Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைனிய துருப்புகளால் கைப்பற்றப்பட்ட கெர்சனுக்குள் மக்கள் கொண்டாட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனிய துருப்புகளால் கைப்பற்றப்பட்ட கெர்சனுக்குள் மக்கள் கொண்டாட்டம்!

10-7.jpg

முக்கிய தெற்கு நகரத்தில் இருந்து முழுமையாக வெளியேறியதாக ரஷ்யா கூறியதை அடுத்து, உக்ரைனிய துருப்புக்களை, அப்பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

வீதிகளில் உள்ளூர் மக்கள், உக்ரைனின் தேசியக் கொடியை பறக்கவிட்டு, துருப்புக்கள் வரும்போது கோஷமிட்டதை வெளியான காணொளிகளில் அவதானிக்க முடிந்தது. சிலர் இரவு முழுவதும் தேசபக்தி பாடல்களைப் பாடினர்.

கடந்த பெப்ரவரி படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட ஒரே பிராந்திய தலைநகரம் கெர்சன் ஆகும். ரஷ்யாவின் இந்த பின்வாங்கல் போரின் மிகப்பெரிய பின்னடைவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

குறித்த பகுதியில் இருந்து சுமார் 5,000 இராணுவ வன்பொருள்கள், ஆயுதங்கள் மற்றும் பிற சொத்துக்கள் அடங்களாக, 30,000 ரஷ்ய துருப்புக்கள் வெளியேறியதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த வெற்றியை, வெள்ளை மாளிகை அசாதாரண வெற்றி என்று பாராட்டியது. அதே நேரத்தில் உக்ரைனிய ஜனாதிபதி ஸெலென்ஸ்கி இதை வரலாற்று நாள் என்று அழைத்தார்.

இதுகுறித்து கம்போடியாவில் ஒரு உச்சிமாநாட்டின் போது பேசிய உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ‘உக்ரைனில் போர் தொடர்கிறது. இந்தப் போர் விரைவில் முடிவடைய வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். மற்றவர்களை விட நாங்கள் நிச்சயமாக அதை விரும்புகிறோம்.’ என்று கூறினார்.

டினிப்ரோ ஆற்றின் மேற்குக் கரை வரை துருப்புக்கள் முன்னோக்கித் தள்ளப்பட்டதாக உக்ரைன் தரப்பில் இருந்து வெள்ளிக்கிழமை மாலைப் புதுப்பிப்பு தெரிவிக்கிறது.

 

https://akkinikkunchu.com/?p=230600

 

  • Replies 103
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

உக்ரைனிய துருப்புகளால் கைப்பற்றப்பட்ட கெர்சனுக்குள் மக்கள் கொண்டாட்டம்!

புதினின் மூலோபாயப் படைப் பின் நகர்வைப் புரியாது கொண்டாடும் உக்ரேனியர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பகுதியை யுத்தம் செய்து உக்ரைன் வெற்றி கொள்ளவில்லை. மாறாக ரஷ்சியா விலகிக் கொண்ட பின் வெற்றி வெற்றி என்ற வெற்றுக்கூச்சல் தான்.

குளிர்காலத்திற்கு ஏற்ப தனது படைநகர்வை செய்கிறது ரஷ்சியா. நோட்டோவுக்கும் உக்ரைனுக்கும் தேவையான வெற்றிக்கோ.. பிரச்சாரத்துக்காகவோ அல்ல. 

கேள்வி உக்ரைன்.. இதுவரை நோட்டோவிலோ.. ஐரோப்பிய ஒன்றியத்திலோ இன்னும் அங்கம் பெறவில்லை.. மாறாக இராணுவ உதவிகள் தான் அளிக்கப்படுகின்றன. இது ரஷ்சியாவுக்கு வெற்றி.. ஏனெனில்... இந்தப் போரின் நோக்கமே.. உக்ரைனை இராணுவ பலமிழப்புச் செய்வதும்.. நேட்டோ விரிவாக்கத்தை தடுப்பதும்.

ஏலவே நேட்டே விரிவாக்கம் தொடர்பில் நேட்டோ ரஷ்சியாவுக்கு வழங்கி இருந்த உறுதி மொழிகளில் இருந்து விலகியதன் விளைவே இந்த யுத்தம். அது சிலுங்கியால்.. உருவானது. உக்ரைனின் அழிவுக்கும் சிலுங்கி தான் காரணம். அவரை பதவியில் வைச்சுக் கொண்டு உக்ரைன் மக்கள் உண்மையான வெற்றியை சமாதானத்தை சுவைக்க முடியாது. இது பிரச்சாரத்துக்கு மட்டும் உதவலாம்.. மேற்குலகிற்கு. 

4 hours ago, nochchi said:

புதினின் மூலோபாயப் படைப் பின் நகர்வைப் புரியாது கொண்டாடும் உக்ரேனியர்கள்? 

உண்மை தான். ஏனெனில்.. யாழ் குடா நாட்டை புலிகள் கைப்பற்றக் கூடிய சூழலில்.. சிங்கள இராணுவம் ஓடிக்கொண்டிருந்தது 2000ம் ஆண்டில். ஆனால் அதே புலிகள்.. 2009 இல் முற்றாக தோற்கடிக்கப்பட்டு.. ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டன. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் சவக்குழிக்குள் தள்ளப்பட்டது. முழுநேர ஆக்கிரமிப்புக்குள் தமிழ் மக்கள் தள்ளப்பட்டார்கள்.

2000ம் ஆண்டில்.. ஒருவேளை புலிகள் தொடர்ந்து போராடி இருந்து அன்று யாழில் நிலை கொண்டிருந்த 40,000 சிங்களத்தையும் வெளியகற்றி இருந்தால்.. 2009 நிலைமையைக் கூட தவிர்த்திருக்கலாம்.  அன்றைய சூழலில் எடுத்த முடிவு.. பின்னர் எதிரிக்கு சாதகமானதே அதிகமானதாகிவிட்டது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Russia Soviet GIF - Russia Soviet Missile - Discover & Share GIFs

கொண்டாடுறது எல்லாத்தையும்... வடிவாக   கொண்டாடுங்கோ... 
வாற  மாசம், தலைக்கு மேலை ஏவுகணை வந்து விழுந்து வெடிக்கேக்கை  
கொண்டாட ஏலாது கண்டியளோ... 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

புதினின் மூலோபாயப் படைப் பின் நகர்வைப் புரியாது கொண்டாடும் உக்ரேனியர்கள்? 

கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டே கல்லெறியலாமா? 😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யர்கள் பின்வாங்கும்போது பாலத்தை உடைத்துவிட்டுப் போனதைப் பார்க்கும்போது திரும்பிவரும் நோக்கமில்லை என்றுதான் தெரிகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ரஷ்யர்கள் பின்வாங்கும்போது பாலத்தை உடைத்துவிட்டுப் போனதைப் பார்க்கும்போது திரும்பிவரும் நோக்கமில்லை என்றுதான் தெரிகின்றது. 

ரஷ்சியாவின் நோக்கமே உக்ரைனை ஆக்கிரமிப்பதல்ல. உக்ரைனை இராணுவ பலமிழப்புச் செய்வதும் நேடோ விரிவாக்கத்தை தடுப்பதும். ஆனால் ரஷ்சியாவோடு இணைய விரும்பிய பிராந்திய மக்களை ரஷ்சியா கைவிடாது.

காலையில் உடைக்கப்பட்ட கிரிமிய பாலத்தை மாலையில் போட்ட ரஷ்சியாவுக்கு.. உந்தப் பாலமெல்லாம்.. பெரிய விடயமா..??! 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ரஷ்யர்கள் பின்வாங்கும்போது பாலத்தை உடைத்துவிட்டுப் போனதைப் பார்க்கும்போது திரும்பிவரும் நோக்கமில்லை என்றுதான் தெரிகின்றது. 

ரஸ்யா கெர்சானை தனது பிரதேசம் என உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர், இந்தப் பகுதியில் உக்ரேன் படைகளின் நுழைவு, ரஸ்யாவின் நிலப் பகுதியை உக்ரேன் ஆக்கிரமித்துள்ளதாக ரஸ்யர்களால் கருதப்படும்.

🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவுக்கு மீண்டும் ஒரு பின்னடைவு: வீதிகளில் வெற்றிக் களிப்பில் யுக்ரேனிய மக்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பால் ஆடம்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட்
  • பதவி,பிபிசி நியூஸ்
  • 16 நிமிடங்களுக்கு முன்னர்
 

வெற்றிக்களிப்பில் யுக்ரேனிய மக்கள்

பட மூலாதாரம்,REUTERS

யுக்ரேனின் முக்கிய தெற்கு நகரமான கெர்சன் பகுதியில் இருந்து படைகளை ரஷ்யா முழுமையாக திரும்பப் பெற்றிருக்கும் நிலையில், யுக்ரேனிய ராணுவ வீரர்களை பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

யுக்ரேனிய வீரர்கள் நகருக்குள் வருகை தந்த போது பொதுமக்கள் தேசியக் கொடியை அசைத்து முழக்கமிடுவதை காணொளிகளில் பார்க்க முடிகிறது. சிலர் தேசபக்திப் பாடல்களைப் பாடினர்.

பிப்ரவரியில் தொடங்கிய படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யா கைப்பற்றிய ஒரே பிராந்திய தலைநகரம் கெர்சன் மட்டுமே. எனவே, இந்தப் பின்வாங்கல் நடவடிக்கை போரின் மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

30,000 ராணுவ வீரர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக ரஷ்யா கூறுகிறது. அதேபோல, சுமார் 5,000 ராணுவ வன்பொருட்கள், ஆயுதங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

 

யுக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கி இதை வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று குறிப்பிட்ட நிலையில், அமெரிக்கா அசாதாரண வெற்றி என்று பாராட்டியுள்ளது.

ஆனால், யுக்ரைனின் வெளியுறவு அமைச்சர் போர் தொடர்கிறது என்று கூறியுள்ளார். கம்போடியாவில் ஆசிய நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய டிமிட்ரோ குலேபா, “நாங்கள் களத்தில் போர்களில் வெற்றி பெறுகிறோம். ஆனால் போர் தொடர்கிறது” என்று கூறினார்.

டினிப்ரோ ஆற்றின் மேற்குக்கரை வரை துருப்புகள் முன்னோக்கித் தள்ளப்பட்டதாக வெள்ளிக்கிழமை மாலை யுக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆற்றைக் கடக்க உதவும் முக்கிய பாலமான அன்டோனிவ்ஸ்கி பாலம் பகுதியளவு இடிந்துள்ள படங்களும் வெளியாகியுள்ளன. இந்த சேதம் எப்படி ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

 

சேதமடைந்த பாலத்தின் செயற்கைக்கோள் படம்

பட மூலாதாரம்,MAXAR TECHNOLOGIES

 

படக்குறிப்பு,

சேதமடைந்த பாலத்தின் செயற்கைக்கோள் படம்

கெர்சனை ஆக்கிரமித்த ரஷ்ய துருப்புகள் ஆற்றின் கிழக்குப் பகுதியில் புதிய நிலைகளை எடுப்பதாகக் கருதப்படுகிறது.

தெருக்களில் மக்கள் பாடி நடனமாடியபோது ஒரு கெர்சன் குடியிருப்பாளர் தன்னுடைய மகிழ்ச்சியை விவரித்தார்.

முன்பு தன்னை ‘ஜிம்மி’ என்று மட்டுமே குறிப்பிட்ட அவர், தற்போது அலெக்ஸி சாண்டகோவ் என்ற தன்னுடைய முழுப் பெயரையும் பிபிசியிடம் வெளிப்படுத்தினார். “கெர்சன் இப்போது சுதந்திரமாக உள்ளது, இது வேறு மாதிரியாக உள்ளது, அனைவரும் இன்று காலையிலிருந்து அழுகிறார்கள்” எனக் கூறியதோடு, நகருக்குள் வருகை தந்த யுக்ரேனிய வீரர்களை அனைவரும் கட்டியணைக்க விரும்பியதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய மாதங்களில் யுக்ரேனின் துரிதமான எதிர்த்தாக்குதலைத் தொடர்ந்து, நகரின் இந்தக் கட்டுப்பாட்டு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அந்தத் தாக்குதல்களில் கெர்சன் அருகே 41 நிலைகளை மீண்டும் கைப்பற்றியதாக யுக்ரேன் தெரிவித்திருந்தது.

அதிபர் ஜெலென்ஸ்கி தனது மாலை உரையில், கெர்சன் மக்கள் காத்திருந்ததாகவும், யுக்ரைனை ஒருபோதும் அவர்கள் கைவிடவில்லை என்றும் கூறினார்.

ரஷ்ய சின்னங்கள் உட்பட தெருக்களில் இருந்து ஆக்கிரமிப்பாளர்கள் தங்கியதற்கான அனைத்து தடயங்களையும் அகற்ற கெர்சன் பகுதி மக்கள் பணியாற்றியதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, ரஷ்ய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் இந்தப் பின்வாங்கல் நடவடிக்கை அவமானகரமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது என்ற கூற்றை மறுத்தார்.

கிழக்கு மற்றும் தெற்கு யுக்ரைனின் நான்கு ஆக்கிரமிக்கப்பட்ட மாகாணங்களில் நடத்தப்பட்ட தாமே அறிவித்துக்கொண்ட வாக்கெடுப்பைத் தொடர்ந்து, கெர்சன் பகுதிகளை தனது சொந்த பிரதேசமாக ரஷ்யா கருதுகிறது.

இந்த வாக்கெடுப்பு சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை திரும்பப் பெற யுக்ரைன் தனது முயற்சிகளைத் தொடர்ந்தது.

கெர்சன் பகுதியில் இருந்து தன்னுடைய படைகளைத் திரும்பப் பெறுவதாக கடந்த புதன்கிழமை ரஷ்யா அறிவித்தது. ரஷ்ய படைகள் பின்வாங்கியதற்கு கடந்த வியாழக்கிழமை பெரிய ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் கூட 7 கிமீ வரை தாங்கள் முன்னேறியுள்ளதாக யுக்ரேன் தெரிவித்தது.

ஆனால், வெள்ளிக்கிழமை ரஷ்ய துருப்புகள் வெளியேறுவது விரைவாக நடந்தது. கெர்சன் பகுதியை ரஷ்யர்கள் கைவிட்டதாக உள்ளூர் மக்களிடம் இருந்து ஆரம்பக்கட்ட தகவல்கள் கிடைத்தன.

சுதந்திர சதுக்கத்தில் பொதுமக்கள் கொடியை அசைத்து, யுக்ரேன் வீரர்களை வாழ்த்தி கோஷமிட்டதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.

இன்று இரவு யாரும் தூங்கமாட்டார்கள் என்று வெள்ளிக்கிழமை நண்பகல் அலெக்ஸி சாண்டகோவ் தெரிவித்தார்.

கெர்சனில் உள்ள உள்ளூர் தொலைக்காட்சி சேவை யுக்ரேனிய ஒளிபரப்புடன் மீண்டும் இணைக்கப்பட்டது.

கெர்சன் பகுதி கிட்டத்தட்ட முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் யுக்ரேன் அதிகாரி தெரிவித்தார். மேலும், டினிப்ரோ ஆற்றின் மேற்கே பெரும் பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஷ்ய துருப்புகளின் கண்ணி பொறிகளின் அச்சத்திற்கு மத்தியில் யுக்ரேன் துருப்புகள் கவனமாக முன்னேறியதாக பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகர் யூரி சாக் கூறினார்.

அவர் பிபிசியிடம் பேசுகையில், சில ரஷ்ய வீரர்கள் நகரத்தில் தங்கியிருப்பதாக நம்பப்படுவதாகவும், அவர்கள் சீருடைகளைக் களைந்துவிட்டு, பொதுமக்கள் போல் மாறுவேடமிட முயன்றதாகவும் கூறினார். மேலும், அவர்களை சரணடையுமாறு யூரி சாக் வலியுறுத்தினார்.

கெர்சன் நகரம் மீண்டும் கைப்பற்றப்பட்டதையும் அவர் பாராட்டினார்.

எனினும், ரஷ்ய பதிலடி குறித்து எச்சரிக்கையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

2014ஆம் ஆண்டு ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகள் உட்பட மேலும் சில பகுதிகளை ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றுவோம் என்றும் அவர் உறுதிகொண்டுள்ளார்.

கெர்சன் பகுதியில் இருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறுவதாக கடந்த புதன்கிழமை ராணுவம் அறிவித்ததில் இருந்து தற்போதுவரை அதிபர் புதின் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c4n2ge4jgnzo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஏராளன் said:

தெருக்களில் மக்கள் பாடி நடனமாடியபோது ஒரு கெர்சன் குடியிருப்பாளர் தன்னுடைய மகிழ்ச்சியை விவரித்தார்.

மக்கள் சந்தோசமே எம் சந்தோசமும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

ரஷ்சியாவின் நோக்கமே உக்ரைனை ஆக்கிரமிப்பதல்ல.

ஆமாம்🤪

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

ஆனால் ரஷ்சியாவோடு இணைய விரும்பிய பிராந்திய மக்களை ரஷ்சியா கைவிடாது.

 

19 minutes ago, கிருபன் said:

ஆமாம்🤪

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

ஆனால் ரஷ்சியாவோடு இணைய விரும்பிய பிராந்திய மக்களை ரஷ்சியா கைவிடாது.

கெர்சன் மக்கள் விரும்பவில்லை என்பதால் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள் மானஸ்தர்கள்😛

  • கருத்துக்கள உறவுகள்

தந்திரமோ மந்திரமோ 

ரசிய சாம்ராஜ்ஜியத்திற்கு இது பெரும் அவமானம் 

எப்படி நாம் கணக்கில் வைத்து இருந்த ரசியா???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கெர்சன் மக்கள் விரும்பவில்லை என்பதால் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள் மானஸ்தர்கள்😛

 ஆப்கானில் US ம் மற்றயவர்களும் ஓடியது போல ஓடவில்லை என கிருபனுக்குக் கவலைபோல

🤣

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kapithan said:

 ஆப்கானில் US ம் மற்றயவர்களும் ஓடியது போல ஓடவில்லை என கிருபனுக்குக் கவலைபோல

🤣

ஏன் ஈராக்கில் ஐ எஸ்ஸிடம் தாங்கிகளையும் நவீன ஆயுதங்களையும் விட்டுவிட்டு ஓடின நேட்டோவை மறந்திட்டிங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

ஏன் ஈராக்கில் ஐ எஸ்ஸிடம் தாங்கிகளையும் நவீன ஆயுதங்களையும் விட்டுவிட்டு ஓடின நேட்டோவை மறந்திட்டிங்கள். 

எங்க மறக்கிறது...கிருபனுக்கு கற்பூர மூளை. ஒன்றை நினைவுபடுத்தினால் ( விசுகருக்கு நினைவிற்கு வருமோ தெரியாது),  மற்றவையெல்லாம் கிருபனுக்கு  உடனே நினைவிற்கு வரும். அதுதான்...

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ அணு எண்டாங்கள் ஆயுதங்கள் எண்டாங்கள். கடைசியில எல்லாம் நமத்துப்போன புஸ்வாணங்கள் தானா?🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கப்பித்தானும் நெடுக்கரும் ரஷ்யர்கள் கெர்சனை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் என்று ஒத்துக்கொள்கின்றீர்கள். இதன் பிறகு இங்கு குத்தி முறிய ஒன்றுமில்லை..

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

அப்ப கப்பித்தானும் நெடுக்கரும் ரஷ்யர்கள் கெர்சனை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் என்று ஒத்துக்கொள்கின்றீர்கள். இதன் பிறகு இங்கு குத்தி முறிய ஒன்றுமில்லை..

கெர்சனை ரஷ்சியா யுத்த இழப்பின்றி கைப்பற்றியது.  இப்போ அங்கு வாழ்ந்த ரஷ்சிய ஆதரவு மக்களை வெளியேற்றிவிட்டு வெளியேறி இருக்குது. இதனை தடுத்து நிறுத்த உக்ரைனாலோ.. நேட்டோவாலோ முடியவில்லை. அதுவே உக்ரைனின் நேட்டோவின் இயலாமைக்குச் சான்று. உக்ரைன் - நேட்டோ இந்த யுத்தத்தில் ரஷ்சியா தானாக வெளியேறிய பகுதிகளை ஊர்ந்து சென்று பார்த்துவிட்டு வெற்றி வெற்றி என்று கூவுவதுதான் நிகழ்கிறதே தவிர... ரஷ்சியாவின் எந்த நடவடிக்கையும் உக்ரைனாலோ.. நேட்டாவாலோ கட்டுப்படுத்த முடியவில்லை.. அல்லது தடுக்க முடியவில்லை. இதுவே அவர்களின் தோல்வியை செப்ப போதுமானது.

அந்த நகரத்தில் இருந்த முக்கிய அம்சங்களுடன் புதிய நிர்வாக தலைநகரையும் இப்பிராந்தியத்துக்கு அறிவித்துவிட்டது ரஷ்சியா. 

இந்த யுத்தத்தில் ரஷ்சியா அனாவசிய இழப்புக்களை ஆரம்பம் தொட்டு தவிர்க்கும் வகையில் தான் செயற்படுகிறது. அல்லது கீவை கைப்பற்றி முழு உக்ரைனையும் அது ஆக்கிரமித்து நின்றிருக்க முடியும். ஆனால்... படிப்படியாக அது உக்ரைனின் இராணுவத்தை பலவீனப்படுத்திக் கொண்டு வெளியேறியே வருகிறது. ஆனால்.. ரஷ்சியாவோடு இணைய விரும்பிய பகுதிகளில்.. நிலையான நிர்வாகக் கட்டமைப்புக்களை நிறுவுவதை அது திடமாகக் கையாள்கிறது. நேட்டோவை போல... எதிரிகளான.. ஐ எஸ்ஸிடமும்.. தலிபான்களிடமும்.. தமக்கு ஆதரவளித்த மக்களை விட்டுவிட்டு ஓடவில்லை ரஷ்சியா. 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா உக்கிரேனை ஆக்கிரமிக்கவில்லைத்தானே நெடுக்கர்?🤓

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

ரஷ்யா உக்கிரேனை ஆக்கிரமிக்கவில்லைத்தானே நெடுக்கர்?🤓

இதனை ரஷ்சியா யுத்தத்தினை ஆரம்பிக்க முதலோ சொல்லிட்டுது. இந்த யுத்தம் உக்ரனை நேட்டோ நீக்கம்... மற்றும் இராணுவ நீக்கம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக்குது. மேலும்.. 2014 இல் இருந்து மும்மரமாக உக்ரைனால்.. இனப்படுகொலைக்கு உள்ளாகும் டான்பஸ் பிராந்திய ரஷ்சிய மொழி பேசும் மக்களை சுதந்திரமாக வாழ உதவுவதும் என்று. அதோடு இணைந்து இப்போ இன்னும் இரண்டு பகுதி மக்களின் சுதந்திர வேட்கையையும் ரஷ்சியா நிறைவேற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளது. அந்த மக்களை நிர்கதியாக அதுவிடவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

அப்ப கப்பித்தானும் நெடுக்கரும் ரஷ்யர்கள் கெர்சனை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் என்று ஒத்துக்கொள்கின்றீர்கள். இதன் பிறகு இங்கு குத்தி முறிய ஒன்றுமில்லை..

நீங்கள் இதுவரை உக்ரேன் மக்களுக்காக  வடித்ததெல்லாம் முதலைக் கண்ணீர் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் அப்படித்தானே? 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

நீங்கள் இதுவரை உக்ரேன் மக்களுக்காக  வடித்ததெல்லாம் முதலைக் கண்ணீர் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் அப்படித்தானே? 

உங்களுக்கு எல்லாமே மாறித்தான் விளங்கும் என்பது வழமைதானே. மக்களின் அழிவுகளைப் பார்த்து கிஞ்சித்தும் இரக்கம் காட்டாமல் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு முண்டுகொடுப்பதுதான் உங்கள் வாடிக்கை. 

 

நெடுக்கர் வேறு இன்னோர் திரியில் பிரான்ஸின் இருந்து யாழில் போய் 15 வயதுச் சிறுமியை திருமணம் முடிக்க முயன்றவர் பிரான்ஸில் மலிஞ்சிருக்கும் உக்கிரேன் பெட்டையளைப் போயிருக்கலாம் என்று வகுப்பெடுத்தவர். இப்படித்தான் மனிதாபிமானம் பொங்குபவர்கள் இருக்கின்றார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

 

 

உக்ரைனின் பிரதேசங்களை புரின் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து கொண்டாடிய இந்த விடியோவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து இரசித்தேன்.
Russia! Russia! Russia!  🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.