Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராடர் தளமொன்றை இலங்கையில் நிர்மாணிக்க சீனா திட்டம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

ராடர் தளமொன்றை இலங்கையில் நிர்மாணிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியப் பெருங்கடலில் அமையப்பெற்றுள்ள இந்திய மற்றும் அமெரிக்காவின் இராணுவத்தளங்களை உளவு பார்ப்பதற்காக இந்த ராடர் தளத்தை சீனா இலங்கையில் அமைக்கவுள்ளது.

இலங்கை உளவு துறை தரப்புக்களால் இந்த திட்டம் தொடர்பிலான தகவல் வெளிக்கொணரப்பட்டுள்ளதாக பிரித்தானிய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

சீனா இலங்கைக்கு வழங்கிய கடன்களின் மூலோபாய ஆதாய நடவடிக்கையாக இந்த திட்டம் அமைந்துள்ளதென நிபுணர்களை கோடிட்டு குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ராடர் தளமானது மாத்தறை பகுதியில் தெவுந்தர முனைக்கு அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்திய கடற்பரப்பின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்திய கடற்படை முகாம்கள், டியாகோ கார்சியாவிலுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராணுவத்தளங்களை உளவு பார்ப்பதற்கு குறித்த ராடர் சீனாவிற்கு பெரிதும் பயன்படும்.

மேலும், இந்தியாவிலுள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தின் நடவடிக்கைகள் மற்றும் ஒடிசாவிலுள்ள ஏவுகணை சோதனைத்தளம் ஆகியனவற்றையும் குறித்த ராடர் மூலம் அவதானிக்க முடியும்.

கடந்த ஆண்டுகளில் சீனா 180இற்கும் மேற்பட்ட விண்வெளி கருவிகளை ஏவியுள்ளதுடன் இந்த வருடத்தில் 200 விண்வெளி கருவிகளை அனுப்பவதற்கும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://thinakkural.lk/article/247836

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் சகல ராணுவ ரகசியங்களையும் நோண்டி எடுக்கப் போகிறான், சீனாக்காரன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, தமிழ் சிறி said:

இந்தியாவின் சகல ராணுவ ரகசியங்களையும் நோண்டி எடுக்கப் போகிறான், சீனாக்காரன்.

சீனன் எட்டத்தை கிடக்கிற அமெரிக்காவுக்கே பலூன் விட்டவன். பக்கத்திலை கிடக்கிற கிந்தியாவுக்கு குட்டி பலூனாவது விட்டுப்பார்த்திருக்க மாட்டான் எண்டுறியள்? :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சீனன் எட்டத்தை கிடக்கிற அமெரிக்காவுக்கே பலூன் விட்டவன். பக்கத்திலை கிடக்கிற கிந்தியாவுக்கு குட்டி பலூனாவது விட்டுப்பார்த்திருக்க மாட்டான் எண்டுறியள்? :rolling_on_the_floor_laughing:

அமெரிக்கன உளவு பார்க்கிறது என்பது சரியாக இருக்கக்கூடும். ஆனால் இந்தியாவை உளவுபார்ப்பதற்கு என்று கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. 

இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு ரெண்டு air hostess ன் படத்தைக்  காட்டினால் அவங்கள் தாங்களாகவே எல்லா இரகசியங்களையும் கொண்டுவந்து கொடுத்துவிடப் போகிறார்கள். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, இணையவன் said:

BRICS இல் சீனாவும் இந்தியாவும் ஒன்றுக்குள் ஒன்று இல்லையா ?

அட BRICS இல் சேர்ந்தவுடன் ஆருயிர் நண்பு நாடுகளென்று நினைத்தீர்களா🤔, ஒரு குழந்தை கூடி இப்படி கேட்க மாட்டார்கள்😁😁

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சீனனுக்கு இந்த செலவு....இந்தியாக் காரனிடமே சீப்பாக இரகசியம் எல்லாம் வாங்கிடலாம்...😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை கண்காணிப்பதற்காக இலங்கையில் சீனாவின் ராடர் தளம் - இந்திய ஊடகம்

Published By: RAJEEBAN

07 APR, 2023 | 03:23 PM
image

இலங்கையின் தேவேந்திரமுனைக்கு அருகில் உள்ள காடுகளில் சீனா ராடர்தளமொன்றை அமைப்பது குறித்து ஆராய்ந்துவருகின்றது என இந்தியாவின் இந்தியன் டைம்ஸ் எக்கனமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த ராடர் கூடங்குளம் மற்றும் கல்ப்பாக்கம் அணுமின்நிலையங்களை கண்காணிக்க சீனாவிற்கு உதவியாக அமையும் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் அக்கடமி ஒவ் சயன்சின் ஏரோஸ்பேஸ் இன்பர்மேசன் ரிசேர்ச் இந்த முயற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள இந்தியாவின் இந்தியன் டைம்ஸ் எக்கனமிக் டைம்ஸ் இந்ததிட்டம் பிராந்தியத்தில் இந்தியாவின் மூலோபாய நலன்களிற்கு ஆபத்தானதாக காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

அந்தமான்நிக்கோபார் தீவுகளிற்கு செல்லும் இந்திய கடற்படையின் கப்பல்களை சீனா கண்காணிப்பதற்கு இந்த ராடர் உதவும் என தெரிவித்துள்ள இந்திய ஊடகம் இந்த ராடரினால் கூடங்குளம் மற்றும் கல்ப்பாக்கம் அணுமின் உலைகளை கண்காணிக்கமுடியும் இந்த பகுதியில் எரிபொருள் மீள்நிரப்பும் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் முடியும் எனவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தியா இலங்கையில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து கரிசனை கொண்டுள்ளது இந்தியாவின் எச்சரிக்கைகளிற்கு மத்தியில் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து கடந்த வருடம்சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் அம்பாந்தோட்டையில் தரித்துநின்றது.

https://www.virakesari.lk/article/152363

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவுதான் பொருத்தமான இடம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2023 at 11:47, இணையவன் said:

BRICS இல் சீனாவும் இந்தியாவும் ஒன்றுக்குள் ஒன்று இல்லையா ?

ஏன் நேட்டோ (NATO) வில் இருப்பவை எல்லாரும் என்ன ஒன்றுக்குள் ஒன்றாவா இருக்கினம்..??! அல்லது ஈயு (EU) வில.. மற்றும் AUKUS  இல் இருக்கிறவை எல்லாம் ஒன்றுக்குள்ள ஒன்றாவா இருக்கினம். ஒரு சில பொதுமைப்பாடான.. இராணுவ பொருண்மிய காரணங்களுக்காக உருவாகும் கூட்டணிகளுக்குள்.. நாடுகளின் தனித்தனி தேவைகள் உட்படுத்தப்படுவதில்லை. இது தெரியாத மாதிரி ஒரு வீம்புக்கேள்வி இது. 

போலியாக உருவாக்கப்பட்டுள்ள ஹிந்தியா.. என்பது சீனாவால்.. பல சுதந்திர தேசங்களாக பிரிக்கப்பட்டு.. அதில் தமிழகமும் தனிநாடானால்.. சந்தோசமே. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

போலியாக உருவாக்கப்பட்டுள்ள ஹிந்தியா.. என்பது சீனாவால்.. பல சுதந்திர தேசங்களாக பிரிக்கப்பட்டு.. அதில் தமிழகமும் தனிநாடானால்.. சந்தோசமே. 

இதுதான் எனது அவாவும்.. தமிழர்களுக்கு என்டு ஒரு நாடு இப்படியாவது உருவாகாதா என்று ஒரு பேராசை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் இலங்கையில் ரேடார் கட்டமைப்பை உருவாக்குகிறதா சீனா?

ரேடார் கப்பல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையின் தேவேந்திரமுனை பகுதியை அண்மித்துள்ள வனப் பகுதியில் ரேடார் கட்டமைப்பு முகாமொன்றை சீனா அமைக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்தி, இந்தோ பசுபிக் வலயத்தின் பூகோள அரசியலில் மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது.

சீனாவின் உளவு கப்பல் என இந்தியாவினால் அடையாளப்படுத்தப்பட்ட யுவான் வேன் 5 கப்பல், தென்னிலங்கையின் சீன கட்டுப்பாட்டிலுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வருகைத் தந்தமை, அப்போது பேசுப் பொருளாக மாறியிருந்தது.

உத்தேச சீன ரேடார் முகாமின் ஊடாக, தென்னிந்தியா, இந்தியாவின் மூலோபாக சொத்துக்கள், இந்திய பெருங்கடலில் இந்திய கடற்படையின் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும் என அறிக்கைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு மையங்களாக கருதப்படுகின்ற கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்களையும், அந்த மையங்களுக்கான எரிபொருள் விநியோகத்தையும் இந்த ரேடார் முகாமின் ஊடாக சீனாவிற்கு கண்காணிக்க முடியும் என இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

 

இலங்கையில் ரேடார் கட்டமைப்பு முகாமொன்றை அமைப்பதற்கு சீனாவிற்கு தாம் அனுமதி வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்திய பெருங்கடல் முழுவதும் இந்தியாவின் மூலோபாய நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தில் சீனா, அறிவியல் அகாடெமியின் விண்வெளி தகவல்கள் ஆராய்ச்சியிலும் ஈடுபடக்கூடும் என அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளை நோக்கி பயணிக்கும் இந்திய கடற்படையின் படகுகளின் பயண நடவடிக்கைகளையும், இந்த ரேடார் கட்டமைப்பின் ஊடாக கண்காணிக்க முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பில் இந்திய பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது கவலையை தெரிவித்திருந்தது.

இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில், பிபிசி இலங்கை பாதுகாப்பு அமைச்சை தொடர்புக் கொண்டு வினவியது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் பொறுப்பு வெளிவிவகார அமைச்சுக்கு காணப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த விடயம் தொடர்பில் ஏப்ரல் மாதம் 11ம் தேதி விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரியை தொடர்பு கொள்ள முயற்சித்த சந்தர்ப்பத்தில், அமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், சீனாவின் கடனுதவித் திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்படும் சந்தர்ப்பத்தில், சீனா தனது பெல்ட் அன்ட் ரோட் மூலோபாய திட்டத்தின் தெற்காசிய மையமாக குறித்த துறைமுகத்தை பயன்படுத்தும் என இந்தியா இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

ரேடார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இறுதியில், குறித்த கடனை மீள செலுத்தும் இயலுமை இல்லாமையினால், 1.12 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், ஹம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருட குத்தகையின் கீழ் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சீனா தொடர்பில் இந்தியா வெளியிட்ட கவலையை பொருட்படுத்தாது, 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் மற்றும் போர் கப்பல் ஆகியவற்றுக்கு கொழும்பு துறைமுகத்திற்குள் வருகைத் தருவதற்கு இலங்கை அதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்தனர்.

இதன்படி, சீனா ஜனாதிபதியின் தெற்காசிய சுற்றுப் பயணத்திற்கு ஒத்ததாக நீர்மூழ்கி கப்பலொன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்து 7 கிழமைகளுக்கு பின்னரே, சாங்செங்-2 நீர்மூழ்கி கப்பல் மற்றும் சாங் சிங் தாவோ போர் கப்பல் ஆகியன கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்தன.

குறிப்பாக சீன நீர்மூழ்கி கப்பலின் பயணம் தொடர்பில் இந்தியா கவலை வெளியிட்டதாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நீர்மூழ்கி கப்பல் மற்றும் ராணுவ கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் வருகைத் தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டமையினால், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தவணையாக நடத்திய ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியை தழுவும் அளவிற்கு அது பாரிய காரணமாக அமைந்தது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சீனாவின் முதலீட்டு திட்டமான கொழும்பு துறைமுக நகர் திட்டம் தொடர்பிலும், இந்தியா அவ்வாறே தனது கவலையை வெளியிட்டது.

கொழும்பு துறைமுக நகர திட்டமானது, நிதி சலவை மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளுக்கான கேந்திர நிலையமாக எதிர்காலத்தில் மாறக்கூடும் என இந்திய ஊடக நிறுவனங்கள் அவ்வப்போது சுட்டிக்காட்டியிருந்தன.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதலாம் தேதி இந்திய பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விக்ரம் மிஸ்ரியின் தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட உள்ளக கூட்டத்தின் போதும், இந்த விடயம் தொடர்பில் மிக ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

3 தீவுகளில் சீன மின் திட்டங்களுக்கு இந்தியா எதிர்ப்பு

ரேடார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையின் வடப் பகுதியிலுள்ள மூன்று தீவுகளில் மின்சக்தி திட்டங்களை ஸ்தாபிப்பதற்கு சீனாவினால் 2021ம் ஆண்டு யோசனையொன்று முன்வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணதை அண்மித்துள்ள நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகியவற்றில் மின்சக்தி கட்டமைப்புக்களை ஸ்தாபிப்பதற்கான திட்டத்தை 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் சீன நிறுவனமான சினோ சோ ஹைப்ரிட் டெக்னாலஜியிடம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த மூன்று தீவுகளும் யாழ்ப்பாணத்தை அண்மித்து அமைந்துள்ளன. இந்த திட்டம் தொடர்பிலும் இந்தியா இலங்கைக்கு தனது கவலையை வெளியிட்டது.

இந்த திட்டம் தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருந்த போதிலும், குறித்த திட்டத்தை நிறுத்தும் வகையில் இலங்கை அரசாங்கம் பின்னர் நடவடிக்கை எடுத்திருந்தது.

''மூன்றாவது தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினை" காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தேச மின்சக்தி திட்டம் கைவிடப்படும் சந்தர்ப்பத்திலேயே, மாலைத்தீவில் 12 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கத்துடன் நவம்பர் மாதம் 29ம் தேதி ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாக தூதரகம் அறிவித்துள்ளது.

யுவான் வேங் 5 சர்ச்சை

ரேடார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி, கடந்த ஆண்டு சீன கண்காணிப்பு கப்பலான யுவான் வேங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருகைத் தந்தமையை அடுத்து, சீனாவின் சந்தேகத்திற்கிடமான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியா இலங்கைக்கு தனது கவலையை வெளியிட்டது.

இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருகைத் தருவதற்கு இலங்கை அனுமதி வழங்கிய நிலையில், எரிபொருள் மற்றும் ஏனைய சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக குறித்த கப்பல் 6 நாட்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்தது.

யுவான் வேங் 5 என்ற கப்பல் 2007ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதுடன், அந்த கப்பலானது சீன கொடியின் கீழ் பயணிக்கும் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி கப்பலாகும்.

யுவான் வேங் தரத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்றாவது தலைமுறை கப்பலாக இந்த யுவான் வேங் 5 விளங்குகின்றது. யுவான் வேங் சீனாவின் ஜியாங்னான் கப்பல் கட்டுமான தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட கப்பலாகும்.

2000ம் ஆண்டு காலத்தின் முற்பகுதியில் சீனா சர்வதேச விண்வெளி நிலையத்தின் உறுப்பு நாடாக இணைவதற்கு ஆர்வம் காட்டிய போதிலும், அதன் கோரிக்கைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிராகரிக்கப்பட்டன.

இவ்வாறான பின்னணியில், சீனாவின் விண்வெளி ஆய்வு திட்டங்களுக்கு யுவான் வேங் 5 கப்பல் மிக முக்கியமானது.

சீனாவின் ராணுவ மேம்படுத்தல்களுக்காக, யுவான் வேங் கப்பல் மக்கள் விடுதலை ராணுவத்தின் மூலோபாய படையால் இயக்கப்படுகின்றது என பென்டகனினால் 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவான் வேங் 5 கப்பலானது, விண்வெளி ஆய்வு மற்றும் ஆராய்ச்சி கப்பல் என சீனாவினால் அடையாளப்படுத்தப்பட்ட போதிலும், அந்த கப்பலானது கண்காணிப்பு கப்பல் என இந்திய ஊடகங்கள் அடையாளப்படுத்தியிருந்தன.

விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுவதற்கான சிறப்பு கப்பலாக இந்த கப்பல் கருதப்படுகின்றது.

தமது எதிர்ப்பையும் மீறி, சீனாவின் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நங்கூரமிட்டதை அடுத்து, இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட டோனியர் 228 சமுத்திர கண்காணிப்பு விமானத்தை இந்தியா, இலங்கைக்கு இலவசமாக வழங்கியது.

2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி யுவான் வேங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தருவதற்கு 7 தினங்களுக்கு முன்னர், அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி இலங்கை ஜனாதிபதியை பங்குப்பெற செய்து, இந்தியாவினால் இந்த விமானம் கையளிக்கப்பட்டது.

இலங்கை விமான எல்லை மற்றும் கடல் வலயத்திற்குள் டோனியர் விமானத்தை சிறப்பாக பயன்படுத்தி, சமுத்திர கண்காணிப்பு, சமுத்திர மோசடி கண்காணிப்பு மற்றும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விஸ்தரித்து, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த விமானம் தொடர்பில் இலங்கை விமானப்படை அறிக்கையொன்றை வெளியிட்டு கூறியிருந்தது.

பென்டகன் அறிக்கையின் வெளிப்பாடு

கடந்த 10 வருட காலத்திற்குள் தெற்காசியாவில் தனது அழுத்தங்களை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ள சீனா, இலங்கையில் ராணுவ முகாமொன்றையும், விநியோக வசதிகளுடனான மத்திய நிலையமொன்றையும் நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டு வருவதாக 2021ம் ஆண்டு அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கை உள்ளிட்ட உலகிலுள்ள பல நாடுகளில் கடல் , வான் மற்றும் தரைப்பரப்புக்களின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, மேலதிக ராணுவ முகாம்கள் மற்றும் விநியோக வசதிகளை மேம்படுத்துவதற்கு சீனா திட்டமிட்டு வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களம், 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாவது வாரத்தில் வெளியிட்ட விரிவான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்டகன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கம்போடியா, மியான்மார், தாய்லாந்து, சிங்கப்பூர், பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, சீஷெல்ஸ், தான்சானியா, அங்கோலா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் பெயர்களே அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய நாடுகளாகும். சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் நடவடிக்கைகளுக்காக சீனாவினால் இந்த முகாம்கள் மற்றும் மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நமீபியாவில், சீனா அவ்வாறான முகாமொன்றை நிர்மாணித்து வருவதாக அறிவித்துள்ளது என ஐக்கிய அமெரிக்கா, அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொடர்புகளுக்கான சமுத்திர கோடுகளுக்காக சீனாவிலிருந்து ஹார்முஸ் சமுத்திரம், ஆபிரிக்கா மற்றும் பசுபிக் தீவுகள் வரை சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் திட்டமிடுகின்ற தெரிவு செய்யப்பட்ட முக்கிய வலயங்களாகும்.

கடல் தொலைத்தொடர்பு வழி அல்லது வணிகத்திற்காக வழி என கூறப்பட்டாலும், அது தொலைதூர இடத்திலுள்ள வளங்களை அணுகும் மூலோபாயத்தை பெற்றுக்கொள்வதற்கான நெடுஞ்சாலைகள் என அமெரிக்கா கூறியுள்ளது.

குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியன பெரும்பாலும் கடல் மார்க்கமாகவே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போதைய பூலோள நிலைமை குறித்து பார்க்கும் போது, ரஷ்யா - யுக்ரேன் போர் நிலைமைக்கு மத்தியில், மேற்குல எதிரியும், ரஷ்யாவின் நண்பருமான சீனாவிற்கு இந்த கப்பல் மார்க்கம் மிக முக்கியமானது என அறியப்படுகின்றது. இதன்படி, வலயத்தின் போட்டியாளர்களது செயற்பாடுகளை கண்காணிப்பதுடன், இலங்கையில் ஸ்தாபிக்கப்படுகின்ற சீன ராணுவ முகாம் அல்லது விநியோக வசதி மத்திய நிலையமானது, தனது கடல் தடங்களுக்கான மூலோபாய மார்க்கமாக பயன்படுத்தப்படக்கூடும் என அமெரிக்க ஆரம்பத்திலிருந்தே சந்தேகம் வெளியிட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/ce90542p8p7o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சீனாவின் உதவியுடன் செய்மதி தளம் - மியன்மாரில் இராணுவதளம் - இந்தியா கவலை

Published By: RAJEEBAN

16 APR, 2023 | 10:01 AM
image

சீனாவின் உதவியுடன் இலங்கையில் ராடார் தளத்தை அமைப்பதற்கான முயற்சிகள்  குறித்தும் மியன்மாரில் இராணுவதளமொன்றை அமைப்பதற்கு சீனாஉதவுவது குறித்தும்  இந்தியா கரிசனை கொண்டுள்ளது என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

மியன்மாரின் கொக்கோ தீவுகளில்இராணுவதளமொன்று உருவாக்கப்படுவதும்  இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள தொலைதூர செயற்கை கோள் தரவுகளை பெறும் நிலையமும் பிராந்தியத்தில் சீனாவின் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்த கரிசனையை இந்தியாவிற்கு ஏற்படுத்தியுள்ளன என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. இராணுவதளமும்  தொலைதூர செய்மதி நிலையமும் சீனாவின் உதவியுடனேயே நிர்மாணிக்கப்படுவதாக இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளி;ற்கு அருகில் உள்ள கொக்கோதீவுகளில்  இராணுவதளமொன்று உருவாக்கப்படுவதை சமீபத்தைய செய்மதி படங்கள் காண்பித்துள்ளன  என தெரிவித்துள்ள இந்து நாளிதழ் இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள தொலைதூர செயற்கை கோள் தரவுகளை பெறும் நிலையமொன்றை உருவாக்கும் யோசனையை முன்வைத்துள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன எனவும்  குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் அக்கடமி ஒவ் சயன்சின் கீழ் உள்ள ஏரோஸ்பேஸ் இன்பேமேர்சன் ரிசேர்ச் இன்ஸ்டியுட்டிற்கும் ருகுணு பல்கலைகழகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பின் கீழ்; இந்த செயற்கை கோள் தளம் உருவாக்கப்படுகின்றது எனவும் இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

இதனை பயன்படுத்தி இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புபட்ட வளங்களை வேவுபார்க்கலாம் பிராந்தியத்தில் தகவல்களை இடைமறித்து கேட்கலாம் என பாதுகாப்பு வட்டாரங்களை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர் என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/152910

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.