Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

spring_offensive.png

2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்காது. அதிக ஆளணி இழப்புக்களையோ பெருமளவு சுடுகலன் பாவிப்புக்களையோ செய்யும் நிலையில் உக்ரேன் இல்லை. இரசியாவின் நகர்வுகளைப் பார்க்கும் போது அது மேலும் நிலப்பரப்புக்களைக் கைப்பற்றுவதிலும் பார்க்க தான் ஏற்கனவே கைப்பற்றிய பிரதேசத்தை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றது. அத்துடன் கிறிமியாவில் உள்ள துறைமுகங்கள், கடற்கலன்கள், இரசியாவில் இருந்து கிறிமியாவிற்கு கட்டப்பட்டுள்ள பாலம் ஆகியவற்றைப் பாதுகாப்பதிலும் இரசியா அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

கைப்பற்றிய பகுதிகளை இழந்த இரசியா

2022 பெப்ரவரி தொடங்கிய  போரின் பின்னர் 2022 செப்டம்பரில் உக்ரேனின் நிலப்பரப்பில் 27%ஐக் கைப்பற்றியிருந்த இரசியா அதன் பின் பல இடங்களில் பின்வாங்கி தற்போது 18% நிலப்பரப்பை மட்டும் வைத்திருக்கின்றது. உக்ரேனின் வடகிழக்கில் உள்ள கார்க்கீவ் மற்றும் தெற்குப் பதியில் உள்ள கேர்சன் ஆகிய இடங்களில் இரசியப் படையினரை உக்ரேன் பின்வாங்கச் செய்துள்ளது. சிறிய பாக்மூட் நகரை கைப்பற்ற இரசியாவின் கூலிப்படையினர் ஆறுமாதமாக முயற்ச்சி செய்தனர். 2023 மே 9-ம் திகதிக்கு முன்னர் அதை முழுமையாக கைப்பற்றி இரண்டாம் உலகப் போர் வெற்றி விழாவில் மார்தட்டும் புட்டீனின் திட்டம் நிறைவேறமல் போய்விட்டது. மாறாக இரசியக் கூலிப்படையைன் தளபது தனது படை மக்மூட் நகரை இரசியப் படையினரிடும் கையளித்து விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். 2023 மே 10-ம் திகதி உக்ரேனியர்கள் மக்மூட் நகரின் மூன்று சதுர கிமீ நிலப்பரப்பில் இருந்து இரசியர்களைப் பின்வாங்கச் செய்துள்ளனர்.

சிறு தாக்குதல்கள் பெரும் நன்மை

இரசிய – உக்ரேன் போர் முனை அறுநூறு மைல் நீளமானதாக உள்ளது. அந்தளவு நீளமான போர் முனை உக்ரேனுக்கு ஒரு வாய்ப்பான நிலையாகும். அதில் எங்காவது சிறிய அளவில் உக்ரேனால் இரசியாவிற்கு அவமானம் ஏற்படக்கூடிய வகையில் தாக்குதல் செய்வது உக்ரேனுக்கு பயனுள்ளதாக அமையும். அத்தாக்குதல்களால் இரசிய அதிபர் புட்டீனின் நெருக்கமானவர்களிடையே உக்ரேன் மீதான சிறப்பு படை நடவடிக்கை மிகவும் விரயமானது, பயனற்றது, தொடர்ந்து நடத்த முடியாதது என்ற எண்ணத்தை ஆழமாக விதைக்கலாம். புட்டீனின் படைகள் மீது மிகப் பெரிய தாக்குதல்களை நடத்தினால் அவரின் எதிர்வினை எப்படி இருக்கும் எனச் சொல்ல முடியாது என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது. அதனால் புட்டீனை இரசியர்களிடமிருந்து தனிமைப் படுத்துவது அமெரிக்காவின் முக்கிய நோக்கமாக இருக்கும்.

சிறிதான வெற்றி விழா அணிவகுப்பு

2023 மே மாதம் இரசியா தனது 2-ம் உலகப் போர் வெற்றி அணிவகுப்பைச் செய்தது. வழமையாக பத்தாயிரம் முதல் பதினான்காயிரம் படையினருடன் செய்யப்படும் இந்த அணிவகுப்பு இம்முறை ஏழாயிரம் படையினருடன் செய்யப்பட்டது. அதைப் பார்வையிடப் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. வீட்டிலிருந்து ஒளிபரப்பை பார்க்க மக்கள் பணிக்கப்பட்டனர். தலைநகரைத் தவிர மற்ற பல இடங்களில் அணிவகுப்பு இரத்துச் செய்யப்பட்டது. உக்ரேனிய ஆழ ஊடுருவிகளுக்கு அஞ்சி இரத்துச் செய்யப்பட்டிருக்கலாம். அணிவகுப்பில் ஒரே ஒரு போர்த்தாங்கி மட்டும் பாவிக்கப்பட்டது. இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம் SU-57 பங்கு பற்றியதாக காட்டப்பட்டவை கணினியால் உருவாக்கப்பட்ட அசைவுப்படங்கள் என சில நேட்டோ நாடுகளின் ஊடகங்கள் தெரிவித்தன.

உக்ரேனின் இளவேனிற்கால தாக்குதல் (Spring Offensive)

உக்ரேனியர் தமது நிலப்பரப்பை ஆக்கிரமித்திருக்கும் படையினருக்கு எதிரான தாக்குதலை எப்போது செய்வார்கள் எப்படிச் செய்வார்கள் என்பவை பெரிய கேள்விகளாக இருக்கின்றன. உக்ரேன் செய்யவிருக்கும் தாக்குதலிற்கு “இளவேனிற்காலத் தாக்குதல்” (Spring Offensive) எனப் பெயரும் இட்டுள்ளனர். குளிர்காலம் முடிந்து இளவேனிற் காலத்தில் தாக்குதல் செய்யலாம் எனப் பரவலாகப் பேசப்பட்டது. குளிர்காலம் 2023 மார்ச் 20-ம் திகதியுடன் முடிவடைந்து விட்டது. ஜூன் 21-ம் திகதிவரை இளவேனிற் காலம் தொடரும். சிலர் உக்ரேன் ஏற்கனவே தாக்குதல்களைத் தொடங்கி விட்டது என்பதற்கு:

1. மார்ச் – 23-ம் திகதி Zaorizhzhia குண்டுவெடிப்பு

2. மே 2-ம் திகதி கிறிமியாவில் எரிபொருள் களஞ்சியத்தின் மீது தாக்குதல்.

3. மே 3-ம் திகதி தென் கிழக்கு இரசியாவில் Bryansk பிரதேசத்தின் தொடருந்து நிலைகள்மீது எறிகணைத் தாக்குதலும் அங்குள்ள விமானத் தளத்தின் மீது ஆளிலித்தாக்குதலும்.

ஆகிய தாக்குதல்களைச் சுட்டிக் காட்டுகின்றனர். வேறு சிலர் இவை முன்னேற்பாட்டுத் தாக்குதல்கள் மட்டுமே இரசியப் படைகளுக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தக் கூடிய தாக்குதல் இனித்தான் ஆரம்பமாகப் போகின்றது என்கின்றனர். 

area_captured_by_russia.png

இரசியாவிற்கு அதிச்சிக்கு மேல் அதிர்ச்சி

உக்ரேனின் இளவேனிற்கால தாக்குதல் (Spring Offensive) ஐ தடுப்பதற்காக 2023 மே மாதம் 6-ம் திகதி உக்ரேனின் பல்வேறு நகரங்கள் மீது இரசியா பல ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. அவற்றில் ஒரு மீயுயர்வேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணை ஒன்றை உக்ரேன் அமெரிக்காவின் patriotic என்னும் வான்பாதுகாப்பு முறைமை மூலம் சுட்டு வீழ்த்தியதாக உக்ரேன் அறிவித்து உலகப் படைத்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மீயுயர்வேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணையை இடைமறித்து அழிக்கும் வலிமை எந்த நாட்டிடமும் இல்லை என பரவலாக நம்பப்பட்டது. மீயுயர்வேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை உருவாக்குவதில் இரசியாவும் சீனாவும் அமெரிக்காவிலும் பார்க்க ஒரு படி மேல் உள்ளன எனவும் நம்பப்பட்டது. அந்த அதிச்சியைத் தொடர்ந்து அமெரிக்கா $1.2 பில்லியன் உதவியை உக்ரேனுக்கு வழங்கவுள்ளது என்ற செய்தி 2023 மே 9-ம் திகதி வெளிவந்தது. இது உக்ரேனின் நீண்ட கால வான் பாதுகாப்புக்கானது எனவும் அமெரிக்கா சொன்னது. அமெரிக்காவும் மற்ற நேட்டோ நாடுகளும் தொடர்ச்சியாக உக்ரேனுக்கு படைக்கலன்களை வழங்கிக் கொண்டிருக்க முடியாது என நம்பிய புட்டீன் இதை எப்படி எதிர் கொள்ளப்போகின்றார்? அமெரிக்கா தனது புதிய படைக்கலன்களை உக்ரேன் போர்க்களத்தின் இரசியாவின் புதிய படைக்கலன்களுக்கு எதிராக பாவித்து தேர்வுக்கு உள்ளாக்குகின்றதா என்பது இரசியாவிற்கு இன்னும் ஒரு அதிர்ச்சி. இரசியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை அமெரிக்க patriotic சுட்டு வீழ்த்திய செய்தி மே  6ம் திகதி வெளிவந்தது

உக்ரேனின் “இளவேனிற்காலத் தாக்குதல்” (Spring Offensive) ஒரு பெரிய அதிரடித் தாக்குதலாக இருக்காது. இரசியர்கள் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வகையில் சிறிய பல தாக்குதல்களாக இருக்கும்.

இப்போது எதிர்த்தாக்குதல் நடக்க மாட்டாது. எமது போர் வீர ர்களை போதிய படைக்கலன்களின்றி களத்திற்கு அனுப்ப மாட்டோம் என்றார் உக்ரேனிய அதிபர்.

தங்களிடம் பதில் தாக்குதல் பற்றிய விபரங்களைக் கேட்க வேண்டாம் என்றார் உக்ரேனிய துணைப்பாதுகாப்பு அமைச்சர்.

2023 ஏப்ரல் 28-ம் திகதி உக்ரேனில் பல இடங்களில் இரசியா தாக்குதல்களைச் செய்திருந்தது. உக்ரேனின் படைக்கலக் களஞ்சியங்கள் எங்கு இருக்கின்றன எனத் தெரியாத வகையில் குடிசார் உட்-கட்டுமானங்களுக்கு நடுவில் உக்ரேன் அவற்றை மறைத்து வைத்திருக்கின்றது. அவற்றை அழிப்பதற்கு இரசியா செய்யும் தாக்குதல்கள் பல அப்பாவி மக்களுக்கு உயிரிழப்புக்களையும் சொத்து இழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளன.

உக்ரேனியர் தமது நிலப்பரப்பை ஆக்கிரமித்திருக்கும் படையினருக்கு எதிரான தாக்குதலை எப்போது செய்வார்கள் எப்படிச் செய்வார்கள் என்பவை பெரிய கேள்விகளாக இருக்கின்றன.

உக்ரேனியர் தமது பதிலடியை எப்போது செய்வார்கள் என்பது கால நிலையில் பெரிதும் தங்கியுள்ளது என்றார் உக்ரேனியப் படைத்தளபதி. பனி உருகி சேறாக இருக்கும் போது படைக்கலன்களையும் வண்டிகளையும் நகர்த்துவது சிரமமாக இருக்கும். அதனால் இளவேனிற் காலம் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகியும் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படவில்லை.

உக்ரேனின் தாக்குதல் Zaporizhzhiaவைக் கைப்பற்றி பின்னர் அங்கிருந்து கிறிமியாவிற்கான வழங்கற்பாதைகளைத் துண்டிப்பதாக அமையலாம் என சிலர் எதிர்பார்க்கின்றனர்.

https://veltharma.blogspot.com/2023/05/spring-offensive.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தன்  மண்ணை  இழந்தவன்  அதனை  மீட்கணும்

அதற்கு எத்தகைய  தியாகத்தையும் செய்யணும் செய்வார்கள்

போர்களம் மாறும் மாறட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நாலாம் ஈழப்போர் பற்றி அபரிமிதமாக எழுதி ஒரு விடுதலை இயக்கத்தையே இல்லாமல் செய்த பந்தி எழுத்தாளர்களின் ஆதரவு உக்ரைனுக்கு. அதுவும் தமிழன் தலைமீது  வெள்ளை பொஸ்பரஸ் கொட்ட அதனை சப்பிளை செய்தவனுக்கு ஆதரவு. 

போட்டுள்ள படத்தைப் பார்த்தாலே தெரியுது.. ரஷ்சியா தானாக விலகிச் சென்ற இடங்களை தவிர உக்ரைன் போரிட்டு பிடிச்சது என்பது ஒரு சிறிய சதவீதமே ஆகும். இதில பிம்பம் மட்டும் பெரிசு. 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேல் தர்மாவின் குரல்; "இன்னமுமாடா என்னய நம்புறீங்க.. பச்ச பயலாட்டம் இருக்கிறீங்களேயடா"

வாசகர்களின் குரல்; "இப்புடி உசுப்பேத்தி, உசுப்பேத்தியே எங்களச் சாகடிச்சீட்டீங்களேடா?"

எனது குரல்; "நல்ல காலம் உக்ரேனியர்களுக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது "

🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, விசுகு said:

தன்  மண்ணை  இழந்தவன்  அதனை  மீட்கணும்

அதற்கு எத்தகைய  தியாகத்தையும் செய்யணும் செய்வார்கள்

போர்களம் மாறும் மாறட்டும்

இதையே செவ்விந்தியர்கள் தொடங்க ஆரம்பித்தால்?????? :cool:

  • Like 1
Posted
4 hours ago, nedukkalapoovan said:

போட்டுள்ள படத்தைப் பார்த்தாலே தெரியுது.. ரஷ்சியா தானாக விலகிச் சென்ற இடங்களை தவிர உக்ரைன் போரிட்டு பிடிச்சது என்பது ஒரு சிறிய சதவீதமே ஆகும். இதில பிம்பம் மட்டும் பெரிசு. 

விசேட இராணுவ ஆக்கிரமிப்புத் தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்த ரஸ்யா இப்போது செய்வது தற்காப்புப் போர் (பிழைத்துப் போன நிலமை). உக்ரெயின் படைகள் தாக்கும் என்ற அச்சத்தில் 100 கிமீ நீளத்துக்கும் அதிகமான எல்லையில் தடுப்பரண்களையும் குழிகளையும் கிண்டி வருகிறது. 

ரஸ்யா விலகிச் சென்ற இடம் என்றால் என்ன ? ரஸ்யாவின் நோக்கம் ஒன்றுகூட நிறைவேறாமல் தனது பல்லாயிரம் இராணுவத்தையும் ஆயுதத் தளபாடங்களையும் இழந்து கைப்பற்றிய பகுதிகளை உக்ரெயினுக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததா ? 😂 

9 மாதங்களாக முயன்றும் பாக்மூத் நகரை ரஸ்யா கைப்பற்ற முடியாமல் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. உக்கிரமான சண்டை இங்குதான் கடந்த 4 மாதமாக நடைபெறுகிறது. இந்த நகரம் புதினுக்கு கௌரவப் பிரச்சனை. ரஸ்யப் படையினர் தவிர புதிதாக இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட 3 இலட்சம் பேரில் பெரும்பாலானவர்கள் இந்தக் களமுனைக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளனர். போதாக்குறைக்கு வக்னரின் 40 000 கூலிப் படையினர் வேறு.

3 hours ago, Kapithan said:

எனது குரல்; "நல்ல காலம் உக்ரேனியர்களுக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது "

நல்லதுதான். இல்லாவிட்டால் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள்.
உங்களையும் என்னையும் புதினையும் விட உக்ரெய்னியர்களுக்குப் போர் நிலமை நன்றாக விளங்கும். ஏனென்றால் அவர்கள் களத்தில் நிற்கிறார்கள் 😂

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, இணையவன் said:

விசேட இராணுவ ஆக்கிரமிப்புத் தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்த ரஸ்யா இப்போது செய்வது தற்காப்புப் போர் (பிழைத்துப் போன நிலமை). உக்ரெயின் படைகள் தாக்கும் என்ற அச்சத்தில் 100 கிமீ நீளத்துக்கும் அதிகமான எல்லையில் தடுப்பரண்களையும் குழிகளையும் கிண்டி வருகிறது. 

ரஸ்யா விலகிச் சென்ற இடம் என்றால் என்ன ? ரஸ்யாவின் நோக்கம் ஒன்றுகூட நிறைவேறாமல் தனது பல்லாயிரம் இராணுவத்தையும் ஆயுதத் தளபாடங்களையும் இழந்து கைப்பற்றிய பகுதிகளை உக்ரெயினுக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததா ? 😂 

9 மாதங்களாக முயன்றும் பாக்மூத் நகரை ரஸ்யா கைப்பற்ற முடியாமல் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. உக்கிரமான சண்டை இங்குதான் கடந்த 4 மாதமாக நடைபெறுகிறது. இந்த நகரம் புதினுக்கு கௌரவப் பிரச்சனை. ரஸ்யப் படையினர் தவிர புதிதாக இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட 3 இலட்சம் பேரில் பெரும்பாலானவர்கள் இந்தக் களமுனைக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளனர். போதாக்குறைக்கு வக்னரின் 40 000 கூலிப் படையினர் வேறு.

இணையவன்! உங்களிடம் யதார்த்தம் அது சம்பந்தப்பட கருத்துக்கள் அறவே இல்லை.
எனவே உக்ரேன் சம்பந்தமாக கருத்து நெடுத வேண்டுமாயின் தற்போதைய உலக அரசியலை தெரிந்து கொண்டு வாருங்கள்.

மனிதாபிமானம் எனக்கும் உண்டு.

இணையவன்! உங்களிடம் யதார்த்தம் அது சம்பந்தப்பட கருத்துக்கள் அறவே இல்லை.
எனவே உக்ரேன் சம்பந்தமாக கருத்து எழுத வேண்டுமாயின் தற்போதைய உலக அரசியலை தெரிந்து எழுத கொண்டு வாருங்கள். 

மனிதாபிமானம் எனக்கும் உண்டு.

  • Like 1
Posted
3 minutes ago, குமாரசாமி said:

இணையவன்! உங்களிடம் யதார்த்தம் அது சம்பந்தப்பட கருத்துக்கள் அறவே இல்லை.
எனவே உக்ரேன் சம்பந்தமாக கருத்து நெடுத வேண்டுமாயின் தற்போதைய உலக அரசியலை தெரிந்து கொண்டு வாருங்கள்.

மனிதாபிமானம் எனக்கும் உண்டு.

மனிதாபிமானமா ? இதைப் பற்றி நான் இங்கு எழுதவேயில்லை 🤣

கட்டுரை களநிலமை பற்றியது. நான் எழுதியதில் எங்கு யதார்த்தப் பிழை என்று நீங்கள் வாதிடுங்கள்.

உங்கள் அநேகமான கருத்துக்களில் கேள்விகள் மட்டுமே உள்ளன. யாராவது பதில் எழுதினாலும் அதனை வாசிப்பதில்லை போலவே தோன்றும். உங்களுக்கு உலக அரசியல் தெரியும் என்று எனக்குத் தோன்றவில்லை. 😎

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, இணையவன் said:

உங்கள் அநேகமான கருத்துக்களில் கேள்விகள் மட்டுமே உள்ளன. யாராவது பதில் எழுதினாலும் அதனை வாசிப்பதில்லை போலவே தோன்றும். உங்களுக்கு உலக அரசியல் தெரியும் என்று எனக்குத் தோன்றவில்லை. 😎

நீங்கள் சொல்வது நூறு வீதம் சரியானது.👍🏼

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, nedukkalapoovan said:

நாலாம் ஈழப்போர் பற்றி அபரிமிதமாக எழுதி ஒரு விடுதலை இயக்கத்தையே இல்லாமல் செய்த பந்தி எழுத்தாளர்களின் ஆதரவு உக்ரைனுக்கு. அதுவும் தமிழன் தலைமீது  வெள்ளை பொஸ்பரஸ் கொட்ட அதனை சப்பிளை செய்தவனுக்கு ஆதரவு. 

போட்டுள்ள படத்தைப் பார்த்தாலே தெரியுது.. ரஷ்சியா தானாக விலகிச் சென்ற இடங்களை தவிர உக்ரைன் போரிட்டு பிடிச்சது என்பது ஒரு சிறிய சதவீதமே ஆகும். இதில பிம்பம் மட்டும் பெரிசு. 

அப்ப இலங்கையை ஐநாவில் காக்கும் ரஸ்ஸியாவை ஆதரவு தெரிவிக்கலாமா. அதுமட்டுமல்ல, யூக்கிரேன் இலங்கைக்கு உதவிசெய்தபோது அதிபராக இருந்தவர் அமெரிக்கசார்பா, ரஸ்ஸிய சார்பா என்றெல்லாம் சிந்தித்தீர்களா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, இணையவன் said:

1) விசேட இராணுவ ஆக்கிரமிப்புத் தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்த ரஸ்யா இப்போது செய்வது தற்காப்புப் போர் (பிழைத்துப் போன நிலமை). உக்ரெயின் படைகள் தாக்கும் என்ற அச்சத்தில் 100 கிமீ நீளத்துக்கும் அதிகமான எல்லையில் தடுப்பரண்களையும் குழிகளையும் கிண்டி வருகிறது. 

2) ரஸ்யா விலகிச் சென்ற இடம் என்றால் என்ன ? ரஸ்யாவின் நோக்கம் ஒன்றுகூட நிறைவேறாமல் தனது பல்லாயிரம் இராணுவத்தையும் ஆயுதத் தளபாடங்களையும் இழந்து கைப்பற்றிய பகுதிகளை உக்ரெயினுக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததா ? 😂 

3) 9 மாதங்களாக முயன்றும் பாக்மூத் நகரை ரஸ்யா கைப்பற்ற முடியாமல் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. உக்கிரமான சண்டை இங்குதான் கடந்த 4 மாதமாக நடைபெறுகிறது. இந்த நகரம் புதினுக்கு கௌரவப் பிரச்சனை. ரஸ்யப் படையினர் தவிர புதிதாக இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட 3 இலட்சம் பேரில் பெரும்பாலானவர்கள் இந்தக் களமுனைக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளனர். போதாக்குறைக்கு வக்னரின் 40 000 கூலிப் படையினர் வேறு.

4) நல்லதுதான். இல்லாவிட்டால் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள்.
உங்களையும் என்னையும் புதினையும் விட உக்ரெய்னியர்களுக்குப் போர் நிலமை நன்றாக விளங்கும். ஏனென்றால் அவர்கள் களத்தில் நிற்கிறார்கள் 😂

1)  நான் இராணுவ விற்பன்னர்கள் இல்லை. 

2) நான் இராணுவ விற்பன்னர்கள் இல்லை. 

3) நான், இராணுவ விற்பன்னர்கள் இல்லை. 

4) எங்கள் இராணுவ விற்பன்னர்களின் அட்டகாசக் கதைகளைக் வாசித்து வாய்விட்டுச் சிரித்திரிப்பார்கள். 

😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ragaa said:

அப்ப இலங்கையை ஐநாவில் காக்கும் ரஸ்ஸியாவை ஆதரவு தெரிவிக்கலாமா. அதுமட்டுமல்ல, யூக்கிரேன் இலங்கைக்கு உதவிசெய்தபோது அதிபராக இருந்தவர் அமெரிக்கசார்பா, ரஸ்ஸிய சார்பா என்றெல்லாம் சிந்தித்தீர்களா

இலங்கையைக்கு ஆதரவான ரஷ்சியாவின் ஆதரவு என்பது ரஷ்சியாவின் ராஜீக உறவை.. அதன் நட்பை வேண்டாத தமிழர்களின் தவறு.

ஆனால்.. மேற்குலகின் பின் போய் நின்றும்.. வெளிப்படையான.. தமிழரின் போராட்ட நியாயங்களை அறிந்திருந்தும்.. தமிழரின் போராட்டத்தைப் பயங்கரவாதமாக்கி.. அந்த மக்களை இனப்படுகொலை செய்ய திட்டமிட்டு செயற்பட்ட மேற்குநாடுகளினதும்.. அமெரிக்க ஏகாதபத்தியத்தினதும்.. சர்வாதிகாரத்தைப் பின்பற்றி நிற்க தமிழர்களுக்கு என்ன தேவை இருக்கென்று தான் நாம் சிந்திக்க வேண்டும்.

ஏனெனில்.. நாம் ரஷ்சியாவை மத்தியஸ்தத்திற்கு அழைக்கவில்லை. மேற்கை தான் அழைத்தோம். மேற்காலேயே அழிக்கப்பட்டோம். இறுதியில் மேற்காலேயே வஞ்சிக்கவும் பட்டோம். கடையில் கிடைத்திருப்பது என்னவோ.. சிங்கள பெளத்த சர்வாதிகாரத்தின் ஆக்கிரமிப்பு ஆதிக்கத்தின் கீழான  அடிமை வாழ்க்கை.

இந்த நிலை ரஷ்சிய மக்களுக்கு உக்ரைனின் ஒற்றை யூத காமடி கோமாளியால் வராமல் இருந்தால் முழு உலகிற்கும் நன்மையே. குறைந்தது அமெரிக்க ஏகாதபத்தியத்தின் சர்வாதிகார மூக்கு அறுபட்டதாகவாவது இருக்கும். 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
40 minutes ago, nedukkalapoovan said:

       Ostrich-head GIFs - Get the best GIF on GIPHY Ostrich-head GIFs - Get the best GIF on GIPHY

Burying-head-in-sand GIFs - Get the best GIF on GIPHY

ஆஹா.... இதை விட அருமையாக சொல்ல முடியாது. animiertes-applaus-smilies-bild-0019.gif
இதுவும் புரியாதவர்கள்... மண்ணுக்குள் தலையை புதைத்த, தீக்கோழி போன்றவர்கள். 
🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, nedukkalapoovan said:

இலங்கையைக்கு ஆதரவான ரஷ்சியாவின் ஆதரவு என்பது ரஷ்சியாவின் ராஜீக உறவை.. அதன் நட்பை வேண்டாத தமிழர்களின் தவறு.

ஆனால்.. மேற்குலகின் பின் போய் நின்றும்.. வெளிப்படையான.. தமிழரின் போராட்ட நியாயங்களை அறிந்திருந்தும்.. தமிழரின் போராட்டத்தைப் பயங்கரவாதமாக்கி.. அந்த மக்களை இனப்படுகொலை செய்ய திட்டமிட்டு செயற்பட்ட மேற்குநாடுகளினதும்.. அமெரிக்க ஏகாதபத்தியத்தினதும்.. சர்வாதிகாரத்தைப் பின்பற்றி நிற்க தமிழர்களுக்கு என்ன தேவை இருக்கென்று தான் நாம் சிந்திக்க வேண்டும்.

ஏனெனில்.. நாம் ரஷ்சியாவை மத்தியஸ்தத்திற்கு அழைக்கவில்லை. மேற்கை தான் அழைத்தோம். மேற்காலேயே அழிக்கப்பட்டோம். இறுதியில் மேற்காலேயே வஞ்சிக்கவும் பட்டோம். கடையில் கிடைத்திருப்பது என்னவோ.. சிங்கள பெளத்த சர்வாதிகாரத்தின் ஆக்கிரமிப்பு ஆதிக்கத்தின் கீழான  அடிமை வாழ்க்கை.

இந்த நிலை ரஷ்சிய மக்களுக்கு உக்ரைனின் ஒற்றை யூத காமடி கோமாளியால் வராமல் இருந்தால் முழு உலகிற்கும் நன்மையே. குறைந்தது அமெரிக்க ஏகாதபத்தியத்தின் சர்வாதிகார மூக்கு அறுபட்டதாகவாவது இருக்கும். 

அவ்வளவும் பொருள். இதை விட மேலதிக விளக்கம் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nedukkalapoovan said:

ரஸ்ஸியாவின் கொள்கை வேறு சோவியத்தின் கொள்கைகள் வேறு. அதுமட்டுமல்ல, ஈழப்போராட்டத்தில் வெளியறவு கொள்ளகைகளை சாதாரண தமிழ்மக்களா தீர்மாணித்தார்கள்?

ரஸ்ஸியக்காரன் வென்றுகொடுத்த ஒரு இனப்போராட்டத்துக்கு ஒரு உதாரணம் காட்டுங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, ragaa said:

ரஸ்ஸியாவின் கொள்கை வேறு சோவியத்தின் கொள்கைகள் வேறு. அதுமட்டுமல்ல, ஈழப்போராட்டத்தில் வெளியறவு கொள்ளகைகளை சாதாரண தமிழ்மக்களா தீர்மாணித்தார்கள்?

ரஸ்ஸியக்காரன் வென்றுகொடுத்த ஒரு இனப்போராட்டத்துக்கு ஒரு உதாரணம் காட்டுங்கள்?

பெரும்பான்மை ரஷ்சியக் கொள்கைகள்.. சோவியத் சார்ந்ததே. மேலும்.. சாதாரண மக்கள் உலகில் எங்கும் ராஜீக உறவுகளை தீர்மானிப்பதில்லை. அந்த மக்கள் சார்பாக ஆட்சியாளர்கள்.. அல்லது அதிகார தலைமைகள்.. அல்லது அரசியல் தலைமைகள்.. அல்லது போராட்டத் தலைமைகள் தான் தீர்மானிக்கின்றன.

அடிப்படையில் உக்ரைன் போருக்கான காரணம் புரியாமல் தான் உக்ரைனுக்கும் மேற்குலகிற்கும் ஆதரவளிக்கிறீர்களா..??!

உக்ரைன் மேற்கொண்ட டான்பாஸ் பிராந்திய ரஷ்சிய மொழி பேசும்.. மக்கள் மீதான இனப்படுகொலையினை அடுத்துத்தான்.. இந்த யுத்தமே.. 2014 இல் ஆரம்பமானது. அதன் நீட்சிதான் ரஷ்சியாவின் 2022 நேரடித் தலையீடு. அதாவது ரஷ்சியாவின் விசேட இராணுவ நடவடிக்கை. இதனை ரஷ்சியா யுத்தம் என்று கூடச் சொல்லவில்லை. மேலும் இது உக்ரைனை அழிப்பதற்கானதோ.. ஆக்கிரமிப்பதற்கானதோ அல்ல.. மாறாக.. உக்ரைனின் கிழக்கே... தென்கிழக்கே வாழும்.. ரஷ்சிய மொழி பேசும் டான்பாஸ் பிராந்திய மக்களை உக்ரைனின் இன அழிப்பில் இருந்து காக்கும் ஓர் நடவடிக்கையே. இந்த இன அழிப்பை சாட்டாக வைச்சு.. ரஷ்சியாவை சிதைக்க முனையும்.. அமெரிக்க ஏகாதபத்திய வாக்குச் சர்வாதிகாரத்துக்கு உக்ரைன் ஏவல் செய்வதால் தான்.. இந்த யுத்தம் நீடிக்கிறது. அழிவுகள் நிகழ்கின்றன. 

Edited by nedukkalapoovan
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
43 minutes ago, nedukkalapoovan said:

பெரும்பான்மை ரஷ்சியக் கொள்கைகள்.. சோவியத் சார்ந்ததே. மேலும்.. சாதாரண மக்கள் உலகில் எங்கும் ராஜீக உறவுகளை தீர்மானிப்பதில்லை. அந்த மக்கள் சார்பாக ஆட்சியாளர்கள்.. அல்லது அதிகார தலைமைகள்.. அல்லது அரசியல் தலைமைகள்.. அல்லது போராடத் தலைமைகள் தான் தீர்மானிக்கின்றன.

அடிப்படையில் உக்ரைன் போருக்கான காரணம் புரியாமல் தான் உக்ரைனுக்கும் மேற்குலகிற்கும் ஆதரவளிக்கிறீர்களா..??!

உக்ரைன் மேற்கொண்ட டான்பாஸ் பிராந்திய ரஷ்சிய மொழி பேசும்.. மக்கள் மீதான இனப்படுகொலையினை அடுத்துத்தான்.. இந்த யுத்தமே.. 2014 இல் ஆரம்பமானது. அதன் நீட்சிதான் ரஷ்சியாவின் 2022 நேரடித் தலையீடு. அதாவது ரஷ்சியாவின் விசேட இராணுவ நடவடிக்கை. இதனை ரஷ்சியா யுத்தம் என்று கூடச் சொல்லவில்லை. மேலும் இது உக்ரைனை அழிப்பதற்கானதோ.. ஆக்கிரமிப்பதற்கானதோ அல்ல.. மாறாக.. உக்ரைனின் கிழக்கே... தென்கிழக்கே வாழும்.. ரஷ்சிய மொழி பேசும் டான்பாஸ் பிராந்திய மக்களை உக்ரைனின் இன அழிப்பில் இருந்து காக்கும் ஓர் நடவடிக்கையே. இந்த இன அழிப்பை சாட்டாக வைச்சு.. ரஷ்சியாவை சிதைக்க முனையும்.. அமெரிக்கா ஏகாதபத்திய வாக்குச் சர்வாதிகாரத்துக்கு உக்ரைன் ஏவல் செய்வதால் தான்.. இந்த யுத்தம் நீடிக்கிறது. அழிவுகள் நிகழ்கின்றன. 

ஐனநாயகம் பிழை என்றால் தாங்கள் எமக்கு தரும் மேலானது எது?????

மக்களால் மக்களுக்காக மக்களே நடாத்தும் ஆட்சியில் பிழை இருப்பின் அது மக்களின் தவறு

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, nedukkalapoovan said:

பூட்டீனின் அகண்ட ரஸ்ஸியா கொள்கைதான் இந்த போருக்கு காரணம். அவர் KGB க்கு பொறுப்பாக இருந்து ரஸ்ஸிய அதிபராக வந்ததிலிருந்து அவரது நோக்கமே, சோவியத்திற்கு நிகரான அகண்ட ரஸ்ஸியாவை உருவாக்குவதே. 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ragaa said:

ரஸ்ஸியாவின் கொள்கை வேறு சோவியத்தின் கொள்கைகள் வேறு. அதுமட்டுமல்ல, ஈழப்போராட்டத்தில் வெளியறவு கொள்ளகைகளை சாதாரண தமிழ்மக்களா தீர்மாணித்தார்கள்?

ரஸ்ஸியக்காரன் வென்றுகொடுத்த ஒரு இனப்போராட்டத்துக்கு ஒரு உதாரணம் காட்டுங்கள்?

மேற்கு நாடுகள்தான் எமதுபோராட்டத்தைப் பயங்கரவாதம் என்றார்கள். 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
30 minutes ago, விசுகு said:

ஐனநாயகம் பிழை என்றால் தாங்கள் எமக்கு தரும் மேலானது எது?????

மக்களால் மக்களுக்காக மக்களே நடாத்தும் ஆட்சியில் பிழை இருப்பின் அது மக்களின் தவறு

நாடுகளற்ற.. எல்லைகளற்ற.. ஆயுதங்கள் அற்ற.. இராணுவங்கள் அற்ற.. மக்களின் சுயமான விருப்பின் மூலம் தெரிவாகும் பொறுப்புக் கூறலுக்கு கட்டுப்பட்ட.. கூட்டுத் தலைமைகள் கொண்ட.. உலகாட்சி.

இன்றைய உலகே.. கிராமமாகிவிட்டுள்ள நிலையில்.. உலக மக்களுக்கான ஒரு பொது ஆட்சி மையமும்.. சுதந்திர நடமாட்டமும்.. பொது வளப் பயன்பாடும்.. பொருண்மியமீட்டலும் தான் தேவை. 

சர்வாதிகாரமோ.. வாக்குச் சர்வாதிகாரமோ.. பெரும்பான்மை அமைக்கும் சர்வாதிகாரமோ.. வாக்குப் பெற்ற பின் மாறும் சர்வாதிகாரமோ எமக்கு அவசியமில்லை. உலகம்.. பொது ஆட்சிப் பீடமொன்றின் கீழ்... உலக மக்களின் ஒருமித்த பொதுவிருப்பின் கீழ் ஆளப்படுதல் வேண்டும். 

28 minutes ago, ragaa said:

பூட்டீனின் அகண்ட ரஸ்ஸியா கொள்கைதான் இந்த போருக்கு காரணம். அவர் KGB க்கு பொறுப்பாக இருந்து ரஸ்ஸிய அதிபராக வந்ததிலிருந்து அவரது நோக்கமே, சோவியத்திற்கு நிகரான அகண்ட ரஸ்ஸியாவை உருவாக்குவதே. 

ஏற்கனவே உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்சியாவிக்கு எனியும் அகட்ட வேண்டிய தேவையில்லை என்பதை சோவியத் உடைவுக்குப் பின் அகண்டு பெருகும்.. நேட்டோவின் எல்லை புலப்படுத்துகிறது.

இந்த யுத்தம்.. அகண்ட ரஷ்சியாவுக்கானதல்ல.. அகண்ட நேட்டோவுக்கானது.. ரஷ்சிய சிதைவை மையப்படுத்தியது.. இதனை அமெரிக்க ஏகாதபத்திய சர்வாதிகார சக்தியின்.. சி ஐ ஏ ஏஜென்டே ஒத்துக்கொண்டுள்ளார். 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, nedukkalapoovan said:

நாடுகளற்ற.. எல்லைகளற்ற.. ஆயுதங்கள் அற்ற.. இராணுவங்கள் அற்ற.. மக்களின் சுயமான விருப்பின் மூலம் தெரிவாகும் பொறுப்புக் கூறலுக்கு கட்டுப்பட்ட.. கூட்டுத் தலைமைகள் கொண்ட.. உலகாட்சி.

இன்றைய உலகே.. கிராமமாகிவிட்டுள்ள நிலையில்.. உலக மக்களுக்கான ஒரு பொது ஆட்சி மையமும்.. சுதந்திர நடமாட்டமும்.. பொது வளப் பயன்பாடும்.. பொருண்மியமீட்டலும் தான் தேவை. 

சர்சாதிகாரமோ.. வாக்குச் சர்வாதிகாரமோ.. பெரும்பான்மை அமைக்கும் சர்வாதிகாரமோ.. வாக்குப் பெற்ற பின் மாறும் சர்வாதிகாரமோ எமக்கு அவசியமில்லை. உலகம்.. பொது ஆட்சிப் பீடமொன்றின் கீழ்... உலக மக்களின் ஒருமித்த பொதுவிருப்பின் கீழ் ஆளப்படுதல் வேண்டும். 

கானல் நீர் தான்

ஆனால் கனவு காணலாம் தப்பில்லை. நன்றி 

Posted
18 hours ago, Kapithan said:

எனது குரல்; "நல்ல காலம் உக்ரேனியர்களுக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது "

12 hours ago, Kapithan said:

3) நான், இராணுவ விற்பன்னர்கள் இல்லை. 

4) எங்கள் இராணுவ விற்பன்னர்களின் அட்டகாசக் கதைகளைக் வாசித்து வாய்விட்டுச் சிரித்திரிப்பார்கள். 

இவை நீங்கள் எழுதியவைதானே ? உங்களாலேயே விளக்க முடியவில்லையா ? ஒரு விடயத்தை நக்கலடிப்பதாக இருந்தால் அதை மறுதலிக்கும் கருத்து உங்களிடம் இருக்க வேண்டும். 

மீண்டும் ஒரு தடவை, யாழில் எழுதுவது குழப்பம் விளைவிக்கவே என்று கூறப் போகிறீர்களா ?

  • Haha 1
Posted
5 hours ago, nedukkalapoovan said:

இலங்கையைக்கு ஆதரவான ரஷ்சியாவின் ஆதரவு என்பது ரஷ்சியாவின் ராஜீக உறவை.. அதன் நட்பை வேண்டாத தமிழர்களின் தவறு.

புலிகளின் அரசியல் தலைமைக்கு நீங்கள் பாடம் எடுக்க முடியாமல் போனது எமது துரதிஸ்டமே.

5 hours ago, nedukkalapoovan said:

இலங்கையைக்கு ஆதரவான ரஷ்சியாவின் ஆதரவு என்பது ரஷ்சியாவின் ராஜீக உறவை.. அதன் நட்பை வேண்டாத தமிழர்களின் தவறு.

ஆனால்.. மேற்குலகின் பின் போய் நின்றும்.. வெளிப்படையான.. தமிழரின் போராட்ட நியாயங்களை அறிந்திருந்தும்.. தமிழரின் போராட்டத்தைப் பயங்கரவாதமாக்கி.. அந்த மக்களை இனப்படுகொலை செய்ய திட்டமிட்டு செயற்பட்ட மேற்குநாடுகளினதும்.. அமெரிக்க ஏகாதபத்தியத்தினதும்.. சர்வாதிகாரத்தைப் பின்பற்றி நிற்க தமிழர்களுக்கு என்ன தேவை இருக்கென்று தான் நாம் சிந்திக்க வேண்டும்.

ஏனெனில்.. நாம் ரஷ்சியாவை மத்தியஸ்தத்திற்கு அழைக்கவில்லை. மேற்கை தான் அழைத்தோம். மேற்காலேயே அழிக்கப்பட்டோம். இறுதியில் மேற்காலேயே வஞ்சிக்கவும் பட்டோம். கடையில் கிடைத்திருப்பது என்னவோ.. சிங்கள பெளத்த சர்வாதிகாரத்தின் ஆக்கிரமிப்பு ஆதிக்கத்தின் கீழான  அடிமை வாழ்க்கை.

இந்த நிலை ரஷ்சிய மக்களுக்கு உக்ரைனின் ஒற்றை யூத காமடி கோமாளியால் வராமல் இருந்தால் முழு உலகிற்கும் நன்மையே. குறைந்தது அமெரிக்க ஏகாதபத்தியத்தின் சர்வாதிகார மூக்கு அறுபட்டதாகவாவது இருக்கும். 

நான் நினைக்கிறேன், நான் மேற்கோள் காட்டி எழுதிய கருத்துக்குப் பதில் எழுத முடியாமல் வேறொரு கிளையப் பிடித்துத் திரியைத் திசை திருப்புகிறீர்கள்.

1 hour ago, Kapithan said:

மேற்கு நாடுகள்தான் எமதுபோராட்டத்தைப் பயங்கரவாதம் என்றார்கள். 😀

இந்தியாவோடு சேர்ந்து ஐநாவில் தமிழர்களுக்குக் கொஞ்சமேனும் ஆதரவாகக் கொண்டுவரும் ஒவ்வொரு தீர்மானத்தையும் வாதாடி முறியடிப்பது யார் ? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, இணையவன் said:

இவை நீங்கள் எழுதியவைதானே ? உங்களாலேயே விளக்க முடியவில்லையா ? ஒரு விடயத்தை நக்கலடிப்பதாக இருந்தால் அதை மறுதலிக்கும் கருத்து உங்களிடம் இருக்க வேண்டும். 

மீண்டும் ஒரு தடவை, யாழில் எழுதுவது குழப்பம் விளைவிக்கவே என்று கூறப் போகிறீர்களா ?

இணையவன், 

உங்களுக்கு விளக்கப் பிழை/குறைபாடு இருக்குமானால் அது உங்கள் பிரச்சனை. அந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நான் வைத்தியர் அல்ல. 

😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, இணையவன் said:

புலிகளின் அரசியல் தலைமைக்கு நீங்கள் பாடம் எடுக்க முடியாமல் போனது எமது துரதிஸ்டமே.

நான் நினைக்கிறேன், நான் மேற்கோள் காட்டி எழுதிய கருத்துக்குப் பதில் எழுத முடியாமல் வேறொரு கிளையப் பிடித்துத் திரியைத் திசை திருப்புகிறீர்கள்.

ஏன் நீங்கள் புலிகள் தான் அதனை செய்யனுன்னு கற்பிதம் செய்கிறீர்கள். புலிகள் மேற்குச் சார்ப்பாக இருந்தும்.. புலிகளுக்கு போட்டியாக.. மாற்றுக்கொள்கை.. மாற்றான் கொள்கை என்று திரிந்தவர்கள்.. ரஷ்சிய ஆதரவையும் தேடி.. அவரவர் பூகோள நலன் சார்ந்து தமிழ் மக்களின் போராட்ட நியாயத்தை கொண்டு சென்றிருக்கலாம். எல்லாம் புலிகள் தான் செய்யனுன்னு இல்லையே. புலிகள் காலத்தில் அரசியல் செய்தோர் உளர்.. மாற்றுக்கருத்து பசப்பித் திருந்தோர் உளர்.. இடதுசாரி இயக்கங்கள் நடத்தியோர் உளர்.. அவையும் தமிழ் மக்களுக்காகத்தானே செயற்படுவதாகச் சொன்னார்கள்.

அமெரிக்க - இஸ்ரேல்.. ஆதரவை ஜே ஆர் அரசு பெற்ற போது.. லெபனான் - பலஸ்தீன அதரவை பெற்றவர்களுக்கு புலிகள் மேற்கு சார்ப்பாக இருந்து நகர்ந்த போது.. இவர்கள் ஏன் ரஷ்சியா- சீனா- கீயூபா சார்ந்து இயங்க முடியவில்லை..??!

இது தமிழர்களின் ராஜீக சிந்தனைத் தவறே ஆகும். புலிகளதல்ல. 

  • Like 2

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரிசியைச் சோறாக்கி கஞ்சி வடிப்பதுபோல் அரசியல் கருத்துக்களையும் ஆராய்ந்து வடித்து எடுக்கலாம். பல பதிவுகளில் விசுகு அவர்கள் வடித்தெடுக்கும் அரசியல் கருத்துக் கஞ்சி புத்திக்கும் உரமூட்டுவதாக உணரமுடிகிறது.😌
    • தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்! நிலாந்தன் "ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்" adminDecember 15, 2024 கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கிளிநொச்சி தொண்டமான் நகரில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தனக்கு முன்னால் நின்ற இளைஞரிடம் கேட்டிருக்கிறார் “யாருக்கு வாக்களிக்கப் போகிறாய்?” “ஊசிக்குத்தான்” என்று இளைஞர் பதில் சொல்லியுள்ளார். “ஊசிக்கா?” இவர் திரும்பக் கேட்க, “ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்” என்று அவர் சிரித்துக் கொண்டு பதில் சொல்லியுள்ளார். உண்மை. அர்ஜுனா சிரிக்க வைக்கிறார். கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து, வைத்தியசாலையின் பணிப்பாளரோடு அவர் வாக்குவாதப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் ஒரு சபை குழப்பி போல நடந்துகொண்டார். இவற்றைப் பார்த்துச் சிரிக்கும் ஒவ்வொரு தமிழரும் அர்ஜுனாவை மட்டும் பார்த்துச் சிரிக்கவில்லை. தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஏனென்றால் அவருக்கு வாக்களித்தது தமிழ் மக்கள்தான். தமிழரசியல், குறிப்பாக ஆயுதப் போராட்ட அரசியல் அதிகம் சீரியஸானது. ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான கடந்த 15 ஆண்டு கால அரசியலிலும் சீரியஸ் அதிகம். கலகலப்பு, பம்பல்,சிரிப்பு குறைவு. கடந்த 15 ஆண்டுகளாக அவ்வாறு அரசியலை சிரிக்கும் விடயமாக மாற்றும் கார்ட்டூனிஸ்டுகள் குறைந்த ஒரு தமிழ்த் தேசியப் பரப்பில் அர்ஜுனா ஒரு “கார்ட்டூன் கரெக்ராக”,  “கரிக்கேச்சராக” -(caricature) அதாவது கேலிச்சித்திரமாக மேலெழுந்துள்ளார். அவர் எல்லாவறையுமே கரிக்கேச்சர் ஆக்கிவிடுகிறார். தன்னையும் சேர்த்து. அவர் மருத்துவ நிர்வாகத் துறைக்குள் வேலை செய்தவர். ஒரு போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதென்றால், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற ஒழுங்குமுறை தெரியாதவராக இருக்க முடியாது. அதை அவர் மாகாண நிர்வாகத்துக்கு ஊடாக அணுகியிருக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சுக்கூடாக அணுகியிருக்கலாம். இரண்டையும் அவர் செய்யவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக தனக்கு மக்கள் அதிகாரம் கிடைத்திருப்பதாக அவர் கருதுகிறார். அது அதிகாரம் அல்ல. அது ஒரு பொறுப்பு. அந்தப் பொறுப்பை உணர்ந்து அவர் நடப்பதாகத் தெரியவில்லை. இதனால் அரச அதிகாரிகள் மீதும் திணைக்களங்களின் மீதும் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அவற்றின் கனதியை இழக்கின்றன. அரச உயர் அதிகாரிகளும் திணைக்களங்களும் கேள்விக்கு அப்பாற்பட்டவை அல்ல. அர்ச்சுனா கேட்கும் கேள்விகளை ஒரு பகுதி மக்கள் ரசிக்கிறார்கள்; ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். ஆனால், அக்கேள்விகளை எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதுபோல, அர்ச்சுனா “மிஸ்ரர்.பீனின்” பாணியில் கேட்கும்போது அக்கேள்விகள் அவற்றின் சீரியஸ்தனத்தை இழந்துவிடுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அவர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்து கொண்ட விதம், அவருக்கும் மருத்துவர் சத்தியமூர்த்திக்கும் இடையிலான முரண்பாடு, அவருக்கும் அரச உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்றவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது, அவர்,யாருக்கும் பொறுப்புக்கூறத் தேவையில்லாத ஒருவராகத் தன்னை கருதுகிறாரா என்று கேள்வி எழுகிறது. அர்ஜுனாவை மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கும் சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள,ஆங்கில ஊடகங்களும் அவருக்கு வாக்களித்த தமிழ் மக்களைத்தான் மறைமுகமாக விமர்சிக்கின்றன. தென்னிலங்கையிலும் மேர்வின் டி சில்வாக்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சுயேச்சைகள் அல்ல. கட்சித் தலைமைக்குக் கீழ்ப்பட்டவர்கள். ஆனால் அர்ஜுனா யாருக்கும் கட்டுப்படாத, யாரையும் பொருட்படுத்தாத ஒருவரா? மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்றில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படிப் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதனை அவருக்கு யார் கற்றுக் கொடுப்பது? அல்லது அவர் யாரிடமிருந்தாவது கற்றுக்கொள்ளத் தயாரா? ஒன்றில் சபை நாகரீகம் தெரிய வேண்டும். அல்லது வெட்கம்,அவையடக்கம் இருக்க வேண்டும். இவை எவையுமே இல்லாத ஒருவரை ஏன் தமிழ் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அல்லது அவரைப்போன்ற ஒருவரைத் தெரிந்தெடுக்கும் அளவுக்கு தமிழ்மக்களை நிர்பந்தித்த காரணிகள் எவை? அர்ஜுனா தற்செயலாக மேலெழவில்லை. விபத்தாக மேலெழவில்லை. அவர் தெரிந்தெடுக்கப்படுவதற்கான அகப்புற நிலைமைகளை உருவாக்கிய காரணிகள் உண்டு. தமிழ் அரசியல் சமூகம் அவற்றை ஆராய வேண்டும். தலைமைத்துவ வெற்றிடம்; தங்களுடைய சின்னச்சின்ன அன்றாடப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்க யாராவது வேண்டும் என்று தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் சிந்தித்தமை; தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஐக்கியமின்மை, அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் வெறுப்பும் ; தமிழ்த் தேசியக் கட்சிகள் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளைக் கவனிக்கத் தவறியமை ; சமூக வலைத்தளங்களால், யூரியூப்களால் ஊதிப் பெருப்பிக்கப்படும் பிம்பங்கள்….போன்ற பல காரணங்களின் விளைவு அவர். அவருக்கு விழுந்த வாக்குகள் சுமந்திரன், கஜேந்திரகுமார் உட்பட முக்கிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு விழுந்த வாக்குகளைவிட அதிகம். அவர் தன்னுடைய கலகத்தைத் தொடங்கியது சாவகச்சேரி ஆஸ்பத்திரியில். அந்த ஆஸ்பத்திரி வாசலில் இருந்து சிறிது தூரத்தில்தான் ரவிராஜின் சிலை உண்டு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சாவகச்சேரி மக்கள் ரவிராஜின் நினைவுகளை விடவும் அர்ஜுனாவின் நேரலைகளுக்கு அதிகம் வாக்களித்திருக்கிறார்கள். ரவியின் சிலை கண்ணீர் விடுவதுபோல உங்களுக்கு தோன்றவில்லையா? என்று மனோகணேசன் என்னிடம் கேட்டார். அர்ஜுனாவின் சுயேச்சைக் குழுவுக்கு வாக்களித்தது மொத்தம் 27,855 பேர். யாழ்ப்பாணத்தில் விழுந்த செல்லுபடியாகும் வாக்குகளின் தொகை மொத்தம் 358,079. இதில் 8.56விகிதத்தினர் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். “அது ஒரு சிறிய தொகைதான். ஆனால் அந்தத் தொகை அடுத்தடுத்த தேர்தலில் பல மடங்காகப் பெருகும் ஆபத்தை எப்படித் தடுப்பது?” என்று மூத்த,ஊடகச் செயற்பாட்டாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். தேசமாகத் திரட்டப்படாத மக்கள் எதிர்காலத்திலும் அர்ஜுனாக்களைத்தான் தெரிவுசெய்யப் போகிறார்கள் என்று நான் அவருக்குச் சொன்னேன். சமூக வலைத்தள ஊடகச் சூழலும், குறிப்பாக யுரியுப்பர்களும் அந்தச் சிறிய தொகையை பெரிய தொகையாக மாற்றுவதை எப்படித் தடுப்பது? யூரியூப்பர்களின் காலத்தில் தேசத்தைத் திரட்டுவதற்கான புதிய, படைப்புத்திறன் மிக்க உபாயங்களைத் தமிழ்த் தேசியவாதிகள் கண்டுபிடிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை முன்நிறுத்தி, தமிழ் மக்களைத் தேமாகத் திரட்ட முயன்ற தரப்புகளுக்கு எதிராக சில யூரியுப் வெறுப்பர்கள் (haters) தனிப்பட்ட தாக்குதல்களை நடாத்தினார்கள். தமிழக எழுத்தாளர் தொ.பரமசிவன் வெறுப்பர்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்… ” இப்ப எழுதும் சிலரின் எழுத்தை வாசித்தால் வெறுப்புதான் முழுமையாய் வெளிப்படும். எதிர்ப்பை வெளிப்படுத்துவது தவறல்ல. வெறுப்பு என்பது இரு காரணங்களால் வெளிப்படுவது. ஒன்று இயலாமை; மற்றொன்று பொறாமை. இதற்கு மருந்தே கிடையாது”. தமிழ்த் தேசியப் பரப்பில் அவ்வாறு மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியாத வெறுப்பர்கள் தொகை அதிகரித்து வருகின்றது. கட்சிகளுக்குள்ளும் கட்சிகளுக்கு வெளியிலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் வெறுப்பர்கள் பெருகி வருகிறார்கள். இவ்வாறு கட்சிகளாலும் ஊடகங்களாலும் வெறுப்பர்களாலும் சிதறடிக்கப்படும் ஒரு மக்கள் கூடத்தைத் திரட்டத் தவறிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் எப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்கினார்கள்? அது தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஒரு தண்டனை. அதே சமயம் அர்ஜுனாவுக்கு தமிழ் மக்கள் வழங்கிய வெற்றியை எப்படிப் பார்ப்பது? அது தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிய தண்டனையா? நிலாந்தன்     https://www.nillanthan.com/7018/
    • முடிந்தால் முட்டையை ஆட்டையைப் போட்டுப் பார் . ........!  😂
    • இந்த பொது வெளியில் நான் எழுதிய அரசியல் கருத்தானது  புரிந்து கொள்ளும் ஆற்றல், அறிவு உடையவர்களுக்கானது மட்டுமே. 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.