Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?

தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தற்போதைய உப தலைவராக உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா பதவியில் இருந்து விலக போவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் நாளைய தினம் (சனிக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மத்திய குழு  கூட்டத்தின் போது  பதவி விலகலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அடுத்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு உட்பட ஏனைய மாவட்டங்களில் இளைஞர் சமுதாயத்துடன் ஒன்றித்து செயற்பட கூடிய ஒரு இளம் சிரேஷ்ட உப தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆகவே  தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நியமிக்க வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2023/1319053

  • Replies 148
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

இந்த சீத்துவத்தில உங்களுக்கு தீர்வு? அதுவும் வடக்கும் கிழக்கும் இணைத்து? பொலிஸ் அதிகாரத்தோட? இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுக்குப்பின் காலம் நினைத்தால், அதுவரை இலங்கையில் இனம் நிலைத்தால், உங்க

island

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை ஏக வசனத்தில் குறிப்பிடுவது தமிழ் மரபும் இல்லை,  யாழ்கள விதிமுறையும் அதற்கு இடமளிக்கவில்லை.  இப்படியாக  தமிழ் இனத்தின் மாண்பைக்  கெடுக்கும் நீங்கள்

MEERA

சாணக்கிய சிறீலங்கா சுதந்திர கட்சியில் இருந்தது உங்களுக்கு தெரியவில்லை..  செக்கா சிவலிங்கமா என்று தெளிவுபடுத்த யாழ்ப்பாணத்தவன் தான் உங்களுக்கு தேவை…

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்போ...தலைவர் யார்  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Kapithan said:

அப்போ...தலைவர் யார்  🤣

மாவையார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, தமிழ் சிறி said:

மாவையார். 😂

அந்த மனுசன் நடக்கவே ஏலாமல் கிடக்க, இதில நீங்க வே..🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முள்ளிவாய்க்கால் அவலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர் உயிர்களை கொலைக்களத்தில் பலியிட்ட மகிந்த ராஜபக்ஸவின் கைகளிலிருந்த இரத்தவாடை அகலாதபோது அவனது கைகளைக் குலுக்கி பிள்ளையானுடன் சேர்ந்து கிழக்கில் கொலைக்களமாடிய சாணாக்கியன் தந்தை செல்வாவால் வளத்தெடுக்கப்பட்ட தமிழரசுக்கட்சிக்கு உபதலைவரக வருவது தமிழினத்தில் சாபக்கேடு

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Kapithan said:

அந்த மனுசன் நடக்கவே ஏலாமல் கிடக்க, இதில நீங்க வே..🤣

அப்போ..... உங்கள் தெரிவு யார்? சுமந்திரனை தெரிவோமா? சம்பந்தன் தலைவராக இருக்கும்போது இவர் இருந்தால் என்ன உடைந்தா போய் விடும் கதிரை?  இவர்கள் என்ன சாதிக்கவா போகிறார்கள், கதிரையில் ஒட்டிக்கொண்டு இருக்கத்தானே போகிறார்கள்,  கதிரைக்குத்தானே பாரம்? இருந்துவிட்டுப்போகட்டுமேன்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?

அத்திவாரம் போட தொடங்கியாச்சு.....கிட்டடியிலை முகடும் வைச்சிடுவினம் 😎

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

 தலைவராக இருக்கும்போது இவர் இருந்தால் என்ன உடைந்தா போய் விடும் கதிரை?  இவர்கள் என்ன சாதிக்கவா போகிறார்கள், கதிரையில் ஒட்டிக்கொண்டு இருக்கத்தானே போகிறார்கள்,  கதிரைக்குத்தானே பாரம்? இருந்துவிட்டுப்போகட்டுமேன்? 

அது 👆

சாத்தானா கொக்கா 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

4 hours ago, Elugnajiru said:

முள்ளிவாய்க்கால் அவலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர் உயிர்களை கொலைக்களத்தில் பலியிட்ட மகிந்த ராஜபக்ஸவின் கைகளிலிருந்த இரத்தவாடை அகலாதபோது அவனது கைகளைக் குலுக்கி பிள்ளையானுடன் சேர்ந்து கிழக்கில் கொலைக்களமாடிய சாணாக்கியன் தந்தை செல்வாவால் வளத்தெடுக்கப்பட்ட தமிழரசுக்கட்சிக்கு உபதலைவரக வருவது தமிழினத்தில் சாபக்கேடு

என்னது? சாணக்கியன் பிள்ளையனுடன் சேர்ந்து கொலைக்களமாடினாரா? எங்கே எப்போது.  கையிருப்பதற்காக மலத்தையள்ளிப் பிறரில் வீசலாமா.  சாணக்கியன் தமிழ்த்தேசியப் பரம்பரையில் வந்தவர்.  அவரது பாட்டனார் தந்தை செல்லவாவுடன் இணைந்து தமிழரசுக் கோட்பாட்டை வளர்த்தெடுத்தவர்.   சிலருக்குச் செக்கும் தெரிவதில்லை சிவலிங்கமும் தெரிவதில்லை.  எல்லாவற்றுக்கும் யாழ்ப்பாணத்திலிருந்துதான் ஆட்களைக் கொண்டுவரவேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, karu said:

சாணக்கிய சிறீலங்கா சுதந்திர கட்சியில் இருந்தது உங்களுக்கு தெரியவில்லை.. 

செக்கா சிவலிங்கமா என்று தெளிவுபடுத்த யாழ்ப்பாணத்தவன் தான் உங்களுக்கு தேவை…

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, karu said:

என்னது? சாணக்கியன் பிள்ளையனுடன் சேர்ந்து கொலைக்களமாடினாரா? எங்கே எப்போது.  கையிருப்பதற்காக மலத்தையள்ளிப் பிறரில் வீசலாமா.  சாணக்கியன் தமிழ்த்தேசியப் பரம்பரையில் வந்தவர்.  அவரது பாட்டனார் தந்தை செல்லவாவுடன் இணைந்து தமிழரசுக் கோட்பாட்டை வளர்த்தெடுத்தவர்.   சிலருக்குச் செக்கும் தெரிவதில்லை சிவலிங்கமும் தெரிவதில்லை.  எல்லாவற்றுக்கும் யாழ்ப்பாணத்திலிருந்துதான் ஆட்களைக் கொண்டுவரவேண்டுமா?

சாணக்கியன் சுதந்திரக்கட்சியில் இருந்தபோது கிழக்கில் பிள்ளையான் ராஜபக்சக்களின் செல்லப்பிள்ளை சாணக்கியனுக்குத் தெரியாது கிழக்கில் எதுவும் நடக்கச் சாத்தியமில்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/1/2023 at 14:43, தமிழ் சிறி said:

மாவையார். 😂

அவர் தான்  தற்போதும் தலைவர்..........கேட்டது  புதிய தலைவர் யார்  ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, Elugnajiru said:

சாணக்கியன் சுதந்திரக்கட்சியில் இருந்தபோது கிழக்கில் பிள்ளையான் ராஜபக்சக்களின் செல்லப்பிள்ளை சாணக்கியனுக்குத் தெரியாது கிழக்கில் எதுவும் நடக்கச் சாத்தியமில்லை

சாணக்கியன் அரசியலுக்குள் நுழைந்த ஆரம்ப காலத்தில் தமிழர் தரப்பிலிருந்த பலர் அவருக்கு வழிவிடாது  குறுக்கே நின்றார்கள் அதனால் அவரால் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்புக்குள் நுழைய முடியவில்லை.  ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சி இதைச் சாதகமாக்கி அவரை உள்ளிழுத்தது.  அதனால் இளம் அரசியல் வாதியான அவர் தவிர்க்க முடியாமல் அவர்களுடன் இணைந்து சிலகாலம் செயலாற்ற வேண்டியிருந்தது.  மக்கள் மத்தியில்  உரிய செல்வாக்கை அவர் தனது முயற்சியினால் தேடிக்கொண்ட போது, சம்பந்தர் போன்ற தமிழ் தேசியத் தலைவர்கள் அவரின் தகுதியையுணர்ந்து தமக்குள் உள்வாங்கிக் கொண்டார்கள்.

சாணக்கியன் குடும்பம் பல தியாகங்களைச் செய்த குடும்பம்.  அவரின் பெரியப்பா சக்கரவர்த்தி இராசமாணிக்கம் இந்திய அமைதிப் படையினரால் அனியாயமாகக் கொல்லப்பட்டார்.   தனது மனைவியுடன் அநாகரிகமாக நடக்க முற்பட்ட   இந்திய இராணுவச் சிப்பாயைத் தாக்கித் தடுக்கமுற்பட்ட குற்றத்திற்காகவே அவர்மீது அந்தக் கொலைவெறித் தாக்குதல் கொடிய இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்டது. சும்மா கிழக்கைச் சேர்ந்தவர் என்ற காழ்ப்புணர்வில் சாணக்கியன்மீது பலர் ஏதாவது ஒரு சாக்கை வைத்து மலத்தையள்ளி வீசமுற்படுகிறார்கள்.   ஆனால் இன்றுள்ள இளந்தலைவர்களுள் மிகவும் தகுதிவாய்ந்த தமிழ் அரசியல்வாதி சாணக்கியனாவார்.  மக்கள் செல்வாக்கு அவருக்கு இருக்கும்வரை எந்த பொறாமை பிடித்த பிரதேச வெறியர்களாலும் அவரை அசைக்க முடியாது.  சும்மா குரைத்துவிட்டுப் போகவேண்டியதுதான்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வழிவிடாது குறுக்கே நின்றபடியால் சிங்கள அருவருடியாகி ரவுடியாகியது தமிழ் தேசியத்தை காக்க என்ற உங்கள் குரைப்பை ஊரிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.

தொடர்ந்து பிரதேசவாதத்தை வாந்தி எடுக்க வேண்டாம். திருகோணமலையைச் சார்ந்த சம்பந்தனை கூட்டமைப்பின் தலைவராக்கியது புலிகள். இன்றுவரை தொடர்கிறார்.

சிலவேளை திருகோணமலை கிழக்கில் இல்லையோ🤔

இந்த பெரியப்பா சித்தப்பா விடயங்கள் வடக்கிலும் நடந்துள்ளது, உங்களால் கழட்டி விடப்பட்ட திருகோணமலையிலும் நடந்துள்ளது.

எப்ப பார்த்தாலும் மலத்தோடேயே ……

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, MEERA said:

சும்மா ஏதோ காழ்ப்புணர்ச்சியில் பெரிய அரசியல்வாதி யென்ற எண்ணத்தில் குரைக்கிறீர்கள்.  புனைபெயருக்குள் ஒழிந்துகொண்டு உங்கள் பொறாமை பிடித்த அரசியல் வெறிக்குத் தீனி தேடுகிறீர்கள்.    தக்க உதாரணங்கள்  காரணங்களோடு சாணக்கியன் தமிழர்களுக்கு இழைத்த துரோகங்களைப் பட்டியலிடுங்கள்.  சாணக்கியனின் ஆதரவாளர்கள் அதற்குப் பதில் கூறுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, karu said:

சாணக்கியன் அரசியலுக்குள் நுழைந்த ஆரம்ப காலத்தில் தமிழர் தரப்பிலிருந்த பலர் அவருக்கு வழிவிடாது  குறுக்கே நின்றார்கள் அதனால் அவரால் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்புக்குள் நுழைய முடியவில்லை.  ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சி இதைச் சாதகமாக்கி அவரை உள்ளிழுத்தது.  அதனால் இளம் அரசியல் வாதியான அவர் தவிர்க்க முடியாமல் அவர்களுடன் இணைந்து சிலகாலம் செயலாற்ற வேண்டியிருந்தது.  மக்கள் மத்தியில்  உரிய செல்வாக்கை அவர் தனது முயற்சியினால் தேடிக்கொண்ட போது, சம்பந்தர் போன்ற தமிழ் தேசியத் தலைவர்கள் அவரின் தகுதியையுணர்ந்து தமக்குள் உள்வாங்கிக் கொண்டார்கள்.

சாணக்கியன் குடும்பம் பல தியாகங்களைச் செய்த குடும்பம்.  அவரின் பெரியப்பா சக்கரவர்த்தி இராசமாணிக்கம் இந்திய அமைதிப் படையினரால் அனியாயமாகக் கொல்லப்பட்டார்.   தனது மனைவியுடன் அநாகரிகமாக நடக்க முற்பட்ட   இந்திய இராணுவச் சிப்பாயைத் தாக்கித் தடுக்கமுற்பட்ட குற்றத்திற்காகவே அவர்மீது அந்தக் கொலைவெறித் தாக்குதல் கொடிய இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்டது. சும்மா கிழக்கைச் சேர்ந்தவர் என்ற காழ்ப்புணர்வில் சாணக்கியன்மீது பலர் ஏதாவது ஒரு சாக்கை வைத்து மலத்தையள்ளி வீசமுற்படுகிறார்கள்.   ஆனால் இன்றுள்ள இளந்தலைவர்களுள் மிகவும் தகுதிவாய்ந்த தமிழ் அரசியல்வாதி சாணக்கியனாவார்.  மக்கள் செல்வாக்கு அவருக்கு இருக்கும்வரை எந்த பொறாமை பிடித்த பிரதேச வெறியர்களாலும் அவரை அசைக்க முடியாது.  சும்மா குரைத்துவிட்டுப் போகவேண்டியதுதான்.

கரு அவர்களே,

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் தனக்கான அரசியல்தளம் இல்லாதபோது தமிழினத்தை இல்லாதொழிக்கிறேன்பேர்வழி எனக்கோசமிட்டு அதையே செய்த தம்ன எதிரிகளுடன் சேர்ந்து அரசல் செய்யப் புறப்பட்டவர் சாணாக்கியன் எனக்கூறுகிறீர்கள் உங்களுக்கு எபடி இந்தமாதிரிக்கூற மனம் வருகிறது?

சாணாக்கியனது கூட்டமைப்புக்குள்ளான வரவு என்பது ஒரு வெற்றிடத்தை நிரப்புவதற்கான வரவாகும் அதாவது விஜாளேந்திரனது கூட்டமைப்பைவிட்டு வெளியேற்றம்தான் சாணாக்கியனை உள்வாங்கியது அல்லது சாணாக்கியன் உள்நுளையச் சந்தர்ப்பம் தந்தது மகிந்தவுடன் இணைந்திருக்கும்போது சாணாக்கியனுக்கு இருந்த தனிப்பட்ட வாக்குகள் மற்றும் விஜாளேந்திரனது வெளியேற்றத்தின் பின்னால் கூட்டமைப்பின் வாக்குகள் ஆகியவற்றைக் குறிவைத்தே சாணாக்கியன் உள் நுழைக்கப்பட்டார், தவிர சிங்களம் தனது நிகழ்சி நிரலை முன்னிறுத்த சுமந்திரனை எப்படி கூட்டமைப்புக்குள் நுழைத்ததோ அதன்பின்னரான சுமந்திரனின் தகிடுதித்தப்க்களால் தமிழர் மத்தியில் அவர் செல்லாக்கசாகிப்போகும்போது சாணாக்கியனது உள்நுழைவினான் சிங்களம் தனது நிகழ்சிநிரலைத் தங்குதடையின்றித் தொடரவே சிங்களத்தால் உள்நுளைக்கப்பட்டார். 

சிங்களத்தில் முழக்கமிடுவது கண்டித்திருத்துவக் கல்லூரியில் படித்த ஆங்கிலத்தில் முழங்குவது தமிழின் தனிநாடு எனக் கத்துவது இவைகளை ரஜனி கமல் அஜித் வஜை போன்ற நடிகர்களது விசிலடித்தான் ரசிகர்கள்போல் புழுகுவதை நிறுத்துங்கோ.

சுமந்திரனது வண்டவாளம் எப்படி வெளுத்துப்போனதோ அதேபோல் சிங்களத்தின் சிலீப்பர் செல் சாணாக்கியனது வண்டவாளமும் வெளிக்கும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, karu said:

மக்கள் மத்தியில்  உரிய செல்வாக்கை அவர் தனது முயற்சியினால் தேடிக்கொண்ட போது, சம்பந்தர் போன்ற தமிழ் தேசியத் தலைவர்கள் அவரின் தகுதியையுணர்ந்து தமக்குள் உள்வாங்கிக் கொண்டார்கள்.

அதாவது முன்னைய கட்சியில் இருந்த மக்களின் செல்வாக்கை உதறித்தள்ளி, தளமைத்து கொடுத்த கட்சியை விட்டு வந்தவர், நாளைக்கே வேறொரு கட்சிக்கு தாவமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? சஜித்தோடும் தாவலாம். சுமந்திரன் சொன்னார் "சாணக்கியன் இன்னும் மஹிந்தவுடன் தொடர்பிலிருக்கிறார் என" இது சாதாரண தொடர்பாயிருந்தால் அதை ஏன் குறிப்பிட்டு சொல்கிறார்? 

On 7/1/2023 at 09:27, குமாரசாமி said:

அத்திவாரம் போட தொடங்கியாச்சு.....கிட்டடியிலை முகடும் வைச்சிடுவினம் 😎

ஆங் ..... அது சுமந்திரனின் வேலை. சுமந்திரன்தான் இவரை கூட்டமைப்புக்குள் நுழைத்தது என்று கதை, பொறுத்திருந்து பாப்போம் முடிவை. முந்துவது யார் என்று?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 hours ago, MEERA said:

வழிவிடாது குறுக்கே நின்றபடியால் சிங்கள அருவருடியாகி ரவுடியாகியது தமிழ் தேசியத்தை காக்க என்ற உங்கள் குரைப்பை ஊரிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.

தொடர்ந்து பிரதேசவாதத்தை வாந்தி எடுக்க வேண்டாம். திருகோணமலையைச் சார்ந்த சம்பந்தனை கூட்டமைப்பின் தலைவராக்கியது புலிகள். இன்றுவரை தொடர்கிறார்.

சிலவேளை திருகோணமலை கிழக்கில் இல்லையோ🤔

இந்த பெரியப்பா சித்தப்பா விடயங்கள் வடக்கிலும் நடந்துள்ளது, உங்களால் கழட்டி விடப்பட்ட திருகோணமலையிலும் நடந்துள்ளது.

எப்ப பார்த்தாலும் மலத்தோடேயே ……

சும்மா ஏதோ காழ்ப்புணர்ச்சியில் பெரிய அரசியல்வாதி யென்ற எண்ணத்தில் குரைக்கிறீர்கள்.  புனைபெயருக்குள் ஒழிந்துகொண்டு உங்கள் பொறாமை பிடித்த அரசியல் வெறிக்குத் தீனி தேடுகிறீர்கள்.    தக்க உதாரணங்கள்  காரணங்களோடு சாணக்கியன் தமிழர்களுக்கு இழைத்த துரோகங்களைப் பட்டியலிடுங்கள்.  சாணக்கியனின் ஆதரவாளர்கள் அதற்குப் பதில் கூறுவார்கள்.  சாணக்கியனுக்கு  இருக்கும் செல்வாக்கு அவரது செயற் திறனால் ஏற்பட்டது.  ஊரில் வைத்து மட்டுமல்ல உலகத்திலும் இக்கருத்தை முன்வைக்கலாம்.   உங்கள் எழுத்தே உங்கள் பிரதேச வாதத்தை வாந்தியெடுக்கிறது.   அதை உங்கள் ஊரோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

Edited by karu
சில விடயங்கள சேர்க்கப்பட்டன
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, satan said:

அதாவது முன்னைய கட்சியில் இருந்த மக்களின் செல்வாக்கை உதறித்தள்ளி, தளமைத்து கொடுத்த கட்சியை விட்டு வந்தவர், நாளைக்கே வேறொரு கட்சிக்கு தாவமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? சஜித்தோடும் தாவலாம். சுமந்திரன் சொன்னார் "சாணக்கியன் இன்னும் மஹிந்தவுடன் தொடர்பிலிருக்கிறார் என" இது சாதாரண தொடர்பாயிருந்தால் அதை ஏன் குறிப்பிட்டு சொல்கிறார்? 

ஆங் ..... அது சுமந்திரனின் வேலை. சுமந்திரன்தான் இவரை கூட்டமைப்புக்குள் நுழைத்தது என்று கதை, பொறுத்திருந்து பாப்போம் முடிவை. முந்துவது யார் என்று?

டியர் சாத்தான்! சும்மா ஊகங்களை முன்வைத்து அரசியல் அலம்பல்களைச் செய்யாதீர்கள்.   ஏதாவது உருப்படியான கருத்துகள் நிரூபணங்களிருந்தால்  அதை முன்வைத்து சாணக்கியன்மீது பழிபோடுங்கள்.  முன்பும் இவ்வாறே அன்ரன் பாலசிங்கம் அண்ணரைச் சில அரை வேக்காடுகள் அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவரென்பதால் பழிபோட முற்பட்டார்கள்.   ஆனால் தேசியத்தலைவரிடம் இத்தகைய குறுகிய மனப்பான்மை கிடையாததால் அவர்களின் பழிபோடல்கள் செல்லாக்காசாகிப் போய்விட்டன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரை வேக்காடுகள் குரைப்புகள் மலம் வீசுதல் காழ்ப்புணர்ச்சி புனை பெயர் எல்லாம் உங்களுக்கே பொருந்துகிறது.

மகிந்த கூட்டாளிகளின் செல்லப்பிள்ளையாக இருந்து அவர்களின் கொலைவெறித்தாண்டவங்களுக்கு உடந்தையாக இருந்தவரை உங்களை போல் காழ்ப்புணர்ச்சி கொண்ட அரை வேக்காடுகள் குரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு மலம் அள்ளி வீசுவதாக நினைத்துக் கொண்டு தங்களின் முகத்திலேயே பூசிக் கொள்கிறீர்கள்.

இங்கு பிரதேசவாதத்தை கையில் எடுத்தது தாங்கள்.

திருகோணமலை கிழக்கா இல்லையா என்று கூட உங்களுக்கு தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, karu said:

அன்ரன் பாலசிங்கம் அண்ணரைச் சில அரை வேக்காடுகள் அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவரென்பதால் பழிபோட முற்பட்டார்கள்.   ஆனால் தேசியத்தலைவரிடம் இத்தகைய குறுகிய மனப்பான்மை கிடையாததால் அவர்களின் பழிபோடல்கள் செல்லாக்காசாகிப் போய்விட்டன.

யார் அன்ரன் பாலசிங்கம் மீது பழிபோட்டார்கள்? தலைவர் தேர்ந்தெடுத்தார் எல்லோரும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டார்கள். அப்படியானால் வி. முரளிதரன் எவ்வாறு தளபதியானார்? அப்போ தலைவர் யார்? நாங்கள் தமிழர் என்றே எல்லோரையும் கருதுகிறோம், யார் தவறு விடும்போதும் விமர்சிக்கிறோம், அதில் வேறுபாடு இல்லை. தவறை மட்டுமே சுட்டுகிறோம். அதை நீங்கள் பிரதேசமாக்கினால் அது உங்களில் ஏதோ தவறு. அப்படியானவர்களோடு கருத்து பரிமாற நான் தயாராயில்லை. நன்றி, வணக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, MEERA said:

அரை வேக்காடுகள் குரைப்புகள் மலம் வீசுதல் காழ்ப்புணர்ச்சி புனை பெயர் எல்லாம் உங்களுக்கே பொருந்துகிறது.

👆நானும் இதைத்தான் சொல்ல நினைத்தேன். புனை பெயரிலேயே (கரு..) தெரிகிறதே பிரதேச வாதம் பற்றி குரைப்பவரின் யோக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்ரன் பாலசிங்கம் அண்ணர் மட்டக்களப்பா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, குமாரசாமி said:

அன்ரன் பாலசிங்கம் அண்ணர் மட்டக்களப்பா?

இங்கு பிரதேசவாதத்துக்குள் திணிக்கிறார்கள், நாங்கள் யாரும் அதை தேடவுமில்லை, சொல்லவுமில்லை.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, குமாரசாமி said:

அன்ரன் பாலசிங்கம் அண்ணர் மட்டக்களப்பா?

குசா அண்ணை, இது கொஞ்சம் ஓவர்!!🤣

  • Haha 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.