Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, satan said:

இங்கு பிரதேசவாதத்துக்குள் திணிக்கிறார்கள், நாங்கள் யாரும் அதை தேடவுமில்லை, சொல்லவுமில்லை.

16 minutes ago, Eppothum Thamizhan said:

குசா அண்ணை, இது கொஞ்சம் ஓவர்!!🤣

பொழுது போகேல்லை....... சும்மா ஒரு இதுக்கு கேட்டுப்பாத்தனப்பா 😁

  • Haha 1
  • Replies 148
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

இந்த சீத்துவத்தில உங்களுக்கு தீர்வு? அதுவும் வடக்கும் கிழக்கும் இணைத்து? பொலிஸ் அதிகாரத்தோட? இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுக்குப்பின் காலம் நினைத்தால், அதுவரை இலங்கையில் இனம் நிலைத்தால், உங்க

island

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை ஏக வசனத்தில் குறிப்பிடுவது தமிழ் மரபும் இல்லை,  யாழ்கள விதிமுறையும் அதற்கு இடமளிக்கவில்லை.  இப்படியாக  தமிழ் இனத்தின் மாண்பைக்  கெடுக்கும் நீங்கள்

MEERA

சாணக்கிய சிறீலங்கா சுதந்திர கட்சியில் இருந்தது உங்களுக்கு தெரியவில்லை..  செக்கா சிவலிங்கமா என்று தெளிவுபடுத்த யாழ்ப்பாணத்தவன் தான் உங்களுக்கு தேவை…

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, குமாரசாமி said:

அன்ரன் பாலசிங்கம் அண்ணர் மட்டக்களப்பா?

இது தெரியாமல் இவ்வளவு காலமும் இருந்திருக்கிறீர்களே குமாரசாமி.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Eppothum Thamizhan said:

குசா அண்ணை, இது கொஞ்சம் ஓவர்!!🤣

அன்ரன் பாலசிங்கம் கிழக்கு மாகாணத்து மண்டூரைச் சேர்ந்தவர்.  சிறுவயதில் அவர் வாழ்ந்த இடம் சொறிக்கல்முனை என்னும் படுவான்கரைக் கிராமம்.  பின்னர் அவர் பெற்றோர்களால்  வடக்குக்குக் கூட்டிச் செல்லப்பட்டு அங்கேயே வாழ்ந்தார் படித்தார்.  இன்றும் அவரது இரத்த உறவுகள் மண்டூரில் வாழ்கிறார்கள்.  இவையெல்லாம்தான் உண்மைகள்.   நீங்கள்தான்  கொஞ்சம் ஓவராயிருக்கிறீர்கள்.   மண்டூர் தமிழரசுக்கட்சியின் தலைவர் மறைந்த திரு சின்னப்பு மூத்ததம்பி இராசமாணிக்கத்தின் - அதாவது சாணக்கியனின் அப்பப்பாவின் சொந்த ஊர்.  சும்மா வீட்டுப்படலையைக் கடந்து சப்பாத்துப்போட்டு லண்டனில் அல்லது புலம்பெயர் தேசத்திற்கு நேரே வந்து இறங்கியவர்களுக்கு  தெரிந்ததுதான் உண்மையென்று எண்ணி விடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, karu said:

சும்மா ஏதோ காழ்ப்புணர்ச்சியில் பெரிய அரசியல்வாதி யென்ற எண்ணத்தில் குரைக்கிறீர்கள்.  புனைபெயருக்குள் ஒழிந்துகொண்டு உங்கள் பொறாமை பிடித்த அரசியல் வெறிக்குத் தீனி தேடுகிறீர்கள்.    தக்க உதாரணங்கள்  காரணங்களோடு சாணக்கியன் தமிழர்களுக்கு இழைத்த துரோகங்களைப் பட்டியலிடுங்கள்.  சாணக்கியனின் ஆதரவாளர்கள் அதற்குப் பதில் கூறுவார்கள்.

May be an image of 1 person

சாணக்கிய ராகுல்’
என்ன கோதாரி இது 😳
பெயரே தமிழ்ல இல்லையே? இவர்  எப்படி தமிழ்த்தேசியத்தில உறுதியா இருப்பார்  என்டு நம்புறது?

1) சாணக்கியவின் அம்மா பறங்கிய இனத்தை சேர்ந்த சிங்கள பெண்மணி…
2) சாணக்கிய இந்து சமயத்தில் இருந்து சுமந்திரனின் மதமாற்ற குழுவான புரட்டஸ்தாந்து மதத்திற்கு மாறிய ஒருவன்.
3) சாணக்கியவின் காதலி கண்டிய சிங்கள பெண்(ஒரு அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்)
4) சுமந்திரன் போலவே பிறந்தது முதல் சிங்களவர்களோடு வாழ்ந்த ஒருவன். (தமிழ் மக்களின் உணர்வு எப்படி புரியும்?)

சுத்துமாத்தோட சேர்ந்த எவன் தான் ஒழுங்கானவனா இருந்திருக்கிறான்?

முடிந்தால் ஆதாரங்களோடு மறுத்துக்காட்டுங்கள்.

மேலும் கனடாவுக்கு ஆள்கடத்தலில் சாணக்கிய ராகுல் பெயரும் அடிபட்டதே ?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, பெருமாள் said:

May be an image of 1 person

சாணக்கிய ராகுல்’
என்ன கோதாரி இது 😳
பெயரே தமிழ்ல இல்லையே? இவர்  எப்படி தமிழ்த்தேசியத்தில உறுதியா இருப்பார்  என்டு நம்புறது?

1) சாணக்கியவின் அம்மா பறங்கிய இனத்தை சேர்ந்த சிங்கள பெண்மணி…
2) சாணக்கிய இந்து சமயத்தில் இருந்து சுமந்திரனின் மதமாற்ற குழுவான புரட்டஸ்தாந்து மதத்திற்கு மாறிய ஒருவன்.
3) சாணக்கியவின் காதலி கண்டிய சிங்கள பெண்(ஒரு அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்)
4) சுமந்திரன் போலவே பிறந்தது முதல் சிங்களவர்களோடு வாழ்ந்த ஒருவன். (தமிழ் மக்களின் உணர்வு எப்படி புரியும்?)

சுத்துமாத்தோட சேர்ந்த எவன் தான் ஒழுங்கானவனா இருந்திருக்கிறான்?

முடிந்தால் ஆதாரங்களோடு மறுத்துக்காட்டுங்கள்.

பெருமாள்!  சாணக்கியன் யார்? அவர் பூர்விக கிராமம் எது?  அவரது தாத்தா அதாவது அப்பப்பா யார் என்பதெல்லாம் ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த விடயம்.   அவர் சுத்தமான தமிழரசுக்கட்சிக் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதைக் கருத்திலெடுப்பதை விட்டுவிட்டு எப்படியாவது அவர்மீது களங்கம் கற்பிக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  சீமானை மலையாளி என்பது போலத்தான் இதுவுமொன்று.  இத்தாலிய ராகுல், அமெரிக்காவின் பராக் ஓபாமா, யுகேயின் ரிஷி என்று எத்தனையோ பேர் வந்துவிட்ட பின்பும் இன்றும் பிற்போக்குத்தனமான பிரதேச வாதத்தின் துணையுடன் அரசியல் மேதாவிகளாகத் தம்மை முன்னிறுத்த முனைபவர்களைக் கண்டும் காணாமல் விடுவது நமது இனத்துக்கு நாமே செய்யும் துரோகமென்பதால் இந்தப் பதிவில் சற்று முனைப்பாகப் பதிலிடுகிறேன்.   சாணக்கியனைச் சுற்றியுள்ள இந்தத் தேவையற்ற பிரதேசவாதப்  பொறாமைவலையைப் பிய்த்தெறிவதற்கு இன்னும் கூரிய ஆயுதங்கள்  தேவையாயிருக்கிறது.  தற்போது நீங்களும் சேர்ந்திருக்கிறீர்கள் கூடியவரை உங்களைப் போன்றவர்களின் முகமூடிகளைக் களைவேன். தற்போதைக்கு எனக்கும் அதிகம் வேலைகளில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மட்டக்களப்பு தந்தைக்கும் யாழ்ப்பாணத்து தாய்க்கும் பிறந்தவர் பாலா அண்ணா.

தற்போது உப தலைவராக இருக்கும் செல்வராசா மட்டக்களப்பை சேர்ந்தவர். அவருக்கு எதிராக யாழில் எவரும் இதுவரை கருத்தெழுதவில்லை.

ஆனால் சாணாக்கிய ராகுலின் திருவிளையாடல்களை எழுதியவுடன் பிரதேசவாதத்தை கையில் எடுத்தாச்சு.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்த காலம் தொட்டு இன்றுவரை கிழக்கை சேர்ந்த சம்பந்தன் தலைவர். 

தமிழரசுக் கட்சியின் தலைவராக 2014 வரை கிழக்கை சேர்ந்த சம்பந்தன்.

தமிழரசுக் கட்சியின் உப தலைவராக இன்று வரை மட்டக்களப்பை சேர்ந்த செல்வராசா.

இதிலிருந்தே தெரிகிறது பிரதேசவாத முகமூடிகள் யார் என்பது.

இன்று வரை கூட்டமைப்பிலும் தமிழரசுக் கட்சியிலும் வடக்கை சேர்ந்தவர்களே அதிகளவான பாராளுமன்ற உறுப்பினர்கள்.

கூட்டமைப்பிலிருந்து இதுவரை(?) கட்சி தாவியது மட்டக்களப்பு / கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, karu said:

பிற்போக்குத்தனமான பிரதேச வாதத்தின் துணையுடன் அரசியல் மேதாவிகளாகத் தம்மை முன்னிறுத்த முனைபவர்களைக் கண்டும் காணாமல் விடுவது நமது இனத்துக்கு நாமே செய்யும் துரோகமென்பதால் இந்தப் பதிவில் சற்று முனைப்பாகப் பதிலிடுகிறேன். 

சாணக்கியனை பற்றி உண்மையை இங்கு போட்டவுடன் பிரதேச வாதத்தை தூக்கி பிடிக்கிறியள் நீங்கள் தானே ராகுலை பற்றி இங்கு போடசொல்லி சவால் விட்டவர் மேல் எழுதியதில் பிழை இருப்பின் பிழை என்று நிறுவவும் அதை விட்டு .......................

1 hour ago, karu said:

கூடியவரை உங்களைப் போன்றவர்களின் முகமூடிகளைக் களைவேன்.

உங்களை போல நாங்கள் அல்ல முகமூடியை கழட்டிவைத்து விட்டுத்தான் இங்கு கருத்துக்களை வைக்கிறோம் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பெருமாள் said:

1) சாணக்கியவின் அம்மா பறங்கிய இனத்தை சேர்ந்த சிங்கள பெண்மணி…
2) சாணக்கிய இந்து சமயத்தில் இருந்து சுமந்திரனின் மதமாற்ற குழுவான புரட்டஸ்தாந்து மதத்திற்கு மாறிய ஒருவன்.
3) சாணக்கியவின் காதலி கண்டிய சிங்கள பெண்(ஒரு அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்)
4) சுமந்திரன் போலவே பிறந்தது முதல் சிங்களவர்களோடு வாழ்ந்த ஒருவன். (தமிழ் மக்களின் உணர்வு எப்படி புரியும்?)

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை ஏக வசனத்தில் குறிப்பிடுவது தமிழ் மரபும் இல்லை,  யாழ்கள விதிமுறையும் அதற்கு இடமளிக்கவில்லை.  இப்படியாக  தமிழ் இனத்தின் மாண்பைக்  கெடுக்கும் நீங்கள் உண்மையில் தமிழரா கேட்கலாம் தானே!   

அவர் மத மாற்று குழுவால் மதம் மாற்றப்பட்டார் என்பதற்கும் ஆதாரம் இல்லை. 

சாணக்கியன் ஒரு சிறந்த தமிழ் அரசியல்வாதி. தனது மண்ணில் நின்று அரசியல் செய்கிறார். அவர் தவறு செய்தால் மக்கள் அவரை நிராகரிப்பார்கள்.  

இங்கு அவர் என்ன தவறு செய்தார் என்ற கேள்விக்கு பதிலாக,  அவரின் குடும்பம் பற்றி அவதூறுகளை வீசும்  கேவலமான கீழ்மட்ட  அரசியலை விட சாணக்கியனின் அரசியல் பல மடங்கு மேலானது.

மிக இளம் வயதினரான அவர் உணர்ச்சி  வசப்படுவதை தவிர்தது  தனது அனுபவங்களின் மூலம் பலம் பெற்று  தன்னை சிறந்த அரசியல் தலைவராக பரிணமிக்கும் ஆற்றல் அவரிடம் உள்ளது.

 அதே வேளை இவர் மட்டும் போதும் என்று இருக்காமல் பல இளைஞர்கள் அவருக்கு போட்டியாக  அரசியலுக்கு வந்து ஆளுமை கொண்ட அரசியலை செய்வதன் மூலமே வயதானவர்களின் அறளை பெயர்நத அரசியலையும்,  அதற்கு நிகரான புலம் பெயர்ந்த சுயநலமிகளின் றிமூட் கொன்றோல் அரசிலையும் ஒழிக்க முடியும்.  

  • Like 5
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, island said:

நன்றி. இதே போன்ற கருத்தை நான் சொல்ல நினைத்து, எழுதி பின்னர் அழித்து விட்டுப் பேசாமல் இருந்து விட்டேன். என் பெயரும் தமிழ் அல்ல, மதமும் சைவமல்ல என்பதால்!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
30 minutes ago, Justin said:

நன்றி. இதே போன்ற கருத்தை நான் சொல்ல நினைத்து, எழுதி பின்னர் அழித்து விட்டுப் பேசாமல் இருந்து விட்டேன். என் பெயரும் தமிழ் அல்ல, மதமும் சைவமல்ல என்பதால்!

உங்கள் பெயர் தமிழ் அல்ல என்று நீங்களும் கூற முடியாது. வேறு யாரும்  கூறவும் முடியாது. தலைவர் பிரபாகரனின் மகனின் பெயர் சாள்ஸ் அன்ரனி.  அதுவும் நம்மை பொறுத்தவரை தமிழ் பெயர் தான். சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகமும் தமிழ் பெயர் தான். 

எம்மை அழிக்க நேரடியாக உதவிய வட இந்திய பெயர்களில் பல தமிழர்கள் உள்ளார்கள். நாம் இங்கு,  தமிழர் அரசியலை பற்றி உரையாடுகிறோமேயொழிய மத  அரசியல் பேசவில்லை. மதம் ஆன்மீகம் என்பது அவரவர் தனிப்பட்ட விடயம்.  

Edited by island
  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்த சீத்துவத்தில உங்களுக்கு தீர்வு?

அதுவும் வடக்கும் கிழக்கும் இணைத்து?

பொலிஸ் அதிகாரத்தோட?

இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுக்குப்பின் காலம் நினைத்தால், அதுவரை இலங்கையில் இனம் நிலைத்தால், உங்களுக்கு இன்னொரு அரிய தலைவன் வாய்க்கக்கூடும்.

அதுவரை இப்படியே இந்த மதவாத, பிரதேசவாத, இனவாத சகதியில் கிடந்து உழலுங்கள்

Edited by goshan_che
  • Like 6
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, island said:

உங்கள் பெயர் தமிழ் அல்ல என்று நீங்களும் கூற முடியாது. வேறு யாரும்  கூறவும் முடியாது. தலைவர் பிரபாகரனின் மகனின் பெயர் சாள்ஸ் அன்ரனி.  அதுவும் நம்மை பொறுத்தவரை தமிழ் பெயர் தான். சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகமும் தமிழ் பெயர் தான். 

எம்மை அழிக்க நேரடியாக உதவிய வட இந்திய பெயர்களில் பல தமிழர்கள் உள்ளார்கள். நாம் இங்கு,  தமிழர் அரசியலை பற்றி உரையாடுகிறோமேயொழிய மத  அரசியல் பேசவில்லை. மதம் ஆன்மீகம் என்பது அவரவர் தனிப்பட்ட விடயம்.  

உண்மை. ஆனால், அனேகர் என்று சொல்லா விட்டாலும் உரத்துப் பேசும் தேசியவாதிகள் "தூய" தமிழர்களைத் தான் எதிர்பார்க்கின்றனர் எனக் கருதுகிறேன். அந்த "தூய்மையின்" வரைவிலக்கணமும் மாறிக் கொண்டே இருக்கிறது, சில சமயங்களில் பெயர், சில சமயங்களில் மதம்- இப்படி ஒவ்வொரு நேரத்திற்கு ஒவ்வொரு அடிமட்டம் வைத்து தூய்மையை அளக்கின்றனர்.😂

உதாரணமாக இங்கே கரு , நான் அறிந்த வரையில், ஒரு தமிழறிஞர், ஆனால் அவரைக் கேளாக் கேள்வி கேட்போருக்கு பெயரில் மட்டும் தமிழ் இருப்பதாகப் பெருமை! இது தான் எங்கள் நிலை இன்று.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, Justin said:

உதாரணமாக இங்கே கரு , நான் அறிந்த வரையில், ஒரு தமிழறிஞர், ஆனால் அவரைக் கேளாக் கேள்வி கேட்போருக்கு பெயரில் மட்டும் தமிழ் இருப்பதாகப் பெருமை! இது தான் எங்கள் நிலை இன்று.

ஏன் ஜஸ்டின் கரு அவர்கள் கவிஞர் என்டால் அவர் சொல்வதற்கு அப்படியே தலையாட்ட வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ரதி said:

ஏன் ஜஸ்டின் கரு அவர்கள் கவிஞர் என்டால் அவர் சொல்வதற்கு அப்படியே தலையாட்ட வேண்டுமா?

வணக்கம் ரதி! ஒரு உரையாடலின் "பின் புலம் அல்லது பின்னணி" (context) என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? context - அதை எப்படிப் புரிந்து கொள்வது?

நடக்கிற உரையாடலை முதலில் இருந்து வாசித்து , எதற்கு நான் கருவின் தமிழறிவையும் , பெயரில் தமிழ் வைத்திருப்பவர் பற்றியும் சுட்டிக் காட்டியிருக்கிறேன் என்று கண்டு பிடியுங்கோ பார்ப்பம்?

இல்லா விட்டால் கருவிடம் உதவி கேளுங்கள்! 😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு என்டால் சந்தோசம் ...இன்னும் கொஞ்ச காலத்தில் இவரும்,சும்மும் சேர்த்து தமிழரசு கட்சியை மகிந்தாவின் கட்சியோடு சேர்த்து விடுவார்கள்😀 அல்லது கூட்டமைப்பை சிதறு தேங்காய் ஆக்கி விடுவார்கள்🙂 .

21 minutes ago, Justin said:

வணக்கம் ரதி! ஒரு உரையாடலின் "பின் புலம் அல்லது பின்னணி" (context) என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? context - அதை எப்படிப் புரிந்து கொள்வது?

நடக்கிற உரையாடலை முதலில் இருந்து வாசித்து , எதற்கு நான் கருவின் தமிழறிவையும் , பெயரில் தமிழ் வைத்திருப்பவர் பற்றியும் சுட்டிக் காட்டியிருக்கிறேன் என்று கண்டு பிடியுங்கோ பார்ப்பம்?

இல்லா விட்டால் கருவிடம் உதவி கேளுங்கள்! 😂

நீங்கள் எ.போ.தமிழனை சொல்கிறீர்கள் என்று விளங்குது...ஆனால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை...நான் ஒரு டியூப் லைட்😃  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கு  யாரும்  பிரதேசவாதம், குடும்பம் எதுவும்கதைக்கவில்லை, பாலா அண்ணை எந்த இடம் என்றுகூட  நாங்கள் ஆராய்ந்ததில்லை, பாலா அண்ணாவைப்பற்றி இங்கு யாரும் கருத்தெழுதவுமில்லை.  ஆனால் அத்தனையையும் இதற்குள் திணித்தது யார்? ஏன்? இதே முன்பு எம்மேல நடந்த இனப்படுகொலையை சர்வதேச பாதுகாப்புச்சபைக்கு கொண்டுபோகவேண்டும் என்று முன்னாள் நீதியரசர் கருத்து தெரிவித்தபோது சாணக்கியன் எப்படிப்பட்ட கருத்துக்களை அவருக்கெதிராக தெரிவித்தார் என்பதையும் தெரிவித்துவிட்டு, சாணக்கியனுக்கு வக்காலத்து வாங்குவது கற்றோருக்கழகு. அப்போ இங்கு யாரும் சாணக்கியனது கருத்துக்கெதிராக  பிரதேசவாதம் கதைக்கவில்லை. அதாவது தங்களுக்கென்றவுடன் பிரதேசவாதம், மற்றவர்களை எப்படியும் விமர்சிக்கலாம். இப்படிப்பட்டவர்களுக்கு கருத்தெழுத்தாமல் தவிர்ப்பதே சிறந்தது, இவர்களது திட்டத்துக்கு தூபம் போடாமல் விலகிச்செல்வோம்!                                

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, satan said:

இதில் பிழை கரு விலும் நீங்கள் உட்பட சகபாடிகளிடமும் 50:50 என்பது என் கருத்து.

நீங்கள் யாரும் சாணாக்கியன் மீது பிரதேசவாதத்தால் விமர்சனம் வைக்கவில்லை. உங்கள் விமர்சனம் - அவரின் சும் முடன் இணைந்த சுத்துமாத்து அரசியல் பற்றியே இருந்தது.

கரு இதை தவறாக பிரதேசவாதம் என வகைப்படுத்தினார். பிரதேசவாதம் என்பது சும்மா தூக்கி எறியும் வசவு அல்ல. அது ஒரு பெரும் குற்றச்சாட்டு. அதை பாவிக்க முன் அவர் யோசித்திருக்க வேண்டும்.

சரி பிழையாக பாவித்து விட்டார் - ஒரு சக தமிழன் நம்மை தவறாக விளங்கி கொண்டுள்ளார், அவருக்கு அதை தன்மையாக விளங்கபடுத்த எத்தனை பெயர் முயன்றீர்கள்?

மாறாக அவருக்கான பதில், சாணாக்கியனின் குடும்பத்தை இழுத்து, ஒரு காரணமும் இல்லாமல் அவரின் மதத்தை இழுத்து, உப்பு சப்பில்லாத பெயரை இழுத்து, பாலா அண்ணை மட்டகளப்பா என நக்கலடித்து முடிந்திருந்தது.

ஒரு சில்லறை மேட்டர் இது. இதில் கூட தமிழ் தேசியம் பேசும் தமிழருக்கிடையே புரிந்துணர்வு, விட்டு கொடுப்பு இல்லை.

நாங்கள் என்னத்தை கிழிச்சி என்னத்தை தைக்கப்போறம் தீர்வு எடுத்து.

பிகு

கரு என்ற பெயரை மட்டும் வைத்து அவரை கருணாவின் ஆள் என நான் நினைக்க இல்லை.

கருணா ஆதரவாளர் என்றால் (உ+ம் @ரதிஅக்கா) - அவர் உங்களை விட மோசமாக சாணக்கியனை எதிர்ப்பார்.

கரு முன்னரும் தமிழ் தேசியத்துக்கு எதிராக எழுதியதை நான் காணவில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, goshan_che said:

அவருக்கு அதை தன்மையாக விளங்கபடுத்த எத்தனை பெயர் முயன்றீர்கள்?

எந்த எழுத்தையும் வாசிக்கும் நிலையில் அவர் இல்லை என்பது அவரது அதிரடி, சவாலான எழுத்தின் போக்கு காண்பித்தது, நேரம் விரையம் மட்டுமே. உனடியாக பாலா அண்ணனை கொண்டு வந்ததிலிருந்து விளங்குகிறது. ஆனால் அதை நீங்கள் செய்திருக்கலாம் உபதேசிக்குமுன் என்பது எனது தாழ்மையான கருத்து.

26 minutes ago, goshan_che said:

பாலா அண்ணை மட்டகளப்பா என நக்கலடித்து முடிந்திருந்தது.

உண்மையாகவே பாலா அண்ணா எந்த இடம் என்பது இன்றுவரை எனக்கு தெரிந்திருக்கவில்லை, அதற்கான தேவையுமில்லை. நாம் எல்லோரும் ஒரு நோக்கத்திற்காக ஏதோ ஒருவகையில் எமது பங்களிப்பை எமக்கு முடிந்தவகையில் செய்திருக்கிறோம். நாம் ஒரு அடக்கப்பட்ட இனம் அவ்வளவே. இதில் எந்த வாதத்திற்கும் இடமில்லை.

26 minutes ago, goshan_che said:

கரு என்ற பெயரை மட்டும் வைத்து அவரை கருணாவின் ஆள் என நான் நினைக்க இல்லை.

நீங்கள் வேற எரியிற நெருப்பில புது கொள்ளியை செருகுகிறீர்கள்.  சாணக்கியனின் ஆதரவாளர் என்று தெளிவாக சொல்லியுள்ளார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, goshan_che said:

கருணா ஆதரவாளர் என்றால் (உ+ம் @ரதிஅக்கா) - அவர் உங்களை விட மோசமாக சாணக்கியனை எதிர்ப்பார்.

அக்காச்சியை கோத்து விட்டு கூத்துப்பாக்க ஆசைப்படுகிறார்!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

இங்கு  யாரும்  பிரதேசவாதம், குடும்பம் எதுவும்கதைக்கவில்லை, பாலா அண்ணை எந்த இடம் என்றுகூட  நாங்கள் ஆராய்ந்ததில்லை, பாலா அண்ணாவைப்பற்றி இங்கு யாரும் கருத்தெழுதவுமில்லை.  ஆனால் அத்தனையையும் இதற்குள் திணித்தது யார்? ஏன்? இதே முன்பு எம்மேல நடந்த இனப்படுகொலையை சர்வதேச பாதுகாப்புச்சபைக்கு கொண்டுபோகவேண்டும் என்று முன்னாள் நீதியரசர் கருத்து தெரிவித்தபோது சாணக்கியன் எப்படிப்பட்ட கருத்துக்களை அவருக்கெதிராக தெரிவித்தார் என்பதையும் தெரிவித்துவிட்டு, சாணக்கியனுக்கு வக்காலத்து வாங்குவது கற்றோருக்கழகு. அப்போ இங்கு யாரும் சாணக்கியனது கருத்துக்கெதிராக  பிரதேசவாதம் கதைக்கவில்லை. அதாவது தங்களுக்கென்றவுடன் பிரதேசவாதம், மற்றவர்களை எப்படியும் விமர்சிக்கலாம். இப்படிப்பட்டவர்களுக்கு கருத்தெழுத்தாமல் தவிர்ப்பதே சிறந்தது, இவர்களது திட்டத்துக்கு தூபம் போடாமல் விலகிச்செல்வோம்!                                

சாத்ஸ், இதை முன்னரே ஒரு இடத்தில் நான் சொல்லியிருக்கக் கூடும் உங்களுக்கு, மீளச் சொல்வதற்கு மன்னியுங்கள். நீங்கள் "தொனிச் செவிடு, tone-deaf" என நான் நினைக்கிறேன். கொள்ளி செருகும் நோக்கமில்லை, ஆனால் சுமந்திரன், சாணக்கியன் பற்றி மேலே எழுதப் பட்ட கருத்தொன்றில் மதவாதம் இருப்பதாக உங்களுக்குப் புரியவில்லையா அல்லது உங்கள் நட்புணர்வு அதைக் காண விடாமல் தடுக்கிறதா?

முதலில் ஐலண்ட் , பின்னர் கோசான் தவிர யாரும் கண்டிக்க முன்வரவில்லையென்பதைக் கவனித்தீர்களா? இந்தக் கள்ள மௌனம் தான் யாழ் களத்திலும், வெளியேயும் அரசியல் தலைவர்கள் மதம், தனிப்பட்ட குடும்பம் என்ற வகையில் தாக்கப் படுவதை இன்று வரை தொடர வைக்கிறது. இது போன்ற காரணிகள் அரசியல் வாதிகள் மீதான விமர்சனத்திற்கு அடிப்படையாக அமையவே கூடாதென்று வெளிப்படையாகச் சொல்லக் கூட உங்களுக்குத் தயக்கமா?   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, island said:

சாணக்கியன் ஒரு சிறந்த தமிழ் அரசியல்வாதி.

அப்படியா அவர் தமிழ் மக்களுக்கு இதுவரை செய்த ஒரு நாலு விடயத்தை இங்கு எழுதமுடியுமா ?

வரும் தேர்தலுக்கு ராகுல் (உண்மை பெயரால் அழைப்போம்) புதிய மொந்தையில் பழைய 'கள் அவ்வளவே .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, பெருமாள் said:

அப்படியா அவர் தமிழ் மக்களுக்கு இதுவரை செய்த ஒரு நாலு விடயத்தை இங்கு எழுதமுடியுமா ?

வரும் தேர்தலுக்கு ராகுல் (உண்மை பெயரால் அழைப்போம்) புதிய மொந்தையில் பழைய 'கள் அவ்வளவே .

இனிமேல் அது தமிழரசுக்கட்சியின் பிரச்சனை, அது நிலைத்திருந்தால் அதன்பின் கதைப்போம். இப்போதைக்கு நாம் இதை விட்டு கடந்து செல்வோம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, satan said:

இனிமேல் அது தமிழரசுக்கட்சியின் பிரச்சனை, அது நிலைத்திருந்தால் அதன்பின் கதைப்போம். இப்போதைக்கு நாம் இதை விட்டு கடந்து செல்வோம்!

யெஸ், யெஸ் கடந்து செல்வோம், ஒருத்தருக்கும் நோகாமல்! 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Justin said:

யெஸ், யெஸ் கடந்து செல்வோம், ஒருத்தருக்கும் நோகாமல்! 😂

கனபேருக்கு எரியிற நெருப்பில எண்ணெய் வார்த்து கொழுந்துவிட்டெரிவதை கூத்துப்பாத்து கைதட்ட ஆசையாய் இருக்கு. இந்த நடுவுநிலைமை எல்லா நேரங்களிலும் கடைபிடித்திருந்தால்; மதிப்பளிப்போம். சந்தர்பத்துக்கேற்ப பெரியவர்களாகிவிடுகிறார்கள் அவர்களையும் கடந்து செல்வோம்.

  • Like 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடேங்கப்பா… படத்தை பார்க்க  பகீரென்று இருக்குது. மன்னர் ஆட்சியில் நடப்பது போல், மக்களின் வரிப் பணத்தில் ராஜ வாழ்க்கை நடத்தி உள்ளார்கள். மகிந்தவுக்கு பல வாகனங்கள், இரண்டு நோயாளர் வண்டி என்றும் வைத்திருந்தவர்.  அங்காலை ரணிலுக்கு… 16 சமையல்காரர் தேவையாம். நாடு இருக்கும் நிலையில் அதனைப் பார்த்தாவது திருந்தி இருக்க வேண்டாமோ… இதற்குள்…. மக்களின் சேவகர்கள் என்று, அந்த மக்களின் தலையிலேயே சம்பல் அரைத்திருக்கின்றார்கள்.
    • சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரை       சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதற்கமைய,  பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி மற்றும் லக்ஷ்மன் நிபுணராச்சி ஆகியோரின் பெயர்களே முன்மொழியப்பட்டுள்ளதாக, அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கம் இது தொடர்பான இறுதி முடிவை இன்னும் சில நாட்களில் எட்டும். முன்னதாக சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பட்டியின் பெயர் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/சபாநாயகர்-பதவிக்கு-மூன்று-பெயர்கள்-பரிந்துரை/175-348719
    • தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம்!  தமிழரசுக்கட்சி சார்பாக  கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்றது.  தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,  எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தேசியத்துடன் பயணிக்கும் தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம் எனினும் நாளை (15) நடைபெறும் மத்திய குழுவில் கலந்துரையாடப்படும் என தெரிவித்தார்.   -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://tamil.adaderana.lk/news.php?nid=197279
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.