Jump to content

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஈரான்- சவுதி இணக்கம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஈரான்- சவுதி இணக்கம்!

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஈரான்- சவுதி இணக்கம்!

மத்திய கிழக்கு பிராந்திய போட்டியாளர்களான ஈரான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளும், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஒப்புக்கொண்டன.

துண்டிக்கப்பட்ட உறவுகளை மீட்டெடுக்க இரு நாடுகளும் இடையே சீனா, மேற்கொண்ட நான்கு நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இது சாத்தியமாகியுள்ளது.

நல்லிணக்கத்திற்கான முயற்சியில் முதலாவதாக, இரு நாடுகளும் இரண்டு மாதங்களுக்குள் தூதரகங்களை மீண்டும் திறப்பதாக தெரிவித்தன. அவர்கள் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை மீண்டும் நிறுவுவார்கள்.

இந்த அறிவிப்பை அமெரிக்கா எச்சரிக்கையுடன் வரவேற்றது. இதுகுறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபையின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி,

‘பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்கும் எந்தவொரு முயற்சியையும் நிர்வாகம் ஆதரிக்கின்றது. ரான் அவர்களின் கடமைகளை நிறைவேற்றப் போகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்’ என கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரஸ், இந்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு முக்கிய காரணியாக இருந்த சீனாவுக்கு நன்றி தெரிவித்தார்.

வளைகுடா பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு உதவ பொதுச்செயலாளர் தயாராக இருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரான் மீது அதிகபட்ச அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ள இஸ்ரேல் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

சவுதி ஒரு முக்கிய ஷியா முஸ்லீம் மதகுருவை தூக்கிலிட்டதைத் தொடர்ந்து ஈரானில் உள்ள அதன் தூதரகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதை அடுத்து, ஜனவரி 2016இல் சவுதி அரேபியா உறவுகளை துண்டித்தது.

சன்னி மற்றும் ஷியா தலைமையிலான அண்டை நாடுகளுக்கு இடையே அடிக்கடி பதற்றம் இருந்து வருகிறது. அவர்கள் ஒருவரையொருவர் பிராந்திய மேலாதிக்கத்தை தேடும் ஒரு அச்சுறுத்தும் சக்தியாக கருதுகின்றனர்.

அவர்கள் லெபனான், சிரியா, ஈராக் உட்பட மத்திய கிழக்கு முழுவதும் போட்டியாளர்களை ஆதரிக்கின்றனர். மேலும் வெளிப்படையாக யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரித்துள்ளது.

2014இல் சவுதி ஆதரவுடைய அரசாங்கத்தை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய ஷியா ஹூதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரித்துள்ளது, அதே நேரத்தில் சவுதி அரேபியா அடுத்த ஆண்டு முதல் ஹூதிகளுக்கு எதிரான பேரழிவுகரமான வான்வழி தாக்குதல்களை வழிநடத்தியது.

ஹூதிகள் தாக்குதலுக்கு ஈரான் உதவுவதாகவும் சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது.

இந்த வகையான மிக மோசமான சம்பவத்தில், 2019ஆம் ஆண்டில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் சவுதியின் முக்கிய எண்ணெய் ஆலைகளைத் தாக்கியது, இதனால் உற்பத்திக்கு சேதம் மற்றும் இடையூறு ஏற்பட்டது. சவூதி அரேபியாவும் அதன் அமெரிக்க கூட்டாளியும் தாக்குதலுக்கு ஈரான் மீது குற்றம் சாட்டினர். ஆனால் அதை ஈரான் மறுத்துவிட்டது.

https://athavannews.com/2023/1327153

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

ஒரு 5 அல்லது 7 இஸ்லாமிய நாடுகள் அணு குண்டை எடுத்தால் அதன் பின் உங்கள் நிலை - உங்களுக்கு விளங்கப்படுத்தும் ஏன் ஈரானிடம் அணுகுண்டு இருப்பது ஆபத்து என்று. சிலதை எதிர்வு கூறும் போது விளங்காது. பட்டால

Eppothum Thamizhan

வாழ்வையும் எம் போராட்டத்தையும் உடன்பிறப்புகள் தொலைத்தது சிவப்பு புத்தகத்தால் அல்ல அவர்களின் தலைமைகளின் முடிவுகளால்தான்! நாங்களும் இதே தலைமுறைதான்!

விசுகு

சோசலிசம்  வேறு கம்யூனிசியம் வேறு இவை  எல்லாவற்றுக்குமான வித்தியாசம் அல்லது கோட்பாட்டு  தத்துவநிலைகள் தெரியாதவர்களல்ல ஆனால்  அவற்றை  விதைத்தவர்கள் அவற்றை பின்பற்றுவதில்லை மாறாக மக்க

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஈரான்- சவுதி இணக்கம்!

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஈரான்- சவுதி இணக்கம்!

இந்தப்படமும் செய்தியும் யூத தேசத்துக்கும் கொலம்பஸ் தேசத்துக்கும் பெரிசாய் தலையிடிக்கப்போகுது :cool:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இந்தப்படமும் செய்தியும் யூத தேசத்துக்கும் கொலம்பஸ் தேசத்துக்கும் பெரிசாய் தலையிடிக்கப்போகுது :cool:

நீங்கள்... இஸ்ரேல், அமெரிக்கா என்று நேரிடையாக சொல்லமால் 
கிசுகிசு பாணியில் சொல்லவதைப் பார்த்தால்...
யாழ்.களத்தில் சிலருக்கு கோவம் வரும் என்று பயப்பிடுகிறீர்கள் போலுள்ளது. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

நீங்கள்... இஸ்ரேல், அமெரிக்கா என்று நேரிடையாக சொல்லமால் 
கிசுகிசு பாணியில் சொல்லவதைப் பார்த்தால்...
யாழ்.களத்தில் சிலருக்கு கோவம் வரும் என்று பயப்பிடுகிறீர்கள் போலுள்ளது. 🤣

சூறாவ‌ளி காற்று வேக‌மாய் வீசினாலும் க‌ள்ளுக் கொட்டில் தாத்தா அசைய‌ மாட்டார்...............க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லா துணிந்த‌ ம‌னித‌ர் எங்க‌ள் தாத்தா🤣😁😂..................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

சூறாவ‌ளி காற்று வேக‌மாய் வீசினாலும் க‌ள்ளுக் கொட்டில் தாத்தா அசைய‌ மாட்டார்...............க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லா துணிந்த‌ ம‌னித‌ர் எங்க‌ள் தாத்தா🤣😁😂..................

ஓம் பையா... தாத்தா,  "மேட் இன்  ஜேர்மனி." 😂
அவ்வளவும்... ஒறிஜினல் இரும்பு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

ஓம் பையா... தாத்தா,  "மேட் இன்  ஜேர்மனி." 😂
அவ்வளவும்... ஒறிஜினல் இரும்பு. 🤣

"பேர்த் இன் ஈழம்"......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

"பேர்த் இன் ஈழம்"......!  😂

புகுந்த இடம்தான்... ஆளை, புடம் போட்டு மினுக்கி எடுத்தது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

புகுந்த இடம்தான்... ஆளை, புடம் போட்டு மினுக்கி எடுத்தது. 🤣

அதென்றால் உண்மைதான்.........ஜப்பான்காரன் இலங்கையில் வெறும் ரப்பற்களியை வாங்கி அதை விதம் விதமான  டயர்களாக்கி மீண்டும் இலங்கைக்கு விக்கிறமாதிரி எண்டு சொல்லுறியள்......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

அதென்றால் உண்மைதான்.........ஜப்பான்காரன் இலங்கையில் வெறும் ரப்பற்களியை வாங்கி அதை விதம் விதமான  டயர்களாக்கி மீண்டும் இலங்கைக்கு விக்கிறமாதிரி எண்டு சொல்லுறியள்......!  😂

முடியல. 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பையன்26 said:
13 hours ago, suvy said:
12 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள் இண்டைக்கு அபிசேகம் பண்ண நானே கிடைச்சன்.....எல்லாருக்கும் அரோகரா :rolling_on_the_floor_laughing:

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் இண்டைக்கு அபிசேகம் பண்ண நானே கிடைச்சன்.....எல்லாருக்கும் அரோகரா :rolling_on_the_floor_laughing:

இலங்கையில் ஓரளவு மிளிர்ந்து கொண்டிருந்த கு சா அண்ணாவை ஜெர்மனி புடம் போட்டு மினுக்கி எடுத்திருக்கு சிறி.

14 hours ago, suvy said:

அதென்றால் உண்மைதான்.........ஜப்பான்காரன் இலங்கையில் வெறும் ரப்பற்களியை வாங்கி அதை விதம் விதமான  டயர்களாக்கி மீண்டும் இலங்கைக்கு விக்கிறமாதிரி எண்டு சொல்லுறியள்......!  😂

1960' இல் இருந்தே ஜப்பான் காரன் இலங்கையின் சுண்ணக்கல் பாறைக்கு அங்கால மீன்டின் தொழிற்சாலையுடன்கூடிய பெரிய கப்பலில் நங்கூரமிட்டு மீன்களை பிடித்து டின்னில் அடைத்து எமக்கே விற்றுக்கொண்டிருந்தார்கள். இப்ப எப்படியோ தெரியவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நீங்கள் இண்டைக்கு அபிசேகம் பண்ண நானே கிடைச்சன்.....எல்லாருக்கும் அரோகரா :rolling_on_the_floor_laughing:

எப்ப‌வும் நீங்க‌ள் தான் தாத்தா லொல்🤣😁😂.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவூதி மேற்கின் வளர்ப்புப்பிள்ளை என்பது. .???

அவன் ஆணையிடாமல்....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nilmini said:

1960' இல் இருந்தே ஜப்பான் காரன் இலங்கையின் சுண்ணக்கல் பாறைக்கு அங்கால மீன்டின் தொழிற்சாலையுடன்கூடிய பெரிய கப்பலில் நங்கூரமிட்டு மீன்களை பிடித்து டின்னில் அடைத்து எமக்கே விற்றுக்கொண்டிருந்தார்கள். இப்ப எப்படியோ தெரியவில்லை.

அட... இந்த வியாபாரம் வேறை நடந்திருக்கா, நில்மினி.
இப்ப கூட... முட்டை, தேங்காய் எல்லாம் இறக்குமதி செய்வதை பார்க்க வெறுப்புதான் வருகின்றது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சவூதி மேற்கின் வளர்ப்புப்பிள்ளை என்பது. .???

அவன் ஆணையிடாமல்....?

மேற்கின் வளர்புப்பிள்ளை காலா காலத்திற்கும் மன்னர் எனும் போர்வையில் சர்வாதிகார ஆட்சி செய்யலாம். அந்த நாட்டில் ஜனநாயகம் கிடையாது. போராட்டம்  நடத்த முடியாது.தேர்தல் மருந்துக்கும் கிடையாது.பத்திரிகை சுதந்திரம் கிடையாது....இன்னும் எக்ஸ்சற்றா.....இக்ஸ்சற்றாக்கள்.தண்டனை எண்டு பார்த்தால் விரல் வெட்டு,கை வெட்டு,கழுத்து வெட்டு.,கல்லால் எறிந்து கொல்லுதால்.....
அதைப்பற்றி எல்லாம் நாங்கள் பேசமாட்டம்.:beaming_face_with_smiling_eyes:

சீனா,ரஷ்யா என்றால் கழுவி ஊத்துவோம்.வளிச்சு எடுப்போம்.:smiling_face:

விசுகர்! என்ன நான் சொல்லுறது சரிதானே? :grinning_face:

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

@விசுகு animiertes-laufsport-bild-0050.gif விசுகர் எஸ்கேப்பு. இரண்டு நாளைக்கு, இந்தப் பக்கம் வர மாட்டார்.  🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அட... இந்த வியாபாரம் வேறை நடந்திருக்கா, நில்மினி.
இப்ப கூட... முட்டை, தேங்காய் எல்லாம் இறக்குமதி செய்வதை பார்க்க வெறுப்புதான் வருகின்றது.  

எனக்கும் அப்படித்தான் சிறி. ஒரு வளம் நிறைந்த அழகான நாட்டை ஆள்வதற்கு நல்ல தலைமைத்துவம் கிடைக்கவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

3 hours ago, விசுகு said:

சவூதி மேற்கின் வளர்ப்புப்பிள்ளை என்பது. .???

அவன் ஆணையிடாமல்....?

உண்மைதான். கை மீறி விட்டது. சவூதியும் ஈரானும் எதிரிகளாக இருந்த போது சவூதிக்கு ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்தது. சவூதியின் எதிரி ஈரானின் நண்பன் யேமனுக்கும் அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்தது. அவர்கள் சவூதியின் எண்ணை வயல்களை பதம்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

இரு நாடுகளும் பிறிக்ஸ்சில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.

*(BRICS = Brazil, Russia, India, China and South Africa)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸௌடி அரேபியாவும் இரானும் இருகரம் கூப்பி வரவேற்கின்றது! 🙏

டேய் சிஞ்ஞோர் திருப்புடா வள்ளத்தை இரானுக்கு! 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

மேற்கின் வளர்புப்பிள்ளை காலா காலத்திற்கும் மன்னர் எனும் போர்வையில் சர்வாதிகார ஆட்சி செய்யலாம். அந்த நாட்டில் ஜனநாயகம் கிடையாது. போராட்டம்  நடத்த முடியாது.தேர்தல் மருந்துக்கும் கிடையாது.பத்திரிகை சுதந்திரம் கிடையாது....இன்னும் எக்ஸ்சற்றா.....இக்ஸ்சற்றாக்கள்.தண்டனை எண்டு பார்த்தால் விரல் வெட்டு,கை வெட்டு,கழுத்து வெட்டு.,கல்லால் எறிந்து கொல்லுதால்.....
அதைப்பற்றி எல்லாம் நாங்கள் பேசமாட்டம்.:beaming_face_with_smiling_eyes:

சீனா,ரஷ்யா என்றால் கழுவி ஊத்துவோம்.வளிச்சு எடுப்போம்.:smiling_face:

விசுகர்! என்ன நான் சொல்லுறது சரிதானே? :grinning_face:

என்னண்ணா இது?

 பெற்ற பிள்ளைக்கும் வளர்ப்புப்பிள்ளைக்குமான பெற்றோரின் அதிகாரம் தெரியாதவரா நாம்?

தத்தெடுத்து விட்டேன் என்பதற்காக ஆபிரிக்க பிள்ளையை வெள்ளையாக்குவது சரியா என்ன??

3 hours ago, தமிழ் சிறி said:

@விசுகு animiertes-laufsport-bild-0050.gif விசுகர் எஸ்கேப்பு. இரண்டு நாளைக்கு, இந்தப் பக்கம் வர மாட்டார்.  🤣 

என்ன சிறியர்

நாம பெல்ற் எடுத்து பிள்ளைகளை வளர்த்தது போன்று வளர்ப்பு பிள்ளைகளை செய்தால்???😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

மேற்கின் வளர்புப்பிள்ளை காலா காலத்திற்கும் மன்னர் எனும் போர்வையில் சர்வாதிகார ஆட்சி செய்யலாம். அந்த நாட்டில் ஜனநாயகம் கிடையாது. போராட்டம்  நடத்த முடியாது.தேர்தல் மருந்துக்கும் கிடையாது.பத்திரிகை சுதந்திரம் கிடையாது....இன்னும் எக்ஸ்சற்றா.....இக்ஸ்சற்றாக்கள்.தண்டனை எண்டு பார்த்தால் விரல் வெட்டு,கை வெட்டு,கழுத்து வெட்டு.,கல்லால் எறிந்து கொல்லுதால்.....
அதைப்பற்றி எல்லாம் நாங்கள் பேசமாட்டம்.:beaming_face_with_smiling_eyes:

சீனா,ரஷ்யா என்றால் கழுவி ஊத்துவோம்.வளிச்சு எடுப்போம்.:smiling_face:

விசுகர்! என்ன நான் சொல்லுறது சரிதானே? :grinning_face:

நாங்கள் மட்டும் என்ன, ரஸ்யா, சீனா, வடகொரிய, சிரியா, ஈரான், ஹிட்லர் எண்டால்….

மக்கள் மாட்டு மந்தை மாரி, சர்வாதிகாரம் தான் கட்டுப்பாட்டை கொண்டு வரும். ஒரு ஒழுங்கு இருக்கும் எண்டு எழுதுவோம் (எழுதினோமா இல்லையா?).

ஏதாவது ஒரு குற்றசெயல் மேற்கில் நடந்தால் கட்டுப்பாடான நாட்டில் இப்படி நடக்குமா எண்டு எழுதுவோம்.

மக்கள் புரட்சி நேரம் ஈரானுக்கு ஆதவாக எழுதி போட்டு, நீங்கள் மாணவிகள் பக்கமா? முல்லாக்கள் பக்கமா எண்டு கேள்வி கேட்டால் பதிலே எழுதாமல் எஸ் ஆவோம்.

ஆனால் அதுவே சவுதி எண்டால் கழுவி, கழுவி ஊத்துவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

என்னண்ணா இது?

 பெற்ற பிள்ளைக்கும் வளர்ப்புப்பிள்ளைக்குமான பெற்றோரின் அதிகாரம் தெரியாதவரா நாம்?

தத்தெடுத்து விட்டேன் என்பதற்காக ஆபிரிக்க பிள்ளையை வெள்ளையாக்குவது சரியா என்ன??

உண்ணாணை உது எனக்கு துண்டற விளங்கேல்லை. பொழிப்புரை தேள்வை.:face_with_tears_of_joy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

உண்ணாணை உது எனக்கு துண்டற விளங்கேல்லை. பொழிப்புரை தேள்வை.:face_with_tears_of_joy:

அண்ணையாண்ணை நான் நித்திரை மாதிரி நடிக்கிறவையள எழுப்ப முயல்வதில்லை 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

அண்ணையாண்ணை நான் நித்திரை மாதிரி நடிக்கிறவையள எழுப்ப முயல்வதில்லை 😆

விசுகர்! நீங்கள் சரிப்பட்டு வரமாட்டியள்:beaming_face_with_smiling_eyes:   எதுக்கும் நான்  நம்ம ஆளை வறுத்தெடுப்பம்..:face_with_tears_of_joy:

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

உண்மைதான். கை மீறி விட்டது. சவூதியும் ஈரானும் எதிரிகளாக இருந்த போது சவூதிக்கு ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்தது. சவூதியின் எதிரி ஈரானின் நண்பன் யேமனுக்கும் அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்தது. அவர்கள் சவூதியின் எண்ணை வயல்களை பதம்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

இரு நாடுகளும் பிறிக்ஸ்சில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.

*(BRICS = Brazil, Russia, India, China and South Africa)

ரஷ்யா - அமெரிக்கா பனிப்போர் முடிவடைந்த பின்.....அமெரிக்காவின் பல ஆணவ அதிகார நடவடிக்கைகளினால் இன்னொரு  பலம் மிக்க அணி உருவாகுவதை தடுக்க முடியாமல் போய் விட்டது.
இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமே.

அமெரிக்காவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதுமான பொருளாதார தடைகள் கால் தூசுக்கு சமமென நிரூபித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.