Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நடிகர் மயில்சாமி காலமானார்: மிமிக்ரி, காமெடி, மேடை நாடகம் என பல முகம் கொண்ட ஆளுமை

3 மணி நேரங்களுக்கு முன்னர்
நடிகர் மயில்சாமி

பட மூலாதாரம்,FACEBOOK/ACTOR MAYILSAMY OFFICIAL

தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் காமெடியனாக நடித்துள்ள நடிகர் மயில்சாமி, இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 57.

சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று இரவு சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மயில்சாமி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக மயில்சாமி இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இந்தத் தகவலை மயில்சாமியின் மகனான அன்பு மயில்சாமி உறுதிப்படுத்தியுள்ளார்.

 

இவரது மகன்களான அன்பு மயில்சாமி, யுவன் மயில்சாமி ஆகிய இருவரும் நடிகர்களாக உள்ளனர்.

மயில்சாமியின் உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மயில்சாமியின் சினிமா பயணம்

மேடை நாடகக் கலைஞராக இருந்து, சினிமாவுக்குள் நுழைந்தவர் மயில்சாமி. தமிழில் தாவணிக் கனவுகள், கன்னி ராசி போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

நடிகர் கமல்ஹாசனின் நண்பராக அபூர்வ சகோதரர்கள் படத்தில் பின்னர் நடித்தார். தொடர்ந்து திரைப்படங்களில் சிறிய காமெடி வேடங்களில் நடித்து வந்தார்.

ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் மயில்சாமி.

நடிகர் விவேக்குடன் இவர் நடித்த படங்கள் பரவலாக இவருக்கு புகழை பெற்றுத் தந்தன.

விக்ரம் கதாநாயகனாக நடித்த தூள் படத்தில் விவேக் - மயில்சாமி கூட்டணியில் உருவான காமெடி காட்சிகள் இவருக்குப் புகழை சேர்த்தன. அந்தப் படத்தில் விவேக்கை ஏமாற்றி திருப்பதியில் ஜிலேபியை பிரசாதமாகக் கொடுத்தார்கள் என விவேக்கிடம் கூறும் காட்சியில் நடித்து மயில்சாமி புகழ்பெற்றார்.

போலி சாமியார் வேடத்தில் விவேக்குடன் சேர்ந்து தொலைக்காட்சி நேர்காணலில் சேட்டை செய்வது போல நடித்த காட்சிகளும் பிரபலமானது.

வடிவேலுவுடன் இணைந்து தவசி, தலைநகரம் உள்ளிட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மயில்சாமி.

தற்போது பல திரைப்படங்களில் மயில்சாமி நடித்து வந்த நிலையில், இறுதியாக சில நாட்களுக்கு முன்பு அவர் நடித்திருந்த 'கிளாஸ்மேட்' படத்தின் டப்பிங் பணியைக்கூட முடித்துவிட்டு வந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 1

பன்முக திறமைகள் கொண்ட மயில்சாமி

காமெடி நடிகராக வலம் வந்தது மட்டுமின்றி மேடை நாடகம், மிமிக்ரி கலைஞர் எனப் பன்முகத் திறமைகள் கொண்டிருந்தார் நடிகர் மயில்சாமி. நடிகர் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் மிமிக்ரி செய்யும் கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார்.

பல்வேறு படங்களின் இசை வெளியீட்டு விழா, பொது நிகழ்ச்சிகளில் பல நடிகர்களைப் போல மிமிக்ரி செய்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார் மயில்சாமி.

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு மேடை நாடகங்களில் நடித்துள்ளார் மயில்சாமி. வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்துள்ள மயில்சாமி, காமெடி டைம், மர்மதேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார்.

நடிகர் மயில்சாமி

பட மூலாதாரம்,FACEBOOK/ACTOR MAYILSAMY OFFICIAL

அரசியல் களம்

சினிமா மட்டுமின்றி, அரசியலிலும் கால்தடம் பதித்திருந்த மயில்சாமி, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக இருந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். ஆனால் இந்தத் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.

அரசியல் மட்டுமின்றி, சமூக சேவையிலும் தன்னைப் பல நேரங்களில் ஈடுபடுத்திக் கொண்டவர் மயில்சாமி. அவரின் உதவும் குணம் பற்றி பிரபல நகைச்சுவை நடிகரான விவேக் ஒருமுறை மேடையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

"தமிழ்நாட்டில் சுனாமி பாதிக்கப்பட்ட காலத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்களுக்கு உதவி செய்து கொண்டு இருந்த இந்தி நடிகர் விவேக் ஓபராயிடம் தனது கழுத்தில் மாட்டியிருந்த தங்கச் சங்கிலியில் இருந்த எம்.ஜி.ஆர். டாலரை கொடுத்து உதவி செய்ய வைத்துகொள்ளச் சொன்னவர்" என விவேக் அப்போது குறிப்பிட்டார்.

சென்னையில் மயில்சாமி வசிக்கும் விருகம்பாக்கம் பகுதியில், கொரோனா காலத்தின்போது மக்களுக்கு உணவு உள்ளிட்ட பல உதவிகளைச் செய்து வந்தார்.

பிரபலங்கள் இரங்கல்

மயில்சாமியின் மறைவுக்கு சினிமா, அரசியல் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டிவிட்டரில் "என் நண்பர் மயில்சாமியின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது," என நடிகர் சரத்குமார் பதிவிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 2

"உங்கள் நகைச்சுவை என்றும் நினைவில் நிற்கும்" என நடிகர் விக்ரம் தனது டிவிட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 3

"கட்சி எல்லைகளைக் கடந்து என்னுடன் நட்பு பாராட்டியவர் மயில்சாமி" என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 4

நடிகர் விவேக்கின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட மயில்சாமி, விவேக் மறைந்தபோது அவரது உடல் அடக்கம் செய்யும் வரை அனைத்து வேலைகளையும் முன் நின்று கவனித்து வந்தார்.

Instagram பதிவை கடந்து செல்ல, 1
Instagram பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Instagram பதிவின் முடிவு, 1

தற்போது மயில்சாமியின் மறைவையடுத்து நடிகர் விவேக் சொர்க்கத்திற்கு அவரை அழைப்பது போல மீம் ஒன்றைப் பகிர்ந்து ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 5
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 5

"நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் மயில்சாமி" என்று நடிகர் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-64694184

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மயில்சாமியின் நகைச்சுவை ரசிக்கக் கூடியதாக இருக்கும்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நடிகர் மயில்சாமி மறைவு: "எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்; காசு இருந்தால் யோசிக்காமல் உதவுவான்" - வைரலாகும் விவேக்கின் பேச்சு

42 நிமிடங்களுக்கு முன்னர்
மயில்சாமி

பட மூலாதாரம்,FACEBOOK/ACTOR MAYILSAMY OFFICIAL

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

"எனக்கு கஷ்டம்னா அவர்கிட்ட தான் சொல்லுவேன்"

இப்படி நடிகர் விவேக் மறைந்த போது தழுதழுத்த குரலில் பேசிய நடிகர் மயில்சாமி இன்று உயிருடன் இல்லை.

மாரடைப்பால் இன்று காலை (பிப். 19) மயில்சாமி உயிரிழந்த நிலையில், விவேக் - மயில்சாமி இருவருக்குமிடையே திரையிலும், திரைக்கு வெளியேவும் இருந்த நட்பை பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

5 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் மயில்சாமி குறித்து விவேக் பேசிய காணொளி ஒன்றும் தற்போது அதிகமாக பகிரப்படுகிறது.

 

சினிமாவில் ஹிட் அடித்த கூட்டணி

விக்ரம் நாயகனாக நடித்த தூள் படத்தில் விவேக் - மயில்சாமி நடித்த காமெடி காட்சிகள் மிகபிரபலமானவை.

அந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் விவேக்கை ஏமாற்ற "திருப்பதியில் லட்டுக்கு பதிலாக ஜிலேபி தான் கொடுக்குறாங்க பாஸ். சந்திரபாபு நாயுடுவே சொல்லிட்டார்" என மயில்சாமி பேசிய வசனம் இன்றும் பல மீம் கிரியேட்டர்களின் டெம்ப்லேட்டாக இருக்கிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 1

'பாளையத்து அம்மன்' படத்திலும் இந்த இருவரின் கூட்டணியில் உருவாகியிருந்த காமெடி காட்சிகள் பலரால் ரசிக்கப்பட்டது.

அந்த படத்தில் போலிச் சாமியார் கதாபாத்திரத்தில் மயில்சாமியும், சித்தர் வேடத்தில் விவேக்கும் நடித்திருப்பார்கள். இந்த காட்சி அந்த காலத்தில் தொலைக்காட்சியில் வெளியாகி ஹிட் ஆகியிருந்த ஒரு நேர்காணலை தழுவி எடுக்கப்பட்டிருந்தது.

இதில் விவேக்கிடம் மயில்சாமி, "அவரு ஔவையாரை ஒளவையார்னு படிப்பாரு" என்று பேசும் இந்த காட்சி இருவரின் காமெடி கூட்டணியில் வெளிவந்த சிறந்த காட்சிகளில் ஒன்றாகும்.

மயில்சாமி

பட மூலாதாரம்,FACEBOOK/ACTOR MAYILSAMY OFFICIAL

இது குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருந்த மயில்சாமி, "இந்த காட்சிக்கான வசனம் எழுதியது விவேக் சார். அவரும் நானும் சேர்ந்து ஒரே டேக்கில் இந்த காட்சியில் நடித்தோம். பல ஆண்டுகள் கழித்தும் எனக்கு இந்த காட்சி பெயரைப் பெற்று தருகிறது" என்று கூறியிருந்தார்.

நிஜ வாழ்க்கையிலும் நட்பு

விவேக் - மயில்சாமி நட்பு சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் தொடர்ந்தது. பல பத்திரிகையாளர் சந்திப்புகளில் விவேக்கும் மயில்சாமியும் ஒருவரை ஒருவர் நட்பு பாராட்டி கொண்டிருக்கின்றனர்.

2018ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற 'காசு மேல காசு' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மயில்சாமி குறித்து நடிகர் விவேக் பேசிய போது மயில்சாமி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

"காசு இருந்தால் அனைவருக்கும் யோசிக்காமல் உதவுவான். அடுத்த நாள் காசு இல்லாமல் ஜீரோவாக இருப்பான், அவன் தான் மயில்சாமி."

மயில்சாமியின் உதவும் குணம் குறித்து விவேக் பேசிய வார்த்தைகள் இவை.

"மயில்சாமியின் வாழ்க்கையை பாரதிராஜாவிடம் சொல்லி தனிக்கதையாகவே எடுக்கலாம்.

மயில்சாமி எம்.ஜி.ஆரின். தீவிர ரசிகர், விசுவாசி. எம்.ஜி.ஆர் தான் அவரது வாழ்க்கையில் எல்லாமே.

சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய தங்கச் சங்கிலியில் எம்.ஜி.ஆர். டாலரை மாட்டிக் கொண்டவர் மயில்சாமி.

இந்தி நடிகர் விவேக் ஓபராய் தமிழ்நாட்டிற்கு வந்து கடலூருக்கு அருகில் உள்ள தேவதானப்பட்டி என்ற கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதை கேள்விப்பட்டு, தன்னிடம் பணம் இல்லாத நிலையிலும் உதவ நினைத்தவர்.

நேராக விவேக் ஓபராயிடம் சென்று தன்னுடைய செயினில் இருந்த எம்.ஜி.ஆர். டாலரை கொடுத்து உதவ வைத்துக் கொள்ள சொல்லி விட்டு வந்து விட்டார் மயில்சாமி.

ஹெல்ப், ஹெல்ப், ஹெல்ப், இதுதான் மயிசாமி. தன்னிடம் இல்லையென்றாலும் அடுத்தவரை தொல்லை செய்தாவது தேவையில் இருக்கும் நபர்களுக்கு உதவி செய்வார்," என விவேக் அப்போது பேசியிருந்தார்.

நடிகர் விவேக்

பட மூலாதாரம்,TWITTER

அதேபோல நடிகர் விவேக்கின் மறைவின் போது, முதல் ஆளாக விவேக்கின் வீட்டிற்கு வந்து அனைத்து வேலைகளையும் முன்னின்று நடிகர் மயில்சாமி பார்த்துக் கொண்டார்.

விவேக்கின் இறுதி ஊர்வலத்தின் போது, மின்சார தகன மேடை வரை அவரின் உடலை கொண்டு சென்ற வண்டிக்கு வழியை ஏற்படுத்த நடந்தே வந்தார்.

சிவராத்திரி பூஜை

நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகிலுள்ள சிவன் கோவிலில் சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டிருந்தார் மயில்சாமி.

Facebook பதிவை கடந்து செல்ல, 1

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 1

அவருடன் இரவு முழுக்க உடனிருந்த டிரம்ஸ் கலைஞரான சிவமணி பேசிய போது, "தீவிர சிவபக்தராக இருந்தவர் மயில்சாமி. ஆண்டுதோறும் சிவராத்திரி அன்று இருவரும் சந்தித்துக் கொள்வோம். நேற்று இரவு முழுவது இருவரும் ஒன்றாகவே கோயிலில் இருந்தோம். நான் டிரம்ஸ் வாசிக்கும் போது எனக்கு மைக் பிடித்துக் கொண்டு இருந்தார். இந்த கோயிலுக்கு ரஜினியை அழைத்து வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்" என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-64694869

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 5 people, people standing and text that says 'மனிதவாழ்வு ....நிலையற்றது! இறப்பிற்கு சில மணித்துளிகள் முன சிவராத்திரி பூஜையில் புன்னகையுடன் மயில்சாமி! Akil'

இறப்பதற்கு சில மணித்துளிகளின்  முன், 
சிவராத்திரி பூசையில், புன்னகையுடன் கலந்து கொண்ட மயில்சாமி.

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள்...... அருமையான நடிகர் .......!

Posted

ஆழ்ந்த அனுதாபங்கள். சிறந்த நகைச்சுவை நடிகரை இழந்து விட்டோம்.

Posted

இறப்பு குறித்து அன்றே பேசிய மயில்சாமி

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மயில்சாமி நடிகர் என்பதை விட  அவர் ஒரு யதார்த்த மனிதர்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, nunavilan said:

சிறந்த நகைச்சுவை நடிகரை இழந்து விட்டோம்.

உங்கள் அபிமான நடிகரை இழந்து வருத்தமுறும் உங்களுக்கு எனது கவலையை தெரிவித்து கொள்கிறேன்.
மற்றவர்கள் பேசிகொண்டபோது கேட்டேன் இவர் ஏற்கெனவே இருதய நோயால் பாதிக்கபட்டவர்.இருதநோயால் பாதிக்கபட்டவர் நித்திரை கொள்ளாமல் விடியும் வரை விழித்திருக்கலாமா இது தேவையா ☹️

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

உங்கள் அபிமான நடிகரை இழந்து வருத்தமுறும் உங்களுக்கு எனது கவலையை தெரிவித்து கொள்கிறேன்.
மற்றவர்கள் பேசிகொண்டபோது கேட்டேன் இவர் ஏற்கெனவே இருதய நோயால் பாதிக்கபட்டவர்.இருதநோயால் பாதிக்கபட்டவர் நித்திரை கொள்ளாமல் விடியும் வரை விழித்திருக்கலாமா இது தேவையா ☹️

 

நீங்கள்  இங்கே  இதை  எழுதுவது  சிலரை வருத்தப்பட  வைக்கக்கூடும்?

ஆனால் இங்கே இதனை  எழுதுவது சாலச்சிறந்தது

ஏனெனில் ஒருவரின்  வாழ்க்கை அல்லது பயணம்

எமக்கு பாடம்.

இவ்வாறு  தான் போன  வருடம்  57 வயதில்  என்  தம்பியை பறி  கொடுத்தேன்

எந்த  வருத்தமும்  இல்லாதபோதும் (வைத்தியரைப்பார்த்து  பலவருடங்கள்)

நித்திரை இல்லை

ஓயாத  உழைப்பு

எப்பொழுதும்  நிறைவெறி 

இதுவே மயில்சாமியையும் கொண்டு போயிருக்கிறது

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Edited by விசுகு
  • Thanks 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

1 hour ago, விசுகு said:

நீங்கள்  இங்கே  இதை  எழுதுவது  சிலரை வருத்தப்பட  வைக்கக்கூடும்?

ஆனால் இங்கே இதனை  எழுதுவது சாலச்சிறந்தது

ஏனெனில் ஒருவரின்  வாழ்க்கை அல்லது பயணம்

எமக்கு பாடம்.

நன்றி அய்யா. எம்மவர்கள் நினைவுக்கு வந்து தான் நான் எழுதினேன்.
உங்கள் சகோதரனுக்கு 57 வயதில் நடந்தது முழுமையாக தவிர்க்கபட்டிருக்க வேண்டியது. எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

Edited by விளங்க நினைப்பவன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மயில்சாமி: கிருபானந்த வாரியார் முதல் காமெடி டைம் வரை

2 மணி நேரங்களுக்கு முன்னர்
மயில்சாமி
 
படக்குறிப்பு,

மயில்சாமி

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமி, 1980களில் இருந்து தமிழ் நகைச்சுவை ரசிகர்களை மகிழ்வித்து வந்தவர். தமிழ்த் திரையில் மிக அரிதாகக் காணக்கிடைக்கும் இயல்பான நகைச்சுவைக்குச் சொந்தக்காரர்.

1980களில் ஆடியோ கேசட்கள் மிகப் பிரபலமாக இருந்த தருணம். சினிமா பாடல்கள், சினிமா வசனங்கள் தவிர மிக அரிதாகவே வேறு உள்ளடக்கங்கள் பிரபலமாக முடியும் என்று இருந்த காலகட்டம். அந்தக் காலகட்டத்தில், திடீரென பல டீக்கடைகளிலும் ஆடியோ கேசட் பதிவுசெய்து தரும் கடைகளிலும் புதிதாக சில குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.

அவை மயில்சாமி மற்றும் லக்ஷ்மணின் (ஸ்ருதி) குரல்கள். கேசட் ஆரம்பிக்கும்போதே அதகளம்தான். 'நிலா அது வானத்து மேலே' என்ற பாடலுக்கு கிருபானந்த வாரியார் பொழிப்புரை வழங்குவதுபோல ஆரம்பிக்கும். வாரியார் குரலில் மிமிக்ரி செய்து கலக்கியிருப்பார் மயில்சாமி.

வாரியார் மட்டுமல்ல, அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி, ரஜினி, நம்பியார் என பல நட்சத்திரங்களின் குரல்களில் கலக்கியிருப்பார்கள். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ரேடியோ நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் ஆகியவை கூட இருவரது குரலில் கேலிக்குள்ளாகி பார்வையாளர்களை சிரிக்க வைக்கும்.

 

தெருக்குத்தெரு இந்தக் கேசட்கள் ஒலித்தாலும் இந்த குரல்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து அந்த காலகட்டத்தில் பெரிதாக யாரும் கவலைப்படவில்லை.

சினிமாவை விட்டுவிட்டால் தூர்தர்ஷனும் அகில இந்திய வானொலியும்தான் பொழுதுபோக்கு என்று இருந்த அந்த காலகட்டத்தில், சற்றே குள்ளமாக, கன்னத்து எலும்புகள் தெரிய ஒடுங்கிப்போன முகத்துடன் இருந்த மயில்சாமியின் உருவம் பிரபலமாகாததில் பெரிய ஆச்சரியமில்லை.

ஆனால், சொந்த ஊரான சத்தியமங்கலத்தில் தனக்கென ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டு, ஈரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோவில் திருவிழாக்களில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நிகழ்த்த ஆரம்பித்ததில்தான் அவருடைய காமெடி டைம் துவங்கியது.

ஈரோடு மாவட்டத்திற்கு வெளியே அவ்வப்போது வாய்ப்புகள் இந்தக் குழுவினருக்கு கிடைத்தன. இதற்கு நடுவில்தான் 'சிரிப்போ சிரிப்பு' என்ற அந்த கேசட் வெளியாகி தமிழ்நாட்டேயே சிரிக்க வைத்துக்கொண்டிருந்தது.

மயில்சாமி

பட மூலாதாரம்,ANI

18 வயதிலிருந்தே சினிமாவில் நுழைய முயற்சி செய்தாலும் தாவணிக் கனவுகள், கன்னிராசி, என் தங்கச்சி படிச்சவ போன்ற படங்களில் கூட்டத்தில் ஒருவர் போன்ற சின்னச்சின்ன பாத்திரங்களே கிடைத்தன. அவருக்குக் கிடைத்த பெரிய பிரேக் என்றால் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படம்தான். இந்தப் படத்தில் கமல்ஹாசனின் நண்பராக வந்த இவரை, பலரும் கவனித்தார்கள்.

இவரது மேனரிசங்கள் பிடித்துப்போனதில், அடுத்தடுத்த படங்களான வெற்றிவிழா, மைக்கல் மதன காமராஜன் ஆகிய படங்களில் தொடர்ந்து வாய்ப்பளித்தார் கமல். இதற்கு நடுவில் ரஜினியின் பணக்காரனிலும் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால், திரையுலகிற்குள் கவனிக்கப்பட ஆரம்பித்தார் மயில்சாமி.

90களில் ஆரம்பத்தில் இயக்குனர் பி. வாசு இயக்கும் படங்களில் தவறாமல் ஒரு இடம் மயில்சாமிக்கு இருக்கும். செந்தமிழ்ப் பாட்டு, உழைப்பாளி, உடன்பிறப்பு, வால்டர் வெற்றிவேல் என வாசுவின் படங்களில் தொடர்ந்து நடித்த மயில்சாமி கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களால் கவனிக்கப்பட ஆரம்பித்தார்.

இந்த காலகட்டத்தில் கவுண்டமணி - செந்திலின் நகைச்சுவை யுகம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. வடிவேலுவும் விவேக்கும் தங்களுக்கென ஒரு குழு, தங்களுக்கென ஒரு பாணி என முன்னேறிக்கொண்டிருந்தார்கள். பல குரல்களில் பேசுவது, முகபாவனைகளில் அசத்துவது ஆகவற்றையே தனது பலமாகக் கொண்டிருந்த மயில்சாமியின் வெற்றிப்பயணம் அவ்வளவு வேகமானதாக இல்லை. ஆனாலும், வரும் காட்சிகளில் புன்னகைக்கவைத்துக் கொண்டிருந்தார். சில ஆண்டுகளில் நன்றாக அறியப்படும் நபராகவும் உருவெடுத்தார். அதில் ஒரு சில படங்களில் துலக்கமாகத் தெரிந்தார் மயில்சாமி.

பெண்ணின் மனதைத் தொட்டு படத்தில், விவேக் தூய தமிழில் பேச, அதனை சென்னைத் தமிழில் மொழிபெயர்ப்பார் மயில்சாமி. அந்தக் காட்சிக்கு திரையரங்கு பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரித்தன.

அதேபோல பாளையத்தம்மன் படத்தில் சிவசங்கர் பாபாவைப் போல நடித்து, யாகவா முனிவரைப் போல வரும் விவேக்குடன் விவாதிக்கும் காட்சியும் ரசிகர்கள் மனதில் பதிந்தன.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 1

இதற்கு நடுவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காமெடி டைம் என்ற பெயரில் நேயர்களுடன் தொலைபேசியில் நேரடியாக உரையாடும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் மயில்சாமி. தமிழ்த் தொலைக்காட்சியின் வெற்றிகரமான நிகழ்ச்சிகளின் வரிசையில் அந்த நிகழ்ச்சிக்கு இப்போதும் ஒரு இடம் இருக்கிறது.

இதற்குப் பிறகு, விவேக், வடிவேலு என முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்களுடன் இணைந்தும் தனியாகவும் நினைவுகூரத்தக்க வகையில் பல திரைப்படங்களை நடித்திருக்கிறார் அவர்.

விவேக்கும் வடிவேலுவும் நகைச்சுவை ராஜாங்கத்தையே நடத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில், வேறு ஒரு நகைச்சுவை நடிகர் தமிழ்த் திரையில் தனித்துத் தெரிவதென்பது மிக கடினமான ஒரு காரியம்.

அந்த காலகட்டத்தில் ஒருவர் நகைச்சுவை நடிகராக இருக்க விரும்பினால், வடிவேலு அல்லது விவேக்கின் குழுவில் இருந்தாக வேண்டும். இந்த காலகட்டத்தில் ஒரு தனித்த மிமிக்ரி குரலாக ஒலித்தது மயில்சாமியின் நடிப்பு.

மயில்சாமியின் நகைச்சுவை என்பது, வடிவேலுவைப் போன்ற ஒரு கிராமத்து அப்பாவியின் நகைச்சுவை அல்ல. விவேக்கைப் போல கருத்துகளை முன்வைத்து செய்யும் நகைச்சுவையும் அல்ல. மாறாக, நாம் தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் வித்தியாசமான மனிதர்கள், பித்தலாட்டக்காரர்கள், வெட்டி பந்தாகாரர்களை அவர் தனது இயல்பான உடல்மொழியில் துல்லியமாக பிரதிபலித்தார்.

அவருடைய இறப்பிற்குப் பிறகு, அவரைப்பற்றி சக நடிகர்கள் தெரிவிக்கும் கருத்துகளையும் புகழஞ்சலிகளையும் பார்க்கும்போது, அவர் தாம் ஏற்று நடித்த பாத்திரங்களுக்கு முற்றிலும் மாறான ஆன்மிக ஈடுபாடு கொண்ட, எளியவர் மற்றும் பிறர் துயரைத் துடைப்பதில் ஆர்வம்கொண்டவராகப் புலப்படுகிறார்.

இவ்விதமாக தமிழ்த் திரையுலகிலும் தமிழ்ச் சமூக மனதிலும் ஒரு மறக்கமுடியாத முத்திரையையும் நிரப்ப முடியாத ஒரு இடத்தையும் விட்டுச்சென்றிருக்கிறார் மயில்சாமி.

https://www.bbc.com/tamil/arts-and-culture-64706580

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Tribute to Mayilsamy | Evergreen Mayilsamy Comedy | Mayilsamy Comedy Scenes | UthamaPuthiran | Dhool

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, விசுகு said:

 

நீங்கள்  இங்கே  இதை  எழுதுவது  சிலரை வருத்தப்பட  வைக்கக்கூடும்?

ஆனால் இங்கே இதனை  எழுதுவது சாலச்சிறந்தது

ஏனெனில் ஒருவரின்  வாழ்க்கை அல்லது பயணம்

எமக்கு பாடம்.

இவ்வாறு  தான் போன  வருடம்  57 வயதில்  என்  தம்பியை பறி  கொடுத்தேன்

எந்த  வருத்தமும்  இல்லாதபோதும் (வைத்தியரைப்பார்த்து  பலவருடங்கள்)

நித்திரை இல்லை

ஓயாத  உழைப்பு

எப்பொழுதும்  நிறைவெறி 

இதுவே மயில்சாமியையும் கொண்டு போயிருக்கிறது

ஆழ்ந்த அனுதாபங்கள்.

சமூகமாக ஆரோக்கியமற்ற வாழ்வை வாழ்கின்றோம். இருக்கும்வரை அனுபவிப்போம்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

சமூகமாக ஆரோக்கியமற்ற வாழ்வை வாழ்கின்றோம். இருக்கும்வரை அனுபவிப்போம்.  

சொன்னால் யார் கேட்கிறார்கள்??😭

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

சொன்னால் யார் கேட்கிறார்கள்??😭

பின்னேரப்பாரிலை  டெய்லி மூண்டு பியர் அதிகமா பாஸ்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, குமாரசாமி said:

பின்னேரப்பாரிலை  டெய்லி மூண்டு பியர் அதிகமா பாஸ்? :cool:

வணக்கம் அண்ணா

ஒவ்வொரு நாளும் என்றால் ஒரு கப் வைனே அதிகம் தான். 

ஆனால் மற்ற விடயங்களில் கவனமாக இருந்தால் (குறைந்தது 7 மணித்தியால நித்திரை, பதட்டம் அற்ற வாழ்க்கை,  தலைக்குள் பிரச்சினைகள் இல்லாமை, சரியான முறையில் சாப்பாடு,,,,,,)

கொஞ்சம் நீங்கள் சொன்னதை தொடரலாம்?

  • Like 1
  • Thanks 1
Posted

வேதனைல பேசுறேன் : மயில்சாமியின் கண்ணீர் பதிவு

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பியரை ஏற்கெனவே பழக்கம் கொண்டவர் விசுகு அய்யா சொன்ன மற்றவிடயங்களில் கவனமாக இருந்து, ஆரோக்கியமானவராக  இருந்தால் கூடியது 2 கிளாஸ் பியர்(2x 355ml)  பாவிக்கலாமாம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, விசுகு said:

வணக்கம் அண்ணா

ஒவ்வொரு நாளும் என்றால் ஒரு கப் வைனே அதிகம் தான். 

ஆனால் மற்ற விடயங்களில் கவனமாக இருந்தால் (குறைந்தது 7 மணித்தியால நித்திரை, பதட்டம் அற்ற வாழ்க்கை,  தலைக்குள் பிரச்சினைகள் இல்லாமை, சரியான முறையில் சாப்பாடு,,,,,,)

கொஞ்சம் நீங்கள் சொன்னதை தொடரலாம்?

 24 மணித்தியாலத்திலை 8 மணித்தியாலய நித்திரையை இரண்டாய் பிரிச்சு......? :beaming_face_with_smiling_eyes:



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 70 வருடமாக ஒற்றைக்காலில் நின்ற ஈழத்தமிழர்கள்  இந்த முறை  வழி மாறி விட்டார்கள் என நான் நினைக்க மாட்டேன் சகோதரம். இது ஒரு தேசிய அரசியல்வாதிகளுக்கு மட்டுமான எச்சரிக்கை மட்டும்.
    • மீரா ப்ரோ … அது பகிடி ப்ரோ …. என்னை பொறுத்தவரை சும், ஶ்ரீ, இவர்கள் அனைவரும் பாவித்த டாய்லெட் டிசு போல பயனுள்ளோர்தான். அரசியலமைப்பு என்பது அனுரா இனவாத நிகழ்ச்சி நிரலில் தயாரித்து எல்லோருக்கும் தீத்த போகும் கிரிபத் என்றே நான் நினைக்கிறேன். இதில் சும், ஶ்ரீ யார் போனாலும் ஒரு ஹைகோர்ட்டையும் புடுங்க முடியாது.   உங்களுக்கு கேள்வி விளங்கி இருந்தால் என் பதிலும் விளங்கி இருக்கும். விளங்கியதா? அப்படியாயின் நான் சிறி விட்டு கொடுக்க வேணும் என்று சொன்னதன் அர்த்தம் விளங்கி இருக்கும்.
    • கோசான் எனது பதில் ஏற்கனவே தரப்பட்டுள்ளது. திரியை ஆரம்பத்திலிருந்து வாசியுங்கள்…
    • இன்றைய நேரத்தில் மைக் டைசனுக்கு 27 வயதாக இருந்திருந்தால் ஜேக் பாலின் நிலைமையை  நினைத்து பார்த்தேன்.மனதுக்குள் கெக்கட்டம் விட்டு சிரித்தேன். அரை நூற்றாண்டு வயதிலும் ஒருவன் குத்துசண்டைக்கு வருகின்றான் என்றால் அவன் மனத்தைரியத்தை பாராட்ட வேண்டும்.
    • 12 ) சசிகலா ரவிராஜ் வெற்றிபெற மாட்டார் என 23 பேர் சரியாக கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 36 புள்ளிகள் 2)வீரப்பையன் - 31 புள்ளிகள் 3) வாதவூரான் - 31 புள்ளிகள் 4) வாலி - 31 புள்ளிகள் 5) கந்தையா 57 - 30 புள்ளிகள் 6) தமிழ்சிறி - 30 புள்ளிகள் 7) Alvayan - 30 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 30 புள்ளிகள் 9) நிழலி - 29 புள்ளிகள் 10) சுவைபிரியன் - 28 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 28 புள்ளிகள் 12)ரசோதரன் - 28 புள்ளிகள் 13)நூணாவிலான் - 27 புள்ளிகள் 14)வில்லவன் - 27 புள்ளிகள் 15) நிலாமதி - 27 புள்ளிகள் 16)கிருபன் - 26 புள்ளிகள் 17)goshan_che - 26 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 25 புள்ளிகள் 19) புலவர் - 24 புள்ளிகள் 20) வாத்தியார் - 23 புள்ளிகள் 21)புத்தன் - 23 புள்ளிகள் 22)சுவி - 20 புள்ளிகள் 23) அகத்தியன் - 18 புள்ளிகள் 24) குமாரசாமி - 18 புள்ளிகள்  25) தமிழன்பன் - 13 புள்ளிகள் 26) வசி - 12 புள்ளிகள் இதுவரை 1, 2,4, 7, 8,10 - 13, 16 - 18, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 56)
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.