Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சும் ஜேர்மனியும் போரின் போக்கை மாற்றக்கூடியவர்கள்: உக்ரைன் ஜனாதிபதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சும் ஜேர்மனியும் போரின் போக்கை மாற்றக்கூடியவர்கள்: உக்ரைன் ஜனாதிபதி!

பிரான்சும் ஜேர்மனியும் போரின் போக்கை மாற்றக்கூடியவர்கள்: உக்ரைன் ஜனாதிபதி!

பிரான்சும் ஜேர்மனியும் போரின் போக்கை மாற்றக்கூடியவர்கள் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜேர்மனியின் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோருடன் நேற்று (புதன்கிழமை) கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு போர் டாங்கிகள், நவீன போர் விமானங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதன் மூலம் பிரான்சும் ஜேர்மனியும் போக்கை மாற்றக்கூடியவர்களாக இருக்க முடியும.

ஜெட் விமானங்களை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறிய அவர், ஆயுதங்களை வழங்குவதற்கு மிகக் குறைவான காலமே இருப்பதாக எச்சரித்தார்.

இதேவேளை, உக்ரைன் பிரான்ஸின் ஆதரவை நம்பலாம் என்றும், உக்ரைனின் வெற்றிக்கு உதவுவதற்கும் அதன் நியாயமான உரிமைகளை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் அந்த நாடு உறுதியாக உள்ளது என்றும் மக்ரோன் கூறினார்.

இதேபோல கருத்து தெரிவித்த ஸ்கோல்ஸ், நிலை மாறவில்லை. ரஷ்யா இந்த போரில் வெற்றி பெறக்கூடாது’ என கூறினார்.

இதன் பொருள் இரு நாடுகளும் போர் விமானங்களை வழங்க உறுதியளிக்குமா என்பது இப்போதைக்கு தெளிவாக இல்லை.

ஸெலென்ஸ்கி இன்று (வியாழக்கிழமை) பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை சந்திக்கும் போது ஜெட் விமானங்களுக்கான கூடுதல் கோரிக்கைகளை விடுப்பார்.

https://athavannews.com/2023/1323588

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஜெட் விமானங்களை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறிய அவர், ஆயுதங்களை வழங்குவதற்கு மிகக் குறைவான காலமே இருப்பதாக எச்சரித்தார்.

அடேங்கப்பா... எச்சரிக்கை விடுத்து, பிச்சை எடுப்பது கோமாளி  செலென்ஸ்கி தான்.
அதுக்கும் ஒரு தினாவெட்டு வேணும்.
ஸ்ரீலங்காவிடம் ரியூசன் எடுத்த ஆள் போலை இருக்கு. 😂

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியும் பிரான்சையும் ஜெர்மனியையும் இழுத்து தெருவில விடுகிற எண்ணத்தில்தான் அத்தான் செஸ் விளையாடுகிறார்.........!   😁

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கின்ற லெப்படை கொடுக்கவே  ஜேர்மனியும் பிரான்சும் காலத்தை இழுத்தடிக்கிறார்கள். ஸெலன்ஸ்கி விமானத்தை கேட்கிறார்.  யூகே கொடுத்தாலும்  கொடுக்கும். ஆனால் விமான பயிற்சி 5 வருடமாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, nunavilan said:

இருக்கின்ற லெப்படை கொடுக்கவே  ஜேர்மனியும் பிரான்சும் காலத்தை இழுத்தடிக்கிறார்கள். ஸெலன்ஸ்கி விமானத்தை கேட்கிறார்.  யூகே கொடுத்தாலும்  கொடுக்கும். ஆனால் விமான பயிற்சி 5 வருடமாம்.

அந்த ஐந்து வருடங்களுக்குள் மாண்புமிகு அதி உத்தம புட்டின் ஐயா அவர்கள் தகர டப்பா ஆயுதங்களை வைத்து உக்ரேன் சோலியை முடித்து விடுவார் :hurra:

  • கருத்துக்கள உறவுகள்

போரின் போக்கு சாதகமாக இல்லை என்று கூறுகிறார். இது போரின் ஆரம்பத்திலேயே எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் போரை தேவையான அளவு இழுத்துக்கொண்டு போகவே மேற்குலகு விரும்புகிறது. 

நீடித்த போரின் விளைவுகள் புடினை அரசியலில் இருந்து அகற்றும். தாங்கள் ரஸ்யாவை விரும்பியவாறு சூறையாடலாம் என நினைக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரவு பிரெஞ்சு செய்திகள் மற்றும் ஆய்வுகளின் படி 95 % புட்டின் போரில் தோல்வியடைந்து விட்டதாக சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விசுகு said:

இன்றைய இரவு பிரெஞ்சு செய்திகள் மற்றும் ஆய்வுகளின் படி 95 % புட்டின் போரில் தோல்வியடைந்து விட்டதாக சொல்கிறார்கள்.

பின்ன புட்டின் வெற்றி பெறுவிட்டார் என்று சொல்லிக் கொண்டு உக்ரைனுக்கு உதவினால்.. உருப்படியா சிந்திக்கிற பிரான்ஸ் மக்கள் என்ன வாயா பார்ப்பார்கள். எதுக்கு தோற்கிற தரப்புக்கு பிரான்ஸ் உதவுதுன்னு சிந்திக்கமாட்டாங்க.

10 hours ago, nunavilan said:

இருக்கின்ற லெப்படை கொடுக்கவே  ஜேர்மனியும் பிரான்சும் காலத்தை இழுத்தடிக்கிறார்கள். ஸெலன்ஸ்கி விமானத்தை கேட்கிறார்.  யூகே கொடுத்தாலும்  கொடுக்கும். ஆனால் விமான பயிற்சி 5 வருடமாம்.

யு கேயிடம் கொடுக்க என்ன இருக்கு. அவையே அமெரிக்கன்டையையும்.. ஈ யுட பழசுகளையும் வைச்சுக் காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கினம். இதில.. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இன்றைய இரவு பிரெஞ்சு செய்திகள் மற்றும் ஆய்வுகளின் படி 95 % புட்டின் போரில் தோல்வியடைந்து விட்டதாக சொல்கிறார்கள்.

சரியா தான் சொல்லியிருக்கிறார்கள். புட்டினின் நோக்கமான உக்ரைனை ரஷ்யாவின் பிரதேசமாக மாற்ற முடியவில்லை. உக்ரேனிய மக்களால் தெரிவு செய்யபட்ட ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அரசை தூக்கி எறிய முடியவில்லை.இவற்றை செய்து ரஷ்யாவின் உயிர்த்தெழுதல் நடைபெற்றுவிட்டதாக தனது உலக விசுவாசிகளுக்கு படம் காட்ட விரும்பினார் எதுவும் நடைபெறவில்லையே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

இன்றைய இரவு பிரெஞ்சு செய்திகள் மற்றும் ஆய்வுகளின் படி 95 % புட்டின் போரில் தோல்வியடைந்து விட்டதாக சொல்கிறார்கள்.

முந்தியொருக்கால் அமெரிக்கா ஈராக்கிட்டை கெமிக்கல் ஆயுதம் கிடக்கு எண்டு சொல்லி கரிச்சட்டி படங்களை ஆதாரம் காட்டின மாதிரியா? :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இன்றைய இரவு பிரெஞ்சு செய்திகள் மற்றும் ஆய்வுகளின் படி 95 % புட்டின் போரில் தோல்வியடைந்து விட்டதாக சொல்கிறார்கள்.

மின்ஸ்க் உடன்படிக்கையை செயற்படுத்த தான் மறுத்ததாக  செலன்ஸ்க்கி  Der Spiegelக்கு    தெரிவிப்பு. 

👇

Zelensky takes credit for derailing Minsk agreements

The Ukrainian president claimed he personally refused to implement the deal for peace in Donbass
 
Zelensky takes credit for derailing Minsk agreements

Ukrainian President Vladimir Zelensky gives a speech at the European Parliament on February 09, 2023. ©  Getty Images / Omar Havana

Ukrainian President Vladimir Zelensky personally refused to implement the 2015 Minsk agreements – a roadmap for peace in the east of the country, which was co-sponsored by Germany and France.

He made the admission during an interview with Der Spiegel published on Thursday as he continues his tour across Europe.

Zelensky said he viewed the agreements as a “concession” on Ukraine’s part, and never once actually sought to implement them. Instead, they were merely used to exchange prisoners with the two breakaway Donbass republics.

The president claimed he openly told that to then-German Chancellor Angela Merkel, French President Emmanuel Macron, and Russian President Vladimir Putin back in 2019, with all of them acting “surprised.”

“But as for Minsk as a whole, I told Emmanuel Macron and Angela Merkel: ‘We cannot implement it like this,’” Zelensky stated. “I told [Putin] the same as the other two. They were surprised and said: ‘If we had known beforehand that you would change the meaning of our meeting, then there would have been problems even before the summit.’”

https://www.rt.com/russia/571243-zelensky-minsk-agreements-failure/

1 hour ago, குமாரசாமி said:

முந்தியொருக்கால் அமெரிக்கா ஈராக்கிட்டை கெமிக்கல் ஆயுதம் கிடக்கு எண்டு சொல்லி கரிச்சட்டி படங்களை ஆதாரம் காட்டின மாதிரியா? :beaming_face_with_smiling_eyes:

ஆட்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓட்டமெடுக்கப் போகினம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர் விமானங்கள்- ஆயுதங்களை வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு அழைப்பு!

போர் விமானங்கள்- ஆயுதங்களை வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு அழைப்பு!

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களை வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

போர் தொடங்கிய பின்னர் தனது இரண்டாவது வெளிநாட்டு பயணத்தில் அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

‘எங்கள் ஒத்துழைப்பின் இயக்கவியலை நாம் மேம்படுத்த வேண்டும், ஆக்கிரமிப்பாளரைக் காட்டிலும் வேகமாக அதைச் செய்ய வேண்டும்’ என்று உக்ரைன் ஜனாதிபதி கூறினார்.

முன்னதாக பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அவருக்கு கைத்தட்டல் வழங்கப்பட்டது.

பல ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஏற்கனவே போர் விமானங்கள் பற்றிய முடிவு ஒரு கூட்டு நடவடிக்கையாக இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, மோதலில் நேரடி மற்றும் மறைமுக மேற்கத்திய ஈடுபாட்டிற்கு இடையிலான கோடு மறைந்து வருவதாக ரஷ்யா எச்சரித்தது.

நீண்ட காலத்திற்கு ஜெட் விமானங்களை வழங்குவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, ஆனால் உக்ரைன் விமானிகளுக்கு ஏற்கனவே உள்ள விமானங்களில் பயிற்சி அளிக்கப்படும் என்று பிரித்தானியா கூறியது.

போலந்தின் பிரதமர் மேட்யூஸ் மொராவிக்கி, தனது நாடு நேட்டோவின் முழு அமைப்பிற்குள் மட்டுமே செயற்பட முடியும் என்று கூறினார், அதே நேரத்தில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே இந்த பிரச்சினையை மூடிய கதவுகளுக்குப் பின்னால் விவாதிக்க வேண்டும் என்று கூறினார்.

ஜெட் விமானங்களுக்கான உக்ரைனின் கோரிக்கையை விரைவாக பரிசீலிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ரொபர்ட்டா மெட்சோலா அழைப்பு விடுத்தார்.

https://athavannews.com/2023/1323711

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.