Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நொவா கக்கோவா அணை ரஸ்ய படையினரால் தகர்ப்பு - பெரும் வெள்ள அபாயம்-உக்ரைன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நொவா கக்கோவா அணை ரஸ்ய படையினரால் தகர்ப்பு - பெரும் வெள்ள அபாயம்-உக்ரைன்

Published By: RAJEEBAN

06 JUN, 2023 | 11:46 AM
image
 

ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நகரமான கேர்சனில்  நிப்பர் ஆற்றின் மீதுஉள்ள நொவா கக்கோவா அணைக்கட்டை ரஸ்ய படையினர் தகர்த்துள்ளனர் என குற்றம்சாட்டியுள்ள உக்ரைன்  பாரிய வெள்ள ஆபத்துள்ளதால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

Fx6rpEWWcAArg7u.jpg

அணையின் சுவர்கள் நீரில் வீழ்ந்து கிடப்பதையும்  பெருமள நீர் வெளியேறிக்கொண்டிருப்பதையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

ரஸ்ய ஆக்கிரமிப்பு படையினர் நீர்மின் அணைக்கட்டை தகர்த்துள்ளனர் என உக்ரைன் இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

அழிவின் அளவு நீரின் வேகம் ஏற்படக்கூடிய வெள்ளப்பாதிப்புகள் குறித்து  ஆராய்ந்து வருவதாக  உக்ரைன் தெரிவித்துள்ளது.

அணை தகர்க்கப்பட்டமை குறித்து அவசர கூட்டத்தினை கூட்டியுள்ளதாக  உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நொவா கக்கோவா அணை தகர்க்கப்பட்டதன் காரணமாக அடுத்தஐந்து மணித்தியாலங்களில்  நீரின் அளவு ஆபத்தான மட்டத்தினை அடையும் என கேர்சன் பிராந்தியத்தி;ற்கான தலைவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணை தகர்ப்பு குறித்து உக்ரைன் உள்துறை அமைச்சின் ஆலோசகரும் டெலிகிராமில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளதுடன் இதற்கு ரஸ்யாவே காரணம் என தெரிவித்துள்ளார்.

ரஸ்யா ஆக்கிரமித்துள்ள நொவாகக்கோவ நகரின் தலைவர் அணை தகர்க்கப்பட்டதை  ஆரம்பத்தில் நிராகரித்திருந்த அதேவேளை எறிகணை தாக்குதல் காரணமாக அணைக்கு சேதம ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.

https://www.virakesari.lk/article/157043

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேனில் மிகப்பெரிய அணை தகர்ப்பு: வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள் - ஒரு நகரமே மூழ்கும் அபாயம்

ரஷ்யா - யுக்ரேன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது யுக்ரேனின் ஒரு முக்கிய அணையையும், நீர்மின் நிலையத்தையும், இன்று காலை ரஷ்யப் படையினர் தாக்குதல் நடத்தி தகர்த்திருப்பதாக யுக்ரேன் குற்றம்சாட்டியுள்ளது. அணை உடைக்கப்பட்டதால், அதிலிருந்து பெருமளவில் வெளியேறி வரும் வெள்ளம் அருகிலிருக்கும் பகுதிகளைச் சூழ்ந்து வருவது, ஏற்கனவே நிலவிவரும் போர்ப் பதற்றங்களை அதிகரித்திருக்கிறது.

யுக்ரேன் நாட்டின் தெற்கு கெர்சன் பகுதியில் அமைந்திருக்கும் ’டினிப்ரோ ஆற்றில்’ கட்டமைக்கப்பட்டிருக்கும் பெரிய அணையையும், அதற்குள் இருக்கும் நீர்மின் உற்பத்தி நிலையத்தையும் ரஷ்யா தகர்த்திருப்பதாக யுக்ரேன் குற்றம் சாட்டியுள்ளது. அணை உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதால், அங்கு மக்களின் குடிநீருக்குத் தட்டுப்பாடு வரும் என அஞ்சப்படுகிறது. அதேசமயம் தண்ணீர் நீர்மின் நிலையத்தையும் சூழ்ந்து வருவதால், அதனால் விபத்துகள் ஏற்படுமா என்ற பதற்றமும் நிலவி வருகிறது.

தற்போது தகர்க்கப்பட்டிருக்கும் யுக்ரேன் அணை ரஷ்ய ஆக்கிரமிப்பு நகரமான நோவா கக்கோவ்காவில் உள்ளது, இதனால் அணையின் கட்டுப்பாடும் ரஷ்யாவின் கீழ் வருகிறது. ககோவ்கோ பகுதியில் அமைந்துள்ளதால் இந்த அணை ‘கக்கோவ்கா அணை’ என்று அழைக்கப்படுகிறது.

சூழ்ந்து வரும் இந்த வெள்ள நீரால், சுமார் 16,000க்கும் அதிகமான மக்கள் ஆபத்தில் இருப்பதாக யுக்ரேன் அறிவித்துள்ளது. வெள்ள நீரை அகற்றுவதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக யுக்ரேன் கவர்னர் அறிவித்துள்ளார்.

மேலும் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, யுக்ரேனின் பிரதமர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அவசர நிலை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

யுக்ரேன் ராணுவமும், நேட்டோவும் இந்த தாக்குதலுக்கு ரஷ்ய ராணுவம்தான் காரணம் எனக் கூறிவரும் நிலையில், ரஷ்ய ராணுவம் யுக்ரேனைக் குற்றம் சுமத்திவருவதும் குறிப்பிடத்தக்கது

கக்கோவ்காவில் என்ன நடக்கிறது?

ரஷ்யா, உக்ரைன்

பட மூலாதாரம்,GOOGLE

 
படக்குறிப்பு,

கக்கோவ்கா அணை அமைந்திருக்கும் பகுதி

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரேனிய நகரமான ’நோவா கக்கோவ்கா’ தற்போது நீரில் மூழ்கியுள்ளதாக ரஷ்யாவின் அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனமான ’டாஸ்’ தெரிவித்துள்ளது.

கக்கோவ்கா அணை உடைந்து தண்ணீர் வெளியேறி வருவதால், சுமார் 600 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக ரஷ்ய அவசர சேவைகள் கூறுகின்றன. அதேபோல் 8 வெவ்வேறு குடியிருப்பு பகுதிகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக யுக்ரேன் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குடிமக்களின் உட்கட்டமைப்பை அழித்தது ஒரு "போர்க் குற்றம்" என ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ரஷ்யாவை சாட்டியுள்ளார்.

கக்கோவ்கா அணையின் விவரங்கள்

ரஷ்யா, உக்ரைன்

பட மூலாதாரம்,MAXAR

கக்கோவ்கா நீர்மின் நிலையம் யுக்ரேனின் கெர்சன் பகுதியில் உள்ள நோவா கக்கோவ்கா நகரில் உள்ளது, இது தற்போது ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ளது.

டினிப்ரோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஆறு அணைகளில் கக்கோவ்கா அணையும் ஒன்றாகும், இது நாட்டின் வடக்கு பகுதியிலிருந்து தெற்கே பகுதியில், கடல் வரை நீள்கிறது. இந்த அணை சோவியத் காலத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது அணை மிகவும் பெரியளவில் அமைந்துள்ளது. சில இடங்களில் மறு கரையைப் பார்க்க முடியாத அளவு அணையின் பிரமாண்டம் இருப்பதால், உள்ளூர்வாசிகள் இதனை கக்கோவ்கா கடல் என்று அழைக்கிறார்கள். இந்த அணையில் அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள ’கிரேட் சால்ட்’ ஏரிக்குச் சமமான நீர் உள்ளது’ என ராய்டர்ஸ் குறிப்பிடுகிறது.

இந்த அணை ஆயிரக்கணக்கான மக்களுக்குக் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. அதேபோல் கக்கோவ்கா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், இந்த அணையைத்தான் தங்களுடைய விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக நம்பியிருந்தனர். தற்போது இந்த அணை உடைக்கப்பட்டிருப்பது கக்கோவ்கா பகுதியில் நடைபெறும் விவசாயம் வரும் காலத்தில் பாதிக்கப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் டினிப்ரோ ஆற்றிலிருந்து, ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருக்கும் கிரைமியா என்ற பகுதிக்குத் தண்ணீர் எடுத்துச் செல்வதற்கு, கக்கோவ்கா அணை ஒரு முக்கிய கால்வாயாக விளங்குகிறது. ஆனால் தற்போது அணை உடைக்கப்பட்டிருப்பது, ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

2014ஆம் ஆண்டு ரஷ்யா, கிரைமியா பகுதியை ஆக்கிரமித்தபோது, யுக்ரேன் அந்த பகுதிக்குச் செல்லும் தண்ணீர் கால்வாயை முடக்கியது. இதனால் அப்போது பென்னின்சுலா பகுதியில் கடுமையான நீர் நெருக்கடி ஏற்பட்டது. அதன்பின் கடந்தாண்டு, ரஷ்யா அந்த கால்வாயை தங்களுடைய படையெடுப்பிற்குப் பிறகு மீண்டும் திறந்தது.

கக்கோவ்காவில் என்ன நடந்தது?

ரஷ்யா, உக்ரைன்

பட மூலாதாரம்,MAXAR

இன்று காலை முதல் சமூக ஊடகங்களில், கக்கோவ்கா அணையிலிருந்து அதிகப்படியான வெள்ள நீர் வெளியேறும் காட்சிகள் பரவலாகப் பகிரப்பட்டு வந்தன. வெளியேறி வரும் வெள்ள நீர் ஏற்கனவே ’போர் மண்டல’ பகுதிகளை எட்டிவிட்ட நிலையில், தொடர்ந்து கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தண்ணீரானது கெர்சன் பகுதியைச் சூழ்ந்து வருகிறது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அதிகாரிகள், அந்த பகுதியைச் சுற்றியிருந்த மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தினர்.

குறிப்பாக அணையிலிருந்து 50 மைல் தொலைவிற்கும் குறைவான தூரத்தில் வசிக்கும் மக்கள், முதற்கட்டமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.

யுக்ரேனின் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய, கெர்சன் பகுதியின் தலைமை அதிகாரி ஒருவர், “நாங்கள் காலையில் வந்து பார்க்கும்போது ஏற்கனவே 8 கிராமங்கள் தண்ணீரில் முழுவதுமாக மூழ்கிவிட்டன” என்று தெரிவித்துள்ளார்.

ஆபத்திலிருக்கும் 16,000க்கும் அதிகமான மக்கள், பேருந்து மற்றும் ரயில்களின் மூலம் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை இந்த தாக்குதல் யாரால், எதற்காக நடத்தப்பட்டது என்பது குறித்த எந்தவொரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை. ஆனால் இதற்கு முன்னதாக யுக்ரேனின் பல்வேறு பகுதிகளில் இருந்த அணைகளின் மீது ரஷ்யா ஏற்கனவே தாக்குதல் நடத்தியிருந்தது. அது அந்நாட்டில் கடுமையான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, மின்சார விநியோகத்தையும் சீர்குலைத்தது குறிப்பிடத்தக்கது.

யுக்ரேனில் அணை தகர்ப்பு: வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள் - ஒரு நகரமே மூழ்கும் அபாயம் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது ஜரோப்பா மற்றும் அமெரிக்கர்களே உக்கிரேன் ஜனாத்பதியின் டிவிட்டரில் பொய்யன் என்று கழுவி ஊத்துகிறார்கள்.. ரஷ்யா உக்கிரேனை ஆக்கிரமித்தது தவறுதான்.. அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.. ஆனால் அதற்கு உலகநாடுகளை யுத்தத்தில் இழுத்துவிட உக்கிரேன் செய்யும் மோசமான செயல்கள் மனிதகுலத்துக்கே விரோதமானவை.. போலாந்து மீது ஏவுகணையை ஏவிவிட்டு ரஷ்யாவை குற்றம் சாட்டிய மூக்குடைபட்ட விடயத்தில் இருந்து யேர்மனிக்கு செல்லும் நோர்த்ஸ்ரம் எண்ணேய்க்குழாய்களை தகர்த்துவிட்டு யேர்மனிய ம்க்களுக்கு குளிர்காலத்தில் மிகப்பெரிய நெருக்கடிகளை குடுத்தது என்று இன்று தன் மக்களையே பலிகொடுக்கவும் துணிந்து விட்டிருக்கிறது உக்கிரேன்.. கேவலம் வெட்கம்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்பொழுது ஜரோப்பா மற்றும் அமெரிக்கர்களே உக்கிரேன் ஜனாத்பதியின் டிவிட்டரில் பொய்யன் என்று கழுவி ஊத்துகிறார்கள்.. ரஷ்யா உக்கிரேனை ஆக்கிரமித்தது தவறுதான்.. அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.. ஆனால் அதற்கு உலகநாடுகளை யுத்தத்தில் இழுத்துவிட உக்கிரேன் செய்யும் மோசமான செயல்கள் மனிதகுலத்துக்கே விரோதமானவை.. போலாந்து மீது ஏவுகணையை ஏவிவிட்டு ரஷ்யாவை குற்றம் சாட்டிய மூக்குடைபட்ட விடயத்தில் இருந்து யேர்மனிக்கு செல்லும் நோர்த்ஸ்ரம் எண்ணேய்க்குழாய்களை தகர்த்துவிட்டு யேர்மனிய ம்க்களுக்கு குளிர்காலத்தில் மிகப்பெரிய நெருக்கடிகளை குடுத்தது என்று இன்று தன் மக்களையே பலிகொடுக்கவும் துணிந்து விட்டிருக்கிறது உக்கிரேன்.. கேவலம் வெட்கம்..

இன்னும் நிறையவே இருக்கின்றது. மௌனவிரதம் கலையும் போது நிறைய சொல்லுவேன். ஏனெனில் நான் ஜேர்மனியில் வசிக்கின்றேன். உக்ரேன்,ரஷ்ய,போலந்து மக்களுடன் தனிப்பட/தொழில் ரீதியாக அதிகம் பழகுபவன்.
ஊடகங்களை விட பல உண்மை நிலவரங்கள் எனக்கு தெரியும் என்ற இறுமாப்பு  எனக்குண்டு.

மீண்டும் சொல்கிறேன். அங்கு நடப்பது முள்ளிவாய்க்கால் போன்ற அழிவுகள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாவின் மற்றுமொரு மனித குலத்துக்கெதிரான பயங்கரவாதம் இது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழிவுகளுக்கும் அழிவிற்கும் பெயர் போனவர்கள் உக்ரேனியர்கள்.
ஐரோப்பாவையே.......இல்லை........உலகையும் ஆட்டிப்படைத்த செர்னோபில் அழிவும்  அவர்களுடையதே.

BASE - Tschernobyl - Die Nuklearkatastrophe von Tschernobyl

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, வாலி said:

ரஸ்யாவின் மற்றுமொரு மனித குலத்துக்கெதிரான பயங்கரவாதம் இது!

புதினின் ரஷ்யா மனித குலத்துக்கு எதிரானது தர்ம நியாயங்கள் இல்லாதது.உலகத்தின் பேரழிவு.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் சொல்கிறார் - ஒன்று தெளிவாக உள்ளது இது உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் மற்றொரு பேரழிவு.

  • கருத்துக்கள உறவுகள்

1) இந்த அணை உடைக்கப்படவில்லை. வான் கதவுகள்தான் உடைக்கப்பட்டுள்ளன. 

2) ரஸ்யா தான் இதனைச் செய்யவில்லை என மறுத்திருக்கிறது. வழமைபோன்று ஆடறுக்க முன்பே (விசாரணை செய்து அறிக்கை வெளிவரும் முன்பே ) மேற்கத்தேய தலைவர்கள்(..... விலை பேசுகின்றனர்) ரஸ்யா மீது கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர்.  

3) Nordstreamஐ வெடிவைத்து அதன் மூலம் யார் இலாபமீட்டியது என்று பார்த்தால் வெடி வைத்தது யார் எனத் தெடிய வருமோ அது போல வான் கதவுகளை வெடி வைத்ததன் மூலம்  யாருக்கு இலாபம் எனப் பார்ப்பதன் மூலம் சூத்திரதாரியை அடையாளம் காண முடியும். 

4) சில பல யாழ் கள இராணுவ, புலனாய்வுச் சிங்கங்கள் ஏற்கனவே தமது மஞ்சள் பூசிய கண்ணாடிகளால் யார் வெடி வைத்தது என அறிந்து, தமது கண்டனங்களை வெளியிட ஆரம்பிதுவிட்டனர். 😀

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Kapithan said:

4) சில பல யாழ் கள இராணுவ, புலனாய்வுச் சிங்கங்கள் ஏற்கனவே தமது மஞ்சள் பூசிய கண்ணாடிகளால் யார் வெடி வைத்தது என அறிந்து, தமது கண்டனங்களை வெளியிட ஆரம்பிதுவிட்டனர். 😀

இவர்கள் சிங்கள சிறிலங்கா இனவாத அரசியலுக்கு எதிராக வாயே திறக்க மாட்டார்கள்.:face_savoring_food:

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

இவர்கள் சிங்கள சிறிலங்கா இனவாத அரசியலுக்கு எதிராக வாயே திறக்க மாட்டார்கள்.:face_savoring_food:

பிறகெப்படி ஊருக்குப் போவதாம் 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

 

OVERVIEW OF ATTACK ON KAKHOVKA DAM: CUI BONO?

 5  1  0 Share0  16 Support SouthFront

Illustrative Image

It has been known for a long time that Kiev was preparation to destroy the dam in Novaya Kakhovka. A few months ago, it became obvious that the Ukrainian authorities were accumulating water upstream of the Dnieper River in order to flood the banks in the Kherson region at the beginning of a large-scale counteroffensive on the southern frontlines.

In the second half of April, the waters of the Dnieper surprisingly overflowed the banks in the Kiev region. The Ukrainian media, referring to the data of the Ukrainian Hydrometeorological Center, reported that the water had almost reached a critical level, explaining this with heavy precipitation. However, the water of the Dnieper in Kiev has not spilled like this over the past decades, while the spring of 2023 was not marked by particularly extraordinary rain, and the winter was not extremely snowy.

Kiev region in April

A similar situation was in the area of the Dneprodzerzhinsk (Kamensky) water reservoir in the Ukrainian Dnipropetrovsk region, where the river also overflowed its banks and flooded several settlements nearby. Local residents were evacuated. It turned out that the flood occurred because the local dam deliberately did not dump water for two weeks.

https://southfront.org/overview-of-attack-on-kakhovka-dam-cui-bono/

🥴

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வு இரஸ்சிய உக்கிரேன் போர் வெகு விரைவில் முடிவுக்கு வரப்போவதனை உறுதிப்படுத்துவதாக உணருகிறேன்.

நாடுகள் சவால்கலை எதிர்நோக்கும் தற்போதய உலக ஒழுங்கினை தொடர்ந்து பேண பல பிரயத்தனங்களை கிழக்காசியாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் பதட்ட நிலையினை நீடிப்பதன் மூலம் தக்கவைக்கலாம் என ஒரு புறம் முயற்சிக்க, இந்த நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த இழுபறி நிலை உலக பொருளாதாரத்திலும், உலக அமைதியிலும் பெரும் தாக்கத்தினை என்றுமில்லாதவாறு ஏற்படுத்தியுள்ளது.

தற்போதய உலக ஒழுங்கினை தொடர இழுபறிநிலையினை இந்த நாடுகள் பேணுவதால் ஏற்படும் குறுங்கால அவகாசத்தினை விட அது ஏற்படுத்தும் பொருளாதார நெருக்கடி நாடுகளின்நிகழ்கால உலக ஒழுங்கினை பேணுவதற்கு பதிலாக அதிக பாதிப்பினை உருவாக்கும் என்பதனை உணர இந்த நாடுகள் தாமாகவே இந்த குளற்படிகளை எந்தவித முன்னறிவித்தலுமின்றி கைவிடும் என்ற உண்மை உணர்தலின் வெளிப்பாடாக தொடர்ச்சியாக தம்மை வெளிச்சத்திற்குள் வைக்க முயல்வதற்காகவே இந்த  நிகழ்வு நிகழ்ந்துள்ளதாக கருதுகிறேன், இது தமது தலையில் தாமே மண்ணை போடும் நிலை.

இதனால்தான் ஆரம்பத்திலேயே மற்றவர்களில் முற்று முழுதாக தங்கியிருக்காமல் தமது நலஙளை மட்டும் முதன்மைபடுத்தி செயற்பட வேண்டும் (அது போரோ அல்லது சமாதானமோ) என தொடர்ச்சியாக கூறப்பட்டது.

இந்த போர் சடுதியாக முடிவுக்கும் வரும் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

இந்த போர் சடுதியாக முடிவுக்கும் வரும் என கருதுகிறேன்.

ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து வெளியேறாது என்பதால் போர் உடனடியாக முடிவுக்கு வராது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் அணை தகர்ப்பினால் பாரிய சுற்றுசூழல் பேரழிவு ஏற்படும் ஆபத்து

Published By: RAJEEBAN

07 JUN, 2023 | 03:27 PM
image
 

உக்ரைனின்  கேர்சன் நகரில்  நொவா ககோவ்கா அணை முற்றாக அழிக்கப்பட்டுள்ளதால் பாரியசுற்றுசூழல் பேரழிவு ஏற்படலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

அணை  முற்றாக அழிக்கப்பட்டுள்ளதை பேரழிவை சுற்றுச்சூழலிற்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய குண்டுவெடித்ததை போன்றது என  உக்ரைன்  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள கேர்சன் நகரில் உள்ள அணை அழிக்கப்பட்ட பின்னர் அந்த பகுதியில் நீர்மட்டம் அதிகரித்துவருகின்றது.

nova2.jpg

சுமார் 1400 பேர் அந்த பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

பல நகரங்களும் விவசாயநிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன,

உக்ரைனும் ரஸ்யாவும் இந்த அழிப்பிற்கு யார் காரணம் என்பது குறித்து பரஸ்பர குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன.எனினும் இரு தரப்பும் உறுதியான ஆதாரங்களை முன்வைக்கவில்லை.

எனினும் ஜெலென்ஸ்கி ரஸ்யாவே இதற்கு பொறுப்பு என குற்றம்சாட்டியுள்ளார்.உக்ரைன் அதிகாரிகள் இதனை வேண்டுமென்றே சூழலை அழித்த சம்பவம் என்ற கோணத்தி;ல் விசாரணை செய்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பெருந்துயரின் விளைவுகள் ஒருவாரத்திற்கு பின்னரே தெரியவரும் நீர் வடிந்ததும் என்ன மிச்சமுள்ளது என்பது தெரியவரும் எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

வனவிலங்குகள் விவசாய நிலங்கள் குடியேற்றங்கள் மற்றும் நீர்விநியோகம பாதிக்கப்படுவது  குறித்து கரிசனைகள் வெளியாகியுள்ளன.

ஆற்றில் உள்ள மின்சார உற்பத்தி நிலையத்திலிருந்து கசிந்த எண்ணெய் மற்றும் இரசாயனங்கள்  குறித்தும் கரிசனைகள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/157170

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா vs யுக்ரேன்: அணையைத் தகர்த்தது யார்? அணை உடைந்ததால் யாருக்கு லாபம்?

யுக்ரேனில் அணை தகர்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஃபிராங்க் கார்ட்னர்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தெற்கு யுக்ரேனில் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் அமைந்திருந்த மிகப்பெரிய அணை தகர்க்கப்பட்டுள்ளதால், அணையில் இருந்து தண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நாசகார செயலால் யாருக்கு லாபம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நோவா கக்கோவ்கா அணை உடைக்கப்பட்டது குறித்து ரஷ்யா, யுக்ரேன் இருதரப்பும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. ஏற்கெனவே கடந்த ஆண்டு நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் மேற்கத்திய நாடுகளின் சந்தேக பார்வை ரஷ்யா மீது விழுந்திருந்தது.

ஆனால், “இவ்விரு சம்பவங்களில் ரஷ்யாவுக்கு எந்த தொடர்பு இல்லை. நாங்கள் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்?” என்று தங்கள் மீதான குற்றச்சாட்டை ரஷ்ய அரசு பகிரங்கமாக மறுத்தது. அத்துடன், “இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தங்களை காயப்படுத்துகிறது “ என்றும் ரஷ்யா வருத்தம் தெரிவித்துள்ளது.

மேற்கு ஐரோப்பாவிற்கு இயற்கை எரிவாயுவை வழங்குவதற்காக ரஷ்யாவிலிருந்து ஜெர்மனி வரை, பால்டிக் கடலின் கீழ் செல்லும் இயற்கை எரிவாயு குழாய்களின் கட்டமைப்பே நோர்ட்ஸ்ட்ரீம்.

 

ரஷ்யாவை பாதிக்கும் விஷயங்கள்

யுக்ரேனின் குற்றச்சாட்டின்படி, கக்கோவ்கா அணையை ரஷ்யா உடைத்ததாக கருதினால், அதனால் தமக்குதான் பாதிப்பு என்பதை அந்த நாடு இரண்டு வழிகளில் சுட்டிக் காட்டலாம்.

முதலாவதாக, அணை உடைக்கப்பட்டுள்ளதன் விளைவாக, கெர்சன் மற்றும் அணை அமைந்துள்ள ‘டினிப்ரோ’ ஆற்றின் கரையோர பகுதிகளில் இருந்து ரஷ்ய துருப்புகளையும், பொதுமக்களையும் கிழக்குப் பகுதி நோக்கி வெளியேற்ற வேண்டி வரும். அப்படியொரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அது ரஷ்ய படையின் பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதலால் அன்றாடம் அவதியுற்று வரும் யுக்ரேனின் கெர்சன் பகுதி குடியிருப்புவாசிகளுக்கு சாதகமாகவே அமையும்.

அடுத்து, அணையை உடைப்பதால் அதன் அருகில் இருக்கும் கால்வாயில் இருந்து ரஷ்ய ஆக்கிரமிப்பு தீபகற்ப பகுதியான கிரைமியாவுக்கு சென்று கொண்டிருக்கும் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்படலாம். கிரிமியா தீபகற்ப பகுதியை 2014ல் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அப்போதில் இருந்து, யுக்ரேன் மற்றும் ரஷ்யா உரிமை கொண்டாடும் சர்ச்சைக்குரிய நிலமாக கிரைமியா தீபகற்பம் மாறி உள்ளது.

இப்படி இவ்விரு காரணங்களும் தங்களுக்கே வினையாக அமையும் எனும்போது தாங்கள் ஏன் அணையை உடைக்கப் போகிறோம்? என்று ரஷ்யா நியாயம் கற்பிக்கலாம்.

உக்ரைன் அணை உடைப்பு

பட மூலாதாரம்,GOOGLE

யுக்ரேன் - ரஷ்யா போர் பின்னணி

ஆனால், இந்த அணை உடைக்கப்பட்டுள்ள நிகழ்வை, யுக்ரேன் போரின் பின்னணியிலும் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக, ரஷ்ய படைகளுக்கு எதிரான யுக்ரேனின் கோடைகால எதிர்தாக்குதல் நடவடிக்கையின் பின்னணியிலும் இதனை பார்க்க வேண்டியுள்ளது.

யுக்ரேன் ராணுவத்தின் இந்த எதிர்முனை தாக்குதல் வெற்றி பெற வேண்டுமானால், கிரைமியா தீபகற்பத்தை யுக்ரேனின் கிழக்கு டோம்பாஸ் பிராந்தியத்துடன் இணைக்கும் பகுதி மீதான ரஷ்ய படையின் ஆதிக்கத்தை தளர்த்த வேண்டும்.

அத்துடன், ஜாபோரிசியாவின் தெற்குப் பகுதியிலும் ரஷ்ய படைகளின் ஆதிக்கத்தை சீர்குலைப்பதன் மூலம் அந்தப் பகுதியை இரண்டாக பிரிக்க முடியும். அதன் பயனாக, கிரைமியா தீபகற்ப பகுதியை தனிமைப்படுத்தி, அதனை கைப்பற்றும் ராணுவ நடவடிக்கையில் யுக்ரேன் இறங்கலாம்.

உஷாரான ரஷ்யா

யுக்ரேன் அணை உடைப்பு

பட மூலாதாரம்,REUTERS

ஆனால், கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் நடைபெற்று வரும் யுக்ரேன் உடனான போரில் இருந்து ரஷ்யா நிறைய பாடங்களை கற்றுக் கொண்டுள்ளது. யுக்ரேன் ராணுவம் எந்தப் பகுதிகளையெல்லாம் குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்பதை ரஷ்யா அறிந்துள்ளது.

முக்கியமாக அசோவ் கடல் பகுதியை நோக்கி யுக்ரேனிய படைகள் முன்னேறுவதை தடுக்கும் நோக்கில், கடந்த இரண்டு மாதங்களாக ரஷ்யா பல்வேறு தடைகளை உருவாக்கி வருகிறது.

ஆனால் ரஷ்ய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ள மேற்குப் பகுதிக்கு தமது படைகளை அனுப்ப யுக்ரேன் திட்டமிட்டுள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை. ரஷ்யாவை இப்படி யூகிக்க வைப்பதற்காக யுக்ரேன் ராணுவம் இதுபோன்று புத்திசாலித்தனமாக செயல்படுவதாக தெரிகிறது.

தெற்கு யுக்ரேன் பகுதியை அடைந்தபோது, டினிப்ரோ ஏற்கெனவே பரந்து விரிந்த ஆறாகவே இருந்தது.

ரஷ்யாவின் பீரங்கி, ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் கீழ், அதன் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள ரஷ்ய படைகளின் பாதுகாப்பு அரண், உக்ரைனுக்கு மிகவும் ஆபத்தான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பெரிய அணை தகர்க்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், கெர்சானுக்கு எதிரே அமைந்துள்ள இடது ( கிழக்கு) ஆற்றங்கரை பகுதிகள் முழுவதும் நீரில் முழ்கி உள்ளன. இதனால் அந்தப் பகுதிக்கு யுக்ரேனிய படைகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அணை உடைப்பு வரலாறு

1941 இல் இரண்டாம் உலகப் போர் நடைபெற்று கொண்டிருந்தபோது, நாஜி படைகளின் முன்னேற்றத்தை தடுக்க, இதே டினிப்ரோ ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த அணையை சோவியத் துருப்புகள் தகர்த்தன என்ற வரலாற்று பதிவும் இருக்கதான் செய்கிறது. அணை உடைந்ததன் விளைவாக, அடுத்தடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி ஆயிரக்கணக்கான சோவியத் குடிமக்கள் உயிரிழந்தனர் என்ற சோகக்கதையும் இந்த அணையின் பின்னால் உள்ளது.

தற்போது இந்த அணையை யார் உடைத்திருந்தாலும், அந்தச் செயல் தெற்கு உக்ரைன் பகுதியில் நிலைமையை சீர்குலைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ரஷ்யா - உக்ரைன் என இருதரப்பிலும் போர் நடவடிக்கைகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா மீதான யுக்ரேனின் நீண்டகால எதிர்தாக்குதல் திட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வை அணை தகர்க்கப்பட்டுள்ள சம்பவம் தாமதப்படுத்தக்கூடும்.

https://www.bbc.com/tamil/articles/cp0zyl63yg5o

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

இந்த நிகழ்வு இரஸ்சிய உக்கிரேன் போர் வெகு விரைவில் முடிவுக்கு வரப்போவதனை உறுதிப்படுத்துவதாக உணருகிறேன்.

நாடுகள் சவால்கலை எதிர்நோக்கும் தற்போதய உலக ஒழுங்கினை தொடர்ந்து பேண பல பிரயத்தனங்களை கிழக்காசியாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் பதட்ட நிலையினை நீடிப்பதன் மூலம் தக்கவைக்கலாம் என ஒரு புறம் முயற்சிக்க, இந்த நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த இழுபறி நிலை உலக பொருளாதாரத்திலும், உலக அமைதியிலும் பெரும் தாக்கத்தினை என்றுமில்லாதவாறு ஏற்படுத்தியுள்ளது.

தற்போதய உலக ஒழுங்கினை தொடர இழுபறிநிலையினை இந்த நாடுகள் பேணுவதால் ஏற்படும் குறுங்கால அவகாசத்தினை விட அது ஏற்படுத்தும் பொருளாதார நெருக்கடி நாடுகளின்நிகழ்கால உலக ஒழுங்கினை பேணுவதற்கு பதிலாக அதிக பாதிப்பினை உருவாக்கும் என்பதனை உணர இந்த நாடுகள் தாமாகவே இந்த குளற்படிகளை எந்தவித முன்னறிவித்தலுமின்றி கைவிடும் என்ற உண்மை உணர்தலின் வெளிப்பாடாக தொடர்ச்சியாக தம்மை வெளிச்சத்திற்குள் வைக்க முயல்வதற்காகவே இந்த  நிகழ்வு நிகழ்ந்துள்ளதாக கருதுகிறேன், இது தமது தலையில் தாமே மண்ணை போடும் நிலை.

இதனால்தான் ஆரம்பத்திலேயே மற்றவர்களில் முற்று முழுதாக தங்கியிருக்காமல் தமது நலஙளை மட்டும் முதன்மைபடுத்தி செயற்பட வேண்டும் (அது போரோ அல்லது சமாதானமோ) என தொடர்ச்சியாக கூறப்பட்டது.

இந்த போர் சடுதியாக முடிவுக்கும் வரும் என கருதுகிறேன்.

 

அதாவது ஒரு பெரும் மனித  அழிவை  செய்து

ரசியா  போரை சடுதியாக  முடிவுக்கு  கொண்டு  வந்திருக்கிறது அல்லது வரும் அல்லது வெல்லும் 

அதனை எந்த  நடுக்கமும்  இரக்கமுமின்றி நீங்கள்  பந்தி  பந்தியாக  எழுதி  வரவேற்பீர்கள்???😡

 

Élément span

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கத்திய முக்கிய ஊடகங்கள்:
🔴 ரஷ்யர்கள் தங்கள் சொந்த NordStream பைப்லைனை வெடிக்கச் செய்தனர்

🔴கிரெம்ளின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த கிரெம்ளின் உத்தரவிட்டது

🔴ரஷ்யா நோவா ககோவ்கா அணையை வெடிக்கச் செய்து, அரை வருடத்திற்கு மேலாக அவர்கள் கட்டியெழுப்பிய தற்காப்புகளை அழித்தது மற்றும் கிரிமியாவிற்கு நீர் விநியோகத்தை மறுத்தது.

வேடிக்கையான விஷயம் என்னவென்றால், 
ஆசியர்களும், ஆப்பிரிக்கர்களும்... இந்த வாதங்களை நம்ப வேண்டும் 
என்று அவர்கள் விரும்புகிறார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து வெளியேறாது என்பதால் போர் உடனடியாக முடிவுக்கு வராது.

 

பிச்சைகாரனுக்கு தெரிவு இருப்பதில்லை என தெரிவிப்பார்கள், ஆனால் உக்கிரேனிற்கு இந்த பாதகமான சூழலிலில் ஒரு தெரிவு இருப்பதாக கருதுகிறேன்.

இது ஒரு முட்டாள்தனமான உதாரணமாக இருக்கலாம் ஆனால் இந்த விடயத்திற்கான உதாரண விளக்கமாக் கூறுகிறேன்.

இலங்கையின் ஒன்றிணைந்த வடகிழக்கினை தமீழீழ தனிநாடாக்குவதற்காக மேற்கொண்ட இலங்கையின் இறைமைக்குள் நிகழ்ந்த அரசியல் போர் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளது, இந்த நிலையில் வட கிழக்கில்  தொடரும் நில இழப்பினை தவிர்க்க ஏதோ ஒரு வகையில் வடகிழக்கு மாகாண சபைகள் இந்தியாவின் ஒரு நிழல் நிர்வாக அலகு போல செயற்படும் நிலை உருவாகி இலங்கையின் வட கிழக்கின் மீதான பிடி தளருமாயின், இலங்கையின் வட கிழக்கு இந்தியாவின் பகுதியாக மாறுவதினை விட அதனை தனிநாடாக இலங்கையே முதலாவதாக அங்கீகரிக்கலாம், அவ்வாறானதோர் நிலை ஏற்படாதா இந்த கிழக்கு உக்கிரேன் பகுதிகளுக்கு? 

இலங்கையில் மேலே கூறியவாறு நிகழ்வதற்கு ஏதாவது வாய்ப்பு இருப்பதாக கருதுகிறீர்களா?

1 hour ago, விசுகு said:

 

அதாவது ஒரு பெரும் மனித  அழிவை  செய்து

ரசியா  போரை சடுதியாக  முடிவுக்கு  கொண்டு  வந்திருக்கிறது அல்லது வரும் அல்லது வெல்லும் 

அதனை எந்த  நடுக்கமும்  இரக்கமுமின்றி நீங்கள்  பந்தி  பந்தியாக  எழுதி  வரவேற்பீர்கள்???😡

 

Élément span

போரை நாடாத்தும் இரு தரப்பிற்கும் போரினால் அனுகூலம் இல்லை, ஆரம்பத்தில் சில நாடுகளுக்கு பொருளாதார ரீதியாகவும், அரசியல், இராணுவ ரீதியாக நன்மை இருந்தது ஆனால் தற்போது அந்த நிலை தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது, அதனால் அவர்கள் போரை தொடர விரும்ப மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

ஒரு வகையில் வடகிழக்கு மாகாண சபைகள் இந்தியாவின் ஒரு நிழல் நிர்வாக அலகு போல செயற்படும் நிலை உருவாகி இலங்கையின் வட கிழக்கின் மீதான பிடி தளருமாயின், இலங்கையின் வட கிழக்கு இந்தியாவின் பகுதியாக மாறுவதினை விட அதனை தனிநாடாக இலங்கையே முதலாவதாக அங்கீகரிக்கலாம்

 அப்படி நடக்கும் வாய்ப்புகள் இல்லை   ...இந்தியாவின் விருப்பம்ங்கள்.  வடக்கு கிழக்கு இல்  இலங்கையின் ஆட்சியில் தொடரும்    ஆனால் வடக்கு கிழக்கு  இந்தியவுடன். சேரும் வாய்ப்புகள் இல்லை   காரணம் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ்நாட்டுடன். சேர்த்து  பலமடைந்து   இந்தியாவில் இருந்து பிரிய. போராடும்.....இப்படி ஒரு நிகழ்வு   எதிர்காலத்தில்   நடக்காது தவிர்க்க தான்   தமிழ் ஈழ போராட்டம் அடக்கி ஒடுக்க இந்தியா    ஆதரவு வழங்கியது     தமிழன் இலங்கையில் சிறுபான்மையாக இருக்கும் வரை   இலங்கை தமிழ் ஈழத்தை  அங்கிகரிக்காது    ....

தமிழர்கள் ஆதரவு இல்லாமல்  இலங்கையை. ஆட்சி செய்ய முடியாது  என்ற  நிலை வந்தால்.....அல்லது   தமிழர்களாலும் இலங்கையை ஆட்சி செய்ய முடியும் என்ற நிலை வந்தால்   ...மட்டுமே இலங்கை தமிழ் ஈழத்தை அங்கிகரிக்கும்.  அதாவது சிங்களவர்  நாட்டை பிரித்து தருவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kandiah57 said:

 அப்படி நடக்கும் வாய்ப்புகள் இல்லை   ...இந்தியாவின் விருப்பம்ங்கள்.  வடக்கு கிழக்கு இல்  இலங்கையின் ஆட்சியில் தொடரும்    ஆனால் வடக்கு கிழக்கு  இந்தியவுடன். சேரும் வாய்ப்புகள் இல்லை   காரணம் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ்நாட்டுடன். சேர்த்து  பலமடைந்து   இந்தியாவில் இருந்து பிரிய. போராடும்.....இப்படி ஒரு நிகழ்வு   எதிர்காலத்தில்   நடக்காது தவிர்க்க தான்   தமிழ் ஈழ போராட்டம் அடக்கி ஒடுக்க இந்தியா    ஆதரவு வழங்கியது     தமிழன் இலங்கையில் சிறுபான்மையாக இருக்கும் வரை   இலங்கை தமிழ் ஈழத்தை  அங்கிகரிக்காது    ....

தமிழர்கள் ஆதரவு இல்லாமல்  இலங்கையை. ஆட்சி செய்ய முடியாது  என்ற  நிலை வந்தால்.....அல்லது   தமிழர்களாலும் இலங்கையை ஆட்சி செய்ய முடியும் என்ற நிலை வந்தால்   ...மட்டுமே இலங்கை தமிழ் ஈழத்தை அங்கிகரிக்கும்.  அதாவது சிங்களவர்  நாட்டை பிரித்து தருவார்கள் 

உங்கள் கருத்திற்கு நண்றி,

நான் கூற முனைவது கொங் கொங்கில் சீனாவின் ஒரு நாடு இரு நிர்வாக அலகு எனும் முறை (Special administrative region) போன்ற ஒரு முறைமை, அதற்கும் இந்திய நாட்டில் உள்ள தமிழ் நாட்டில் உள்ள அரசியல் முறைமைக்கும் தொடர்பு இருக்காது என கருதுகிறேன்.

 

அதாவது இலங்கையின் வட கிழக்கிற்கும் தமிழ்நாட்டிற்கும் அரசியல் ரீதியான தொடர்பு இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களின் வடகிழக்கு மாகாண சபைகள் இந்தியாவின் ஒரு நிழல் நிர்வாக அலகு போல செயற்படும் நிலை உருவாகி இலங்கையின் வட கிழக்கு இந்தியாவின் பகுதியாக மாறும் நிலையில் அதை தமிழீழமாக இலங்கையே  அங்கீகரித்தால் என்ன நடக்கும் ரஷ்யா காட்டி வழியில் ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்தது போல் இந்தியா தமிழீழத்தை ஆக்கிரமிக்கும். BRICS - RIC மோசமானவை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, தமிழ் சிறி said:

வேடிக்கையான விஷயம் என்னவென்றால், 
ஆசியர்களும், ஆப்பிரிக்கர்களும்... இந்த வாதங்களை நம்ப வேண்டும் 
என்று அவர்கள் விரும்புகிறார்கள். 🤣

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பவர்களுக்கும்  வட அமெரிக்க அந்த இரு நாடுகளில் இருப்பவர்களுக்கும் மட்டுமே  ரஷ்ய-உக்ரேன் போர் உண்மை நிலவரங்கள் தெரியாது. அல்லது தெரியாத மாதிரி நடிக்கின்றார்கள்.:rolling_on_the_floor_laughing:

மற்றும் படி ஆசிய,ஆபிரிக்க,தென்னமெரிக்க,மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பவர்களுக்கு சகல உண்மைகளும் தெரியும். :grinning_face_with_sweat:

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பவர்களுக்கும்  வட அமெரிக்க அந்த இரு நாடுகளில் இருப்பவர்களுக்கும் மட்டுமே  ரஷ்ய-உக்ரேன் போர் உண்மை நிலவரங்கள் தெரியாது. அல்லது தெரியாத மாதிரி நடிக்கின்றார்கள்.:rolling_on_the_floor_laughing:

மற்றும் படி ஆசிய,ஆபிரிக்க,தென்னமெரிக்க,மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பவர்களுக்கு சகல உண்மைகளும் தெரியும். :grinning_face_with_sweat:

நீங்கள் வேறை…. அந்த நாட்டு ஊடகங்கள் வெளியிடும் செய்தியை வாசித்து,
அந்த நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்களே சிரிக்கிறார்கள்.
ஆரம்பத்தில் நம்பியது உண்மைதான்… இப்போ நிலைமை தலைகீழ்.
பொய்யும், பிரட்டும், சுத்துமாத்தும்… நெடுக கை கொடுக்காது. 🙂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.