Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பழ. நெடுமாறன் - தமிழ்த் தேசியத்தின் பின்னால் ஒளிந்து கொண்டுள்ள ஒன்றிய அரசின் கைக்கூலியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பழ. நெடுமாறன் - தமிழ்த் தேசியத்தின் பின்னால் ஒளிந்து கொண்டுள்ள ஒன்றிய அரசின் கைக்கூலியா?

தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் அவர்கள் தொடர்பாக வெளியிட்ட செய்தி அனைத்து காட்சி மற்றும் அச்சு ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகி இருக்கின்றது.

பிரபாகரன் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய நெடுமாறன், "பிரபாகரன் குடும்பத்தினருடன் எனக்குத் தொடர்பிருக்கிறது. அந்தத் தொடர்பின் மூலம் அறிந்த செய்திகளை, அவர்களுடைய அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறேன். அவர் எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்பது குறித்து எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், அவர் விரைவில் வெளிப்படுவார். மனைவி, மகள் நலமுடன் இருக்கிறார்கள்," என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பே பழ. நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவர்கள் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்லி இருந்தாலும், இந்த முறை அந்த செய்திக்கு ஊடகங்களில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அந்த செய்தி திட்டமிட்டு மிகப் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சதித்திட்டத்தோடு வெளியிடப்பட்டதாகவே தெரிகின்றது.சொல்லிவைத்தாற்போல அனைத்துப் பத்திரிகைகளும் நெடுமாறன் அவர்களின் பேச்சை தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டு இருந்தன.

ஆனால் நெடுமாறன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை நெடுமாறன் அவர்களின் உண்மை நோக்கத்தை அம்பலப்படுத்துவதாக உள்ளது.

அந்த அறிக்கையில் "தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றிய ஓர் அறிவிப்பை ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் முன்னிலையில், பல்வேறு தலைவர்கள் முன்னிலையில் அறிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.

சர்வேதச சூழலும் இலங்கையில் ராஜபக்ச ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியுள்ள சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழ தேசியத் தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தச் சூழலில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்.

தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்கவுள்ளார். தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.

விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம்வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியையும் பெறுவதில்லை என்பதிலும் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி, இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து, அதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய அரசை வேண்டுகிறோம்.

இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குத் துணை நிற்குமாறு வேண்டிக் கொள்கிறோம்," என கூறப்பட்டிருந்தது.

உலகின் பல நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்புக்குத் தடை இருக்கின்றது என்பது எல்லோருக்குமே தெரியும். நிலைமை அவ்வாறு இருக்க, பிரபாகரன் உயிரோடு இருந்தால், அவரால் மீண்டும் இலங்கைக்குத் திரும்பி வர முடியுமா? அதற்கு இலங்கையில் இன்னும் மக்கள் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஏகாதிபத்திய நாடுகளின் துணையோடு ஆட்சியில் இருக்கும் இலங்கை அரசு அனுமதிக்குமா? இலங்கையின் பொருளாதார நலன்களை கொள்ளையடிக்க இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுத்து இலட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு காரணமான இந்தியா அதை அனுமதிக்குமா?

இதில் எதுவுமே நடக்கப் போவதில்லை. அப்படி இருக்கையில் “இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியையும் பெறுவதில்லை என்பதிலும் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார்” என்று நெடுமாறன் சம்மந்தமே இல்லாமல் கூறுவது எதற்காக?

ஈழத்தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதில் இந்திய அரசுக்கு உள்ள நேரடி தொடர்பை மறைக்க, இந்திய அரசின் கைக்கூலியாக நெடுமாறன், காசி ஆனந்தன் போன்றோர் செயல்படுகின்றார்களா?

அல்லது இன்று இலங்கையில் தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் ஏற்பட்டுள்ள இணக்கத்தை சீர்குலைக்க “தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்கவுள்ளார்” என்று சொல்வதன் மூலம் இலங்கை அரசின் கைக்கூலியாக செயல்படுகின்றாரா?

பல நாடுகளின் துணையுடன் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையில் பிரபாகரனும் கொல்லப்பட்டு தியாகியாக மாறிவிட்ட சூழ்நிலையில், இன்று இலங்கையின் அரசியல் களம் மாறிவிட்ட சூழ்நிலையில், இவ்வாறு கூறுவது சதியா?

பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று சொல்வது, தெரிந்தே அவரைக் கொச்சைப்படுத்தும் முயற்சியாகும். இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது பிரபாகரன் மட்டும் தப்பித்து ஓடி விட்டார் என்பது அவர் ஒரு கோழை, பிழைப்புவாதி என்றல்லவா வரலாற்றில் பதியும்?

மேலும் ஒரு பெரும் விடுதலைப் போராட்டத்தை பிரபாகரன் மட்டுமே நடத்தி விடவில்லை. அதன் பின்னால் லட்சக்கணக்கான மக்களின் உயிர்த் தியாகம் அடங்கி இருக்கும்போது, பிரபாகரன் மட்டுமே ஈழ விடுதலைப் போரின் ஒப்பற்ற தலைவர், அவர் மீண்டும் வந்து விடியலுக்கான திட்டத்தை அறிவிப்பார் என்பது அரசியல் கத்துக்குட்டித்தனமான வாதமாகும்.

2009 ஆம் ஆண்டு மே 17 அன்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நந்திக்கடல் முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவத்தால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சில இணையதளங்கள் அதற்கான வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டு இருந்தன. பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மைதான் என சிங்கள அரசும் ஒத்துக்கொண்டது.

போரை வழிநடத்திய இந்திய அரசும் ஒத்துக் கொண்டது. ஆனால் பிரபாகரனை தம்பி என்றும், அண்ணன் என்றும் சொல்லி தமிழகத்தில் அரசியல் நடத்திக் கொண்டிருந்த சீமான், வைகோ போன்றவர்கள் 'அவர் உயிரோடுதான் இருக்கின்றார். விரைவில் திரும்பி வந்து போரைத் தொடங்குவார்' என்று அப்போது சோதிடம் சொன்னார்கள்.

அதிலும் வைகோ அவர்கள் போன இடமெல்லாம் தம்பி வருவார், தம்பி வருவார் என்று நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டே இருந்தார்.

ஆனால் இன்று “ஈழ விடுதலைப் போர்க்களத்தில் பிரபாகரனோடு களத்தில் நின்ற போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர். என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை” என்றும், "ஆனாலும் அவர் கூறியபடி தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது" எனவும் மாற்றிக் கூறியுள்ளார்.

சீமானும் “என்னிடம் பதில் இல்லை. சில கேள்விகள் மட்டுமே இருக்கின்றன. என் தம்பி பாலச்சந்திரனை சாகவிட்டு, பிரபாகரன் தப்பிச் சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா... `எந்தச் சூழ்நிலையிலும் இந்த நாட்டைவிட்டு போகமாட்டேன்' என வீரமாக சண்டையிட்டவர் பிரபாகரன். தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பிப் போகும் கோழை என பிரபாகரனை நினைக்கிறீர்களா... போர் முடிந்து, ஒரு பேரழிவைச் சந்தித்தப் பிறகு 15 ஆண்டுகளாக ஓரிடத்தில் பத்திரமாக தங்கியிருப்பார் என்று கருதுகிறீர்களா... அல்லது இதுவரை எதுவும் பேசாமல் இருந்திருப்பாரா... பிரபாகரன் சொல்லிவிட்டு வருபவர் அல்ல. வந்துவிட்டுச் சொல்வார். அதுதான் அவர் பழக்கம்” என தன்னுடைய பழைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கின்றார்.

இன்று தமிழ்நாட்டில் நெடுமாறனின் உருட்டுக்கு அவரது சில அடிப்பொடிகள் தவிர யாருமே அசரவில்லை.

நெடுமாறனோ அல்லது அவரை இயக்கும் ஒன்றிய அரசோ தமிழ்நாட்டின் கள எதார்த்தம் ஈழப்போர் நடைபெற்று முடிந்த இந்த பதிமூன்று ஆண்டுகளில் மாறி இருப்பதை இன்னும் உணரவில்லை. அதனால்தான் சங்கிகள் இங்கே மண்ணைக் கவ்வுகின்றார்கள் என்பதையும் புரிந்து கொள்ளவில்லை.

ஒருவேளை புரிந்து கொண்டிருந்தால் நெடுமாறன் போன்றவர்கள் சொல்வதை எல்லாம் தமிழ் மக்கள் இன்றும் நம்புவார்கள் என்று சங்கிகளும் ஒன்றிய அரசும் தப்புக் கணக்கு போட்டிருக்க மாட்டார்கள்.

- செ.கார்கி

https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/44796-2023-02-15-07-32-58

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

இந்தியாவில் தேட‌ப் ப‌டும் குற்றவாளிக‌ளில் 

த‌லைவ‌ர் பெய‌ரும் பொட்டு அம்மான் பெய‌ரும் இருக்கு

அப்ப‌டி தேட‌ப் ப‌டும் குற்ற‌வாளி ம‌ற்றும் த‌டை செய்ய‌ப் ப‌ட்ட‌ இய‌க்க‌ த‌லைவ‌ருட‌ன் தான் தொட‌ர்பில் இருக்கிறேன் என்று சொல்லும் போது  

இந்திய‌ உள‌வுத்துறை இந்திய‌ ரோ ப‌ழ‌ நெடுமாற‌னின் அலைபேசிய‌ ஒட்டுக் கேட்க்காம‌ இருக்குமா..............

ப‌ழ‌நெடுமாற‌ன் பொய் மாற‌ன் என்று இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் அழைக்க‌ப் ப‌டுவார்

ம‌த்திய‌ அர‌சுட‌ன் சேர்ந்து கொண்டு துரோக‌ செய‌லோ அல்ல‌து வேறு ஏதும் திட்ட‌த்துக்கு ப‌ழ‌ நெடுமாற‌ன் த‌லை ஆட்டி பொய்க‌ளை அவுட்டு விடுகிறார்

இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் என்ன‌ ந‌ட‌க்குது என்று பாப்போம்..................

  • கருத்துக்கள உறவுகள்

90 வயதில் எத்தனை மன உளைச்சல்களுக்கும் அழுத்தங்களுக்கம் இவர் முகம் கொடுக்கவேண்டி இருந்ததோ தெரியவில்லை.

கூடவே இருந்த வளர்த்தவர்கள்/வளர்ந்தவர்கள் (அதிலும் உடல், உளரீதியாக இளமையானவர்கள், வலிமையானவர்கள்) மற்றவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து சுயநலவாதிகளாக மாறி செய்த காட்டிக்கொடுப்புகளையும், விடவா இவரது செயல் துரோகமானது?? சரி அப்படி அவர் அறிக்கைவிட்டால் அவர் கூறிய சந்தர்ப்பம், சூழ்நிலையை பார்க்கவேண்டும், இதனை ஏன் இந்த சமயத்தில் வெளியிட்டு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என யோசித்து இதனால் ஏற்படப்போகும் விளைவுகளையும் அவற்றை எப்படி சமாளிப்பது என்பதை கூறுவதை விட்டு இந்த மாதிரி திரும்பத் திரும்ப விலை போய்விட்டார் etc etc என கூறுவது சரியல்ல என நினைக்கிறேன்.. 

மிகவும் பரிதாபத்துக்குரிய நிலைக்கு அவர் வந்துள்ளார்.. . மதிப்பிற்குரிய ஒருவர், தலைவரில் மிகவும் பாசமுடையவரின் முதுமையையும் இயலாமையையும் பயன்படுத்துகிறார்கள்.. 

அவ்வளவுதான்.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இது தான் உண்மை நிலையாக இருக்கும் என நான் நினைத்தேன்..!

எந்த நாட்டின் புலனாய்வுத் துறையும் ஈவிரக்கம் இல்லாதவை.   மகனைக் கொல்வோம், குடும்பத்தையே அழிப்போம், வீட்டை எரிப்போம் என்றெல்லாம் வெருட்டியிருப்பார்கள்..! பி.பி. சி க்கெ நடக்கிறதைப் பாருங்கோவன்…!

இப்போ நெடுமாறனை துரோகி என்போர்

எத்தனை வருடங்களாக எமது நாட்டு தலைவர்கள் கட்சிகள் இந்திய அரசின் கைகளில் அகப்பட்டு நிற்கிறார்கள்.

இப்போதும் கூட எந்த எந்த கட்சிகளோடு யார்யார் கூட்டுச் சேர வேண்டும் என்பதை இந்திய புலனாய்வுப் பிரிவே நிர்ணயிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இப்போ நெடுமாறனை துரோகி என்போர்

எத்தனை வருடங்களாக எமது நாட்டு தலைவர்கள் கட்சிகள் இந்திய அரசின் கைகளில் அகப்பட்டு நிற்கிறார்கள்.

இப்போதும் கூட எந்த எந்த கட்சிகளோடு யார்யார் கூட்டுச் சேர வேண்டும் என்பதை இந்திய புலனாய்வுப் பிரிவே நிர்ணயிக்கிறார்கள்.

நன்றி  ஈழப்பிரியன், பிரபா சிதம்பரநாதன், புங்கையூரான்.

இலங்கையில் போர்க்குற்ற விசாரணைக்கு... 
வெளிநாடு தேவையில்லை, உள்நாட்டிலேயே விசாரிக்கலாம் என்றும்,
புலிகளையும் விசாரிக்க வேண்டும் என்று சொன்ன சுமந்திரனையும்....

மகிந்தவை.... புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக 
பாராளுமன்றத்தில் பாராட்டிய சம்பந்தனையும்... தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு 
அனுப்பிக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் செய்த குற்றத்தை விட... 
நெடுமாறன் தனது 90 வயதில் பெரும் குற்றம் செய்து விடவில்லை.

அவராவது... தனது முயற்சியால், தமிழ்நாட்டில் முள்ளிவாய்க்கால் அவலங்களை சித்தரிக்கும், முள்ளிவாய்க்கால் முற்றம் ஒன்றை நிறுவினார்.
ஈழத்  தமிழ் தலைவர்கள் சாதித்ததை விட... 
நெடுமாறன் சாதித்துள்ளார் என்பதை மறக்க வேண்டாம்.

6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

90 வயதில் எத்தனை மன உளைச்சல்களுக்கும் அழுத்தங்களுக்கம் இவர் முகம் கொடுக்கவேண்டி இருந்ததோ தெரியவில்லை.

கூடவே இருந்த வளர்த்தவர்கள்/வளர்ந்தவர்கள் (அதிலும் உடல், உளரீதியாக இளமையானவர்கள், வலிமையானவர்கள்) மற்றவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து சுயநலவாதிகளாக மாறி செய்த காட்டிக்கொடுப்புகளையும், விடவா இவரது செயல் துரோகமானது?? சரி அப்படி அவர் அறிக்கைவிட்டால் அவர் கூறிய சந்தர்ப்பம், சூழ்நிலையை பார்க்கவேண்டும், இதனை ஏன் இந்த சமயத்தில் வெளியிட்டு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என யோசித்து இதனால் ஏற்படப்போகும் விளைவுகளையும் அவற்றை எப்படி சமாளிப்பது என்பதை கூறுவதை விட்டு இந்த மாதிரி திரும்பத் திரும்ப விலை போய்விட்டார் etc etc என கூறுவது சரியல்ல என நினைக்கிறேன்.. 

மிகவும் பரிதாபத்துக்குரிய நிலைக்கு அவர் வந்துள்ளார்.. . மதிப்பிற்குரிய ஒருவர், தலைவரில் மிகவும் பாசமுடையவரின் முதுமையையும் இயலாமையையும் பயன்படுத்துகிறார்கள்.. 

அவ்வளவுதான்.. 

4 hours ago, புங்கையூரன் said:

இது தான் உண்மை நிலையாக இருக்கும் என நான் நினைத்தேன்..!

எந்த நாட்டின் புலனாய்வுத் துறையும் ஈவிரக்கம் இல்லாதவை.   மகனைக் கொல்வோம், குடும்பத்தையே அழிப்போம், வீட்டை எரிப்போம் என்றெல்லாம் வெருட்டியிருப்பார்கள்..! பி.பி. சி க்கெ நடக்கிறதைப் பாருங்கோவன்…!

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

நன்றி  ஈழப்பிரியன், பிரபா சிதம்பரநாதன், புங்கையூரான்.

இலங்கையில் போர்க்குற்ற விசாரணைக்கு... 
வெளிநாடு தேவையில்லை, உள்நாட்டிலேயே விசாரிக்கலாம் என்றும்,
புலிகளையும் விசாரிக்க வேண்டும் என்று சொன்ன சுமந்திரனையும்....

மகிந்தவை.... புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக 
பாராளுமன்றத்தில் பாராட்டிய சம்பந்தனையும்... தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு 
அனுப்பிக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் செய்த குற்றத்தை விட... 
நெடுமாறன் தனது 90 வயதில் பெரும் குற்றம் செய்து விடவில்லை.

அவராவது... தனது முயற்சியால், தமிழ்நாட்டில் முள்ளிவாய்க்கால் அவலங்களை சித்தரிக்கும், முள்ளிவாய்க்கால் முற்றம் ஒன்றை நிறுவினார்.
ஈழத்  தமிழ் தலைவர்கள் சாதித்ததை விட... 
நெடுமாறன் சாதித்துள்ளார் என்பதை மறக்க வேண்டாம்.

நான் ஒரு போதும் இல‌ங்கை அர‌சிய‌ல் வாதிக‌ளை த‌லையில் தூக்கி கொண்டாடின‌து கிடையாது

ஒரு வார்த்தையில் சொல்ல‌னும் என்றால் நீங்க‌ள் மேல‌ எழுதின‌ ஆட்க‌ள் க‌ழிவுக‌ள் அர‌சிய‌லுக்கு வ‌ந்து மாடி வீடுக‌ள் க‌ட்டி எல்லா வ‌ச‌தியுட‌ன் உல்லாச‌மாய் வாழும் கொடிய‌வ‌ர்க‌ள் , சிங்க‌ள‌ ஓனாய்க‌ள் கூட‌ க‌ள்ள‌ உற‌வை வைத்து இருக்கும் திருட்டு கும்ப‌ல்

ஆனால் ப‌ழ‌ நெடுமாற‌னுக்கு இது தேவை இல்லா வேலை

மாபெரும் த‌லைவ‌ரின் தியாக‌த்தை கொச்சை ப‌டுத்தி த‌மிழ‌ர்க‌ள் ம‌த்தியில் ஒரு இன‌த்தை ப‌லி கொடுத்து விட்டு தான் ம‌ட்டும் த‌ப்பி ஓடியா கோழை போல் த‌லைவ‌ரை சித்த‌ரித்து முச்ச‌ந்தி சிரிக்கும் அள‌வுக்கு செய்த‌ துரோக‌ செய‌ல் த‌லைவ‌ரின் ஆன்மா கூட‌ ப‌ழ‌ நெடுமாற‌ன‌ ம‌ன்னிக்காது..................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேர் பொன் இராமநாதன் காலம் தொடக்கம் ஜீஜீ பொன்னம்பலம் ஈறாக இன்று நெடுமாறன் செய்த தவறு வரைக்கும் அவர்கள் செய்தவற்றை நியாயப்படுத்தி எம் இனத்தை நாமே அழித்துக்கொண்டிருக்கின்றோம்.

அச்சுறுத்தல் பயமுறுத்தலுக்கு அடிபணிந்தால் எதற்காக வீதிகளிலும் மேடைகளிலும் வீர வசனங்கள் பேசி மக்களை ஏமாற்றுகின்றீர்கள். மக்களோடு மக்களாக இருந்திருக்கலாமே?

காசி ஆனந்தனின் அன்றைய மேடைப்பேச்சுக்களுக்கும் இன்றைய செயல்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.

எல்லோரும் அரசியல் வியாபாரிகள். பாவம் தமிழும் அதன் இனமும்.😡

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

90 வயதில் எத்தனை மன உளைச்சல்களுக்கும் அழுத்தங்களுக்கம் இவர் முகம் கொடுக்கவேண்டி இருந்ததோ தெரியவில்லை.

கூடவே இருந்த வளர்த்தவர்கள்/வளர்ந்தவர்கள் (அதிலும் உடல், உளரீதியாக இளமையானவர்கள், வலிமையானவர்கள்) மற்றவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து சுயநலவாதிகளாக மாறி செய்த காட்டிக்கொடுப்புகளையும், விடவா இவரது செயல் துரோகமானது?? சரி அப்படி அவர் அறிக்கைவிட்டால் அவர் கூறிய சந்தர்ப்பம், சூழ்நிலையை பார்க்கவேண்டும், இதனை ஏன் இந்த சமயத்தில் வெளியிட்டு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என யோசித்து இதனால் ஏற்படப்போகும் விளைவுகளையும் அவற்றை எப்படி சமாளிப்பது என்பதை கூறுவதை விட்டு இந்த மாதிரி திரும்பத் திரும்ப விலை போய்விட்டார் etc etc என கூறுவது சரியல்ல என நினைக்கிறேன்.. 

மிகவும் பரிதாபத்துக்குரிய நிலைக்கு அவர் வந்துள்ளார்.. . மதிப்பிற்குரிய ஒருவர், தலைவரில் மிகவும் பாசமுடையவரின் முதுமையையும் இயலாமையையும் பயன்படுத்துகிறார்கள்.. 

அவ்வளவுதான்.. 

சொல்ல வார்த்தைகள்  இல்லை

நன்றி  சகோதரி

எம்மோடு  இருந்தவர்களை

எம்மை  காத்தவர்களை 

எமக்காக உயிரையும் பொருட்படுத்தாது உழைத்தவர்களை

வசைபாடும்  சமூகம்

நன்றி  மறந்த இனம்.....

4 hours ago, குமாரசாமி said:

சேர் பொன் இராமநாதன் காலம் தொடக்கம் ஜீஜீ பொன்னம்பலம் ஈறாக இன்று நெடுமாறன் செய்த தவறு வரைக்கும் அவர்கள் செய்தவற்றை நியாயப்படுத்தி எம் இனத்தை நாமே அழித்துக்கொண்டிருக்கின்றோம்.

சரியான கருத்து.

துரோகம் செய்பவர்களை வயதைக் காட்டியோ, குடும்பத்தைக் காட்டியோ நியாயப்படுத்த தேவையில்லை. இவர்கள் செய்யும் துரோகத்தின் விளைவை பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக அனுபவிக்க வேண்டி வரும்/ வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

காசி ஆனந்தனின் அன்றைய மேடைப்பேச்சுக்களுக்கும் இன்றைய செயல்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.

எல்லோரும் அரசியல் வியாபாரிகள். பாவம் தமிழும் அதன் இனமும்.😡

காசி ஆன‌ந்த‌னை ப‌ற்றி யாரும் ந‌ல்ல‌தா சொல்லி நான் கேள்வி பட்டது இல்லை தாத்தா.............இவ‌ர்க‌ளின் இந்த‌ செய‌ல்க‌ளால் பின் பின்விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்

ம‌றைந்த‌ மாபெரும் மாவீர‌னை உயிரோடு இருக்கிறார் என்று இனிப்புக‌ள் ல‌ட்டுக‌ள் ஆள் ஆளுக்கு ஊட்டி விட்ட‌ காணொளிய‌ பார்க்க‌ உண்மையில் அதிக‌ வெறுப்பு தான் வ‌ருது இவ‌ர்க‌ள் மேல் ...............

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

நன்றி  ஈழப்பிரியன், பிரபா சிதம்பரநாதன், புங்கையூரான்.

இலங்கையில் போர்க்குற்ற விசாரணைக்கு... 
வெளிநாடு தேவையில்லை, உள்நாட்டிலேயே விசாரிக்கலாம் என்றும்,
புலிகளையும் விசாரிக்க வேண்டும் என்று சொன்ன சுமந்திரனையும்....

மகிந்தவை.... புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக 
பாராளுமன்றத்தில் பாராட்டிய சம்பந்தனையும்... தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு 
அனுப்பிக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் செய்த குற்றத்தை விட... 
நெடுமாறன் தனது 90 வயதில் பெரும் குற்றம் செய்து விடவில்லை.

அவராவது... தனது முயற்சியால், தமிழ்நாட்டில் முள்ளிவாய்க்கால் அவலங்களை சித்தரிக்கும், முள்ளிவாய்க்கால் முற்றம் ஒன்றை நிறுவினார்.
ஈழத்  தமிழ் தலைவர்கள் சாதித்ததை விட... 
நெடுமாறன் சாதித்துள்ளார் என்பதை மறக்க வேண்டாம்.

உண்மை

தலைவர் நெடுமாறன்  அவர்கட்கு  தம்பி  என்பதனையும் நெடுமாறன் தலைவருக்கு  அண்ணர்  என்பதனையும்  தமிழீழ வரலாறு  ஆரம்பத்தபோதே எழுதி வைத்துள்ளதை அறிந்தவர்கள் இது  பற்றி அலட்டிக்கொள்ளத்தேவையில்லை சிறி.

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியப் படைகள் காலத்தில்.. ஹிந்திய சார்பு ஒட்டுக்குழுக்கள் இரண்டு வேலை செய்வார்கள். ஒன்று புலிகள் போல அடிச்சு துண்டுப்பிரசுரம் கொடுப்பார்கள். இன்னொன்று அதனை தேடிப் பிடிச்சு வாசிப்பவர்களை தூக்கிக் கொண்டு போவார்கள். அதுக்கு மேல.. புலிகளே.. புலிகளை திட்டுவது போலவும் நிகழ்வுகளை நடத்துவார்கள். சொறீலங்கா படைகளின் காலத்திலுமே.

இன்றைய சூழலில்.. தேசிய தலைவர் வெளி உலகின் முன் முகம் காட்டினாலும்.. கூட அவர் முன்னர்.. போல் ஒரு போரையோ.. போராட்டத்தையோ முன்னெடுத்துச் செல்லக் கூடிய கள நிலையில்லை. அதவாது ஆயுதப் போராட்ட ரீதில்.. அவர் பல தசாப்தங்களுக்கு பிந்தங்கி விட்டார். 

பிரபாகரனின் மீள் வருகை என்பது வாதப் பிரதிவாதங்களுக்கு வசதியாக அமையுமே தவிர.. தமிழ் மக்களின் விடிவுக்கு நேரடியான தாக்கம் செய்யக் கூடிய சூழல் இல்லை இன்று.

ஆனால்.. பிரபாகரன் இருக்கிறார் என்றால்.. பயப்படக் கூடிய சக்திகள்.. தமது பொய்களை இட்டு மக்கள் தம்மை இனங்கண்டு விடுவார்களோ என்று அஞ்சுபவர்கள் தான் அதிகமாக இருக்க முடியும். அவர்களுக்கு தான்..  பிரபாகரன் இறந்த ஆளாகவே இருக்கனும். இன்னொரு தரப்பிருக்குது.. பிரபாகரனை கொன்று விட்டோம் அல்லது அவர் இல்லை என்று சொல்லி பிழைப்பு நடத்தும் கூட்டம்.. தம் இஸ்டத்துக்கு அரசியல் நடத்தும் கூட்டம்... இந்தத் தரப்புகளுக்கு தான் இப்ப பிரச்சனையே தவிர.. தமிழ் மக்களுக்கு பெரிய மாற்றங்களை இது உருவாக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, nedukkalapoovan said:

நெடுமாறன் ஐயா அவர்களை கைவிரல் நீட்டும் அளவுக்கு இங்கே எவருக்கும் தகுதி கிடையாது. 

இந்திரா காந்தியையே காப்பாற்றி இந்திய அரசின் மதிப்புக்குரியவராகியும் எல்லாவற்றையும் விட தமிழீழ விடுதலை தான் இலட்சியம் என எம்முடன் நின்றவருக்கு சுயநலப்பட்டம்??

 இன்று வரை தமிழகத்தில் கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர் என்று அழைக்கப்படுபவருக்கு எம்மவரின் பரிசு என்ன என்று பார்த்தீர்களா?

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

கொஞ்சம் பொறுங்க அவர் சிறு பிள்ளை ..................................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

பலருக்கு நெடுமாறன். பற்றி தெரியாது....  அந்த காலத்தில்   கோவை மகேஷ்சனின்.  சுதந்திரன  பேப்பர் தொடர்ச்சியாக வாசித்தவர்களுக்கு    வை.கோ ...நெடுமாறன். பற்றி புரியும்    தெரியும்    

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

கொஞ்சம் பொறுங்க அவர் சிறு பிள்ளை ..................................

பெருமாள் அண்ணா
க‌ருத்து க‌ள‌ம் என்று வ‌ந்து விட்டால் ப‌த்தும் ப‌ல‌தையும் எழுதும் க‌ள‌மாக‌ யாழ்க‌ள‌ம் இருக்கும்

மேல‌ நான் எழுதின‌ ப‌திவுக‌ளை வாசித்தால் புரியும் நான் ஏன் இப்ப‌டி எழுதுகிறேன் என்று

ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா இந்த‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌ப்பாக‌ வ‌ழி சொன்ன‌ ப‌டியால் தான் அவ‌ர் மீது அட‌க்க‌ முடியாத‌ கோவ‌ம்

ம‌ற்ற‌ம் ப‌டி நான் யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டோ அத‌ற்கு முத‌லும் ச‌ரி ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா மீது ஒரு போதும் க‌ல் எறிந்த‌து கிடையாது

இந்திரா காந்தி அம்மையார் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவின் வ‌ர‌லாறுக‌ள் ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே வாசித்து தெரிந்து விட்டேன்...........இதில் ப‌ழ‌ நெடுமாற‌ன் அது செய்தார் இது செய்தார் என்று ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எழுதி காட்டுவ‌து ஏதோ 10வ‌ய‌து குழ‌ந்தை பிள்ளைக‌ளுக்கு பாட‌ம் எடுப்ப‌து போல் இருக்கு...............

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

கொஞ்சம் பொறுங்க அவர் சிறு பிள்ளை ..................................

அது எனக்கும்  தெரியும்
ஆனால்  போராட்டத்தில்  அனுபவமுள்ளவர்கள் தலைவரை உயிராக  மதிப்பவர்கள்  சொன்னால் கேட்கணும் இல்லையா?
தேசியத்தலைவர் என்றபடியே வன்னித்தலைமை  என்பது எவ்வளவு  அபத்தமான புரிதல்.
இந்த பரிதலை வைத்துக்கொண்டு எப்படி  அடுத்தகட்டத்துக்கு  நகர்வது?
எல்லோரையும் துரோகிகள்  என்றபடி அறிவார்ந்த சமூகத்தை  எப்படி  கட்டியமைப்பது???
அதனை  கவனிக்கும்படியே தம்பி  என்ற ரீதியில்  எழுதினேன்
ஆனால் அவர் கடைசியில்  என்னையே  துரோகிப்பட்டியலில்  சேர்க்க முயற்சிக்கிறார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Kandiah57 said:

பலருக்கு நெடுமாறன். பற்றி தெரியாது....  அந்த காலத்தில்   கோவை மகேஷ்சனின்.  சுதந்திரன  பேப்பர் தொடர்ச்சியாக வாசித்தவர்களுக்கு    வை.கோ ...நெடுமாறன். பற்றி புரியும்    தெரியும்    

இங்கே யாரும் செய் நன்றி மறக்கவில்லை.நெடுமாறன் ஐயா ஏன் மீண்டும் மீண்டும் தலைவர் உயிருடன் இருக்கின்றார். வருவார் என கூறுகின்றார்? அதனால் வரும் பின் விளைவுகளை இவர் யோசிக்கவில்லையா?

அல்லது நீங்களும் மற்றவர்கள் போல்  தலைவர் வருவார் தமிழர் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என நம்புகின்றீர்களா?

தலைவர் உயிருடன் இருந்தால்....எங்கிருந்தாலும் சந்தோசமாக இருக்கட்டும்.அது தான் என் ஆசை.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

இதை தானே தாத்தா ப‌ழ‌நெடுமாற‌ன் அறிக்கை விட்ட‌தில் இருந்து கை விர‌ல் வ‌லிக்க‌ வ‌லிக்க‌ எழுதுகிறேன்

இப்ப‌ தான் ஊரில் காணிக‌ள் விடு ப‌ட்டு த‌மிழ‌ர்க‌ளின் நில‌ங்க‌ள் த‌மிழ‌ர்க‌ள் கையில் ஒப்ப‌டைக்கின‌ம்

ஈழ‌ ம‌ண்ணில் போர் செய்ய‌மா நாடு அடைவ‌தையே ப‌ல‌ர் விரும்புகின‌ம்..............அப்ப‌டி போர் செய்து தான் ஈழ‌ம் ம‌ல‌ர‌னும் என்றால் முத‌ல் இந்தியா புலிக‌ள் மீதான‌ த‌டைய‌ நீக்க‌னும்

ப‌ழ‌ நெடுமாற‌ன் முக்கிய‌மான‌துக்கு முய‌ற்ச்சி செய்ய‌மா த‌லைவ‌ர் ப‌ற்றி தேவை இல்லா அறிக்கை விட்டு குழ‌ப்ப‌த்த‌ உண்டு ப‌ண்ணுகிறார்

ப‌ழ‌ நெடுமாற‌ன் செய்ய‌ வேண்டிய‌து ம‌த்திய‌ அர‌சுட‌ன் க‌தைச்சு புலிக‌ள் மீதான‌ த‌டைய‌ நீக்க‌னும்..............இவ‌ர் தான் த‌லைவ‌ர் இருக்கிறார் என்று 12வ‌ருட‌த்துக்கு மேல‌ கூவிக்கிட்டு இருக்கிறார்

பிர‌பாக‌ர‌ன் இந்தியாவில் தேட‌ப் ப‌டும் குற்ற‌வாளி............20009ம் ஆண்டுட‌ன் த‌லைவ‌ர் ப‌ற்றி இவ‌ர் வாய் மூடி இருந்து இருந்தா அறிவை தீட்டி ப‌ல‌த‌ சாதிச்சு இருக்க‌லாம்

ப‌ழ‌ நெடுமாற‌னுக்கு 90வ‌ய‌து ஆகி விட்ட‌து.............இவ‌ர் எங்க‌ட‌ த‌மிழீழ‌ க‌ன‌வை அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு எடுத்து செல்வாரா தாத்தா............இதுக்கு ம‌ட்டும் ப‌தில‌ சொல்லுங்கோ தாத்தா....................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

1 - இங்கே யாரும் செய் நன்றி மறக்கவில்லை.நெடுமாறன் ஐயா ஏன் மீண்டும் மீண்டும் தலைவர் உயிருடன் இருக்கின்றார். வருவார் என கூறுகின்றார்? அதனால் வரும் பின் விளைவுகளை இவர் யோசிக்கவில்லையா?

2 -அல்லது நீங்களும் மற்றவர்கள் போல்  தலைவர் வருவார் தமிழர் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என நம்புகின்றீர்களா?

3 -தலைவர் உயிருடன் இருந்தால்....எங்கிருந்தாலும் சந்தோசமாக இருக்கட்டும்.அது தான் என் ஆசை.

1 - விலை போய்  விட்டார் துரோகி என்பதைவிட ஒரு  நன்றி கெட்டத்தனம்  உண்டா  அண்ணா?

2- எனக்கும் 99.99999 தெரியும் தலைவர்  இல்லையென. ஆனால்  எல்லா  தமிழ்  மக்களையும்  போல 0.00001 வீதம் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று  இந்த மனம் 2009 இலிருந்து துடிக்கிறது அவரது இழப்பை  நம்ப  மறுக்கிறது.  இந்த மனநிலையில்  தமிழர்கள்  எல்லோரும் இருப்பதாகத்தான்  நான்  கருதுகின்றேன். அதற்கு  சாட்சியாக இதுவரை எந்த மாவீரர்மண்டபத்திலும் புலத்திலும்  சரி தாயகத்திலும்  சரி  உலகின்  தமிழர்  வாழ்கின்ற எந்த இடத்திலும் சரி தலைவருக்கு  அஞ்சலியோ  வீரவணக்கமோ  செய்யப்படவில்லை என்பதையும்  இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.  அப்படி எவராவது செய்திருந்தால் (மண்டபத்தில் பகிரங்கமாக) அறியத்தாருங்கள்.

3 - இருந்தால் தலைவன்

இல்லையென்றால் இறைவன்  என்பதே எனது நிலைப்பாடு.

நன்றியண்ணா.

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17/2/2023 at 16:33, விசுகு said:

1 - விலை போய்  விட்டார் துரோகி என்பதைவிட ஒரு  நன்றி கெட்டத்தனம்  உண்டா  அண்ணா?

2- எனக்கும் 99.99999 தெரியும் தலைவர்  இல்லையென. ஆனால்  எல்லா  தமிழ்  மக்களையும்  போல 0.00001 வீதம் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று  இந்த மனம் 2009 இலிருந்து துடிக்கிறது அவரது இழப்பை  நம்ப  மறுக்கிறது.  இந்த மனநிலையில்  தமிழர்கள்  எல்லோரும் இருப்பதாகத்தான்  நான்  கருதுகின்றேன். அதற்கு  சாட்சியாக இதுவரை எந்த மாவீரர்மண்டபத்திலும் புலத்திலும்  சரி தாயகத்திலும்  சரி  உலகின்  தமிழர்  வாழ்கின்ற எந்த இடத்திலும் சரி தலைவருக்கு  அஞ்சலியோ  வீரவணக்கமோ  செய்யப்படவில்லை என்பதையும்  இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.  அப்படி எவராவது செய்திருந்தால் (மண்டபத்தில் பகிரங்கமாக) அறியத்தாருங்கள்.

3 - இருந்தால் தலைவன்

இல்லையென்றால் இறைவன்  என்பதே எனது நிலைப்பாடு.

நன்றியண்ணா.

வணக்கம் விசுகர்!

விலை போன கதைகள் எல்லாம் எமது இனத்துக்குள் நடந்த வரலாற்று சம்பவங்களை வைத்து தானே கருத்தாக வெளி வருகின்றது.

தலைவரை தலைமையாக கொண்ட விடுதலைப்போராட்டம் சரிவடைந்ததிற்கு முக்கியஸ்தர்கள் விலை போனதும் ஒரு காரணம் சரியா பிழையா?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் ஒன்றிய அரசின் கைக்கூலியா என்றால் இல்லை என்று தான் கூறுவேன். ஏனென்றால் இப்போதெல்லாம் online மூலம் தான் பணப்பரிவர்த்தனைகள் நிகழ்த்தப்படுகிறது. எனவே அவர் மட்டுமல்ல எவருமே  கைக்கூலி அல்ல. 😂😂😂

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

வணக்கம் விசுகர்!

விலை போன கதைகள் எல்லாம் எமது இனத்துக்குள் நடந்த வரலாற்று சம்பவங்களை வைத்து தானே கருத்தாக வெளி வருகின்றது.

தலைவரை தலைமையாக கொண்ட விடுதலைப்போராட்டம் சரிவடைந்ததிற்கு முக்கியஸ்தர்கள் விலை போனதும் ஒரு காரணம் சரியா பிழையா?

ஆமாம் அண்ணா

என்னைக் கூட அதற்குள் போடும் முயற்சிகள் யாழில் கூட எடுக்கப்படுவதும் அதைப்பலர் கண்டும் காணாமலும் செல்வதனூடாக  ஆமோதிப்பதும் நடக்கத்தானே செய்கிறது. 

ஆனால் தலைவர் வழியில் நிற்பவர்கள் ஆதாரங்கள் சாட்சிகள் அதன்பின்னர் எச்சரிக்கைகள் கடந்து தான் முடிவுக்கு வருவார்கள் வந்திருக்கிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.