Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகையை திருமணம் செய்வதாக உறுதியளித்து 65 இலட்சம் ரூபா மோசடி செய்ததாக கூறப்படும் நபருக்கு விளக்கமறியலில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக் ஊடாக சிங்கள நடிகையொருவருடன் நட்பை ஏற்படுத்தி திருமணம் செய்வதாக உறுதியளித்து நடிகையொருவரிடமிருந்து 65 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சந்தேக நபர் கொழும்பு மற்றும் கம்பஹா நீதிமன்றங்களில் கடமையாற்றும் இரண்டு கனிஷ்ட சட்டத்தரணிகளை திருமணம் செய்து கொள்வதாக கூறி 99 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் என நீதிமன்றில் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், நடிகை தொடர்பான வழக்கில் சந்தேகநபர் மஹர சிறைச்சாலையின அதிகாரிகளால் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர், இரத்தினபுரி, கஹவத்தையைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மினுவாங்கொடை, பட்டதுவன பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய நடிகையொருவரிடம் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தன்னை சமூக நல ஆர்வலர் எனக் கூறி இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், கொழும்பு நீதிமன்றில் கடமையாற்றும் சட்டத்தரணி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து 55 இலட்சம் ரூபாவும், கம்பஹா நீதிமன்றின் சட்டத்தரணி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 49 இலட்சம் ரூபாவும் மோசடி செய்த குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/254917

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஏராளன் said:

பேஸ்புக் ஊடாக சிங்கள நடிகையொருவருடன் நட்பை ஏற்படுத்தி திருமணம் செய்வதாக உறுதியளித்து நடிகையொருவரிடமிருந்து 65 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறப்படும் நபர்

தயவு செய்து நடிகையின் படத்தை போடவும்.:smiling_face_with_heart_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தயவு செய்து நடிகையின் படத்தை போடவும்.:smiling_face_with_heart_eyes:

சொறி, ரூ லேட்.

காசு கையில, மடீல இல்லையாம். இலவசமா, சீதனமில்லாம கட்டூவீங்கள் எண்டா, படம் அனுப்புவாவாம். 😁 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் பலமுறை இப்படி விளையாடியிருக்கிறார்........முதல் முறை விளையாடியபோதே வைத்தியம் செய்திருக்க வேண்டும்.......தவற விட்டிட்டினம்......!  😁

pandi on Twitter: "@nagercoil_town பாக்கு வெட்டி" / Twitter

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இந்த சந்தேக நபர் கொழும்பு மற்றும் கம்பஹா நீதிமன்றங்களில் கடமையாற்றும் இரண்டு கனிஷ்ட சட்டத்தரணிகளை திருமணம் செய்து கொள்வதாக கூறி 99 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் என நீதிமன்றில் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2 hours ago, குமாரசாமி said:

தயவு செய்து நடிகையின் படத்தை போடவும்.:smiling_face_with_heart_eyes:

53 minutes ago, Nathamuni said:

சொறி, ரூ லேட்.

காசு கையில, மடீல இல்லையாம். இலவசமா, சீதனமில்லாம கட்டூவீங்கள் எண்டா, படம் அனுப்புவாவாம். 😁 

39 minutes ago, suvy said:

அவர் பலமுறை இப்படி விளையாடியிருக்கிறார்........முதல் முறை விளையாடியபோதே வைத்தியம் செய்திருக்க வேண்டும்.......தவற விட்டிட்டினம்......!  😁

animiertes-schneider-bild-0009.gifanimiertes-schneider-bild-0008.gif

இவர் ஏற்கெனவே...  இரண்டு பெண் அப்புக்காத்து மாரையும் ஏமாற்றி 
99 லட்ச ரூபாய் பறித்துள்ளதை பார்க்க... 
இதே தொழிலாகத்தான் திரியுறார் போலை இருக்கு. 
சுவியர் சொன்ன மாதிரி.. பாக்கு வெட்டித்தான்  நல்ல மருந்து. 😂

எனக்கு... உடான்ஸ் சாமியாரிலை தான் பலத்த சந்தேகம்.
அவருக்கும்... 27 வயது என்ற படியால், அவர்தான்... ஆள். 
விடாதேங்கோ ஆபீசர், ஆளை பிடிச்சு...  ஓட்ட  "கட்" பண்ணி அனுப்பி விடுங்கோ.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

இவர் ஏற்கெனவே...  இரண்டு பெண் அப்புக்காத்து மாரையும் ஏமாற்றி 
99 லட்ச ரூபாய் பறித்துள்ளதை பார்க்க.
.. 
இதே தொழிலாகத்தான் திரியுறார் போலை இருக்கு. 
சுவியர் சொன்ன மாதிரி.. பாக்கு வெட்டித்தான்  நல்ல மருந்து. 😂

எனக்கு... உடான்ஸ் சாமியாரிலை தான் பலத்த சந்தேகம்.
அவருக்கும்... 27 வயது என்ற படியால், அவர்தான்... ஆள். 
விடாதேங்கோ ஆபீசர், ஆளை பிடிச்சு...  ஓட்ட  "கட்" பண்ணி அனுப்பி விடுங்கோ.  🤣

பெண்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் இப்படிப்பட்ட கயவர்களிடம்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

பெண்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் இப்படிப்பட்ட கயவர்களிடம்

வக்கீல் பெண் ஒன்றல்ல... இரண்டை ஏமாத்தின ஆள் என்றால்...
எப்படி கதையாலை அலுவலை கொண்டு போயிருக்கிறான்...
அதுகளும்... சுளையாக 99 லட்சம் ரூபாயை கொடுத்து  கலியாணம் கட்டுவான்  
எண்டு பாத்துக் கொண்டு இருந்திருக்கினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தயவு செய்து நடிகையின் படத்தை போடவும்.:smiling_face_with_heart_eyes:

ஐயையோ!

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, உடையார் said:

பெண்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் இப்படிப்பட்ட கயவர்களிடம்

ஆண்கள் தான், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் இப்படிப்பட்ட பணம் பறிக்கும் பெண்களிடம் என்கிற கதை மாறிப்போச்சு😎🥹

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் சிங்களத்தியை எமாத்துகிறான் நமக்கென்ன .😃அதுகளின் பொழுது போக்குகளில் இதுவும் ஒன்று .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அதுகளும்... சுளையாக 99 லட்சம்
.

அடப்பாவமே செஞ்சரி மிஸ்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, சுவைப்பிரியன் said:

அடப்பாவமே செஞ்சரி மிஸ்.🤣

9 hours ago, ஏராளன் said:

இந்த சந்தேக நபர் கொழும்பு மற்றும் கம்பஹா நீதிமன்றங்களில் கடமையாற்றும் இரண்டு கனிஷ்ட சட்டத்தரணிகளை திருமணம் செய்து கொள்வதாக கூறி 99 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் என நீதிமன்றில் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-----அத்துடன், கொழும்பு நீதிமன்றில் கடமையாற்றும் சட்டத்தரணி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து 55 இலட்சம் ரூபாவும், கம்பஹா நீதிமன்றின் சட்டத்தரணி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 49 இலட்சம் ரூபாவும் மோசடி செய்த குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/254917

"தினக்குரல்" செய்தியின் ஆரம்பத்தில்... 99 லட்ச  ரூபாய் என எழுதி விட்டு,
இறுதியில் ஒருவரிடம்  55 இலட்சம் ரூபாவும், மற்றவரிடம் 49 இலட்சம் ரூபாவும் 
மோசடி செய்தாக குறிப்பிட்டுள்ளது.
இரண்டையும் கூட்டிப் பார்க்க  55+49 = 104 இலட்சம்  ரூபா வருகின்றது. 😂

"தினக்குரல்"... கணக்கிலை, புலி போல் தெரிகின்றது. 😜

இணைய ஊடக காவலன் @Kapithan´ஐ மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னடா கோழியும் கொடுத்து தின்ன கூலியும் கொடுப்பார்களா ?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Maruthankerny said:

இதென்னடா கோழியும் கொடுத்து தின்ன கூலியும் கொடுப்பார்களா ?

கோழி குருட்டுக் கோழியோ?😎

3 hours ago, தமிழ் சிறி said:

"தினக்குரல்" செய்தியின் ஆரம்பத்தில்... 99 லட்ச  ரூபாய் என எழுதி விட்டு,
இறுதியில் ஒருவரிடம்  55 இலட்சம் ரூபாவும், மற்றவரிடம் 49 இலட்சம் ரூபாவும் 
மோசடி செய்தாக குறிப்பிட்டுள்ளது.
இரண்டையும் கூட்டிப் பார்க்க  55+49 = 104 இலட்சம்  ரூபா வருகின்றது. 😂

"தினக்குரல்"... கணக்கிலை, புலி போல் தெரிகின்றது. 😜

இணைய ஊடக காவலன் @Kapithan´ஐ மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 🤣

பாக்குவெட்டி திரிவதால் அவர் இந்தப்பக்கம் தலை வைச்சும் படார். 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Nathamuni said:

சொறி, ரூ லேட்.

நான் என்ன  அந்த நடிகையோட குடும்பம் நடத்தவே படம் கேட்டனான்?
என்ரை உள் நோக்கம் வேறை கண்டியளோ....:face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ஏராளன் said:

ஐயையோ!

என்ன ஐய்யையோ????

Download thirumba thirumba pesura vedival comdey - NatokHD.Com

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

"தினக்குரல்" செய்தியின் ஆரம்பத்தில்... 99 லட்ச  ரூபாய் என எழுதி விட்டு,
இறுதியில் ஒருவரிடம்  55 இலட்சம் ரூபாவும், மற்றவரிடம் 49 இலட்சம் ரூபாவும் 
மோசடி செய்தாக குறிப்பிட்டுள்ளது.
இரண்டையும் கூட்டிப் பார்க்க  55+49 = 104 இலட்சம்  ரூபா வருகின்றது. 😂

"தினக்குரல்"... கணக்கிலை, புலி போல் தெரிகின்றது. 😜

இணைய ஊடக காவலன் @Kapithan´ஐ மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 🤣

எல்லாப் பிரச்சினையும் கூகிள் ஆண்டவரை மட்டுமே நம்பி, சிறிதளவேனும் வாசிப்பு ரசனையற்ற, சம்பளத்தை மட்டுமே நோக்காகக் கொண்ட தட்டெழுத்தாளர்களை வேலைக்கமர்த்தும், இலாபத்தை மட்டுமே நோக்காகக் கொண்ட வியாபாரிகள் ஊடகத்தை நடாத்த முனைந்ததன் வெளிப்பாடுதான் இந்தக் கூட்டல் கழித்தல் பிரச்சனை. 

ஆகக் குறைந்த பொது உணர்வுதானும் வேண்டாமா இந்த வியாபாரிகளுக்கு

☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

என்ன ஐய்யையோ????

Download thirumba thirumba pesura vedival comdey - NatokHD.Com

நான் படத்தை தேடி கஸ்ரப்பட்டு போட நீங்க அவவிட்ட காசை கேக்க! பிள்ளை இப்பவே நொந்து போய் இருக்கு, உழைச்ச காசெல்லாம் போச்சே என்று.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

எல்லாப் பிரச்சினையும் கூகிள் ஆண்டவரை மட்டுமே நம்பி, சிறிதளவேனும் வாசிப்பு ரசனையற்ற, சம்பளத்தை மட்டுமே நோக்காகக் கொண்ட தட்டெழுத்தாளர்களை வேலைக்கமர்த்தும், இலாபத்தை மட்டுமே நோக்காகக் கொண்ட வியாபாரிகள் ஊடகத்தை நடாத்த முனைந்ததன் வெளிப்பாடுதான் இந்தக் கூட்டல் கழித்தல் பிரச்சனை. 

ஆகக் குறைந்த பொது உணர்வுதானும் வேண்டாமா இந்த வியாபாரிகளுக்கு

☹️

//ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கானுக்கு விஜயம்!//

https://athavannews.com/2023/1332532

👆மேலே உள்ளது... இன்றைய ஆதவனின் தலைப்பு செய்தி.
தலைப்பையே...பிழை விட்டு எழுதுவதை பார்க்க, 
நிலைமை படு மோசமாகிக் கொண்டு போகின்றது.
இதற்கு யார்... கடிவாளம் போடுவது என்றும் தெரியவில்லை. 😥

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

//ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கானுக்கு விஜயம்!//

https://athavannews.com/2023/1332532

👆மேலே உள்ளது... இன்றைய ஆதவனின் தலைப்பு செய்தி.
தலைப்பையே...பிழை விட்டு எழுதுவதை பார்க்க, 
நிலைமை படு மோசமாகிக் கொண்டு போகின்றது.
இதற்கு யார்... கடிவாளம் போடுவது என்றும் தெரியவில்லை. 😥

ஆதவன்ஸ் நியூஸ்தானே 😏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2023 at 22:28, தமிழ் சிறி said:

"தினக்குரல்" செய்தியின் ஆரம்பத்தில்... 99 லட்ச  ரூபாய் என எழுதி விட்டு,
இறுதியில் ஒருவரிடம்  55 இலட்சம் ரூபாவும், மற்றவரிடம் 49 இலட்சம் ரூபாவும் 
மோசடி செய்தாக குறிப்பிட்டுள்ளது.
இரண்டையும் கூட்டிப் பார்க்க  55+49 = 104 இலட்சம்  ரூபா வருகின்றது. 😂

"தினக்குரல்"... கணக்கிலை, புலி போல் தெரிகின்றது. 😜

இணைய ஊடக காவலன் @Kapithan´ஐ மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 🤣

கொழும்பில் நடிகையை ஏமாற்றி 65 லட்சம் ரூபா பணத்தை பெற்ற இளைஞன்!

AVvXsEi1HMQZWS4HfIQW7gflOL-WZP8XLjv1MB3EMCWjkUNv_IfM9oNUWNnM3m4JzWnKpQnrQYf4hNRTmar25pCWqwgT1Xj6Ea9ANEn-QW4PeX86CXim4Yy1oGUPYTrG17dNRA8Ydk3E8429IAnnyNoHEiKKHZmeFXnUlyDW4TyVKq3COLflx05LnlabnccE9g=w640-h355
பேஸ்புக் கணக்கின் ஊடாக நடிகையிடம் இருந்து 65 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு திருமணம் செய்வதாக உறுதியளித்து ஏமாற்றிய சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 
கொழும்பு மற்றும் கம்பஹா நீதிமன்றங்களில் கடமையாற்றும் இரண்டு சட்டத்தரணிகளை திருமணம் செய்வதாக கூறி 99 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே அந்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
சந்தேகநபர் மஹர சிறைச்சாலையினரால் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
 
கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ரத்னபுர கஹவத்தை பகுதியைச் சேர்ந்த பி.எல்.லசந்த லியனகே என்ற 27 வயதுடைய சந்தேகநபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட 23 வயதுடைய இளம் பெண் தற்போது கொழும்பு அழகியல் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருவதுடன் நடிகையும் ஆவார் என தெரிவிக்கப்படுகின்றது.
 
இலங்கையின் பிரபல கிரிக்கட் வீரர்கள் மற்றும் நடிகர்களின் புகைப்படங்களுடன் கூடிய பேஸ்புக் கணக்கை, சமூக நல ஆர்வலர் எனக் கூறி சந்தேகநபர் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
 
கொழும்பு நீதிமன்றில் பணியாற்றும் சட்டத்தரணி ஒருவரை பேஸ்புக் கணக்கின் ஊடாக திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் அதே நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.