Jump to content

மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதிய கடிதம்..

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதிய கடிதம்..

IMG-20230423-221759.jpg

மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன்
சிவ  சேனை
கடந்த தைப் பொங்கலின் பின்,
மூன்று மாத காலத்தில்,
சிவபூமியில் 31 ஊர்களில்
மதமாற்றிகளின் 31 நிகழ்வுகளில்
சைவ எழுச்சிப் பட்டியல் கீழே.
இலங்கை கிறித்தவப் போதகர்மார் சங்கம்.
ஊடகச் சந்திப்பு.
சைவப் பெருமக்களின் திரளால் மிரளும் மதமாற்றிகள்.
உருளும் அந்நிய ஊடுருவல்.
வெருளும்  கிறித்தவப் போதகர் சங்கம்.
மதமாற்றியார் இருளகற்றும் சிவபெருமான் திருவருள்.
தளர்வறியா மனத்துடன்
31 ஊர்களில் 31 நிகழ்வுகளைத் தடுத்த
சைவப் பெருமக்கள் திருக்கூட்டம்.
1. அச்சுவேலியில் சைவ மக்கள் திரண்டார்கள். மதமாற்றிகளான போதகர் உள்ளிட்ட ஒன்பதின்மர் காவல் துறைச் சிறையில்.
2. கோப்பாய் இருபாலையில் சைவ மக்கள் திரண்டார்கள். மதமாற்றிகளான 80 வயதுப் போதகர் அருள் நங்கை உள்ளிட்ட மூவர் காவல்துறைச் சிறையில்.
3. யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சைவ அமைப்புகள் திரண்டனர். நாக நாட்டின் தலைவி அருள்மிகு நாகபூசணி அம்மன் சிலையைக் காப்போம் என உறுதி பூண்டனர்.
4. மட்டக்களப்பில் சைவ மக்கள் திரண்டனர். தமிழ் நிலமெங்கும் சுவரொட்டிகளால் அழைத்துத் திடலில் மதமாற்றிகள் நிகழ்த்த இருந்ததை நகரோரத் தேவாலயத்துக்குள் ஒடுக்கி முடக்கினர்.
5. திருகோணமலையில் மண்டபத்தில் நிகழவிருந்த மதமாற்றிகள் நிகழ்ச்சி. கடற்கரைக்கு மாற்றினர். அங்கும் நிகழவிடாது சைவ மக்கள் திரண்டனர்.
6. கொக்குவில் திடலில் மூன்று நாள் மதமாற்றிகள் நிகழ்வு. சைவ மக்கள் திரண்டனர், தடுத்தனர்.
7. மாதம்பையில் மதமாற்றிகளின் மூன்று நாள் நிகழ்வுகள். நுழைவுக் கட்டணம் கொடுத்து வாருங்கள் என அழைத்த தமிழ் மொழி நிகழ்வுகள். மூன்று நாள்களும் நடைபெற விடாது மாதம்பைச் சைவ மக்கள் திரண்டு தடுத்தனர்.
8. மானிப்பாயில் மூன்று நாள்கள், யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டத்தில் ஒரு நாள். பெரும் செலவு செய்து மதமாற்றிகள் நிகழ்த்தவிருந்த நிகழ்ச்சிகள். மானிப்பாய்ச் சைவ மக்கள் திரண்டனர். தடுத்தனர்.
9. ஒட்டுசுட்டானில் மதமாற்றிகளின் மூன்று நாள் நிகழ்வுகள். களியாட்டம் மது மாமிசம் எனத் திருவிழா. ஒட்டுசுட்டான் சைவ மக்கள் திரண்டனர் நிகழ்ச்சிகள் நடைபெறவே இல்லை.
10. மன்னாரில் நாகதாழ்வு சாலையோரச் சந்திப்பு மூலையில் அந்தோனியார் சிலை. உடனேயே எதிர்ப்பக்க மூலையில் அருள்மிகு பிள்ளையார் வந்து அமர்ந்தார். சைவ மக்கள் திரண்டனர்.
11. மன்னாரில் உயிலங்குளம் வட்டுப்பிதாதன்மடு நெடுஞ்சாலைச் சந்தி மூலையில் அந்தோனியார் சிலை. எதிர்ப்பக்க முனையில் அருள்மிகு பிள்ளையாருக்கு கருங்கல் கோயில் எழுந்தது. சைவ மக்கள் திரண்டனர்.
12. கச்சதீவில் ஆக்கிரமிப்புப் புத்தர் சிலையை அகற்றுங்கள் என்ற குரலோடு இணைந்தது ஆக்கிரமிப்பு அந்தோனியார் கோயிலையும் அகற்றுங்கள் என்ற சைவ மக்களின் குரல்.
13. மாவட்டபுரம் கீரிமலைச் சாலையில் அடாத்தாக மதமாற்றிகள் தேவாலயக் கட்டடம். நிறுத்தினர், திரண்ட சைவ மக்கள்.
14. மாவிட்டபுரம் கீரிமலைச்சாலையில் முன்பள்ளிக்குள் அடாத்தாகப் புகுந்த மதமாற்றிகளை அகற்றினர் திரண்ட சைவ மக்கள்.
15. கோண்டாவிலில் அருள்மிகு பிள்ளையார் கோயிலுக்கு எதிரே அனைத்துலகப் பின்னணி கொண்ட அசைவ உணவகம். சைவ மக்கள் திரண்டனர். உணவகத்தை மூடினர்.
16. கோண்டாவில் அரசுப் பேருந்து வளாகத்துள் புதிதாக அந்தோனியார் சிலையா? கோண்டாவில் சைவ மக்கள் திரண்டனர். சிலை அங்கு வராது தடுத்தனர்.
17. கொடிகாமத்தில் 18. புன்னாலைக்கட்டுனில் 19. ஏழாழையில் 20. பண்ணாகத்தில் அடாத்தாக மதமாற்றிகளின் நடவடிக்கைகள். சைவ மக்கள் திரண்டனர். குரல் கொடுத்தனர்.
21. சுண்ணாகம் மயிலங்காடு திடலில் மூன்று நாள் மதமாற்றிகள் நிகழ்வு. முதல் நாள் நடைபெற்றது. அடுத்த இரு நாள்களும் நடைபெறவில்லை. சைவ மக்கள் திரண்டனர், தடுத்தனர்.
22, 23 வவுனியாவில் இரு நிகழ்வுகள்,
24. நெடுங்கேணியில் ஒரு நிகழ்வு,
25. வெள்ளாங்குளத்தில் ஒரு நிகழ்வு,
26, 27, 28, 29, 30, கிளிநொச்சியில் ஐந்து நிகழ்வுகள்,
31. ஏழாலையில் ஒரு நிகழ்வு
எனப் பிப்ருவரிக் கடைசியில் மதமாற்றிகளின் நிகழ்வுகள்.  எதையுமே நிகழ விடாது சைவ மக்கள் திரண்டு நிறுத்தினர்.

https://vanakkamlondon.com/world/srilanka/2023/04/191727/

டிஸ்கி

துபாயில எனக்கு10 எண்ணெய் கப்பல் ஓடுது..

6b8afe9270e4999f73e5c2c35df71967.jpg

உனக்கு ஒடுதா..? 😊

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இவர் தனியே கிறிஸ்துவத்துக்கு மட்டுமே எதிராக ஊளையிடுகிறார் சிங்கள பவுத்தர்கள் சைவர்களின் கோவிலை ஆக்கிரமிக்கும் போது கோமாவுக்கு சென்று விடுகிறார் பேசாமல் இந்த பிழைப்பு பிழைப்புக்கு நாக்க அறுத்து கொண்டு சாவது மேல் .

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் மிகச் சிலரே தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைக்கும் இந்த மனிதனின் நாசகாரத் திட்டத்தை வெளிப்படையாக  எதிர்க்கிறார்கள். 

பலர் அவரது செயலை மெளனமாக வரவேற்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. 

  • Thanks 1
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்ட மத மாற்றங்கள்.. மத அடையாளத்திணிப்புக்கள்.. திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கள்.. ஒரு இனத்தின் தேசிய விழுமியங்களை.. பண்பாட்டை..பாரம்பரியத்தை.. மொழியை அழிக்கும் சேதப்படுத்தும் செயற்பாடுகள் எந்த வடிவில் நிகழ்ந்தாலும்.. தடுக்கப்பட வேண்டும்.. எதிர்க்கப்பட வேண்டும். அதேவேளை.. ஒரு மனிதனுக்குரிய அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.. அது மற்றைய சக மனிதர்களின் உரிமையில் தலையிடாத வரை. 

அந்த வகையில்.. சச்சிதானந்தம் ஐயா.. காவி உடை போட்டுச் செய்தால் என்ன போடாமல் செய்தால் என்ன திட்டமிட்ட மத மாற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதை வரவேற்க வேண்டும். அது அந்த களத்தில் அவசியமானதும் கூட.

இந்த மதமாற்றக்காரர்களின் கையில் சிக்குவது. ஏழை எளிய மக்கள் தான். அந்த மக்களின் பலவீனத்தை இவர்கள் பலமாக்கிக் கொள்கின்றனர்.. தங்களின் வருவாய்க்காக. அந்த வகையில்.. அந்த ஏழை எளிய மக்களின்.. வாழ்வாதாரத்தை கல்வி அறிவை உயர்த்துவதன் மூலம்.. அவர்களை இந்த ஆபத்தில் இருந்தும் விடுவிக்க முடியும். வெறுமனவே மத மாற்றுக்காரர்களை எதிர்ப்பது அல்லது வெறுப்பதன் ஊடாக.. அந்தச் செயலை தடுக்க முடியாது. அந்த மதமாற்றக்காரர்களின் இலக்குகளாக மாறும் மக்களின் சமூக பொருண்மிய நிலையை மாற்றியமைக்க.. உதவுவது தான் இதற்கு நிரந்தர முடிவை தரும்.

அதேவேளை.. ஒரு சிலர் தாமாக விரும்பி மதம் மாறுவதை தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது. அது தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் செயலாகவே இருக்கும். 

  • Like 1
Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

இவர் தனியே கிறிஸ்துவத்துக்கு மட்டுமே எதிராக ஊளையிடுகிறார் சிங்கள பவுத்தர்கள் சைவர்களின் கோவிலை ஆக்கிரமிக்கும் போது கோமாவுக்கு சென்று விடுகிறார் பேசாமல் இந்த பிழைப்பு பிழைப்புக்கு நாக்க அறுத்து கொண்டு சாவது மேல் .

உண்மை

இல்லையே.. அண்மையில் சிவலிங்கம் உடைப்பு... நாகபூசனி அம்மன் சிலை நகர்த்தல்.. இவற்றிற்கு எதிராகவும்.. புத்தர் வரவுகளுக்கு எதிராகவும் மிக அண்மையில் ஒரு அறிக்கை தந்திருந்தாரே.

ஒரு மனிதனின் பொருண்மிய ஏழ்மை.. அறியாமையைப் பயன்படுத்தி.. கட்டாய அல்லது ஏமாற்றிய மதமாற்றச் செயற்பாடுகள்.. சிங்களம் கட்டமைத்து ஒரு இனத்தின் தேசிய இருப்பை அழிக்க செயற்படுத்தும்.. மத அடையாளத் திணிப்பிற்கு எந்த வகையிலும் சளைத்தது அல்ல. இதில் சச்சிதானந்தம்.. குறைத்து  மதிப்பளிப்பதால்.. அது எதிர்க்கப்படக் கூடாது.. தடுக்கப்படக் கூடாது என்றும் அர்த்தப்பட முடியாது. 

போர் காலத்திலும் கட்டாய மதமாற்றங்கள் பேசு பொருளாக இருந்தன. முக்கிய கிறிஸ்தவ தலைமைகள்.. இதனை ஒரு அருவருக்கத்தக்க செயலாகவே பார்த்தனர். புலிகள் வெளிப்படையாக கட்டாய மதமாற்றங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தாவிட்டாலும் அவர்கள் அதனை விரும்பவில்லை என்பதை அவர்களின் பிரசுரங்களில் வெளிப்படுத்தி இருந்தனர். கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான கருத்து அல்லது நிலைப்பாடு என்பது அந்தந்த மதங்களுக்கு எதிரான நிலைப்பாடு.. என்ற திரிபுக்கு ஆளாக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதால்.. புலிகள்.. அதனை முதன்மைப்படுத்தவில்லை. இதனை ஏலவே.. முஸ்லிம்கள் வெளியேற்றத்தோடு பார்த்தும் விட்டோம். முஸ்லிம்களின் வெளியேற்றம் என்பது அண்றைய சூழலில்.. சமூகங்களின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் நம்பிக்கையீனங்களை அகற்றவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு தற்காலிக செயற்பாடு. ஆனால்.. பின்னர் அதே புலிகள்.. இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் என்று சித்தரிக்க பயன்படுத்தப்பட்டது.. சந்தர்ப்பவாதிகளால். 

இந்த ஆபத்து இப்பவும் இருக்குது. அதனை சச்சி பொருட்படுத்துவாரா என்று தெரியவில்லை. திட்டமிட்ட மதமாற்றம் என்பது வருவாய் சார்ந்த செயற்பாடு. அது சுயநலம் சார்ந்தது. அதனை குறித்த மத எதிர்ப்பாக சித்தரிக்கவோ.. திரிபு படுத்தவோ கூடாது. 

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

1) திட்டமிட்ட மத மாற்றங்கள்.. மத அடையாளத்திணிப்புக்கள்.. திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கள்.. ஒரு இனத்தின் தேசிய விழுமியங்களை.. பண்பாட்டை..பாரம்பரியத்தை.. மொழியை அழிக்கும் சேதப்படுத்தும் செயற்பாடுகள் எந்த வடிவில் நிகழ்ந்தாலும்.. தடுக்கப்பட வேண்டும்.. எதிர்க்கப்பட வேண்டும். அதேவேளை.. ஒரு மனிதனுக்குரிய அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.. அது மற்றைய சக மனிதர்களின் உரிமையில் தலையிடாத வரை.

திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்படும் எதுவும்  ஏற்றுக்கொள்ளமுடியாது

 யுத்தம் முடிந்தபின்னர் மேற்கொள்ளப்பட்ட அதி தீவிர  மதம் பரப்பும் முயற்சிகள் திட்டமிட்டவகையில் செய்யப்படுபவையா என சந்தேகிக்க வைத்தது. 

2) அந்த வகையில்.. சச்சிதானந்தம் ஐயா.. காவி உடை போட்டுச் செய்தால் என்ன போடாமல் செய்தால் என்ன திட்டமிட்ட மத மாற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதை வரவேற்க வேண்டும். அது அந்த களத்தில் அவசியமானதும் கூட.

சச்சியரின் உண்மையான நோக்கம் சைவசமயத்தைக் காப்பாற்றுவதாயிருந்தால் அவர் முதலில் எதிர்க்க வேண்டியது பெளத்தமயமாக்கலையே. அதன் பின்னரே திட்டமிட்ட ஏனைய மதமாற்ற முயற்சிகளை எதிர்க்க முடியும். தனியே  கிறீத்துவத்தை எதிர்ப்பதும் அதற்கெதிராக விசத்தை விதைப்பதும் அவர் இந்தியாவுக்கு வேலை செய்வதையே காட்டுகிறது.  உ+ம் கச்சதீவில் புத்தரை அகற்றும்போது அந்தோனியார் தேவாலயத்தையும் அகற்ற வேண்டும் எனக் கோருவது. 

அவரது உண்மையான இந்த முகத்தை பார்க்காததுபோல கருத்துக்கூறுவது கருத்தாளரின் நோக்கத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தும். 

3) இந்த மதமாற்றக்காரர்களின் கையில் சிக்குவது. ஏழை எளிய மக்கள் தான். அந்த மக்களின் பலவீனத்தை இவர்கள் பலமாக்கிக் கொள்கின்றனர்.. தங்களின் வருவாய்க்காக. அந்த வகையில்.. அந்த ஏழை எளிய மக்களின்.. வாழ்வாதாரத்தை கல்வி அறிவை உயர்த்துவதன் மூலம்.. அவர்களை இந்த ஆபத்தில் இருந்தும் விடுவிக்க முடியும். வெறுமனவே மத மாற்றுக்காரர்களை எதிர்ப்பது அல்லது வெறுப்பதன் ஊடாக.. அந்தச் செயலை தடுக்க முடியாது. அந்த மதமாற்றக்காரர்களின் இலக்குகளாக மாறும் மக்களின் சமூக பொருண்மிய நிலையை மாற்றியமைக்க.. உதவுவது தான் இதற்கு நிரந்தர முடிவை தரும்.

மதம் பரப்புவோர்  மதம்மாறுவோருக்கு பொருளாதார, சமூக, உளவியல் முன்னேற்றத்தினை கொடுப்பதன் ஊடாகவே இதனைச் சாத்தியமாக்குகிறார்கள்.  எனவே வெறும் வாயை மெல்லுவதால் எந்தப் பயனும் இல்லை. செயற்பாடுதான் பயன்தரும். சைவசமயத்திலுள்ள நலிந்த பிரிவினரைக் கைதூக்கிவிடாது மேற்கொள்ளப்படும் எந்த மதமாற்றத் தடை முயற்சிகளும் தோல்வியிலேதான் முடியும்

4) அதேவேளை.. ஒரு சிலர் தாமாக விரும்பி மதம் மாறுவதை தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது. அது தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் செயலாகவே இருக்கும். 

மதமாறும் செயற்பாடும், மதம்மாற்றும் முயற்சிகளும் காலம்காலமாக உலகெங்கிலும் நடைபெற்று வருபவைதான். அது தமிழருக்குப் புதிய விடயம் அல்ல. 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சைவ சமயத்தினுள் இடம்பெறும் இந்து சமயப் பண்பாட்டுப் படையெடுப்பை எவ்வாறு எதிர்கொள்வது ? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

இல்லையே.. அண்மையில் சிவலிங்கம் உடைப்பு... நாகபூசனி அம்மன் சிலை நகர்த்தல்.. இவற்றிற்கு எதிராகவும்.. புத்தர் வரவுகளுக்கு எதிராகவும் மிக அண்மையில் ஒரு அறிக்கை தந்திருந்தாரே.

ஒரு மனிதனின் பொருண்மிய ஏழ்மை.. அறியாமையைப் பயன்படுத்தி.. கட்டாய அல்லது ஏமாற்றிய மதமாற்றச் செயற்பாடுகள்.. சிங்களம் கட்டமைத்து ஒரு இனத்தின் தேசிய இருப்பை அழிக்க செயற்படுத்தும்.. மத அடையாளத் திணிப்பிற்கு எந்த வகையிலும் சளைத்தது அல்ல. இதில் சச்சிதானந்தம்.. குறைத்து  மதிப்பளிப்பதால்.. அது எதிர்க்கப்படக் கூடாது.. தடுக்கப்படக் கூடாது என்றும் அர்த்தப்பட முடியாது. 

போர் காலத்திலும் கட்டாய மதமாற்றங்கள் பேசு பொருளாக இருந்தன. முக்கிய கிறிஸ்தவ தலைமைகள்.. இதனை ஒரு அருவருக்கத்தக்க செயலாகவே பார்த்தனர். புலிகள் வெளிப்படையாக கட்டாய மதமாற்றங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தாவிட்டாலும் அவர்கள் அதனை விரும்பவில்லை என்பதை அவர்களின் பிரசுரங்களில் வெளிப்படுத்தி இருந்தனர். கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான கருத்து அல்லது நிலைப்பாடு என்பது அந்தந்த மதங்களுக்கு எதிரான நிலைப்பாடு.. என்ற திரிபுக்கு ஆளாக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதால்.. புலிகள்.. அதனை முதன்மைப்படுத்தவில்லை. இதனை ஏலவே.. முஸ்லிம்கள் வெளியேற்றத்தோடு பார்த்தும் விட்டோம். முஸ்லிம்களின் வெளியேற்றம் என்பது அண்றைய சூழலில்.. சமூகங்களின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் நம்பிக்கையீனங்களை அகற்றவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு தற்காலிக செயற்பாடு. ஆனால்.. பின்னர் அதே புலிகள்.. இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் என்று சித்தரிக்க பயன்படுத்தப்பட்டது.. சந்தர்ப்பவாதிகளால். 

இந்த ஆபத்து இப்பவும் இருக்குது. அதனை சச்சி பொருட்படுத்துவாரா என்று தெரியவில்லை. திட்டமிட்ட மதமாற்றம் என்பது வருவாய் சார்ந்த செயற்பாடு. அது சுயநலம் சார்ந்தது. அதனை குறித்த மத எதிர்ப்பாக சித்தரிக்கவோ.. திரிபு படுத்தவோ கூடாது. 

பிரச்சனை என்னவென்றால் சச்சி உண்மையிலேயே நீங்கள் சொல்வது குறித்து அக்கறைப் படுகின்றாரா என்பது தான்.

உண்மையில் சைவம் சமயம் குறித்தோ அல்லது எமது கலாச்சாரம் குறித்தோ கவலைப்படும் ஒருவர் இது போன்ற ரோட்டில் நின்று சத்தம் போட்டு மிரட்டும் ரவுடிக் கும்பல் போல் செயற்பட மாட்டார், மாறாக சைவ மெய்யியல் தத்துவங்கள் குறித்தோ அல்லது சைவம் எப்படி மற்றய மதங்களை விட உயர்ந்தது குறித்தோ பொது மக்களுக்கு அறிவைப் புகட்ட முற்படுவார், இதில் சைவ ஆச்சிரமங்களை நிறுவுவதும், பிணியால் வாடும் மக்கழுக்கும் கஷ்டப்பட்டு வாழும் மாணவர்களின் பிள்ளைகளுக்கு உதவுவதும் முக்கியம். இதை செய்யத் தவறி விட்டு வெறுமனே குழாயாடிச் சண்டையை நாடாத்தி லாபம் பெறும் இவர் இந்தியாவின் நோக்கத்தை செயல்படுத்த இந்தியாவால் கூலிக்கு அமர்த்தப் பட்ட நபர் அன்றி வேறு யார்?

இவரின் மேற்படி நடவடிக்கைகளால் சைவத்தை வெறுத்து கிறிஸ்துவத்துக்கு மாறுபவர்கள் அதிகம் ஆவார்களே ஒழிய குறையப் போவதில்லை. 

Edited by பகிடி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nedukkalapoovan said:

இல்லையே.. அண்மையில் சிவலிங்கம் உடைப்பு... நாகபூசனி அம்மன் சிலை நகர்த்தல்.. இவற்றிற்கு எதிராகவும்.. புத்தர் வரவுகளுக்கு எதிராகவும் மிக அண்மையில் ஒரு அறிக்கை தந்திருந்தாரே.

ஒரு மனிதனின் பொருண்மிய ஏழ்மை.. அறியாமையைப் பயன்படுத்தி.. கட்டாய அல்லது ஏமாற்றிய மதமாற்றச் செயற்பாடுகள்.. சிங்களம் கட்டமைத்து ஒரு இனத்தின் தேசிய இருப்பை அழிக்க செயற்படுத்தும்.. மத அடையாளத் திணிப்பிற்கு எந்த வகையிலும் சளைத்தது அல்ல. இதில் சச்சிதானந்தம்.. குறைத்து  மதிப்பளிப்பதால்.. அது எதிர்க்கப்படக் கூடாது.. தடுக்கப்படக் கூடாது என்றும் அர்த்தப்பட முடியாது. 

போர் காலத்திலும் கட்டாய மதமாற்றங்கள் பேசு பொருளாக இருந்தன. முக்கிய கிறிஸ்தவ தலைமைகள்.. இதனை ஒரு அருவருக்கத்தக்க செயலாகவே பார்த்தனர். புலிகள் வெளிப்படையாக கட்டாய மதமாற்றங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தாவிட்டாலும் அவர்கள் அதனை விரும்பவில்லை என்பதை அவர்களின் பிரசுரங்களில் வெளிப்படுத்தி இருந்தனர். கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான கருத்து அல்லது நிலைப்பாடு என்பது அந்தந்த மதங்களுக்கு எதிரான நிலைப்பாடு.. என்ற திரிபுக்கு ஆளாக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதால்.. புலிகள்.. அதனை முதன்மைப்படுத்தவில்லை. இதனை ஏலவே.. முஸ்லிம்கள் வெளியேற்றத்தோடு பார்த்தும் விட்டோம். முஸ்லிம்களின் வெளியேற்றம் என்பது அண்றைய சூழலில்.. சமூகங்களின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் நம்பிக்கையீனங்களை அகற்றவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு தற்காலிக செயற்பாடு. ஆனால்.. பின்னர் அதே புலிகள்.. இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் என்று சித்தரிக்க பயன்படுத்தப்பட்டது.. சந்தர்ப்பவாதிகளால். 

இந்த ஆபத்து இப்பவும் இருக்குது. அதனை சச்சி பொருட்படுத்துவாரா என்று தெரியவில்லை. திட்டமிட்ட மதமாற்றம் என்பது வருவாய் சார்ந்த செயற்பாடு. அது சுயநலம் சார்ந்தது. அதனை குறித்த மத எதிர்ப்பாக சித்தரிக்கவோ.. திரிபு படுத்தவோ கூடாது. 

மதமாற்றத்திற்குள்ளாகும் சைவ சமயத்திலுள்ள நலிந்த பிரிவினரைக் கைதூக்கிவிடாது கூறப்படும் எந்தக் கருத்துக்களும் விழலுக்கிறைத்த நீரே. 

அதுதவிர, அந்த நலிந்த பிரிவினர் சமூக பொருளாதார ரீதியில் முன்னேறிவிடக் கூடாது என  பலர் விரும்புவதாக எண்ணத் தோன்றும் அபாயமும் இருக்கிறது. 

(புரட்சிக்கு இப்போது மகிழ்ச்சியாக இருக்குமே  🤣)

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

புரட்சிக்கு இப்போது மகிழ்ச்சியாக இருக்குமே  🤣)

தோழர் .. சரிக்கு சமமாக சிங்களவர்க்கு எதிராகவும் போராடினால் சரி..யாரும் கேள்வி கேட்க போவதில்லை..

28155477455_6df1696457_o.jpg

உடனே வயிற்று போக்கு வருவதும் கிறித்துவர்களுக்கு எதிராக என்றால் துள்ளி குதித்து முன்னால் வருவதும்.. நானறிந்த வரையில் இசுலாமியர்களுக்கு எதிராகவும் இவர் ஒன்றயும் செய்ய கானோம்.. ஏதோ சீக்ரெட் அஜன்டாவோடு செயல்படுகிறார் என்பதை 100% உறுதியாக சொல்ல முடியும்..

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

இந்த மதமாற்றக்காரர்களின் கையில் சிக்குவது. ஏழை எளிய மக்கள் தான். அந்த மக்களின் பலவீனத்தை இவர்கள் பலமாக்கிக் கொள்கின்றனர்.

7 hours ago, nedukkalapoovan said:

தங்களின் வருவாய்க்காக.

???????

எல்லாவற்றையும் தடுத்துவிட்டார் சச்சியர் ஆனால் மதம்மாறும் ஏழைகளின் கஸ்ரத்தை தீர்க்க முடியவில்லை அவரால், அவர் மதம் சார்ந்த கோயில்களை இடித்து குடியேறும் புத்தருக்கு தனது வேட்டியை கழட்டி வரவேற்பளிப்பார். வலுக்கட்டாயமாக மதம் மாற்றுவது தவறு. அப்படி யாரும் மாற்றுவதாக செய்திகளில்லை. ஆனால் புத்தமதம் தழுவப்படாத நிலங்களில், வலுக்கட்டாயமாக விகாரைகள் கட்டுவதன் நோக்கம் என்ன? சிங்களவர் புத்தமதத்தை விட்டு விலகுகின்றனரா? தமிழ் சைவரை வலுக்கட்டாயமாக மதம் மாற்றும் கைங்கரியமா இந்த விகாரைகளுக்குப்பின்னால்? அன்றி தமிழனின் நிலங்களையும் வளங்களையும் பறித்து சிங்களவருக்கு கொடுத்து மதம் மாறும் புத்த மக்களை  தடுக்கின்றனரா? மதம் மாறாமல் சிங்களவர், தமிழரின் நிலத்துக்காகவும், வளத்துக்காகவும் புத்தமதத்தில் நிலைத்து நிற்கின்றனரா எனும் கேள்வி எழுகிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் பணத்தை கொடுத்து தங்கள் பணத்தில் நிலத்தில் ஆலயங்களை எழுப்புகிறார்கள் ஆனால் சைவ ஆலயங்களை இடித்து, வழிபாடுகளை தடுத்து விகாரைகள் எழுப்புவதை தடுக்கமுடியாவிட்டாலும் கேள்விகூட கேட்கமுடியாமல் இருக்கிறார் அதில வீரம் வேற. இழகின இரும்பைக்கண்டால் தூக்கி தூக்கி அடிப்பார் என்பது எல்லோருக்கும்  நன்கு தெரியும். விகாரைகள் எழுவதை திசை திருப்ப கிறிஸ்தவர்களுக்திராக கத்தி சுழட்டுகிறார். சைவ ஆலயங்கள் விகாரைகளாக மாறுவதை எதிர்த்து கிறிஸ்தவர்களும் போராடுகின்றனர். சிங்களம் சொல்லுது இது சிங்கள பவுத்த நாடு என, சச்சியர் கிறிஸ்தவர்களுக்கு உரிமை இல்லையென்கிறார். இத்தனையாண்டுகளாய் எங்கே போயிருந்தார் இவற்றை சொல்வதற்கு? வயதுக்கேற்ற அறிவுமில்லை அனுபவமுமில்லை. பாதிரியார் ஒருவருக்கு பிக்கு கன்னத்திலறைந்ததை மகிழ்ச்சியோடு பிக்குவுக்கு ஆதரவு தெரிவித்து கருத்தெழுதியவர்களும் நமக்குள் இருக்கின்றனர். நாம் எதை மற்றவர்க்கு செய்கிறோமோ அதே நமக்கும் திருப்பியளிக்கப்படும். கிறிஸ்தவர்கள் சைவ ஆலயங்களை அழிக்கவுமில்லை மற்றவர்களால் அழிக்கப்படுவதை வரவேற்பதுமில்லை. சச்சியர் எதற்காக இவ்வளவு சன்னதமாடுகிறார் என்றால்; எஜமான் விசுவாசம்! இனிமேல் இனக்கலவரம் ஏற்படுத்தி குளிர் காய முடியாது, ஒரு மதக்கலவரம் அவசரமாக தேவைப்படுகிறது. ஒருபுறம் சச்சியர் மறுபுறம் தாடியர் ஓடியோடி உழைக்கினம் சிங்களத்தை காப்பாற்ற. இத்தனைக்கும் தமிழையும் தமிழரையும் விற்றே வயிறு வளர்க்கவேண்டிய நிலை. இதுகளை வைத்தே தமிழருக்கு ஒரு தீர்வு தேவையில்லை என முடிவெடுக்கும் சிங்களம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அல்லோலகல்லோயாக்கள் எனப்படும் பிரிவினை சபைகளை கொஞ்சமும் எனக்கும் பிடிப்பதில்லை இத்தனைக்கும் நானும் ஒரு கிறீஸ்தவன். ஆனால் இவர்கள் பற்கள் பிடுங்கப்பட்டவர்கள் என்பதால் மறவன் புலவு போன்ற டம்மி பீஸ்களால் தூக்கி தூக்கி புரட்டப்படுகிறார்கள். வீதியோரம் நின்று அறிவிப்பு காகிதம் விநியோகித்து மட்டுமே மதம் மாற்ற இவர்கள் முயல்வதால் சச்சுவிற்கும் இவர்களை பார்க்கும் போது  இளக்காரம். ஆனால் கிழக்குமாகாண எல்லைக்கிராமங்களில் நடக்கும் லவ் ஜிஹாத் முதல் பெயர் மாற்றி வர்த்தமானியில் அறிவிப்பு வந்தால் 5 லட்சம் ரொக்கத்துடன் சுயதொழில் ஒன்றை ஏற்படுத்திக்கொடுப்பது என்று பெரியளவில் நடைபெறும் மதமாற்றங்கள் பற்றி மூச் . 
சமீபத்தில் நான் பொறுப்பெடுத்து கல்வி கற்பிக்கும்  அந்த பெண்பிள்ளையின் குடும்பத்திலும் இப்படியான ஊடுருவல் எமது  முழு முயற்சியுடன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அந்தப்பிள்ளையின் இரண்டாவது அக்காவை பதிவுத்திருமணம் செய்ய முயற்சித்த ஏற்கனவே திருமணமான ஒரு முஸ்லீம்  இனத்தை சேர்ந்தவரிடமிருந்து அந்த பெண்ணை பெரும்பாடு பட்டு காப்பாற்றியிருக்கிறோம். எல்லைக்கிராமங்களில் எமது இனம் சந்திக்கும் ஆபத்து இந்த மறவன்புலவு போன்ற கழி.....லால்  திட்டமிட்டு மறைக்கப்பட்டு பிள்ளைப்பூச்சிகள் எல்லாம் பெரிய கொடுக்கு முளைத்த தேள்கள் போல் உருவப்படுத்தப்படுகிறார்களோ என்று தோன்றுகிறது 

Link to comment
Share on other sites

17 hours ago, பெருமாள் said:

இவர் தனியே கிறிஸ்துவத்துக்கு மட்டுமே எதிராக ஊளையிடுகிறார் சிங்கள பவுத்தர்கள் சைவர்களின் கோவிலை ஆக்கிரமிக்கும் போது கோமாவுக்கு சென்று விடுகிறார் பேசாமல் இந்த பிழைப்பு பிழைப்புக்கு நாக்க அறுத்து கொண்டு சாவது மேல் .

யாழ் மாநகர சபை முதல்வராக ஏன் கிறிஸ்தவர்கள் தெரிவாகிறார்கள் என தனது முகப்புத்தகத்தில் எழுதியுள்ளார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2023 at 21:33, nedukkalapoovan said:

திட்டமிட்ட மத மாற்றங்கள்.. மத அடையாளத்திணிப்புக்கள்.. திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கள்.. ஒரு இனத்தின் தேசிய விழுமியங்களை.. பண்பாட்டை..பாரம்பரியத்தை.. மொழியை அழிக்கும் சேதப்படுத்தும் செயற்பாடுகள் எந்த வடிவில் நிகழ்ந்தாலும்.. தடுக்கப்பட வேண்டும்.. எதிர்க்கப்பட வேண்டும். அதேவேளை.. ஒரு மனிதனுக்குரிய அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.. அது மற்றைய சக மனிதர்களின் உரிமையில் தலையிடாத வரை. 

அந்த வகையில்.. சச்சிதானந்தம் ஐயா.. காவி உடை போட்டுச் செய்தால் என்ன போடாமல் செய்தால் என்ன திட்டமிட்ட மத மாற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதை வரவேற்க வேண்டும். அது அந்த களத்தில் அவசியமானதும் கூட.

இந்த மதமாற்றக்காரர்களின் கையில் சிக்குவது. ஏழை எளிய மக்கள் தான். அந்த மக்களின் பலவீனத்தை இவர்கள் பலமாக்கிக் கொள்கின்றனர்.. தங்களின் வருவாய்க்காக. அந்த வகையில்.. அந்த ஏழை எளிய மக்களின்.. வாழ்வாதாரத்தை கல்வி அறிவை உயர்த்துவதன் மூலம்.. அவர்களை இந்த ஆபத்தில் இருந்தும் விடுவிக்க முடியும். வெறுமனவே மத மாற்றுக்காரர்களை எதிர்ப்பது அல்லது வெறுப்பதன் ஊடாக.. அந்தச் செயலை தடுக்க முடியாது. அந்த மதமாற்றக்காரர்களின் இலக்குகளாக மாறும் மக்களின் சமூக பொருண்மிய நிலையை மாற்றியமைக்க.. உதவுவது தான் இதற்கு நிரந்தர முடிவை தரும்.

அதேவேளை.. ஒரு சிலர் தாமாக விரும்பி மதம் மாறுவதை தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது. அது தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் செயலாகவே இருக்கும். 

ஆனால் தன் வேட்டிளைக் கழட்டி பிக்குகள் இருக்கும் கதிரைக்குப் போட்ட செயலை என்ன வென்பது. இவரின் பின்னால் இந்திய சிவசேனா இருக்குது. இவர் மதம்மாற்றிகளை எதிர்பது வரவேற்கத்தக்க தாக இருந்தாலும் ஒற்றுமையாக இருந்த சைவ கிறிஜ்தவ மக்களுக்கு இடையே பகையை மூட்டி விடுவாரா என்ற அச்சம் இருக்கிறது. இவரை அளவோடுதானட் ஆடவிட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

யாழ் மாநகர சபை முதல்வராக ஏன் கிறிஸ்தவர்கள் தெரிவாகிறார்கள் என தனது முகப்புத்தகத்தில் எழுதியுள்ளார். 

அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை அதுதான் ரத்தமும் சதையுமாய் உள்ள இந்து கிறிஸ்தவர்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்துவதே . அதே நேரம் சிங்கள பவுத்தம் இந்து கோவிலை உடைப்பது பற்றி அவர் வாயால் கதைக்க முடியாது

****

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2023 at 07:10, பகிடி said:

உண்மையில் சைவம் சமயம் குறித்தோ அல்லது எமது கலாச்சாரம் குறித்தோ கவலைப்படும் ஒருவர் இது போன்ற ரோட்டில் நின்று சத்தம் போட்டு மிரட்டும் ரவுடிக் கும்பல் போல் செயற்பட மாட்டார், மாறாக சைவ மெய்யியல் தத்துவங்கள் குறித்தோ அல்லது சைவம் எப்படி மற்றய மதங்களை விட உயர்ந்தது குறித்தோ பொது மக்களுக்கு அறிவைப் புகட்ட முற்படுவார், இதில் சைவ ஆச்சிரமங்களை நிறுவுவதும், பிணியால் வாடும் மக்கழுக்கும் கஷ்டப்பட்டு வாழும் மாணவர்களின் பிள்ளைகளுக்கு உதவுவதும் முக்கியம்.

அண்மையில் படிக்கும் வயதுள்ள சிறுவர்கள் கிறிஸ்தவத்துக்கு எதிரான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தார்கள், அதை வைத்தே திரண்டார்கள், தடுத்தார்கள் என சச்சியர் வீர வசனம் எழுதுகிறார். அந்தக்குழந்தைகளின் மனதில் என்ன எண்ணம் வளரும்? வளரும்போதே தீய கருத்துக்களை போதித்து, போஷித்து சிங்களவருக்கு தமிழரைப்பற்றிய தவறான வரலாறுகளை ஊட்டி இரண்டாக்கி குழப்பத்தில் வாழுவதுபோல் எதிர்காலத்தில் சைவ கிறிஸ்தவ மோதலை உருவாக்கும் இளம் சமுதாயத்தை உருவாக்குகிறார். கிறிஸ்தவர்களுக்கெதிராக சுவரொட்டி ஓட்டிக்கொண்டு, பிக்குவிக்கு வேட்டியை கழற்றிக்கொடுத்து வெள்ளைக்கொடி காட்டுகிறார். பிக்குகளும் இராணுவமும் உள்ள இடத்தில முதல் வரிசையில் பொத்திக்கொண்டு கூனிக்குறுகி இருக்கிறார். ஏன்? எதற்காக அங்கு போனார்? அல்லது அழைக்கப்பட்டார்? பிக்குவுக்கு வெள்ளைத்துணி இல்லாததால் போர்க்கப்போனாரா? சைவ மன்றங்கள் இந்த குழப்பக்காரனை இனங்கண்டு ஒதுக்கி இன ஒற்றுமையை வளர்க்கவேண்டும். இல்லையேல் மத வாதம், சாதீய வாதம் என எம்மை அடிபட வைத்துக்கொண்டு எமக்கான தீர்வில் எம்மை ஒருசேர விடாது சிங்களம் எம்மை விழுங்கும். வேட்டியை களட்டிக்கொடுத்துக்களும் கட்சி சின்னத்தை விட்டுக்கொடுத்துக்களும் இப்போது சிங்களத்தின் விருந்தாளிகள். இதுகளுக்கு கிரீடம் வைத்து நம்மை விலை பேசுது சிங்களம்.         

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ஆர் ஸ் ஸ் க்கு சைவம் புத்தம் எல்லாம் ஹிந்துத்துவாவில் அடங்கும். ஆர் ஸ் ஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கும் இவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிகச் சிறப்பாகச் செய்கிறார். ஆர் ஸ் ஸ் அமைப்பு இலங்கையில் புலிகளையும் வேறு தமிழ் அமைப்புக்களையும் வேவு பார்க்க உருவாக்கப் பட்ட இன்னொரு அமைப்புத் தான் சேவா லங்கா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2023 at 21:50, nedukkalapoovan said:

இல்லையே.. அண்மையில் சிவலிங்கம் உடைப்பு... நாகபூசனி அம்மன் சிலை நகர்த்தல்.. இவற்றிற்கு எதிராகவும்.. புத்தர் வரவுகளுக்கு எதிராகவும் மிக அண்மையில் ஒரு அறிக்கை தந்திருந்தாரே.

அதெல்லாம் மேல் பூச்சுக்கு முடிந்தால் வெடுக்கு நாரி இடத்தில் நின்று குரல் கொடுக்கட்டும் அது முடியாது இவரை போல் இன்னம் ஒன்று நல்லூர் முருகன் தனக்கு கனவில்  பெயர் இட்டது என்று அலையுது வேலன் சுவாமி அதுவும் புத்தன் என்றால் புத்துக்குள் தலையை விடும் ஆள் .

முக்கியமாய் கருத்துக்கள் பதிவுகள் நீக்குவது என்றால் முதலில்  என்னிடம் கேளுங்கள் ஆதாரம் உள்ளது .ஆதாரம் இல்லாமல் இங்கு இணைப்பது எழுதுவது கிடையாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2023 at 16:52, அக்னியஷ்த்ரா said:

வீதியோரம் நின்று அறிவிப்பு காகிதம் விநியோகித்து மட்டுமே மதம் மாற்ற இவர்கள் முயல்வதால் சச்சுவிற்கும் இவர்களை பார்க்கும் போது  இளக்காரம்.

இல்லையே! பிஷப்பின் வீட்டுக்குமுன்னால் பழி கிடந்தார், இப்போ பொய்யான துண்டுப்பிரசுரம், அந்தோனியார் இவ்வாறு போகுது இவரது போராட்டம். 1500ம் ஆண்டிலிருந்து இந்த நாட்டில் கிறிஸ்தவம் இருக்கு. அப்போ இல்லாத எதிர்ப்பு உணர்வு இப்போ மட்டும் ஏன், எங்கிருந்து வந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2023 at 07:06, Kapithan said:

இந்தியாவுக்கு வேலை செய்வதையே காட்டுகிறது.

சைவர்களை கொத்துக்கொத்தாக கொன்றொழிக்கும்போது, சைவ ஆலயங்களை குண்டுபோட்டு தகர்க்கும்போது, தட்டிக்கேட்க்காத தடுக்க முடியாத, மாறாக ஆலோசனையும், உதவியும், ஊக்கமும், ஒத்தாசையும், நிதியுதவியும் அளித்து வரவேற்ற இந்தியா தமிழருக்கிருக்கிற ஒரே ஆதரவையும் இல்லாமற்செய்து தவிக்க வைத்து தவித்த முயல் அடித்து தமது திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள இப்படியான அறிவற்ற முட்டாள்களை, கோடரிக்காம்புகளை பயன்படுத்திக்கொள்கிறது. பிக்குகளோடு சேர்ந்து கிறிஸ்தவர்களை துரத்திவிட்டு பிறகு தமக்குள் பங்கு பிரித்துக்கொள்வோம் என்று ஏதாவது உடன்பாடுண்டோ யாரறிவார்? சிங்களம், சைவர்களையும் தமிழ்க்கிறிஸ்தவர்களையும் மோத விடுகிறதே தவிர அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். இந்த மனிதர் ஒரு அரைவேக்காடு துள்ளுது.   தங்களிடம் உள்ளதை இழக்கவோ மதம் மாறுபவர்களை தடுக்கவோ  முடியவில்லை இவர்களால், இழப்பவர்களை குறைகூறிக்கொண்டு. ஏழைகள் இருக்கும்வரை இந்தப்பிரச்சனை இருக்கும். அவர்கள் தங்கள் தேவைகள் நிறைந்தவுடன் மீண்டும் திரும்புவார்கள், இது கடந்தகால படித்தவர்கள் கூட செய்து காட்டியிருக்கிறார்கள். உண்மையில் தங்களது உரிமைகள் பறிக்கப்பட்டு, அடிமைகளாய், அவர்களது வாழ்க்கை முறையால் கவரப்பட்டு மதம் மாறுவோரை இவர்களால் தடுக்கவும் முடியாது, மீட்கவும் முடியாது இவர்கள் தங்களை மாற்றும்வரை, இன்னும் அதிகரிக்கவே செய்யும்.   

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 3000க்கும் மேற்பட்ட வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து! இந்த வருடத்தில் 3000 க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது உரிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததுமே பிரதான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் மொஹமட் மஹிஷ் தெரிவித்துள்ளார். எனவே, வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது அவசியமானது. நாட்டின் வீதி அமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2024/1407734
    • டொனால்ட் ட்ரம்பின்  (Donald Trump) தைரியம் தன்னை ஈர்த்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin)  தெரிவித்துள்ளார். ரஷ்யாவில்(Russia)  நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “டொனால்டு ட்ரம்பை தாமாகவே முன்வந்து தொடர்பு கொள்வதில் எந்த அவமானமும் இருப்பதாக தாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ள விளாடிமிர் புடின், அதை நான் செய்ய விரும்பவில்லை. டொனால்ட் ட்ரம்பின் தைரியம் எவரேனும் ஒருவர் மீண்டும் தம்மை தொடர்பு கொண்டால் அதை தாம் வரவேற்பதாகவும், விவாதிக்க தயார். அது போலவே, டொனால்டு ட்ரம்புடனும் தாம் விவாதிக்க தயாராக இருக்கின்றேன்.   ஜூலை மாதம் ட்ரம்ப் மீதான தாக்குதலின் போது அவரின் செயல்பாடு தம்மை ஈர்த்தது. அவர் ஒரு தைரியமான நபராக மாறியுள்ளார். மட்டுமின்றி, அந்த தருணத்திலும் பொதுவான கொள்கைகளுக்காக போராட வேண்டும் என ட்ரம்ப் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது உண்மையில் வியக்க வைக்கும் செயல். புடினின் வாழ்த்து ஒரு நபர் தனது உண்மையான சுயத்தை அசாதாரணமான சூழ்நிலைகளில் வெளிப்படுத்துகிறார், அங்கு அவர் ஒரு மனிதனைப் போல தைரியமான முறையில் தன்னை நிரூபித்தார். ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் அவரை கேலி செய்தவர்கள் பலர். ஒரு முடிவெடுக்க முடியாமல் அவரை தடுமாற வைத்தார்கள்.தற்போது என்ன நடக்கும் என்பது தமக்கு தெரியவில்லை ” என்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஸ்ய ஜனாதிபதி புடினின் வாழ்த்து மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நேர்காணலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகபூர்வமாக அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/putin-praises-trump-says-russia-ready-for-dialogue-1731016171#google_vignette
    • ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பியோடிய 43 குரங்குகள். அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பி ஓடியுள்ளன. பாதுகாவலரால் தவறுதலாக மையத்தின் கதவு திறக்கப்பட்டதாகவும், இந்த குரங்குகள் தப்பிச் சென்றதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி குறித்த பகுதியில் குரங்கு கூட்டத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், குடியிருப்பாளர்கள் தங்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பாதுகாப்பாக மூடி வைக்குமாறு மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கரோலினா மாகாணத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளும் தப்பியோடிய குரங்குகளைக் கண்டால், உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1407752
    • பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டத்திற்குப் பதில் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்வித்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.    கண்டி தபால் நிலைய கேட்போர்கூடத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.   அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,    கடந்த காலங்களில் எதுவித அடிப்படையும் அற்ற நிலையில் நண்பர்களுக்கும் னையவர்களுக்கும்  அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.   எதிர்கட்சியில் இருந்து யார் ஆதரவு தருகிறார்ளோ  அவர்களுக்கு அமைச்சர் பதவிகள்  வழங்கப்பட்டன.  அவ்வாறான அமைச்சுக்களுக்கு விஞ்ஞான ரீதியாக தொடர்புகள் இருக்க வில்லை.   உதாரணத்திற்கு உயர் கல்வி, பெருவீதிகள் அமைச்சு என்று ஒன்று இருந்தது. உயர் கல்விக்கும் பெரு வீதிக்கும் விஞ்ஞான ரீதியில் என்ன தொடர்பு எனக் கேட்டதற்கு  உயர் கல்வி மாணவர்கள் எப்போதும் பெருவீதிகளில் இருந்து ஆர்பாட்டம் செய்கிறார்கள், எவேபொருத்தமானது  எனக் கூறப்பட்டது. இவை நகைப்புக்கிடமான விடயங்கள்.  இப்படி யல்லாது எதிர்காலத்தில் கல்வியுடன் தொடர்புபட்ட சகல துறைகளையும் ஒன்றிணைத்த அமைச்சு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.   அதாவது உயர் கல்வி, பாடசாலைக் கல்வி, பாலர் கல்வி, தொழில் நுற்பக் கல்வி,தொழிற் கல்வி,தொழில் நுட்பக்கல்லூரிகள், பல்லைக்கழகங்கள், பாசலைச்சவைகள்  போன்ற கல்வியுடன் தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒன்றாக இணைக்கப்பட  வேண்டும்.  மேலும் தற்போது பரீட்சையை மையமாகக் கொண் கல்வியே உள்ளது. 10 முதல் 12 வயது வரையானவர்கள் கூட புலமைப்பரிசில் என்று பரிட்சையை மையமாகக் கொண்டு போட்டிக்காகப் பயில் கின்றனர்.   இந்த வயதுப்பிரிவு போட்டிப் பரீட்சைக்குறிய வயதல்ல. எனவே நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகள் உருவாகும் கல்வித்திட்டமே தேவை என்றார்.     https://www.virakesari.lk/article/198152
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.