Jump to content

உயிர் எப்போது போகுமென தெரியவில்லை! உக்ரைன் போரில் களமிறங்கிய தமிழ் இளைஞன் வெளியிட்ட தகவல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உக்ரைன் இராணுவத்தினருக்கு உதவியாக போரில் களமிறங்கியுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு உக்ரைனில் உள்ள கார்கிவ் நகருக்கு மருத்துவம் படிக்க சென்ற சென்னை - ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் பாலா சங்கர் (32) என்பவரே  மருத்துவப் படிப்பு முடிந்த பின்னர் இவ்வாறு உக்ரைன் இராணுவத்தினருக்கு உதவியாக போரில் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞன் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைனில் மருத்துவப் படிப்பு முடிந்த பின்னர் உக்ரைனில் சுவையான தமிழக உணவுகளை விற்பனை செய்யும் உணவகத்தை ஆரம்பித்துள்ளார். அதன் பின்னர் 'கார்க்கிவ் தமிழ் சங்கம்' என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி நடத்தியுள்ளார்.

உயிர் எப்போது போகுமென தெரியவில்லை! உக்ரைன் போரில் களமிறங்கிய தமிழ் இளைஞன் வெளியிட்ட தகவல் | Ukraine Russia War India

இதனை தொடர்ந்து திருமணம் முடித்து குழந்தைக்கு 'மாறன்' எனப் பெயரிட்டு தனது சங்கத்தின் பெயரை 'மாறன் அறக்கட்டளை' என மாற்றியுள்ளார். அந்த அறக்கட்டளை மூலம் உதவி கேட்டு வரும் தமிழர்களுக்கும், உக்ரைனில் உள்ள ஏழைகளுக்கும் அவர் உதவி செய்து வந்துள்ளார்.

கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து, இந்தியர்களை மீட்பதற்காகவே சிறப்பு விமானங்கள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனால், பாலா சங்கரோ தனது சகோதரர்களையும், மனைவி, குழந்தைகளையும் தாய்நாட்டுக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் பல தடவை வலியுறுத்தியும், இந்தியா வர மறுப்பு தெரிவித்துள்ளார்.

உயிர் எப்போது போகுமென தெரியவில்லை! உக்ரைன் போரில் களமிறங்கிய தமிழ் இளைஞன் வெளியிட்ட தகவல் | Ukraine Russia War India

இதையடுத்து, உக்ரைன் இராணுவத்தில் இணைந்து போர் புரிய விருப்பமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில் பாலா சங்கரின் விண்ணப்பத்தினை பரிசீலித்த உக்ரைன் அரசு, அவருக்கு இராணுவத்தினருக்கு தேவையான உணவுப்பொருட்களையும், குடிநீரையும் விநியோகிக்க அனுமதியளித்துள்ளது.

மேலும், இராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், உளவு விமானங்கள் போன்றவற்றை அண்டை நாடுகளிடம் இருந்து வாங்கி வரும் பணியில் அவரை உக்ரைன் அமர்த்தியுள்ளது.

தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்து உக்ரைன் நாட்டுக்கு தேவையான ஆயுதங்களை வாங்கி கொடுத்து வருகின்றார்.

உயிர் எப்போது போகுமென தெரியவில்லை! உக்ரைன் போரில் களமிறங்கிய தமிழ் இளைஞன் வெளியிட்ட தகவல் | Ukraine Russia War India

இது தொடர்பில் பாலா தெரிவிக்கையில்,

இந்தியா எனது தாய்நாடு. அதே சமயத்தில், என்னை வாழ வைத்த நாடு உக்ரைன். எனக்கும், என் மனைவி, மகனுக்கும் உணவு கொடுத்த நாடு உக்ரைன். அப்படி இருக்கும்போது, அந்த நாட்டுக்கு ஒரு பிரச்சினை என்றால் எப்படி என்னால் அப்படியே விட்டுவிட்டு வர முடியும்?

எனது குடும்பத்தை பாதுகாப்பாக அனுப்பிவிட்டேன். நான் உக்ரைனை விட்டு செல்ல மாட்டேன். கடைசி மூச்சு இருக்கும் வரை உக்ரைனுக்காக போராடுவேன்.

தினம் தினம் மரணத்தை நேரில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். பல ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பியுள்ளேன்.

ஏவுகணைகளை விட ரஷ்ய உளவாளிகள் ஆபத்தானவர்கள். அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டுதான் ஆயுதங்களை எடுத்து வருகிறேன்.உயிர் எப்போது போகும் எனத் தெரியவில்லை. அதை பற்றிய பயமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/ukraine-russia-war-india-1673465365?itm_source=parsely-detail

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

நம்பீட்டோம் 🤣

எத??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

நான் உக்ரைனை விட்டு செல்ல மாட்டேன். கடைசி மூச்சு இருக்கும் வரை உக்ரைனுக்காக போராடுவேன்.

7 hours ago, பெருமாள் said:

தினம் தினம் மரணத்தை நேரில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். பல ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பியுள்ளேன்.

வீரவசனமாம்......
போய் புள்ள குட்டியள படிக்க வையுங்க சார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எத??

“”மேலும், இராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், உளவு விமானங்கள் போன்றவற்றை அண்டை நாடுகளிடம் இருந்து வாங்கி வரும் பணியில் அவரை உக்ரைன் அமர்த்தியுள்ளது.

தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்து உக்ரைன் நாட்டுக்கு தேவையான ஆயுதங்களை வாங்கி கொடுத்து வருகின்றார்.

அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டுதான் ஆயுதங்களை எடுத்து வருகிறேன்””

👆உத 

😀

Edited by Kapithan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

ஏன்  காட்டிப்போட்டு கொண்டு  போகிறார்  என்கிறீர்களா?

அல்லது  கண்டும்  காணாமல் விடுகிறார்கள்  என்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

ஏன்  காட்டிப்போட்டு கொண்டு  போகிறார்  என்கிறீர்களா?

அல்லது  கண்டும்  காணாமல் விடுகிறார்கள்  என்கிறீர்களா?

உக்ரேனில மருத்துவம் படித்துவிட்டு அங்கேயே தோசை சுட்டு விற்றுக்கொண்டிருந்தவர, ஓரிரவில் கழுதை KP லெவலுக்கு வெடியைக் கொழுத்தினால் நம்பித்தானாக வேண்டும் 🤣

Edited by Kapithan
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உக்ரேனில மருத்துவம் படித்துவிட்டு அங்கேயே தோசை சுட்டு விற்றுக்கொண்டிருந்தவர, ஓரிரவில் கழுதை KP லெவலுக்கு வெடியைக் கொழுத்தினால் நம்பித்தானாக வேண்டும் 🤣

நீங்கள் நம்புங்கோ விசுகு ஐயா நீங்கள் நம்புங்கோ. உங்களுக்கு, ரஸ்யாவுக்கு எதிராக யார் வெடியைக் கொழுத்தினாலும் காதைப்பொத்திக்கொண்டு நம்புவீங்கள்தானே 😀

நான் நம்புகிறேன்  என்று எங்கும் எழுதவில்லை

ரசியா  எனது (மானிடத்திற்கு) பரம எதிரி

எனவே யார் வெடி  வைத்தாலும் சந்தோசமே

அதேநேரம் இங்கே  நான் குறிப்பிட்டது  குறிப்பிடவிரும்புவது எவரது  நாட்டுப்பற்றையும் கேலி  செய்யாதீர்கள் என்பது. அப்படி  செய்வோமானால்  நாமும் எமத  நாட்டுப்பற்றை  நாமே கேலி  செய்தவராவோம். நன்றி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

இந்தியப் பிரசைக்கு உக்ரேன் மீது வருவது நாட்டுப்பற்றா?  உக்ரேன் யுத்தத்தில் பங்குபற்றும் பலருக்கு அந்த  யுத்தம் என்பது ஒரு war tour (tourism )மட்டுமே. இதில் அவரும் உள்ளடங்குவர். 

34 minutes ago, விசுகு said:

எனவே யார் வெடி  வைத்தாலும் சந்தோசமே

எமது விடுதலைப் போராட்டத்தில் மற்றவன் போராட, வெளிநாட்டிற்கு ஓடி வந்த எங்களில் பலர்  இப்படியான மனநிலையில் இருப்பது விசித்திரம் அல்ல. 

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

இந்தியப் பிரசைக்கு உக்ரேன் மீது வருவது நாட்டுப்பற்றா?  உக்ரேன் யுத்தத்தில் பங்குபற்றும் பலருக்கு அந்த  யுத்தம் என்பது ஒரு war tour (tourism )மட்டுமே. இதில் அவரும் உள்ளடங்குவர். 

அப்போ பிரான்சு  மீது  எனக்கிருப்பது???

ஒருவரது நாட்டுப்பற்றை சுற்றுலா  என்று  கேலி செய்வதும்

அதை ஒரு  ஈழத்தமிழர் செய்வதும் அபத்தம்...

உங்களுடன்  நேரத்தை  செலவளிப்பதே வீண்

நன்றி

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அப்போ பிரான்சு  மீது  எனக்கிருப்பது???

ஒருவரது நாட்டுப்பற்றை சுற்றுலா  என்று  கேலி செய்வதும்

அதை ஒரு  ஈழத்தமிழர் செய்வதும் அபத்தம்...

உங்களுடன்  நேரத்தை  செலவளிப்பதே வீண்

நன்றி

பிரான்சும் உக்ரேனுக்கு ஆயுத, பண, சரீர உதவிகள் செய்கிறது. அதற்கான  காரணம் என்ன? 

உக்ரேனுக்கான உங்கள் பங்களிப்பு என்ன ? இதை நீங்கள் உக்ரேனில் நின்று கூறுவீர்களானால் எனது சிந்தனை முறையில் பிழையிருப்பதாக ஏற்றுக்கொள்ள முடியும். 

(அனேகமாக அவர் உக்ரேனியக் குடியுரிமை பெற்றிருப்பதோடு. கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பிற்கு உள்ளாகியிருப்பார். இப்போது இந்தியர்களுக்கு வெடியைக் கொழுத்திப் போடுகிறார் 😀)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

அப்போ பிரான்சு  மீது  எனக்கிருப்பது???

ஒருவரது நாட்டுப்பற்றை சுற்றுலா  என்று  கேலி செய்வதும்

அதை ஒரு  ஈழத்தமிழர் செய்வதும் அபத்தம்...

உங்களுடன்  நேரத்தை  செலவளிப்பதே வீண்

நன்றி

நாட்டுப்பற்று உள்ளவர் ஏன் தனது குடும்பத்தை இந்தியாவுக்குத் திரும்பவும் அனுப்பினார் ? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

நாட்டுப்பற்று உள்ளவர் ஏன் தனது குடும்பத்தை இந்தியாவுக்குத் திரும்பவும் அனுப்பினார் ? 

நீங்கள்  போராளி என்றால்  அது  பிரபாகரன் போலிருக்கணும்  என்று  எதிர்பார்ப்பதற்கு நான்  என்ன  செய்யமுடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

நீங்கள்  போராளி என்றால்  அது  பிரபாகரன் போலிருக்கணும்  என்று  எதிர்பார்ப்பதற்கு நான்  என்ன  செய்யமுடியும்?

இது மிகவும் நியாயமான கேள்வி.

என்னிடம் பதிலில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ரசியா  எனது (மானிடத்திற்கு) பரம எதிரி

எனவே யார் வெடி  வைத்தாலும் சந்தோசமே

இதைத்தான் சிறிய கோட்டுக்கு முன்னால் பெரிய கோடு கீறுவது என்பது. அதை செவ்வனே மேற்குலகமும் அதன் ஊடகங்களும் உங்களைப்போன்றவர்களும் செய்கின்றீர்கள்.

மேற்குலகு இதுவரை காலமும் எவ்வித தீங்குகள் விளைவிக்காத போலவும் ரஷ்யா மட்டுமே உலகிற்கு அஜாரகமும் அழிவுகளையும் செய்கின்றது போன்றதொரு மாயத்தை உருவாக்குகின்றீர்கள்.

ஒரு 100 வருடங்களை கணக்கில் வைத்துக்கொண்டு மேற்குலகும் ரஷ்யா போன்ற நாடுகளும்  உலகிற்கு செய்த அழிவுகளை கூட்டிக்கழித்து பாருங்கள். நல்ல விடை வரும்.

இன்னுமொன்று....

ஈழ விடுதலைப்போராட்டத்திற்கு மேற்குலகு செய்த துரோகத்தை  விட ரஷ்யா பெரிதாக ஒன்றும் செய்யவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

ஆமை புகுந்த‌ வீடும் அமெரிக்க‌ன் புகுந்த‌ நாடும் நாச‌மாய் போன‌து தான் உண்மை வ‌ர‌லாறு..............அந்த‌ இட‌த்தில் இப்போது உக்கிரேன் 🤣😁😂

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

ஆமை புகுந்த‌ வீடும் அமெரிக்க‌ன் புகுந்த‌ நாடும் நாச‌மாய் போன‌து தான் உண்மை வ‌ர‌லாறு..............அந்த‌ இட‌த்தில் இப்போது உக்கிரேன் 🤣😁😂

சரியான இடத்தில் சரியான வார்த்தைகள். 👍🏼

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதைத்தான் சிறிய கோட்டுக்கு முன்னால் பெரிய கோடு கீறுவது என்பது. அதை செவ்வனே மேற்குலகமும் அதன் ஊடகங்களும் உங்களைப்போன்றவர்களும் செய்கின்றீர்கள்.

மேற்குலகு இதுவரை காலமும் எவ்வித தீங்குகள் விளைவிக்காத போலவும் ரஷ்யா மட்டுமே உலகிற்கு அஜாரகமும் அழிவுகளையும் செய்கின்றது போன்றதொரு மாயத்தை உருவாக்குகின்றீர்கள்.

ஒரு 100 வருடங்களை கணக்கில் வைத்துக்கொண்டு மேற்குலகும் ரஷ்யா போன்ற நாடுகளும்  உலகிற்கு செய்த அழிவுகளை கூட்டிக்கழித்து பாருங்கள். நல்ல விடை வரும்.

இன்னுமொன்று....

ஈழ விடுதலைப்போராட்டத்திற்கு மேற்குலகு செய்த துரோகத்தை  விட ரஷ்யா பெரிதாக ஒன்றும் செய்யவில்லை.

ஏற்புடையதல்ல

ரசியா மூடிய காது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

”மேலும், இராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், உளவு விமானங்கள் போன்றவற்றை அண்டை நாடுகளிடம் இருந்து வாங்கி வரும் பணியில் அவரை உக்ரைன் அமர்த்தியுள்ளது.

தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்து உக்ரைன் நாட்டுக்கு தேவையான ஆயுதங்களை வாங்கி கொடுத்து வருகின்றார்.

பத்திரிகைகள் கூட இதனை பிரசுரிக்கின்றன, ஆச்சரியமாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

ரசியா  எனது (மானிடத்திற்கு) பரம எதிரி

ரஷ்யா  உலக மானிடத்திற்கும் பரம எதிரி. ஒவ்வொன்றாக விழுங்கிவிடும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, vasee said:

பத்திரிகைகள் கூட இதனை பிரசுரிக்கின்றன, ஆச்சரியமாக இருக்கிறது. 

5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ரஷ்யா  உலக மானிடத்திற்கும் பரம எதிரி. ஒவ்வொன்றாக விழுங்கிவிடும்.

மானிடத்தின் முதல் எதிரி பரப்பப்படும் தவறான தகவல்களே. அடுத்த எதிரி பக்கச்சார்பான ஊடகங்கள். ஊடகங்கள் மீதான நம்பிக்கையை அழித்தவை ஊடகங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்போரே. 

இதன் பின்னர்தான் மிகுதியெல்லாம். 

தற்போது உக்ரேன் யுத்தம் ஊடகங்களின் முதற்பக்கத்திலிருந்து இரண்டாவது பக்கத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது. 

உக்ரேனின் மொத்த நிலப்பரப்பில் 30%மும் ரஸ்மொயாவிடம் இழக்த்தகப்பட்டு சனத்தொகையில் 30% மும் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டது. 

இரஸ்யாவை எதிர்கொள்ள உக்ரேனால் நிச்சயம் முடியாது என்பது உலகறிந்த உண்மை. 

தற்பொஇது நடைபெறும் போரை ராசதந்திரரீதியில் நிறுத்துவதே உகேனுக்குச் செய்யும் மிகப்பெரிய நன்மை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

ஏற்புடையதல்ல

ரசியா மூடிய காது

அன்று இன அழிப்பிற்கு உதவிய மேற்குலக நாடுகள் இதுவரை தமிழினத்திற்கு செய்தது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றுகொள்ளப்பட்ட எல்லா கணிப்புகளின் படியும்

மார்ச் 2022 இல் 29% அளவு உக்ரேனை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரஸ்யா. நவம்பர் 2022 இல் 15% ஐ கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

உண்மையை அறிய விரும்புவோர் கீழே உள்ள சுட்டிகளை தட்டி அறியலாம். அல்லது

கூகிள் மேப்பில் அண்ணளவாக அளந்து கூட பார்க்கலாம். 

#தரவு முக்கியம். 

https://www.aljazeera.com/amp/news/2022/2/28/russia-ukraine-crisis-in-maps-and-charts-live-news-interactive

https://www.lemonde.fr/en/les-decodeurs/article/2022/11/25/nine-months-of-war-in-ukraine-in-one-map-how-much-territory-did-russia-invade-and-then-cede_6005655_8.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

ஒருவர் நாட்டை இன்னொருவர் ஆக்கிரமிப்பு செய்வதைக் கூட பெருக்கி சந்தோஷப்படும் நாடு இழந்த மக்கள் கூட்டம்??

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.