Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

On 11/4/2023 at 12:07, suvy said:

சுமேயின் மைண்ட் வொய்ஸ்:

Vadivelu Tamil GIFs | Tenor

இது உங்கள் மைண்ட் வொய்ஸ் போலயல்லோ இருக்கு

On 11/4/2023 at 17:05, சுவைப்பிரியன் said:

ச்சா சப்பென்டு போட்டுது.😃

நான்என்ன கதையா எழுதிறன். 😂

On 11/4/2023 at 17:44, ஈழப்பிரியன் said:

அத்தாரிடம் ஆட்டையை போட்டது எவ்வளவுங்கோ?

உது எல்லாம் கேட்கப்படாது.

21 hours ago, யாயினி said:

எண்டாலும் கதை எழுத சுவியண்ணாட்ட வகுப்பு எடுக்க வேணும்..🤭.நாம்.😄👌

அதெண்டா உண்மைதான்

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • Replies 378
  • Views 31.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    இரண்டு   என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும்

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பன்னிரண்டு    முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும்

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பத்தொன்பது    எனது முகநூல் மெசெஞ்சரில் நீங்கள் இன்னும் ஊரில் தான் நிற்கிறீர்களா என்ற செய்தி வந்திருந்தது. பார்த்தால் சகாரா. தானும் அங்கு வருவதாக கூறியிருந்தாலும் வேலைகள் தொடர்ந்து காணியில் ந

  • கருத்துக்கள உறவுகள்

கையில் கொண்டு செல்ல நாங்கள் நினைத்திருக்கும் சிறிய luggage ஐ நான் கொடுப்பதில்லை காரணம் அதில் தான் முக்கியமான பொருட்களை வைத்திருபப்து.  சும்மா கைய விசுக்கி கொண்டு சிறிய பாக் பேக் உடன் போக விருப்பமென்றாலும், எது எங்கே வைத்திருக்கிறோம் என்றே தெரியாது என்பதால் கொடுக்க விரும்புவதில்லை.
உங்களின் பதிவின் பின்னர், அதையும் செக்கின் பண்ண தயாராக செல்ல வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

பம்பாய் கொழும்பு  இல்  உங்கள் போன் ஐபாட் தப்பி வந்தது பெரிய விடையம் தான்

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2023 at 12:57, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கடைக்குட்டி

மொத்தமாக எத்தனை......🤣 கடுப்பாகமால். பதில் கிடைக்கும் என நினைக்கிறேன்......சும்மா ஒரு பொது அறிவுக்கு  தான் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2023 at 16:33, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கணனியை எதற்கு கொண்டு செல்கிறாய் ?

 

:அது என் கணனி 

 

:மடிக்கணனி தானே கொண்டு செல்வார்கள்? 

 

:அது அவர்கள் பிரச்சனை

 

:இத்தனை பாரமாக இருக்கிறதே 

 

:அதனால் உனக்கு ஏதும் பிரச்சனையா ?

 

:நோ நோ நோ என்று சிரித்து மழுப்புகிறான். 

யாருட்டை விடுகிறீர்கள் உங்கள் விளையாட்டை. சுமேவா கொக்காவா!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sabesh said:

கையில் கொண்டு செல்ல நாங்கள் நினைத்திருக்கும் சிறிய luggage ஐ நான் கொடுப்பதில்லை காரணம் அதில் தான் முக்கியமான பொருட்களை வைத்திருபப்து.  சும்மா கைய விசுக்கி கொண்டு சிறிய பாக் பேக் உடன் போக விருப்பமென்றாலும், எது எங்கே வைத்திருக்கிறோம் என்றே தெரியாது என்பதால் கொடுக்க விரும்புவதில்லை.
உங்களின் பதிவின் பின்னர், அதையும் செக்கின் பண்ண தயாராக செல்ல வேண்டும்

அதையும் கொடுத்துவிட்டால் நின்மதியாய் செல்லலாம்

4 hours ago, Sabesh said:

பம்பாய் கொழும்பு  இல்  உங்கள் போன் ஐபாட் தப்பி வந்தது பெரிய விடையம் தான்

அன்று காலை நான்கு மணி மட்டில் தான் விமானம் தரையிறங்கியது. மழை வேறு தூறிக்கொண்டு இருந்தது. அதனால்த்தான் தப்பியிருக்கும் என நினைக்கிறேன். இரண்டு மணிநேரம் என்பதானாலும் இருக்கலாம்.

3 hours ago, Kandiah57 said:

மொத்தமாக எத்தனை......🤣 கடுப்பாகமால். பதில் கிடைக்கும் என நினைக்கிறேன்......சும்மா ஒரு பொது அறிவுக்கு  தான் 🤣

மொத்தம் மூன்று 😀

2 hours ago, nunavilan said:

யாருட்டை விடுகிறீர்கள் உங்கள் விளையாட்டை. சுமேவா கொக்காவா!!!

😂🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nunavilan said:

யாருட்டை விடுகிறீர்கள் உங்கள் விளையாட்டை. சுமேவா கொக்காவா!!!

இங்கிலிசு ரி ராஜேந்தர் ஸ்ரைல்ல சும்மா தணல் பறந்திருக்கும் எண்டுறியள்?? :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இங்கிலிசு ரி ராஜேந்தர் ஸ்ரைல்ல சும்மா தணல் பறந்திருக்கும் எண்டுறியள்?? :rolling_on_the_floor_laughing:

எனக்கு அந்த மோட்டர் சைக்கிள் கதை மட்டும் சஸ்பென்ஸ் தாங்காது இருக்கிறன்சாமியார் கொஞ்சம் சொல்லிவிடுங்க அத்தரிடம் அவர் ரகசிமாய் படத்தை போடட்டும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இங்கிலிசு ரி ராஜேந்தர் ஸ்ரைல்ல சும்மா தணல் பறந்திருக்கும் எண்டுறியள்?? :rolling_on_the_floor_laughing:

சீச்சீ நான் அவனைத் திட்டவில்லையே. கதைச்சனான்  🤣

8 hours ago, பெருமாள் said:

எனக்கு அந்த மோட்டர் சைக்கிள் கதை மட்டும் சஸ்பென்ஸ் தாங்காது இருக்கிறன்சாமியார் கொஞ்சம் சொல்லிவிடுங்க அத்தரிடம் அவர் ரகசிமாய் படத்தை போடட்டும் .

வேற வழியில்லை. நான் படம் போடுமட்டும் தலை வெடிக்காமல் பார்த்து கொள்ளுங்கோ 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து

 

 

கணவர் சொல்லிவைத்த வான் வந்துவிட்டதா என்று பார்த்துக்கொண்டிருக்க நானும் மகளும் இரு வண்டில்களில் பொதிகளை வைத்தபடி இருக்கிறோம். செப்டெம்பர் மாதமாகையால் பெரிதாக வெய்யிலின் உக்கிரம் இருக்கவில்லை. ஆனாலும் ஒருவித புழுக்கம் வந்து அப்பிக்கொள்கிறது. பலரும் வந்து எங்கே மடம் போகணும். எங்கள் வண்டியில் வாருங்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்க இவ்வளவு தூரம் வருகிறோம். வாகனம் ஒழுங்கு செய்யாமலா வருவோம் என்னும் எரிச்சல் எழுகிறது. சிறிது நேரத்தில் எமக்குரிய வான் வர ஏறி அமர்ந்தபின் தான் அப்பாடா என்று இருக்கிறது. 

 

கணவர் முன்னால் இருந்து சாரதியுடன் கதைத்தபடி வருகிறார். நானும் மகளும் இரு மருங்கும் புதினம் பார்த்தபடி வருகிறோம். அப்படியே தூங்கியும் விட்டோம். நிவேதா நிவேதா என்று அன்பொழுக கணவரின் அழைப்பு மெதுவாகக் கேட்க கண்விழித்தால் வாகனம் ஒரு உணவகத்துக்கு முன்னால் நிற்கிறது. இது நல்ல உணவகமாம். உனக்குத்தான் அடிக்கடி பசிக்குமே. இங்கேயே சாப்பிட்டிட்டுப் போவம் என்கிறார். அவர் சொன்னவுடன் எனக்கும் பசிப்பது போல இருக்க சரி சாப்பிடுவம் என்றுவிட்டுக் கீழே இறங்குகிறேன்.  இது எந்த இடமென்று சாரதியிடம் கேட்க மாதம்பை முருகன் கோவில் இது என்கிறார். கோயிலின் கோபுரத்தின் முன் பெரிய பெரிய தலைகளின் உருவங்கள் காணப்படுகின்றன. 

 

ஓரளவு பெரிய உணவகம் தான். இருந்தாலும் உணவு எப்படி இருக்குமோ என்னும் யோசனையும் எழுகிறது. சாரதியும் கணவரும் இடியப்பம்  சொல்ல நானும் மகளும் தோசையும் உழுந்து வடையும் ஓடர் செய்ய எல்லாருக்கும் உழுந்துவடை கொண்டுவாங்கோ என்கிறார் மனிசன். சாப்பிட முதல் டீ குடிப்பம் என்று அதற்கும் சொல்கிறார். ஒரு ஐந்து நிமிடங்களில் மசாலா போட்ட தேநீர் வர, இத்தனை விரைவாக வந்துவிட்டதே சூடாய் இருக்கோ என நான் வாயில் வைத்துப் பார்க்க கடும் சூடு. வாயில் தேனீர் சுட்டுவிட, என்ன அவதி கொஞ்சம் ஆறட்டுமன் என்றுவிட்டு, தான் எடுத்துக் குடிக்கிறார். சிறிது நேரத்தில் வடைகள் வருகின்றன. நல்ல பெரிதாக பார்ப்பதற்கு நன்றாக இருக்க எடுத்து உண்கிறேன். அந்த நேரப் பசிக்கோ  என்னவோ மிகவும் சுவையாக இருக்கிறது. தோசையும் யாழ்ப்பாணச் சம்பலும் வரும் என்று பார்க்க சட்னியும் சாம்பாரும் வருகிறது. இடியப்பத்துக்கு அந்தச் சம்பல் வர எனக்கும் கேட்போமா என ஒரு செக்கன் எண்ணிவிட்டு இதுவும் சுவையாக இருக்குத் தானே என்று எண்ணியபடி உண்கிறேன். 

 

அப்போதுதான் பார்க்கிறேன். சில்வர் தட்டின் மேல் ஒரு மெல்லிய பொலிதீன் போடப்பட்டு அதில் உணவு வைக்கப்பட்டிருக்கு. என்ன இவங்கள் ஏன் பொலிதீன் போட்டிருக்கிறார்கள். பார்க்க அரியண்டமாக இருக்கு என்று கூற, இங்கு எல்லாக் கடையிலும்  இப்ப இதுதான் என்கிறார் சாரதி. வாழையிலைக்குத் தட்டுபாடோ என்கிறார் மனிசன். கழுவிற பஞ்சிக்காண்டி இதுதான். ஆனால் வேளைக்கு உக்கிப்போயிடுமாம் என்கிறார். உண்டு முடிய கணவர் எனக்கு இன்னொரு தேநீர் குடிக்கவேணும். வேற யாருக்கும் வேணுமோ என்று கேட்க நான் எனக்கும் என்கிறேன். சாரதியும் மகளும் தமக்கு வேண்டாம் என்கின்றனர். நான் வானுக்குள் இருக்கிறேன். வாங்கோ என்றுவிட்டு சாரதி செல்ல எம் தேநீர் வருகிறது. நல்ல சாயமும் சீனியும் போட்டு நல்ல சுவையாக இருக்கு. வடை ஏதும் கட்டிக்கொண்டு போவமோ என்கிறேன் நான். இவ்வளவு சாப்பிட்டது பத்தாதே. இன்னும் நாலு மணித்தியாலத்தில வீட்டை போயிடலாம். தங்கச்சி சமைச்சு வச்சிட்டுப் பார்த்துக்கொண்டிருப்பாள். அதுக்கிடையில எங்காவது கடைகள் வரும்தானே என்கிறார். 

 

நாங்கள் சென்று அமர்ந்ததும் பிரயாணம் தொடங்குகிறது. பார்க்கும் இடம் எங்கும் சிற்றோடைகள், ஆறுகள். சிங்களப் பகுதி நல்ல செழிப்பானதுதான் என நான் எண்ணிக் கொள்கிறேன். ஒரு ஒருமணிநேரம் ஓடியதும் வீதியில் இளநீர் வித்துக்கொண்டிருப்பது தெரிய இளநீர் குடிப்பம் என்றவுடன் கணவர் சாரதியை நிறுத்தச் சொல்கிறார். சாரதி வேண்டாம் என்று மறுக்க குடியுங்கோ என்று அவரிடம் நீட்டுகிறார். கன காலத்தின் பின் இளநீர் சுவையாக இருக்கிறது. இங்க 50 ரூபா. யாழ்ப்பாணத்தில 100 ரூபா என்கிறார் சாரதி. வானுக்குள்ள இடம் இருக்குத் தானே. ஒரு குலையை இங்கேயே வாங்கிக் கொண்டு போவம் என்கிறேன். சரி என்று கணவர் கூற குலை வானுக்குள் ஏறுகிறது. 

 

சாரதி மிக நிதானமாக வாகனத்தை ஓட்டுகிறார். அப்பப்ப அங்கே நிக்கிறாங்கள். இங்கே நிக்கிறாங்கள் என்று போனில் கதைத்தபடி வர, யார் நிக்கிறாங்கள் என்று சொல்கிறீர்கள் என்று கேட்கிறேன். உவங்கள்தான் என்று அவர் கூற, போலீஸ் காரர் ஒருவர் கைகாட்டி எமது வானை நிறுத்துகிறார். சாரதி போலீசைக் கடந்து வந்து வானை நிப்பாட்டிவிட்டு நிற்கிறார். லைசென்சைப் பார்ப்பான்களோ என்று கணவர் கேட்க இன்சூரன்ஸ் இருக்கோ என்றும் பார்ப்பினம் என்றுவிட்டு தொடர்ந்து இறங்காமல் இருக்க, எல்லாம் இருக்குத்தானே? கெதியா இறங்கிப்போய் காட்டிப்போட்டு வாங்ககோவன் என்கிறார் மனிசன். அவர் தானே மறிச்சவர். அவரே வரட்டும் . நான் என்ன களவே எடுத்தனான் உவைக்குப் பயப்பட என்று சாரதி கூற எனக்கு சிறிது பயமாக இருக்க நான் கண்ணாடியில் பார்க்கிறேன் அந்தப் போலீஸ் எம்மை நோக்கி நடந்து வருவது தெரிகிறது. வரும்போதே யன்னலால் உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு சிங்களத்தில் ஏதோ கேட்க சாரதியும் தன் ஆவணங்களை எடுத்துக் காட்டிவிட்டு உள்ளே வைக்க நானும் எமது கடவுச் சீட்டுகளை வெளியே எடுக்கிறேன். எங்கிருந்து வருகிறீர்கள் என்று கணவரைப் பார்த்துக் கேட்க யூக்கே என்றுவிட்டு உடனேயே லண்டன் என்கிறார். அவன் பாஸ்போட்டைக் கேட்காமல் அப்பால் நகர நான் அவற்றை மீண்டும் கைப்பையுள் வைக்கிறேன். 

 

இன்னும் கொஞ்ச நேரத்தில் புத்தளம் வந்துவிடும் என்கிறார் சாரதி. அதற்குள் என்மகள் அதன்பின் அனுராடபுரவோ என்று கேட்க, என்னடா எனக்கே தெரியாது இவள் எப்படிச் சொல்கிறாள் என எண்ணியபடி அனுராதபுரமோ என்று அவளைத் திருப்பிக் கேட்க தன் போனைத் தூக்கிக் காட்ட அதில் இலங்கை மப் தெரிகிறது. நான் மீண்டும் கண்ணசந்துவிட்டேன். நல்ல தூக்கம். இம்முறை மகள் என்னை எழுப்புகிறாள்.  இது எந்த இடம் என்று கேட்க முறிகண்டி வந்திட்டுது, கும்பிட்டிடிட்டுப் போவம் என்று கணவர் கூற நான் இறங்குகிறேன்.  

 

கால்களையும் முகத்தையும்  கழுவிவிட்டு செருப்புகளைக் கழற்றி வைத்து விட்டு வெறும் காலில் நடக்க நிலம் பயங்கரச் சூடு. குறுணிக் கற்களும் குத்துகின்றன. ஏதோ சுற்றிக் கும்பிட்டுவிட்டு வந்தால் ஏதும் சாப்பிடுவோமா என்கிறார் கணவர். ஒரு கடைக்குள் சென்றால் இரண்டு மேசையும் வாங்குகளும்  போடப்பட்டிருக்கு. எனக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. ஆனாலும் தேநீருக்காக இருக்கிறேன்.  கணவர் ரோள்சும் வடையும் சொல்ல ஒரு தட்டில் உழுந்துவடை, கடலைவடை, சமோசா, றோள்ஸ் எல்லாம் கொண்டுவந்து வைக்க நாம் இவ்வளவும் கேட்கவில்லையே என்கிறேன். நீங்கள் சாப்பிடுவதற்கு மட்டும்தான் காசு எடுப்ம் என்றபடி வேலையாள் நகர்கிறார். 

 

நான் ஒரு றோள்ஸ் எடுத்து உண்கிறேன். சரியான எண்ணையாக இருக்கிறது. அரைவாசி கடித்தபடி கணவரிடம் கொடுக்கிறேன். மேற்கொண்டு எதுவும் உண்ணப் பிடிக்கவில்லை. தேநீரை மட்டும் அருந்திவிட்டு வெளியே வந்து மற்றக்  கடைகளை வேடிக்கை பார்க்கிறேன்.  எதற்கும் டாய்லெட் போவோம் என எண்ணியபடி பையை மகளிடம் கொடுத்துவிட்டுப் போய்  நின்றால் கட்டணம் 5 ரூபாய்கள் என்று கூறுகிறார் வாசலில் நிர்ப்பவர். மீண்டும் வந்து கணவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு போய் கொடுத்துவிட்டு உள்ளே சென்றால் மணம் தாங்க முடியவில்லை. யாழ்ப்பாணம் போகுமட்டும் அடக்கேலாது என்று மூக்கைப் பொத்திக்கொண்டு கடனை முடித்து வந்தாயிற்று. நானும் போட்டு வரட்டோ என்கிறாள் மகள். நீர் சமாளிப்பீரோ தெரியேல்லை. போய்ப் பாரும் என்கிறேன்.   

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகப் போகிறது கதை, தொடருங்கள்........!  👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

 

நான் ஒரு றோள்ஸ் எடுத்து உண்கிறேன். சரியான எண்ணையாக இருக்கிறது. அரைவாசி கடித்தபடி கணவரிடம் கொடுக்கிறேன். மேற்கொண்டு எதுவும் உண்ணப் பிடிக்கவில்லை. தேநீரை மட்டும் அருந்திவிட்டு வெளியே வந்து மற்றக்  கடைகளை வேடிக்கை பார்க்கிறேன்.  எதற்கும் டாய்லெட் போவோம் என எண்ணியபடி பையை மகளிடம் கொடுத்துவிட்டுப் போய்  நின்றால் கட்டணம் 5 ரூபாய்கள் என்று கூறுகிறார் வாசலில் நிர்ப்பவர். மீண்டும் வந்து கணவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு போய் கொடுத்துவிட்டு உள்ளே சென்றால் மணம் தாங்க முடியவில்லை. யாழ்ப்பாணம் போகுமட்டும் அடக்கேலாது என்று மூக்கைப் பொத்திக்கொண்டு கடனை முடித்து வந்தாயிற்று. நானும் போட்டு வரட்டோ என்கிறாள் மகள். நீர் சமாளிப்பீரோ தெரியேல்லை. போய்ப் பாரும் என்கிறேன்.   

 

முறிகண்டில மட்டும் பொதுக் கழிப்பறையை பாவிக்கக் கூடாது, காசும் வாங்கிற்று சரியான பராமரிப்புச் செய்வதும் இல்லை. எங்கட அம்மா ரொம்ப அவஸ்தைப்பட்டவ.

 வாகனச் சாரதிகளுக்குத் தெரியும் நல்ல உணவகங்களில் ஓரளவு சுகாதாரமான கழிப்பறைகள் இருக்கும், அங்கே நிறுத்தினால் இரண்டு நன்மைகள். ஒன்று தரமான உணவு மற்றது கழிப்பறை வசதி.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

முறிகண்டில மட்டும் பொதுக் கழிப்பறையை பாவிக்கக் கூடாது, காசும் வாங்கிற்று சரியான பராமரிப்புச் செய்வதும் இல்லை. எங்கட அம்மா ரொம்ப அவஸ்தைப்பட்டவ.

 வாகனச் சாரதிகளுக்குத் தெரியும் நல்ல உணவகங்களில் ஓரளவு சுகாதாரமான கழிப்பறைகள் இருக்கும், அங்கே நிறுத்தினால் இரண்டு நன்மைகள். ஒன்று தரமான உணவு மற்றது கழிப்பறை வசதி.

உண்மை தான் கட்டணம் அறவிடுகிறார்கள் ஆனால் துளியும் துப்பரவு இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எங்கிருந்து வருகிறீர்கள் என்று கணவரைப் பார்த்துக் கேட்க யூக்கே என்றுவிட்டு உடனேயே லண்டன் என்கிறார். அவன் பாஸ்போட்டைக் கேட்காமல் அப்பால் நகர நான் அவற்றை மீண்டும் கைப்பையுள் வைக்கிறேன்

யூகே எண்டவுடனை பொலிஸ்காரன் பயந்து போனான்? :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகப் போகிறது கதை, தொடருங்கள்........!  👍

இன்கிருக்கும்ட்டும் அதுகென்றே பயிற்சி எடுப்பது உண்டு 2௦௦9 பிறகு அதெல்லாம் கிடையாது .

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சீச்சீ நான் அவனைத் திட்டவில்லையே. கதைச்சனான்  🤣

வேற வழியில்லை. நான் படம் போடுமட்டும் தலை வெடிக்காமல் பார்த்து கொள்ளுங்கோ 😂

பறவா இல்ல படங்களைப் போடுங்கோ..இணையங்களில் உலாவினால் எல்லா கன்றாவியையும் சகிச்சுட்டுத் தானே போகனும்..என்ன மிஞ்சிப் போனா ஆறுமாதமா தைச்ச  சட்டைப்படம்.ஸ்கூட்டியில புழுதி பறக்க விட்டது வேற............✍️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

நன்றாகப் போகிறது கதை, தொடருங்கள்........!  👍

நன்றி அண்ணா

20 hours ago, ஏராளன் said:

முறிகண்டில மட்டும் பொதுக் கழிப்பறையை பாவிக்கக் கூடாது, காசும் வாங்கிற்று சரியான பராமரிப்புச் செய்வதும் இல்லை. எங்கட அம்மா ரொம்ப அவஸ்தைப்பட்டவ.

 வாகனச் சாரதிகளுக்குத் தெரியும் நல்ல உணவகங்களில் ஓரளவு சுகாதாரமான கழிப்பறைகள் இருக்கும், அங்கே நிறுத்தினால் இரண்டு நன்மைகள். ஒன்று தரமான உணவு மற்றது கழிப்பறை வசதி.

யாரும் அதுபற்றி ஒருவரிடமும் முறைப்பாடு செய்வதில்லை.

14 hours ago, Sabesh said:

உண்மை தான் கட்டணம் அறவிடுகிறார்கள் ஆனால் துளியும் துப்பரவு இல்லை

முன்பு சென்றபோது இடையில் கிளிநொச்சியில்  ஒரு இடம். இருவர் வெளியே இருக்கின்றனர். 100 ரூபாய் தரும்படி கேட்க எதுவும் கதைக்காமல் காசைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றால் வயிற்றைக் குமட்டிக்கொண்டுவர வெளியே வந்ததும் இவ்வளவு காசை வாங்கிக்கொண்டு இதில சும்மா இருக்கிறியள். தண்ணி அடித்துக் கழுவினால் என்ன என்று திட்டிவிட்டுத்தான் வந்தது.

7 hours ago, குமாரசாமி said:

யூகே எண்டவுடனை பொலிஸ்காரன் பயந்து போனான்? :beaming_face_with_smiling_eyes:

வெளிநாட்டுக் காரருடன் பெரிதாகப் பிரச்சனைப் படுவதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

நன்றாகப் போகிறது கதை, தொடருங்கள்........!  👍

இன்கிருக்கும்ட்டும் அதுகென்றே பயிற்சி எடுப்பது உண்டு 2௦௦9 பிறகு அதெல்லாம் கிடையாது .

எனக்குப் புரியும்படி கூறுங்கள்। என்ன பயிற்சி ???

6 hours ago, யாயினி said:

பறவா இல்ல படங்களைப் போடுங்கோ..இணையங்களில் உலாவினால் எல்லா கன்றாவியையும் சகிச்சுட்டுத் தானே போகனும்..என்ன மிஞ்சிப் போனா ஆறுமாதமா தைச்ச  சட்டைப்படம்.ஸ்கூட்டியில புழுதி பறக்க விட்டது வேற............✍️

நான் இம் முறை பெரிதாகப் படங்கள் எடுக்கவே இல்லை. நீங்கள் பார்த்த ஆம்புட்டும் தான் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குப் புரியும்படி கூறுங்கள்। என்ன பயிற்சி ???

கீழே உட்கார்ந்து விட்டு எதையும் பிடிக்காமல் கால்களின் பலத்தில் எழுந்து நிற்கணும் .

ஊர் போனால் தரையில் உட்கார்ந்து சாப்பிடவேணும் அல்லவா ?

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2023 at 10:37, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

இது உங்கள் மைண்ட் வொய்ஸ் போலயல்லோ இருக்கு

நான்என்ன கதையா எழுதிறன். 😂

 

இனி ஊர் போய் வாறவேன்ட இந்த லக்கேஜ் கதைகளை வாசிக்க கூடா என்று உறுதி எடுக்க வேண்டி இருக்கு.✍️திரும்ப திரும்ப பிளாஸ்பாக் தானே வருகிறது...🖐️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆறு

 

தகப்பனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு சென்றவள் சிறிது நேரத்தில் வருகிறாள். குந்தி இருக்க சரியான கஸ்டம் அம்மா. எல்லா இடமும் இப்பிடியான ரொய்லெட் தான் இருக்கா? பெரும்பாலும் இதுதான். ஆனால் கோட்டல்களில் வெஸ்டர்ன் டாய்லெட் தான். கூடுதலான வீடுகளிலும் இப்ப இருக்கு. ஆனால் சுத்தமாக  வச்சிருக்கினமோ தெரியாது என்கிறேன். ரொய்லெட் சரியில்லை எண்டால் நான் மாமி வீட்டை அல்லது அம்மம்மா வீட்டிலயோ நிக்கமாட்டான் என்கிறாள். என் கணவரின் தங்கை வீட்டில் புதிதாக எல்லாம் செய்திருப்பதனால் நீர் கோட்டலில் தங்கவேண்டி இராது என்கிறேன்.

 

மீண்டும் பிரயாணம் தொடர இருபக்கமும் பரந்த நிலங்கள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. முன்பு தலைகளற்று நின்ற பனை மரங்கள் ஒன்றையும் காணவில்லை. சிறிய பனைகள் ஆங்காங்கே தெரிகின்றன. 2003 இல் சென்றபோது எத்தனை பரபரப்பாக இருந்த வீதி இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாகனங்கள் தெரிகின்றன. கிளிநொச்சியை நெருங்க சிறிது வாகன நெரிசல் தெரிகிறது. கணவரின் ஊர் இணுவில் என்றாலும் அவரின் தந்தை கிளிநொச்சியில் வேலை பார்த்ததால் சிறு வயதுமுதல் இருபது வயதுவரை அங்கேயே இருந்தார். கிளிநொச்சியைப் பார்த்தவுடன் சிறு பிள்ளைபோல் “இதால போனால் நாங்கள் இருந்த வீட்டுக்குப் போகலாம், இதுதான் நான் படிச்ச பள்ளிக்கூடம்” என ஒவ்வொன்றையும் மகளுக்குக் காட்டி மகிழ்ந்தபடியே வந்தார். அவரின் குதூகலத்தைப் பார்த்து இதில கொஞ்ச நேரம் நிப்பாட்டட்டா அண்ணை என்றார் சாரதி. சீச்சீ நீங்கள்  தொடர்ந்து ஒடுங்கோ, பிறகு இங்க வருவம்தானே என்கிறார்.

 

மக்கள் தொகை குறைந்து விட்டதையும் வாகனங்கள் அதிகரித்து விட்டதையும் மின்வெட்டு, பெற்றோல் தட்டுப்பாடு, பொருட்களின் விலை அதிகரிப்பு, தட்டுப்பாடு போன்றவவை பற்றியும் கணவரும் சாரதியும் பேசியபடி வருகின்றனர். ஆனையிறவைக் கடந்தபின் பாழடைந்த நிலையில் இரசாயானத் தொழிற்சாலை தெரிய அதன் நிலை பார்க்க மனதைப் பிசைகிறது. பழைய நினைவுகளும் எழுகின்றன. 80 களில் எமது பாடசாலையில் எம்மை அங்கு தொழிற்சாலையைப் பார்ப்பதற்காகக் கூட்டிவந்தனர். சுற்றிப் பார்த்தபின் சிறிது நேரம் எம் கடன்களைத் தீர்க்க வேலை செய்வோர் தங்கியிருந்த தங்குமிடத்தில் விட்டனர். ரொய்லெட் போய்விட்டு நாம் உடனே வெளியே வரவில்லை. அங்கிருந்த சீப்பை எடுத்து காற்றுக்குக் கலைந்து போயிருந்த தலைகளை  இழுத்துச் சரிசெய்துகொண்டிருந்தபோது எங்கள் மிஸ் வந்துவிட்டார். "ஆற்றையன் பொருளை எப்படி எடுப்பீர்கள்? அது முதல் அன் கையீனிக். எல்லாரும் முதல்ல வெளியே வாங்கோ" என  ஏசியது நினைவில் வந்து போக ஏதோவொரு உணர்வு என்னை ஆட்கொண்டது. 

இருமருங்கும் நிலங்கள் கேட்பாரற்றுக் கிடந்தன. சில வயல்கள் உழுதபடியும் சிலது அப்படியேயும் இருந்தது. வயல் விதைக்க இன்னும் நாளிருக்கு என்றார் மனிசன். மண்ணெண்ணைத் தட்டுப்பாட்டினால் பலர் இப்ப தோட்டங்களையே செய்யாமல் கை விட்டுட்டினம் என்கிறார் சாரதி. யாழ்ப்பாணத்தை நெருங்க நெருங்க கட்டட நெரிசலும் அதிகரிக்க கிட்ட வந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. 

 

2003 இல் நான் என் குடும்பத்துடன் இலங்கை சென்றபோது என் பெற்றோரும் ஒரு சகோதரியும் இரு வாரங்கள் செல்ல அங்கு வர இருந்தபடியால் எனக்கு எந்தப் பிரசனையும் என்  சித்தியால் ஏற்படவில்லை. நானும் கணவரும் 2017 இல் சென்றபோது தன் வீட்டிலேயே முதலில் வந்து இறங்கவேண்டும்  என என் சித்தி ஒரே ஆர்ப்பாட்டம். என் கணவரின் தாய் இருந்தபடியால் என் அம்மா வீட்டுக்குத்தான் போகவேண்டும் எனக் கணவர் கண்டிப்புடன் சொன்னது மட்டுமன்றி அதுதானே நியாயமும் கூட என நானும் சம்மதித்துவிட என் மச்சாள் வீடிலேயே போய் இறங்கியாச்சு. இரண்டு நாட்களாய் சித்தி என்னுடன் கதைக்கவே இல்லை. நான் பிறந்து வளர்ந்த “நிவேதகிரி” என்ற பெயரைத் தாங்கி இன்றுவரை நிற்கும் வீடுதான் அது என்றாலும் கணவருடன் வரும்போது அவருடன் தானே நிற்பது முறை. இத்தனைக்கு இரு வீடுகளுக்கும் இடையில்  ஐந்து நிமிட நடை. 

 

அதன்பின்னர் 2019 இல் நான் தனியாக வந்தபோது என் மச்சாளிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டு சித்தி இருக்கும் எங்கள் வீட்டிலேயே தங்கினேன். அதை எண்ணிப்பார்த்துவவிட்டு, முதலில் என் சூட்கேஸ்களை என் சித்தி  வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு மிகுதியை உங்கள் தங்கை வீட்டில் இறக்கவேண்டும் என்கிறேன். கணவரும் சரி என்று கூற என் வீட்டின் முன் வான் நிற்கிறது. 

 

என் பொதிகளை எல்லாம் இறக்கியவுடன் நீங்கள் அங்கே போய் பொதிகளை இறக்கிவிட்டு வாங்கோ என்கிறேன். சாரதியிடம் நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் நில்லுங்கோ என்றுவிட்டு என் பொதிகளை மகளும் கணவரும் உள்ளே கொண்டுவர உள்ளே இருந்து சித்தி வருகிறா. அவவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.  எங்கே சித்தி இவற்றை வைக்கிறது என்று நான் கேட்க, முன்னால் உள்ள அறையைக் காட்டுகிறா. அதற்குள் பொதிகளை வைத்தவுடன் இதுமட்டும் தானோ என்கிறா. மூன்று பேர் எப்படி இந்த அறையில் தங்கமுடியும். அதனால் இவர்கள் இருவரும் தங்கை வீட்டில். நான் மட்டும் தான் இங்கே என்கிறேன். 

 

அதுவும் சரிதான் என்று கூற நாம் வெளியே வந்து அமர்கிறோம். இரு கதிரைகள் மட்டும் இருக்கின்றன. என்ன சித்தி. இரண்டு கதிரைகளை வாங்கிப் போடுவதற்கு என்ன என்கிறேன். முன்னர் நான் வந்தபோதும் இதே இரண்டு கதிரைகள் இருக்க நான்கு கதிரைகளை வாங்கிப் போட்டிருந்தேன். அவை எங்கே என்று கேட்க எண்ணிவிட்டு உடனே நிறுத்திவிட்டேன். ஏனெனில் உன் சித்தியிடன் காசு இல்லை என்று நீ வாங்கிப் போட்டானியோ என அப்பப்போ திட்டுவார் கணவர். அதனால் பின்னர் கேட்போம் என்று பேசாமல் இருந்துவிட்டேன். 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.....என்னமா யோசித்து சித்தியையும் சரிக்கட்டி புருஷனையும் சமாளித்து, சா......சொல்லி வேல இல்ல.....இதெல்லாம் பெண்களுடன் கூடவே பிறந்து வருகிறது போல...... தொடருங்கள்......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா கட்டுநாயக்காவில் இருந்து வரும்போது பரந்தனுக்குப் பிறகு தான் ஆனையிறவு வரும். 

தொடருங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2023 at 11:57, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒருவாறு பொதிகள் வர ஆரம்பிக்க எனது பொதி பத்தாவதாய் வர உடனே எடுத்து சிப்பைத் திறந்து பார்க்கிறேன். என்  போனும் ஐபாடும் இருக்க மனதில் பெரும் நிம்மதி ஏற்படுகிறது. 

அப்பாடா!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுமே. உங்கள் குறிப்பை தவிர அநேகமான உங்களை பற்றிய தகவல்களை  சேகரித்து விட்டோம். சும்மா...🙂

images-2.jpg

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.