Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மு.க. ஸ்டாலின் அரசில் அமைச்சராகிறார் உதயநிதி - டிசம்பர் 14இல் பதவியேற்பு - அடுத்த திட்டம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மு.க. ஸ்டாலின் அரசில் அமைச்சராகிறார் உதயநிதி - டிசம்பர் 14இல் பதவியேற்பு - அடுத்த திட்டம் என்ன?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம்,DMK

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மாநில அமைச்சரவை டிசம்பர் 14ஆம் தேதியன்று மாற்றியமைக்கப்படவுள்ளது. இதையொட்டி பதவியேற்பு விழாவுக்கான பணிகள் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தொடங்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) மே மாதம் 7ஆம் தேதி பதவியேற்றது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். புதிய அமைச்சரவை பதவியேற்று கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், அமைச்சரவையில் இதுவரை பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

 

கடந்த மார்ச் மாதம் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன், சில சர்ச்சைகளில் சிக்கியதையடுத்து, அவரிடமிருந்த துறை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சரான சிவசங்கரிடம் தரப்பட்டது.

சிவசங்கரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ராஜ கண்ணப்பனுக்கு அளிக்கப்பட்டது. இதற்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் எந்த மாற்றமும் நடைபெறவில்லை.

யாருக்கு என்ன துறை கிடைக்கலாம்?

திமுக

பட மூலாதாரம்,UDHAYANITHI STALIN

இந்த நிலையில், வரும் டிசம்பர் 14ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்படவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனும் சென்னை சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

அவருக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கவனித்துவரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும் முதலமைச்சர் வசம் உள்ள சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையும் அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தத் துறைகள் அவருக்கு அளிக்கப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்களை அமைக்குமென ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் மாநிலம் தழுவிய அளவில் அவருக்கு செல்வாக்கை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.

மேலும், சிறப்புத் திட்ட அமலாக்கம் என்பது பல்வேறு அமைச்சகங்களில் உள்ள சிறப்புத் திட்டங்களை கண்காணிக்கும் அமைச்சகம் என்பதால், இந்தத் துறையின் அமைச்சர் எல்லா அமைச்சகங்களில் இருந்தும் அவை அமல்படுத்தும் சிறப்புத் திட்டங்கள் குறித்த தகவல்களை கேட்டுப் பெற முடியும்.

இது தவிர, ஐ. பெரியசாமியின் துறையும் கே.ஆர். பெரிய கருப்பனின் துறையும் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் ஐ. பெரியசாமி. ஆனால், கூட்டுறவுத் துறை அவருக்கு ஒதுக்கப்பட்டதில் திருப்தியில்லை எனக் கூறப்பட்டு வந்தது.

ஆகவே, ஐ. பெரியசாமி வகித்துவந்த கூட்டுறவுத் துறை கே.ஆர். பெரிய கருப்பனுக்கும் கே.ஆர். பெரியகருப்பன் வகித்துவந்த ஊரக வளர்ச்சித் துறை ஐ. பெரியசாமிக்கும் மாற்றியளிக்கப்படலாம்.

இந்த அமைச்சரவை மாற்றங்கள் குறித்து ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.

உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டபோது, முதலமைச்சரே இது குறித்து அறிவிப்பார் என்பதைத் தாண்டி எதையும் சொல்லவில்லை.

'வாரிசு அரசியல்' சர்ச்சை

திமுக வாரிசு அரசியல்

மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், 'திமுக' வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக ஏற்கெனவே அக்கட்சி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது அந்த விமர்சனத்திற்கு கூடுதல்  வலு சேர்க்கக்கூடும்," என்கிறார்.

"கண்டிப்பாக அந்தக் குற்றச்சாட்டு எழுப்பப்படும். மக்களிடம் நிச்சயம் இது வெறுப்புணர்வை ஏற்படுத்தும். மிகக் கடினமான போராட்டத்திற்குப் பிறகு மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகியிருக்கிறார்.

உதயநிதி அமைச்சரான பிறகு, எல்லா அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் தங்கள் பகுதியில் உள்ள விழாக்களுக்கு உதயநிதியை அழைப்பார்கள். திறப்பு விழாக்களை ஏற்பாடு செய்வார்கள்.

இதற்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.  ஒரு கட்டத்தில் எல்லா அமைச்சர்களையும் விட உதயநிதி ஸ்டாலின்தான் சிறப்பாகச் செயல்படுகிறார் என்று மற்ற அமைச்சர்களே சொல்வார்கள்.

அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக உதயநிதியை 'துணை முதல்வர்' ஆக்குவார்கள். அதுதான் திட்டம் போலத் தெரிகிறது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.

இதற்கு முந்தைய காலகட்டத்தில், அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை முன்னிறுத்தியபோது இதுதான் நடந்தது என்கிறார் குபேந்திரன்.

"பிற மாவட்டங்களில் நடந்த விழாக்களில் ஜெயலலிதா முன்னிறுத்தப்பட்டார். கட்சிக் கூட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் ஜெயலலிதாவையே அழைத்தார்கள். தி.மு.கவில் மு. கருணாநிதியால் மு.க. ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டபோதும் அதுதான் நடந்தது.

இப்போது உதயநிதியை வைத்து இதைச் செய்கிறார்கள். ஆனால், இவர்களுக்கும் உதயநிதிக்கும் வித்தியாசம் இருக்கிறது. அவர், சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். அதனை நடத்தி, திரைப்படங்களையும் தயாரித்துக் கொண்டு அமைச்சர் பதவியையும் ஏற்பது பல கடுமையான விமர்சனங்களுக்கு வழிவகுப்பதோடு, ஆட்சிக்குக் கெட்ட பெயரையும் ஏற்படுத்தும்" என்கிறார் குபேந்திரன்.

உதயநிதி - சிறுகுறிப்பு

திமுக வாரிசு அரசியல்

பட மூலாதாரம்,UDHYANITHI STALIN

மு.க. ஸ்டாலினின் மூத்த மகனான உதயநிதி ஸ்டாலின், 2008ஆம் ஆண்டில் குருவி திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

இதற்குப் பிறகு 2009ல் வெளிவந்த ஆதவன் படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தார்.

இதுவரை சுமார் 15 படங்களில் நடித்துள்ள உதயநிதி, 2018ல் தான் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அவர் அறிவித்தார்.

2019இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்குப் பிறகு, 2019 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி திமுக இளைஞர் அணி செயலாளராகத் நியமிக்கப்பட்டார்.

2021ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார்.

https://www.bbc.com/tamil/articles/c3gp20p32p8o

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்கள் சிந்திக்கவேண்டிய நேரம் இது, ஸ்டாலினுக்கு அடுத்து முதல்வராக உதயநிதியை படிப்படியாக முன்னிறுத்துகின்றார்கள். உதய் முதல்வராக முடியுமானால், சீமானும் முதல்வராகலாம் (நான் சீமான் ஆதரவாளன் இல்லை). ஒரு குடும்பம் ஒட்டு மொத்த தமிழினத்தின் முதுகில் காலாகாலமாக சவாரிசெய்யப் போகிறதா இல்லையா என தீர்மானிக்கவேண்டிய இடத்தில் தமிழக மக்கள் இருக்கின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..💐 அந்த உலக மகா நடிப்பை பார்த்து கண் அவியாமல் தடுத்தமைக்கு..👍

டிஸ்கி :  

பதவி பிரமாணம் எடுத்தா சினிமாவில் நடிக்க ஏலாது..😊..☺️

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாலி said:

தமிழக மக்கள் சிந்திக்கவேண்டிய நேரம் இது, ஸ்டாலினுக்கு அடுத்து முதல்வராக உதயநிதியை படிப்படியாக முன்னிறுத்துகின்றார்கள். உதய் முதல்வராக முடியுமானால், சீமானும் முதல்வராகலாம் (நான் சீமான் ஆதரவாளன் இல்லை). ஒரு குடும்பம் ஒட்டு மொத்த தமிழினத்தின் முதுகில் காலாகாலமாக சவாரிசெய்யப் போகிறதா இல்லையா என தீர்மானிக்கவேண்டிய இடத்தில் தமிழக மக்கள் இருக்கின்றார்கள். 

நாம்தான் வெளியில் இந்த வாரிசு அரசியல் பற்றி அதிகம் அலட்டிகொள்கிறோம்.

அடிப்படை வசதிகள், நிலையான அரசு, வேலைவாய்பு, பொருளாதார நிலை, இலவசங்கள், மானியங்கள், சங்பரிவாரை தடுத்தல்….

இப்படி இன்னும் பல விடயங்களுக்கு பின் தான் தமிழக மக்களின் மனதில் வாரிசு அரசியல் ஒரு பிரச்சனையாகவே தெரியும் என்பது என் கருத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் வாரிசு அரசியலை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா? – அது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டதா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,க .சுபகுணம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி

இந்திய அரசியல் களம் முழுவதுமே வாரிசு அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. காங்கிரஸ் கட்சியில் தொடங்கி தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாமக வரையிலும் அது நீண்டுள்ளது.

திமுகவை பொருத்தவரை, கருணாநிதியின் மகன் ஸ்டாலின், மு.க. அழகிரி மகள் கனிமொழி என்று அனைவரையும் நேரடி அரசியலில் ஈடுபடுத்தினார். இவர்களின் வரிசையில் கருணாநிதியின் பேரனும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினும் தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு இப்போது முதல்வர் ஸ்டாலினின் அமைச்சரவையிலும் அங்கம் வகிக்க ஆயத்தமாகி வருகிறார்.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத்தை முன்பே அரசியல் களத்திற்குள் கொண்டு வந்தார். அந்த கட்சியில் விவி ராஜன் செல்லப்பாவின் மகன் விவிவிஆர் ராஜசத்யன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன், பி.ஹெச் பாண்டியனின் மகன் பிஹெச் மனோஜ் பாண்டியன் என்று பல அரசியல் தலைவர்களின் வாரிசுகள் உள்ளனர். இந்த பட்டியல் மேலும் நீள்கிறது.

 

 

மற்றொரு முக்கிய கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியிலும் இதேநிலை தான். பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் இப்போது அந்த கட்சிக்கு தலைவராக உள்ளார். இவற்றில், அந்தந்த கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், வாரிசு அரசியல்படி எந்த வாய்ப்புகளும் வழங்கப்படுவதில்லை, தகுதி உள்ளவர்களுக்கே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்று அவ்வப்போது கூறினாலும், வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்கள் ஓய்ந்தபாடில்லை.

இந்தச் சூழலில், தமிழக அரசியல் களத்தில் வாரிசு அரசியல் என்பது தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.

'வாரிசுகளின் அரசியல் வரவை தடுக்க முடியாது'

ஆனால், “இன்றைய நவீன தாராளவாத சமூகத்தில், தமிழகத்தில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கூட பண பலமும் அதிகார பலமும் இருந்து, அவற்றுடன் நன்கு செயல்படும் திறனும் ஒருசேர அமைந்தால் அரசியலில் அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை மறுக்க முடியாது,” என்கிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற அரசியல் ஆய்வாளர் ஆனந்தி.

மேலும், “அரசியலைப் பொறுத்தவரை, இன்றைய சூழலில் பின்புலம் அவசியமாகிறது. ஜனநாயகத்தில் முதலாளித்துவத்தின் அங்கம் வலுவாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தலில் பங்கெடுக்க அது தேவைப்படுகிறது. ஆனால், அது இருப்பது மட்டுமே ஒருவருக்கு வாய்ப்புகளை வழங்கிவிடாது. தனக்கு இருக்கும் அதிகார பின்புலத்தை, வளங்களை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியம்.

உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை, போட்டி மிகுந்த சமூகத்தில் தனிமனிதராக அவரிடம் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி, அரசியலில் தனது திறமையையும் காட்டியுள்ளார்.

கடந்த ஓராண்டில் தன்னால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதைக் காட்டி, தன்னை நிரூபித்திருக்கிறார். அப்படியிருக்கும்போது இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதை வாரிசு அரசியல் என்ற குறுகிய நோக்கோடு பார்ப்பது சரியல்ல,” என கூறுகிறார்.

“மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதுதான் கேள்வி”

“ஜனநாயகம் என்பது அடிப்படையில் மக்களுடைய தேர்வு. ஒருவர் தேர்தலில் போட்டியிட்டு வெல்கிறார்கள் என்றால், அவர் ஓர் அரசியல் தலைவரின் வாரிசு என்பதாலேயே பிறப்பால் அந்த வாய்ப்பை மறுப்பது எப்படி சரியாகும்?” என கேட்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம்.

அன்புமணி ராமதாஸ்

பட மூலாதாரம்,@DRRAMADOSS/TWITTER

“ஒருவர் தலைமையின் வாரிசாக இருப்பதாலேயே அவருக்கு வாய்ப்பைக் கொடுப்பது வேறு. ஆனால், தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை எப்படித் தவிர்க்க முடியும்?

ஜி.கே.வாசன் எடுத்த பாதை வாரிசு அரசியல். மாநிலங்களவை போன்றவற்றுக்கு தேர்வாவதில் வாரிசு அரசியல் பங்கு வகிப்பதாகக் கூற முடியும். அதையே சட்டமன்ற தேர்தலிலும் குறிப்பிட்டுவிட முடியாது. ஏனெனில், இங்கு, போட்டி உள்ளது, அதிலிருந்து மக்கள் தான் முடிவெடுக்கிறார்கள்.

ஒரு செங்கலை வைத்துக்கொண்டு மத்திய அரசின் ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்கியதைப் போன்ற அவருடைய அரசியல் நடவடிக்கைகள் கட்சிக்குள் கவனம் பெற்றன. இவருடைய முறைகள் ஆழமான அச்சுறுத்தலை உண்டாக்குவதாலேயே இப்படியான விமர்சனம் வைக்கப்படுகிறது.

வாரிசு அரசியல் என்பது ஜனநாயகரீதியான பார்வையே இல்லாத ஒன்று. ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், யாருடைய வாரிசாக இருந்தாலும் வெற்றி கிடைக்காது” என்கிறார் பன்னீர்செல்வம்.

மேலும், “ஒருவர் தலைமையின் வாரிசாக இருப்பதாலேயே வாய்ப்பு கொடுப்பது எப்படி சரியில்லையோ, அதேபோல் ஒருவர் தலைமையின் வாரிசு என்பதாலேயே வாய்ப்பை நிராகரிப்பதும் தவறு. அவருடைய அரசியலில் விமர்சனங்கள் இருந்தால் முன்வைக்க வேண்டும். மக்கள் அங்கீகாரம் உள்ளதா, கிடைக்கும் பொறுப்புக்கு உரிய திறமை உள்ளதா, நன்றாகச் செயல்படுபவரா என்பதைத்தான் கணக்கில் கொள்ள வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம்,FACEBOOK / UDHAYANIDHI STALIN

கட்சிகளுக்குள் அதிகாரத்திற்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு, அதிகாரத்திடமிருந்து விலகியிருப்பவர்களைவிட சற்று அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பது இயல்பான உண்மை. இதைத் தவிர்க்க முடியாது. இது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும். அரசியல் மட்டுமின்றி அனைத்துத் துறைகளுக்கும்கூடப் பொருந்தும்.

ஆனால், வாரிசுகளுக்கு அப்படி விரைவாகவும் சுலபமாகவும் வாய்ப்பு கிடைத்தாலும் அதை மக்களும் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தான் கேள்வி,” என்கிறார் பன்னீர்செல்வம்.

“இன்றைய நிலையில் இதைத் தவிர்க்க முடியாது”

கருணாநிதி குடும்பம்

“அண்ணா காலத்தில் அடிமட்ட தொண்டர் முதல் உழைத்துதான் வரவேண்டியிருந்தது. ஆனால், இன்றைய தேர்தல் அரசியலில் பின்புலம் இருந்தால்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

எந்த அடையாளமும் இல்லாத ஒருவரை முன்னிறுத்தி அடையாளம் காட்டினாலும், அவரிடம் பின்புலம் இல்லாமல் செயல்பட முடியாத சூழல் நடைமுறையில் நிலவுகிறது,” எனக் கூறுகிறார் ஆனந்தி.

மேலும், “இந்நிலையில், சில கட்சிகள் அதனூடாக சமூக நீதி பொறுப்புகளையும் சித்தாந்தங்களையும் ஏற்றுக்கொண்டு செயல்படுகின்றன. உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை, அவர் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர். இன்றைய நிலை மாறியிருப்பதால், பண பலம் முக்கியமாக உள்ளது. அதைத் தவிர்க்க முடியாது.

ஆனால், அந்த வளங்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். இனி வாரிசு அரசியல் என்று கூற முடியாது. அப்படி வருபவர்கள் தனிப்பட்ட முறையில் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

அதேநேரம் வாரிசு அரசியல் என்பது குடும்பத்திற்குள் இருந்து வருபவர்கள் மட்டுமே இல்லை. அனைத்துக் கட்சிகளிலும் தலைமையில் இருப்பவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மத்தியிலிருந்து தான் சரியான நபரைத் தேர்ந்தெடுக்கிறார்கள், அடுத்த வாரிசாகக் குறிப்பிடுகிறார்கள்.

அதையும் வாரிசு அரசியலில் குறிப்பிட முடியும். ஆனால், அப்படி வாரிசு அரசியல் எனக் கூறி அதற்குள் சுழன்று கொண்டிருக்காமல், அவர்கள் நன்கு செயல்படக்கூடியவரா என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்,” என்கிறார் ஆனந்தி.

https://www.bbc.com/tamil/articles/crgk03ke7j3o

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன புதினம்?

அமைச்சர் முதலமைச்சர் ஆகாவிட்டால்த் தான் புதினம்.

  • கருத்துக்கள உறவுகள்

யார் வந்தால் எங்களுக்கு என்ன இலங்கை தமிழ் மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் கொடுக்காவிட்டால் நன்று. 

  • கருத்துக்கள உறவுகள்

உடன் பிறப்புகள் இப்பவே சின்ன சின்னவரு இன்பநிதிக்கு முட்டு குடுத்து கரெட்டு பண்ண ஆரம்பிச்சிருப்பானுவ…

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

சங்பரிவாரை தடுத்தல்….

 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஏராளன் said:

 

இது நடக்கவில்லை என சொல்லவில்லை. எனக்கு தெரியாது.

ஆனால் இவர் சொல்லும் 2ம் யும் நிறுவ வேறு ஆதாரம் உண்டா? அறியத்தான் கேட்கிறேன்.

ஆனால் சங்பரிவாரை தடுத்தல் இந்த தனி மனிதர்களின் செயல்களில் தங்கி இல்லை. அது ஆழமான விடயம். முன்பே எழுதியுள்ளேன்.

இந்த ஏமாற்றுகாரர் இல்லாவிட்டால் பரிவார் வந்து விடும் என்ற நிலையில்தான் மக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

இது நடக்கவில்லை என சொல்லவில்லை. எனக்கு தெரியாது.

ஆனால் இவர் சொல்லும் 2ம் யும் நிறுவ வேறு ஆதாரம் உண்டா? அறியத்தான் கேட்கிறேன்.

ஆனால் சங்பரிவாரை தடுத்தல் இந்த தனி மனிதர்களின் செயல்களில் தங்கி இல்லை. அது ஆழமான விடயம். முன்பே எழுதியுள்ளேன்.

இந்த ஏமாற்றுகாரர் இல்லாவிட்டால் பரிவார் வந்து விடும் என்ற நிலையில்தான் மக்கள்.

இவர்களை நம்ப இயலாது என்பதற்காக இணைத்தேன், ஆனால் அவர் குறிப்பிடும் சம்பவங்களின் உண்மைத் தன்மை தெரியாது.
முன்னாள் விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவாளரான நாச்சியாள் சுகந்தி குறிப்பிடுவது போல் அவர்களது பண்ணையார்த் தனங்கள் வெளிப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இவர்களை நம்ப இயலாது என்பதற்காக இணைத்தேன், ஆனால் அவர் குறிப்பிடும் சம்பவங்களின் உண்மைத் தன்மை தெரியாது.
முன்னாள் விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவாளரான நாச்சியாள் சுகந்தி குறிப்பிடுவது போல் அவர்களது பண்ணையார்த் தனங்கள் வெளிப்படுகிறது.

நன்றி.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றிடுவேன்' - உதயநிதி ஸ்டாலின்

udhayanidhi stalin
14 டிசம்பர் 2022, 04:33 GMT
புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடந்த பதவியேற்பு விழாவில் திமுகவைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பதவியேற்றார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 2021 தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டு வென்றார்.

இத்துடன் தமிழ்நாடு அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது . இத்துறை இதுவரை அமைச்சர் சி. வீ. மெய்யநாதனிடம் இருந்தது. அவரிடம் இப்போது காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உள்ளது.

 

''எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களைச் செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாகக் கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்,'' என்று பதவியேற்ற பின்னர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

'வாரிசு அரசியல் என்ற விமர்சனம் புதிதல்ல'

பதவியேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி இனிமேல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் தற்போது நடித்துவரும் மாமன்னன் திரைப்படமே தமது கடைசிப் படம் என்றும் தெரிவித்தார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் திட்டமிடப்பட்டிருந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் அவர் கூறினார். தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன் என்று கூறிய அமைச்சர் உதயநிதி, வாரிசு அரசியல் என்ற விமர்சனம் தமக்குப் புதிதல்ல எனவும் கூறினார். தன் மீதான விமர்சனங்களுக்கு செயல் மூலம் பதிலளிப்பேன் என்று உதயநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம் அமைப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளோம். அதற்கான பணிகளைத் தொடங்கி, முடுக்கி விடுவதே என்னுடைய முதல்கட்ட பணியாக இருக்கும்.

அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையிலான நடவடிக்கைகளில், விளையாட்டுத் துறையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்குவோம்,” என்றார்.

மு.க. ஸ்டாலின் 2021இல் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றபின் செய்யப்படும் முதல் அமைச்சரவை விரிவாக்கம் இது. தமிழ்நாடு அமைச்சர்களில் சிலரின் துறைகளும் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cevdqqge25ro

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20221214-111530.jpg

IMG-20221214-111923.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

#

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதயநிதி ஸ்டாலின்: புதிய அமைச்சர் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்னென்ன?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
திமுக உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம்,@UDHAYSTALIN

 
படக்குறிப்பு,

அமைச்சரான பிறகு அரசு தலைமைச் செயலகத்தில் கோப்புகளை கவனித்து கையெழுத்திடும் உதயநிதி ஸ்டாலின்.

தமிழ்நாட்டின் புதிய அமைச்சராகியிருக்கும் உதயநிதி ஸ்டாலின், கட்சிக்குள் வலுவான நிலையில் இருந்தாலும் ஒரு அமைச்சராக அவர் தன்னை நிரூபித்தாக வேண்டும். அவர் முன்பாக இருக்கும் சவால்கள் என்னென்ன?

 

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி குறித்துப் பேசும்போது, சாதாரண தொண்டர்களுக்குக்கூட திடீரென சட்டப்பேரவை உறுப்பினராகும் வாய்ப்பும் அமைச்சராகும் வாய்ப்பும் கிடைக்கும்.

வேறு கட்சிகளில் அந்த வாய்ப்பில்லை. குறிப்பாக, தி.மு.கவில் ஒருவர் கட்சிப் படிநிலைகளில் மேலேறி வர, பல ஆண்டுகள் ஆகும் என்பார்கள்.

 

ஆனால், சட்டப்பேரவை உறுப்பினராகி ஒன்றரை ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், அமைச்சராகியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

திமுகவின் முதல் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தும், 2018ஆம் ஆண்டில்தான் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார் உதயநிதி ஸ்டாலின். அவரைப் பொறுத்தவரை, இந்த வளர்ச்சி அபாரமானதுதான்.

2018ஆம் ஆண்டு அறிவிப்புக்குப் பிறகு, 2019ல் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார் உதயநிதி ஸ்டாலின்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே திமுகவின் மிக முக்கிய அணியான இளைஞரணியின் செயலாளராக்கப்பட்டார் உதயநிதி.

இதற்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற உதயநிதி, அப்போதே அமைச்சராவார் என பேசப்பட்டது. ஆனால், அப்போது அமைச்சராக்கப்படாத நிலையில், ஒன்றரை ஆண்டுகள் கழித்து இப்போது அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.

உதயநிதிக்கு அளிக்கப்பட்டிருக்கும் துறை, இதற்கு முன்பு தமிழக அரசியலில் பெரிய முக்கியத்துவம் பெற்ற துறையாக கருதப்பட்டதில்லை.

திமுக உதயநிதி ஸ்டாலின்

ஆனால், தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் அரசு, எல்லா சட்டப்பேரவை தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்களை திறக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

ஆகவே, பணிகளை ஆய்வு செய்ய ஒவ்வொரு தொகுதிக்கும் செல்ல முடியும் என்பதோடு, எல்லாத் தொகுதியைச் சேர்ந்த மக்களோடும், தொண்டர்களோடும் உறவாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கும்.

ஆனால், இதையெல்லாம்விட அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்புத் திட்ட அமலாக்கம், பலரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

இதுதவிர, வறுமை நீக்கம் மற்றும் கிராமப்புற கடன் ஆகிய துறைகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் துறைகளைப் பொறுத்தவரை, தனித் துறையாகச் செயல்படாமல் பல்வேறு அமைச்சகங்களிலும் திட்டங்களைச் செயல்படுத்தி, கண்காணிக்கும் துறை. பொதுவாக முதலமைச்சர்கள் வசமே உள்ள இந்தத் துறை தற்போது உதயநிதிக்கு வழங்கப்பட்டிருப்பது, அமைச்சரவையில் அவரது முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

உதயநிதி ஸ்டாலினுக்குக் கிடைத்திருக்கும் முக்கியத்துவம் கட்சிக்குள் வெளிப்படையாக எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளவில்லை.

சொல்லப்போனால், அவருக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென மூத்த அமைச்சர்களே சொல்லும் நிலைதான் இருக்கிறது. ஊடகங்களிடம் பேசிய, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரே ஆகலாம் என்றார்.

கட்சியின் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள் அனைவரும் உதயநிதிக்கு ஊடகங்களில் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, தங்களது சமூகவலைதள பக்கங்களிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்சிக்குள் ஏற்கனவே அமைச்சர் அன்பில் மகேஷ் போன்றவர்கள், உதயநிதி ஆதரவுக் குழுவின் முக்கிய அங்கமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலினின் அரசியல் நுழைவும் வளர்ச்சியும் குறுகிய காலத்தில் நடந்திருக்கிறது என்ற விமர்சனங்களில் உண்மையில்லாமல் இல்லை.

கடந்த 2017, 2018ல்கூட, தனது குடும்பத்திலிருந்து இனி யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றுதான் மு.க. ஸ்டாலின் சொல்லிவந்தார்.

அதற்கு முன்பாக பல தருணங்களில் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என உதயநிதி ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உதயநிதிக்கு வாய்ப்பளிக்கவே மு.க. ஸ்டாலின் தயங்கியதாகச் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் எல்லாம் மாறிப் போயிருக்கின்றன.

தமிழ்நாடு அரசு

தனது 13 வயதில் 1966ஆம் ஆண்டில் கோபாலபுரத்தில் இளைஞர் திமுக என்ற அமைப்பைத் துவங்கி, அரசியலில் ஈடுபட ஆரம்பித்த மு.க. ஸ்டாலின் நெருக்கடி நிலை காலத்தில் சிறைக்குச் சென்றார்.

2006ல் அவர் அமைச்சராகப் பதவியேற்றபோது, கிட்டத்தட்ட நாற்பதாண்டு கால அரசியல் அனுபவம் அவரிடம் இருந்தது.

கட்சிக்குள் நிலவரம் இம்மாதிரி இருந்தாலும்  கட்சிக்கு வெளியில், குறிப்பாக பா.ஜ.க. போன்ற எதிர்க்கட்சிகள் உதயநிதியை முன்வைத்து தி.மு.கவை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

வாரிசுகளுக்கு மட்டுமே தி.மு.கவில் எதிர்காலம் உண்டு என்ற குற்றச்சாட்டை அவர்கள் முன்வைக்கின்றனர். அ.தி.மு.கவின் தலைவர்களும் வாரிசு அரசியல் குற்றச்சாட்டை கடுமையாக முன்வைத்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு

தமிழ் சினிமா உலகில் நடிப்பு, திரைப்படத் தயாரிப்பு, விநியோகம் என தீவிரமாகச் செயல்பட்டுவரும் உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்திற்குப் பிறகு நடிக்கப்போவதில்லை என அறிவித்திருக்கிறார். ஆனால், அவரது ரெட் ஜெயன்ட் மூவீஸ் தொடர்ந்து தயாரிப்பு மற்றும் திரைப்பட விநியோகப் பணிகளில் ஈடுபடுமா என்பது தெரியவில்லை.

அது தொடரும் பட்சத்தில், திரைப்பட விநியோகம் தொடர்பான சிறு பிரச்னைகூட அவரது அமைச்சர் பதவியுடன் இணைத்து விமர்சிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

"இவ்வளவு விமர்சனம் இருக்கும்போது, உதயநிதி ஸ்டாலின் கடினமாக உழைக்க வேண்டும். தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளக்கூடாது. சில அதிருப்தியாளர்கள் கட்சிக்குள் இருக்கக்கூடும். அவர் சரியாக நடந்துகொண்டால், திமுகவின் வருங்கால முகமாக இவர் இருக்கக்கூடும்.

திமுகவில் இரண்டு பிரிவு இருக்கிறது. ஒன்று, கருணாநிதியின் கீழ் பணிபுரிந்தவர்கள். மற்றொரு தரப்பினர் முழுமையாகப் புதியவர்கள்.

அவர்களுக்கு உதயநிதியின் வளர்ச்சி பெரிய பிரச்னை கிடையாது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான இளங்கோவன் ராஜசேகரன்.

ஆனால், அமைச்சரானதன் மூலமாகவே உதயநிதி தி.மு.கவின் அடுத்த தலைவர் என்பதை முடிவுசெய்துவிட முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"உதயநிதிக்கு முக்கிய துறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவர் கூர்மையாக கவனிக்கப்படுவார். அவர் எப்படி தன்னை மாற்றிக் கொள்கிறார் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது." என்கிறார் இளங்கோவன்.

https://www.bbc.com/tamil/articles/cjkj618dknpo

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

 

May be a cartoon of text that says 'after me. after me.. after me.. after me..'

 

May be a Twitter screenshot of 1 person and text that says 'Tweet இன்பநிதி உதய் @inbanithiudhay2 kandippa nan politics varamatten Translate Tweet 11:55 pm 13 Dec 22. Twitter Web App'

கண்டிப்பாக... நான் அரசியலுக்கு வர மாட்டன்.  
- கலைஞரின் கொள்ளுப் பேரன்,  இன்பநிதி உதய். - 

 

May be an image of 1 person and text that says 'aα ஓஹோ.. கதை அப்படி போகுதா'

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Dr Shalini Interview : திமுக பச்சை பார்ப்பனீயம்..பெரிய ஹீரோனு நெனப்பா? ஷாலினி விளாசல்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திமுகவிற்குள் ஜனநாயகம் இருக்கா? செத்து போய்டுச்சு! | Nachiyal Suganthi Interview

 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2022 at 17:01, நியாயத்தை கதைப்போம் said:

யார் வந்தால் எங்களுக்கு என்ன இலங்கை தமிழ் மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் கொடுக்காவிட்டால் நன்று. 

இவர் அமைச்சராகப் பொறுப்பேற்க முதல் ஒரு முதலமைச்சருக்கு எந்தளவு அதிகாரங்கள் இருந்ததோ அதற்கும் மேலாக அலுவலக ரீதியற்ற அதிகாரங்கள் குவிந்து கிடந்தன இவர் ஒரு தொகுதிக்குப் போகிறார் எனில் அதற்கு முன்னதாகவே சின்னவர் போகிறார் எனச் செய்திபோய் தலைமைச் செயலர் ரேஞ்சுக்கு அங்கு எல்லோரும் சம்பவ இடத்தில் நிற்பார்கள்

இதே நேரம் ஸ்ராலினின் மகள் புருசன் சபரிக்கும் உதயநிதிக்கும் இடையிலான முறுகலை முடிவுக்குக் கொண்டுவரவே இந்தப் பதவியேற்பு

சொல்லப்போனால் உதயநிதி ஸ்ராலினை பதவி இறக்கி டம்மியாகியுள்ளார்கள் அல்லது அவரது செயற்பாடுகளை வரையறுத்துக்கொண்டுள்ளார்கள்.

அதாவது  முகவும் சக்திவாய்ந்த, நிழல் முதலமைச்சர் இப்போ சாதாரண அமைச்சர் ஆகியிருக்கிறார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Elugnajiru said:

இவர் அமைச்சராகப் பொறுப்பேற்க முதல் ஒரு முதலமைச்சருக்கு எந்தளவு அதிகாரங்கள் இருந்ததோ அதற்கும் மேலாக அலுவலக ரீதியற்ற அதிகாரங்கள் குவிந்து கிடந்தன இவர் ஒரு தொகுதிக்குப் போகிறார் எனில் அதற்கு முன்னதாகவே சின்னவர் போகிறார் எனச் செய்திபோய் தலைமைச் செயலர் ரேஞ்சுக்கு அங்கு எல்லோரும் சம்பவ இடத்தில் நிற்பார்கள்

இதே நேரம் ஸ்ராலினின் மகள் புருசன் சபரிக்கும் உதயநிதிக்கும் இடையிலான முறுகலை முடிவுக்குக் கொண்டுவரவே இந்தப் பதவியேற்பு

சொல்லப்போனால் உதயநிதி ஸ்ராலினை பதவி இறக்கி டம்மியாகியுள்ளார்கள் அல்லது அவரது செயற்பாடுகளை வரையறுத்துக்கொண்டுள்ளார்கள்.

அதாவது  முகவும் சக்திவாய்ந்த, நிழல் முதலமைச்சர் இப்போ சாதாரண அமைச்சர் ஆகியிருக்கிறார். 

இல்லையாம் எல்லா அமைச்சையும் கண்காணிக்கிற பதவியும் குடுத்திருக்காம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதயநிதி ஸ்டாலினுக்கு உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு வாழ்த்து

By NANTHINI

16 DEC, 2022 | 10:03 AM
image

லகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் உதயநிதி ஸ்டாலினின் அமைச்சரவை பிரவேசம் குறித்து வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

தமிழக அரசியலில் புதிதாக அமைச்சரவையில் இணைந்திருக்கும் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது. 

இளம் தலைமுறையினர் அரசியலுக்கு வருவதற்கு உந்துகோலாக உங்கள் பணி அமையவும், அரசியல் மூலம் நம் தமிழ் சமுதாயம் மேன்மை அடையவும், அனைத்து துறைகளிலும் தமிழர்கள் மேன்மை அடையவும் உங்கள் பணிகள் அமைய வாழ்த்துகிறோம். 

தாங்கள் ஏற்றுள்ள இளைஞர் நலம் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் மூலம் தமிழகம் விளையாட்டு மாநிலமாக மட்டுமல்லாமல், சிறப்பு செயலாக்கத் திட்டத்தின் மூலம் அனைத்து துறைகளையும் முன்னெடுத்து வளரும் தமிழகமாக உள்ள தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக உங்கள் பணி சிறக்க, உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது என கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/143248

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.