Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மாநகரசபை முதல்வர் வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் போட்டி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாநகர சபை முதல்வர் வேட்பாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.

தமிழ் தேசியக் கட்சி இத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் தமிழ் அரசியல் கட்சிகள் பலவும் தமது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வீடு சின்னம் சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கவில்லை.

அது தொடர்பாக எம்.ஏ.சுமந்திரனிடம் வினவிய போது தேர்தலின் பின் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

யாழ்.மாநகரசபை முதல்வர் வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் போட்டி | Mayor Jaffna Municipality Election Sivajilingam

முதல்வர் வேட்பாளர்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்காளி கட்சியான ரெலோ சார்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் போட்டியிடுகின்றார்.

முன்னாள் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதுடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய நிர்வாகி ஆசிரியர் திலீபன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

https://tamilwin.com/article/mayor-jaffna-municipality-election-sivajilingam-1674299541

  • கருத்துக்கள உறவுகள்

தல… நீங்க ஜனாதிபதி வேட்பாளர்…முதலமைச்சர், மாநகர முதல்வர், வாசிகசாலை வாசகர் வட்டத்தலைவர் எதையும் விட மாட்டீங்க போலயே🤣

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுக் காசு கிடைக்குமா???

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

கட்டுக் காசு கிடைக்குமா???

கட்டு காசு போய்டும். ஆனால் காசு கிடைக்கும்🤣

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி... கால் வைக்காத இடமே இல்லை.
வருங்கால முதல்வர்.... சிவாஜிலிங்கம் வாழ்க.😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

தல… நீங்க ஜனாதிபதி வேட்பாளர்…முதலமைச்சர், மாநகர முதல்வர், வாசிகசாலை வாசகர் வட்டத்தலைவர் எதையும் விட மாட்டீங்க போலயே🤣

கீழே இருந்து மேலே

மேலே இருந்து கீழே.

இலங்கையில் என்னென்ன பதவிகள் இருக்குதோ சகலதிலும் போட்டி போட்டுத் தான் நிற்பேன்.

39 minutes ago, MEERA said:

கட்டுக் காசு கிடைக்குமா???

இதுக்கு கட்டுப்பணம் எவ்வளவு?

14 minutes ago, தமிழ் சிறி said:

வருங்கால முதல்வர்.... சிவாஜிலிங்கம் வாழ்க.😂

முடிவே பண்ணீட்டியளா?

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

கட்டு காசு போய்டும். ஆனால் காசு கிடைக்கும்🤣

பந்தயத்தில நொண்டிக் குருதை (குதிரை அல்ல) க்கும் இப்ப காசு கட்டுகிறார்களா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, வாலி said:

பந்தயத்தில நொண்டிக் குருதை (குதிரை அல்ல) க்கும் இப்ப காசு கட்டுகிறார்களா? 😂

எந்த குதிரையும் சண்டி குதிரை இல்லை எனும் போது, எந்த குதிரையும் வெல்ல வாய்புண்டுதானே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தல… நீங்க ஜனாதிபதி வேட்பாளர்…முதலமைச்சர், மாநகர முதல்வர், வாசிகசாலை வாசகர் வட்டத்தலைவர் எதையும் விட மாட்டீங்க போலயே🤣

சிங்கன் குருநாகலிலும் போட்டியிட்டவர்.🙂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

சிங்கன் குருநாகலிலும் போட்டியிட்டவர்.🙂

 முடியும் என்றால் குருஷேத்திராவிலும் கூட போட்டியிடுவார்🤣

1 hour ago, தமிழ் சிறி said:

வருங்கால முதல்வர்

வருங்கால ….வருங்கால…என திருப்பி திருப்பி சொன்னால்…..

காலை வாரும்….என வருகிறது 🤣

காலை வாரும் முதல்வர் ஜிவாசி வாழ்க!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தல… நீங்க ஜனாதிபதி வேட்பாளர்…முதலமைச்சர், மாநகர முதல்வர், வாசிகசாலை வாசகர் வட்டத்தலைவர் எதையும் விட மாட்டீங்க போலயே🤣

அவரின் சில செயல்கள் துணிகரமானவையாக இருந்தாலும் பல செயல்கள் ஈழத்துச் சுப்பிரமணியசுவாமி என்னும் அளவுக்கு இருக்கின்றது.தமிழ்க்காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் அதிகம் அறியப்படாதவராக இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

அவரின் சில செயல்கள் துணிகரமானவையாக இருந்தாலும் பல செயல்கள் ஈழத்துச் சுப்பிரமணியசுவாமி என்னும் அளவுக்கு இருக்கின்றது.

ஈழத்து சு சாமி அருமையான ஒப்பீடு. ஆனால் சு சாமி காரிய விசரன். நம்ம சிவாஜி அண்ணாகிட்ட காரியம் மிஸ்ஸிங்🤣

2 hours ago, புலவர் said:

தமிழ்க்காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் அதிகம் அறியப்படாதவராக இருக்கிறார்.

மணி மாரி பிரபல்யமானவரை போட்டால் - எங்கே தலைவரை மிஞ்சி, 3 தலைமுறையாய் குடும்ப சொத்தாக கட்டி காக்கும் சைக்கிளை உருட்டி கொண்டு போய்விடுவார்களோ என அம்பலத்தார் பயப்படுகிறார்.

ஆகவே யாரோ ஒரு அனானியை நிறுத்தியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

ஈழத்து சு சாமி அருமையான ஒப்பீடு. ஆனால் சு சாமி காரிய விசரன். நம்ம சிவாஜி அண்ணாகிட்ட காரியம் மிஸ்ஸிங்🤣

மணி மாரி பிரபல்யமானவரை போட்டால் - எங்கே தலைவரை மிஞ்சி, 3 தலைமுறையாய் குடும்ப சொத்தாக கட்டி காக்கும் சைக்கிளை உருட்டி கொண்டு போய்விடுவார்களோ என அம்பலத்தார் பயப்படுகிறார்.

ஆகவே யாரோ ஒரு அனானியை நிறுத்தியுள்ளார்கள்.

மணி பிரிந்தபோது மணிமேல் அனுதாபம் இருந்தது பிரிந்தபின் அவர் அடிக்கும் கூத்துகளைப்பார்த்தால் கஜே சரியான நேரத்தில் ஆளை நீக்கியிருக்கிறார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது.மாநகரசபை அமர்வுகளுக்கே சமூகமளிக்காதபடி சுமத்திரன் வழக்கால்தடைப்பட்டிருந்தவர் அதே சுமத்திரன் தயவினாலும் ஈபிடிபி தயவினாலும் மேயரானவர்.ஆடியகூத்துகளுக்கும் இப்போது ஆடிக்கொண்டிருக்கிற சுத்துகளுக்கும் தமிழ்த்தேசிய முன்னணி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால் என்ன ஆட்டம் ஆடுவார். யாருடனும் கூட்டுச் சேரத்தயாரான பேர்வழி.கஜேக்கள் ஆபத்தான முள்மரத்தை முளையிலேயே டி கிள்ளி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புலவர் said:

மக்கள் மணிக்கு என்ன  விடை கொடுக்கப்போகிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nunavilan said:

மக்கள் மணிக்கு என்ன  விடை கொடுக்கப்போகிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

அதே

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2023 at 14:59, தமிழ் சிறி said:

சிவாஜி... கால் வைக்காத இடமே இல்லை.
வருங்கால முதல்வர்.... சிவாஜிலிங்கம் வாழ்க.😂

வாய்ப்பில்லை...எனது மிக நெருங்கிய உறவினர் தியாகி அண்ணா யாழ்ப்பாணத்தில். மட்டும் போட்டி இடுகிறார்.   இவர் அறப்பணி தியாகி நல்லுர். நாவலர்.  தெருவில் உண்டு”    அவரது அறிவிப்பு   1....சம்பளம் எதிர்பார்க்கக்கூடாத........2.கூட்டங்கள் நடக்கும் போது   உணவுகள் போன்ற செலவுகள் சொந்தமாக. ....உறுப்பினர்கள் கைப்பணத்தில்.  செய்ய வேண்டும்  .. இன்னும் பல உண்டு” எவரும் அவர் சொன்ன கொள்கை எற்றுக்கொண்டு இணைந்து போட்டியிட முடியும்   ...நிறைய உதவிகள் செய்துள்ளார்.  வெல்லுவார்.  என நம்புகிறேன்   யாழ்ப்பாணம் ஒரு உலகத்தரம் வாய்ந்த  மாநகரம். ஆக்குவது அவர் நோக்கம்    சொந்த பணத்தை போட்டு செலவு செய்வார் முக்கியமாக ஒரு சதமும்  கொள்ளை அடிக்கமாட்டார். 😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

உங்களுக்கு… ஆனந்தசங்கரி சொந்தம், தியாகி சொந்தம் என்று…
எல்லா அரசியல்வாதிகளும் உங்கள் குடும்பத்தில் இருந்து வருகிறார்கள் போலுள்ளதே. 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

மக்கள் மணிக்கு என்ன  விடை கொடுக்கப்போகிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Priya விடை!😂

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2023 at 13:59, தமிழ் சிறி said:

சிவாஜி... கால் வைக்காத இடமே இல்லை.
வருங்கால முதல்வர்.... சிவாஜிலிங்கம் வாழ்க.😂

இவர் போன இடம் முழுக்க குழப்பம்தான்  சிவாஜி லிங்கம் அல்ல  கோமாளி லிங்கம் .

On 21/1/2023 at 13:35, goshan_che said:

கட்டு காசு போய்டும். ஆனால் காசு கிடைக்கும்

உங்களுக்கு விளங்குது .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

உங்களுக்கு… ஆனந்தசங்கரி சொந்தம், தியாகி சொந்தம் என்று…
எல்லா அரசியல்வாதிகளும் உங்கள் குடும்பத்தில் இருந்து வருகிறார்கள் போலுள்ளதே. 😂

என்ன செய்ய திருமண வழியில் தான் சொந்தம்  ...எனது மனைவியும் தியாகியின்  மனைவியும் சகோதரிமார்.    அதாவது கூடப்பிறந்த அக்கா  தங்கைமார் ....நான் ஒரு விவசாயின் மகன்....ஒரு சிறந்த குடிகாரனின். மகன்.  .....🤣🤪 மேலும் தியாகி அண்ணையின். மூத்த மகளின் திருமண விழாவுக்கு 2012 சுவிஸ் போயிருந்தேன்.  பிறகு போகவில்லை   நான் தான் தனிய வேலை செய்கிறேன்  ...மனைவி வேலை செய்ய முடியாது என்று விட்டாள்  ...சரி வேலைக்கு போகவிட்டாலும். பிரச்சனையில்லை கதையமால். அமைதியாக இரு என்றாலும் கேட்கிறாளில்லை  வாயை திறந்தால் 24 மணிநேரமும் ஒரே அறுவை தான்   😂🤪😛. தமக்கை வீட்டை சுவிஸ் போகும் போது உங்களையும் ஒருக்கால். பார்ப்போம் ...என்னை விட. உயரமா.   ?இல்லை கட்டையா.?🤣. 6.2.23 மீண்டும் கனடா போகவேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, வாலி said:

Priya விடை!😂

எந்த.....🙃

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.