Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு IMF விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வங்குரோத்து அடைந்த இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முதற்கட்ட கடன் தொகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் சில தினங்களில் கடன் தொகை கிடைக்கவுள்ள நிலையில், கடுமையான கட்டுப்பாடுகளை சர்வதேச நிதியம் விதித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியின் முதல் தவணையாக 333 மில்லியன் டொலர்கள் சில தினங்களில் கிடைக்கவுள்ளது.

இலங்கைக்கு IMF விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள் | Imf Conditions On Sri Lanka

சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் அடிப்படையில் இந்த மூன்று பில்லியன் டாலர்கள் நான்கு ஆண்டுகளில் தவணைகளில் வழங்கப்படும்.

இலங்கை அமுல்படுத்த வேண்டிய சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகள் வெளியாகி உள்ளன.

  • கடன் மறுசீரமைப்பு திட்டம் ஏப்ரல் இறுதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
  • ஐக்கிய நாடுகள் சபையின் நியமங்களுக்கு அமைவாக ஊழலுக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்
  • அரச வருவாயை மிக விரைவில் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்
  • அதிக வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து அதிக பங்களிப்புடன் செல்வ வரி விதித்தல்
  • 2025க்குள் சொத்து மற்றும் சொத்து பரிமாற்ற வரி அறிமுகம்
  • 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் பணவீக்கத்தை 12%-18% ஆகக் குறைக்க இலக்கு
  • ஜூன் மாத இறுதிக்குள் தற்போதைய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும்
  • நாணய மாற்று விகித நெகிழ்வுத்தன்மையை பராமரித்தல் 
  • மத்திய வங்கியை மேலும் சுதந்திரமாக்குதல்
  • வலுவான சமூக பாதுகாப்பு வலையமைப்பை அறிமுகப்படுத்துதல்

ஆகிய கட்டுப்பாடுகள் அடங்கும். 

தமிழ்வின்

  • கருத்துக்கள உறவுகள்

அரச செலவீனத்தை (இராணுவ செலவு) குறைத்தல் பற்றி எதுவும் இல்லை?

1 hour ago, பெருமாள் said:

அல்லது 1+3 க்குள் வருமோ?

1 hour ago, பெருமாள் said:

2025க்குள் சொத்து மற்றும் சொத்து பரிமாற்ற வரி அறிமுகம்

2023 ஜனவரியுடன் காணி பெறுமதி அளவிடும் முறை மாறி விட்டது. 

இப்போ முன்னர் போல் நாம் ஒரு அளவையாளரை அமர்த்தி அவர் தரும் பெறுமதிக்கு வாங்கும் வரி கட்ட முடியாது.

இப்போ அரசு நியமித்த ஆட்கள் வந்து பெறுமதியை தீர்மானிப்பார்கள் அதன் அடிப்படையில்தான் வரி கட்ட வேண்டும்.

இனிமேல் inheritance tax உம் வரப்போகுது போல. 

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசு பலமுறை சர்வதேச நாணய நிதியத்தை பலமுறை ஏமாற்றியதாக பந்துல குணவர்தன தெரிவித்து இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

சிறிலங்கா அரசு பலமுறை சர்வதேச நாணய நிதியத்தை பலமுறை ஏமாற்றியதாக பந்துல குணவர்தன தெரிவித்து இருந்தார்.

இந்த முறை, முதலில் வரும் இறாலை எப்படி விழுங்குகினம் எண்டு பார்த்து தான், சுறா வரும். சிங்கள சுத்துமாத்துக்கள் எல்லாம், அவர்களுக்கு தெரியும்.

1 hour ago, goshan_che said:

அரச செலவீனத்தை (இராணுவ செலவு) குறைத்தல் பற்றி எதுவும் இல்லை?

அல்லது 1+3 க்குள் வருமோ?

2023 ஜனவரியுடன் காணி பெறுமதி அளவிடும் முறை மாறி விட்டது. 

இராணுவ குறைப்பு, அனாவசிய அரசு ஊழியர் குறைப்பு, வெளிநாட்டு தூதரகங்களில் உள்ள, அனாவசிய அலுவலகர் குறைப்பு, கல்வி, மருத்துவ சேவையினை இலவசம் என்று சொல்ல முடியாத அளவுக்கு மக்கள் பங்களிப்பு கோருதல் போன்ற பல திட்டங்கள் வெளியே சொல்லாமல் ஒப்பந்தமாகி உள்ளன.  இப்போ அரசு நியமித்த ஆட்கள் வந்து பெறுமதியை தீர்மானிப்பார்கள் அதன் அடிப்படையில்தான் வரி கட்ட வேண்டும்.

1 hour ago, goshan_che said:

இப்போ அரசு நியமித்த ஆட்கள் வந்து பெறுமதியை தீர்மானிப்பார்கள் அதன் அடிப்படையில்தான் வரி கட்ட வேண்டும்.

இனிமேல் inheritance tax உம் வரப்போகுது போல. 

லஞ்சம் இருக்கும் வரை கவலைப்பட தேவையில்லை. Inheritance Tax:  அப்படித்தான் தெரிகிறது

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Nathamuni said:

லஞ்சம் இருக்கும் வரை கவலைப்பட தேவையில்லை

அதே. இந்த அதிகாரிகள் காட்டில் மழைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

லஞ்சம் இருக்கும் வரை கவலைப்பட தேவையில்லை. Inheritance Tax:  அப்படித்தான் தெரிகிறது

55 minutes ago, goshan_che said:

அதே. இந்த அதிகாரிகள் காட்டில் மழைதான்.

லஞ்ச ஒழிப்பும் ஐஎம்எவ் இன் ஒரு வேண்டுகோள் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

லஞ்ச ஒழிப்பும் ஐஎம்எவ் இன் ஒரு வேண்டுகோள் அல்லவா?

🤣வேண்டுவோர் வேண்டலாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

🤣வேண்டுவோர் வேண்டலாம்🤣

333 மில்லியனில் 

யார் யாருக்கு எவ்வளவு என்று இப்பவே கணக்கு போட்டிருப்பார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ஈழப்பிரியன் said:

333 மில்லியனில் 

யார் யாருக்கு எவ்வளவு என்று இப்பவே கணக்கு போட்டிருப்பார்களோ?

ஸ்கெட்ச் போட்டு செய்திருப்பார்கள்.

இப்பவே ரோடு கட்டிற வேலையள் தொடங்கினமாரித்தான் எண்டு செய்தியள் வருகுது.

  • கருத்துக்கள உறவுகள்

முடிவாக சொல்லுங்கப்பா

ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயருமா?? இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

முடிவாக சொல்லுங்கப்பா

ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயருமா?? இல்லையா?

நான் நினைக்கவில்லை.  இறக்குமதிக்கான தடைகளை தளர்த்தியவுடன் மீளவும் இறங்குமென்றே நம்புகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Sabesh said:

நான் நினைக்கவில்லை.  இறக்குமதிக்கான தடைகளை தளர்த்தியவுடன் மீளவும் இறங்குமென்றே நம்புகிறேன்

பழைய நிலைக்கு இனி வரவே முடியாது என்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

பழைய நிலைக்கு இனி வரவே முடியாது என்கிறீர்கள்?

இப்போதைக்கு வராதென்றே நினைக்கிறேன்.  கடந்த இரண்டு வருடங்களாக அதிகமாகவே பின்னோக்கி தள்ளிவிட்டார்கள்.  அதிலிருந்து சற்று மீண்டாலும் உலக பொருளாதாரம் இப்போதிருக்கும் நிலைமையில் இறக்குமதி செலவுகள் இன்னும் அதிகமாக இருக்கும்.  ஆகவே சான் எற மூலம் சறுக்கிற நிலைமையை தான் இருக்கும்.  அத்துடன் IMF இல் பாதியை பங்கு போட்டு விடுவார்கள்  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Paksa gang Helping Hambantota....

  • கருத்துக்கள உறவுகள்

ஐ எம் எவ்.. அமெரிக்க சார்பு ஏஜென்ட். அது தமிழர்களுக்கு நன்மை தரக்கூடிய எந்த நிபந்தனைகளையும் விதிக்காது. அதுதான் அமெரிக்காவினதும் நிலைப்பாடு. 

ஆனால் போர் நடக்கும் உக்ரைனுக்கு ஐ எம் எவ் 12 பில்லியன் டாலர்களை சொறீலங்காவுக்கு ஒதுக்கிய காலத்தில் ஒதுக்கி இருக்குது. இவை எல்லாம் அமெரிக்காவின் தேவைகளுக்காக வழங்கப்படுகின்றனவே தவிர.. தமிழர்களுக்கு எந்த நன்மையும் விளையாது.

தமிழர்கள் மேற்குலகை நம்பி தொடர்ந்து ஏமாறத்தான் முடியுமே தவிர.. மேற்குலகின் கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்தும் அளவுக்கு தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழினும்.. அவர்களின் ஒற்றுமை இன்மை.. பொருளாதார.. மற்றும் வாக்கு பலத்தை ஒருங்கிணைக்காமை என்று பல காரணிகள்.. மேற்குலக கொள்கை வகுப்பில்.. தமிழர்களைப் பொருட்டாகக் கூட கருத இடமளிக்கச் செய்யாமல் இருக்கச் செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

தமிழர்கள் மேற்குலகை நம்பி தொடர்ந்து ஏமாறத்தான் முடியுமே தவிர.. மேற்குலகின் கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்தும் அளவுக்கு தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழினும்.. அவர்களின் ஒற்றுமை இன்மை.. பொருளாதார.. மற்றும் வாக்கு பலத்தை ஒருங்கிணைக்காமை என்று பல காரணிகள்.. மேற்குலக கொள்கை வகுப்பில்.. தமிழர்களைப் பொருட்டாகக் கூட கருத இடமளிக்கச் செய்யாமல் இருக்கச் செய்கிறது.

1. இது முழுக்க முழுக்க நம் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு விடயம் இல்லையா?

2. இதை நாம் நினைத்தால் மாற்றலாம் இல்லையா?

3. அப்படி மாற்றினால் - அதுதான் நாம் விரும்பும் தீர்வுக்கான விரைவுபாதையாக அமையும் இல்லையா?

4. கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறோம் என நீங்கள் நினைக்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

1. இது முழுக்க முழுக்க நம் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு விடயம் இல்லையா?

2. இதை நாம் நினைத்தால் மாற்றலாம் இல்லையா?

3. அப்படி மாற்றினால் - அதுதான் நாம் விரும்பும் தீர்வுக்கான விரைவுபாதையாக அமையும் இல்லையா?

4. கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறோம் என நீங்கள் நினைக்கவில்லையா?

தமிழர்களின் எதிர்காலமே கேள்விக்குறியில் தான் நிற்கிறது. இது தெரியவில்லையா..??! 😅

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

தமிழர்களின் எதிர்காலமே கேள்விக்குறியில் தான் நிற்கிறது. இது தெரியவில்லையா..??! 😅

அது தெரியாமலா😀

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாத சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகள் - ஹரி ஆனந்தசங்கரி

Published By: T. Saranya

22 Mar, 2023 | 03:31 PM
image

(நா.தனுஜா)

இலங்கைக்கான நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதியளித்திருக்கும் சர்வதேச நாணய நிதியம், அதனை முன்னிறுத்தி நிறைவேற்றப்படவேண்டிய நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாமை தமக்கு மிகுந்த அதிருப்தியளிப்பதாக கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கடந்த திங்கட்கிழமை (20) அனுமதியளித்துள்ளது.

அதனையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் தமிழ்மக்கள் சார்ந்து கவனத்திற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டும் நோக்கில் செவ்வாய்கிழமை (21) கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஹரி ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையானது அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஸ்திரமற்ற, வங்குரோத்து நிலையிலுள்ள நாடாக மாறியிருக்கின்றது.

சுமார் ஒருவருடகாலத்திற்கு முன்னர் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டுடன் இலங்கையின் பொருளாதாரம் மிகமோசமடைந்தது. அது நாடளாவிய ரீதியில் பாரிய மக்கள் எதிர்ப்புப்போராட்டங்களுக்கு வழிகோலியதுடன், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பதவி விலகவேண்டிய நிலையைத் தோற்றுவித்தது. அதனைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதி சர்வதேச நாணயத்துடன் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில், இலங்கைக்கான உதவிச்செயற்திட்டத்துக்குக் கடந்த திங்கட்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்துள்ளது.

அதன்படி இவ்வுதவிச்செயற்திட்ட இணக்கப்பாடு தொடர்வதற்கு இலங்கை பல்வேறு நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யவேண்டியுள்ளது.

ஆனால் சர்வதேச நாணய நிதியத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படாமை எம்மத்தியில் கடும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் பிரச்சினைக்கு உரியவாறான தீர்வு வழங்கப்படுவதுடன், வடக்கு - கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையும், பொருளாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்களைத் தீர்மானிப்பதற்கான அதிகாரமும் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதேவேளை இச்சந்திப்பில் கருத்துவெளியிட்ட இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பின் (பேர்ள்) பிரதிநிதி, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தொடரும் மனித உரிமை மீறல்கள், அதிகரித்த இராணுவமயமாக்கம், காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் முறையற்ற செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியதுடன் அவை முடிவுக்குக்கொண்டுவரப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். 

https://www.virakesari.lk/article/151155

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1. இது முழுக்க முழுக்க நம் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு விடயம் இல்லையா?

2. இதை நாம் நினைத்தால் மாற்றலாம் இல்லையா?

3. அப்படி மாற்றினால் - அதுதான் நாம் விரும்பும் தீர்வுக்கான விரைவுபாதையாக அமையும் இல்லையா?

4. கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறோம் என நீங்கள் நினைக்கவில்லையா?

கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த முயற்சியும் இல்லை 😭 

ஆகக் குறைந்தது யாழ் களத்திலாவது நெடுக்ஸ்யும் கோசானையும் யஸ்ரினையும் (ஒரு உதாரணத்திற்கு தான் 3 பெயர்கள்) ஆவது ஒரு கோட்டின் கீழ் கொண்டு வரமுடியுமா? முடிந்தால் அறிவாயுதப்போர் பற்றி பேசும் தகுதியாகவாவது கொள்ளலாம். 

Edited by விசுகு
ஒரு வரி சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஆகக் குறைந்தது யாழ் களத்திலாவது நெடுக்ஸ்யும் கோசானையும் யஸ்ரினையும் (ஒரு உதாரணத்திற்கு தான் 3 பெயர்கள்) ஆவது ஒரு கோட்டின் கீழ் கொண்டு வரமுடியுமா? முடிந்தால் அறிவாயுதப்போர் பற்றி பேசும் தகுதியாகவாவது கொள்ளலாம். 

நான் தயார். 

என்னை ஒரு உதாரணமாகத்தான் சொன்னேன். இதே கேள்விக்கு அனைவரின் பதிலும் தயார் என்றே இருக்கும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாத சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகள் - ஹரி ஆனந்தசங்கரி

Published By: T. Saranya

22 Mar, 2023 | 03:31 PM
image

(நா.தனுஜா)

இலங்கைக்கான நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதியளித்திருக்கும் சர்வதேச நாணய நிதியம், அதனை முன்னிறுத்தி நிறைவேற்றப்படவேண்டிய நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாமை தமக்கு மிகுந்த அதிருப்தியளிப்பதாக கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கடந்த திங்கட்கிழமை (20) அனுமதியளித்துள்ளது.

அதனையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் தமிழ்மக்கள் சார்ந்து கவனத்திற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டும் நோக்கில் செவ்வாய்கிழமை (21) கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஹரி ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையானது அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஸ்திரமற்ற, வங்குரோத்து நிலையிலுள்ள நாடாக மாறியிருக்கின்றது.

சுமார் ஒருவருடகாலத்திற்கு முன்னர் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டுடன் இலங்கையின் பொருளாதாரம் மிகமோசமடைந்தது. அது நாடளாவிய ரீதியில் பாரிய மக்கள் எதிர்ப்புப்போராட்டங்களுக்கு வழிகோலியதுடன், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பதவி விலகவேண்டிய நிலையைத் தோற்றுவித்தது. அதனைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதி சர்வதேச நாணயத்துடன் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில், இலங்கைக்கான உதவிச்செயற்திட்டத்துக்குக் கடந்த திங்கட்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்துள்ளது.

அதன்படி இவ்வுதவிச்செயற்திட்ட இணக்கப்பாடு தொடர்வதற்கு இலங்கை பல்வேறு நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யவேண்டியுள்ளது.

ஆனால் சர்வதேச நாணய நிதியத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படாமை எம்மத்தியில் கடும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் பிரச்சினைக்கு உரியவாறான தீர்வு வழங்கப்படுவதுடன், வடக்கு - கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையும், பொருளாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்களைத் தீர்மானிப்பதற்கான அதிகாரமும் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதேவேளை இச்சந்திப்பில் கருத்துவெளியிட்ட இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பின் (பேர்ள்) பிரதிநிதி, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தொடரும் மனித உரிமை மீறல்கள், அதிகரித்த இராணுவமயமாக்கம், காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் முறையற்ற செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியதுடன் அவை முடிவுக்குக்கொண்டுவரப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். 

https://www.virakesari.lk/article/151155

இதற்கு ஐ எம் எவ் பதில் வழங்காது என உறுதியாக நம்பலாம். அப்படி வழங்கினாலும் பூசி மெழுகி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிபந்தனைகளுடன் கடனை ஏற்றுக் கொள்வது சிறிலங்கா தற்கொலை செய்வதற்கு சமன்.அதிக வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து அதிக வரி அறவிட்டால் ஒருவரும் முதலிட வரமாட்டார்கள்.நல்ல சம்பளத்தில் வேலை செய்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள்.அதிகம் உழைத்து அரசுக்கு வரி ஏன் செலுத்த வேண்டும் மக்கள் வேலை செய்யாமல் சோம்பேறிகளாவார்கள்.இந்தக் கடனை வாங்கி மேலும் நெருக்கடி ஏற்படுவதை விட தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்கிவிக்க வேண்டும்.அதற்கு முன் தமிழ்மக்களுக்கு உரிய உரிமைகளைக் கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, புலவர் said:

இந்தக் கடனை வாங்கி மேலும் நெருக்கடி ஏற்படுவதை விட தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்கிவிக்க வேண்டும்.அதற்கு முன் தமிழ்மக்களுக்கு உரிய உரிமைகளைக் கொடுக்க வேண்டும்.

நடக்குமா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, nedukkalapoovan said:

ஐ எம் எவ்.. அமெரிக்க சார்பு ஏஜென்ட். அது தமிழர்களுக்கு நன்மை தரக்கூடிய எந்த நிபந்தனைகளையும் விதிக்காது. அதுதான் அமெரிக்காவினதும் நிலைப்பாடு. 

ஆனால் போர் நடக்கும் உக்ரைனுக்கு ஐ எம் எவ் 12 பில்லியன் டாலர்களை சொறீலங்காவுக்கு ஒதுக்கிய காலத்தில் ஒதுக்கி இருக்குது. இவை எல்லாம் அமெரிக்காவின் தேவைகளுக்காக வழங்கப்படுகின்றனவே தவிர.. தமிழர்களுக்கு எந்த நன்மையும் விளையாது.

மிகச்சரியான கருத்து.:thumbs_up:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.