Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புடின் விரைவில் கொல்லப்படுவார் சிதறும் ரஷ்யா – அமெரிக்கா உளவுத்துறை..!

Featured Replies

2 minutes ago, குமாரசாமி said:

ஓம்...இருக்கட்டுமே...நல்லது தானே. இவர்கள் சார்ந்த கட்சியும் நீங்கள் சார்ந்த கட்சியும் கிட்டத்தட்ட சம பலத்துடன் தானே நிற்கின்றன.

முற்றிலும் தவறு. இக் கட்சி ஏனய தேசியவாதக் கட்சிகளுடன் கூட்டமைத்தால் கூட ஆளும் கட்சியை நெருங்க முடியாது. தனிபட்ட கட்சி ரீதியாக ஓரளவு பலம் இருந்தாலும் நாட்டிலுள்ள வலது இடது சாரிக் கட்சிகள் பசுமைக் கட்சிகள் எல்லாமே இவர்களுக்கு எரிராக் இருப்பதால் எக் காலத்திலும் ஆட்சி அமைக்க முடியாது.

இன்று இவர்க்கள் பிரான்சின் பிரதான எதிர்க் கட்சியும் இல்லை என்பது தெரியுமா ?

2 minutes ago, குமாரசாமி said:

கரு கட்டும் மட்டும் விட்டு ஏன் அதை அழிக்க வேண்டும்? மூளை கூடிய விஞ்ஞான உலகில் முன் நடவடிக்கைகள் ஏற்கனவே உள்ளதே?

இதை உங்களுக்குப் புரிய வைக்க எத்தனிப்பது வீணான நேர விரயம்.

  • Replies 170
  • Views 11.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, இணையவன் said:

முற்றிலும் தவறு. இக் கட்சி ஏனய தேசியவாதக் கட்சிகளுடன் கூட்டமைத்தால் கூட ஆளும் கட்சியை நெருங்க முடியாது. தனிபட்ட கட்சி ரீதியாக ஓரளவு பலம் இருந்தாலும் நாட்டிலுள்ள வலது இடது சாரிக் கட்சிகள் பசுமைக் கட்சிகள் எல்லாமே இவர்களுக்கு எரிராக் இருப்பதால் எக் காலத்திலும் ஆட்சி அமைக்க முடியாது.

மக்கள் ஆதரவு இருப்பதால் தானே இவர்களும் முன்னணியில் நிற்கின்றார்கள்?

ஆட்சி அமைப்பதால் தான் ஒரு கட்சி  தன்னை நிரூபிக்கின்றது என எக்காலத்திலும் எடுத்துக்கொள்ளமாட்டாது.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, இணையவன் said:

பிரான்சிலும் ரஸ்ய சார்புக் கட்சி ஒன்று உள்ளது.

சில நல்ல நாடுகளில் உள்ள வெற்றி பெறவே முடியாத  இன வெறி, பிற்போக்குதனங்களை தங்கள் கொள்கைகளாக கொண்ட சிறு கட்சிகள் புதினுடை உக்ரைன் ஆக்கிரமிப்பை ஆதரிக்கின்றன. ஆக்கிரமிப்புக்கு ஆதரவு, ட்றம்புக்கு ஆதரவு, தன்பாலினத்தவரை புதின் உதைத்தார் என்று அவருடைய  ஈழதமிழ் ஆதரவாளர் அவரை யாழ்களத்தில் கொண்டாடியதையும் நாம் பார்த்தோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரசிய ஆதரவு என்பது நிறவெறிக்கு  இனவெறிக்கு வெளிநாட்டவர்களுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவாக மாறி வருகிறது. ரசியாவை போன்ற நாடுகளாக ஐரோப்பிய நாடுகள் மாறணும் என்பது மரத்தில் இருந்தபடியே ஆணி வேரை அறுப்பது தான்.😭

இதன் முடிவுகள் இப்படி தான் இருக்கும். 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ரசிய ஆதரவு என்பது நிறவெறிக்கு  இனவெறிக்கு வெளிநாட்டவர்களுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவாக மாறி வருகிறது. ரசியாவை போன்ற நாடுகளாக ஐரோப்பிய நாடுகள் மாறணும் என்பது மரத்தில் இருந்தபடியே ஆணி வேரை அறுப்பது தான்.😭

இதன் முடிவுகள் இப்படி தான் இருக்கும். 

ஆமாம் விசுகு........இதை இருந்த கொப்பை [ மரக்கிளை] வெட்டுகிறார்கள். என்று ஊரில் சொல்லுவார்கள்....அப்படி வெட்டினால். என்ன நடக்கும். ???

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

ஆமாம் விசுகு........இதை இருந்த கொப்பை [ மரக்கிளை] வெட்டுகிறார்கள். என்று ஊரில் சொல்லுவார்கள்....அப்படி வெட்டினால். என்ன நடக்கும். ???

ரசியா எம்மை ஏற்காது

நாம் மட்டும் அல்ல எமது அடுத்த தலைமுறையும் மீண்டும் அகதியாக நாடற்றவராக அரவணைக்க எவரும் அற்ற அநாதைகளாக அலைந்து திரிந்து அழிந்து போகவேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration

புரிந்தவன்.... புத்திசாலி. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

ரசியா எம்மை ஏற்காது

நாம் மட்டும் அல்ல எமது அடுத்த தலைமுறையும் மீண்டும் அகதியாக நாடற்றவராக அரவணைக்க எவரும் அற்ற அநாதைகளாக அலைந்து திரிந்து அழிந்து போகவேண்டியது தான்.

உண்மை...இதை தடுக்க எதும்  வழிகள் உண்டா???இல்லையோ??.....   மேலும்  ரஷ்யாவுக்கு பல நாடுகள் உதவி செய்கிறன அதேபோல் உக்ரேனுக்கும்  பல நாடுகள் உதவுகிறது.....அவை இரண்டுமே தனி தனி   நாடுகள் என்பதால்    உதவ முடிகிறது......முழு.இலங்கையை யும் தமிழர்கள் ஆட்சியிலிருந்தால் அல்லது  நாங்கள் தனிநாடாக இருந்து  சிங்களமும் தனிநாடாகவிருந்து   இரு நாடுகளும் போரிடும்போது.   இருபகுதிக்கும். உலக நாடுகள் உதவியிருக்கும்.    தனிநாடு இல்லாத நாங்கள்....தனிநாடுக்காக. போராடிய எங்களுக்கு  உலக நாடுகள்  ஆயுதம் வழங்கமால் விட்டது …… சரியா....???பிழையா...??.     அப்படி வழங்குவதாயின்.  எந்த அமைப்புக்கு வழங்குவது    ஒரு தமிழ் அமைப்புக்கு வழங்கும்போது  ஏனைய தமிழ் அமைப்புகள்    அவர்களுக்கு கொடுக்காதே என்று தடுக்கும்  ....

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

இதை உங்களுக்குப் புரிய வைக்க எத்தனிப்பது வீணான நேர விரயம்.

 பதில் உங்களிடம் இல்லை என்று சொல்லுங்கோ!!🤣

2 hours ago, விசுகு said:

நாம் மட்டும் அல்ல எமது அடுத்த தலைமுறையும் மீண்டும் அகதியாக நாடற்றவராக அரவணைக்க எவரும் அற்ற அநாதைகளாக அலைந்து திரிந்து அழிந்து போகவேண்டியது தான்.

எல்லாம் சரி, எம்மை இந்த நிலைக்கு தள்ளியது யார்? அமெரிக்க ஆசீர்வாதத்துடன் பேச்சுவார்த்தை என்று தொடங்கி எம்மை சிறுக சிறுக அழித்தது யார்? மேற்கும்தானே!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

 பதில் உங்களிடம் இல்லை என்று சொல்லுங்கோ!!🤣

எல்லாம் சரி, எம்மை இந்த நிலைக்கு தள்ளியது யார்? அமெரிக்க ஆசீர்வாதத்துடன் பேச்சுவார்த்தை என்று தொடங்கி எம்மை சிறுக சிறுக அழித்தது யார்? மேற்கும்தானே!!

இல்லை சகோ

அமெரிக்க கனடிய ஐரோப்பிய நாடுகள் எமது சில நடவடிக்கைகளைத் தான் கண்டித்தன. ஆனால் பேச்சு வார்த்தை மூலம் தீர்வை ஊக்குவித்தன. 

ஆனால் இவை அனைத்தையும் ஒரு கோட்டில் சேரவிடாமல் இந்தியா தான் மக்கள் அழிவையும் பொருட்படுத்தாமல் முழு அளவிலான புலிகளின் இல்லாதொழிப்பையும் செய்து முடித்தது. முதலில் நாம் இந்த உண்மையை உணராமல் எந்த முயற்சியும் சாத்தியம் இல்லை. நன்றி 

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

 பதில் உங்களிடம் இல்லை என்று சொல்லுங்கோ!!🤣

எல்லாம் சரி, எம்மை இந்த நிலைக்கு தள்ளியது யார்? அமெரிக்க ஆசீர்வாதத்துடன் பேச்சுவார்த்தை என்று தொடங்கி எம்மை சிறுக சிறுக அழித்தது யார்? மேற்கும்தானே!!

எங்கள் இனப்பிரச்சினை, தமிழ் தேசிய விடயங்கள் பற்றி நான் எழுதுவதில்லை இப்போது. ஆனால், உங்கள் அபிப்பிராயத்தின் தோற்றுவாயைப் புரிந்து கொள்வதற்காகக் கேட்க வேண்டியிருக்கிறது: மேற்கு எங்களை எப்படி "இந்த" நிலைக்குத் தள்ளியது? இந்த "ஒபரேஷன் பீகன்" என்பது நடந்ததாக தமிழ் ஆய்வாளர்கள் சொல்வதற்கு ஏதாவது ஆதாரங்கள், கசிந்த ஆவணங்கள் இருக்கின்றனவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட அமெரிக்க நாடுகளும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்தியாவை மீறி அல்லது அதன் அனுமதியில்லாமல் தமிழ்நாட்டு தொப்புள் குடிகளின் பிரச்சனையில் கை நனைப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2023 at 14:36, விசுகு said:

இல்லை சகோ

அமெரிக்க கனடிய ஐரோப்பிய நாடுகள் எமது சில நடவடிக்கைகளைத் தான் கண்டித்தன. ஆனால் பேச்சு வார்த்தை மூலம் தீர்வை ஊக்குவித்தன. 

ஆனால் இவை அனைத்தையும் ஒரு கோட்டில் சேரவிடாமல் இந்தியா தான் மக்கள் அழிவையும் பொருட்படுத்தாமல் முழு அளவிலான புலிகளின் இல்லாதொழிப்பையும் செய்து முடித்தது. முதலில் நாம் இந்த உண்மையை உணராமல் எந்த முயற்சியும் சாத்தியம் இல்லை. நன்றி 

எல்லாம் சரிதான் விசுகர்! பேச்சுவார்த்தை என்று தொடங்கி எமக்கான எல்லா ஆயுத வழங்கல் பாதைகளையும் அடைத்து, சொறிலங்காவின் ராணுவத்திற்கு எல்லாவிதமான ஆயுதங்களையும் வழங்கி எம்மை அழித்தொழித்தது நோர்வே தலைமையிலான மேற்கும், அமெரிக்காவும்தானே? போரின்போது உயர்தர ராணுவ தளபதிகளையும் களத்திற்கு அனுப்பி நெறிப்படுத்தியதையும் மறக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

சரி பிரபாகரனைத்தான் அழித்தார்கள். அதன்பின்னாவது எம்மினத்திற்கு ஒரு தீர்வு தேடிக்கொடுத்தார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Eppothum Thamizhan said:

இங்கேயும் இந்தி தான் அனைத்தேயும் தடுக்கிறது தன் மாநிலங்களை விட அதிக அதிகாரம் பக்கத்தில் வந்து விடக்கூடாது என்று தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறது. என்னைத் பொறுத்தவரை இந்தியா என்ற ஒன்று பக்கத்தில் இல்லை என்றால் மேற்கின் துணையுடன் நாம் எமது இலக்கை அடைந்திருப்போம். நன்றி 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2023 at 15:13, Justin said:

எங்கள் இனப்பிரச்சினை, தமிழ் தேசிய விடயங்கள் பற்றி நான் எழுதுவதில்லை இப்போது. ஆனால், உங்கள் அபிப்பிராயத்தின் தோற்றுவாயைப் புரிந்து கொள்வதற்காகக் கேட்க வேண்டியிருக்கிறது: மேற்கு எங்களை எப்படி "இந்த" நிலைக்குத் தள்ளியது? இந்த "ஒபரேஷன் பீகன்" என்பது நடந்ததாக தமிழ் ஆய்வாளர்கள் சொல்வதற்கு ஏதாவது ஆதாரங்கள், கசிந்த ஆவணங்கள் இருக்கின்றனவா?

வணக்கம், நான்றிந்த வரையில் மேற்கு நாடுகள் திட்டமிட்டு எம்மை அழித்தன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒரு பொய்யை திரும்ப திரும்ப எம்மிடையே மட்டும் சொல்லி  அதற்கு மேல் சிந்திக்காது அந்த பொய்யை நாமே நம்பி  புலம்புவது மட்டும் தான் நாம் கண்ட பலன். இந்த பொய் நம்மிடையே கூட  ஒரு குறிப்பிட்ட வட்டத்தை தாண்டி வெளியே எவரையும் சென்றடையாது. 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, island said:

வணக்கம், நான்றிந்த வரையில் மேற்கு நாடுகள் திட்டமிட்டு எம்மை அழித்தன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒரு பொய்யை திரும்ப திரும்ப எம்மிடையே மட்டும் சொல்லி  அதற்கு மேல் சிந்திக்காது அந்த பொய்யை நாமே நம்பி  புலம்புவது மட்டும் தான் நாம் கண்ட பலன். இந்த பொய் நம்மிடையே கூட  ஒரு குறிப்பிட்ட வட்டத்தை தாண்டி வெளியே எவரையும் சென்றடையாது. 

அதே..
நன்றி  ஐயா

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

அதே..
நன்றி  ஐயா

அதே போல் இவ்வாறாக தொடர்ந்து இந்த பொய்யை எம்மிடையே பரப்பி மேற்கு நாடுகளுக்கு எதிரான ஒரு மனப்பாங்கை வெறியாக  வளர்பபது ஈழத்தமிழர் விரும்பும் அரசியல் தீர்வை அடைய  எவ்வகையில் உதவி செய்யும்? 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2023 at 08:36, விசுகு said:

இல்லை சகோ

அமெரிக்க கனடிய ஐரோப்பிய நாடுகள் எமது சில நடவடிக்கைகளைத் தான் கண்டித்தன. ஆனால் பேச்சு வார்த்தை மூலம் தீர்வை ஊக்குவித்தன. 

ஆனால் இவை அனைத்தையும் ஒரு கோட்டில் சேரவிடாமல் இந்தியா தான் மக்கள் அழிவையும் பொருட்படுத்தாமல் முழு அளவிலான புலிகளின் இல்லாதொழிப்பையும் செய்து முடித்தது. முதலில் நாம் இந்த உண்மையை உணராமல் எந்த முயற்சியும் சாத்தியம் இல்லை. நன்றி 

இந்தியாவுக்கு பயந்து புலிகளை அமெரிக்காவும், கனடாவும், ஐரோப்பிய ஒன்றியமும் அவர்களை பயங்கரவாதிகள் பட்டியலில் இன்றும் வைத்திருக்கின்றன என்று சொல்லலாமா??

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

அதே போல் இவ்வாறாக தொடர்ந்து இந்த பொய்யை எம்மிடையே பரப்பி மேற்கு நாடுகளுக்கு எதிரான ஒரு மனப்பாங்கை வெறியாக  வளர்பபது ஈழத்தமிழர் விரும்பும் அரசியல் தீர்வை அடைய  எவ்வகையில் உதவி செய்யும்? 

சிறப்பான கேள்வி.
சகல வளங்களும் பெற்று பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற மேற்குலக நாடுகளுக்கு எதிரான ஒரு மனப்பாங்கை வெறியாக  வளர்த்து கொண்டிருக்கின்ற  இந்த கொடுமையை  அப்படியே சொன்னீர்கள்.

மேற்கு நாடுகளுக்கு எதிரான ஒரு மனப்பாங்கை வெறியாக  வளர்பபது ஈழத்தமிழர் விரும்பும் அரசியல் தீர்வை அடைய எவ்வகையில் உதவி செய்யும்? ]

எந்தவித உதவியும் செய்யாது தீமையை தவிர.மேற்கு நாடுகளுக்கு எதிரான ஒரு மனப்பாங்கை வெறியாக  வளர்பபது மேற்குலநாடுகளில் குடியேறிய ஈழதமிழர்கள் சிலரின்  பொழுது போக்கு விளயாட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இந்தியாவுக்கு பயந்து புலிகளை அமெரிக்காவும், கனடாவும், ஐரோப்பிய ஒன்றியமும் அவர்களை பயங்கரவாதிகள் பட்டியலில் இன்றும் வைத்திருக்கின்றன என்று சொல்லலாமா??

உங்கள் கேள்வியில் ஒரு குத்தல் இருப்பது தெரிகிறது

இந்தியாவை தாண்டி எம்மை அவர்களால் நெருங்கமுடியவில்லை முடியாது என்பது தான் உண்மை. நன்றி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, island said:

வணக்கம், நான்றிந்த வரையில் மேற்கு நாடுகள் திட்டமிட்டு எம்மை அழித்தன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒரு பொய்யை திரும்ப திரும்ப எம்மிடையே மட்டும் சொல்லி  அதற்கு மேல் சிந்திக்காது அந்த பொய்யை நாமே நம்பி  புலம்புவது மட்டும் தான் நாம் கண்ட பலன். இந்த பொய் நம்மிடையே கூட  ஒரு குறிப்பிட்ட வட்டத்தை தாண்டி வெளியே எவரையும் சென்றடையாது. 

2009 இறுதி யுத்தத்திற்கு முன்னர்  இந்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனனும் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே நாராயணன் ஆகியோர்  அமெரிக்கா,கனடா ,ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று தங்கள் அழிப்பு நிலைப்பாட்டை அறிவித்த பின்னரே முள்ளிவாய்க்கால் அழிவை மேற்கொண்டனர்.
எனவே குற்றம் செய்தவனை விட குற்றம் செய்ய துணை போனவன் ஒரு படி மேல் மோசமானவன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

உங்கள் கேள்வியில் ஒரு குத்தல் இருப்பது தெரிகிறது

இந்தியாவை தாண்டி எம்மை அவர்களால் நெருங்கமுடியவில்லை முடியாது என்பது தான் உண்மை. நன்றி 

இல்லை. இந்தியாவுடன் சேர்ந்து மேற்கும் தான் எமக்கு முதுகில் குத்தியது. ஆனையிறவை இனி யாராலும் விழுத்த முடியாது என ஒரு ஐரோப்பிய இராணுவ குழு சிறிலங்காவில் நின்று  படமெடுத்து அறிக்கை விட்டது உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். 
புலிகள் பயங்கரவாதிகள் என முத்திரை குத்திய அமெரிக்கா பேச்சுவார்த்தைக்குள் சிவபூசைக்குள் கரடி புகுந்தது போல் மட்டுமல்லாமல் அமெரிக்காவில் நடக்கும் பேச்சுவார்த்தையில் புலிகள் பங்கு பற்ற முடியாது என்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

இந்தியாவின் பங்கே எல்லாவற்றிலும் மிக மிக அதிகம். இந்த தெளிவு மிக மிக முக்கியம். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இந்தியாவின் பங்கே எல்லாவற்றிலும் மிக மிக அதிகம். இந்த தெளிவு மிக மிக முக்கியம். 

நிச்சயமாக. மேற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, nunavilan said:

நிச்சயமாக. மேற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

மேற்கு இந்தியாவை மீறி எதையும் செய்ய மாட்டார்கள். எனவே மேற்கின் மேல் விசுவாசமாக இருப்பதில் எவ்வித பலனும் இல்லை.

மேற்குலகின் மேல் நன்றியுணர்வும் நன்றிக்கடனும் என்றும் உண்டு. ஆனால் மேற்கின்  இன்றைய வெளியுறவுக்கொள்கைக்கு  எதிரானவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.