Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nochchi said:

தமிழ்சிறி அவர்களே சிறப்பு. பாராட்டுகள்!

பாராட்டுகளுக்கு… நன்றி நொச்சி. 🙂

16 hours ago, முதல்வன் said:

சிறப்பான எழுத்துகள். நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

ஊக்கப் படுத்தியமைக்கு… நன்றி முதல்வன். 🙂

  • Replies 122
  • Views 8.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இலங்கையை பொறுத்தவரை  தேவை இல்லாமல் வாகன ஒலி எழுப்புவது எரிச்சலை ஊட்டியதாக மட்டும் குறிப்பிட்டார். வேறு குறைகளை தெரிவிக்கவில்லை. 🙂 ஆனால் பிடித்தவைகளை நிறைய பட்டியலிட்டார். ✅ 1) திருகோணமலையில் நீ

  • நியாயம்
    நியாயம்

    நல்ல நிலைக்கு வந்தபின்னர் சிறீ லங்கா சொறி லங்கா ஆகிவிடும். 

  • என்னட்ட காசில்லை. இதை சொல்ல நான் ஒரு போதும் வெட்கப்பட்டதில்லை. பசித்திருபவன் முன் ஒப்பீட்டளவில் பகட்டாய் வாழ்வதை இட்டு வெட்கப்பட்டிருக்கிறேன். ஊரில் பஞ்சபராரிகளாக நிற்கும் குழந்தைகளோடு

சுவையான எழுத்து நடையில் சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள் தமிழ் சிறி.

நான் கேட்க நினைக்கும் கேள்வி ஒன்றே ஒன்று தான்.

அவர் தன் காதலிக்கு கொடுத்த முத்தங்களில் இலங்கை யில் இருக்கும் போது கொடுத்த முத்தமா, அல்லது ஜேர்மனி வந்த பின் கொடுக்கும் முத்தமா சுவையாக உள்ளது 

.. என்று ஒருக்கால் கேட்டுச் சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணை  எனது அம்மாவின் இழப்புக்கு. கவலை தெரிவித்து நீங்கள் திறந்த திரிக்கு மிகவும் நன்றிகள் பல ......   இப்ப அந்த திரியை தேடினேன் காணவில்லை 😆🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2023 at 20:03, goshan_che said:

அருமையான ஆக்கம் @தமிழ் சிறி அண்ணா. வாசிக்க எழுத்தாளர் மதனின் சாயல் அடித்தது.

பெடியனிட்ட எனக்கு ஒரே கேள்விதான்…..

ஜேர்மனியில் கிடைக்கும் அதே சம்பளம், உறவுகள், நட்புகள் எல்லாம் அப்படியே கிடைக்கும் என்றால், அவரின் தெரிவு ஜேர்மனியா? இலங்கையா?

நீங்கள் கேட்ட கேள்வியை, இன்று காலை பெடியனிடம் கேட்ட போது…
அவன் சிறிதும் யோசிக்காமல், படாரென்று கூறிய மூன்று காரணங்களை கேட்டு எனக்கு ஆச்சரியமாக போய் விட்டது.

ஆறுமாதம் அல்லது ஒரு வருடம் கூட இலங்கையில் வசிப்பாராம், ஆனால்…  நிரந்தரமாக வசிக்க ஜேர்மனிதான் தனது சிறந்த தெரிவு என்றான்.

1) இலங்கையில்… உறவுகள், நட்புகள், கை நிறைய சம்பளம் இருந்தாலும், தன்னுடைய முதுமை காலத்தில்… அங்கு வாழ்வதற்குரிய பாதுகாப்பு இல்லையாம்.

2) மருந்து தட்டுப்பாட்டை நேரில் பார்த்து அனுபவித்து இருக்கின்றான். இவன் அங்கு கூடுதலாக உல்லாசப் பயணிகளுக்கு வாடகைக்கு விடும் குடும்பங்களின் வீடுகளில்தான் தங்கி உள்ளான்.

ஒரு நாள் அந்த வீட்டில் இருந்த முதியவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளதாம், அவர்கள் அந்த நகரத்தில் உள்ள எந்த மருந்துக் கடையிலும் அதற்குரிய மருந்து இல்லை. இவனுடைய நண்பி ஜேர்மனியில் உள்ள வைத்தியசாலையில்  அவசரகால மருத்துவ சேவைப் பகுதியில் வேலை செய்யும் நர்ஸ் என்ற படியால் இவர்கள் கொண்டு சென்ற முதலுதவி மருத்துவ பைக்குள், சிறுநீரக தொற்றுக்கான மருந்தும் இருந்துள்ளது. அவர்கள் கொடுத்த நான்கு குளிசைகளில் அந்த முதியவரின் நோய் குணமாகி விட்டதாம்.

முதலில் அவர்கள் மருந்து இல்லாமல் அவர்கள் கஸ்ரப் பட்டதையும், மருந்து கொடுத்து குணமாகியதன் பின் அவர்களின் முகத்தில் கண்ட மகிழ்ச்சியும்… அவர்களை  சிந்திக்கத் தூண்டியுள்ளது. தாங்கள் இங்கு வாங்கிக் கொண்டு போன மருத்துவ பொதியின் விலை 100 € தானாம். அது அங்கு ஒருவரின் நோயை குணப்படுத்த உதவியது மகிழ்ச்சியாக இருந்ததாம்.

3) முக்கியமானது அங்கு உள்ள அரசியல் பாதுகாப்பற்ற தன்மை. அரசியல்வாதிகள்… நாட்டை சீனா, இந்தியா, அமெரிக்காவுக்கு விற்று விட்டார்களாம். இனி விற்பதற்கு அங்கு ஒன்றும் இல்லையாம். அப்படி உள்ள நாட்டில் எப்படி நிரந்தரமாக வசிப்பது என்று கேட்கிறான். 🙂

### அவனது பதிலை பார்த்து உங்களது கருத்தை, அறிய ஆவல். ### 😎

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kandiah57 said:

தமிழ் சிறி அண்ணை  எனது அம்மாவின் இழப்புக்கு. கவலை தெரிவித்து நீங்கள் திறந்த திரிக்கு மிகவும் நன்றிகள் பல ......   இப்ப அந்த திரியை தேடினேன் காணவில்லை 😆🙏

கந்தையா அண்ணை… “துயர் பகிர்வோம்” பகுதியில் அந்த திரி உள்ளது. 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நிழலி said:

சுவையான எழுத்து நடையில் சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள் தமிழ் சிறி.

நான் கேட்க நினைக்கும் கேள்வி ஒன்றே ஒன்று தான்.

அவர் தன் காதலிக்கு கொடுத்த முத்தங்களில் இலங்கை யில் இருக்கும் போது கொடுத்த முத்தமா, அல்லது ஜேர்மனி வந்த பின் கொடுக்கும் முத்தமா சுவையாக உள்ளது 

.. என்று ஒருக்கால் கேட்டுச் சொல்ல முடியுமா?

பாராட்டுக்களுக்கு… நன்றி நிழலி. 🙂

நீங்கள் கேட்ட… அந்த, 💋 முத்த விசயத்தை பெடியனிடம் கேட்க….
அவர்கள், தாங்கள் 👩‍❤️‍👨 கலியாணம் 💘கட்டினால் பிறகுதான் 👄 முத்தம் 🫦கொடுப்பது…
என்ற கொள்கையை தீவிரமாக கடைப் பிடிப்பதால்.. 
இன்னும் ஒரு 😘 முத்தம் கூட கொடுக்கவில்லையாம் என்கிறான்.😜 😍

நீங்கள் இதை நம்பாவிட்டாலும், இதுதான் நிஜம். 🤣🤪

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் அகவை 25  சுய ஆக்கங்கள் பகுதியில் பிள்ளையார்   சுழிபோட்டு ஆரம்பித்து வைத்த தமிழ் சிறீக்கு பாராட்டுக்கள். 

ஜேர்மன் பெடியன்  இலங்கை நடப்பை ஆராய போனவனா அல்லது என்ஜோய் பண்ண போனனா? வலு தெளிவாக இலங்கைப்பிரசை போல அடிச்சு விடுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

நாளையில் இருந்து ஈஸ்மன் கலரில் தமிழ்சிறியின் எழுத்துக்கள் வரும் என்பதை இத்தால் அறிவித்துக் கொள்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பெடியன், சொன்னது…
நாளை மாலை, தனது நண்பி தன்னை பார்க்க வருவதாகவும், 
வரும் போது… எனக்கு இலங்கையில் வாங்கிய சில பொருட்களை 🎁 அன்பளிப்பாக கொண்டு வருகிறாரம் என்றான்.

அதை கேட்டு… எனக்கு விசர் பிடிச்சிட்டுது. 🤔
(அடேய்… மொக்கு பெடியா…, என்று “மைண்ட் வாய்சில்” திட்டிக் கொண்டு) 😂
நான் நாளைக்கு காலை 8 மணிக்கு துண்டு வெட்டிக் கொண்டு போய் விடுவேன் என்றேன். அதை கேட்டு அவனுக்கும் கவலையாக போய் விட்டது.🥲

அந்தப் பிள்ளை… ஒரு நாள் முந்தி, அதாவது  இன்று வந்திருந்தால்… அவவையும், செமையாக ஒரு பேட்டி எடுத்திருக்கலாம்…. ஹ்ம்ம் நழுவி விட்டது. 🙂

அவர்கள் நயினாதீவுக்கு போகும் போது… எடுத்த காணொளியில்,  வள்ளத்தின் கூரையில் அந்தப் பெண் குந்தி இருந்ததை பற்றி விலாவாரியாக கேட்டிருக்கலாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நீங்கள் கேட்ட கேள்வியை, இன்று காலை பெடியனிடம் கேட்ட போது…
அவன் சிறிதும் யோசிக்காமல், படாரென்று கூறிய மூன்று காரணங்களை கேட்டு எனக்கு ஆச்சரியமாக போய் விட்டது.

ஆறுமாதம் அல்லது ஒரு வருடம் கூட இலங்கையில் வசிப்பாராம், ஆனால்…  நிரந்தரமாக வசிக்க ஜேர்மனிதான் தனது சிறந்த தெரிவு என்றான்.

1) இலங்கையில்… உறவுகள், நட்புகள், கை நிறைய சம்பளம் இருந்தாலும், தன்னுடைய முதுமை காலத்தில்… அங்கு வாழ்வதற்குரிய பாதுகாப்பு இல்லையாம்.

2) மருந்து தட்டுப்பாட்டை நேரில் பார்த்து அனுபவித்து இருக்கின்றான். இவன் அங்கு கூடுதலாக உல்லாசப் பயணிகளுக்கு வாடகைக்கு விடும் குடும்பங்களின் வீடுகளில்தான் தங்கி உள்ளான்.

ஒரு நாள் அந்த வீட்டில் இருந்த முதியவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளதாம், அவர்கள் அந்த நகரத்தில் உள்ள எந்த மருந்துக் கடையிலும் அதற்குரிய மருந்து இல்லை. இவனுடைய நண்பி ஜேர்மனியில் உள்ள வைத்தியசாலையில்  அவசரகால மருத்துவ சேவைப் பகுதியில் வேலை செய்யும் நர்ஸ் என்ற படியால் இவர்கள் கொண்டு சென்ற முதலுதவி மருத்துவ பைக்குள், சிறுநீரக தொற்றுக்கான மருந்தும் இருந்துள்ளது. அவர்கள் கொடுத்த நான்கு குளிசைகளில் அந்த முதியவரின் நோய் குணமாகி விட்டதாம்.

முதலில் அவர்கள் மருந்து இல்லாமல் அவர்கள் கஸ்ரப் பட்டதையும், மருந்து கொடுத்து குணமாகியதன் பின் அவர்களின் முகத்தில் கண்ட மகிழ்ச்சியும்… அவர்களை  சிந்திக்கத் தூண்டியுள்ளது. தாங்கள் இங்கு வாங்கிக் கொண்டு போன மருத்துவ பொதியின் விலை 100 € தானாம். அது அங்கு ஒருவரின் நோயை குணப்படுத்த உதவியது மகிழ்ச்சியாக இருந்ததாம்.

3) முக்கியமானது அங்கு உள்ள அரசியல் பாதுகாப்பற்ற தன்மை. அரசியல்வாதிகள்… நாட்டை சீனா, இந்தியா, அமெரிக்காவுக்கு விற்று விட்டார்களாம். இனி விற்பதற்கு அங்கு ஒன்றும் இல்லையாம். அப்படி உள்ள நாட்டில் எப்படி நிரந்தரமாக வசிப்பது என்று கேட்கிறான். 🙂

### அவனது பதிலை பார்த்து உங்களது கருத்தை, அறிய ஆவல். ### 😎

நன்றி அண்ணா.

ஜேர்மன் தம்பி கிட்டதட்ட என்னை போலவே சிந்தித்து இருக்கு.

ஊருக்கு போகும் எண்ணம் பார்த்திருக்க கரைந்து போகுது.

இப்போ இருக்கும் பாதுகாப்பின்மை (எல்லா வழியிலும்) யுத்த காலத்தில் கூட இருந்ததாக உணரவில்லை. ஆனால் நான் கொவிட்டுக்கு பிறகு போகவில்லை. போனால் மனம் மாறக்கூடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
51 minutes ago, தமிழ் சிறி said:

இன்று பெடியன், சொன்னது…
நாளை மாலை, தனது நண்பி தன்னை பார்க்க வருவதாகவும், 
வரும் போது… எனக்கு இலங்கையில் வாங்கிய சில பொருட்களை 🎁 அன்பளிப்பாக கொண்டு வருகிறாரம் என்றான்.

ஐ திங்....சாராய போத்திலாய் இருக்கும் சிறித்தம்பி..... வியாழக்கிழமையெண்டாலும் பரவாயில்லை வழிமேல் விழி வைத்து அமுக்கிக்கொண்டு வரவும். இந்த சந்தர்ப்பம் நெடுக வராது :cool:

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு பதிவு, தமிழ்சிறி...!

சொந்தக் காரரிட்டை அபிப்பிராயம் கேட்டால், அது ஒரு பக்கச் சார்பானதாகவே இருப்பது வழமை..!

ஒரு மூன்றாம் பேர் வழி சொல்லும்போது அது நடுனிலையானதாக இருக்கும்!

மிகவும் ரசித்து வாசித்தேன்! தொடருங்கள்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிலாமதி said:

யாழ் அகவை 25  சுய ஆக்கங்கள் பகுதியில் பிள்ளையார்   சுழிபோட்டு ஆரம்பித்து வைத்த தமிழ் சிறீக்கு பாராட்டுக்கள். 

ஜேர்மன் பெடியன்  இலங்கை நடப்பை ஆராய போனவனா அல்லது என்ஜோய் பண்ண போனனா? வலு தெளிவாக இலங்கைப்பிரசை போல அடிச்சு விடுகிறார். 

பாராட்டுகளுக்கு, நன்றி நிலாமதி அக்கா.
25 வயது பெடியனின்... பார்வை, 
ஓர் வளர்ந்த ஆளின் பார்வை போல் விசாலமாக உள்ளது ஆச்சரியம்தான்.   🙂

18 hours ago, ஈழப்பிரியன் said:

நாளையில் இருந்து ஈஸ்மன் கலரில் தமிழ்சிறியின் எழுத்துக்கள் வரும் என்பதை இத்தால் அறிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு  ஈஸ்ட்மென் கலரில் பதிவு போடாட்டில், 
சாப்பிட்டது செமிக்காத மாதிரி ஒரு பீலிங் வந்திடும். 😂
 
ஆவலுடன் எதிர் பாருங்கள்... 
அடுத்த பதிவு, புத்தம் புதிய... ஈஸ்ட்மென் கலரில் வர இருக்கின்றது. 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

ஐ திங்....சாராய போத்திலாய் இருக்கும் சிறித்தம்பி..... வியாழக்கிழமையெண்டாலும் பரவாயில்லை வழிமேல் விழி வைத்து அமுக்கிக்கொண்டு வரவும். இந்த சந்தர்ப்பம் நெடுக வராது :cool:

Arrack – Bild von SD Travel & Tours, Negombo - Tripadvisor  

how to make roasted kaju /spicy roasted cashew nuts/ masala kaju fry -  YouTube

DCSL SRI LANKA ARRACK PURE COCONUT 36.8% 750 ML – Buy Sri lankan Arrack  Online

குமாரசாமி அண்ணை...  தமிழ் சிறிக்கு கிடைக்க இருந்த... 
சாராயப் போத்திலோ, வறுத்த கசுக்கொட்டையோ... அநியமாக  கைநழுவி போய் விட்டது.
நான் காலையில் அறை  திறப்பை பாரம் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டேன். 🙂

இங்கு வந்து இறங்கி, கால் சட்டை "பொக்கற்றை" தொட்டுப் பார்த்தால்..
அதற்குள்... தெரப்பி செய்யும் இடத்திலுள்ள அலுமாரி திறப்பு உள்ளது. 😮
திரும்பிப் போகவும்  தூரம். அதை  என்ன செய்வது என்று... தொலைபேசியில் கேட்க,   
தபாலில் அனுப்பச் சொன்னார்கள். 
பிறகென்ன... 4 € 85 சென்ற் கட்டி, பதிவுத் தபாலில் அனுப்பி விட்டேன்.  🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

அருமையான ஒரு பதிவு, தமிழ்சிறி...!

சொந்தக் காரரிட்டை அபிப்பிராயம் கேட்டால், அது ஒரு பக்கச் சார்பானதாகவே இருப்பது வழமை..!

ஒரு மூன்றாம் பேர் வழி சொல்லும்போது அது நடுனிலையானதாக இருக்கும்!

மிகவும் ரசித்து வாசித்தேன்! தொடருங்கள்...!

வாசித்த கருத்து தெரிவித்தமைக்கு... நன்றி புங்கையூரான். 🙏
ஏன்... இப்போ அதிகம் எழுதுவதில்லை. 
உங்கள் எழுத்துக்களை ஆவலுடன் வாசிப்பதில் நானும் ஒருவன். 🙂
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எனக்கு  ஈஸ்ட்மென் கலரில் பதிவு போடாட்டில், 
சாப்பிட்டது செமிக்காத மாதிரி ஒரு பீலிங் வந்திடும். 😂
 
ஆவலுடன் எதிர் பாருங்கள்... 
அடுத்த பதிவு, புத்தம் புதிய... ஈஸ்ட்மென் கலரில் வர இருக்கின்றது. 🤣

போடுங்க போடுங்க

எழுத்துக்களை மட்டுமல்ல செய்திகளையும் கலர்கலராக போடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 Old-Fashioned Lantern - Scary Halloween Decorations | Old lanterns,  Lanterns decor, Lantern lights

அந்த ஜேர்மன் காதலர்கள்....
ஒருமுறை வேறொரு வீட்டில்.. இரவு தங்கியிருந்த போது,
திடீரென்று  மின்சாரம் நின்று விட்டதாம். 😮

வீட்டில் உள்ள ஒருவரும் பதட்டப் படாமல், ஒவ்வொரு இடத்திலும் 
ஆயத்தப் படுத்தி வைத்திருந்த எண்ணை 🪔 விளக்குகளை ஏற்றிவிட்டு... 

TallBoyz excuse me how dare you 201 jogger GIF

தமக்கு  தலையில் மாட்டக் கூடிய, மின்கல விளக்கும் தந்து விட்டு,
மின்சார பிறப்பாக்கியை (ஜெனரேட்டர்) இயங்க வைக்க, எண்ணை விட ஆயத்தமான  போது..
தாங்கள் தடுத்து, இந்த எண்ணையை... நீங்கள் வேறு ஏதாவது தேவைக்கு 
பயன் படுத்துங்கள் என்று கூறியதை கேட்டு, அவர்கள் மகிழ்ச்சி  அடைந்ததாக குறிப்பிட்டார். 😎

அந்த இருட்டுக்குள் தாங்கள் வெளியே வந்து, 
அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்து வானத்தை பார்த்து ரசித்ததும் 
இனிய அனுபவம் என்றார்.
 😂

Fire Burning Wood GIFs | Tenor

அடுத்த நாளும்... மின்சாரம் இல்லாததால், 
அவர்கள் விறகு அடுப்பில் சமைத்ததை.. ஆரம்பம் முதல் இறுதி வரை 
அதிசயத்துடன்  பார்த்து ரசித்ததாக குறிப்பிட்டு, 

25 ideas de Plátanos hojas | hojas, plátanos, hoja de platano

அவர்கள் சமைத்துத் தந்த வாழைப்பூ கறியின் சுவை... 
இன்றும் மறக்க முடியாதுள்ளதாம்.
வாழைப்பூ என்று, ஒன்று... உள்ளதென்றும், 
அதில் கறியும் வைக்கலாம் என்று, அறிந்து கொண்டநாள் அதுவாம். 😋

வாழைப்பூ வறை/fried banana flower /valai poo varai. வாழைப்பொத்தி வறை Jaffna  traditional food - YouTube | Traditional food, Food, Banana flower
 
அந்த வேளை  எடுத்த படங்களையும் எனக்கு காட்டினார். 😂
ஜேர்மனியில் இருக்கும் வரை...  விறகு அடுப்பில் சமைப்பதைப் பற்றி 
கேள்விப் பட்டிருந்தாலும், நேரில் பார்த்த போது.... 
எதிர் பார்த்ததை விட புது அனுபவமாக இருந்ததாம். 🙂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறீ வந்துடடார் அத்தனையும் ஈஸ்ட்மன்ட் கலரில் 
அனுபவமாய் அசத் தல். நடத்துங்க தலீவா !   தினமும் ஆவலுடன்...

23 hours ago, தமிழ் சிறி said:

பாராட்டுக்களுக்கு… நன்றி நிழலி. 🙂

நீங்கள் கேட்ட… அந்த, 💋 முத்த விசயத்தை பெடியனிடம் கேட்க….
அவர்கள், தாங்கள் 👩‍❤️‍👨 கலியாணம் 💘கட்டினால் பிறகுதான் 👄 முத்தம் 🫦கொடுப்பது…
என்ற கொள்கையை தீவிரமாக கடைப் பிடிப்பதால்.. 
இன்னும் ஒரு 😘 முத்தம் கூட கொடுக்கவில்லையாம் என்கிறான்.😜 😍

நீங்கள் இதை நம்பாவிட்டாலும், இதுதான் நிஜம். 🤣🤪

நம்பிட்டன்...

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2023 at 21:17, vaasi said:

இலங்கைத் தண்ணீரின் சுவை அது. அதேபோல் லண்டனில் PG தேயிலையில் பிளேன் டீ குடித்தபோது நல்ல சுவையாக இருந்தது. 3 பெட்டிகளை வாங்கி கனடாவில் பிளேன் டீ போட்டால் அதே சுவை இல்லாது இருந்தது.

டபுள் பைக்கட் போட்டு பாருங்கள் அத்துடன் நல்லா கொதிக்க வைத்து சூடு பறக்க  ஆத்தி எடுங்கள் லண்டன் சுவையை விட நன்றாக இருக்கும் பிளேன் டீ  என்றால் நன்றாக சூடுபடுத்தி ஆத்தி எடுக்கணும் துர் அதிஷ்ட வசமாக லண்டனில் உள்ள ஒருபாவுக்கு மூன்று வடை விக்கும் கடைகளில் இருக்கும் சேல்ஸ் வுமணிடம்  பிளேன் டீ  கேட்டால் அருவருப்பாக முதலில் எங்களை பார்ப்பார்கள் அதன்பின் சோகமாக முகத்தை வைத்து கொண்டு பாரதி ராஜாவின் படங்களில் வருவது போல் சிலோ மோஷனில் சீனி போட்டு கரண்டியால் கலக்கி தருவார்கள் ஆத்தி எடுத்து தாங்க  என்றாலும் காது  கேளாதவர் போல் பிளேன் டீ  கப்பை நீட்டுவார்கள் .😃

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அந்த வேளை  எடுத்த படங்களையும் எனக்கு காட்டினார். 😂
ஜேர்மனியில் இருக்கும் வரை...  விறகு அடுப்பில் சமைப்பதைப் பற்றி 
கேள்விப் பட்டிருந்தாலும், நேரில் பார்த்த போது.... 
எதிர் பார்த்ததை விட புது அனுபவமாக இருந்ததாம். 

வெளிநாடுகளில் விறகு வைத்து சமைத்தால் தீஅணைக்கும் படை தான் வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

வெளிநாடுகளில் விறகு வைத்து சமைத்தால் தீஅணைக்கும் படை தான் வரும்.

விறகு வைத்து எரித்து வீடு சூடாக்கினால் தீ அணைக்கும் படை வருவதில்லையே? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:
14 hours ago, ஈழப்பிரியன் said:

வெளிநாடுகளில் விறகு வைத்து சமைத்தால் தீஅணைக்கும் படை தான் வரும்.

விறகு வைத்து எரித்து வீடு சூடாக்கினால் தீ அணைக்கும் படை வருவதில்லையே? :cool:

நேரே சுடுகாடு தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

நம்பிட்டன்...

நிழலி,  நான் பகிடிக்கு சொன்ன முத்த விசயத்தை… நீங்கள் உடனே நம்பியதை பார்க்க
சரியான அப்பாவியாக இருப்பீர்கள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. 🤣

Edited by தமிழ் சிறி

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.