Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம் பெறும் - சரத் வீரசேகரவின் குழு மகாசங்கத்தினரிடம் எடுத்துரைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம் பெறும் - சரத் வீரசேகரவின் குழு மகாசங்கத்தினரிடம் எடுத்துரைப்பு

By DIGITAL DESK 5

01 FEB, 2023 | 06:45 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் நாட்டில் சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம் பெறும்.

அரசியலமைப்பை திருத்தம் செய்யவோ,13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கப் பெற்ற மக்களாணைக்கு அமையவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட வேண்டும்.

ஆகவே 13 ஆவது திருத்தத்திற்கு மகாசங்கத்தினர் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் யோசனையை கைவிடுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.

ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு அமைய அரசியலமைப்பை செயற்படுத்த முடியாது.13 ஆவது திருத்தம் தொடர்பில் நாட்டு மக்களின் நிலைப்பாட்டை தெரிந்துக் கொண்டு அதன்படி செயற்பட வேண்டும் என்பதை அரச தலைவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளோம். நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் 13 ஆவது திருத்தத்திற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என மகாசங்கத்தினர் குறிப்பிட்டனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யாஹம்பத்,அட்மிரல் சமர் வீரசேகர உட்பட தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் பிரதிநிதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அஸ்கிரிய பீடம்,மல்வத்து பீடம்,ஸ்ரீ லங்கா ராமன்ய நிகாய மற்றும் ஸ்ரீ லங்கா அமரபுரம் ஆகிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடினர்.

பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இலங்கை மக்களின் விருப்பத்திற்கு அமைய நிறைவேற்றப்பட்டது அல்ல,1987 ஆம் ஆண்டு நாட்டில் அமைதியற்ற தன்மை காணப்பட்ட போது ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டு,பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் இந்தியாவினால் பலவந்தமான முறையில் 13 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தினால் நாடு 09 மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.நிலப்பரப்பில் சிறிய நாடான இலங்கைக்கு 09 நிர்வாக அலகுகள் அவசியமற்றது.

13 ஆவது திருத்தத்திற்கு அரசியலமைப்பு திருத்தம் ஊடாக தடை விதிக்கப்பட்டதால் நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கினால் நாட்டின் தேசிய பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படும்.விடுதலை புலிகள் அமைப்பு இலங்கையில் இருந்து மாத்திரம் தான் ஒழிக்கப்பட்டுள்ளது,புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் விடுதலை புலிகள் சர்வதேச மட்டத்தில் பலமான முறையில் செயற்படுகிறார்கள்.

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் 09 மாகாணங்களுக்கு 09 பொலிஸ்மா அதிபர்கள்,இவர்கள் மாகாண முதலமைச்சரனால் நியமிக்கப்படுவார்கள்,முதலமைச்சர்கள் அரசியல்வாதிகள் ஆகவே பொலிஸ் மா அதிபர்கள் அரசியல்வாதிகளினால் நேரடியாக நியமிக்கும் போது நாட்டின் சட்டம் ஒழுங்கு எவ்வாறு பாதுகாக்கப்படும்.

1987 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை,ஏனெனில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாட்டில் தேவையிலாத பிரச்சினைகள் தோற்றம் பெறும் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார்.

13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்பட்டால் நாட்டில் சிங்கள- தமிழ் இனகலவரம் மீண்டும் தோற்றம் பெறும்.

அரசியலமைப்பை திருத்தம் செய்யவோ,13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு எதிராகவே 69 இலட்ச மக்கள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது.அவர் 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார்.நாட்டை பிளவுப்படுத்தும் கொள்கைக்கு எதிரான கொள்கைக்கு அமையவே அந்த 134 உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்தார்கள்,ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோட்டபய ராஜபக்ஷவின் மக்களாணைக்கு அமைய செயற்பட வேண்டும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது அவசியமற்றது.புதிய அரசியலமைப்பிற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான வரைபு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது,ஆகவே புதிய அரசியலமைப்பை உருவாக்கி 13 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்ய மகாசங்கத்தினர் ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றார்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் யோசனையை கைவிடுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு அமைய அரசியலமைப்பை செயற்படுத்த முடியாது.

13 ஆவது திருத்தம் தொடர்பில் நாட்டு மக்களின் நிலைப்பாட்டை தெரிந்துக் கொண்டு.அதன்படி செயற்பட வேண்டும் என்பதை அரச தலைவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளோம். நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் 13 ஆவது திருத்தத்திற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என மகாசங்கத்தினர் குறிப்பிட்டனர்.

https://www.virakesari.lk/article/147167

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13 ஐ அமுல்படுத்தினால் தமிழ் - முஸ்லிம் இனத்தவர்களிடையே முரண்பாடு ஏற்படும் - கிழக்கு மாகாண ஆளுநர்

By DIGITAL DESK 5

01 FEB, 2023 | 06:44 PM
image

(இராஜதுரை ஹஷான்)

69 இலட்ச மக்களாணையுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியால் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டேன். சுபீட்சமான இலக்கு கொள்கைத்திட்டத்தில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டால் தமிழ்,முஸ்லிம் சமூகத்திற்கிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் நேற்று (31) மாலை அஸ்கிரிய,மல்வத்து ஆகியவற்றின் மகாசங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாவது.

கிழக்கு மாகாண ஆளுநராக கடந்த மூன்று ஆண்டு காலமாக பதவி வகிக்கிறேன்.கிழக்கு மாகாணத்தில் தமிழ்,முஸ்லிம் மற்றும் சமூகத்தினர் இனவாதம் இல்லாமல் நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்கள்.13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் இன நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக நாட்டை பிளவுப்படுத்துமாறு கிழக்கு மாகாண மக்கள் கோரவில்லை.அரசியல்வாதிகளே நாட்டை பிளவுப்படுத்தும் முயற்சியில் மும்முரமாக செயற்படுகிறார்கள்.கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசியல்வாதிகள் குரல் கொடுப்பதில்லை.

30 வருட கால யுத்தத்தினால் கிழக்கு மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.தேசிய பொருளாதார அபிவிருத்தி திட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண மக்கள் கோருகிறார்கள்.நாட்டை பிளவுப்படுத்துமாறு மக்கள் கோரவில்லை.

கிழக்கு மாகாணத்தில் 40 சதவீதம் முஸ்லிம் சமூகத்தினரும்,35 சதவீதம் தமிழ் சமூகத்தினரும்,25 சதவீதம் சிங்கள சமூகத்தினரும் வாழ்கின்றனர். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ் முஸ்லிம் சமூகத்தினருக்கு இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும்.

நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் தேவையில்லாத பிரச்சினைகள் தோற்றம் பெறுவது பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும்.13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏதம் கிடையாது.

69 இலட்ச மக்களாணையுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியால் நான் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டேன்.சுபீட்சமான கொள்கை திட்டத்திற்கு அமைய செயற்படுகிறேன்,அத்திட்டத்தில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை,சுபீட்சமான கொள்கை திட்டத்தில் இருந்து நான் விலகவில்லை,மாற்றமடையவுமில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/147200

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர குறிப்பிட்டதாவது,

டாக்டர், அட்மிரல் என பட்டங்களை அடுக்கி கொண்டே போகிறார்.

2 hours ago, ஏராளன் said:

13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்பட்டால் நாட்டில் சிங்கள- தமிழ் இனகலவரம் மீண்டும் தோற்றம் பெறும்.

இவரே சிறில் மத்யூ போல் கலவரத்தை உண்டுபண்ணக் கூடிய இனவாதி.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

டாக்டர், அட்மிரல் என பட்டங்களை அடுக்கி கொண்டே போகிறார்.

இவரே சிறில் மத்யூ போல் கலவரத்தை உண்டுபண்ணக் கூடிய இனவாதி.

இப்படி நாலுபேர்தான் எங்களுக்குத் தேவை குளோனிங் பண்ணி அனுப்புங்கோ.

கொழும்பில இருந்து ஐரோப்பியாவுக்கோ அல்லது கனடாவுக்கொ சாட்டர் விமானம் எங்க மலிவாகக் கிடைக்கும் வெப்சைட் இருந்தாச் சொல்லுங்கோ முற்பணம் கட்டிவச்சால் நல்லா காசு பாக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமை, கடன் கட்ட காசில்லை. சாப்பாடு பிச்சை.

ஆனாலும் தமிழர் அடிமைகளாக இருக்கோணும்.

இந்தாள் இதையே, மெயின்ரைன் பண்ணவேணும்.

இவருக்கு முடிந்தால், சிங்கள பேரில் காசு அனுப்பவேணும். 😜

  • கருத்துக்கள உறவுகள்

We are waiting Mr. சரத் வீரசேகர!!

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் 40 சதவீதம் முஸ்லிம் சமூகத்தினரும்,35 சதவீதம் தமிழ் சமூகத்தினரும்,25 சதவீதம் சிங்கள சமூகத்தினரும் வாழ்கின்றனர். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ் முஸ்லிம் சமூகத்தினருக்கு இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும்.

நல்ல கணக்கும் காட்டுறா.... முசுலிமிற்கு பரிதாபம் காட்டி ..சண்டயக் கிளப்ப வழியும் தேடுறா..சிங்களவனை அமைதிப்புறவாகவும் காட்டுறா...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் நாட்டில் சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம் பெறும்.

5 hours ago, ஏராளன் said:

நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் 13 ஆவது திருத்தத்திற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என மகாசங்கத்தினர் குறிப்பிட்டனர்.

ஏற்கெனவே இனக்கலவரம் நடந்ததை ஏற்றுக்கொள்கிறார், பிறகு ஏதோ இதனாற்தான் இனமுரண்பாடு ஏற்படப்போகிறது என்பதுபோல் எச்சரிக்கை வேறு. இது பதின்மூன்று நடைமுறைப்படுத்தப்பட்டால் தங்கள் ஆட்டம் ஆட முடியாதென பயப்படுகிறார்கள் போலுள்ளது, ஏன் வீணாக அவர்களை பயப்படுத்திக்கொண்டு? அதை விட்டிட்டு சுயாட்சியை கேளுங்கள்! புண்ணில் புளி பட்டதுபோல குதிக்கட்டும்.

5 hours ago, ஏராளன் said:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது.அவர் 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார்.

அப்போ 134 பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களால் தெரிவு செய்யப்படவில்லையா?

5 hours ago, ஏராளன் said:

அஸ்கிரிய பீடம்,மல்வத்து பீடம்,ஸ்ரீ லங்கா ராமன்ய நிகாய மற்றும் ஸ்ரீ லங்கா அமரபுரம் ஆகிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடினர்.

இனக்கலவரத்தின் மூலங்கள் இவர்கள்தான்!

5 hours ago, ஏராளன் said:

அரசியலமைப்பை திருத்தம் செய்யவோ,13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது.

5 hours ago, ஏராளன் said:

1987 ஆம் ஆண்டு நாட்டில் அமைதியற்ற தன்மை காணப்பட்ட போது ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டு,பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் இந்தியாவினால் பலவந்தமான முறையில் 13 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

ஒரு இறையாண்மை உள்ள நாட்டில் இந்தியா நிறைவேற்றியிருக்கு! அப்போ இவர் எங்கே போனார்? அப்போ .... ஜே. ஆருக்கு எங்கிருந்து ஆணை கிடைத்தது?

5 hours ago, ஏராளன் said:

1987 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை,

5 hours ago, ஏராளன் said:

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணி

 நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட காரணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆமா .... பதின்மூன்றாம் அரசியலமைப்பை வாசித்துப் பாக்கும்படி ரணில் ஆலோசனை கூறினாரே, வாசிக்கத்தெரியவில்லையோ இவருக்கு? வாசித்துப்பாத்திருப்பார், விளங்குதலில் குறைபாடாக இருக்கும். எங்கேயோ சரியான இடத்திற்குத்தான் தமிழரை தள்ளுகிறார் போலுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Sasi_varnam said:

Mr. சரத் வீரசேகர!!

இதுக்கு எல்லாம் அவ்வளவு அறிவு கிடையாது ரணில் எனும் குள்ள நரி செய்யும் வேலை இது தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளீ விடுபவர் அவரே .

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, satan said:

ஏற்கெனவே இனக்கலவரம் நடந்ததை ஏற்றுக்கொள்கிறார், பிறகு ஏதோ இதனாற்தான் இனமுரண்பாடு ஏற்படப்போகிறது என்பதுபோல் எச்சரிக்கை வேறு. இது பதின்மூன்று நடைமுறைப்படுத்தப்பட்டால் தங்கள் ஆட்டம் ஆட முடியாதென பயப்படுகிறார்கள் போலுள்ளது, ஏன் வீணாக அவர்களை பயப்படுத்திக்கொண்டு? அதை விட்டிட்டு சுயாட்சியை கேளுங்கள்! புண்ணில் புளி பட்டதுபோல குதிக்கட்டும்.

அப்போ 134 பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களால் தெரிவு செய்யப்படவில்லையா?

இனக்கலவரத்தின் மூலங்கள் இவர்கள்தான்!

ஒரு இறையாண்மை உள்ள நாட்டில் இந்தியா நிறைவேற்றியிருக்கு! அப்போ இவர் எங்கே போனார்? அப்போ .... ஜே. ஆருக்கு எங்கிருந்து ஆணை கிடைத்தது?

 நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட காரணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆமா .... பதின்மூன்றாம் அரசியலமைப்பை வாசித்துப் பாக்கும்படி ரணில் ஆலோசனை கூறினாரே, வாசிக்கத்தெரியவில்லையோ இவருக்கு? வாசித்துப்பாத்திருப்பார், விளங்குதலில் குறைபாடாக இருக்கும். எங்கேயோ சரியான இடத்திற்குத்தான் தமிழரை தள்ளுகிறார் போலுள்ளது!

இனக்கலவரம் என்ற சொல்லே தவறு. இனப்படுகொலை தான் நடந்தது.
 
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

இதுக்கு எல்லாம் அவ்வளவு அறிவு கிடையாது ரணில் எனும் குள்ள நரி செய்யும் வேலை இது தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளீ விடுபவர் அவரே .

போன கிழமை யாழில் ரணில் 13 ஐ அமல் செய்வேன் அன்றில் நீக்குங்கள் என காட்டம் என்ற ரீதியில் ஒரு செய்தி வந்த போது, பல கருத்தாளர் ரணில் 13 ஐ தரப்போகிறார் எனவும், இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், யாரின் மத்தியஸ்தமும் இன்றி  சிங்களவருடன் பேச வேண்டும் எனவும் எழுதினார்கள்.

நரி பேய்காட்டுகிறது என எழுதினேன் - யாரும் அதை சட்டை செய்யவில்லை.

இன்று - ரணில் உத்தரவிட்டால் மறு நொடி பதவியை இழக்க கூடிய கிழக்கு ஆளுனர் மகாசங்கத்திடம் இப்படி கூறியுள்ளார்.

அப்போ இதை தூண்டி விடுபவர் யார் ?

இத்தனை காலத்துக்கு பின்னும், பழுத்த தேசியவாதிகள் கூட ரணிலை/சிங்களத்தை புரிந்து கொள்ளவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம் பெறும் - சரத் வீரசேகரவின் குழு மகாசங்கத்தினரிடம் எடுத்துரைப்பு

சும்மா கதைத்து காலத்தை வீணடிக்காமல் களத்தில் இறங்குங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

போன கிழமை யாழில் ரணில் 13 ஐ அமல் செய்வேன் அன்றில் நீக்குங்கள் என காட்டம் என்ற ரீதியில் ஒரு செய்தி வந்த போது, பல கருத்தாளர் ரணில் 13 ஐ தரப்போகிறார் எனவும், இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், யாரின் மத்தியஸ்தமும் இன்றி  சிங்களவருடன் பேச வேண்டும் எனவும் எழுதினார்கள்.

நரி பேய்காட்டுகிறது என எழுதினேன் - யாரும் அதை சட்டை செய்யவில்லை.

இன்று - ரணில் உத்தரவிட்டால் மறு நொடி பதவியை இழக்க கூடிய கிழக்கு ஆளுனர் மகாசங்கத்திடம் இப்படி கூறியுள்ளார்.

அப்போ இதை தூண்டி விடுபவர் யார் ?

இத்தனை காலத்துக்கு பின்னும், பழுத்த தேசியவாதிகள் கூட ரணிலை/சிங்களத்தை புரிந்து கொள்ளவில்லை.

உங்கள் கவலை புரிகிறது. இது எனது பார்வை.

ரணில் பழைய விளையாட்டுக்களை விளையாட விரும்பினாலும் நிலைமை முன்னை மாதிரி இல்லை.

நாடு பொருளாதார வங்குரோத்து நிலை. கடன்காரர் கழுத்தினை நெரிக்கிறார்க்ள.

கிழக்கு ஆளுநர், சரத் வீரசேகர இருவருமே மகிந்தாவின் ஆட்கள். மகிந்தாவின் தாளத்துக்கு ஆடுபவர்கள். இவர்களை மேவி செயல்படும் அரசியல் பலம் ரணிலுக்கு இல்லை.

இதனை புரிந்தே, அமெரிக்க அனுசரணையுடன் கனடா தடை அறிவித்தது. அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இந்தியாவின் 13+ ஐ தூக்கி எறிந்து விட்டு, இந்தியாவிடம் கடன் வாங்குவது சாத்தியம் இல்லை. ரணில் வெட்டி ஆடுவார், நாம் இனவாதத்தினை கொண்டாடுவோம் என்று ராஜபக்சேக்கள் ஆட, ஆட, எமக்கான பலம் அதிகரிக்கும்.

இது சுஜநிர்ணய தேர்தலில் கொண்டு வந்து விடும் என்பதே எனது கணிப்பு.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சிங்கள பேரில் காசு அனுப்பவேணும்.

ஏன் தமிழ் பெயரிலேயே அனுப்பி பாருங்க திருப்பி அனுப்புகிறார்களோ என்று பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

ஏன் தமிழ் பெயரிலேயே அனுப்பி பாருங்க திருப்பி அனுப்புகிறார்களோ என்று பார்ப்போம்.

சிங்கள பெயரில், அய்யா நீங்கள் அடுத்த தேர்தலில் நில்லுங்கோ. உந்த தமிழரை நாட்டில் இருந்து அடித்து துரத்தி, உந்த ஈழத்தை விரும்பும் பிரியர்கள் உள்ள நாட்டுக்கு அனுப்பி விடவேணும். நீங்கள் தான், எங்கள் சிங்கள இனத்தினை காக்க வந்த புத்தரின் மறுபிறப்பு என்று ஒரு செய்தியையும் போட்டு அனுப்பவேணும். 😜

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

உங்கள் கவலை புரிகிறது. இது எனது பார்வை.

ரணில் பழைய விளையாட்டுக்களை விளையாட விரும்பினாலும் நிலைமை முன்னை மாதிரி இல்லை.

நாடு பொருளாதார வங்குரோத்து நிலை. கடன்காரர் கழுத்தினை நெரிக்கிறார்க்ள.

கிழக்கு ஆளுநர், சரத் வீரசேகர இருவருமே மகிந்தாவின் ஆட்கள். மகிந்தாவின் தாளத்துக்கு ஆடுபவர்கள். இவர்களை மேவி செயல்படும் அரசியல் பலம் ரணிலுக்கு இல்லை.

இதனை புரிந்தே, அமெரிக்க அனுசரணையுடன் கனடா தடை அறிவித்தது. அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இந்தியாவின் 13+ ஐ தூக்கி எறிந்து விட்டு, இந்தியாவிடம் கடன் வாங்குவது சாத்தியம் இல்லை. ரணில் வெட்டி ஆடுவார், நாம் இனவாதத்தினை கொண்டாடுவோம் என்று ராஜபக்சேக்கள் ஆட, ஆட, எமக்கான பலம் அதிகரிக்கும்.

இது சுஜநிர்ணய தேர்தலில் கொண்டு வந்து விடும் என்பதே எனது கணிப்பு.

இதை விட அப்பனான பிளானை எல்லாம் முன்னர் அடித்து நூத்திருக்கு இந்த நரி.

1. இவர்கள் ஆடுவதே ரணில் சொல்லித்தான். ஆளுநரை இப்போ ரணில் தூக்கி எறியலாம். இதைவிட ராஜபக்சக்கள் விரும்பாத பலதை, ஜனாதிபதி ஆனபின் செய்துள்ளார் நரியார்.

2. இவர்களை வைத்து ஒரு அளவுக்கு மேல் போனால் தெற்கில் பூகம்பம் வெடிக்கும், இன கலவரம் வெடிக்கும் என சொல்லி, மேற்கை ஒரு வழிக்கு கொண்டு வந்து விடுவார். 

3. பின்னர் இந்தியா, மேற்குக்கு, புலம்பெயர் தமிழருக்கு நான் 13 ஐ தருகிறேன் என விபூதி அடிப்பார். இப்போ வீரசேகர பகுதி கூச்சல் உச்ச ஸ்தாயியை அடையும். 

4. இதை காரணம் காட்டி, 13 கொடுத்த கொஞ்ச நஞ்ச காணி, பொலிஸ் அதிகாரத்தையும், தேசிய ஆணைகுழுக்கள் மூலம் மீண்டும் பறித்து கொள்வார்.

5. பிறகு என்ன 13 என்ற பெயரில், யானை தின்ற விளாம்பழமாக சதை எதுவும் இல்லாத ஒரு கோதை தமிழர் தலையில் கட்டி விட்டு, நோபல் பரிசையும் தட்டி செல்வார் நரியார்.

6. அதிகார துஸ்பிரயோகம், காணி உரிமை, கல்வி கொள்கை, என நாம் இத்தனை காலம் போராடிய அத்தனை உரிமைகளும் பெயரளவில் உள்ள, ஆனால் எந்த நிஜ அதிகாரமும் அற்ற ஒரு மாகாணசபையை நாம் கட்டி அழுவோம். அரச காணி மறுபங்கீடு என்ற முகமூடியில் குடியேற்றம், தமிழர் நிலத்தை தமிழர் நிலமல்லாதது ஆக்கும் செயல்திட்டம் வேகம் பெறும்.

இது என் கணிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

சரத் வீரசேகர என்கிற விசரன் இன்று தெரிவித்த கருத்து. புலம்பெயர் தமிழரின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக்கொடுக்க முடியாதாம். முதலீடு செய்யுங்கள் என்று வலிந்திழுத்த ஒருவரை தேடுகிறேன். இலங்கை மீது உண்மையான பற்று இருந்தால் முதலீடுகளை செய்யலாம் ஆனால் அதிகாரங்களை தரமுடியாது.  அதிகாரமற்ற அடிமைகள் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று கேட்க இதுக்கு வெட்கம் இல்லையா? சிங்கள பவுத்தநாடு என முரசு கொட்டுபவர்கள் முன்னேற்றி பாக்கட்டும். சுற்றவர கைநீட்டி, பிச்சை  யார் போடுவாரென காத்திருக்கிறார்கள் அதற்குள் திமிர்பேச்சு வேறு. போடுகிறவனையும் கடுப்பேத்தி அல்லாடப்போகிறார்கள். உண்மையிலேயே பதின்மூன்றை எதுவும் குறைபடாமல் நிறைவேற்றுபவர் ரணிலாக இருந்தால்; இந்த விசரை பிடிச்சு பத்துநாள் உள்ளே போடட்டும் பாப்போம்! நிஞாயத்தை கேட்ட மாணவரை உள்ளே போட முடியுமென்றால், ஏன் இது முடியாது? குறைந்தது மனநல காப்பகத்துக்கு என்றாலும் அனுப்பி பாக்கட்டும்! எல்லா இனவாதியையும் குரைக்க விட்டிட்டு, பதின்மூன்றை இல்லாதொழிக்கிற ஆலோசனையையும் சொல்லி ஒரு குறைப்பிரசவம் நடந்தேறப்போகிறது. அதற்கு இவ்வளவு ஆலாபனை, நிபந்தனை. வெளிநாடுகள் பங்குபற்றினால் ஒன்றும் வெருட்டல்,  உருட்டல், ஏமாற்றல் செய்ய முடியாது. சுதந்திர தினத்துக்கு இந்த ஏமாந்ததுகளை அழைத்து, சர்வதேசத்துக்கு படம் காட்டி, நாங்கள் எல்லோரும் ஒன்று பிச்சை போடுங்கோ என்று தட்டு நீட்ட எண்ணிவிட்டார் போலும்.                                                 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

போன கிழமை யாழில் ரணில் 13 ஐ அமல் செய்வேன் அன்றில் நீக்குங்கள் என காட்டம் என்ற ரீதியில் ஒரு செய்தி வந்த போது, பல கருத்தாளர் ரணில் 13 ஐ தரப்போகிறார் எனவும், இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், யாரின் மத்தியஸ்தமும் இன்றி  சிங்களவருடன் பேச வேண்டும் எனவும் எழுதினார்கள்.

நரி பேய்காட்டுகிறது என எழுதினேன் - யாரும் அதை சட்டை செய்யவில்லை.

இன்று - ரணில் உத்தரவிட்டால் மறு நொடி பதவியை இழக்க கூடிய கிழக்கு ஆளுனர் மகாசங்கத்திடம் இப்படி கூறியுள்ளார்.

அப்போ இதை தூண்டி விடுபவர் யார் ?

இத்தனை காலத்துக்கு பின்னும், பழுத்த தேசியவாதிகள் கூட ரணிலை/சிங்களத்தை புரிந்து கொள்ளவில்லை.

அவரை பொறுத்தவரை கல்லுகிடைக்கும்வரை நாயுடன் பேச்சு வார்த்தை நடாத்து. சைனாவும் இருவருடத்துக்கு கடன் கேட்பதை தள்ளி போட்டு விட்டது. imf காரனுக்கு அல்வா கொடுத்து பண வேட்டை செய்யும் அவசர நிலை நாம் ஏமாற்றபட்டு கொண்டு உள்ளோம் போங்க சார் இந்த கதையை மறுபடியும் மறுபடியும் இங்கு எழுதி அலுப்பு தட்டுகின்றது இன்னிக்கு பரியாரியை காணவில்லை எங்கு  போனார் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13ஐ அமுல்படுத்தக்கூடாது – மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

ranil.jpg

நாட்டின் சுயாதீனத்தன்மை, ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை, எந்த வகையிலும் அமுல்படுத்தக்கூடாது என மூன்று பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

image-2.png

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து நாட்டிற்குள் சிக்கலை தோற்றுவித்துள்ளதாக மகா நாயக்க தேரர்கள் கூறியுள்ளனர்.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள், புராதன, வரலாற்று சின்னங்கள், மத அமைப்புகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் மூலம் நாட்டின் பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என மூன்று பீடங்களையும் சேர்ந்த மகா நாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்படக்கூடிய சிக்கல், பாதகமான நிலையை கருத்திற்கொண்டே ஏற்கனவே ஜனாதிபதி பதவியை வகித்தவர்கள் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை தவிர்த்துக்கொண்டதாக  மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்களின் இறைமையை பாதுகாக்கும் பொறுப்புள்ள நிறைவேற்றதிகார ஜனாதிபதி, மத்திய அரசாங்கத்தின் இறைமையை சீர்குலைக்கும் இத்தகைய அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கின்றமை, மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுவதற்கான காரணமாக அமையும் எனவும் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நிலவுகின்ற பொருளாதர நெருக்கடியினால் பிராந்திய, உலக வல்லரசுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான சில நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவிக்குமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டாலும், நாட்டின் ஒருமைப்பாடு, சுயாதீனத் தன்மையை விபத்தில் ஆழ்த்தும் இத்தகைய பிரேரணைகளை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/237249

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

மகாநாயக்க தேரர்கள் 

இனி புத்த பகவானே வந்தாலும் முடியாது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

இதை விட அப்பனான பிளானை எல்லாம் முன்னர் அடித்து நூத்திருக்கு இந்த நரி.

1. இவர்கள் ஆடுவதே ரணில் சொல்லித்தான். ஆளுநரை இப்போ ரணில் தூக்கி எறியலாம். இதைவிட ராஜபக்சக்கள் விரும்பாத பலதை, ஜனாதிபதி ஆனபின் செய்துள்ளார் நரியார்.

2. இவர்களை வைத்து ஒரு அளவுக்கு மேல் போனால் தெற்கில் பூகம்பம் வெடிக்கும், இன கலவரம் வெடிக்கும் என சொல்லி, மேற்கை ஒரு வழிக்கு கொண்டு வந்து விடுவார். 

3. பின்னர் இந்தியா, மேற்குக்கு, புலம்பெயர் தமிழருக்கு நான் 13 ஐ தருகிறேன் என விபூதி அடிப்பார். இப்போ வீரசேகர பகுதி கூச்சல் உச்ச ஸ்தாயியை அடையும். 

4. இதை காரணம் காட்டி, 13 கொடுத்த கொஞ்ச நஞ்ச காணி, பொலிஸ் அதிகாரத்தையும், தேசிய ஆணைகுழுக்கள் மூலம் மீண்டும் பறித்து கொள்வார்.

5. பிறகு என்ன 13 என்ற பெயரில், யானை தின்ற விளாம்பழமாக சதை எதுவும் இல்லாத ஒரு கோதை தமிழர் தலையில் கட்டி விட்டு, நோபல் பரிசையும் தட்டி செல்வார் நரியார்.

6. அதிகார துஸ்பிரயோகம், காணி உரிமை, கல்வி கொள்கை, என நாம் இத்தனை காலம் போராடிய அத்தனை உரிமைகளும் பெயரளவில் உள்ள, ஆனால் எந்த நிஜ அதிகாரமும் அற்ற ஒரு மாகாணசபையை நாம் கட்டி அழுவோம். அரச காணி மறுபங்கீடு என்ற முகமூடியில் குடியேற்றம், தமிழர் நிலத்தை தமிழர் நிலமல்லாதது ஆக்கும் செயல்திட்டம் வேகம் பெறும்.

இது என் கணிப்பு.

கஜன்களின் கட்சி கூட்டங்களுக்கு போன ஒருவர் கூறியதும் நீங்கள் கூறியதும் கொஞ்சம் பொருந்தி வருகிறது போல உள்ளது. இந்த 13ன் மேல் உள்ள வழக்குகளைப் பற்றி தெரிந்து கொண்டும் தமிழர்களை மற்ற கட்சிகள் ஏமாற்றுகின்றன எனக் கூறினார்கள். 

கஜன்கள் தனித்து நிற்பதற்கும் இதுவும் ஒரு கராணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.. 

இவ்வளவு நடந்த பின்பும் ஒரு கட்சியும் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை.. அவ்வளவுதான். 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

இந்த கதையை மறுபடியும் மறுபடியும் இங்கு எழுதி அலுப்பு தட்டுகின்றது

நியாயமான அலுப்புத்தான். எல்லாருக்கும் மறுபடியும் ஏமாற்றப்படுகிறோம் என்பது உறைக்கிறது என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Elugnajiru said:

இப்படி நாலுபேர்தான் எங்களுக்குத் தேவை குளோனிங் பண்ணி அனுப்புங்கோ.

கொழும்பில இருந்து ஐரோப்பியாவுக்கோ அல்லது கனடாவுக்கொ சாட்டர் விமானம் எங்க மலிவாகக் கிடைக்கும் வெப்சைட் இருந்தாச் சொல்லுங்கோ முற்பணம் கட்டிவச்சால் நல்லா காசு பாக்கலாம்.

அப்படி வந்தாலும்   U Turn  தான்.🙃

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இவ்வளவு நடந்த பின்பும் ஒரு கட்சியும் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை.. அவ்வளவுதான்.

13 பிளஸ் நியாபகம் இருக்கா?

சமஸ்டி?

எல்லாத்திலையும் இருந்து இழுத்து கொண்டு கீழே வந்து - சட்டத்தில் இருக்கும் 13 ஐயே நீக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

சர்வதேச உத்தரவாதம் (தனியே இந்தியா மட்டும் அல்ல) இல்லாத எந்த தீர்வும், எழுதிய மை காயமுன்னம் கிழித்து வீசப்படும்.

ஆகவே நாங்கள் இதில் உத்தரவாதிகளாக மேற்கை இழுத்து வருவதே சிறப்பு. அவர்களுக்கும் அதற்கான தேவை உண்டு. இந்தியா + ஈயூ + கனடா+ யூகே இதில் சம்பந்த பட்டால் மட்டுமே நாம் புலம்பெயர் சக்தியை பாவித்து கொஞ்ச அளுத்தமாவது கொடுக்கலாம்.

கஜன் தரப்பு சீனாவுடன் ஒரு தொடர்பாடல் வழியை திறக்ககலாம்.

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.