Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"முன் வைத்த காலை பின்   வைக்கமாட்டேன்" என்று  துணிந்து எண்ணிய படியே பயணம் தொடங்கியாச்சு ...தொடருங்கோ ...

  • Replies 378
  • Views 31.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    இரண்டு   என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும்

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பன்னிரண்டு    முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும்

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பத்தொன்பது    எனது முகநூல் மெசெஞ்சரில் நீங்கள் இன்னும் ஊரில் தான் நிற்கிறீர்களா என்ற செய்தி வந்திருந்தது. பார்த்தால் சகாரா. தானும் அங்கு வருவதாக கூறியிருந்தாலும் வேலைகள் தொடர்ந்து காணியில் ந

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இங்க விட்டா வேறெங்க எழுதுறது.

உண்மையில் யாழ்களம் தமிழ் படைப்பாளிகளுக்கு பெரியதொரு தளம். அதை சீராக பயன்படுத்த தெரியாமல் பலர் விலகியே நிற்கின்றனர்.
முகநூல் டிவிட்டர் போன்ற   ஊடகங்கள் அன்றாடத்திற்கு உதவுமே தவிர  படைப்புக்களுக்கு அல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஏலக்காய் வாங்கியதாக நீங்கள் எழுதிய போது கிருபன் அய்யா மாதிரி தான் இலங்கையில் இருந்து தானே ஏலக்காய் இங்கே வருகிறது என்று நானும் நினைத்தேன்.

ஒரு ஆண்டுக்கு முன்னர் அரிசி உட்பட பல மளிகைப் பொருட்களை இங்கிருந்து  அனுப்பியவர்களும் உண்டு.

32 minutes ago, நிலாமதி said:

"முன் வைத்த காலை பின்   வைக்கமாட்டேன்" என்று  துணிந்து எண்ணிய படியே பயணம் தொடங்கியாச்சு ...தொடருங்கோ ...

வேறவழி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6/4/2023 at 11:34, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பேச்சு வாக்கில் கணவர் பிள்ளைகளிடம் கூறியபோது உங்களுக்கு விருப்பம் என்றால் போய் நின்றுவிட்டு வாருங்கள் எனப் பிள்ளைகளும்,” நீ போய் இரு. நாங்களும் கொஞ்சநாளைக்கு நின்மதியாய் இருப்பம்” என மனிசனும் கூற

கொத்தாருக்கு அக்கினி நட்சத்திர  படத்திலை வாற ஜனகராஜ் பீலிங் 100 வீதம் இருந்திருக்கும்....:rolling_on_the_floor_laughing:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

உண்மையில் யாழ்களம் தமிழ் படைப்பாளிகளுக்கு பெரியதொரு தளம். அதை சீராக பயன்படுத்த தெரியாமல் பலர் விலகியே நிற்கின்றனர்.
முகநூல் டிவிட்டர் போன்ற   ஊடகங்கள் அன்றாடத்திற்கு உதவுமே தவிர  படைப்புக்களுக்கு அல்ல.

உண்மைதான். மற்றைய தளங்களில் எழுதும்போது ஏதோ அந்நிய நாட்டுக்குப் போவது போல் ஓர் உணர்வு. யாழ் இணையத்தில் எழுதும்போதுதான் கருத்துக்களத்தினூடாக வரும் விமர்சனங்கள் எழுதும் எமக்கு மிகுந்த உற்சாகத்தையும் நிறைவையும் தருகின்றன குமாரசாமி.

3 minutes ago, குமாரசாமி said:

கொத்தாருக்கு அக்கினி நட்சத்திர  படத்திலை வாற ஜனகராஜ் பீலிங் 100 வீதம் இருந்திருக்கும்....:rolling_on_the_floor_laughing:

 

அது அத்தாருக்கு மட்டும் இல்லை உங்கள் எல்லாருக்கும் வரும்தான். ஆனா உணக்களுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை 😂

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவங்கள் தொடரட்டும், சுமே...!

இந்தப் பக்கம் வந்திருந்தால், எங்களிடமும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே..1

  • கருத்துக்கள உறவுகள்

ம்.....நல்லா இருக்கு, தொடர்ந்து எழுதுங்கள்........!  👍

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2023 at 05:18, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

“சொறியப்பா நான் வர ஏலாது, எனக்கும் மனிசனுக்கும் பெரிய பிரச்சனையப்பா என்றவுடன் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு அளவே இல்லை

அட பாவி. அவ இங்க களத்துக்கு வரட்டுக்கும். இருக்கிது சாத்து 😋

On 8/4/2023 at 05:18, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனது கணனியையும் கட்டாயம் கொண்டுசெல்ல வேண்டும் என முடிவெடுத்து நிறுத்துப் பார்த்தால் அதுவே 5 கிலோ என்று காட்டுகிறது.

1515492164_maxresdefault-1024x576.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி கொஞ்ச நாளைக்கு சண்டை அடிபிடி எண்டு யாழ்களை கட்டப்போகுது.. இனி நானும் அடிக்கடிவரோனும் சண்டை பாக்க.. தொடருங்கள்.. ஆவலுடன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

On 8/4/2023 at 00:35, புங்கையூரன் said:

அனுபவங்கள் தொடரட்டும், சுமே...!

இந்தப் பக்கம் வந்திருந்தால், எங்களிடமும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே..1

அங்கு வந்திட்டு உங்களுக்குச் சொல்லாமல் இருப்பேனா.

On 8/4/2023 at 09:20, suvy said:

ம்.....நல்லா இருக்கு, தொடர்ந்து எழுதுங்கள்........!  👍

நன்றி சுவி அண்ணா

17 hours ago, saravanar said:

அட பாவி. அவ இங்க களத்துக்கு வரட்டுக்கும். இருக்கிது சாத்து 😋

 

அவவுக்கு யாழ் களமே தெரியாதபடியால்த்தானே இத்தனை துணிவா எழுதிறன்.

13 hours ago, சுவைப்பிரியன் said:

தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி சுவைப்பிரியன்

5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

சரி கொஞ்ச நாளைக்கு சண்டை அடிபிடி எண்டு யாழ்களை கட்டப்போகுது.. இனி நானும் அடிக்கடிவரோனும் சண்டை பாக்க.. தொடருங்கள்.. ஆவலுடன் 

ஆர் சண்டை பிடிப்பினம் எண்டு பாத்துக்கொண்டிருக்கிறதுதான் வேலையாக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்று

 

லண்டன் Heathrow விமானநிலையத்தில் எல்லாப் பயணப் பொதிகளையும் நிறுத்து சரி என்றபின் எமது சிறிய சூட்கேஸ் எல்லாவற்றையும் பெரிய பொதிகளுடனேயே போடலாம் என்றவுடன் அவற்றை இழுத்துப் பறிக்கும் வேலை மிச்சம் என எண்ணிக்கொண்டு அவற்றையும் போட்டுவிட்டு வெளியே வரத்தான் சிறிய சூட்கேஸ்களுக்கு பூட்டுகள் எதுவும் போடவில்லை என்ற எண்ணம் எழ  மனம் திடுக்கிடுகிறது. உடனே கணவரிடமும் மகளிடமும் சொல்லிவிட்டு பதட்டத்துடன் பயணப் பொதிகளைப் போட்ட இடத்துக்குப் போகிறோம். நாம் நின்ற இடத்தில் இன்னொரு குடும்பம் நிற்க அவர்கள் போகுமட்டும் காத்திருந்து எங்கள் hand luggage ஐ மீளப் பெற முடியுமா என்று அந்தப் பெண்ணிடம் கேட்க, அதை செய்ய முடியாது. கொழும்பில் தான் அதை எடுக்கலாம் என்கிறார் அந்தப் பெண். வேறு வழியற்று காலை 6.30 இக்கு விமானத்தில் ஏறி இரண்டு மணி நேரத்தில் சூரிச் விமானத்தில் இருந்து இறங்க கணவரை ஏற்றிச்  செல்ல electric வீல் செயாருடன் வந்து காத்திருக்கிறார் ஒரு பெண். எங்களைப் பின்னால் வரும்படி கூறிவிட்டு வேகமாகக் கணவரை அழைத்துக்கொண்டு சென்று ஒரு பெரிய அறையினுள் காத்திருக்கும்படி விடுகின்றார். 

 

போனை சாச் செய்யும் வசதியும் இருக்க முகநூல், யூரியூப் என்று நேரம் போவது தெரியாமல் போகிறது. இரவிரவாக சரியாகத் தூங்காததில் கணவர் தலைக்கு ruk சாக்கை வைத்துக்கொண்டு அந்த அகலமான பெஞ்சில் தூக்கவாரம்பிக்க நான் வெளியே சென்றுவிட்டு வருகிறேன் என்று மகள் கிளம்ப நானும் தூங்கினால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். பவுன் நகைகளும் காசுகளும் என் கைப்பையுள் இருக்க எப்படி நான் நின்மதியாய் தூங்க முடியும்?? எனவே மகள் வருமட்டும் முகநூலில் பொழுதைப் போக்க உணவுகள் சிலவற்றுடன் மகள் வருகிறாள். இங்கு சரியான விலை எல்லாம் என்றபடி எனக்கு உணவுப் பொதியைத் தந்துவிட்டுத் தகப்பனை எழுப்புகிறாள். நான் சென்று பக்கத்தில் இருந்த மெசினில் கோப்பி எடுத்துக்கொண்டு வந்து குடித்தபடி உண்கிறேன். 

 

ஐயோ அந்த போனையும் நான் என் hand லக்கேஜ்ஜின் முன் பொக்கற்றில் வைத்துவிட்டேனே. யாரும் எடுத்தால் 800 பவுண்ஸ் எனக்கு நட்டம் என்கிறார் மனிசன். தூங்கி எழுந்ததில் ஏற்பட்ட குழப்பமோ என்று நான் எண்ணியபடி போனைக் கையில வச்சுக்கொண்டு என்னப்பா விசர்க்கதை. 2 வரிசம் பாவிச்ச போனுக்கு ஆரும் உவ்வளவு காசைத் தருவினமே என்கிறேன். தன்ர தம்பியாருக்கு என்னோட வேலைசெய்யிற பிள்ளை ஒரு போன் தந்தது. அது புதுபோனப்பா. அதோட றிசீற்றும் அதுக்குள்ள இருந்தது. அதுகும் நான் உள்ளுக்கு வைக்காமல் வெளிப் பொக்கற்றுக்குள்ள வைச்சிட்டன். அதுகும் பொம்பேயில என்ன நடக்குமோ தெரியேல்லை. என்ன காலபலனோ என மீண்டும் மீண்டும் புலம்ப ஆரம்பிக்க, உங்களுக்கு நல்லா வேணும். எனக்கு ஒரு வார்த்தை கூட இதுபற்றிச் சொல்லாமல் என்ன கள்ளத்தனம் என்கிறேன். எல்லாத்தையுமே உனக்குக் கட்டாயம் சொல்லவேணுமோ? நீ மட்டும் எல்லாம் எனக்குச் சொல்லிப்போட்டோ செய்யிறாய் என்றவுடன் வாயை மூடிக் கொள்கிறேன். 

 

ஒருவாறு இரண்டு மணிநேரம் போய்விட்டது. இன்னும் ஒருமணிநேரம் கடத்திவிட்டால் போதும். முகநூலில் மேய்ந்ததில் எனது போனில் சாச் 10% வீதம்தான் இருக்கு எனக் காட்ட சரி இதை சாச்சில் போட்டிட்டு மற்ற போனை எடுத்துப் பாவிப்பம் என எண்ணியபடி சாச் செய்யப் போடுகிறேன். மற்ற போன் என்றவுடன் ஏதோ புதிது என்று எண்ணிவிட வேண்டாம். அது இரண்டு  ஆண்டுகளுக்கு முன்புவரை பயன்படுத்திய ஐபோன். அதில் லைக்கா சிம் போட்டு அவசரத்துக்கு இலங்கை, இந்தியா என்று கதைப்பது. தற்போது இலங்கை சென்றால் அங்கத்தே சிம் போட்டுப் பாவிப்பதற்காகக் கொண்டு செல்கிறேன். கைப்பையுள் கைவிட்டு போனைத் தேடுகிறேன் அகப்படவில்லை. அப்போதுதான் நானும் அந்த போனையும் ஐபாட்டையும்  என் hand luggage இல் வைத்தது நினைவில் வர நெஞ்சு பாதைக்கிறது. ஐயோ கடவுளே முருகா என் போனையும் ஐபாட்டையும்  யாரும் எடுக்காமல் நீதான் காப்பாற்றிக் கொண்டுவந்து என்னிடம் சேர்க்கவேண்டும் என்று மனதுள்ளே சொல்லிக்கொள்கிறேன். என் கணவர் வாய்விட்டு பெரிதாகச் சிரிக்க என் மகளும் சேர்ந்து சிரிக்கிறாள். ஏன் இரண்டு பேரும் உப்பிடிச் சிரிக்கிறியள் என்று எரிச்சலுடன் கேட்கிறேன்.  

 

உங்கள் போனையும் நீங்கள் hand luggage இல் வச்சிட்டுத்தான் அப்பாவைத் திட்டினீங்களா என்கிறாள். அப்பதான் நான் மனதுள்ளே சொல்வதாய் எண்ணி வாய்விட்டுச் சொல்லிவிட்டேன் என்பது புரிய விட்டுக்கொடுக்காமல் என்னுடையது பழைய போன். துலைந்தாலும் 800 பவுண்டஸ் நட்டம் இல்லை என்கிறேன். கடவுளே கடவுளே அம்மாவின் போன் துலைந்தாலும் பறவாயில்லை. அப்பாவின் போன்மட்டும் வந்து சேரவேண்டும் என்கிறாள் மகள். என்  போன் துலையாது  என்று எனக்கு நம்பிக்கை இருக்கு என்று மகளுக்குக் கூறினாலும் மனம் முழுவதும் தவிப்பாகவே இருக்க வேறுவழியின்றி ஒரு பக்கமாகச் சரிந்து அந்த பெஞ்சில் கண்களை மூடியபடி படுக்கிறேன். அம்மா எமக்கு நேரமாகிறது. எழும்பி ரொய்லெட் போவதானால் போய் தலையையும் இழுத்துக்கொண்டு வாருங்கள். நான் தயாராகிவிட்டேன். அப்பாவும் ரெடி என்கிறாள். 

 

மீண்டும் விமானதில் ஏறி வழமையாகச் செய்வதைச் செய்து இரண்டு திரைப்படங்களும் பார்த்து முடிய  பொம்பேயில் தரையிறங்குகிறது விமானம். நான் அன்றுதான் முதன்முதல் அந்த விமானநிலையத்துக்கு வருகிறேன். நாம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் இலங்கை போகும் விமானத்துக்கு மாறவேண்டும். அங்கும் ஒருவர வந்து கணவரை ஏற்றிக்கொண்டு செல்வதற்காகக் சக்கர நாற்காலியுடன் காத்திருக்கிறார். அவரே எம்மைக் கூட்டிக்கொண்டு செல்ல நின்மதியாகச் செல்கிறோம். விமானம் மாறுபவர்களுக்கு பெரிதாக இடையில் எந்தச் சோதனையும் இருப்பதில்லை. ஆனால் குடிவரவுத் திணைக்களத்தில் எமது கடவுச் சீட்டைப் பாத்து ஏறப்போகும் விமானத்துக்குரிய போர்டிங்பாஸ் தருவார்கள். அதைப் பெற்றுக்கொண்டு போகும்போது எமது பைகளை, நாம் கொண்டு செல்லும் எல்லாவற்றையும் செக் பண்ணவேண்டும் என்கின்றனர். 

சரி என்று பெல்ட் உட்பட ஆனைத்தையும் ஸ்கான் செய்யும் பெல்ட் இல் வைத்துவிட்டு அந்தப் பக்கம் சென்றால் எல்லாவற்றையுமே திறவுங்கள் பார்க்கவேண்டும் என்றுவிட்டு ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்க்க எனக்கு எரிச்சல் வருகிறது.  மற்றவர்கள் சிலரை செக் பண்ணாமலே அனுப்புகின்றனர். எழியவங்கள். எங்களை மட்டும் வேணும் எண்டு நிப்பாடி வச்சிருக்கிறாங்கள் என்கிறேன். வாயை மூடிக்கொண்டு நில்  அவங்களுக்கும்  தமிழ் தெரியலாம் என்று கணவர் சொல்ல நான் அமைதியாகிறேன். எமது பெரிய சூட்கேஸ்களை யாரும் திறக்காமல் இருக்க பாதுகாப்புக்காக பொலித்தீனால் சுற்றியே போட்டோம். மிகுதி பொலித்தீனை  இலங்கையிலிருந்து வரும்போது பயன்படுத்துவதற்காக கணவரின் முதுகுப் பையில் வைத்திருந்தோம். அதைக் கொண்டுபோகக் கூடாது என்று எடுத்துவிட்டனர். அதன் விலை £30 பயன்படுத்தியதுபோக மிகுதி £20 வரும். 

 

:கணனியை எதற்கு கொண்டு செல்கிறாய் ?

 

:அது என் கணனி 

 

:மடிக்கணனி தானே கொண்டு செல்வார்கள்? 

 

:அது அவர்கள் பிரச்சனை

 

:இத்தனை பாரமாக இருக்கிறதே 

 

:அதனால் உனக்கு ஏதும் பிரச்சனையா ?

 

:நோ நோ நோ என்று சிரித்து மழுப்புகிறான். 

 

அம்மா நீங்கள் இங்காலே வாருங்கள். நான் பார்க்கிறேன் என்றுவிட்டு மகள் போய் நிற்க அதன்பின் அவன் எதுவும் பேசவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஒரு மாதிரி வீட்டுக்காற அண்ணாட்ட வாங்கி கட்டத் தொடங்கிட்டாவே...🤭

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப யார் யாருடைய போன் மிஸ்ஸிங் அதை முதல்ல சொல்லுங்கோ.......தலை வெடிக்குது.......!   😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@மெசொபொத்தேமியா சுமேரியர்

ஆர் உந்த சரவணார்? :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, யாயினி said:

ஆகா ஒரு மாதிரி வீட்டுக்காற அண்ணாட்ட வாங்கி கட்டத் தொடங்கிட்டாவே...🤭

நல்ல சந்தோஷமாக்கும்.

11 hours ago, suvy said:

இப்ப யார் யாருடைய போன் மிஸ்ஸிங் அதை முதல்ல சொல்லுங்கோ.......தலை வெடிக்குது.......!   😂

ஒருதற்றையும் துலையேல்லை அண்ணா. 

9 hours ago, குமாரசாமி said:

@மெசொபொத்தேமியா சுமேரியர்

ஆர் உந்த சரவணார்? :cool:

ஒரு பழைய யாழ் உறவுதான் இந்தப் பெயரில் வருகுது எண்டு உங்களுக்கும் விளங்கித்தானே இருக்கும் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்ல சந்தோஷமாக்கும்.

 

எங்களை எல்லாம் வாசகர்களாக வைத்திருந்தால் இப்படித் தான் அடிக்கடி வந்து காமடி பண்ணுவம்..கண்டு கொள்ளாதீங்க...✍️🤭

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2023 at 00:35, புங்கையூரன் said:

அனுபவங்கள் தொடரட்டும், சுமே...!

இந்தப் பக்கம் வந்திருந்தால், எங்களிடமும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே..1

வேணாம் சொல்லிப்போட்டன். 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2023 at 13:11, suvy said:

இப்ப யார் யாருடைய போன் மிஸ்ஸிங் அதை முதல்ல சொல்லுங்கோ.......தலை வெடிக்குது.......!   😂

அக்கா நீங்கள் நல்லா கதை சொல்கிறீர்கள், காக்க வைக்ககாமல் தொடர்ந்தால் சுவியண்ணையின் தலை வெடிக்காது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நந்தன் said:

வேணாம் சொல்லிப்போட்டன். 

உங்களுக்குப் பொறாமை கண்டியளோ 😂

5 minutes ago, ஏராளன் said:

அக்கா நீங்கள் நல்லா கதை சொல்கிறீர்கள், காக்க வைக்ககாமல் தொடர்ந்தால் சுவியண்ணையின் தலை வெடிக்காது!

காக்கவைக்க எனக்கு என்ன ஆசையா??? கணனியில குந்த எனக்கும் நேரம் வரவேணும் எல்லோ ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்கு ,

 

 

கிட்டத்தட்ட முக்கால் மணிநேரமாகிவிட்டது நாம் இறங்கி. மீண்டும் எல்லாப் பொருட்களையும் பைகளில் வைத்து  எடுத்துக்கொண்டு செல்லத் தயாராக, கணவனைத் தள்ளுபவர் சர்க்கர நாற்காலியைத் தள்ள ஆரம்பிக்க, நாமும் பைகளைத் தோள்களிலும் கைகளிலும் காவியபடி நடக்க, கணவரை அவன் சிறிது வேகமாகத் தள்ளிக்கொண்டு செல்வதாகப் படுகிறது. நானும் ஓட்டமும் நடையுமாகச் செல்லத் தொடங்க “அம்மா மெதுவாகப் போங்கோ. அவர் வேகமாகப் போய் எமக்காகப் பார்த்துக்கொண்டு நிக்கட்டும்” என்கிறாள். எனக்கு மனம் கேட்கவில்லை. புதிய விமான நிலையம் வேறு. எதுக்கும் கொஞ்சம் வேகமாக நடப்பமென்று சொல்லி நடக்க ஒரு Lift இற்குள் இருந்து இங்க வாங்கோ என்ற கணவரின் அழைப்புக் கேட்க அதை நோக்கிச் செல்கிறோம்.

 அதற்குள் ஏறியவுடன் “இவன் ஐந்து டொலர் தரும்படி கேட்கிறான்” என்கிறார் மனிசன். “அவனுக்கு எதற்கு ஐந்து டொலர் ? அதுகும் அவனுக்கு எதற்குக் கொடுக்கவேண்டும். அப்பிடி அவன் கேட்கிறதே பிழை” என்கிறேன். அதுதான் விரைவாகத் தள்ளிக்கொண்டு வந்தவரோ என்றபடி அவனை ஒரு பார்வை பார்க்கிறேன். "ஒண்டும் குடுக்கத் தேவையில்லை அப்பா. அது அவரின் தொழில்" என்கிறாள் மகள். அதற்குள் லிப்ட் கதவு திறக்க, கணவரைத் தள்ளியபடியே எனக்குக் காசு எதுவும் வேண்டாம் என்கிறான் அவன். 

 

அவனுக்குத் தமிழில் நாம் கதைத்தது புரிந்துவிட்டதோ என்னும் ஐயம் எழுகிறது. நானும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறோம். நாம் எமது விமானத்துக்குரிய  இடத்தை அடைந்துவிட்டோம். கணவர் எழுந்து அமர்ந்துகொள்ள நானும் மகளும் அருகில் அமர்கிறோம். அழகான ஏயாபோர்ட். ஒருக்கால் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோமா என்று மகளைக் கேட்கிறேன். நானும் வரட்டோ என்கிறார் கணவர். இவ்வளவையும் காவிக்கொண்டு போக ஏலாது. நாங்கள் வந்து விடுறம். அதன்பின்  நீங்கள் போங்கோ என்கிறேன்.  திடுமென என் போடிங் பாசைக் காணவில்லை என்கிறாள் மகள். எங்கேயாவது மாறி வைத்திருப்பாய் பாரென்றுவிட்டு எமது பைகள் உட்பட எல்லா இடமும் தேடியும் அதைக் காணவில்லை. 

அவர்கள் செக் பண்ணிய இடத்தில் தான்  தவறியிருக்கும். நான் பார்த்துவிட்டு வருகிறேன் என்றுவிட்டு மகள் செல்ல எனக்குப் பதட்டமாகிறது. மகள் போய் அரைமணி நேரத்துக்கு மேலாகியும் வராததால் எனக்குப் பதட்டம் அதிகரிக்க, நான் கொஞ்சத் தூரம் சென்று பார்க்கிறேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவள் இல்லை. போன் செய்து பார்க்க அதுவும் நெட்வேக் பிரச்சனைபோல. போன் வேலை செய்யவில்லை. மாறி எங்காவது சென்றுவிட்டாளோ அல்லது வேறு என்னவோ என் மனம் போன போக்கில் என் கற்பனையும் செல்கிறது. 

 

நீங்கள் இருங்கோ. நான் போய் தேடிக்கொண்டுவருக்கிறேன் என்று கூற, "பிறகு நீ துலைஞ்சு நாங்கள் தேட ஏலாது. அவள் வந்திடுவாள். நீ உதிலை இரு" என்கிறார். நான் வந்து அவருக்குப் பக்கத்து இருக்கையில் இருந்தாலும் எனக்கு இருப்புக் கொள்ளுதில்லை. மறுபடியும் எழுந்து அங்கும் இங்கும் நடந்தபடி வழிபார்த்து நிற்கிறேன். எமது விமானத்தில் ஏறுவதற்கு அரை மணி நேரம் இருக்கிறது. எல்லோரும் தயாராகுங்கள்  என விமானச் சேவையினர் ஒலிபரப்புச் செய்கின்றனர்.  

 

எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. விடுவிடுவென அந்தக் gate இக்கு அருகில் இருக்கும் கவுண்டருக்குச் சென்று மகளின் பாஸ்போட்டைக் கொடுத்து விபரத்தைக் கூறி ஒருமுறை அவளின் பெயரைக் கூறி உடனே வருமாறு அழைக்கும்படி கேட்கிறேன். அவரோ உடனே இன்னொரு போடிங் பாசைத் தயார் செய்துவிட்டு மகளின் பெயரைக் கூறி வரும்படி அழைக்கிறார். நான் போடிங்பாசையும் பாஸ்போட்டையும் வாங்கிக்கொண்டு திரும்புகிறேன். மகள் தூரத்தில் வருவது தெரிகிறது. என்னருகில் வந்தவுடன் “நீங்கள் தான் சொன்னீர்களா என்னைக் காணவில்லை என்று. நான் சின்னப் பிள்ளையா துலைய” என்கிறாள். போய் இவ்வளவு நேரம். எனக்குப் பயம் வரும் தானே என்று கூறியபடி பாஸ்போட்டையும்  போர்டிங் பாசையும் நீட்டுகிறேன். என்னுடையதை அங்கு எங்குமே காணவில்லை. அதனால் அங்கு கதைத்து நானும் எடுத்துக்கொண்டு தான் வந்தேன் என்றுகூற நின்மதிப் பெருமூச்சு விட்டபடி கணவர் இருக்குமிடம் செல்கிறோம். விமான நிலையத்தைச் சுற்றிப்பார்த்து ஒரு படம் கூட எடுக்கவில்லையே என்று கவலை ஏற்பட்டாலும் சரி திரும்பவும் இந்த வழியால் தானே வரவேண்டும். அப்போது வடிவாகப் படம் எடுத்துக்கொள்வோம் என மனதைத் தேற்றிக்கொள்கிறேன். அடுத்த மூன்று  மணி நேரத்தில் கட்டுநாயக்காவில் விமானம் தரையிறங்குகிறது.   

 

நான் 2019 இல் என் நூல் வெளியீட்டுக்காகச் சென்றிருந்தபடியால் பெரிதாக எனக்குப் பரபரப்பு ஏற்படவில்லை. ஆனாலும் படபடப்பு. போன் மற்றும் ஐபாட் என் சூட்கேசில் இருக்கிறதா ????இல்லையா ??? என்னும் படபடப்பு. குடிவரவுத் திணைக்களத்தில் எந்தக் கெடுபிடியும் இல்லை. நான் கணவர் பிள்ளைகளைக் கவனிக்காது என் கைப்பையையும் கொண்டு விரைவாக பயணப் பொதிகள் வரும் இடத்தை அடைகிறேன். அவை இன்னும் வர ஆரம்பிக்கவில்லை. என்ன இன்னும் சூட்கேசைக் காணவில்லை. என்ன செய்யிறாங்கள் என்று கணவனைப் பார்த்துச் சொல்கிறேன். எப்படியும் உங்கள் போன் கிடைக்கப்போவதில்லை அம்மா. அது எப்ப வந்தால் என்ன என எரிச்சலூட்டுகிறாள் மகள். 

கடைக்குட்டி மூன்று வயதில் வந்தபின் இப்போதுதான் வருவதனால் அங்கும் இங்கும் புதினம் பார்த்தபடி இருக்கிறாள். ஒருவாறு பொதிகள் வர ஆரம்பிக்க எனது பொதி பத்தாவதாய் வர உடனே எடுத்து சிப்பைத் திறந்து பார்க்கிறேன். என்  போனும் ஐபாடும் இருக்க மனதில் பெரும் நிம்மதி ஏற்படுகிறது. 


 

  • கருத்துக்கள உறவுகள்

சுமேயின் மைண்ட் வொய்ஸ்:

Vadivelu Tamil GIFs | Tenor

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா சப்பென்டு போட்டுது.😃

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2023 at 12:18, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும் கடன் கேட்பதில்லை என்றும் செலவுகளை சமமாகப் பிரித்துக்கொள்ளவேண்டும்

அத்தாரிடம் ஆட்டையை போட்டது எவ்வளவுங்கோ?

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் கதை எழுத சுவியண்ணாட்ட வகுப்பு எடுக்க வேணும்..🤭.நாம்.😄👌

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.