Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் க‌ள‌ உற‌வு த‌மிழ் சிறி அண்ணா இன்றுட‌ன் யாழில் இணைந்து 15 ஆண்டு த‌மிழ் சிறி அண்ணா மீதான அன்பான‌ நினைவுக‌ளை எழுதுவோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20230219-172544-Collage-Maker 

வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே த‌மிழ் சிறி அண்ணா என்றால் யாழில் தெரியாத‌ ஆட்க‌ள் இருக்க‌ மாட்டின‌ம்...............த‌மிழ் சிறி அண்ணா யாழுட‌ன் இணைந்து இன்றுட‌ன் 15 ஆண்டு ஆகி விட்ட‌து.................இதே நாளில் என‌க்கு த‌மிழ் சிறி அண்ணாவிட‌ம் பிடிச்ச‌து நான் அவ‌ரிட‌ம் இருந்து க‌ற்று கொண்ட‌தை எழுத‌ போகிறேன்..............உங்க‌ளுக்கு த‌மிழ் சிறி அண்ணாவிட‌ம் பிடிச்ச‌ விடைய‌ங்க‌ளை எழுத‌லாம்...............உள் ம‌ன‌தில் த‌ப்பா நினைக்க‌ கூடாது இவ‌ர் பெரிய‌ ஜ‌ம்ப‌வான் இவ‌ரை ப‌ற்றி எழுத‌னுமா என்று லொல் 😁❤️🙏

நான் யாழில் இணைந்த‌ கால‌த்தில் என‌க்கு ஊக்க‌ம் த‌ந்த‌ உற‌வுக‌ளில் த‌மிழ் சிறி அண்ணாவும் ஒருவ‌ர்..................நான் க‌வ‌னித்த‌ ம‌ட்டில் அன்றில் இருந்து இன்று வ‌ரை கொண்ட‌ கொள்கையில் உறுதியாய் நிப்ப‌வ‌ர்.............த‌மிழ் சிறி அண்ணா போன்ற‌வ‌ர்க‌ளால் தான் யாழ் க‌ள‌ம் கொஞ்ச‌ம் த‌ன்னும் செல்ல‌ செழிப்பாய் இருக்கு...............உண்மையில் த‌மிழ் சிறி அண்ணாவின் முக‌த்தை குர‌லை இதுவ‌ரை கேட்ட‌தும் இல்லை பார்த்த‌தும் இல்லை................... யாழில் அதிக‌ ப‌ச்சை புள்ளி பெற்ற‌ உற‌வு என்றால் அது த‌மிழ் சிறி அண்ணா தான் வாழ்த்துக்க‌ள் அண்ணா ❤️🙏..............த‌மிழ் சிறி அண்ணாவின் எழுத்தை விரும்பி  வாசித்து அவ‌ரை ஊக்க‌ப் ப‌டுத்த‌ குத்தின‌ ப‌ச்சை புள்ளியா தான் நான் பார்க்கிறேன்................

நான் அரைகுறை த‌மிழில் எழுதின‌ கால‌ம் தொட்டு இன்று வ‌ரை த‌மிழ் சிறி அண்ணாவோடு க‌ருத்து ப‌திந்த‌து திண்ணையில் அல‌ட்டின‌து என்று ஏராள‌மான‌ ப‌சுமையான‌ நினைவுக‌ள் ❤️🥰😍🤩🙏

10வ‌ருட‌த்துக்கு முத‌ல் க‌ருணாநிதி ப‌ற்றி நானும் த‌மிழ் சிறி அண்ணாவும் க‌ருத்தாடிட்டு இருந்தோம்............அப்போது  க‌ருணாநிதி மீதான‌ வெறுப்பின் கார‌ண‌மாய் க‌ச‌ப்பாய் ஒரு உண்மையை எழுதினார் அதை என்னால் இன்றும் ம‌ற‌க்க‌ முடிய‌ வில்லை...........அது என‌க்கு இப்ப‌வும் ந‌ல்ல நினைவு இருக்கு அதை நினைத்தால் இப்ப‌வும் சிரிப்பு வ‌ரும் 😁😁😁😁😁,  அதை இந்த‌ திரிக்குள் எழுத‌ விரும்ப‌ வில்லை.................அத‌ எழுதினா நீங்க‌ளும் சிரிப்பிங்க‌ள் சில‌ருக்கு அது தூய‌ சொல் என்று ப‌டும் ஆன‌ ப‌டியால் அதை எழுதாம‌ விடுவ‌து ந‌ல்ல‌ம்...............த‌மிழ் சிறி அண்ணா க‌ருணாநிதி துரோகி துரோகி தான் அதில் இன்ற‌ல‌வும் மாற்றுக் க‌ருத்து இல்லை அண்ணா 😏...............

ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் யாழில் யார் இணைந்தாலும் வாங்கோ உங்க‌ள் வ‌ர‌வு ந‌ல் வ‌ர‌வாக‌ட்டும் என்று வ‌ர‌வேற்க்கும் முத‌ல் ஆள் அது த‌மிழ் சிறி அண்ணா தான் ❤️🙏................இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் த‌மிழ் சிறி அண்ணாவின் 15ஆண்டு யாழ்க‌ள‌ நினைவுக‌ளை..................

இன்னும் ப‌ல‌ ஆயிர‌ம் க‌ருத்துக‌ளை சிரிப்புக‌ளை எதிர் பார்க்கிறோம் த‌மிழ் சிறி அண்ணா  ❤️😍🙏

த‌மிழ் சிறி அண்ணாவின் எழுத்தை விரும்பி வாசித்த‌ உற‌வுக‌ள் நீங்க‌ள் உங்க‌ளுக்கு த‌மிழ் சிறி அண்ணாவிட‌ம் எது எல்லாம் பிடித்து இருந்த‌தோ அதை இந்த‌ திரியில் எழுத‌லாம் 🥰😍🤩

வாழ்க‌ வ‌ள‌முட‌ன் அண்ணா ❤️😍🙏🙏🙏

அன்புட‌ன் பைய‌ன்26 ❤️🙏

Edited by பையன்26

  • வீரப் பையன்26 changed the title to யாழ் க‌ள‌ உற‌வு த‌மிழ் சிறி அண்ணா இன்றுட‌ன் யாழில் இணைந்து 15 ஆண்டு த‌மிழ் சிறி அண்ணா மீதான அன்பான‌ நினைவுக‌ளை எழுதுவோம்
  • Replies 63
  • Views 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 01 ஏதாவது நகைச்சுவை செய்தி எழுதி இணைப்பார். பல நகைச்சுவை பதிவுகளை பகிர்ந்து உள்ளார். 

யாழ் அரிச்சுவடியில் பலரை வரவேற்று உள்ளார். யாழ் கருத்துக்களத்தில் அதிக நேரம் செலவளித்து உள்ளார். 

ஆரோக்கியமாக, சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் தமிழ்சிறி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 01 ஏதாவது நகைச்சுவை செய்தி எழுதி இணைப்பார். பல நகைச்சுவை பதிவுகளை பகிர்ந்து உள்ளார். 

யாழ் அரிச்சுவடியில் பலரை வரவேற்று உள்ளார். யாழ் கருத்துக்களத்தில் அதிக நேரம் செலவளித்து உள்ளார். 

ஆரோக்கியமாக, சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் தமிழ்சிறி!

சில‌ருட‌ன் என‌க்கு யாழில் க‌ருத்து மோத‌ல் வ‌ருவ‌து உண்டு
சில‌ ச‌மைய‌ம் யோசிப்ப‌து யாழை விட்டு ஒதுங்குவோமா என்று...........என‌க்கு ஊக்க‌ம் த‌ந்து  ந‌ல் வ‌ழி காட்டி விட்ட‌ உற‌வுக‌ளில் த‌மிழ் சிறி அண்ணாவும் ஒருவ‌ர்..............இப்ப‌டியான‌ உற‌வுக‌ளால் தான் என‌து யாழ்க‌ள‌ ப‌ய‌ண‌ம் இப்ப‌வும் தொட‌ருது..............
நீங்க‌ள் சொல்லுவ‌து ச‌ரி அண்ணா புது உற‌வுக‌ளை வ‌ர‌வேற்க‌ த‌மிழ் சிறி அண்ணாவை அடிக்க‌ ஆட்க‌ளே இல்லை ❤️😍🙏............க‌ல‌ர் க‌ல‌ர் எழுத்து ம‌ற்றும் அனிமிச‌ங்க‌ள் போட்டு வ‌ர‌வேற்பார் புது உற‌வுக‌ளை..............த‌மிழ் சிறி அண்ணா எழுதின‌ ந‌கைச்சுவை ஏராள‌ம்...................க‌ருணாநிதியை ப‌ற்றி விர‌ப்தியில் எழுதினாலும் அதை நான் ந‌கைச்சுவையாய்  தான் பார்க்கிறேன்............அது 2012 அந்த‌ கால்ப் ப‌குதியில் எழுதின‌வ‌ர்.....................😂😁🤣

  • கருத்துக்கள உறவுகள்

பையா

யாழில் நான் மனமார நேசிக்கும் ஒருவரில் தமிழ் சிறியும் ஒருவர் முதன்மையானவர்.

அவரது நிறைகளை எழுதுவது மிகமிக கஸ்டம்.

அவ்வளவோ கஸ்டம் பக்கம் பக்கமாக எழுத வேண்டும்.

அவரது குறைகளை எழுதுவதானால் மிகவும் சுலபம்.

ஏனென்றால் அவரில் குறையேதும் கண்டு பிடிக்க முடியாது.

இல்லை கட்டாயம் கண்டு பிடிக்க வேண்டும் என்றால் ஒன்றேஒன்று தான் வெள்ளிக்கிழமைகளில் கொஞ்சம் குழப்படி.

அவர் வளமாகவும் சுகமாகவும் வாழணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை  உங்க‌ள் வ‌ர‌வுக்கு ப‌திவுக்கும் ந‌ன்றி

இப்ப‌வும் ஒன்னும் கெட்டு போக‌ல‌ , நீங்க‌ள் ம‌ன‌தார‌ எழுத‌லாம் இந்த திரி குறைந்த‌து ப‌ல‌ ப‌க்க‌ங்க‌ளை தாண்ட‌னும் அதை சிறி அண்ணா வாசித்து விட்டு சிறி அண்ணாவுக்கு ஒரு கிழ‌மை தூக்க‌மே வ‌ர‌க் கூடாது லொல்......................😂😁🤣

  • கருத்துக்கள உறவுகள்

வேலை செய்கின்ற இடத்தில் பயங்கரமான விபத்தை சந்தித்து மருத்தவமனையில் இருந்தபடி கூலாக  யாழ்களத்தில்  எழுதிக்கொண்டிருந்தாரே முன்னுதாரணமான செயல் 👍

1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

யாழ் அரிச்சுவடியில் பலரை வரவேற்று உள்ளார்.

வருகின்ற பலரை இவர் பாவம் வரவேற்பு கொடுத்து வர வேற்றுள்ளார்.அப்படி வந்த பலர் பின்பு எழுதுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை  உங்க‌ள் வ‌ர‌வுக்கு ப‌திவுக்கும் ந‌ன்றி

இப்ப‌வும் ஒன்னும் கெட்டு போக‌ல‌ , நீங்க‌ள் ம‌ன‌தார‌ எழுத‌லாம் இந்த திரி குறைந்த‌து ப‌ல‌ ப‌க்க‌ங்க‌ளை தாண்ட‌னும் அதை சிறி அண்ணா வாசித்து விட்டு சிறி அண்ணாவுக்கு ஒரு கிழ‌மை தூக்க‌மே வ‌ர‌க் கூடாது லொல்......................😂😁🤣

இப்போ தான் றீகாப்பில் இருந்து வந்தார்..அதற்குள்ள மறுபடியும் நித்திரை கொள்ள விடாமல் பையா...✍🙋‍♀️

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, யாயினி said:

இப்போ தான் றீகாப்பில் இருற்து வந்தார்..அதற்குள்ள மறுபடியும் நித்திரை கொள்ள விடாமல் பையா...✍🙋‍♀️

அக்காச்சி நான் சும்மா  ப‌ன்னுக்கு எழுதி நான்❤️😁🙏........................

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பையன்26 said:

சில‌ருட‌ன் என‌க்கு யாழில் க‌ருத்து மோத‌ல் வ‌ருவ‌து உண்டு
சில‌ ச‌மைய‌ம் யோசிப்ப‌து யாழை விட்டு ஒதுங்குவோமா என்று...........என‌க்கு ஊக்க‌ம் த‌ந்து  ந‌ல் வ‌ழி காட்டி விட்ட‌ உற‌வுக‌ளில் த‌மிழ் சிறி அண்ணாவும் ஒருவ‌ர்..............இப்ப‌டியான‌ உற‌வுக‌ளால் தான் என‌து யாழ்க‌ள‌ ப‌ய‌ண‌ம் இப்ப‌வும் தொட‌ருது..............
நீங்க‌ள் சொல்லுவ‌து ச‌ரி அண்ணா புது உற‌வுக‌ளை வ‌ர‌வேற்க‌ த‌மிழ் சிறி அண்ணாவை அடிக்க‌ ஆட்க‌ளே இல்லை ❤️😍🙏............க‌ல‌ர் க‌ல‌ர் எழுத்து ம‌ற்றும் அனிமிச‌ங்க‌ள் போட்டு வ‌ர‌வேற்பார் புது உற‌வுக‌ளை..............த‌மிழ் சிறி அண்ணா எழுதின‌ ந‌கைச்சுவை ஏராள‌ம்...................க‌ருணாநிதியை ப‌ற்றி விர‌ப்தியில் எழுதினாலும் அதை நான் ந‌கைச்சுவையாய்  தான் பார்க்கிறேன்............அது 2012 அந்த‌ கால்ப் ப‌குதியில் எழுதின‌வ‌ர்.....................😂😁🤣

இன்று யாழில் உங்களுடன் இருப்பதுக்கு இந்த மனிசன் தான்யா காரணம் பலமுறை வெளியேறி உள்ளேன் எனக்குள்  இழுத்து பிடித்து உள்ளே கொண்டுவந்தவர் இவர்தான் வாழ்வில் இவரை நேரில் சந்திக்கணும் என்ற விருப்பத்தையும் உருவாக்கி உள்ளார் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

இன்று யாழில் உங்களுடன் இருப்பதுக்கு இந்த மனிசன் தான்யா காரணம் பலமுறை வெளியேறி உள்ளேன் எனக்குள்  இழுத்து பிடித்து உள்ளே கொண்டுவந்தவர் இவர்தான் வாழ்வில் இவரை நேரில் சந்திக்கணும் என்ற விருப்பத்தையும் உருவாக்கி உள்ளார் .

அந்த‌ ச‌ந்திப்பு ஜேர்ம‌னியில் ந‌ட‌ந்தால் நானும் வ‌ருவேன்..............குசா தாத்தாவையும் நேரில் ச‌ந்திக்க‌னும் என்று ஆசை..............

என்னையும் யாழுட‌ன் இணைந்து இருக்க‌ சொல்லி அதிக‌ம் சொன்ன‌து த‌மிழ் சிறி அண்ணா ம‌ற்றும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவும்................த‌மிழ் சிறி அண்ணா  யாழுக்கு கிடைச்ச‌ மிக‌ப் பெரிய‌ பொக்கிஷம் என்று தான் சொல்ல‌னும் பெருமாள் அண்ணா ❤️🙏..............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான ஊக்கப்படுத்தல் திரியை ஆரம்பித்த பையனுக்கு நன்றிகள்.:thumbup:

சிறித்தம்பி யாழ்களத்தில் இணைந்த காலங்களிலிருந்தே நானும் அவரும்  ஒரு வித புரிந்துணர்வுகளுடனேயே  பழகி வருகின்றோம்.

இங்கே கருத்து களத்தில் பல இடங்களில் நான் எழுத நினைப்பதை எனக்கு முதல் அவரே முதலில் எழுதி விடுவார். சில சமயங்களில் நானே ஆச்சரியப்பட்டதும் உண்டு. இதனாலேயே தங்கச்சி ரதி  சிறித்தம்பியும் நானும் ஒரே ஆட்களா என சந்தேகப்பட்டதும் உண்டு. கோமகன் என்னுடன் முதலில் தொடர்பு கொள்ளும் போது கூட தமிழ்சிறி-குமாரசாமி சந்தேகத்தை கிளப்பியிருந்தார்.

எனினும்  சிறிதம்பியை பற்றி அதிக அலட்டாமல் சொல்வதானால்  அறுசுவையும் கலந்த நல்லதொரு கருத்தாளர். 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி தாத்தா...........த‌மிழ் சிறி அண்ணா ந‌ல்ல‌ ந‌கைச்சுவை எழுத்தாள‌ர்.............ப‌ல‌ரின் திற‌மைக‌ளை யாழ் தான் வெளிச்ச‌ம் போட்டு காட்டிய‌து.............ர‌திய‌க்காவுக்கும் என‌க்கும் கூட‌ க‌ருத்து மோத‌ல்க‌ள் வ‌ருவ‌து க‌ருணாவால்.................நீங்க‌ள் எல்லாரும் ஒருமித்த‌ க‌ருத்துட‌ன் எழுதின‌தை சில‌ திரிக‌ளில் தான் பார்த்து இருக்கிறேன்................

நான் யாழ் உற‌வுக‌ளுட‌ன் கூட நேர‌ம் போன் க‌தைச்ச‌து என்றால் ஜ‌முனாவுட‌னும் உங்க‌ளுட‌னும் தான் தாத்தா .................த‌மிழ் சிறி அண்ணா உருவ‌த்தில் எப்ப‌டி இருப்பார் என்று தெரியாது 😔..............

ஒரு திரியில் உங்க‌ளையும் தமிழ் சிறி அண்ணாவையும் கோத்து விட்டு அதிக‌ம் சிரிச்ச‌து நான் தான்...........நான் நினைக்கிறேன் வ‌ய‌து ப‌ற்றிய‌ க‌ருத்தாட‌லின் போது❤️😁🙏.....................கால‌ங்க‌ள் வேக‌வாக‌ போகுது தாத்தா..................

ஆனால் யாழில் த‌மிழ் சிறி அண்ணா தான் ப‌ல‌ சாத‌னைக்கு சொந்த‌க் கார‌ர் அதிக‌ க‌ருத்து எழுதின‌து............அதிக‌ ப‌ச்சை புள்ளி..............

க‌ருணாநிதி ப‌ற்றி த‌மிழ் சிறி அண்ணா எழுதின‌தை வாசித்து இருக்க‌னும் நீங்க‌ள் விழுந்து விழுந்து சிரிப்பிங்க‌ள் தாத்தா😂😁🤣..............

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பையன்26 said:

நான் யாழ் உற‌வுக‌ளுட‌ன் கூட நேர‌ம் போன் க‌தைச்ச‌து என்றால் ஜ‌முனாவுட‌னும் உங்க‌ளுட‌னும் தான் தாத்தா .................த‌மிழ் சிறி அண்ணா உருவ‌த்தில் எப்ப‌டி இருப்பார் என்று தெரியாது 😔..............

என்ரை கணக்கு ஆள் 7 அரை அடி தெலுங்கு பட கிறோ  போல் இருப்பார் 😃😃எல்லாம் பகிடிக்குத்தான் நோ சிரியட்ஸ் 😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, பெருமாள் said:

என்ரை கணக்கு ஆள் 7 அரை அடி தெலுங்கு பட கிறோ  போல் இருப்பார் 😃😃எல்லாம் பகிடிக்குத்தான் நோ சிரியட்ஸ் 😃

 :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் என்று நான் அன்பாக அழைக்கும் தமீழ்சிறி........!

                                   நான் யாழில் இணைந்து கொண்ட நாளில் இருந்து தொடர்ந்து ரசித்து வருவது அவரது கருத்துக்களை. 

--- கருத்துக்களையும் சும்மா சொல்லுவதில்லையோ, அதுக்கு குஷ்பூ மாதிரி நிறைய கலர் கலராய் மேக்கப் போட்டு பதிவிடுவது அவருக்குரிய தனித்துவமான செயல்.

--- தனக்கு ஒவ்வாத  பல கருத்துக்களையும் நகைச்சுவையாக எழுதி பொருத்தமான "அனிமேஷன்" படங்களையும் போட்டு அதை எழுதியவரையும் ரசிக்க வைத்து விடும் குணமுடையவர்.

--- அதிகமான பச்சை புள்ளிகள் பெற்றவரும் அவர்தான் ஆனால்  முன்பெல்லாம் ஒரே அதிரடியான கருத்துக்கள் தான், அதன் விளைவாக நிறைய செம்புள்ளிகளும் பெற்றிருக்கிறார். இடை நிறுத்தங்களும் பெற்றிருக்கிறார். ஆனாலும் வேறு இடங்களில் கால் பதியாது மீண்டும் மீண்டும் யாழுக்கே வந்து இதுதாண்டா என் இடம் என்று காலூன்றி நிற்பது .......சொல்லி வேல இல்ல சிறியர். ஐ லைக் இட் ......!

--- கடந்த ஏப்பிரல் பூலில் அவர் செய்த விளையாட்டு எவருமே மறக்க முடியாதது.

--- அவரும் குமாரசாமியும் இணைபிரியாத ஒத்த கருத்துடைய நண்பர்கள் என்றால் அவர் குடும்பமும் திரு. பாஞ்ச் குடும்பமும் இணைந்தே வாழும் ஒரே குடும்பம்.

--- சகோதரி சுமேயின் தந்தையாரின் இறுதிச்சடங்கு ஜெர்மனியில் நிகழ்ந்தபோது நண்பர்களுடன் நேரில் சென்று யாழ் இணையத்தின் சார்பாகவும் கலந்து கொண்டது எங்கள் எல்லோருக்கும் மிகவும் நெகிழ்ச்சியான தருணமாகும்.

--- இன்னும் எவ்வளவோ சொல்லலாம், ஏனையோருக்கும் இடம் தந்து நகர்கிறேன்.

12 hours ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை  உங்க‌ள் வ‌ர‌வுக்கு ப‌திவுக்கும் ந‌ன்றி

இப்ப‌வும் ஒன்னும் கெட்டு போக‌ல‌ , நீங்க‌ள் ம‌ன‌தார‌ எழுத‌லாம் இந்த திரி குறைந்த‌து ப‌ல‌ ப‌க்க‌ங்க‌ளை தாண்ட‌னும் அதை சிறி அண்ணா வாசித்து விட்டு சிறி அண்ணாவுக்கு ஒரு கிழ‌மை தூக்க‌மே வ‌ர‌க் கூடாது லொல்......................😂😁🤣

Genelia.Gif GIF - Genelia Excited Happy - Discover & Share GIFs

பையா ஜெனிலியாவை பிரேம் பண்ணி அவரின் பெட்ரூமில் மாட்டி விடு. ஒரு கிழமை என்ன ஒரு மாதமானாலும் தூங்க மாட்டார்.........! (எச்சரிக்கை: பின் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது)........!  😂

இப்படி நினைத்து ஒரு திரி திறந்ததுக்கு  நன்றி பையா........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

சிறியணண தான் நிறைய பேரை (நான் உட்பட)  இங்கு இணைத்து வைத்திருக்கிறார்..அந்த வகையில் சிறியண்ணைக்கு நன்றிகள் பல...✍🙏👋

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

என்ரை கணக்கு ஆள் 7 அரை அடி தெலுங்கு பட கிறோ  போல் இருப்பார் 😃😃எல்லாம் பகிடிக்குத்தான் நோ சிரியட்ஸ் 😃

என்ரை கணிப்பு 5.6 அடி.

2 hours ago, suvy said:

இன்னும் எவ்வளவோ சொல்லலாம், ஏனையோருக்கும் இடம் தந்து நகர்கிறேன்.

இதைத் தான் நானும் சொன்னேன்.பக்கம் பக்கமாக எழுதலாம் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொல்ல..?🥰

முதன் முதலில் நான் 'மன்கெய்ம்' (Mannheim) வந்து சேர்ந்து, தமிழ் சிறியை தொலைப்பேசியில் அழைத்தபோது, "என்ன வன்னியர் சுகமா இருக்கிறீங்களோ..?" எனக் கேட்டுவிட்டு அடிக்கடி வார்த்தைகளின் இடையே 'என்ன' என்ற சொல்லை சேர்த்து கதைத்தார்.

சுத்தமான யாழ்ப்பாணத் தமிழ்..!

அவரை நேரில் சந்திக்க இயலவில்லை, ஆனால் 12 வருடங்களானாலும் இன்னமும் அவரின் குரலும், முகமும் ஞாபகம் உள்ளது.

பாஞ் அவர்கள் மாதிரியே தமிழ் சிறியும் பழக இனிமையான மனிதர்.

வாழ்க நலமுடன்..!

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தினை கலகலப்பாக  வைக்க உதவும் ஒரு நல்ல , பழக இனிய நண்பர். ஞாபகமாக பிறந்த நாள் , வாழ்த்துக்கள்  வண்ண வண்ண நிறங்களுடனும் பூங்கொத்துடனும் பதிக்கும் பொறுப்பான நண்பர். பாராட்டுக்குரியவர். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

சிறியணண தான் நிறைய பேரை (நான் உட்பட)  இங்கு இணைத்து வைத்திருக்கிறார்..அந்த வகையில் சிறியண்ணைக்கு நன்றிகள் பல...✍🙏👋

என்ன‌ அக்கா 
இந்த‌ திரிக்குள் வ‌ந்து கூட‌ எழுதுவிங்க‌ள் என்று பார்த்தா நாலு வ‌ரியோட‌ நிப்பாட்டீங்க‌ள் லொல் 😁🙏

நீங்க‌ள் சொல்லுவ‌து முற்றிலும் உண்மை த‌மிழ் சிறி அண்ணாவால‌ தான் என் போன்ற‌வ‌ர்க‌ளும் இன்றும் யாழுட‌ன் இணைந்து இருக்கிறோம்...............எம்மை யாரும் நோக‌டிச்சா ம‌த‌துக்கு முத‌ல் ம‌ருந்தாக‌ வ‌ந்து ஆறுத‌ல் சொல்லுவ‌து  அது த‌மிழ் சிறி அண்ணா தான்..................இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் த‌மிழ் சிறி அண்ணாவை ப‌ற்றி

யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு நான் த‌மிழ் சிறி அண்ணாவும் ஒருமித்த‌ க‌ருத்துட‌ன் ப‌ய‌ணிக்கிறோம் அதில் நீங்க‌ளும் அட‌ங்கும் அக்கா..................

இன்னும் இர‌ண்டு அல்ல‌து மூன்று வருட‌த்தில் ஒரு ல‌ச்ச‌ ப‌திவிட்ட‌ யாழ் க‌ள‌ உற‌வு என்ர‌ பெய‌ருக்கும் த‌மிழ் சிறி அண்ணா தான் சொந்த‌க் கார‌ர் ❤️🙏......................
 
  • கருத்துக்கள உறவுகள்

சிறியரைப் பற்றி எழுத வெளிக்கிடால் யாழ் சேவர் தாங்காது.அதால வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறேன்.☺️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

சிறியர் என்று நான் அன்பாக அழைக்கும் தமீழ்சிறி........!

                                   நான் யாழில் இணைந்து கொண்ட நாளில் இருந்து தொடர்ந்து ரசித்து வருவது அவரது கருத்துக்களை. 

--- கருத்துக்களையும் சும்மா சொல்லுவதில்லையோ, அதுக்கு குஷ்பூ மாதிரி நிறைய கலர் கலராய் மேக்கப் போட்டு பதிவிடுவது அவருக்குரிய தனித்துவமான செயல்.

--- தனக்கு ஒவ்வாத  பல கருத்துக்களையும் நகைச்சுவையாக எழுதி பொருத்தமான "அனிமேஷன்" படங்களையும் போட்டு அதை எழுதியவரையும் ரசிக்க வைத்து விடும் குணமுடையவர்.

--- அதிகமான பச்சை புள்ளிகள் பெற்றவரும் அவர்தான் ஆனால்  முன்பெல்லாம் ஒரே அதிரடியான கருத்துக்கள் தான், அதன் விளைவாக நிறைய செம்புள்ளிகளும் பெற்றிருக்கிறார். இடை நிறுத்தங்களும் பெற்றிருக்கிறார். ஆனாலும் வேறு இடங்களில் கால் பதியாது மீண்டும் மீண்டும் யாழுக்கே வந்து இதுதாண்டா என் இடம் என்று காலூன்றி நிற்பது .......சொல்லி வேல இல்ல சிறியர். ஐ லைக் இட் ......!

--- கடந்த ஏப்பிரல் பூலில் அவர் செய்த விளையாட்டு எவருமே மறக்க முடியாதது.

--- அவரும் குமாரசாமியும் இணைபிரியாத ஒத்த கருத்துடைய நண்பர்கள் என்றால் அவர் குடும்பமும் திரு. பாஞ்ச் குடும்பமும் இணைந்தே வாழும் ஒரே குடும்பம்.

--- சகோதரி சுமேயின் தந்தையாரின் இறுதிச்சடங்கு ஜெர்மனியில் நிகழ்ந்தபோது நண்பர்களுடன் நேரில் சென்று யாழ் இணையத்தின் சார்பாகவும் கலந்து கொண்டது எங்கள் எல்லோருக்கும் மிகவும் நெகிழ்ச்சியான தருணமாகும்.

--- இன்னும் எவ்வளவோ சொல்லலாம், ஏனையோருக்கும் இடம் தந்து நகர்கிறேன்.

Genelia.Gif GIF - Genelia Excited Happy - Discover & Share GIFs

பையா ஜெனிலியாவை பிரேம் பண்ணி அவரின் பெட்ரூமில் மாட்டி விடு. ஒரு கிழமை என்ன ஒரு மாதமானாலும் தூங்க மாட்டார்.........! (எச்சரிக்கை: பின் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது)........!  😂

இப்படி நினைத்து ஒரு திரி திறந்ததுக்கு  நன்றி பையா........!  👍

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி த‌லைவ‌ரே
அது ச‌ரி த‌லைவ‌ரே போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ கால்ப‌ந்து விளையாட்டு திரிக்குள் சிரிச்ச‌துக்கு பிற‌க்கு இந்த‌ திரிக்குள் சிரிக்கிறோம் 😁❤️🙏

பார்த்திங்க‌ளா த‌லைவ‌ரும் த‌ள‌ப‌திக‌ளும் என்ன‌ நெருக்க‌மாய் இருக்கிறோம் என்று லொல் 🤣😁😂

இந்த‌ அழ‌கியா த‌மிழ் சிறி அண்ணாவின் க‌ன‌வு க‌ன்னி உட‌ன‌ ஏற்பாடு ப‌ண்ணுவோம் த‌மிழ் சிறி அண்ணா இவா கூட‌  செல்பி எடுக்க‌ ............அப்ப‌ த‌மிழ் சிறி அண்ணா  காலையில் இவான்ட‌ முக‌த்தில் தான் க‌ண்ண‌  விழிப்பார் போல் தெரிகிற‌து லொல் 😂😁🤣

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தமிழ் சிறி இன்னும் பல காலம் பின்னி பெடல் எடுக்க .. எதிரிகள் தலை தெறிக்க..  வாழ்த்துக்கள்..r💐

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி த‌லைவ‌ரே
அது ச‌ரி த‌லைவ‌ரே போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ கால்ப‌ந்து விளையாட்டு திரிக்குள் சிரிச்ச‌துக்கு பிற‌க்கு இந்த‌ திரிக்குள் சிரிக்கிறோம் 😁❤️🙏

பார்த்திங்க‌ளா த‌லைவ‌ரும் த‌ள‌ப‌திக‌ளும் என்ன‌ நெருக்க‌மாய் இருக்கிறோம் என்று லொல் 🤣😁😂

இந்த‌ அழ‌கியா த‌மிழ் சிறி அண்ணாவின் க‌ன‌வு க‌ன்னி உட‌ன‌ ஏற்பாடு ப‌ண்ணுவோம் த‌மிழ் சிறி அண்ணா இவா கூட‌  செல்பி எடுக்க‌ ............அப்ப‌ த‌மிழ் சிறி அண்ணா  காலையில் இவான்ட‌ முக‌த்தில் தான் க‌ண்ண‌  விழிப்பார் போல் தெரிகிற‌து லொல் 😂😁🤣

பையா ஆழம் தெரியாமல் காலை விடாதே அவசரப்பட்டு முடிவெடுக்காதே......!

நீங்கள் கனவுக்கன்னி ஏற்பாடு பண்ண உங்களுக்கு எதிர்பாராத தாக்குதல்கள் நிகழ சந்தர்ப்பம் அதிகம்.அதற்கான ஆயுதங்கள் அடுப்படிக்குள் எப்போதும் தயாராய் இருக்கும்........!  😎

Areca Nut Cutter - Etsy

Wooden String Hopper Maker Idiyappam Machine Hand Press Kitchen Tool  Durable New | eBay

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

பையா ஆழம் தெரியாமல் காலை விடாதே அவசரப்பட்டு முடிவெடுக்காதே......!

நீங்கள் கனவுக்கன்னி ஏற்பாடு பண்ண உங்களுக்கு எதிர்பாராத தாக்குதல்கள் நிகழ சந்தர்ப்பம் அதிகம்.அதற்கான ஆயுதங்கள் அடுப்படிக்குள் எப்போதும் தயாராய் இருக்கும்........!  😎

Areca Nut Cutter - Etsy

Wooden String Hopper Maker Idiyappam Machine Hand Press Kitchen Tool  Durable New | eBay

இந்த‌ ஆயுத‌ங்கை ஊரில் பார்த்தா பிற‌க்கு இப்ப‌ தான் ப‌ட‌த்தில் பார்க்கிறேன் லொல்..............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.