Jump to content

சிங்கப்பூரில் மரணதண்டனையை எதிர்கொள்ளும் தமிழருக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் - குடும்பத்தவர்கள் உருக்கமான வேண்டுகோள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மரண தண்டனை உலகம் முழுவதும் ஒழிக்கபட வேண்டுமாயின் ஜனநாயகம் முற்றி வெடித்து   உலகத்திற்கே அதனை போதிக்கும் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.

Si la peine de mort doit être abolie partout dans le monde, elle doit commencer par les États-Unis d'Amérique, où la démocratie a explosé et l'a enseignée au monde.

If the death penalty is to be abolished all over the world, it must start from the United States of America, where democracy has exploded and taught it to the world.

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

அக்னியஷ்த்ரா

நான் சிங்கப்பூர் சட்டநுணுக்கங்கள் தெரிந்த ஒரு சட்டத்தரணியில்லை. எனக்கு தெரிந்த வரையில் சிங்கையில் உள்ள குற்றப்பத்திரிகை தயார்செய்யும் போது அதனை தயாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் எவற்றையெல்லாம் சமர்ப்பிப்ப

அக்னியஷ்த்ரா

https://singaporelegaladvice.com/law-articles/free-legal-clinics/ சிங்கப்பூரில் இலவசமாகவே சட்டஆலோசனை பெற வசதிகள் உண்டு  ஆனால் நமது பக்கம் பெரிய பெரிய ஓட்டைகளை வைத்துக்கொண்டு நிரபராதி என்று தீர்

Justin

இதில் இருட்டு, மறைப்பு ஒன்றுமில்லை. ஒரு நாட்டின் சட்டத்துறையின் அடிப்படை நோக்கம், சட்டப் படி ஒழுகும் பிரஜைகளுக்கு, சட்டமீறல் செய்யும் தரப்பிடமிருந்து பாதுகாப்பு அல்லது நிவாரணம் வழங்குவது தான். இத

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

தமிழனை மட்டும் குறிவைத்து தண்டனை கொடுக்கப்படவில்லை.  2023 இற்கு முதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 9 பேரில் 2 அல்லது 3 பேர் தான் தமிழ் பெயர்களை கொண்டவர்கள். மலேசியர்களும் , சீனர்களும் கூட இதில் உள்ளனர்.

https://en.wikipedia.org/wiki/Capital_punishment_in_Singapore

தமிழ் தாயின் தமிழ் பால் குடித்து வளர்ந்தவர்கள் குற்றம் செய்வார்களா என்ன?

சிங்கப்பூர் சனத்தொகையில்.. 30 சதவீதம் தமிழர்களா... அவர்கள்.... குற்றவாளிகளா..??! சிங்கப்பூரில்.. போதைவஸ்தை தமிழர்கள் தான் கடத்துகிறார்களா.. அல்லது பாவிக்கிறார்களா..??! போதைவஸ்து பாவனையை தடுப்பது சிங்கப்பூரின் கொள்கை. அதே நாடு தன் பிரஜைகள்.. மற்றைய நாடுகளில் அதை பாவிப்பதை தடுக்க ஒரு ஒத்துழைப்பும் இல்லை.

மேலும்.. இந்த வழக்கில்... குறித்த தமிழ் இளைஞன் போதை வஸ்தை வைத்திருந்ததோ.. கடத்தினதோ இறுதி வரை உறுதி செய்யப்படவில்லை. அவரது தொலைபேசில்.. ஒரு போதைவஸ்து சப்பிளையரின் போன் நம்பர் இருந்தது தான்.. மரண தண்டனைக் குற்றமாகி இருக்கிறது.

இதனை தான்.. மனித உரிமை அமைப்புக்கள்.. மற்றும் மரண தண்டனைக்கு எதிரான அமைப்புக்கள் கேள்விகுரியதாக்கி உள்ளன. 

தமிழர்கள் விடயத்தில் சிங்கப்பூர் நெகிழ்வுப் போக்கில்லாமல் நடந்து கொள்வது இது முதற்தடவையும் அல்ல. அதற்காக சிங்கப்பூர் மலே ஆக்கள் திறம்.. குற்றம் செய்யாத சுத்தவான்கள் என்ற சிங்கப்பூரின் காட்சிப்படுத்தல்.. கேவலமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, nedukkalapoovan said:

உங்களை நீதிபதி ஆக்கினால் தமிழன் என்ற சேர்டிபிகற் இருந்தால் எந்த கேவலமான செயலை செய்த குற்றவாளியையும் விடுதலை செய்திருப்பீர்கள். உங்களின் தொடர்சசியான கருத்துகளை பார்ககும் போது சிங்கள இனவாதிகளுக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை.  

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

என் நேரம் பொன்னானது!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வன்னியில் , புலிகளின் ஆழுகையின் கீழ் இருந்தேன். நள்ளிரவிலும் ஆண் பெண் பேதமின்றி எல்லோரும் நடமாடித் திரிந்தோம். பயம் என்பது எள்ளளவும்  இருந்ததில்லை.  குற்றங்கள் மிக மிக   மிகக் குறைவு. ஏனென்றால் அங்கே சட்டங்களில் கடுமை. 

சிங்கப்பூர் சிங்கப்பூராகவே இருக்க வேண்டும், சிங்களப்பூர் ஆக அல்ல.

வாழ்க சிங்கப்பூர். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

அமெரிக்க 18 வயது இளைஞர் ஒருவர், சிங்கப்பூரில் போன இடத்தில், ஸ்பிரே பெயிண்ட் கான் ஒன்றினை வைத்து, கார்களை எல்லாம், பெயிண்ட் பண்ணி குறும்பு செய்தார். அவரை கைது செய்து, 50 பிரம்படி. அமெரிக்க ஜனாதிபதி மன்னிக்குமாறு கேட்டும், தண்டனை கொடுத்தே, அனுப்பி வைத்தார்கள். 

நாதம்ஸ் 
நீங்கள் கூறியது எல்லாமே சரி ஆனால் 50 பிரம்படி என்பது பிழை, 24 அடிகளுக்கு மேல் ஒரு வழக்கிற்கு வழங்கமாட்டார்கள். இந்த பிரம்படிகள் எல்லாம் சும்மா ஆசிரியர் மாணவருக்கு அடிக்கும் அடிகள் அல்ல. 
ஒரு முழு வளர்ச்சியடைந்த மனிதன் 6 இற்கு மேல் ஒரேதடவையில் வாங்கினாலே அவர் சூப்பர் மேன் வகையறா தான். மூன்றிற்கே மயங்கிவிழுத்துவிடுவினம். அப்படி மயங்கி விழுந்தால் ஆளை எழுப்பி பின்னால் சூடு விழுந்த இடத்தில் களிம்பு தடவி ஆறவைத்து இன்னுமோர் நன்னாளில் மீண்டும் சூடு விழும். 
பெரிய அப்பாடக்கர் என்றால் பந்தாவாக எழுதிக்கொடுத்துவிட்டு ஒரே தடவையில் 10 சூடு வரை வாங்கலாம்.

அந்த அமெரிக்க வாலிபருக்கு 6 சூடு தான் தண்டனை, அமெரிக்கா தனது இராசதந்திர பலம் முழுவதையும் பாவித்தும் சிங்கப்பூர் இரண்டு சூடுகளை மட்டும் குறைத்துக்கொண்டது. அதன்படி 5 May 1994 இல் அவருக்கு சூடு விழுந்தது. 
உபரித்தகவல்: ஒருவர் இரண்டுக்கு மேல் சூடு வாங்கினால்  ஆயுளுக்கும் அந்த வீரத்தழும்பு  பின்புறத்தில் இருக்கும். அன்றுமுதல் அவர் மார்க் மாயாண்டி என்று அன்புடன் அழைக்கப்படுவார்
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, அக்னியஷ்த்ரா said:

உபரித்தகவல்: ஒருவர் இரண்டுக்கு மேல் சூடு வாங்கினால்  ஆயுளுக்கும் அந்த வீரத்தழும்பு  பின்புறத்தில் இருக்கும். அன்றுமுதல் அவர் மார்க் மாயாண்டி என்று அன்புடன் அழைக்கப்படுவார்.

மார்க் மாயாண்டி. 😁 😂

இப்படி அடி வாங்கியவர்கள்… பொது வெளியில் நடமாடும் போது
அவர்களின் நடை, உடை, பாவனையை பார்த்து….
இவர் மார்க் மாயாண்டி என்பதை கண்டு பிடிக்க முடியுமா. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

போதைவஸ்து பாவனையை தடுப்பது சிங்கப்பூரின் கொள்கை. அதே நாடு தன் பிரஜைகள்.. மற்றைய நாடுகளில் அதை பாவிப்பதை தடுக்க ஒரு ஒத்துழைப்பும் இல்லை.

யார் சொன்னது 
கீழே இருக்கும் இணைப்பை வாசியுங்கள். நல்லவேளை சிங்கப்பூர் அரசாங்கம் ஒவ்வொரு வெளிநாடு செல்லும் குடிமக்கள் பின்னேயும் ஒரு காவற்துறை அதிகாரியை அனுப்பவேண்டும் என்று சொல்லாதமட்டிலும் சந்தோசம்  
https://www.channelnewsasia.com/singapore/saliva-test-drugs-roadblocks-land-checkpoints-changi-airport-3303071

6 hours ago, nedukkalapoovan said:

தமிழர்கள் விடயத்தில் சிங்கப்பூர் நெகிழ்வுப் போக்கில்லாமல் நடந்து கொள்வது இது முதற்தடவையும் அல்ல. அதற்காக சிங்கப்பூர் மலே ஆக்கள் திறம்.. குற்றம் செய்யாத சுத்தவான்கள் என்ற சிங்கப்பூரின் காட்சிப்படுத்தல்.. கேவலமானது. 

சிங்கையில் சீனர்கள் தான் அதிகம் அதற்குப்பிறகுதான் மலே. தவறுசெய்தால் தண்டனை உறுதி அதுதான் சிங்கப்பூர், அவர்களது புலனாய்வு, துப்பறியும் முறை எல்லாம் சர்வதேசத்திற்கு இணையானது. தொலைபேசி இலக்கத்தை வைத்திருந்ததை ஆதாரமாக மட்டும்வைத்து  பிடித்துக்கொண்டுபோய் அடைக்கும் வேலையை இலங்கை வேண்டுமானால் செய்யலாம். சிங்கப்பூரில் மட்டும் இந்த வேலை நடந்தால் நீதிபதி முதல் போலீஸ் உத்தியோகத்தர் வரை வருடக்கணக்கில் களி தின்னுவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

உங்களை நீதிபதி ஆக்கினால் தமிழன் என்ற சேர்டிபிகற் இருந்தால் எந்த கேவலமான செயலை செய்த குற்றவாளியையும் விடுதலை செய்திருப்பீர்கள். உங்களின் தொடர்சசியான கருத்துகளை பார்ககும் போது சிங்கள இனவாதிகளுக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை.  

உங்களுக்கு எழுதிற கருத்தை வாசிச்சு விளங்கிற பிரச்சனை இருக்குது.

எல்லா சமூகங்களிலும் குற்றவாளிகள் உள்ளனர். ஆனால்.. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஒரு சில சிறுபான்மை இன மக்கள் தொடர்ந்து ராகெட் குறூப்புக்குள் வைக்கப்பட்டு.. கண்காணிக்கப்படுவதும்.. அவர்கள் தான் குற்றங்களை அதிகம் செய்கிறவர்கள் என்ற மனோபாவமும் வளர்க்கப்பட்டு இருக்கிறது. அதில் தமிழர்கள் அடங்குவது.. ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

இதே நிலை அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு உள்ளது. பிரித்தானியாவிலும் வெள்ளைகளை விட கறுப்பர்கள்.. அதிகம் தடுத்தி நிறுத்தி.. உடற்சோதனை செய்யப்படுகிறார்கள். இதற்கு கறுப்பர்கள் என்றால்.. குற்றம் செய்பவர்கள் என்ற மனோபாவத்தின் தாக்கமே அதிகம். அதே தான் சிங்கப்பூரிலும்.. தமிழர்கள் மீது உள்ளது. அதனால் தான்... தமிழர்கள் மீதான.. சிங்கப்பூரின் நடவடிக்கைகள்.. சும்மா சிலாகித்துப் போகிற விடயம் அல்ல. நீண்ட மனோபாவப் பிரச்சனையின் பின்னணியில் தான் அதன் நீதிச் செயற்பாடு உள்ளது. அதனால்.. தான் சிங்கப்பூர் தொடந்து சர்வதேச அளவில் மனித உரிமைகள் விடயத்தில் அதிகம் எதிர் விமர்சிப்பை எதிர்கொள்ளும் நாடாக உள்ளது. 

இந்த விடயத்தில்.. சிங்கை.. மற்றும் மலேசியா வாழ் தமிழ் மக்களுக்கு எமது ஆதரவு இருக்கும். அதற்காக தமிழ் குற்றவாளிகள் பெருக உதவுவதாக அது அமையாது. தமிழ் மக்கள் மீதான இரண்டாம் தர மூன்றாம் தர அணுகுமுறைகளை இந்த நாடுகள் கைவிட வேண்டும். 

7 hours ago, நிழலி said:

என் நேரம் பொன்னானது!

அதே. 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

யார் சொன்னது 
கீழே இருக்கும் இணைப்பை வாசியுங்கள். நல்லவேளை சிங்கப்பூர் அரசாங்கம் ஒவ்வொரு வெளிநாடு செல்லும் குடிமக்கள் பின்னேயும் ஒரு காவற்துறை அதிகாரியை அனுப்பவேண்டும் என்று சொல்லாதமட்டிலும் சந்தோசம்  
https://www.channelnewsasia.com/singapore/saliva-test-drugs-roadblocks-land-checkpoints-changi-airport-3303071

சிங்கையில் சீனர்கள் தான் அதிகம் அதற்குப்பிறகுதான் மலே. தவறுசெய்தால் தண்டனை உறுதி அதுதான் சிங்கப்பூர், அவர்களது புலனாய்வு, துப்பறியும் முறை எல்லாம் சர்வதேசத்திற்கு இணையானது. தொலைபேசி இலக்கத்தை வைத்திருந்ததை ஆதாரமாக மட்டும்வைத்து  பிடித்துக்கொண்டுபோய் அடைக்கும் வேலையை இலங்கை வேண்டுமானால் செய்யலாம். சிங்கப்பூரில் மட்டும் இந்த வேலை நடந்தால் நீதிபதி முதல் போலீஸ் உத்தியோகத்தர் வரை வருடக்கணக்கில் களி தின்னுவர்.

என்ன அக்னி.. தனது பிரஜை ஒருவரின் மனோநிலையில் மாற்றத்தை உருவாக்க முடியாத சிங்கப்பூர்.. கடும் சட்டங்களை தனது எல்லைக்குள் வைச்சிருப்பது.. அதன் தோல்வி தானே...???! ஏன் பிற நாடுகளில் குற்றங்களை பதிவு செய்யும் தனது பிரஜைகளை அதன் கடவுச் சீட்டு மூலம் கண்காணிக்கலாம்.. தானே.. ஆளுக்கு பின்னால் திரியனுன்னு இல்லையே. அதன் மூலம்.. தன் நாடு சட்டங்கள் மூலம் மட்டுமல்ல.. தனது பிரஜைகள் மூலமான குற்றங்களையும் தடுப்பதாக உலகிற்கு காட்டலாம் தானே.. ஏன் செய்ய முடியவில்லை..???!

சிங்கப்பூர் எல்லாத்திலும் திறம்.. கள்ளமட்டை போடுவதில் இருந்து போதை வஸ்து பாவிப்பது.. விபச்சாரம் வரை எல்லாத்திலும் திறம் தான். ஆனால்.. மனிதர்களை அடிப்படை மனிதாபிமான முறையில் கூட நடத்தாமை.. சிறுபான்மை இன மக்களை குற்றவாளிகள் என்ற மனோநிலையில் நடத்துவது.. தெற்காசிய பிரஜைகளை அடிமைகள் போல நடத்துவது.. இவை எல்லாம் அங்குண்டு. குறிப்பாக.. ஹிந்திய வேலையாட்களை நடத்தும் முறைமை சர்வதேச தரத்தில் இல்லை. நவீன அடிமைத்தன தரத்தில் தான் உள்ளது.

மேலும் நீதிமுறையில்.. சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு மதிப்பில்லை. இந்த இளைஞரின் விடயத்தில் கூட அவர் தனக்காக இறுதியாக வாதாட ஒரு சட்டவாளரை கூட வைக்க முடியவில்லை. அதற்கான அவகாசம் கூட இல்லை. சிங்கப்பூரில்.. ஊழல்.. நடக்கவில்லையோ..??!

3 hours ago, Kapithan said:

நான் வன்னியில் , புலிகளின் ஆழுகையின் கீழ் இருந்தேன். நள்ளிரவிலும் ஆண் பெண் பேதமின்றி எல்லோரும் நடமாடித் திரிந்தோம். பயம் என்பது எள்ளளவும்  இருந்ததில்லை.  குற்றங்கள் மிக மிக   மிகக் குறைவு. ஏனென்றால் அங்கே சட்டங்களில் கடுமை. 

சிங்கப்பூர் சிங்கப்பூராகவே இருக்க வேண்டும், சிங்களப்பூர் ஆக அல்ல.

வாழ்க சிங்கப்பூர். 

புலிகள் கூட போதைவஸ்துக் குற்றங்களுக்கு உடனடியாக மரண தண்டனை வழங்குவதில்லை. தொடர் எச்சரிப்புகளுக்கு பிறகும் தொடர்ந்து குற்றம் செய்தால் மட்டும் தான் தண்டனை.

அதுசரி.. புலிகளின் இந்த நடைமுறைகளை பயங்கரவாதம் என்று சொல்லி புலிகளையே அழிச்சவை.. சிங்கப்பூரின்.. செயற்பாடுகளை.. சவுதியின் செயற்பாடுகளை ஏனோ.. பயங்கரவாதம் என்று சொல்லுவதில்லை. ஏனேனில்.. ஒன்று சர்வதேச வியாபார காம்பிளிங் மையம். இன்னொன்று உலக எண்ணெய் வியாபார காம்பிளிங் மையம். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nedukkalapoovan said:

என்ன அக்னி.. தனது பிரஜை ஒருவரின் மனோநிலையில் மாற்றத்தை உருவாக்க முடியாத சிங்கப்பூர்.. கடும் சட்டங்களை தனது எல்லைக்குள் வைச்சிருப்பது.. அதன் தோல்வி தானே...???! ஏன் பிற நாடுகளின் குற்றங்களை பதிவு செய்யும் தனது பிரஜைகளை அதன் கடவுச் சீட்டு மூலம் கண்காணிக்கலாம்.. தானே..

இதற்கு பெயர் தான் எழுதவேண்டுமென்பதற்காக  எழுதுவது 
தாய்லாந்து போன்ற போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்கிய நாட்டில் ஒரு சிங்கப்பூர் குடிமகன் போதைப்பொருள் பாவித்தால் அது அந்த நாட்டில் குற்றமாக பதியப்படுமா கடவுச்சீட்டுமூலம் கண்காணிக்க ...?

29 minutes ago, nedukkalapoovan said:

சிறுபான்மை இன மக்களை குற்றவாளிகள் என்ற மனோநிலையில் நடத்துவது.. தெற்காசிய பிரஜைகளை அடிமைகள் போல நடத்துவது.. இவை எல்லாம் அங்குண்டு. குறிப்பாக.. ஹிந்திய வேலையாட்களை நடத்தும் முறைமை சர்வதேச தரத்தில் இல்லை.

சிறுபான்மை இன மக்கள் விகிதாசாரத்தில் பெரும்பாண்மை இனமக்களை விட அதிகக்குற்றத்தில் ஈடுபட்டால் அப்படித்தான் நிலைமை இருக்கும். இங்கு வந்துபாருங்கள் போனவருடம் சிங்கப்பூரை கலக்கிய வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும்  இந்திய வம்சாவளிகளும்  தமிழர்களும். சிங்கையில் இருக்கும் Secret societyகளில் சீனர்களை விட இன விகிதாசாரத்தில் குறைந்த இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் அதிகம்.

சிங்கையில் ஒரு ஹிந்திய தெலுங்கு தொழிலாளியினால், நமது மட்டக்களப்பை சேர்ந்த பாலியல் தொழிலாளி கர்ப்பிணிப்பெண் ஒருவர் வயிற்றிலிருந்த கருவுடன் சேர்த்து கொலை செய்யப்பட்டது தெரியுமா. தெற்காசியாவிலிருந்து வயிற்றை கழுவ என்று வந்து விட்டு இவ்வாறான வேலைகளை பார்த்தால் குற்றச்சமூகமாகத்தான் அடையாளப்படுத்தப்படுவோம்
https://soc.culture.singapore.narkive.com/6fdsz0mx/only-life-sentence-for-indian-ft-murderer
 
செய்வது பூரா கேப்மாரி வேலைகள் ஆனால் தமிழர்கள் என்று மரியாதை ஹைகோர்ட் வேற வேண்டும் 

Edited by அக்னியஷ்த்ரா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, nedukkalapoovan said:

மேலும் நீதிமுறையில்.. சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு மதிப்பில்லை. இந்த இளைஞரின் விடயத்தில் கூட அவர் தனக்காக இறுதியாக வாதாட ஒரு சட்டவாளரை கூட வைக்க முடியவில்லை. அதற்கான அவகாசம் கூட இல்லை. சிங்கப்பூரில்.. ஊழல்.. நடக்கவில்லையோ..??!

https://singaporelegaladvice.com/law-articles/free-legal-clinics/

சிங்கப்பூரில் இலவசமாகவே சட்டஆலோசனை பெற வசதிகள் உண்டு 
ஆனால் நமது பக்கம் பெரிய பெரிய ஓட்டைகளை வைத்துக்கொண்டு நிரபராதி என்று தீர்ப்பு எதிர்பார்க்க முடியாது. தீர்ப்பளித்திருப்பது சிங்கப்பூர் உயர்நீதிமன்றம். இவர்கள் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தர வதிவிடவாளர்களாக இருப்பின் அவர்களுக்கு நாம் நீதித்துறையை பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எனது நண்பன் சிங்கப்பூர் சீன  குடிமகனுக்கெதிராகவே வீட்டு வாடகை பிரச்சினை தொடர்பாக  வழக்கு தொடர்ந்து வென்று சிங்கை குடிமகனுக்கு தண்டப்பணத்துடன் தனக்கு  நஷ்ட்டஈடும் பெற்றவன். அன்று எனது கண்ணிற்கு முன்னே வந்தது இலங்கையில் சிங்களவனுக்கெதிராக சிங்கள ஊரில்  நான் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற கற்பனை காட்சியே. 
சும்மா உங்களது தமிழ் கோஷங்களால் எந்த பிரயோசமுமில்லை, நெற்றிக்கண் திறப்பினும் தமிழன் குற்றம் செய்தால் குற்றவாளியே. ஆட்டிற்குள் கொண்டுவந்து மாட்டை விடவேண்டாம் 
(சிங்கப்பூரிற்குள் கொண்டுவந்து மலேசியாவை சொருகவேண்டாம் அது முற்றான முஸ்லீம் நாடு அதனை பற்றி பேசவேண்டிய அவசியமே இல்லை )     

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, அக்னியஷ்த்ரா said:

Convicted traffickers who can prove that they were only couriers may be able to avoid the death penalty. Drug possession and consumption draw lesser punishments including prison and fines.

In Tangaraju Suppiah's last appeal, the judge agreed with the prosecution that he had been responsible for co-ordinating the delivery, which made him ineligible for a more lenient sentence.

Activists had raised concerns that he had not been given adequate access to a Tamil interpreter and had been forced to represent himself at his last appeal because his family was unable to secure a lawyer.

(https://www.bbc.co.uk/news/world-asia-65395390

நீங்கள் சொல்லுற இலவச சட்ட வல்லுனர்கள் ஏன் உதவவில்லை...??!

மேலும்.. மலேசிய - சிங்கப்பூர் எல்லை திறந்து தானே இருக்குது சிங்கப்பூர் ஆக்களுக்கும் மலேசிய ஆக்களுக்கும். குற்றவாளிகள் சுதந்திரமாகப் போய் வரக் கூடிய சூழல் இருக்குது.

மேலும்.. போதைவஸ்து வைச்சிருந்தால்.. பாவிச்சால்.. குற்றம் குறைவு. ஆனால்.. கடத்தலை திட்டமிட்டு நடத்தினால்.. மரண தண்டனை..??! இதுதான் சிங்கப்பூர் சட்டமென்றால்.. எல்லைகளை மூடுவது தானே தகும். ஏனெனில் அயல்நாடுகளில் அது குற்றமில்லாத போது. 

மேலும் தமிழர்கள் குற்றவாளிகளாகப் பெருகனுன்னு இதைச் சொல்லவில்லை.. தமிழர்கள் தான் குற்றவாளிகள் என்பதான மனோநிலை வளர்வது ஆபத்து என்பதை தான் வலியுறுத்துகிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nedukkalapoovan said:

Activists had raised concerns that he had not been given adequate access to a Tamil interpreter and had been forced to represent himself at his last appeal because his family was unable to secure a lawyer.

https://en.wikipedia.org/wiki/Tangaraju_Suppiah
தங்கராஜு சுப்பையாவின் தூக்கு தண்டனை  நிறைவேற்றப்பட்டுவிட்டது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக. Plea Bargain ( பேரம் பேசலை ஏற்றுக்கொண்டிருந்தால் 12 வருடங்களில் சில மார்க்குகளுடன் வெளியே வந்திருக்கலாம் ) 
சிங்கப்பூர் மலேசிய தமிழர்கள் மீண்டும் அசட்டுத்தைரியத்தில் சூப்பர் மேன்களாக மாறி போதைப்பொருள் கடத்தி உங்களை நீங்களே மாய்த்துக்கொல்லாமல் அடக்கமாக இருக்குமாறு வினயமாக கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்  

Edited by அக்னியஷ்த்ரா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

புலிகள் கூட போதைவஸ்துக் குற்றங்களுக்கு உடனடியாக மரண தண்டனை வழங்குவதில்லை. தொடர் எச்சரிப்புகளுக்கு பிறகும் தொடர்ந்து குற்றம் செய்தால் மட்டும் தான் தண்டனை.

தவறான புரிதல் என நம்புகிறேன். 

7 minutes ago, Kapithan said:

ஏன், உங்களுக்கு யார் மேலாவது சந்தேகமோ ? 

🤣

நெடுக்ஸ் சிங்கப்பூரின் மனிதாபிமானம் தொடர்பாக கோபம் கொள்ளுகிறார். அவர் வெளிநாட்டுக்கு வரும்போது சிங்கப்பூர் வழியாக வந்தவரோ என்று சந்தேகமாக இருக்கிறது  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

https://en.wikipedia.org/wiki/Tangaraju_Suppiah
தங்கராஜு சுப்பையாவின் தூக்கு தண்டனை  நிறைவேற்றப்பட்டுவிட்டது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக. Plea Bargain ( பேரம் பேசலை ஏற்றுக்கொண்டிருந்தால் 12 வருடங்களில் சில மார்க்குகளுடன் வெளியே வந்திருக்கலாம் ) 
சிங்கப்பூர் மலேசிய தமிழர்கள் மீண்டும் அசட்டுத்தைரியத்தில் சூப்பர் மேன்களாக மாறி போதைப்பொருள் கடத்தி உங்களை நீங்களே மாய்த்துக்கொல்லாமல் அடக்கமாக இருக்குமாறு வினயமாக கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்  

அவர் மரண தண்டனையில் இருந்து எவ்வாறு தப்பியிருக்கலாம் என்பதை விரிவாக கூறமுடியுமா? வேறு யாருக்கும் பயன்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

நான் வன்னியில் , புலிகளின் ஆழுகையின் கீழ் இருந்தேன். நள்ளிரவிலும் ஆண் பெண் பேதமின்றி எல்லோரும் நடமாடித் திரிந்தோம். பயம் என்பது எள்ளளவும்  இருந்ததில்லை.  குற்றங்கள் மிக மிக   மிகக் குறைவு. ஏனென்றால் அங்கே சட்டங்களில் கடுமை. 

சிங்கப்பூர் சிங்கப்பூராகவே இருக்க வேண்டும், சிங்களப்பூர் ஆக அல்ல.

வாழ்க சிங்கப்பூர். 

அதே.

தலைவரின் சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற கோட்பாடும்

சீமான் சொல்லும் அன்பான சர்வாதிகாரமும் இதைத்தான் சொல்கின்றன. 

3 hours ago, Kapithan said:

நெடுக்ஸ் சிங்கப்பூரின் மனிதாபிமானம் தொடர்பாக கோபம் கொள்ளுகிறார். அவர் வெளிநாட்டுக்கு வரும்போது சிங்கப்பூர் வழியாக வந்தவரோ என்று சந்தேகமாக இருக்கிறது  

சிங்கப்பூர் மற்றும் மலேஷியா சட்டங்கள் கத்திநுனியில் நடப்பது போன்றவை. சிங்கப்பூரைப் பற்றி அதிகம் தெரியவில்லை. ஆனால் மலேஷியாவில் மலேயர்களுடன் ஒப்பிடுகையில் தமிழர்களுக்கு இலங்கையில் இருக்கும் சட்டப்பாதுகாப்பு கூட இல்லை. 😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

அவர் மரண தண்டனையில் இருந்து எவ்வாறு தப்பியிருக்கலாம் என்பதை விரிவாக கூறமுடியுமா? வேறு யாருக்கும் பயன்படலாம்.

நான் சிங்கப்பூர் சட்டநுணுக்கங்கள் தெரிந்த ஒரு சட்டத்தரணியில்லை. எனக்கு தெரிந்த வரையில் சிங்கையில் உள்ள குற்றப்பத்திரிகை தயார்செய்யும் போது அதனை தயாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் எவற்றையெல்லாம் சமர்ப்பிப்பார்கள், நீதிமன்றத்தில் உள்ள சில நடைமுறைகளை பற்றியும் அதன் இந்த வழக்கு தொடர்பான தாக்கத்தையும் விபரிக்கிறேன்.

1. குற்றத்தின் தன்மைக்கேற்ப அதனை விசாரிக்கும் பொறுப்பு சிங்கை போலீஸ் படையின் குறிப்பிட்ட பிரிவுக்கு வழங்கப்படும். குற்றத்தின் கடுமைக்கேற்ப அதனை IO (Investigation Officer) அல்லது SIO (Senior Investigation officer ) இடம் ஒப்படைப்பார்கள். இனி குற்றவாளி பிடிபடும் வரை இந்த அதிகாரியின் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டு புலனாய்வில் ஈடுபடுவார்கள்.

2. இப்போது சந்தேகநபர்  பிடிபட்டால் அவரது வசமிருக்கும் அனைத்து ஆதாரங்களையும் போலீஸ் பறிமுதல் செய்வதுடன் குற்றத்தின் முகாந்திரம்,பின்னணி, வேறு சந்தேகநபர்களுக்கு தொடர்பு உண்டா என்பதை அறிய விசாரணை நடத்துவார்கள். இந்த தருணத்தில் இனி தப்பிப்பிழைக்க முடியாது என்று சந்தேகநபர் விசாரணைக்கு ஒத்துழைத்தால் அவர்களது ஒத்துழைப்பு பற்றிய அதிகாரியின் அறிக்கையும் வழக்கு தாக்கல் செய்யும் போது சேர்த்து ஒப்படைக்கப்படும். 

3. இனி வழக்கு நடைபெறும்போது அரச தரப்பில் குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்தபட்ச தண்டனையுடன் வழக்கை முடிவுறுத்துவதாக சந்தேகநபரிட்கு அரசதரப்பிலிருந்து பேரம்பேசல் நடக்கும்
சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டால் வழங்கக்கூடிய  மிகக்குறைந்த தண்டனையுடன் வழக்கை சிங்கை நீதித்துறை முடித்துவைக்கும். சந்தேகநபர் நீதித்துறையை சவாலுக்குட்படுத்தி வழக்கை தொடர்ந்தால் வழக்கு முடிவில் குற்றவாளியாக இனங்காணும் பட்சத்தில் அதியுச்ச தண்டனை பரிசாக கிடைக்கும்  

இனி இந்த வழக்கில் தங்கராஜு சுப்பையா A.K.A  "இந்தியா",  செல்வா என்ற நபர் மூலம் மலேசியாவிலிருந்து மோகன் என்பவரிடம் அனுப்பிவைக்கப்பட்ட கஞ்சாவினை எப்படி தனது கைக்கு கொண்டுவர பிரயத்தனம் பண்ணினார் என்பதை இணைத்திருக்கும் இணைப்பில் படிக்கலாம். ஆனால் மோகன் எல்லை சோதனைச்சாவடியிலேயே மாட்டி குற்றத்தை ஒப்புக்கொண்டு "இந்தியா"  வை பிடிக்க உதவியதால் 23 வருட 
சிறை 15 சூடுகளுடன் தப்பிவிட .
போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதித்துறையை சவாலுக்குற்படுத்தலாம் என்று கிடைத்த ஆலோசனைக்கேற்ப நீதித்துறை வழங்கிய 20 வருட சிறையை மறுத்ததோடு அல்லாமல் நீதித்துறை படிப்படியாக குறைத்த 15 மற்றும் 12 வருடங்களையும் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் நிராகரித்தார்.
உண்மையில் மலேசியாவிலிருந்து கடத்தியவரை விட குறைந்த தண்டனையை பெற்றிருக்கவேண்டியவர் 
அசட்டுத்தைரியத்தால் இன்று தூக்குக்கயிற்றில் உயிர் துறந்திருக்கிறார். நீதித்துறையை challenge செய்வதென்றால் நம்பக்கம் செம ஸ்ட்ராங்காக இருக்கவேண்டும்.        

Edited by அக்னியஷ்த்ரா
  • Like 5
  • Thanks 5

அசட்டுத்தைரியத்தால் இன்று தூக்குக்கயிற்றில் உயிர் துறந்திருக்கிறார். நீதித்துறையை chalenge செய்வதென்றால் நம்பக்கம் செம ஸ்ட்ராங்காக இருக்கவேண்டும்.        

உண்மையிலேயே அப்பாவியாக இருந்திருந்தால் என்ற கவலை தான். 

நன்றி உங்கள் விரிவான தகவல்களுக்கு அக்னி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நான் சிங்கப்பூர் சட்டநுணுக்கங்கள் தெரிந்த ஒரு சட்டத்தரணியில்லை. எனக்கு தெரிந்த வரையில் சிங்கையில் உள்ள குற்றப்பத்திரிகை தயார்செய்யும் போது அதனை தயாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் எவற்றையெல்லாம் சமர்ப்பிப்பார்கள், நீதிமன்றத்தில் உள்ள சில நடைமுறைகளை பற்றியும் அதன் இந்த வழக்கு தொடர்பான தாக்கத்தையும் விபரிக்கிறேன்.

1. குற்றத்தின் தன்மைக்கேற்ப அதனை விசாரிக்கும் பொறுப்பு சிங்கை போலீஸ் படையின் குறிப்பிட்ட பிரிவுக்கு வழங்கப்படும். குற்றத்தின் கடுமைக்கேற்ப அதனை IO (Investigation Officer) அல்லது SIO (Senior Investigation officer ) இடம் ஒப்படைப்பார்கள். இனி குற்றவாளி பிடிபடும் வரை இந்த அதிகாரியின் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டு புலனாய்வில் ஈடுபடுவார்கள்.

2. இப்போது சந்தேகநபர்  பிடிபட்டால் அவரது வசமிருக்கும் அனைத்து ஆதாரங்களையும் போலீஸ் பறிமுதல் செய்வதுடன் குற்றத்தின் முகாந்திரம்,பின்னணி, வேறு சந்தேகநபர்களுக்கு தொடர்பு உண்டா என்பதை அறிய விசாரணை நடத்துவார்கள். இந்த தருணத்தில் இனி தப்பிப்பிழைக்க முடியாது என்று சந்தேகநபர் விசாரணைக்கு ஒத்துழைத்தால் அவர்களது ஒத்துழைப்பு பற்றிய அதிகாரியின் அறிக்கையும் வழக்கு தாக்கல் செய்யும் போது சேர்த்து ஒப்படைக்கப்படும். 

3. இனி வழக்கு நடைபெறும்போது அரச தரப்பில் குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்தபட்ச தண்டனையுடன் வழக்கை முடிவுறுத்துவதாக சந்தேகநபரிட்கு அரசதரப்பிலிருந்து பேரம்பேசல் நடக்கும்
சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டால் வழங்கக்கூடிய  மிகக்குறைந்த தண்டனையுடன் வழக்கை சிங்கை நீதித்துறை முடித்துவைக்கும். சந்தேகநபர் நீதித்துறையை சவாலுக்குட்படுத்தி வழக்கை தொடர்ந்தால் வழக்கு முடிவில் குற்றவாளியாக இனங்காணும் பட்சத்தில் அதியுச்ச தண்டனை பரிசாக கிடைக்கும்  

இனி இந்த வழக்கில் தங்கராஜு சுப்பையா A.K.A  "இந்தியா",  செல்வா என்ற நபர் மூலம் மலேசியாவிலிருந்து மோகன் என்பவரிடம் அனுப்பிவைக்கப்பட்ட கஞ்சாவினை எப்படி தனது கைக்கு கொண்டுவர பிரயத்தனம் பண்ணினார் என்பதை இணைத்திருக்கும் இணைப்பில் படிக்கலாம். ஆனால் மோகன் எல்லை சோதனைச்சாவடியிலேயே மாட்டி குற்றத்தை ஒப்புக்கொண்டு "இந்தியா"  வை பிடிக்க உதவியதால் 23 வருட 
சிறை 15 சூடுகளுடன் தப்பிவிட .
போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதித்துறையை சவாலுக்குற்படுத்தலாம் என்று கிடைத்த ஆலோசனைக்கேற்ப நீதித்துறை வழங்கிய 20 வருட சிறையை மறுத்ததோடு அல்லாமல் நீதித்துறை படிப்படியாக குறைத்த 15 மற்றும் 12 வருடங்களையும் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் நிராகரித்தார்.
உண்மையில் மலேசியாவிலிருந்து கடத்தியவரை விட குறைந்த தண்டனையை பெற்றிருக்கவேண்டியவர் 
அசட்டுத்தைரியத்தால் இன்று தூக்குக்கயிற்றில் உயிர் துறந்திருக்கிறார். நீதித்துறையை challenge செய்வதென்றால் நம்பக்கம் செம ஸ்ட்ராங்காக இருக்கவேண்டும்.        

அக்னி, மிக்க நன்றி விளக்கத்திற்கு! அமெரிக்க, ஐரோப்பிய நீதித்துறை போலத் தான் இருக்கிறது சிங்கப்பூர். மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் நீதித்துறை, செயல்திறனோடு செயல்பட இந்த plea deal முறை உதவுகிறது.

பி.கு: இணைப்பேதும் இணைக்க மறந்து விட்டீர்களோ?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

அக்னி, மிக்க நன்றி விளக்கத்திற்கு! அமெரிக்க, ஐரோப்பிய நீதித்துறை போலத் தான் இருக்கிறது சிங்கப்பூர். மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் நீதித்துறை, செயல்திறனோடு செயல்பட இந்த plea deal முறை உதவுகிறது.

பி.கு: இணைப்பேதும் இணைக்க மறந்து விட்டீர்களோ?

8 hours ago, அக்னியஷ்த்ரா said:

https://en.wikipedia.org/wiki/Tangaraju_Suppiah
தங்கராஜு சுப்பையாவின் தூக்கு தண்டனை  நிறைவேற்றப்பட்டுவிட்டது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக. Plea Bargain ( பேரம் பேசலை ஏற்றுக்கொண்டிருந்தால் 12 வருடங்களில் சில மார்க்குகளுடன் வெளியே வந்திருக்கலாம் ) 
சிங்கப்பூர் மலேசிய தமிழர்கள் மீண்டும் அசட்டுத்தைரியத்தில் சூப்பர் மேன்களாக மாறி போதைப்பொருள் கடத்தி உங்களை நீங்களே மாய்த்துக்கொல்லாமல் அடக்கமாக இருக்குமாறு வினயமாக கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்  

மேலே இணைத்துள்ளார் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

பி.கு: இணைப்பேதும் இணைக்க மறந்து விட்டீர்களோ

முந்திய இணைப்பில் அவர் பற்றிய விக்கி தகவல்களை இணைத்திருந்தேன். இவரைப்பற்றி தனிப்பட்ட தகவல்கள் தெரியாது ஆனால் சிங்கை நீதித்துறை தகவல்களை 

https://stomp.straitstimes.com

இந்த தளத்தில் வசிப்பது வாடிக்கை. விக்கியில் போதுமான தகவல்கள் உண்டு

https://en.wikipedia.org/wiki/Tangaraju_Suppiah

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நான் சிங்கப்பூர் சட்டநுணுக்கங்கள் தெரிந்த ஒரு சட்டத்தரணியில்லை. எனக்கு தெரிந்த வரையில் சிங்கையில் உள்ள குற்றப்பத்திரிகை தயார்செய்யும் போது அதனை தயாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் எவற்றையெல்லாம் சமர்ப்பிப்பார்கள், நீதிமன்றத்தில் உள்ள சில நடைமுறைகளை பற்றியும் அதன் இந்த வழக்கு தொடர்பான தாக்கத்தையும் விபரிக்கிறேன்.

1. குற்றத்தின் தன்மைக்கேற்ப அதனை விசாரிக்கும் பொறுப்பு சிங்கை போலீஸ் படையின் குறிப்பிட்ட பிரிவுக்கு வழங்கப்படும். குற்றத்தின் கடுமைக்கேற்ப அதனை IO (Investigation Officer) அல்லது SIO (Senior Investigation officer ) இடம் ஒப்படைப்பார்கள். இனி குற்றவாளி பிடிபடும் வரை இந்த அதிகாரியின் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டு புலனாய்வில் ஈடுபடுவார்கள்.

2. இப்போது சந்தேகநபர்  பிடிபட்டால் அவரது வசமிருக்கும் அனைத்து ஆதாரங்களையும் போலீஸ் பறிமுதல் செய்வதுடன் குற்றத்தின் முகாந்திரம்,பின்னணி, வேறு சந்தேகநபர்களுக்கு தொடர்பு உண்டா என்பதை அறிய விசாரணை நடத்துவார்கள். இந்த தருணத்தில் இனி தப்பிப்பிழைக்க முடியாது என்று சந்தேகநபர் விசாரணைக்கு ஒத்துழைத்தால் அவர்களது ஒத்துழைப்பு பற்றிய அதிகாரியின் அறிக்கையும் வழக்கு தாக்கல் செய்யும் போது சேர்த்து ஒப்படைக்கப்படும். 

3. இனி வழக்கு நடைபெறும்போது அரச தரப்பில் குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்தபட்ச தண்டனையுடன் வழக்கை முடிவுறுத்துவதாக சந்தேகநபரிட்கு அரசதரப்பிலிருந்து பேரம்பேசல் நடக்கும்
சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டால் வழங்கக்கூடிய  மிகக்குறைந்த தண்டனையுடன் வழக்கை சிங்கை நீதித்துறை முடித்துவைக்கும். சந்தேகநபர் நீதித்துறையை சவாலுக்குட்படுத்தி வழக்கை தொடர்ந்தால் வழக்கு முடிவில் குற்றவாளியாக இனங்காணும் பட்சத்தில் அதியுச்ச தண்டனை பரிசாக கிடைக்கும்  

இனி இந்த வழக்கில் தங்கராஜு சுப்பையா A.K.A  "இந்தியா",  செல்வா என்ற நபர் மூலம் மலேசியாவிலிருந்து மோகன் என்பவரிடம் அனுப்பிவைக்கப்பட்ட கஞ்சாவினை எப்படி தனது கைக்கு கொண்டுவர பிரயத்தனம் பண்ணினார் என்பதை இணைத்திருக்கும் இணைப்பில் படிக்கலாம். ஆனால் மோகன் எல்லை சோதனைச்சாவடியிலேயே மாட்டி குற்றத்தை ஒப்புக்கொண்டு "இந்தியா"  வை பிடிக்க உதவியதால் 23 வருட 
சிறை 15 சூடுகளுடன் தப்பிவிட .
போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதித்துறையை சவாலுக்குற்படுத்தலாம் என்று கிடைத்த ஆலோசனைக்கேற்ப நீதித்துறை வழங்கிய 20 வருட சிறையை மறுத்ததோடு அல்லாமல் நீதித்துறை படிப்படியாக குறைத்த 15 மற்றும் 12 வருடங்களையும் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் நிராகரித்தார்.
உண்மையில் மலேசியாவிலிருந்து கடத்தியவரை விட குறைந்த தண்டனையை பெற்றிருக்கவேண்டியவர் 
அசட்டுத்தைரியத்தால் இன்று தூக்குக்கயிற்றில் உயிர் துறந்திருக்கிறார். நீதித்துறையை challenge செய்வதென்றால் நம்பக்கம் செம ஸ்ட்ராங்காக இருக்கவேண்டும்.        

நன்றி சகோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, அக்னியஷ்த்ரா said:

முந்திய இணைப்பில் அவர் பற்றிய விக்கி தகவல்களை இணைத்திருந்தேன். இவரைப்பற்றி தனிப்பட்ட தகவல்கள் தெரியாது ஆனால் சிங்கை நீதித்துறை தகவல்களை 

https://stomp.straitstimes.com

இந்த தளத்தில் வசிப்பது வாடிக்கை. விக்கியில் போதுமான தகவல்கள் உண்டு

https://en.wikipedia.org/wiki/Tangaraju_Suppiah

ம்..வாசித்தேன், ஒரே மூச்சில்.

எந்த வழக்கிலும் சட்டத்தரணியை பயன்படுத்த வேண்டும். மரண தண்டனை கிடைக்கக் கூடிய வழக்கில் தானாக சில சமர்ப்பிப்புகளைச் செய்திருக்கிறார். சட்டத்தரணிகள் முன்வராததாலா அல்லது அவரது முடிவா எனத் தெரியவில்லை. சோகமான முடிவு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு செய்தியிலும் தெரிந்துகொள்ள எவ்வளவு விடயங்கள் இருக்கிறது!!!
விக்கி தகவல்கள் முழுமையாக ஒரே மூச்சில் வாசித்தேன். இந்த தம்பி ஆழம் அறியாமல் சட்ட ஆற்றில் காலை விட்டு உயிரை போக்கிக்கொண்டதாகவே உணர்கிறேன்.

தமிழன் ஒருவன் தண்டிக்கப்படுகிறான் என்பதற்காக ஞாய, அநியாயங்களை, சட்ட வரையறைகளை எல்லாம் சகட்டு மேனிக்கு குறை சொல்லக்கூடாது. எல்லா சம்பவங்களையும் பொதுமை படுத்தவும் கூடாது. 

டொரோண்டோவில் நடந்த பிரபல போதை வஸ்து கடத்தல் வழக்கில் 8ஆவது ஜூரியாக கடமையை ஆற்றி, குற்றவாளிக்கு சட்டத்தின் பிரகாரம் தீர்ப்பை பெற்று கொடுத்த அனுபவம் எனக்கு உண்டு.
இதை வாசிக்கும் போது அந்த நாட்களின் ஞாபகங்கள் தோன்றி மறைந்தன. 😞

Edited by Sasi_varnam
  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 3000க்கும் மேற்பட்ட வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து! இந்த வருடத்தில் 3000 க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது உரிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததுமே பிரதான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் மொஹமட் மஹிஷ் தெரிவித்துள்ளார். எனவே, வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது அவசியமானது. நாட்டின் வீதி அமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2024/1407734
    • டொனால்ட் ட்ரம்பின்  (Donald Trump) தைரியம் தன்னை ஈர்த்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin)  தெரிவித்துள்ளார். ரஷ்யாவில்(Russia)  நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “டொனால்டு ட்ரம்பை தாமாகவே முன்வந்து தொடர்பு கொள்வதில் எந்த அவமானமும் இருப்பதாக தாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ள விளாடிமிர் புடின், அதை நான் செய்ய விரும்பவில்லை. டொனால்ட் ட்ரம்பின் தைரியம் எவரேனும் ஒருவர் மீண்டும் தம்மை தொடர்பு கொண்டால் அதை தாம் வரவேற்பதாகவும், விவாதிக்க தயார். அது போலவே, டொனால்டு ட்ரம்புடனும் தாம் விவாதிக்க தயாராக இருக்கின்றேன்.   ஜூலை மாதம் ட்ரம்ப் மீதான தாக்குதலின் போது அவரின் செயல்பாடு தம்மை ஈர்த்தது. அவர் ஒரு தைரியமான நபராக மாறியுள்ளார். மட்டுமின்றி, அந்த தருணத்திலும் பொதுவான கொள்கைகளுக்காக போராட வேண்டும் என ட்ரம்ப் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது உண்மையில் வியக்க வைக்கும் செயல். புடினின் வாழ்த்து ஒரு நபர் தனது உண்மையான சுயத்தை அசாதாரணமான சூழ்நிலைகளில் வெளிப்படுத்துகிறார், அங்கு அவர் ஒரு மனிதனைப் போல தைரியமான முறையில் தன்னை நிரூபித்தார். ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் அவரை கேலி செய்தவர்கள் பலர். ஒரு முடிவெடுக்க முடியாமல் அவரை தடுமாற வைத்தார்கள்.தற்போது என்ன நடக்கும் என்பது தமக்கு தெரியவில்லை ” என்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஸ்ய ஜனாதிபதி புடினின் வாழ்த்து மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நேர்காணலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகபூர்வமாக அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/putin-praises-trump-says-russia-ready-for-dialogue-1731016171#google_vignette
    • ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பியோடிய 43 குரங்குகள். அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பி ஓடியுள்ளன. பாதுகாவலரால் தவறுதலாக மையத்தின் கதவு திறக்கப்பட்டதாகவும், இந்த குரங்குகள் தப்பிச் சென்றதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி குறித்த பகுதியில் குரங்கு கூட்டத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், குடியிருப்பாளர்கள் தங்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பாதுகாப்பாக மூடி வைக்குமாறு மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கரோலினா மாகாணத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளும் தப்பியோடிய குரங்குகளைக் கண்டால், உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1407752
    • பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டத்திற்குப் பதில் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்வித்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.    கண்டி தபால் நிலைய கேட்போர்கூடத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.   அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,    கடந்த காலங்களில் எதுவித அடிப்படையும் அற்ற நிலையில் நண்பர்களுக்கும் னையவர்களுக்கும்  அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.   எதிர்கட்சியில் இருந்து யார் ஆதரவு தருகிறார்ளோ  அவர்களுக்கு அமைச்சர் பதவிகள்  வழங்கப்பட்டன.  அவ்வாறான அமைச்சுக்களுக்கு விஞ்ஞான ரீதியாக தொடர்புகள் இருக்க வில்லை.   உதாரணத்திற்கு உயர் கல்வி, பெருவீதிகள் அமைச்சு என்று ஒன்று இருந்தது. உயர் கல்விக்கும் பெரு வீதிக்கும் விஞ்ஞான ரீதியில் என்ன தொடர்பு எனக் கேட்டதற்கு  உயர் கல்வி மாணவர்கள் எப்போதும் பெருவீதிகளில் இருந்து ஆர்பாட்டம் செய்கிறார்கள், எவேபொருத்தமானது  எனக் கூறப்பட்டது. இவை நகைப்புக்கிடமான விடயங்கள்.  இப்படி யல்லாது எதிர்காலத்தில் கல்வியுடன் தொடர்புபட்ட சகல துறைகளையும் ஒன்றிணைத்த அமைச்சு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.   அதாவது உயர் கல்வி, பாடசாலைக் கல்வி, பாலர் கல்வி, தொழில் நுற்பக் கல்வி,தொழிற் கல்வி,தொழில் நுட்பக்கல்லூரிகள், பல்லைக்கழகங்கள், பாசலைச்சவைகள்  போன்ற கல்வியுடன் தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒன்றாக இணைக்கப்பட  வேண்டும்.  மேலும் தற்போது பரீட்சையை மையமாகக் கொண் கல்வியே உள்ளது. 10 முதல் 12 வயது வரையானவர்கள் கூட புலமைப்பரிசில் என்று பரிட்சையை மையமாகக் கொண்டு போட்டிக்காகப் பயில் கின்றனர்.   இந்த வயதுப்பிரிவு போட்டிப் பரீட்சைக்குறிய வயதல்ல. எனவே நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகள் உருவாகும் கல்வித்திட்டமே தேவை என்றார்.     https://www.virakesari.lk/article/198152
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.