Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புறம் கூறுதல்!

Featured Replies

  • தொடங்கியவர்

கிட்டத்தட்ட வந்துவிட்டீர்கள்.

நீங்களே சிந்தித்துப் பாருங்கள். பாரதி குறை சொல்லாதே என்று சொல்லவில்லை. நீங்கள் சொல்வது போன்று "புறம்" என்பதற்கு "குறை" என்ற அர்த்தம் இருந்தால், அப்பொழுது "குறை சொல்லாதே" என்ற அர்த்தம் வந்துவிடும்.

"சம்பந்தப்பட்டவர் இல்லாத போது குறைகுற்றம் சொல்லாதே" என்றுதான் சொல்கிறார்.

நீங்களே சொல்லுங்கள்! இங்கே முன்னிலைப் படுத்தப்படுவது எது?

அத்துடன் முதுகுக்குப் பின்னால் யாரும் பாராட்டுவது இல்லை. முதுகுக்குப் பின்னால் குறைதான் சொல்வார்கள்.

நீங்கள் "முதுகுக்குப் பின்னால் பேசுவது" என்ற வசனத்தை கேள்விப்படவே இல்லையா? இது எதைக் குறிக்கிறது. முதுகுக்குப் பின்னால் பாராட்டுவதையா? இல்லையே! குறை சொல்வதைத்தானே சொல்கிறோம்.

ஆனால் "முதுகுக்குப் பின்னால் பேசுவது" என்ற வசனத்தில் "குறை" என்ற சொல் இல்லை அல்லவா?

அதே போன்று "புறங்கூறுதல்" என்ற சொல்லிலும் "குறை" என்ற சொல் இல்லை. அங்கும் "முதுகுக்குப் பின்னால்" என்பதே இருக்கிறது

  • Replies 94
  • Views 28.3k
  • Created
  • Last Reply

நீங்க வேற சேர்கிறீங்களா...??! நான் நினைச்சன் எல்லாமே நூலக உபயம் என்று.செய்யாததை சொல்லுறதுதானே குற்றம்..! உதாரணத்துக்கு.. நீங்கள் களவு எடுக்கிற ஆள் என்று நான் இன்னொருவருக்கு நீங்கள் இல்லாத போது சொல்லுறதுதான் புறம் கூறல். நீங்கள் உண்மையா கள்ளன் என்றால்.. அது புறங் கூறல் அல்ல. உண்மை. கள்ளன் இல்லாத உங்களைக் கள்ளன் என்பதுதான்.. குற்றம் சுமத்தல்.. குறை காணல்.. இதைக் கொண்டு பிறருக்கு உரைத்தல் தான் புறங்கூறல். எப்படித்தான் சுற்றி வளைத்து வந்தாலும்.. இந்த இடத்துக்குத்தான் வருவீர்கள்..! :lol::D

நன்றி பூமகள்.

புறம் - - கோள், இந்தக் கோள்.. என்பதன் அர்த்தம் என்ன...???! கோள் கிரகமா.. அல்லது கோள் மூட்டல்.. என்பதா. கோள் மூட்டல் என்பதில் குற்றம் குறை சொல்லல் அமையாதோ..???! :lol:

முன்னால் போக விட்டு பின்னால்.. பாராட்டிப் பேசுதலும்.. புறம் கூறலாகுமா..??! பூமகள்..! :lol:

ஐயா நெடுக்ஸ்... புறஞ் சொல்லல் என்பது ஒருவர் இல்லாத போது(அல்லது அவரை போகவிட்டு) அவரைப் பற்றி குறையாகச் சொல்லுதலைத்தான் குறிக்கும்... குறை சொல்லுதல் இதற்குள் அடங்கினாலும் ஒருவர் இல்லாத போது அவரைப்பற்றி சொல்லுதலுக்கு சரியான சொல் புறஞ்சொல்லல்தான்...

குறை சொல்லுதல் என்பது சம்பத்தப் பட்டவரிடமும் சொல்லலாம்... அவர் இல்லாதபோது வேறு யாரிடமும் அவரது குறையைச் சொல்லலாம் ...அதனால் குறை சொல்லுதல் என்பது புறஞ் சொல்தல் எனும் சொல்லுக்கு பொருத்தமாக இராது...

ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றி சொல்வதற்கு வேறு ஏதாவது சொல் தெரிந்து வைத்திருப்பின் அறியத்தாருங்கள் :P ;)

வணக்கம்!

எல்லாரும் ஆக்கபூர்வமான ஓர் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்!

இந்த திமிங்கிலத்தையும் (தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து எழுதும் அறிஞர்களை இவ்வாறு அழைப்பார்கள் :P ) இங்கு வந்து கருத்துகூறுமாறு சபேசன் ஐயா கேட்டு இருந்தார். :D

நான் வீட்டில் வைத்து பாவிக்கின்ற அரைக்கிலோ பாரமான நா. கதிரவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதியில்

புறங்கூறல் - தூற்றல் :lol:

இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

எனக்கு புறங்கூறல் என்றதும் உடனடியாக மனதில் தோன்றுவது..

ஒருவரைப்பற்றி கூடாமல் அவர் இல்லாத நேரத்தில் பிறருக்கு கூறுவது என்பதே!

நன்றி!

  • தொடங்கியவர்

கேள்வியை விளங்காதவர்களுக்காக மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்

"புறங்கூறுதல்" என்றால் என்ன என்பது குறித்து நானும் நெடுக்காலபோவானும் தெளிவாகவே இருக்கிறோம். பிரச்சனை அது அல்ல.

"புறம் கூறுதல்" என்ற வார்த்தையில் வருகின்ற "புறம்" என்பது எதைக் குறிக்கிறது?

"குறை" என்பதையா? "முதுகுக்குப் பின்னால்" என்பதையா?

  • கருத்துக்கள உறவுகள்

புறங்கூறல் என்ற சொல்லைத் தனித்துப் பிரித்துப் பொருள் பார்ப்பதை விட, ஒரே சொல்லாகக் கணித்துப் பொருள் காண்பது தான் சரியானது எனத் தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

புறங்கூறல் என்ற சொல்லைத் தனித்துப் பிரித்துப் பொருள் பார்ப்பதை விட, ஒரே சொல்லாகக் கணித்துப் பொருள் காண்பது தான் சரியானது எனத் தோன்றுகின்றது.

சரி அப்படியே கணித்து உங்க கருத்தை சொல்லுங்க

சபேசன் அண்ணை,

நான் தமிழை விளங்கிக் கொண்டுள்ள வகையில், என்னைப் பொறுத்தவரை "புறம் கூறுதல்" என்ற வார்த்தையில் வருகின்ற "புறம்" என்பது எதைக் குறிக்கின்றது என்றால்

"குறை" என்பதையோ அல்லது "முதுகுக்குப் பின்னால்" என்பதையோ மட்டும் அல்ல "முதுகுக்கு பின்னால் நின்று குறைகூறுதல்" என்பதையே குறிக்கின்றது.

எனவே நீங்களும், நெடுக்காலபோவானும் 50% சரி. நான் மட்டும் 100% சரி. :P :D

நன்றி!

Edited by கலைஞன்

Tamil English

பின்புறம் background

சுற்றுப்புறம் environment

ஊராட்சி, நாட்டுப்புறம் rural

அப்புறம் பார்க்கலாம் see you later

அப்புறம், பிறகு after

அடிப்புறம், கீழே, கீழ்ப்பாகம் bottom

வெளிப்புறம் outdoor

கூரை, கூரையின் உட்புறம் ceiling

மூலை, ஒருபுறம், தனிமையான (அ) மறைவான இடம் Nook

மேல் ஆடை, உடுப்பு அழுக்காகாமல் முன்புறம் கட்டும் துணி apron

ஒரு பக்கத்தில், ஒரு புறம்பாக, தனியாக apart

பின்புறம் back

நாட்டுப்புறம், கிராமம் landscape

0

http://www.tamildict.com/tamilsearch.php

  • தொடங்கியவர்

கலைஞன் தனக்கு எல்லோரையும் விட வயது கூட, அனுபவம் கூட, சின்னப் பிள்ளைகளுடன் விவாதிக்க மனம் வரவில்லை என்றெல்லாம் எழுதியதைப் பார்த்துவிட்டு, வயதில் மூத்தவரான கலைஞன் நல்ல ஒரு விளக்கத்தோடு வருவார் என்று எதிர்பார்த்து தனிமடல் போட்டேன்.

எனக்கு இது தேவைதான் :D:lol:

(இது சும்மா பகிடிதான்... சீரியசா எடுத்துப் போடாதைங்கோ!!)

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரில் பொதுவாக கதைப்பதை வைத்துச்சொல்கின்றேன். உதாரணத்திற்கு உந்த மனுசி எப்பவும் போகவிட்டு புறம் சொல்லுற மனுசி அல்லது டேய் மச்சான் உவனோடையே இவ்வளவு நேரமும் கதைச்சுக்கொண்டு நிண்டனி உவன் போக விட்டு புறம் சொல்லுற பொடியனடாப்பா இதன் மறைமுக அர்த்தங்கள் அவ்வளவு நல்லமாதிரியாக இல்லை.

அடுத்தது நானும் ஒரு நண்பனும் தெருவில் கதைத்துக்கொண்டிருக்கும் போது இன்னோரு நண்பனும் வந்து எங்களுடன் சேருகின்றான்.ஆகவே நாங்கள் மூவரும் சில நிமிடநேரம் உரையாடிய பின் கடைசியாக வந்த நண்பன் அவசரமாக விடைபெற்று செல்கின்றான்.அவன் போனபின் என்னுடன் இருக்கும் நண்பனுக்கு நான் சொல்கின்றேன் டேய் மச்சான் உவங்கடை குடும்பம் முழுக்க தங்கப்பவுணான குடும்பமடா உள்ள கோயில் எல்லாம் அன்னதானம் தண்ணிப்பந்தல் எண்டு குடுக்குறதிலேயே திரிவினம் உள்ளதை சொல்லோணுமடாப்பா அந்தக்குடும்பத்திலை இருக்குற ஒருத்தருக்கும் தலைக்கனம் எண்ட சாமானே இல்லை. எனவே இதன் அர்த்தம் வேறு.

ஆகவே எனது அபிப்பிராயமென்னவெனில் நல்லதோ கெட்டதோ எதையும் நேரடியாகவே பேச வேண்டும் அதுதான் மனிதனுக்கு பண்பு.

ஆகவே இந்தவிடயத்தில் என் அனுபவரீதியிலான கருத்தை முன் வைத்துள்ளேன்.யாழ்களத்தில் இப்படியான அறிவுபூர்வமமிக்க தலைப்புக்களை எல்லோரும் வரவேற்க வேண்டும்.வாழ்த்துக்கள். :D

கழகத் தமிழ் அகராதி

புறம்

இடம்; ஏழாம் வேற்றுமையுருபு; சுற்று; பக்கம்; பின்புறம்; மதில்; முதுகு; வீரம்; வெளிவளம்; புறத்திணை; இறையிலி நிலம்; அன்னியம்; அலர்மொழி; காலம்; உடம்பு

கேள்வியை விளங்காதவர்களுக்காக மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்

"புறங்கூறுதல்" என்றால் என்ன என்பது குறித்து நானும் நெடுக்காலபோவானும் தெளிவாகவே இருக்கிறோம். பிரச்சனை அது அல்ல.

"புறம் கூறுதல்" என்ற வார்த்தையில் வருகின்ற "புறம்" என்பது எதைக் குறிக்கிறது?

"குறை" என்பதையா? "முதுகுக்குப் பின்னால்" என்பதையா?

சபேசன் அப்படியாயின் இந்தத்திரியின் தலையங்கத்தை புறம் என்றால் என்ன...? என்று மாற்றி விடுங்கள்... :D

எனது கருத்தின் படி புறம் கூறுதலில் வரும் புறம் முதுகுக்குப் பின்னால் குறை என்பதனை குறிக்கும்.... ஆனால் புறம் என்பது வேறு ..வேறு இடங்களில் வேறு ..வேறு... கருத்துக்களை கொடுக்கும் என்பதனை நெடுக்ஸ் ஏற்கனவே சொல்லியுள்ளார்...

நீங்கள் சொல்வது போல் முதுகுக்கு பின்னால் என்று மட்டும் சொன்னால் இந்தப்பதம் முழுமை அடையாது... முதுகுக்குப் பின்னால் என்ன சொல்வீர்கள்..? நல்லமாதிரி சொன்னால் புறம் கூறுதல் எனும் வார்த்தை தவறாகும்... குறை கூறினால் மட்டுமே அது முழுமை பெறும்

அதனால் இருவரும் வாக்குவாதப் படாமல் :P இருவர் சொல்வதும் இணையும் போது தான் புறம் சொல்லல் என்பது முழுமை அடைகின்றது....(நீங்கள் சொல்லும் முதுகுக்கு பின்னாலும் நெடுக்ஸ் சொல்லும் குறையும் இணைந்து

முதுகுக்கு பின்னால் குறை சொல்லல் = புறஞ் சொல்லல்

அப் புறம் சந்திக்கிறேனுங்கோ.... :P

ஐயோ சாமி இந்தக் புறங்கூறலுக்குப் பின்னால இவ்வளவு மேட்டரா?

நமக்கு தலை சுத்துது

புறங்கூறல் என்றால் ஒருவர் இல்லாதவிடத்து அவரைப் பற்றி குற்றம் குறைகளைக் கூறல்.

ஆகவே இங்க வாற புறம் நேரிடையாக - முதுகுக்குப் பின்னால் என்று வந்தாலும் மறைமுகமாக குறை என்றதை கூறி நிக்குது :D:lol:

  • தொடங்கியவர்

கௌரிபாலன்!

நீங்கள் "முதுகுக்குப் பின்னால் பேசுவது" என்ற வசனத்தை எங்குமே கேள்விப்படவில்லையா?

முதுகுக்குப் பின்னால் பேசுவது நல்ல பண்பு அல்ல

முதுகுக்குப் பின்னால் பேசாதே

ஏன் முதுகுக்குப் பின்னால் பேசுகிறாய்

இப்படியான எதையுமே நீங்கள் கேள்விப்படவில்லையா? எத்தனையோ புத்தகங்களிலும், இணையத்தளங்களிலும், யாழ் களத்திலும் இது போன்ற வசனங்கள் இயல்பாக பாவிக்கப்பட்டுள்ளது.

இங்கே "குறை" என்ற சொல் வரவில்லை என்று நீங்கள் என்றைக்காவது குறை பட்டுக் கொண்டது உண்டா?

"முதுகுக்குப் பின்னால் பேசுதல்" என்ற வசனத்தில் எப்படி குறை என்ற சொல் வரவில்லையோ அதே போன்று "புறம் கூறுதல்" என்பதிலும் "குறை" என்ற சொல் வரவில்லை.

"புறம்" என்ற சொல் இடம் சார்ந்த ஒரு பொருளைத்தான் வகிக்கிறது. "புறம்" என்பதற்கு அகராதிகளில் கொடுக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான அர்த்தங்களும் இடம் சார்ந்து நிற்பதைக் கவனித்திருப்பீர்கள்.

"புறம்" என்பதற்கு "முதுகுக்குப் பின்னால் குறை" என்று புதிய அர்த்தம் கண்டுபிடிக்காதீர்கள். இங்கே சிலர் "குறை" என்ற புது அர்த்தத்தைக் கண்டுபிடித்து நடக்கின்ற விவாதமே போதும்.

புறம் என்பதற்கும் குறை என்பதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. குறை சொல்லுகின்ற ஒருவர், அதை முதுகுக்கப் பின்னால், வெளியிலே சொல்வதால், சொல்கின்ற இடத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான சொல்.

முதுகுக்குப் பின்னால் பாராட்டுவது இல்லையென்பதாலும், அப்படிப் பாராட்டினாலும் அது ஒரு பாரதூரமான விடயம் இல்லை என்பதாலும், அது பற்றிய கேள்வி இங்கு எழத் தேவையில்லை.

முதுகுக்குப் பின்னால் குறை சொல்வதை குறிப்பதற்குத்தான் சொல் ஒன்று தேவை. நேரிலும் குறை சொல்வது உண்டென்றபடியால், முதுகுக்குப் பின்னால் என்பதை முக்கியப்படுத்தி "புறம்" என்ற சொல்லைச் சேர்த்து இந்தச் சொல் உருவானது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் முடியவில்லையா இனி உங்கள் எல்லாரையும் பற்றி (புறம்)சொல்லுறதை தவிர வேறு வழி இல்லை :D

எனக்கு இங்கு ஆச்சரியமான விசயம் என்னவென்றால் பாரதியாரின் புறஞ்சொல்லல் ஆகாது பாப்பா என்ற பதத்தை மேற்கோள் காட்டியவர்கள், நம்மட திருவள்ளுவரின் புறங்கூறாமை என்ற அதிகாரம் பற்றி ஒன்றும் இங்கு கதைக்கவில்லை போல இருக்கின்றது. யார மறந்தாலும் நம்ம தமிழ்ப்புலவர் திருவள்ளுவரை மறந்திடாதிங்க சாமி! :D

புறங்கூறாமை.

அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன் புறம் கூறான் என்றல் இனிது.

பொருள்::

ஒருவன் அறன் என்பதையே அறியாதவானாக அறம் அல்லாத காரியங்களைச் செய்கிறவனாக இருந்தால் அவன் கோள் சொல்ல மாட்டான் என்பது சிறப்புடையது.

அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே புறன் அழிஇப் பொய்த்துநகை.

பொருள்::

(அரத்தை அறிந்தவனாக இருந்தும் அறிந்தே தவறு செய்கிறவனானாலும்.) அறத்தினின்றும் நழுவி அறமில்லாதவற்றைச் செய்வதை ஒருவனைப்பற்றிப் பொய்யான கோள்களைச் சொல்லி மகிழ்வது கொடியது.

புறன் கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின்சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்.

பொருள்::

(அப்படிக் கோள் சொன்னால்தான் உயிர் வாழலாம் என்ற நிலமை ஏற்பட்டால்) கோள் சொல்லிப் பொய்யனாக உயிர் வாழ்வதை விட செத்துப்போவது அறநூல்கள் சொல்லுகிற புண்ணியத்தையாவது உண்டாக்கும்.

கண்நின்று கண் அறச்சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின் நோக்காச் சொல்.

பொருள்::

(கோள் சொல்லுவது அப்போதைக்கு நன்மையுண்டாக்குவது போலத் தோன்றினாலும் பின்னால் சொல்லுகிறவனுக்கே கேடுண்டாகும்) ஒருவனுக்கு முன்னால் நின்று, அவனைத் தட்சிண்யமில்லாமல் பேசிவிட்டாலும் குற்றமில்லை. ஆனால் ஒருவன் முன்னால் இல்லாதபோது பின்னால் வரக்கூடிய தீமைகளை எண்ணிப்பார்க்காமல் அவன் மீது கோள் சொல்லக்கூடாது.

அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும் புன்மையால் காணப்படும்.

பொருள்::

கோள் சொல்லுகிறது சொல்லுபவனுக்கே தீமைகளை உண்டாக்கும்.ஏன் எனில்) நல்லது சொல்லும் எண்ணமுள்ளவன் அல்லனென்பதைக் கோள் சொல்லுகின்ற அர்பத்தனமே கோளைக்காதால் கேட்கிறவனுக்கு காட்டிவிடும்.

பிறான் வழி கூறுவாந்தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும்.

பொருள்::

(யாரிடத்தில் கோள் சொல்லுகிறானோ அவனே இவனைச் சந்தேகிப்பான்) இன்னொருவன் மேல் பழிசுமத்தக் கோள் சொல்லுகிறவன் தான் யாரிடத்தில் கோள் சொல்லுகிறானோ அவனே தன்னை கோள் சொல்லும் குற்ற முள்ளவனாகக் கருத இடமிருக்கிறதே என்பதே தெரிந்துகொண்டு பேச வேண்டும்.

பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச் சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர்

.

பொருள்::

(கோள் சொல்லுகிறவர்கள்) பிளவு உண்டாக்கும் படி புனைந்து பேசி, மனமொத்ட்க்ஹ நன்பர்களையும் பிரித்து வைத்துவிடுவார்கல்ள். மகிழ்ச்சி உண்டாக்கும் படி நல்ல வார்த்தைகளைச் சொல்லி நட்புண்டாக்குவது அவர்களுக்குத் தெரியாது.

துன்னியார் குற்றமும் தூர்றும் மரபினார் என்னைக்கொல் ஏதிலார் மாட்டு.

பொருள்::

நெருங்கிய நண்பர்களுக்கிடையிலும் குற்றம் கூறித் தூற்றிப் பேசிப் பகமை உண்டாக்குகிறது இனமாகிய இவர்கள் ஏற்கனவே பகமை உள்ளவ்ர்களுக்கிடையில் என்ன செய்யமாட்டார்கள்.

அறன்நோக்கி ஆற்றும்கொல் வயம்புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.

பொருள்::

(இப்படிப்படவர்கள் இந்த உலகம் ஏன் சுமந்துகொண்டிருக்கிறாது?) ஒருவன் இல்லாத சமயம் பார்த்து அவனைப்பற்றி பொய்களைச் சொல்லிக் கோள் மூட்டுகிறவனுடைய பாரத்தையும் இந்தப் பூமி சுமந்துகொண்டிருப்பது தன் கடமையைக் கருதியே.

ஏதிலார்குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு?

பொருள்::

கோள் சொல்லுகிறவனானாலும் அதற்கு காது கொடுக்கிறவனானாலும்) பிறரிடம் குற்றம் காண்பதைப்போல் தன் குற்றத்தையும் காண்பானாகில் மனிதருக்கு கோள் சொல்லுவதனால் உண்டாகிற தீமைகள் இருக்குமா? இருக்கமாட்டா.

மூலம்: http://www.nakarmanal.com/THITUKKURAL/ARAT...AMKUURAAMAI.htm நன்றி! :lol:

பி/கு: இதில் எழுத்துப்பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்..

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

ஒரு கேள்வி!

கோள் சொல்வதும் புறம் பேசுவதும் ஒன்றா?

எனக்கு அப்படித் தெரியவில்லை

நா. கதிரவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதியில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

கோள் - இடையூறு, காலவட்டம், கிரகம், குணம், கொலை, கொள்ளல், கோட்பாடு, தீமை, நட்சட்திரம், நாள், பழமொழி, புறங்கூறல், பொய்வலி

நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கால எழுதினதெல்லாம் கானேல்ல, இதாவது தப்புதோ பாப்பம். :D

புறஞ்சொல்லுதல் என்றா ஒருவர் இல்லாதவிடத்து அவர்மீது பழி செல்லுதல் என்று பொருள்படும். இன்னொருபக்கம் பாக்க போனா ஒருவரது இரகசியத்தை அவர் இல்லாதபோது வெளிக்கொணருதல் என்றும் வரும், எனவே தொப்பி அளவானவை தூக்கி தலையில மாட்டிக்கொள்ளலாம். B)

Edited by Aadhi

ஒரு சொல் பல அர்த்தங்களில் வரும் தமிழின் சிறப்பை அறிந்தவையாகிய நீங்கள் எல்லாம் சண்ண்டை பிடிக்கலாமா...???

புறணி (கூறல் அல்லது சொல்லுதல் என்பார்கள்) பழகுதமிழ் சொல் ஆகும்.. அதைத்தான் தூயதமிழில் புறங்கூறல் என்பார்கள்... இது தனித்தனியான சொல் இல்லாமல் சேர்ந்து ஒலித்து அர்தம் தருவதால்.. புறம்கூறல், புறம்சொல்லல் எனும் இந்த சொல் ஒரு வினை சொல் ஆகும்... புறம் எனும் பெயர் சொல்லோடு சேர்ந்து வராமல் ஒரே சொல்லாக ஒலிக்கிறது... அப்படி வருவதால் அது ஒரு வினை சொல்லாகவே இருக்கிறது... அர்த்தம் தூற்றுதல், குறைகூறல், இப்படியான அர்த்தங்களை தரும்...

"புறம் கூறல்" ( என்பதில் வரும் புறம் என்பது) எண்று ஒரு சொல் வர வேண்டும் எண்றால் புறத்தில்+ கூறல் எனும் சிலேடை நயத்தோடு வரக்கூடியது... அதாவது அகம் என்பது உள்ளே, அல்லது வீட்டுக்குள்.. புறம் என்பது வெளியில் சொல்லுதல்... வெளியாருக்கு சொல்லுதல் வெளியே அறிவித்தல், எல்லாருகும் சொல்லுதல் எனும் அர்த்தங்களை கொடுக்கும்....

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

துன்னியார் குற்றமும் தூர்றும் மரபினார் என்னைக்கொல் ஏதிலார் மாட்டு.

பொருள்::

நெருங்கிய நண்பர்களுக்கிடையிலும் குற்றம் கூறித் தூற்றிப் பேசிப் பகமை உண்டாக்குகிறது இனமாகிய இவர்கள் ஏற்கனவே பகமை உள்ளவ்ர்களுக்கிடையில் என்ன செய்யமாட்டார்கள்.

வள்ளுவன் புறங்கூறாமை என்ற அதிகாரத்தில சொல்லி உள்ளதைப் படியுங்க சார். விளங்கும். இதே தொனிதான் பாரதியினது. ஏலவே நான் இதைக் குறிப்பிட்டிருக்கிறேன். :lol::lol:

வள்ளுவன் புறங்கூறாமை என்ற அதிகாரத்தில சொல்லி உள்ளதைப் படியுங்க சார். விளங்கும். இதே தொனிதான் பாரதியினது. ஏலவே நான் இதைக் குறிப்பிட்டிருக்கிறேன். :lol::lol:

ஆமாம். வள்ளுவனின் புறங்கூறாமை என்ற அதிகாரத்தில் வரும் இந்தக் குறளை நீகிவிடுவோம்.

அறன்நோக்கி ஆற்றும்கொல் வயம்புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.

பொருள்::

(இப்படிப்படவர்கள் இந்த உலகம் ஏன் சுமந்துகொண்டிருக்கிறாது?) ஒருவன் இல்லாத சமயம் பார்த்து அவனைப்பற்றி பொய்களைச் சொல்லிக் கோள் மூட்டுகிறவனுடைய பாரத்தையும் இந்தப் பூமி சுமந்துகொண்டிருப்பது தன் கடமையைக் கருதியே.

  • கருத்துக்கள உறவுகள்

புறம் என்ற சொல்லுக்கு ஏற்கனவே சில உறுப்பினர்கள் சொல்லியது போல பல்வேறு பொருள் உள்ளது.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். வள்ளுவனின் புறங்கூறாமை என்ற அதிகாரத்தில் வரும் இந்தக் குறளை நீகிவிடுவோம்.

அறன்நோக்கி ஆற்றும்கொல் வயம்புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.

பொருள்::

(இப்படிப்படவர்கள் இந்த உலகம் ஏன் சுமந்துகொண்டிருக்கிறாது?) ஒருவன் இல்லாத சமயம் பார்த்து அவனைப்பற்றி பொய்களைச் சொல்லிக் கோள் மூட்டுகிறவனுடைய பாரத்தையும் இந்தப் பூமி சுமந்துகொண்டிருப்பது தன் கடமையைக் கருதியே.

புறங்கூறல் என்பதுக்கு ஒரு அதிகாரம் வைக்கும் அளவுக்கு அதன் முதன்மை உள்ளது. அந்த அதிகாரத்தில் வரும் குறள் ஒவ்வொன்றும் புறங்கூறலுக்கு உள்ள ஒவ்வொரு பரிமானத்தையும் காட்டுகிறது.

கோள் என்பது என்ன..??! அடுத்தவரைப் பற்றி இல்லாதது பொல்லாதது சொல்லுதல்.. அதென்ன இல்லாது பொல்லாது...???! அதற்குள் அடங்குபவை எவை...??! சூனியமும் அண்டவெளியும்... முடிவிலியுமா...???!

ஒருவர் மீது கோள் சொல்லனும் என்றால் அவர் மீது இல்லாத குறைகளைக் குற்றங்களை சுமத்த வேண்டும். நல்லாப் பாராட்டி கோள் சொல்லுறதும் இருந்தாச் சொல்லுங்கோ...???! அந்த இல்லாதது பொல்லாததுக்குள்ள ஒழிச்சு வைச்சிருக்கிறதை வெளிய விட்டா கோள் சொல்லுதலின் அடிப்படை எங்கிருக்கிறது என்பது வெளிப்படும். அதை வள்ளுவன்.. நான் உதாரணமாக் கையாண்ட குறளில் தெளிவுற உணர்த்திவிட்டான்.

நீங்களும் இப்போ.. வாதத்தை விடயத்தை நோக்கியன்றி.. நெடுக்காலபோவனை நோக்கி திருப்பி இருக்கிறீர்கள் என்பது புரிகிறது. இது ஆரோக்கியமான விவாதம் நடத்த நீங்கள் விட்ட அழைப்புக்கு.. பொருத்தமில்லாதது என்று நினைக்கிறேன். சிந்திக்க. :lol::lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

"கோள் சொல்லுதல்" மற்றும் "புறங்கூறுதல்" ஆகிய இரண்டிற்கும் இடையில் வேறுபாடுகள் இருப்பதாக நான் உணர்கிறேன்

புறங்கூறுவதன் நோக்கம் ஒருவரை இழிவுபடுத்துவது

கோள் சொல்வதன் நோக்கம் இருவருக்கு இடையில் சண்டையை மூட்டுவது

எனக்கு முன்னால் கூட என்னைப் பற்றி கோள் சொல்ல முடியும்.

எனக்கு முன்னால் என்னைப் பற்றி புறங்கூற முடியாது

புறங்கூறுகின்ற போது சொல்லப்படுகின்ற விடயம் உண்மையானதாகக் கூட இருக்கலாம்

கோள் சொல்வது என்பது இல்லாதும் பொல்லாதும் சொல்வதே

மொத்தத்தில் எனக்கு "கோள் சொல்வது" மற்றும் "புறம் கூறுவது" இரண்டும் ஒன்றாகத் தெரியவில்லை.

அத்துடன் திருவள்ளுவர் "கோள்" என்ற சொல்லையும் தன்னுடைய குறள்களில் பயன்படுத்துகிறார், "கொள்கை" என்ற அர்த்தத்தில்.

வேறு சில இலக்கியங்களில் "கோள்" என்பது கொலை என்ற அர்த்தத்திலும் வருகிறது.

நாம் இன்று பயன்படுத்துகின்ற "கோள் சொல்லுதல்" நல்ல தமிழா அல்லது பேச்சுவழக்கில் வந்த கொச்சைத் தமிழா என்பதிலும் எனக்கு சந்தேகம் உண்டு.

"குறள்" என்றால் சிறியன என்ற அர்த்தம் உண்டு. குறள் பேசுதல் என்றால் ஒருவரை சிறுமைப்படுத்தி பேசுவது என்று அர்த்தம் வரும். இதிலிருந்தே பேச்சுவழக்கில் உள்ள "குறளி பேசுதல்" என்ற சொல் வந்திருக்கும்.

அத்துடன் இந்தக் "குறள்" என்பதுதான் "கோள்" என்று திரிந்ததா என்ற கேள்வியும் என்னிடம் உண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.