Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

அந்தக் கண்கள்

***************************

அவருக்கும் எனக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இடைவெளி இருந்தன.

எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன

அந்த யுகங்களில் துயரம் ஒரு பேறாறாக பெருகி வழிந்து கொண்டு இருந்தது

அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டிருந்தன.

அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன்.

அந்தக் கண்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டு மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன.

மரணம் இரண்டு கைகளையும் விரித்து அரவணைக்க ஆயத்தமானது,

நாசிகளில் மரணத்தின் வாசனை.
.

*************************

எனக்கு பொதுவாக கடைகளுக்கோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ செல்லும் போது  தனிய போவது பிடிக்காது, மனைவியுடன் அனேகமான நாட்கள் போவது. சில நாட்களில் மகளுடன் போவதுண்டு.

மனைவி பக்கத்தில் இருக்கும் கடை என்றாலும் எனக்கு ஒரு 'சிண்' வேண்டும், கதைத்துக் கொண்டு போக.

மனைவி பக்கத்தில் இருந்தால், "அந்தக் கார் உங்கள் முன்னுக்கு பிரேக் அடிக்கின்றான்.. காரை ஸ்லோ பண்ணுங்களன்.." என்றோ அல்லது "தூரத்தில் ஒருவர் ரோட்டை க்ரோஸ் பண்ணுகின்றார் கவனம் என்றோ " சொல்வதும் அதற்கு நான் "16 வருசமா ஒரு Traffic டிக்கெட்டும் எடுக்காமல் கனடாவில் கார் ஓடுறன். இப்படி பக்கத்தில் இருந்து கொண்டு எனக்கு படிப்பிக்க வேண்டாம்." என்று பதில் சொல்வதும் நடக்கும்.

பெண்கள் எப்பவும் பெண்களாக இருப்பது போன்றுதானே ஆண்கள் எப்பவும் ஆண்களாவே இருக்கின்றோம். சில விடயங்களை எப்பவும் மாற்ற முடியாது.

ஆனால் அவ்வாறு அன்று அவர் சொன்னதால் தான் என் வாழ்வின் மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது. இல்லாவிடின் விசரனாக தான் மாறியிருப்பேன்.

அன்றும் அப்படித்தான்

டிசம்பர் மாதம். பனிவிழும் காலம் ஆரம்பித்து இருந்தது.

இரவு 8 மணி.

சாலைகளில் பனி ஈரத்தில் மினுங்கும் மின் விளக்குகளின் நிழல்களை மீறி இருள் கவிண்டு கிடந்திருந்தது.
பனி மூட்டமும், இருளும், இலேசாக தூறும் உறை பனி மழையும் என அந்த இரவு வெளிச்சம் குறைந்த இரவாக இருந்தது.

தமிழ் கடைக்காரர் கொஞ்சம் முந்தி தான் தொலைபேசி அழைப்பு எடுத்து "அண்ணை ஊசிக் கணவாய் வந்திருக்கு...வந்து வாங்க போறியளோ..நாளைக்கு காலம நீங்கள் வாறதுக்கு முன் முடிந்து விடும்" என்று சொல்லியிருந்தார்.

ஊசிக் கணவாய் என்ற சொல்லை கேட்டாலே எனக்கு வாய் ஊறும். நல்ல உறைப்பாக, கொஞ்சம் தேங்காய்ப்பால் போட்டு, கறி வைச்சு சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். அதுவும் சில ஊசிக்கணவாய்கள் பிஞ்சில பழுத்த மாதிரி, சரியாக வளற முன்னரே வயிற்றில் முட்டையை வாங்கியிருக்கும். 

அந்த முட்டைகளின் ருசி தனி ருசி!

மெல்லிய பனி விழும் இரவின் அழகை ரசித்தவாறு, பின்னனியில் எப்பவும் இசைக்கும் இளையராஜாவின் பாடலைக் கேட்டவாறு, 80 கிலோ மீற்றர் வேகம் அனுமதிக்கப்பட்ட சாலையில் 85 கிலோ மீற்றர் வேகத்தில் , மனைவியுடன் சந்தோசமாக கதைத்து சிரித்துக் கொண்டு ஊசிக் கணவாயை வாங்குவதற்காக சென்று கொண்டு இருக்கின்றேன்....

தூரத்தில் ஒரு கார் எமர்ஜென்சி விளக்குகளை போட்டவாறு வீதியின் கரையில் நிறுத்தி இருப்பது தெரிந்தது. குளிர் காலம் வந்தவுடன் இப்படி கார்கள் இடைக்கிடை வேலை செய்யாமல் வீதி ஓரங்களில் நின்று விடும். அனேகமாக பற்றரி போயிருக்கும் அல்லது போனில் கதைப்பதற்காக நிறுத்தி வைத்து இருப்பர்.

நான் தொடர்து காரை செலுத்துகின்றேன்.

திடீரென்று... மனைவி "ஐயோ.... நடு றோட்டில் ஒருவன் நிற்கின்றான்... நிற்பாட்டுங்கோ" என்று அலறினார்.

85 கிலோ மீற்றர் வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டு வந்த நான், மனைவி போட்ட கூச்சலில் சடுதியாக தன்னிச்சையாகவே ப்ரேக்கினை போடுகின்றேன்.

என் கார், ஒரு சில மீற்றர்கள் ஓடி, தன்னால் முடியுமானளவுக்கு வேகத்தை சடுதியாக குறைத்து, முற்றாக நின்ற போது எனக்கும் அந்த நபருக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இருந்தன.

அவர் எந்தச் சலனமும் இன்றி, நடு வீதியில், என் கார் வந்த திசையில், என்னை பார்த்தாவாறு நின்று கொண்டு இருந்தார். 

வேகமாக வரும் ஒரு வாகனத்துக்காக
வந்தவுடன் மோதி உடலை சிதைக்க வைக்க வேண்டும் என்பதற்காக
மோதித் தள்ளினால் மரணம் கட்டாயம் நிகழ்வதற்காக
நின்று கொண்டு என் கண்களை ஊடறுத்து பார்க்கின்றார்.

எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன...
அந்த யுகங்களில் துயரம் பல பேறாறுகளாக பெருகி கொண்டு இருந்தன..
அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டு இருந்தன..

அவை என்னிடம் தன் மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன.

அவை வாழ்வை தன்னிடம் இருந்து பிய்த்து எறியும் ஒரு தருணத்துக்காக காத்துக் கிடந்தன.

என்னை கொன்று விட்டு போ என்று இறைஞ்சிக் கொண்டு இருந்தன...

அவர் ஆறடிக்கும் மேல் உயரம். சிறு தாடி, 35 வயதுக்குள் இருப்பார், அரேபியராகவோ அல்லது ஐரோப்பியராகவோ இருக்கலாம்.

ஒரு சில வினாடிகளுக்குள் நிகழ்ந்த பேரதிர்ச்சியில் என் முழு உடலும் நடுங்கிக் கொண்டு இருக்கின்றது

நான் சடுதியாக ப்ரேக் போட்டு நிறுத்தியதால் என் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனம் என் காரை முட்டி மோதுவதை தவிர்ப்பதற்காக கடும் பிரயத்தனப்பட்டு கொண்டு இருந்ததை கண்டவுடன்,ப்ரேக்கில் இருந்து காலை எடுத்து வேகமாக அடுத்த லேனுக்குள் விட்டேன். பின்னால் வந்த வாகனமும் ஒருவாறு அவ் நபரை இடிக்காமல் நகர்ந்தது.

என் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டு இருந்தது. கைகள் சோர்வாக தெரிந்தன.

அழ வேண்டும் போலவும் இருந்தது. 

நெஞ்சு அடைத்துப் போய் விட்டது. அடைபட்ட நெஞ்சில் இருந்து விடுபட்ட மூச்சு பெரு மூச்சாக வெளியே வந்தது.

சில நூறு மீட்டர்கள் காரைச் செலுத்திய பின் தான் என்ன நிகழ்ந்தது என்பதை மனம் மீட்டிப் பார்க்க தொடங்கியது. 

"மோட்டு மனுசன்.. இந்த இரவில் றோட்டை க்ரொஸ் பண்ணுகின்றார்" என்று மனைவி சொன்னார்.

"இல்லை...அவர் என் காரின் திசையில் உடலைக் காட்டியவாறு நின்றவர்... தற்கொலைக்கு முயன்று இருக்கின்றார்" என்றேன்.

அப்பதான் இன்னொன்றும் உறைத்தது. அந்த எமர்ஜென்சி போட்ட கார் அவருடையதாகவே இருக்கும். காரைச் செலுத்திக் கொண்டு வந்தவர் ஏதோ ஒரு கணத்தில் தற்கொலையை நாடியிருக்கின்றார். ஒரு புள்ளியில் மரணமே தனக்கு தீர்வு என்று நம்பியிருக்கின்றார்.ஏதாவது வாகனத்தில் அடிபட்டு செத்துப் போவோம் என்று நினைத்து இருக்கின்றார்.

என்மனைவியின் அலறல் அவரது மரணத்தை தள்ளி வைத்து விட்டது.

பிறகு, நான் கடைக்கு போய் கணவாயை வாங்கிவிட்டு வெளியே வந்து காரில் ஏறியபின்... மனைவிக்கு
 "கவி, எனக்கு மனசுக்குள் ஒரு மாதிரி இருக்கு... திருப்பி அதே வீதியால் போய் பார்க்க போகின்றேன்.. அவருக்கு என்ன நடந்தது என்று அறியாவிடின் என்னால் கன நாட்களுக்கு நித்திரை கொள்ள முடியாது " என்றேன்.

அவரும் "சரி.. மனசுக்கு மாதிரி இருக்கு என்றால் போய் பார்ப்பம்" என்றார்

மீண்டும் அவ் வழியால்  திரும்பி செல்லும் திசையில் சென்ற போது, அவர் நின்ற அதே இடத்தில், வீதி ஓரம் மூன்று பொலிஸ் கார்கள் வரிசையாக நின்று கொண்டு இருக்கின்றதை காண்கின்றேன்.

அந்த மூன்று கார்களும் அந்த எமர்ஜென்ஸி விளக்குகள் போட்டு நிறுத்தி இருந்த, நான் முன்னர் குறிப்பிட்ட அந்த காரை சுற்றித்தான் நின்றன.

நான் அடுத்த சந்தியில் ஒரு யூ ரேர்ன் போட்டு, அந்த பொலிஸ் கார்கள் நிற்கும் இடத்துக்கு வந்து காரை நிறுத்தி விட்டு, மனைவிக்கு "என்ன நடந்தது என்று போய் கேட்க போகின்றேன்" என்றேன்.

"பயமில்லையா... உங்களை சந்தேகப்பட்டால்" என்று கேட்கின்றார்.

"இல்லை,... எனக்கு என்ன நடந்தது என்று அறிய வேண்டும்" என்று விட்டு இறங்கி பொலிஸ்காரர்கள் நின்ற திசையில் நடந்து அவர்களருகில் செல்லும் போது, அவர்களில் இருந்த மூன்று பேர் என்னை நோக்கி வந்து "என்ன விடயம்" என்று கேட்டார்கள்.

நான் "10 நிமிடங்களுக்கு முன் இதே இடத்தில், இதே வீதியில், ஒருவர் என் காரின் முன் நின்று தற்கொலைக்கு முயன்றார்... அவர் அநேகமாக இந்த காரில் தான் வந்திருப்பார்" என்றேன்.

அவர்கள் ஆங்கிலத்தில் "dont worry... we are taking care of him now (கவலைப்படாதே நாங்கள் அவரை கவனித்துக் கொண்டு இருக்கின்றோம் இப்ப) " என்றனர்.

அவர்களில் ஒரு இளம்பெண் பொலிசாரும் இருந்தார். நான் அவரிடம் "Did he try to commit suicide" என்று கேட்க "Yes he was" என்று அழகான முகத்தில் ஒரு புன்னகையை தவழ விட்டவாறு சொன்னார்.

என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. என் பின்னால் வந்த வாகனத்தில் இருந்தவரோ அல்லது அதன் பின்னால் வந்தவரோ 911 இற்கு அடித்து பொலிசாருக்கு தகவல் சொல்லியிருக்கினம். அவர்கள் ஓடி வந்து ஆளை மீட்டு இருக்கினம்.

யோசித்துப் பார்த்தால், நானும் 911 இற்கு அடித்து உடனே சொல்லி அவர் உயிரை காப்பாற்ற முயன்று இருக்க வேண்டும். நிகழ்வு தந்த பதட்டத்தில் புத்தி எதையும் யோசிக்கவில்லை. ஆனால் இன்னொருவர் அந்த கடமையை செய்து இருக்கின்றார்.

இது நிகழ்ந்து ஒரு வாரம் போன பின்னும் காரை செலுத்த தொடங்கும் நேரம் எல்லாம் எனக்குள் சிறு பதட்டம் வந்து போகும். அதுவும் அதே வீதியால் போகும் போது உடலில் நடுக்கம் ஏற்படும்

இப்ப அப்படி வருவதில்லை...ஆயினும் அந்தக் கண்கள் மட்டும் எப்ப நினைத்தாலும் மனசுக்குள் அப்படியே வந்து போகும். 

இனி என்னால் ஒரு போதுமே அந்தக் கண்களை மறக்க முடியாது!

  • Like 12
  • நிழலி changed the title to அந்தக் கண்கள்- நிழலி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, நிழலி said:

யோசித்துப் பார்த்தால், நானும் 911 இற்கு அடித்து உடனே சொல்லி அவர் உயிரை காப்பாற்ற முயன்று இருக்க வேண்டும். நிகழ்வு தந்த பதட்டத்தில் புத்தி எதையும் யோசிக்கவில்லை. ஆனால் இன்னொருவர் அந்த கடமையை செய்து இருக்கின்றார்.

இங்கே தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டீர்கள்.

பரவாயில்லை.

இன்னொருவன் அவரது உயிரை காப்பாற்றிவிட்டான்.

31 minutes ago, நிழலி said:

மனைவி பக்கத்தில் இருந்தால், "அந்தக் கார் உங்கள் முன்னுக்கு பிரேக் அடிக்கின்றான்.. காரை ஸ்லோ பண்ணுங்களன்.." என்றோ அல்லது "தூரத்தில் ஒருவர் ரோட்டை க்ரோஸ் பண்ணுகின்றார் கவனம் என்றோ " சொல்வதும்

எனது மனைவி 95இல் சாரதி அனுமதிபத்திரம் எடுக்கும் வரை காரில் ஏறினால் தன்பாட்டில் ஏதாவது செய்து கொண்டிருப்பா.

எப்ப சாரதி அனுமதிபத்திரம் எடுத்தாவோ அப்ப இருந்து இப்போது வரை எப்படி எப்படி எல்லாம் ஓட வேண்டுமென்று பாடமெடுத்தபடியே இருப்பா.

முன்னுக்கிருந்தால் தேவையான நேரத்தில் இல்லாத பிரேக்கை அழுத்துவா.

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏதோ நல்லகாலம் ஒரு விபத்து சரியான நேரத்தில் தவிர்க்கப் பட்டிருக்கு. இல்லையெனில் சரி பிழையை விட வாழ்நாள் முழுதும் ஒரு மாதிரி இருக்கும்.......!  🙏

பகிர்வுக்கு நன்றி நிழலி......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

முன்னுக்கிருந்தால் தேவையான நேரத்தில் இல்லாத பிரேக்கை அழுத்துவா.

அதையேன் பேசுவான் உதே சோலிதான் எனக்கும்......
கார் சீற்றிலை இருந்து ஸ்ரேரிங் பிடிக்கிறது மட்டும் நான்......கியர் போட்டு பிரேக் பிடிக்கிறது தொடக்கம் சிக்னல் லைற்றிலை நிப்பாடுறது வரைக்கும் அவையள் தான் :beaming_face_with_smiling_eyes:

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, குமாரசாமி said:

அதையேன் பேசுவான் உதே சோலிதான் எனக்கும்......
கார் சீற்றிலை இருந்து ஸ்ரேரிங் பிடிக்கிறது மட்டும் நான்......கியர் போட்டு பிரேக் பிடிக்கிறது தொடக்கம் சிக்னல் லைற்றிலை நிப்பாடுறது வரைக்கும் அவையள் தான் :beaming_face_with_smiling_eyes:

கார் கொம்பனிக்காரனுக்கு முன் ஸீட் எப்பவுமே பின் பக்கமாய் பார்ப்பது போல் இருந்தால் நல்லது என்று சொல்லி செய்விக்கணும் .விபத்துக்கள் ஒரேயடியாய் குறைந்து விடும் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:

அருமையாய் எழுதியுள்ளீர்கள் நிழலி, அருமை.

முந்தநாள் கிட்டத்தட்ட இதை ஒத்த சம்பவம் எனக்கு.

வேலை விசயமாக 70 மைல் வேக தடை உள்ள இரெட்டை லேன் வீதியில், வேக மாக ஓடிக்கொண்டிருக்கிறேன். 

தூரத்தே ஒரு நடை மேம்பாலம். அதற்கு கீழ் ஏதோ ஒரு பொருள் தெரிகிறது, வேகத்தை மட்டுப்படுத்தி அடுத்த லேனுக்கு மாறி என்ன என்று பார்த்தால்….

குழந்தைகளை காவும் carrycot ! ஒரு கணம் ஈரக்குலை நடுங்கி விட்டது. வீதியோ அருகில் hard shoulder உள்ள மோட்டர் வே அல்ல, உடனடியாக நிறுத்த முடியாத A ரோட். ஒரு வழியாக அடுத்த உள்ளோட்டில் வாகனத்தை போட்டு விட்டு 999 க்கு அடித்தால் - விடயம் தெரியும் பொலிஸ் போகிறது என அவர்கள் சொல்லி கொண்டிருக்கும் போதே எதிர் திசையில் இரெண்டு பொலீஸ் கார்கள் கூவிக்கொண்டு பறந்தன.

கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு வெளிக்கிட்டு வந்து விட்டேன்.

அது வெறும் கூடையாகத்தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் எனது திசையில் அம்பூலன்ஸ் என்னை முந்தி ஓடி இருக்கும். நியூசிலிம் வந்திருக்கும்.

34 minutes ago, பெருமாள் said:

கார் கொம்பனிக்காரனுக்கு முன் ஸீட் எப்பவுமே பின் பக்கமாய் பார்ப்பது போல் இருந்தால் நல்லது என்று சொல்லி செய்விக்கணும் .விபத்துக்கள் ஒரேயடியாய் குறைந்து விடும் .

அவங்கள ஓட விட்டு நீங்கள் பசன்சர் சீட்டில் இருந்து பாருங்கோ….

காரில் டிரைவர் சீட் மட்டும் போதும் என்றாகும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னடா...கொஞ்ச நாளா நம்ம நிழலி மரணத்தைப் பற்றிக் கதைக்காமல் இருக்கிறார். ஒரு வேளை ' மரணத்தைப் போலொரு மாமருந்தில்லை' பாடலைக் கேட்டுத் திருந்தியிருப்பாரோ என்று நினைத்தேன்!

இல்லை நான்...அதே நிழலியே தான் என்று மீண்டும் நிரூபித்து விட்டார்..!

நீங்கள் சொன்னது போல 'ஒரு ஆயுள் தண்டனையிலிருந்து தப்பி விட்டீர்கள், நிழலி...!

அருமையான ஒரு அனுபவப் பகிர்வு...!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, நிழலி said:

அவர்களில் ஒரு இளம்பெண் பொலிசாரும் இருந்தார். நான் அவரிடம் "Did he try to commit suicide" என்று கேட்க "Yes he was" என்று அழகான முகத்தில் ஒரு புன்னகையை தவழ விட்டவாறு சொன்னார்.

ரணகளத்திலும் என்னதொரு உன்னிப்பான கவனிப்பு! :beaming_face_with_smiling_eyes:

உண்மைச் சம்பவ பகிரலுக்கு நன்றி நிழலி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

அதையேன் பேசுவான் உதே சோலிதான் எனக்கும்......
கார் சீற்றிலை இருந்து ஸ்ரேரிங் பிடிக்கிறது மட்டும் நான்......கியர் போட்டு பிரேக் பிடிக்கிறது தொடக்கம் சிக்னல் லைற்றிலை நிப்பாடுறது வரைக்கும் அவையள் தான் :beaming_face_with_smiling_eyes:

கார் ஓட தொடங்க முதல் எதுவுமே இல்லை.

இதுக்காகவே அம்மா தாயே பின்னாடி உட்காரம்மா என்று ஒரு மாதிரி பின்னாடி அனுப்பிவிடுவேன்.

49 minutes ago, குமாரசாமி said:
4 hours ago, நிழலி said:

அவர்களில் ஒரு இளம்பெண் பொலிசாரும் இருந்தார். நான் அவரிடம் "Did he try to commit suicide" என்று கேட்க "Yes he was" என்று அழகான முகத்தில் ஒரு புன்னகையை தவழ விட்டவாறு சொன்னார்.

ரணகளத்திலும் என்னதொரு உன்னிப்பான கவனிப்பு! :beaming_face_with_smiling_eyes:

உண்மைச் சம்பவ பகிரலுக்கு நன்றி நிழலி

நானும் கவனிச்சனான்.

பிறகு எரிச்சல் அது இது என்று விட்டுட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 hours ago, நிழலி said:

Warndreieck: Test & Empfehlungen (03/23) - AUTOBIBEL

தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போறதெண்டு இதைத்தான் சொல்லுறது.
ஆனால்... இப்படியான இடங்களில்.. வாகனத்தை நிறுத்தி நாம் கீழே இறங்கும் போது,
எமது பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும்.
இல்லையேல்... பின்னால் வரும்  வாகனங்கள் எம் மீதும்  மோதி  விபத்தை பெரிதாக்கி விடும்.
இப்படியான சம்பவங்கள்... இங்கு நிறையவே நடந்துள்ளது.
முக்கோண எச்சரிக்கை பலகையையோ, விளக்கையோ தாமதிக்காது போட்டு விட வேண்டும்.
நல்ல அனுபவ கதை நிழலி. 

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஈழப்பிரியன் said:

இதுக்காகவே அம்மா தாயே பின்னாடி உட்காரம்மா என்று ஒரு மாதிரி பின்னாடி அனுப்பிவிடுவேன்.

பின்னுக்கு போய் இருங்கோ எண்டு சொல்லுற சேட்டை எல்லாரிட்டையும் சரிவராது கண்டியளோ...:face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, goshan_che said:

அவங்கள ஓட விட்டு நீங்கள் பசன்சர் சீட்டில் இருந்து பாருங்கோ….

காரில் டிரைவர் சீட் மட்டும் போதும் என்றாகும்🤣

வயது போன நேரம் கீழே படத்தில  உள்ள காரை வாங்கிவிடுவம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, பெருமாள் said:

வயது போன நேரம் கீழே படத்தில  உள்ள காரை வாங்கிவிடுவம்.

இனி இதுதான் சரிவரும், கூடுதலாக நாலுபேரை ஏற்ற அனுமதிக்குமோ தெரியாது........!  😂

நன்றி பெருமாள்......!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பெருமாள் said:

வயது போன நேரம் கீழே படத்தில  உள்ள காரை வாங்கிவிடுவம்.

🤣

கடவுளே எண்டு ஒரு 70, 75 இல இந்த வசதி பரவலா வந்துடவேணும்.

இளம் பராயத்தில் இருந்து நாமே ஓடி…ஓடி…எல்லாம் செய்து போட்டு…அந்த வயதில் ஆஸ்பத்திரி போக ஊபரோ, அல்லது உறவுகளையோ நம்பி இருக்க தேவையில்லை. 

ஏறி இருந்து…

ஹலோ சிரி….டேக் மி டு த ஹொஸ்பிடல் பிளீஸ்😎

Posted
19 hours ago, ஈழப்பிரியன் said:

இங்கே தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டீர்கள்.

பரவாயில்லை.

இன்னொருவன் அவரது உயிரை காப்பாற்றிவிட்டான்.

உண்மை அண்ணா. பதட்டத்தில் எதுவும் செய்யத் தோன்றவில்லை. அத்துடன் அவர் வீதியை கடக்க முயன்று வாகனத்தை கண்டவுடன் ஸ்தம்பித்து நின்றரா அல்லது தற்கொலைக்கு முயன்றவரா என்ற கேள்விகளும் எனக்கு இருந்தன.

யோசித்துப் பார்க்கும் போது இப்படி எத்தனை தவறுகளை நாம் வாழ்க்கையில் புரிந்து இருப்போம் என யோசிக்க தோன்றுகின்றது.

சரியாக அடுத்த வாரமே இந்த தவறைத் திருத்துவதற்கு எனக்கு ஒரு வாய்புக் கிடைத்தது ஒரு ஆச்சரியமான விடயமே.

சரியாக ஒரு வாரம் கழிய, இரவு 8 மணிக்கு என் மகளை அவள் தோழி வீட்டில் இருந்து கூட்டிக் கொண்டு வந்து கொண்டு இருந்தேன்.

ஒரு வீதியில் இருந்து மறு வீதிக்கு திரும்ப எத்தனித்த போது,  25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் பாதசாரிக் கடவையில் நடந்து தெருவைக் கடந்து வந்து கொண்டு இருந்தான்.

உடலில் மேற்சட்டை எதுவும் இல்லை.

பிஜாமாவுக்கு வரும் காற்சட்டை மட்டும் அணிந்து இருந்தான்.

குளிர் -20 C (மறை 20)

ஆள் தள்ளாடி தள்ளாடித்தான் தெருவைக் கடக்க முயன்றான். அவன் பாதசாரிக் கடவையை கடக்காமல் நடு வீதியில் கொஞ்ச நேரம் அப்படியே நின்று விட்டு நகர்ந்தான்.

போதையில் இருக்கின்றான் எனப் புரிந்தது. இங்கு கஞ்சாவை சட்ட ரீதியாக்கிய பின் இவ்வாறு தள்ளாடும் பல இளைஞய வயதினரை அடிக்கடி காண்கின்றேன். 

நான் Bluetooth இன் மூலம்  காரை connect பண்ணி இருந்தமையால், உடனடியாக Call emergency என்று கூறி, 911 இற்கு அழைத்து "இந்தக் குளிரில் ஒரு இளைஞன் மேற்சட்டை இல்லாமல் வீதியில் நிற்கின்றான் " என்ற தகவலை கூற, அவர்கள் தாம் உடனடியாக அங்கு ஆட்களை அனுப்புவதாக உத்தரவாதம் தந்து, என் நம்பரையும் வாங்கி குறித்து கொண்டார்கள்.

மனசு கொஞ்சம் ஆறுதலடைந்தது.
 
19 hours ago, ஈழப்பிரியன் said:

முன்னுக்கிருந்தால் தேவையான நேரத்தில் இல்லாத பிரேக்கை அழுத்துவா.

இந்தப் பழக்கம் எனக்கும் உள்ளது. முக்கியமாக என் 17 வயது மகன் காரை ஓட்டும் போது.
 
  • Like 1
  • Haha 1
Posted
18 hours ago, suvy said:

ஏதோ நல்லகாலம் ஒரு விபத்து சரியான நேரத்தில் தவிர்க்கப் பட்டிருக்கு. இல்லையெனில் சரி பிழையை விட வாழ்நாள் முழுதும் ஒரு மாதிரி இருக்கும்.......!  🙏

பகிர்வுக்கு நன்றி நிழலி......!

ஓம் அண்ணா.

சரி பிழைகளுக்கு அப்பால், ஒரு மனித உயிர் என்னால் ஒரு வினாடியில் பறிக்கப்பட்டதே என்ற குற்றவுணர்வில் மிச்ச வாழ்வு கழிந்திருக்கும்.

என் மனைவிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். 

இது நிகழ்ந்த பின் "எனக்கு படிப்பிக்காதையும்" என்ற மாதிரி கதைப்பதை நிறுத்தி விட்டேன். 😄

16 hours ago, புங்கையூரன் said:

என்னடா...கொஞ்ச நாளா நம்ம நிழலி மரணத்தைப் பற்றிக் கதைக்காமல் இருக்கிறார். ஒரு வேளை ' மரணத்தைப் போலொரு மாமருந்தில்லை' பாடலைக் கேட்டுத் திருந்தியிருப்பாரோ என்று நினைத்தேன்!

இல்லை நான்...அதே நிழலியே தான் என்று மீண்டும் நிரூபித்து விட்டார்..!

நீங்கள் சொன்னது போல 'ஒரு ஆயுள் தண்டனையிலிருந்து தப்பி விட்டீர்கள், நிழலி...!

அருமையான ஒரு அனுபவப் பகிர்வு...!

எனக்கு புனைவு சரிவராது. என் அனுபவத்தை தான் கொஞ்சம் நீட்டி முழக்கி எழுத முடிகின்றது. இன்னொருவரின் அனுபவத்தை கூட என்னால் கேட்டு அப்படியே எழுத முடியாது.

என் அனுபவங்களில் மரணம் ஒரு சக பயணியாக, நிழலைப் போன்று வரும் போது, அதைப் பற்றி அதிகம் எழுத்தில் கொண்டு வராமல் இருக்க முடியவில்லை.

தனிப்பட்ட ரீதியில் எந்த stress சும் அதிகம் இல்லாத, அந்தந்த கணங்களுக்காக வாழ்வது என் இயல்பு. இது உங்களுக்கும் தெரியும் என நினைக்கின்றேன். இப்படி வாழ்வதே மரணம் பற்றிய பிரக்ஞை எப்போதும் இருப்பதால்

அத்துடன் நாம் ஒரு காலத்தில் 'மரணத்துள் வாழ்ந்தோம்'

Posted
17 hours ago, goshan_che said:

அருமையாய் எழுதியுள்ளீர்கள் நிழலி, அருமை.

முந்தநாள் கிட்டத்தட்ட இதை ஒத்த சம்பவம் எனக்கு.

வேலை விசயமாக 70 மைல் வேக தடை உள்ள இரெட்டை லேன் வீதியில், வேக மாக ஓடிக்கொண்டிருக்கிறேன். 

தூரத்தே ஒரு நடை மேம்பாலம். அதற்கு கீழ் ஏதோ ஒரு பொருள் தெரிகிறது, வேகத்தை மட்டுப்படுத்தி அடுத்த லேனுக்கு மாறி என்ன என்று பார்த்தால்….

குழந்தைகளை காவும் carrycot ! ஒரு கணம் ஈரக்குலை நடுங்கி விட்டது. வீதியோ அருகில் hard shoulder உள்ள மோட்டர் வே அல்ல, உடனடியாக நிறுத்த முடியாத A ரோட். ஒரு வழியாக அடுத்த உள்ளோட்டில் வாகனத்தை போட்டு விட்டு 999 க்கு அடித்தால் - விடயம் தெரியும் பொலிஸ் போகிறது என அவர்கள் சொல்லி கொண்டிருக்கும் போதே எதிர் திசையில் இரெண்டு பொலீஸ் கார்கள் கூவிக்கொண்டு பறந்தன.

கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு வெளிக்கிட்டு வந்து விட்டேன்.

அது வெறும் கூடையாகத்தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் எனது திசையில் அம்பூலன்ஸ் என்னை முந்தி ஓடி இருக்கும். நியூசிலிம் வந்திருக்கும்.

வாசிக்கும் போதே நெஞ்சு பக் என்றது....அதுவும் ஒரு குழந்தையின் carrycot . அதற்குள் குழந்தை இருக்கின்றதா இல்லையா என்று எந்தளவுக்கு பதட்டப்பட்டு இருப்பீர்கள்...! 

நீங்கள் ஊகிப்பது போல்,வெறும் carrycot  ஆகத்தான் இருக்கும்.

16 hours ago, குமாரசாமி said:

ரணகளத்திலும் என்னதொரு உன்னிப்பான கவனிப்பு! :beaming_face_with_smiling_eyes:

உண்மைச் சம்பவ பகிரலுக்கு நன்றி நிழலி. 

15 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் கவனிச்சனான்.

பிறகு எரிச்சல் அது இது என்று விட்டுட்டேன்.

அது என் ராசி 😀

பொதுவாக வேலைக்கு நேர்முகத் தேர்வு நடக்கும் போது, நேர்முகத்தேர்வு வைப்பவர் பெண் என்றால் எனக்கு வேலை கிடைக்கும். மேலதிகாரி பெண் என்றால், அந்த வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எந்த இடத்திலாவது பெண் ஒருவர் இருந்தால், அவரது உதவி எனக்கு கிடைக்கும்.

என் வாழ்வில் வந்த அனைத்து பெண் உறவுகளும் நல்ல தோழிகளாகவே இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, நிழலி said:

அது என் ராசி 😀

மீனராசியோ எதுவோ ஒன்றில் பிறந்தவர்களுக்கு இப்படி ஒரு ஈர்ப்பு இருப்பதாக சொல்வார்கள்.

அதுசரி நீங்கள் என்ன ராசி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நிழலி said:

வாசிக்கும் போதே நெஞ்சு பக் என்றது....அதுவும் ஒரு குழந்தையின் carrycot . அதற்குள் குழந்தை இருக்கின்றதா இல்லையா என்று எந்தளவுக்கு பதட்டப்பட்டு இருப்பீர்கள்...! 

நீங்கள் ஊகிப்பது போல்,வெறும் carrycot  ஆகத்தான் இருக்கும்.

ஒரு கணம் - அரண்டு விட்டேன் 

நானும் அப்படியே நினைக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/3/2023 at 20:12, நிழலி said:

தூரத்தில் ஒரு கார் எமர்ஜென்சி விளக்குகளை போட்டவாறு வீதியின் கரையில் நிறுத்தி இருப்பது தெரிந்தது.

தற்கொலைக்கு முயன்றவர் எதற்காக எமர்ஜென்சி விளக்குகளைப் போட்டிருந்தார். “மோட்டு மனுசன்” என்று உங்கள் மனைவி சொன்னது சரிதான்.

அடுத்தநாள்  ஊசிக்கணவாய் ருசித்ததா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னதான் வக்கணையாய் ஆயிரம் கதைகள் கதைத்தாலும் பக்கத்தில் உடன் வரும் துணைதான் ஆபத்பாந்தவர். வீட்டுக்குப் போன பின்னால் நிழலி கவிதாவின் காலில் அட்டாங்க நமஸ்காரம் செய்ததாக காற்று வாக்கில் கதை அடிபட்டது நான் தான் நம்பேல்லை. பட் இப்ப நம்புறேன். கிலியை உண்டாக்கும் எழுத்தென்றாலும் அந்த நீட்டி முழங்கல் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி விடுகிறது. பாராட்டுகள் வெட்டுக்கிளி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றாக எழுதியுள்ளீர்கள் நிழலி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/3/2023 at 07:50, suvy said:

ஏதோ நல்லகாலம் ஒரு விபத்து சரியான நேரத்தில் தவிர்க்கப் பட்டிருக்கு. இல்லையெனில் சரி பிழையை விட வாழ்நாள் முழுதும் ஒரு மாதிரி இருக்கும்.......!  🙏

பகிர்வுக்கு நன்றி நிழலி......!

உண்மையான கருத்து, நிழலி உங்களுக்கு whiplash ஏற்படவில்லையா?

பொதுவாக வாகனவிபத்தில் ஈடுபடுவர்கள் அதிர்ச்சியில் என்ன நடந்தது என்பதனை மறந்துவிடுவார்கள், எனது காரில் மோதியவர்கள் பெரும்பாலும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்ததை அவதானித்துள்ளேன்.

அவர்களை முதலில் அணுகி அவர்களுக்கு ஏதேனும் பாதிப்புள்ளதா என்பதை தெரிந்து கொள்வதும் பின்னர் அவர்களை மனரீதியாக தேற்றுவதும் உண்டு, அதில் பெரும்பாலும் தாம் தவறு செய்துவிட்டோம் என்பதாக தேவையில்லாமல் கவலைப்படுவதனை அவதானித்திறுக்கிறேன்(வாகனத்தினை தவிர மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமலேயே).

நிட்சய்மாக இந்த சம்பவத்தில் நீங்கள் செயற்பட்ட விதத்தில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை, அவசர எண்ணிற்கு நீங்கள் அழைக்கவில்லை என்று வருந்த வேண்டிய அவசியமில்லை, உங்களது கார் முன்னால் சென்றதாலேயே அந்த இளைஞ்சன் தற்போது உயிருடன் உள்ளான் என்ற உண்மையினை நினைத்து பாருங்கள்.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • (தரநிலை அறியில்லை) குன்றன் (மாவீரர்)    
    • இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் டமாஸ்கஸில் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து புகை எழுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரிமி ஹோவெல் பதவி, பிபிசி உலக சேவை சிரிய ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதோடு, கோலன் குன்றுகளில் ராணுவ நடவடிக்கையற்ற பகுதிக்குள் படைகளை நகர்த்தியுள்ளது. அங்கு இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிரிய நிலப்பரப்பின் அளவையும் விரிவுபடுத்தியுள்ளது. இஸ்ரேல் தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறுகிறது. ஆனால் இஸ்ரேல் தனது நீண்டகால எதிரியை பலவீனப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதாக மற்றவர்கள் கருதுகின்றனர். இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை எப்படி நடத்தியது? ஞாயிற்றுக்கிழமை அசத் ஆட்சி வீழ்ச்சியடைந்ததில் இருந்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) 310க்கும் மேற்பட்ட தாக்குதல்களை பதிவு செய்துள்ளதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் (SOHR) தெரிவித்துள்ளது. வடக்கே அலெப்போவில் இருந்து தெற்கில் டமாஸ்கஸ் வரை சிரிய ராணுவத்தின் முக்கியமான நிலைகளைக் குறி வைத்து இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன. ஆயுதக் கிடங்குகள், வெடிபொருள் கிடங்குகள், விமான நிலையங்கள், கடற்படைத் தளங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் உள்ளிட்ட ராணுவ வசதிகளைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல்கள் "சிரிய ராணுவத்தின் அனைத்து திறன்களையும்" அழித்து வருவதாகவும், "சிரியா மீதான உரிமை மீறல்" என்றும் எஸ்.ஓ. ஹெச்.ஆரின் நிறுவனர் (SOHR) ராமி அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார். சிரியா அசத் ஆட்சிக்குப் பிந்தைய சகாப்தத்திற்கு மாறும் இந்தச் சூழலில் ஆயுதங்கள் "பாங்கரவாதிகளின் கைகளில் கிடைப்பதை" தடுக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது. சிரியா: பஷர் அல்-அசத்தின் வீழ்ச்சியால் ரஷ்யாவுக்கு என்ன அடி?10 டிசம்பர் 2024 காட்ஸிலா: 70 ஆண்டுகளாக மிரட்டும் மான்ஸ்டர் - ஜப்பானால் மட்டுமே உருவாக்க முடிந்தது ஏன்?7 டிசம்பர் 2024 ரசாயன ஆயுதங்கள் குறித்து இஸ்ரேல் எழுப்பும் கவலைகள் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, கடந்த 2018ஆம் ஆண்டில், டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள டூமாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தியதாக அசத்தின் ராணுவம் மீது குற்றம் சாட்டப்பட்டது. ரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படும் பஷர் அல்-அசத்தின் ஆயுதக் கிடங்கை எந்தக் குழு கைப்பற்றும் என்பது குறித்து இஸ்ரேல் கவலை கொண்டுள்ளது. சிரியாவிடம் இதுபோன்ற ஆயுதங்கள் எங்குள்ளன, எத்தனை ஆயுதங்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசத் அவற்றைப் பதுக்கி வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. திங்கள் கிழமையன்று, ஐ. நா-வின் ரசாயன கண்காணிப்புக் குழு சிரியாவில் இருக்கும் அதிகாரிகளை அவர்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுமாறு எச்சரித்தது. சிரியாவில் உள்ள முன்னாள் ஐ. நா ஆயுத ஆய்வாளரும், இப்போது ஸ்வீடனில் உள்ள உமியா பல்கலைக்கழகத்தில் ஹிஸ்டாலஜி இணை பேராசிரியருமான அகே செல்ஸ்ட்ரோம், இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களால் சிரியாவின் ரசாயன ஆயுத திறன்களைக் குறிவைத்து வருவதாகக் கூறுகிறார். "சிரியாவின் ராணுவத் திறனை இஸ்ரேல் அழித்து வருகிறது. இதில் ராணுவ தளங்கள் முதல் ராணுவ உபகரணங்கள் வரை அனைத்தும் அடங்கும்" என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2013ஆம் ஆண்டில், பஷர் அல்-அசத்துக்கு விசுவாசமான படைகள் சிரிய தலைநகரான டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியான கெளட்டா மீது நடத்திய தாக்குதலில் நரம்பியல் மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய சரின் வாயுவைப் பயன்படுத்தியதாகவும், இது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. சமீபத்திய தாக்குதல்களிலும் சரின் வாயு, குளோரின் வாயு போன்ற ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், கிளர்ச்சிக் குழுக்களிடமும் ரசாயன ஆயுதங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில் அவர்கள் கடந்த காலத்தில் எதிரிகளுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று முனைவர் செல்ஸ்ட்ரோம் கூறுகிறார். "இஸ்ரேலுடனான மோதலில் வலிமையைக் காட்ட அசத் இந்த ஆயுதங்களை வைத்திருந்தார், ஆனால் அவர் அவற்றைப் பயன்படுத்த விரும்பவில்லை. இப்போது சிரியாவில் முற்றிலும் மாறுபட்ட அரசாங்கம் இருந்தாலும், ரசாயன ஆயுதங்களை இஸ்ரேல் அழிக்க விரும்புகிறது" என்று விளக்கினார். நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 சிரியா: மக்களின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது? அடுத்து என்ன நடக்கும்?11 டிசம்பர் 2024 கோலன் குன்றுகளில் இஸ்ரேல் என்ன செய்கிறது? படக்குறிப்பு, சிரியாவில் எந்தெந்த பகுதிகளை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டும் வரைபடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கோலன் குன்றுகளில் உள்ள ராணுவ நடவடிக்கையற்ற பகுதியை (buffer zone) தமது படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக அறிவித்தார். கோலன் குன்றுகள் என்பது சிரியாவின் ஒரு பகுதி, இது இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது தனது தற்காலிக தற்காப்பு நடவடிக்கை என்று நெதன்யாகு குறிப்பிட்டார். "அக்டோபர் 7, 2023இல் ஹமாஸ் நடத்திய தாக்குதலைப் போன்று சிரியா தரப்பில் இருந்தும் வர வாய்ப்புள்ளது. அதுபோன்ற எந்தத் தாக்குதலையும் தடுக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறியுள்ளது" என்று லண்டனின் எஸ். ஓ.ஏ.எஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கில்பர்ட் அச்கர் கூறினார். "அதே நேரம் இந்த ராணுவ நடவடிக்கை இஸ்ரேல் முன்னோக்கி நகர்வதற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட மண்டலத்தின் எல்லைக்கு அருகில் மற்ற சக்திகள் நகர்வதைத் தடுப்பதற்கும் ஒரு வாய்ப்பு" என்றார். ராணுவ நடவடிக்கையற்ற பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது குறித்து அரபு நாடுகளின் அறிக்கைகளில் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. திங்களன்று எகிப்திய வெளியுறவு அமைச்சகத்தால் இந்த நடவடிக்கை "சிரிய பிராந்தியத்தை ஆக்கிரமித்தல் மற்றும் 1974 பிரிவினை ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறல்" என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய படைகளின் முன்னேற்றங்கள் ராணுவ நடவடிக்கையற்ற பகுதியைத் தாண்டி டமாஸ்கஸில் இருந்து 25 கி.மீ உள்நோக்கிச் சென்றுவிட்டதாக சிரிய அறிக்கைகள் கூறின. ஆனால் இஸ்ரேலிய ராணுவ வட்டாரங்கள் இதை மறுத்தன. கோலன் குன்றுகளில் ராணுவ நடவடிக்கையற்ற பகுதிக்கு அப்பால் அதன் துருப்புகள் செயல்படுவதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் முதன்முறையாக ஒப்புக் கொண்டன. ஆனால் இஸ்ரேலிய ஊடுருவல் குறிப்பிடத்தக்க வகையில் மேலும் முன்னேறவில்லை என்று செய்தித் தொடர்பாளர் நாதவ் ஷோஷானி கூறினார். அதானி மீதான மோசடி வழக்கு: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை பாதிக்குமா? எப்படி?11 டிசம்பர் 2024 இலங்கையில் திடீரென அதிகரித்த விலைவாசி - ரூ 260க்கு விற்கப்படும் ஒரு கிலோ அரிசி10 டிசம்பர் 2024 கோலன் குன்றுகள் என்பது என்ன? அதை ஆக்கிரமித்துள்ளது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES கோலன் குன்றுகள் என்பது தென்மேற்கு சிரியாவில் உள்ள பாறைகள் நிறைந்த பகுதி. அரை நூற்றாண்டுக்கும் மேலாக இப்பகுதி இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கடந்த 1967இல் நடைபெற்ற மத்திய கிழக்கு போரில், கோலன் குன்றுகளின் உச்சியிலிருந்து இஸ்ரேல் மீது சிரியா வெடிகுண்டுகளை வீசியது. ஆனால், விரைவிலேயே சிரிய ராணுவத்தை எதிர்த்து, சுமார் 1,200 சதுர கிலோமீட்டர் அளவிலான அப்பகுதியை இஸ்ரேல் தன்வசப்படுத்தியது. கடந்த 1073இல் யோம் கிப்பூர் போரின்போது, கோலன் குன்றுகளை மீண்டும் தன்வசப்படுத்த சிரியா முயன்று, அதில் தோல்வியுற்றது. அதைத் தொடர்ந்து, 1974இல் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அப்போதிருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தக் கோட்டில் ஐ.நா சபையின் கண்காணிப்புப் படை உள்ளது. ஆனால், 1981இல் இப்பகுதியை இஸ்ரேல் முழுவதுமாக ஆக்கிரமித்தது. ஆனால், அதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை. கோலன் குன்று பகுதியிலிருந்து முழுவதுமாக இஸ்ரேல் திரும்பப் பெறும் வரை, எவ்வித அமைதி ஒப்பந்தத்தையும் ஏற்க மாட்டோம் என, சிரியா தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. கோலன் குன்று பகுதியிலுள்ள பெரும்பாலான சிரிய அரபு மக்கள், 1967 போரின் போது அங்கிருந்து வெளியேறினர். தற்போது, அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடியேற்றங்கள் உள்ளன. அதில், சுமார் 20,000 பேர் வசித்து வருகின்றனர். 1967 மோதல் முடிவுக்கு வந்த உடனேயே, இந்த குடியேற்றங்களை இஸ்ரேலிய மக்கள் கட்டமைத்தனர். இந்தக் கட்டமைப்புகள் 'சட்ட விரோதமானவை' என சர்வதேச சட்டம் கூறுகிறது. ஆனால், இதை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை. கோலன் பகுதியில் குடியேறியவர்கள், சுமார் 20,000 சிரிய மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர். இப்பகுதியில் வாழும் பெரும்பாலான சிரிய மக்கள் ட்ரூஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள், கோலன் குன்றுகளை இஸ்ரேல் ஆக்கிரமித்த பின்னரும் அங்கிருந்து வெளியேறவில்லை. உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? செஸ் விளையாட்டில் அவசியமா?11 டிசம்பர் 2024 இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்11 டிசம்பர் 2024 இஸ்ரேலின் அச்சம் நியாயமானதா? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளின் மஜ்தல் ஷம்ஸ் அருகே இஸ்ரேலிய ராணுவ வாகனம் நிறுத்தப்பட்டது. கோலன் குன்று பகுதிகளில் ஐ.நா படைகள் ரோந்து செல்லக்கூடிய ராணுவ நடவடிக்கையற்ற பஃபர் பகுதி (Buffer Zone) மீதான ஆக்கிரமிப்பு தற்காலிகமானது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். ஆனால், அங்கிருந்து துருப்புகளை திரும்பப் பெறுவது சிரியாவின் அடுத்த அரசின் செயல்பாட்டைப் பொருத்தே அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "சிரியாவில் வளர்ந்து வரும் புதிய சக்திகளுடன் அமைதியான உறவை ஏற்படுத்துவதே எங்களின் விருப்பம். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்றால், இஸ்ரேல் மற்றும் அதன் எல்லைகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம்" என்று அவர் தெரிவித்திருக்கிறார். "சிரியாவில் உள்ள கிளர்ச்சிக் குழு, கோலன் குன்று பகுதியில் ஊடுருவலாம் என இஸ்ரேல் நம்புகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுப்பதற்காக, சிரிய எல்லையில் இஸ்ரேல் படைகள் மேலும் முன்னோக்கிச் செல்கின்றன," என்று லண்டனில் உள்ள ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் முனைவர் ஹெச்ஏ ஹெல்லியெர் தெரிவித்தார். "இருப்பினும், இஸ்ரேல் முன்பு பாதுகாப்பு நடவடிக்கையாக கோலன் குன்றுகளை ஆக்கிரமித்து பலப்படுத்தியது. மீண்டும் அவ்வாறு செய்யலாம்" என அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் கிடியோன், தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதற்காகவே, சிரிய ராணுவ தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். "அதனால்தான் நாங்கள் மூலோபாய ஆயுத அமைப்புகளைத் தாக்கி வருகிறோம். உதாரணமாக, எங்களுடைய இலக்குகள், ரசாயன ஆயுதங்கள் அல்லது தொலைதூர ஏவுகணைகள் மற்றும் ரக்கெட்டுகள் ஆகியவை. பயங்கரவாதிகளின் கைகளில் அந்த ஆயுதங்கள் சிக்காமல் இருக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்" என்றார். எனினும் பேராசிரியர் அச்கர் கூறுகையில், "சிரியாவில் அதிகளவில் ரசாயன ஆயுதங்கள் இல்லை. இரண்டு அல்லது மூன்று இடங்களில்தான் உள்ளன. ஆனால், 300க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. சிரியாவை பலவீனமாக்க இஸ்ரேல் முயல்வதை இது காட்டுகிறது" என்றார். இஸ்ரேல் பஷர் அல்-அசத் குறித்து அறிந்து வைத்துள்ளதாகவும் ஆனால் சிரியாவில் அடுத்து யார் ஆட்சிக்கு வருவார் என்பதில் தெளிவற்று இருப்பதாகவும் குறிப்பிட்டார். "லிபியா போன்ற கிளர்ச்சிக் குழுக்களாக சிரியா பிரிந்துவிடும் என்று இஸ்ரேலியர்கள் நம்புகிறார்கள். இந்தக் குழுக்களில் ஒன்று அல்லது மற்றொன்று இஸ்ரேலுக்கு விரோதமாக இருக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்" என அவர் தெரிவித்தார். "இத்தகைய குழுக்களின் கைகளில் சிரியாவின் ரசாயன மற்றும் இதர ஆயுதங்கள் சிக்காமல் இருக்க வேண்டும் என இஸ்ரேல் நினைப்பதாக" அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cn7rv5ej8lzo
    • 👍............... ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்படுவது முற்றிலும் வேறான நிகழ்வுகள், கோஷான்............👍. மாவீரர்கள் சங்கப்பாடல்கள் போன்றவர்கள்............... அழிவற்றவர்கள் மற்றும் தமிழின் முதன்மையான சொத்துகள். சொந்த மக்களாலேயே துரத்தி அடிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்படுவது அசாத் போன்றோருக்கும் மற்றும் அவர்களின் வழி வந்தோருக்கும் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள். இன்றைய ரஷ்யர்கள் லெனினைக் கூட விடவில்லை.........😌.
    • “தாய்லாந்து மசாஜ்”….. ஐயோ, ஆளை விடுங்கடா சாமி. 😂 தலை தப்பினது, தம்பிரான் புண்ணியம். 🤣 ஆபத்து எங்கை இருந்தெல்லாம் வருகுது.  இனிமேல்… உசாராக இருக்க வேணும். 😁 😃
    • தாய்லாந்தில் இளம் பாப் பாடகி ஒருவருக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட நிலையில், அதனை சரிசெய்ய பார்லரில் மசாஜ் செய்ய சென்றுள்ளார். ஆனால் இந்த மசாஜ் காரணமாகவே சில தினங்களில் அவர் எதிர்பாரா விதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்… மசாஜ் மற்றும் ஸ்கின் கேர் போன்றவற்றிக்கு பெயர் பெற்ற இடம், தாய்லாந்து. பொதுவாகவே மசாஜை சரியான முறையில் செய்யவில்லை என்றால், பல்வேறு பிரச்னைகள் அதனால் ஏற்படும். மூளை காயங்கள், பக்கவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை ‘தவறான மசாஜ்’ உண்டாக்க கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகையில்தான், தாய்லாந்தை சேர்ந்த 20 வயது பாப் பாடகி சாயதா ப்ரோஹோம் என்கிற பிங் சாயதா. இவருக்கு கழுத்து, தோள்பட்டை வழி அதிக அளவில் ஏற்படவே, மசாஜ் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து, உள்ளூர் மசாஜ் சென்டரை அனுகியுள்ளார். இதற்காக கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி உதான் தானி என்ற பகுதியிலுள்ள, மசாஜ் செய்யும் பார்லரில் அவர் மசாஜ் செய்துள்ளார். அப்போது அவருக்கு ஏற்பட்ட வலிகளும் சரியாகியுள்ளது. இருப்பினும் சில தினங்களில் கழுத்தின் பின்புறத்தில் வலி அதிகரிக்கவே, மீண்டும் மசாஜ் செய்ய சென்றுள்ளார். இதன்பிறகு, அவரது கழுத்தில் ஏதோ மறுத்த உணர்வு ஏற்பட, மீண்டும் மூன்றாவது முறையாக அதே மசாஜ் செண்டருக்கு சென்றுள்ளார். ஆனால், கடந்த இரண்டு முறை மசாஜ் செய்த ஊழியர் இம்முறை இல்லை. வேறொரு ஊழியர்தான் மசாஜ் செய்துள்ளார். இவர் மசாஜ் செய்தபின் சயாதாவிற்கு கை விரல்களில் உணர்வின்மை, எரிச்சல், வீக்கம் போன்றவை ஏற்பட்டுள்ளது. இதனால், அவதியடைந்த அவர், அக்டோபர் 30 ஆம் தேதி பிபூன்ரக் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர்களோ, உதான் தானி மருத்துவமனைக்கு செல்லும்படி தெரிவிக்கவே, நவம்பர் 6 – நவம்பர் 11 வரை உதானி தானியில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, கழுத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்று வந்துள்ளது. இதனால் உடல்நிலை சரியானதாக நினைத்து வீடுதிரும்பிய அவர், மீண்டும் நவம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இம்முறை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக சாயதா தனது சமூக வலைதளப்பக்கத்தில் இறுதியாக வெளியிட்ட வீடியோவில் அனைத்து தகவல்களையும் அளித்துள்ளார். இந்நிலையில், அவரது உடலானது பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மசாஜ் செய்ததால்தான் சாயதாவின் உடல்நிலையில் இத்தகைய பிரச்னை ஏற்பட்டது என்று தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். https://thinakkural.lk/article/313627
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.