோதமாக சென்றுள்ளனர்.

அத்துடன், இலங்கையிலிருந்து அகதிகளாக செல்ல முயற்சித்த பலரை, இலங்கை அதிகாரிகள் கடந்த காலங்களில் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/cv29yxdrm7mo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடுக்கடலில் இலங்கை தமிழர்களுடன் தத்தளித்துக்கொண்டிருந்த படகை காப்பாற்றிய ஜப்பான் கப்பல் - வெளியாகின புதிய தகவல்கள்

By RAJEEBAN

08 NOV, 2022 | 12:08 PM
image

நடுக்கடலில் 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுடன் தத்தளித்துக்கொண்டிருந்த  படகை ஜப்பானின் கப்பலொன்றே மீட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் பயணித்துக்கொண்டிருந்த மீன்பிடிப்படகு சேதமடைந்து ஸ்பிராட்லி தீவுகளில் தத்தளித்துக்கொண்டிருந்தது என விஎன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

மியன்மார் கொடியுடன் பயணித்துக்கொண்டிருக்கும் லேடிஆர்3 படகு ஆபத்தில் சிக்கியுள்ளது இந்த படகு 303 இலங்கையர்களுடன் கனடா செல்ல முயல்கி;ன்றது என தகவல் கிடைத்ததாக வியட்நாமின் கடல்சார் மீட்பு மற்றும் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் ஐந்தாம் திகதி குறிப்பிட்ட கப்பல் தென்கரையோரத்தில் உள்ள வுங் டாவுவில் இருந்து 258 கடல்மைல் தொலைவில் காணப்பட்டது .

படகின் இயந்திர அறைக்குள் நீர் சென்றதால் அந்த கப்பல் தத்தளிக்க தொடங்கியது கடல் கொந்தளிப்பாக காணப்பட்டுள்ளது.

வியட்நாமின் கடல்சார் மீட்பு மற்றும் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு நிலையம் கப்பலை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளது,அந்த பகுதியில் உள்ள ஏனைய கப்பல்களிற்கு அவசர சமிக்ஞையை  அனுப்பியுள்ளது.

திங்கட்கிழமை அந்த பகுதியில் ஜப்பான் கொடியுடன் ஹெலியோஸ் லீடர் என்ற கப்பல் காணப்பட்டுள்ளது,படகில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை காப்பாற்றுமாறு அந்த கப்பலிற்கு உத்தரவு வழங்கப்பட்டது.

ஜப்பான் கப்பல் உடனடியாக தத்தளித்துக்கொண்டிருந்த படகைநோக்கி சென்றுள்ளது படகில் இருந்தவர்கள் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டுள்ளனர்.

ஜப்பான் கப்பல் படகில் இருந்தவர்களை மீட்டு அவர்களிற்கு மருத்துவகிசிச்சைகளை வழங்கியுள்ளது.

வியட்நாம் மேலும் ஐந்து கப்பல்களை அந்த பகுதிக்கு அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

20 சிறுவர்கள் 19 பெண்கள் உட்பட 303 பேரும் இன்றும் வுங் டாவுவை சென்றடைவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/139418

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை - அலி சப்ரி

08 NOV, 2022 | 06:10 PM
image

(எம்.மனோசித்ரா)

வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ள 300 க்கும் மேற்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர வியட்நாம் அதிகாரிகளுடன் இராஜதந்திர தொடர்புகளை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகொன்றில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் நேற்று மீட்க்கப்பட்டனர்.

படகில் இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர், இலங்கை கடற்படையினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியதாகவும் தெரிவித்ததாக கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கி அழைத்துச் செல்லப்படுவதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/139487

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிலிப்பைன்ஸ் - வியட்நாம் கடற்பகுதியில் கப்பல் விபத்து: பயணிகளை மீட்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு வைகோ கடிதம்

By RAJEEBAN

08 NOV, 2022 | 12:09 PM
image

பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெறியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலளார் வைகோ எம்.பி. அவர்கள் இன்று 08.11.2022 கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

-பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். விபத்தில் சிக்கிய இந்தக் கப்பலில் 306 இலங்கை அகதிகள் பயணித்துள்ளனர். 40க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் இருப்பதாகத் தெரிகிறது. கப்பல் சேதமடைந்து உள்ளதால் எந்த நேரத்திலும் மூழ்கும் அபாயம் உள்ளது. அக்கப்பலில் பயணித்தவர்கள் தங்கள் உயிர்களைக் காக்கப் போராடி வருகின்றார்கள்.கப்பல் தொடர்பு எண் 870776789032.எனவே, இந்திய பாதுகாப்புத் துறையுடன் தொடர்புகொண்டு, கடற்படை மீட்புக் கப்பலை அனுப்பி, விபத்துக்குள்ளான பயணிகளை காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

https://www.virakesari.lk/article/139421

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீட்கப்பட்ட இலங்கையர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் - வியட்நாம் ஊடகம் தகவல்

By RAJEEBAN

09 NOV, 2022 | 03:25 PM
image

tuoitre.vn

logo-22-1667968576965275117013.jpg

மூழ்கிக்கொண்டிருந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களிற்கு உரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என வியட்நாம் ஊடகம் தெரிவித்துள்ளது

வியட்நாம் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது

 

அவர்கள் பதற்றமற்றவர்களாக மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்,

அவர்களிற்கான தங்குமிடம் உணவு போன்றவற்றை அரசாங்கம் மிகவும் கௌரவமான விதத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

முன்னதாக நவம்பர் 8 ம் திகதி இரவும் 9 ம் திகதி அதிகாலையும் இலங்கையர்களை அதிகாரிகள் கரைக்கு கொண்டுவந்து மூன்று இடங்களில்Vung Tau city, district. Xuyen Moc and Dat Do அவர்களை தங்கவைத்துள்ளதுடன் உணவு அடிப்படை வசதிகளை வழங்கியுள்ளனர்.

அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர் பதற்றமின்றி காணப்படுகின்றனர் சிலர் சிகரெட் கூட வாங்கினார்கள் நூறிற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் உள்ளனர்.

logo-2-16679686553571715614530.jpg

இன்று அதிகாலை சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் இலங்கையர்களை சென்று பார்த்ததுடன் அவர்களிற்கு உதவுவதற்கு வியட்நாம் அரசாங்கமும் அதிகாரிகளும் அனைத்தையும் செய்வார்கள் என உறுதியளித்தார்.

தாங்கள் அங்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ள இலங்கையர்கள் அரிசி மற்றும் பாண் ஆகிய உணவுகளை குறிப்பிட்டு அவை மிகவும் ருசியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதிகளை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

logo-5-1667968799414833453970.jpg

நவம்பர் ஆறாம் திகதி மதியம் ஹெலியோஸ் லீடர் கப்பல் 303 இலங்கையர்களை காப்பாற்றியவேளை அவர்களுடைய  கப்பல் ஏற்கனவே 40 மணித்தியாலங்கள் செயல் இழந்த நிலையி;ல் காணப்பட்டது.

logo-7-166796887702353039615.jpg

அந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர் ஒருவர் தாங்கள் தங்கள் நாட்டிலிருந்து மியன்மார் சென்று அங்கிருந்து படகு மூலம் பயணித்ததாக  குறிப்பிட்டுள்ளார்.

logo-8-16679691029451681404524.jpg

vietnam_sri1.jpg

புலம்பெயர்விற்கான சர்வதேச அமைப்பு imo வுங் டாவுவில் இலங்கையர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள  இடத்திற்கு சென்று நிலைமையை மதிப்பிட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/139548

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது முகப் புத்தக🤣ப் பிரதி.இதுவும்..உண்மையோ..அல்லது சம்பந்தர் கொடி பிடித்த மாதிரியோ.. 

 

சமாதானத்திற்கும் சமத்ததுவத்திற்கான கனடா அமைப்பின் சிறந்த பணியை பாராட்டுகிறோம்.
தமிழீழ மண்ணில் தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டதன் விளைவாக மக்கள் நாட்டைவிட்டு உயிர் போனாலும் தப்பித்து மேலைநாடுகளுக்கு ஆபத்தான கடற்பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளுகிறார்கள்.
நவம்பர் 7ஆம்நாள்2022 திங்கட்கிழமை கனடாவை நோக்கி 306 தமிழ் உறவுகள் கப்பலில் புறப்பட்டு நடுக்கடலில் முழ்கும்சூழ்நிலை ஏற்பட்டபோது கப்பலில் இருந்தவர்கள் உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவுமாக கேட்டிருந்தார்கள்.
இச்செய்தி சாமாதானத்திற்கும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் என்ற அமைப்பினர் கடற்பயணத்தில் உள்ள எமது உறவுகளோடு தொடர்பு கொண்டு கப்பல் முழ்குவதற்குள் எமது உறவுகளைக் காப்பபாற்றும் மனிதநேயப் பணியில் சமாதானத்திற்கும் சமத்துவத்திற்குமான கனேடியர்கள் என்ற அமைப்பின் மனிதநேயப்பணியாளர் ரோய் சமாதானம் சிங்கள அரசோடு தொடர்பு கொண்டு தமிழர்களின் உயிரைக் காப்பாற்றுமாறு அன்பு அழைப்பை விடுத்திருந்தார்.
கடற்பயணத்தில் இருந்த எமது உறவுகளோடு சிங்கள அரசும் சிங்கள அரச கடற்படை, சிங்கப்பூர் கடற்படை, வியட்நாம் கடற்படை, பிலிப்பைன் கடற்படை அரசுகளோடு தொடர்பு கொண்டு கடலில் முழ்கிக்கொண்டிருந்த எமது தமிழ் உறவுகள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.
வியட்னாம் கடற்படையின் உதவியோடு வியட்னாம் கரையை எமது உறவுகள் பாதுகாப்பாக சென்றடைந்தார்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இலங்கையில் இருந்து சென்றார்களா அல்லது இந்தியாவில் இருந்து சென்றார்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் முன்பு ஒரு காலத்தில் யேர்மனியிலிருந்தும் கப்பலில் கனடா போனவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இவர்கள் இலங்கையில் இருந்து சென்றார்களா அல்லது இந்தியாவில் இருந்து சென்றார்களா? 

தாய்லாந்து என்று செய்திகளில் வாசித்த நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாமில் 306 இலங்கை அகதிகள்: கனடா செல்ல 5,000 டாலர்கள் கொடுத்ததாக தகவல் - முழு விவரம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • இருந்துஇலங்கை
  • 51 நிமிடங்களுக்கு முன்னர்
 

மீட்கப்பட்ட இலங்கையர்கள்

பட மூலாதாரம்,SOCIAL

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்லும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.எ கனடாவை நோக்கி செல்ல முயற்சித்த 306 இலங்கை அகதிகள் நேற்றைய தினம் சிங்கப்பூரின் கடற்படையின் உதவியுடன், ஜப்பான் கப்பலொன்றினால் மீட்கப்பட்டிருந்தனர். சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் வைத்து, இந்த அகதிகள் மீட்கப்பட்டிருந்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட அகதிகள் நேற்றிரவு வியட்நாம் துறைமுகத்தை நோக்கி அழைத்து செல்லப்பட்டதாகவும், அங்குள்ள முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கப்பலில் பயணித்த அகதி ஒருவரின் உறவினர், பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.

என்ன நடந்தது?

இலங்கை அகதிகளுடனான கப்பலொன்று மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக இலங்கை கடற்படை மீட்பு மையத்திற்கு நேற்று முன்தினம் தகவலொன்று கிடைத்துள்ளது. இதையடுத்து, சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படை மீட்பு மையங்களுக்கு, இலங்கை கடற்படை தகவல்களை பரிமாறியுள்ளது. இலங்கை கடற்படையின் தகவலை அடுத்து, விரைந்து செயற்பட்ட சிங்கப்பூர் அதிகாரிகள், அகதிகளுடன் மூழ்கும் அபாயத்திலிருந்த கப்பலை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து, இந்த கப்பலுக்கு அருகாமையில் பயணித்த ஜப்பானுக்கு சொந்தமான கப்பலொன்றிற்கு தகவல் பரிமாற்றப்பட்டதை அடுத்து, குறித்த அகதிகள் ஜப்பானுக்கு சொந்தமான கப்பலினால் மீட்கப்பட்டு, வியட்நாம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

இலங்கையர்கள் மீட்பு

பட மூலாதாரம்,VNA

அகதிகளை தாம் பாதுகாப்பாக மீட்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கை கடற்படைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்ததாக இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். இவ்வாறு மீட்கப்பட்ட அகதிகளில் 264ற்கும் அதிகமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அகதிகள் தற்போது வியட்நாமிலுள்ள முகாமொன்றில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு, பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

எங்கிருந்து பயணம் தொடங்கியது?

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், நாட்டில் வாழ முடியாத நிலைமை காரணமாக பலர் வெளிநாடுகளை நோக்கி செல்ல முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த நூற்றுக்கணக்கானோர் கடந்த காலங்களில் இலங்கை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அதேபோன்று, பலர் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்திருந்த செய்திகளையும் காண முடிந்தது. இந்த நிலையில், ஒரே கப்பலில் அதிகளவிலான இலங்கை அகதிகள் செல்ல முயற்சித்து, நிர்கதிக்குள்ளான செய்தி நேற்றைய தினம் பதிவாகியது.

இந்த அகதிகள் எவ்வாறு கனடா நோக்கி செல்ல தயாராகினார்கள் என்பது குறித்த தகவல்களை, பிபிசி தமிழ் ஆராய்ந்தது. குறிப்பாக இலங்கையின் வடக்கு பகுதியைச் சேர்ந்த தமிழர்களே, அதிகளவில் இந்த கப்பலில் பயணித்துள்ளதாக, அந்த கப்பலில் பயணித்த இலங்கையர் ஒருவரின் சகோதரன், பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார். அத்துடன், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களும் இந்த கப்பலில் அதிகளவில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த கப்பலில் சென்றவர்கள் தமது பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் விற்பனை செய்து, மீண்டும் இலங்கைக்கு வர விரும்பாத நிலையிலேயே கனடா நோக்கி செல்ல தயாராகியுள்ளனர். அமெரிக்க தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தும் தமிழ் மொழி பேசக்கூடிய பிரதான முகவர் ஒருவரின் உதவியுடன், ஏனைய முகவர்களின் ஒத்துழைப்புடனும் இவர்கள் இவ்வாறு அகதிகளாக கனடாவை நோக்கி செல்ல முயற்சித்துள்ளனர். கனடா செல்லும் அகதி ஒருவரிடமிருந்து தலா 5000 அமெரிக்க டாலர் அறவிடப்பட்டதாக கப்பலில் பயணித்த அகதியின் சகோதரன் பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார். குறித்த இலங்கையர்கள் உரிய வகையில் விஸாக்களை பெற்று, விமானத்தின் மூலம் ஒன்றரை மாதத்திற்கு முன்பாக மியன்மார் நோக்கி பயணித்துள்ளனர். முகவரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 5000 அமெரிக்க டாலரின் ஊடாக, விமான பயணச் சீட்டுக்கள், விஸா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துக்கொடுக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார். இந்த நிலையில், மியன்மார் நோக்கி சென்ற இலங்கையர்கள், அங்கிருந்து கடந்த மாதம் 10ம் தேதி கனடா நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

 

இலங்கையர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுமார் 28 நாட்கள் கடல் சீற்றம் உள்ளிட்ட  பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பயணித்த குறித்த கப்பலில், அண்மையில் தூவாரமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, கப்பலுக்குள் நீர் பிரவேசித்துள்ள நிலையில், கப்பல் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அறிய முடிகின்றது. இந்த நிலையிலேயே, குறித்த கப்பலில் பயணித்த அகதிகள், இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். இதையடுத்தே, குறித்த படகில் பயணித்த அகதிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். பாரிய தொகையை செலவிட்டு, கனடா நோக்கி செல்ல முடியாது போனமை குறித்து, உறவினர்களின் நிலைபாடு தொடர்பில், பிபிசி தமிழ், குறித்த கப்பலில் பயணித்த இலங்கை அகதியின் சகோதரனிடம் வினவியது. ''பணம் ஒரு புறத்தில் இருக்க, நாட்டிற்கு மீள வருகைத் தருவது என்பது சாத்தியமற்ற விடயம். நாங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பின்புலத்தை கொண்ட ஒரு சமூகம்.

நாட்டிற்கு திரும்பி வரும் போது, குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால் மீண்டும் பிரச்சினை வரும். எமது உறவினர்களும் அகதிகளாக சென்றார்கள் என்பதை வெளியில் சொன்னாலே, எமக்கு பிரச்சினை வரும்.

அதனால், அவர்கள் நாட்டிற்கு வருவதை விட, கனடா இல்லை, வேறொரு நாட்டிற்கு சென்றடைய வேண்டும். நாட்டிற்கு திரும்பி வருவது அவர்களுக்கு பிரச்சினை.

இது தான் இப்போதைய நிலைமை. வடக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படும் காலப் பகுதியில் தமிழர்களுக்கு சரியான பிரச்சினை வரும் காலம். இந்த நேரத்தில் அவர்கள் மீண்டும் நாட்டிற்கு வந்தால், அவர்கள் மீது வேறு வழியில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றது. இவர்கள் நாட்டிற்கு வருகைத் தந்தால், அவர்கள் விடுதலைப் புலிகள் என்ற அடிப்படையில் வழக்கு தொடரக்கூடிய வாய்ப்புக்களும் இருக்கின்றது." என அவர் கூறினார். ''சுமார் 300 பேரையும் வலுக்கட்டாயமாக அனுப்பி வைப்பது மனிதாபிமானமற்ற செயல். நாட்டிற்கு அனுப்பினால், நாங்கள் தற்கொலை செய்துக்கொள்வோம் என அங்குள்ள அகதிகள் கூறுகின்றார்கள்.

காணிகளை, சொத்துக்களை விற்பனை செய்து விட்டு, சென்றவர்கள் மீண்டும் இங்கு வந்து என்ன செய்வது. நாட்டிற்கு திரும்பி அனுப்பினால், தற்கொலை செய்துக்கொள்வோம் என காணிகளை விற்பனை செய்து விட்டு போனவர்கள் கூறுகின்றார்கள்.

இதற்கான பொறுப்பை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. தமது பிரஜைகளை நாட்டிற்கு எடுப்பதற்கே இலங்கை முயற்சிக்கும். ஆனால், அவர்களுக்கு அது சிரமமானது. அகதிகளாக சென்ற தமது உறவினர்கள், மீண்டும் நாட்டிற்கு வருவது பாதுகாப்பற்றது என்பதே உறவினர்களின் நிலைப்பாடு.." என அவர் குறிப்பிடுகின்றார்.

 

இலங்கை

 

படக்குறிப்பு,

அலி சாப்ரி, இலங்கை வெளிவிவகார அமைச்சர்

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் வியட்நாம் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். அகதிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டால் கைது செய்யப்படுவார்களா? சர்வதேச முகவரி நிறுவனத்தின் ஊடாக, இந்த அகதிகள் நாட்டிற்கு அழைத்து வரப்படும் போது, வெளிவிவகார அமைச்சுக்கும், சர்வதேச முகவர் நிறுவனத்திற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் இணக்கப்பாட்டிற்கு அமையவே நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீஸார் தெரிவிக்கின்றனர். இது பெரும்பாலும் அரசாங்கங்களுக்கு இடையிலும், சர்வதேச முகவரி நிறுவனத்திற்கும் இடையில் கொள்கை அடிப்படையிலான இணக்கப்பாட்டிற்கு அமையவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

 

இலங்கையர்

 

படக்குறிப்பு,

நிஹால் தல்துவ, போலீஸ் ஊடகப் பேச்சாளர்

இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, உடனடியாக கருத்து தெரிவிக்க முடியாது எனவும் அவர் கூறுகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்படக்கூடும் என உறவினர்களிடம் காணப்படும் அச்சம் குறித்தும், பிபிசி தமிழ், போலீஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவியது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேணிவர்கள் இந்த அகதிகளுக்கு மத்தியில் இருந்தால், சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர், அவ்வாறானவர்கள் இல்லையென்றால் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது எனவும் குறிப்பிட்டார். அதேபோன்று, ஆட்கடத்தலுடன் தொடர்புடைவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c2vxwdj8wd1o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூருக்கு அருகில் விபத்துக்குள்ளான படகு – மீட்கப்பட்ட இலங்கையர்கள் இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைப்பு!

சிங்கப்பூருக்கு அருகில் விபத்துக்குள்ளான படகு – மீட்கப்பட்ட இலங்கையர்கள் இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைப்பு!

சிங்கப்பூருக்கு அருகில் வியட்நாம் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் ஹோசிமினில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதனை வியட்நாம் வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.

மீட்கப்பட்ட அனைவரும் நிலையான உடல்நிலையில் இருப்பதாகவும் அவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அவர்களது குடியுரிமை மற்றும் ஏனைய தகவல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் பின்னர் அவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் 303 இலங்கையர்களுடனான படகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, கப்பலில் இருந்த இலங்கையர் ஒருவர் இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கை மையத்தை தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் அளித்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவிகளைக் கோரியது.

அதன்படி, குறித்த நாடுகள் முன்னெடுத்த நடவடிக்கையில், ஆபத்தில் இருந்த படகுக்கு அருகில் சென்றுகொண்டிருந்த ஜப்பானிய சரக்குக் கப்பல், இலங்கையர்களைக் காப்பாற்றியது.

மீட்கப்பட்டவர்களில் 264 ஆண்களும்19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1309758

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் மீது மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - எஸ்.சிறீதரன்

By DIGITAL DESK 2

10 NOV, 2022 | 10:11 AM
image

(இராஜதுரை ஹஷான்)

 

 

வியட்நாம்  கடற்பகுதியில் கப்பலொன்றில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கை தமிழ் புலம்பெயலாளர்கள் தொடர்பில் ஐ நா அகதிகளுக்கான நிறுவனம் மனிதாபிமான கண்ணோட்டத்தில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) சில வரி திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போதே சிறீதரன் எம்.பி இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

303 தமிழ் புலம்பெயலாளர்களுடன் சென்ற கப்பலொன்று கடலில் இன்று வியாட்நாமிய கடற்படையினரால் மீட்கப்பட்டு நாடொன்றின் எல்லைக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

குழந்தைகள் உள்ளிட்ட 303 பேர் மனித பேரவலத்தில் சிக்கியுள்ளனர். ஆசியாவின் எல்லையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு நிரந்தரமான வாழ்வை வாழ முடியாதுஇ தங்களின் சொத்துக்களை விற்று சென்றுள்ளனர். இந்த மனித பேரவலத்திற்கு மத்தியில் அவர்கள் தங்களை நாடொன்றில் வசிக்க தஞ்சம் கோருகின்றனர்.

முன்னாள் எம்.பி சிறீதரன் கைது செய்யப்படுவார்!

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனம் இந்த விடயத்தை மனிதாபிமான கண்ணோட்டத்தில் அனுக வேண்டும்.

ஏன் இவர்கள் இங்கிருந்து இடம்பெயர காரணமென்ன? ஏன் இங்கு வாழலாம் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இல்லாது போனமைக்கான காரணம் என்ன? அவர்கள் நம்பக்கூடிய அரசியல் தீர்வை வழங்காமையினாலேயே உயிரை பணயம் வைத்து ஆபாத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் கனடா நோக்கி சென்றதாகவே கூறப்படுகின்றது. இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளதுடன் பலர் அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மோசமான காலநிலையிலும் ஏன் இவர்கள் இப்படி போக வேண்டும். இங்குள்ள நிலைமைகளே காரணமாகும். இங்குள்ள அடிப்படை பிரச்சினையாக 40 வருடங்களுக்கு மேலாக இங்கு இனப்பிரச்சினை உள்ளது.

இதன்போது யுத்த தளவாடங்களுக்காக அரசாங்கம் கடன் வாங்கியது. இலங்கை இப்போது கடனில் சிவப்பு எல்லைக்குள்  போயுள்ளது. இதற்கு யுத்தமும் காரணமாக அமைந்துள்ளது.

இப்போது நாட்டின் தலைவர்கள் சிந்தித்தால் தமிழ் தேசிய இனத்தின் அடிப்படையை புரிந்துகொண்டு நியாயமான தீர்வுகளை வழங்கும் போது புலம்பெயர்ந்தவர்களின் பணம் மற்றும் சர்வதேசத்தின் கவனம் மூலம் இந்த நாட்டுக்கு மாற்றங்கள் கிடைக்கும் என்று நம்புகின்றோம். இவ்வாறான சிந்தனை இல்லாமையே இதுபோன்ற நிலைமைகளுக்கு காரணமாக அமைகின்றன என்றார்.

https://www.virakesari.lk/article/139582

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஏராளன் said:

தாய்லாந்து என்று செய்திகளில் வாசித்த நினைவு.

ம்ம் இலங்கைல கடல் கொந்தளிப்பு ஒரு கிழமைக்கு அதிகமாக மழை கிழக்கு வெள்ளம் தற்போது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் இலங்கைல கடல் கொந்தளிப்பு ஒரு கிழமைக்கு அதிகமாக மழை கிழக்கு வெள்ளம் தற்போது

உங்கள் பகுதி எப்படி? பாதுகாப்பாக இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

உங்கள் பகுதி எப்படி? பாதுகாப்பாக இருங்கள்.

மட்டு நகர் முகத்துவாரம் வெட்டியும் மெதுவாக வெள்ளம் பிடிக்கிறது காட்டு வெள்ளம் வந்தால் அதோ கெதிதான் கடல் மட்டம் உயரமாக உள்ளதால் நீர் செல்வது குறைவாக உள்ளது 

கல்லாற்றில் முகத்துவாரம் வெட்டியுள்ளதால் அந்த பகுதி வெள்ளம் குறைவாக உள்ளது இருந்தாலும் வாவிகள் வழிகின்றன 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த உக்ரைன் (Ukraine) பிரஜைகள் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேபர்கள் இருவரும் தனியார் வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவுக்கு பரிசுகள் தருவதாக முகப்புத்தகத்தில் விளம்பரம் செய்து இந்த பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விளம்பரத்தைப் பார்த்து இணைப்பை உள்ளிடுபவர்களின் வங்கிக் கணக்குத் தகவல் உட்பட பல தனிப்பட்ட தகவல்கள் அதில் சேர்க்கப்பட வேண்டும். கைது நடவடிக்கை இவ்வாறு பிரவேசிக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்ட பணத்தை ஒரு குழுவினர் மோசடி செய்து செல்வதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் உனவடுன பிரதேசத்தில் இருந்து இது தொடர்பான மோசடி இடம்பெறுவதை கண்டுபிடித்துள்ளனர். விசாரணை அதிகாரிகள் அங்கு சென்று 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள். நீதிமன்ற உத்தரவு கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இந்த நாட்டுக்கு வந்துள்ள இவர்கள், டெலிகிராம் குழு ஒன்றின் ஊடாக இந்த மோசடிகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். https://ibctamil.com/article/ukrainians-arrested-for-money-laundering-gifts-1727533926?itm_source=parsely-api#google_vignette
    • களுத்தரா....,  மாத்தரா...., குருனிகலா...., கல்லே.... 😂
    • காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கை காட்டினால் மட்டுமே ஜனாதிபதி உண்மையான மாற்றத்தை கொண்டுவந்ததாக கூற முடியும் - வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் 28 SEP, 2024 | 03:37 PM ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்தார். இன்று (28) தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,  யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் செல்வீச்சுக்களினாலும் விமான குண்டு தாக்குதலாலும் உடல் சிதறி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.  மேலும், இறுதி யுத்தம் முடிவடைந்த  நிலையில் குடும்பம் குடும்பமாக இடம்பெயரும்போது  தங்களது பிள்ளைகளை கையிலே ஒப்படைத்தனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பள்ளி மாணவர்களும் பச்சிளங்குழந்தைகளும் ஆயுதம் ஏந்தி போராடியவர்களா? இவர்களுக்கு என்ன நடந்தது? கடந்த எட்டு தசாப்த காலமாக பதவி வகித்த எட்டு ஜனாதிபதிகளுக்கே யுத்தத்தை நடாத்திய பொறுப்பு இருக்கிறது. இந்நிலையிலே கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் வீதியிலே போராடிக் கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர்கள் மாறுகின்றார்கள், ஆட்சியும் மாறுகின்றது. தற்போது மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்றாலும் கூட அது எந்த வகையில் எமக்கான மாற்றத்தை தரும் என்பது தெரியாது. சர்வதேச நீதி நெறிமுறைமையை மட்டுமே நாம் இன்று வரை நம்பியிருக்கின்றோம். குறிப்பாக உள்ளக முறையில் எந்தவித நம்பிக்கையும் இல்லாத காரணத்தினால் நாங்கள் சர்வதேச நீதிப் நெறிமுறைக்காகவே இதுவரை போராடிக்கொண்டிருக்கின்றோம்.  300க்கு மேற்பட்ட தங்களது பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல் போராடிக்கொண்டிருந்த தாய், தந்தையரை இழந்த நிலையிலும் அவர்களின் ஏக்கத்துக்காகவும் நாம் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றோம். இலங்கையில் சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோளினை விடுக்கின்றோம். எமது உறவுகள் எத்தனை பச்சிளம் குழந்தைகளையும், பாடசாலை மாணவர்களையும் இழந்து அவர்கள் மீண்டும் வருவார்களா என்ற ஏக்கத்துடனும் தவிப்புடனும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை  உங்கள் பிள்ளைகளாக நேசியுங்கள். எனவே, சர்வதேச சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதியன்று வடக்கு, கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளோம்.  அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். எனவே இப்போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இலங்கை அரசானது 75 வருடகாலமாக தமிழ் மக்களை ஏமாற்றி இருந்தது. பரம்பரை பரம்பரையாக 08 ஜனாதிபதிகள் மாறி மாறி ஆட்சி செய்திருந்த நிலையிலே எங்களுக்கு எந்தவித மாற்றங்களும் நிகழவில்லை. எனவே, எந்த நிலையிலும் எந்த ஒரு அரசையும் நம்பவில்லை.  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக  ஜனாதிபதியாக பதவியேற்க முன்னர் குறிப்பிட்டிருந்தார்.  குறிப்பாக, சர்வதேச பொறிமுறையின் ஊடாக உண்மைகளை கண்டறிந்து, குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுத்து மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் நிலையில் புதிய ஜனாதிபதியை பற்றி யோசிக்க முடியும். எந்த ஜனாதிபதி வந்தாலும் எமக்கான தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என்பதையே சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்கிறோம். எனவே, புதிய ஜனாதிபதி ஏதாவது ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194991
    • நஸ்ரல்லாவை சாய்த்த இஸ்ரேல்: நிலை தடுமாறி அமைதியாய் நிற்கும் ஈரான் ஈரான் (Iran) ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா (Nasrallah)படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் (Israel) அறிவித்தும், ஈரான் அமைதி காத்து வருவது அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் அறிவிப்பிற்கு ஹிஸ்புல்லா, லெபனான் தரப்பிலிருந்தும் எவ்வித உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், இதற்கு எதிராக ஈரான் மற்றும் ஏமன் நாடுகளில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஈரானின் செயற்பாடு எவ்வாறானெதொரு பின்னணியில், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் அமைதியாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, இத்தகைய சூழலில் ஈரான் கடுமையான பதிலடிகளை வழங்கும், ஆனால் இப்போது மிதவாதம் காட்டுவதாக உள்ளதாக ஈரானின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இது ஈரானில் உள்ள பழமைவாதிகள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் இது அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இறுதி இலக்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்றிரவு நடத்தப்பட்ட தொடர் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மொத்தம் 18 பேர் முக்கிய தளபதிகள் இருந்த நிலையில்,17 பேரை இஸ்ரேல் ஏற்கனவே படுகொலை செய்தது. இறுதியாக நஸ்ரல்லா மட்டுமே உயிருடன் இருந்த நிலையில் தற்போது அவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.  https://ibctamil.com/article/death-of-hassan-nasrallah-pressure-on-iran-1727524484#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.