Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேச்சுவார்த்தைக்குத் தயார்; ஆனால் ஒரு நிபந்தனை. - ரஷ்ய ஜனாதிபதி புட்டின் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தைக்குத்  தயார்; ஆனால் ஒரு நிபந்தனை

பேச்சுவார்த்தைக்குத்  தயார்; ஆனால் ஒரு நிபந்தனை. - ரஷ்ய ஜனாதிபதி புட்டின் -

நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,  ரஷ்யா கடந்த வருடம்  பெப்ரவரி மாதம் முதல் உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.

அதே சமயம் உக்ரேனும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு  பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரு நாடுகளுக்கு இடையேயும்  இடம்பெற்றுவரும் போரானது உக்கிரமடைந்து வருகின்றது.

குறிப்பாக நேற்றைய தினம் உக்ரேனின்   Kryvyi Rih நகரில் ரஷ்யா மேற்கொண்ட வான் வழித் தாக்குதலில்  10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 25 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் உக்ரேன் அறிவித்துள்ளது.

இந்நிலையில்  ”உக்ரேனுடன் அமைதிப்  பேச்சுவார்த்தை நடத்தத் தான்  தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு மாறாக உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை மேற்கத்தேய நாடுகள் நிறுத்த வேண்டுமென்றும்” ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்  நிபந்தனையொன்றை  விதித்துள்ளார்.

நேற்றைய தினம் மொஸ்கோவில்  இடம்பெற்ற  இராணுவ சந்திப்பின் போதே  அவர்  இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”ரஷ்ய ஆயுதங்களின் தரம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

அத்துடன்  அமெரிக்கா வழங்கிய ஹிம்மர் ரொக்கெட்டுகள் மூலம் ககோவ்கா அணையை உக்ரேன் தகர்த்துள்ளதாக குற்றம்சாட்டிய புடின், எதிர்த்தாக்குதலை தீவிரப்படுத்தியபிறகு  ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் உக்ரேனுக்கு 10 மடங்கு உயிரிழப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1334725

  • Replies 75
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ரஷ்ய ஆயுதங்களின் தரம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

கறள் எல்லாம் மண்ணெண்ணை போட்டு மினுக்கீட்டினம் போல கிடக்கு!😂

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, வாலி said:

கறள் எல்லாம் மண்ணெண்ணை போட்டு மினுக்கீட்டினம் போல கிடக்கு!😂

மண்ணெண்ணையை  போட்டு மினிக்கியவுடனேயே லெப்பேட்டுகளை அடிக்க கூடியதாக இருக்குதெண்டால் பாருங்கோவன்.🙃🙃🙃

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ஸியனிடம் இருந்த பழைய இரும்பெல்லம் முடிஞ்சு போல அது தான் வளமா வாரார் 😉

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இந்நிலையில்  ”உக்ரேனுடன் அமைதிப்  பேச்சுவார்த்தை நடத்தத் தான்  தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு மாறாக உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை மேற்கத்தேய நாடுகள் நிறுத்த வேண்டுமென்றும்” ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்  நிபந்தனையொன்றை  விதித்துள்ளார்.

பேச்சுவார்த்தையில்   தீர்வு கிட்டும்போது  ...இயல்பாக ஆயுதம் வழங்குவது   நிற்கும்.....மேற்கு நாடுகள் கவலையுடனும்.    ..வேறு மார்க்கம் இல்லை என்ற நிலையில் தான்   ஆயுதம் வழங்கப்படுகிறது   .....ஏன் இது உங்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது??🤣😂.     

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

பேச்சுவார்த்தையில்   தீர்வு கிட்டும்போது  ...இயல்பாக ஆயுதம் வழங்குவது   நிற்கும்.....மேற்கு நாடுகள் கவலையுடனும்.    ..வேறு மார்க்கம் இல்லை என்ற நிலையில் தான்   ஆயுதம் வழங்கப்படுகிறது   .....ஏன் இது உங்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது??🤣😂.     

இலங்கை யுத்தத்திலும் இதுதான் உங்கள் நிலைப்பாடா? 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை உள்நாட்டுப் பிரச்னை.  இது ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்க நினைப்பதாக நினைத்ததால் மூட்டிவிடப்பட்ட சண்டை.  வித்தியாசம் இருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Sabesh said:

இலங்கை உள்நாட்டுப் பிரச்னை.  இது ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்க நினைப்பதாக நினைத்ததால் மூட்டிவிடப்பட்ட சண்டை.  வித்தியாசம் இருக்கே.

உங்கள் வாதப்படியே வருவோம். 

இலங்கையின் உள்நாட்டு, இனப்பிரச்சனைக்கு ஏன்  வெளிநாடுகள் இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கினார்கள்?

ஏன்  எங்கள் போராட்டத்திற்கு வழங்கவில்லை ? 

உக்ரேனுக்கு ஒரு நியாயம், தமிழருக்கு ஒரு நியாயமா? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kapithan said:

இலங்கை யுத்தத்திலும் இதுதான் உங்கள் நிலைப்பாடா? 

உங்களுக்கு நான் ஏற்கனவே சொல்லி உள்ளேன்  .....நீங்கள்   குழந்தை என்று....எனவே… வளர்த்த பிற்பாடு.  கருத்துகள் எழுகிறேன்.  என்று...நீங்களும் கூட எற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தித்துள்ளீர்கள்.   ........🤣😂 உங்களுக்கு மதிப்பு அளித்து பதிலளிக்கிறேன்.    

இலங்கை யுத்தத்தை   இழுக்காமல்.    பதில் தாருங்கள்”    ஏன்    இலங்கையை இழுக்கிறீர்கள்.   ...இலங்கை விடயத்தில்  எனது நினைப்பாடு   எப்படி இருந்தால் என்ன?? ....இலங்கை வேறு கண்டத்தில்  உள்ள நாடு   ...அதன் முடிவுகள்  ஐரோப்பாவில்   எந்தவொரு பாதிப்புகளையும்  ஏற்படுத்தாது    ஆனால் உக்ரேன் போர் முடிவுகள்  ஐரோப்பாவில் பாதிப்பு எற்படுத்தும்.    எனவேதான்   அவர்கள்   தற்பாதுகப்பு நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்.    

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

குழந்தையாகவே கேட்கிறேன், 

கண்டங்களுக்குக் கண்டம், நாடுகளுக்கு நாடு, இனங்களுக்கு இனம் வேறு வேறு நீதி, நியாயமா? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

உங்கள் வாதப்படியே வருவோம். 

இலங்கையின் உள்நாட்டு, இனப்பிரச்சனைக்கு ஏன்  வெளிநாடுகள் இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கினார்கள்?

ஏன்  எங்கள் போராட்டத்திற்கு வழங்கவில்லை ? 

உக்ரேனுக்கு ஒரு நியாயம், தமிழருக்கு ஒரு நியாயமா? 

😁

என்ன கேள்வி?.   இலங்கை அங்கீகரிக்க பட்ட நாடு ......நாங்கள்   எங்களை....எங்கள் நாட்டை அங்கீகரிக்கவேண்டும். என்று    கோரி. போரடுகிறோம். ஒரு நாடு   இன்னொரு நாட்டுக்கு தான்  ஆயுதம் வழங்க முடியும்...எங்களை எந்தவொரு நாடும் அங்கீகரிக்கவில்லை   ...எனவேதான் எமக்கு ஆயுதம் வழங்க முடியாது ......

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

ஆகவே, எங்கள் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதமாக கூறி, எங்களை எல்லோருமாக அழித்ததை சரி என்கிறீர்கள் ? 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

குழந்தையாகவே கேட்கிறேன், 

கண்டங்களுக்குக் கண்டம், நாடுகளுக்கு நாடு, இனங்களுக்கு இனம் வேறு வேறு நீதி, நியாயமா? 

முதலில்  இலங்கை தமிழர்கள்  உலகில் உள்ள 193 நாடுகளில் எந்தவொரு நாட்டாலும். அங்கீகரிக்க படதாவர்கள     ...அவர்களுக்கு ஒரு நாடு ஆயுதம் வழங்க முடியாது   ?? கள்ள சந்தையில் தான்  ஆயுதம் வாங்கலாம்   ..... மேலே உங்கள் கேள்வி    நாடுகளுக்கு நாடு   ......என்பது ரஷ்யா...உக்ரேன்     என்று வருகிறது    🤣

6 minutes ago, Kapithan said:

ஆகவே, எங்கள் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதமாக கூறி, எங்களை எல்லோருமாக அழித்ததை சரி என்கிறீர்கள் ? 

இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

முதலில்  இலங்கை தமிழர்கள்  உலகில் உள்ள 193 நாடுகளில் எந்தவொரு நாட்டாலும். அங்கீகரிக்க படதாவர்கள     ...அவர்களுக்கு ஒரு நாடு ஆயுதம் வழங்க முடியாது   ?? கள்ள சந்தையில் தான்  ஆயுதம் வாங்கலாம்   ..... மேலே உங்கள் கேள்வி    நாடுகளுக்கு நாடு   ......என்பது ரஷ்யா...உக்ரேன்     என்று வருகிறது    🤣

""கண்டங்களுக்குக் கண்டம், நாடுகளுக்கு நாடு, இனங்களுக்கு இனம் வேறு வேறு நீதி, நியாயமா? ""

எனது கேள்வி நீதி தொடர்பானது 👆

பதில் எங்கே ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

மண்ணெண்ணையை  போட்டு மினிக்கியவுடனேயே லெப்பேட்டுகளை அடிக்க கூடியதாக இருக்குதெண்டால் பாருங்கோவன்.🙃🙃🙃

மண்ணெண்யோட விளக்கெண்ணையும் மிக்ஸ் பண்ணி மினுக்கினால் இன்னும் நல்லா மினுங்கும்!🤣

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, வாலி said:

மண்ணெண்யோட விளக்கெண்ணையும் மிக்ஸ் பண்ணி மினுக்கினால் இன்னும் நல்லா மினுங்கும்!🤣

சங்கு ஊதும் போது தெரியும் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

""கண்டங்களுக்குக் கண்டம், நாடுகளுக்கு நாடு, இனங்களுக்கு இனம் வேறு வேறு நீதி, நியாயமா? ""

எனது கேள்வி நீதி தொடர்பானது 👆

பதில் எங்கே ?

உங்கள் கேள்வியை  நீங்களே சரியாக புரிந்து கொள்ளவில்லை........என்பது எனது வாதம்......ஆகும்...உங்களது கேள்வி எமக்கு ஏன் உலக நாடுகள் ஆயுதம் தரவில்லை? என்பது....பதில்...ஒரு நாடு   இன்னொரு நாட்டுக்கு தான்  ஆயுதம் கொடுக்க முடியும்   ..ஆகவே  இலங்கை உக்ரேன் ரஷ்யா   ....போன்ற நாடுகள் மற்றைய நாடுகளிலிருந்து ஆயுதம் பெற முடியும்     தனி நபர்   போராட்ட அமைப்புகளுக்கு   ஆயுதம் வழங்குவது இல்லை   .....

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kandiah57 said:

ஆயுதம் கொடுக்காவிட்டால் பிரச்சனை இல்லை, ஆனால் ஆதரவுகூடத் தரவில்லை, அதற்கும் மேலாகப் பயங்கரவாத இயக்கமாக அல்லவா முத்திரை குத்தினார்கள் ? எங்களை அழிப்பதற்கு உதவினார்கள்.

இது உங்கள் வாதத்திற்குள் முரண்பாடாகத் தெரியவில்லையா ? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதம் கொடுக்கிறார்கள் என்று வாங்கி முன் யோசனையில்லாமல் பாவிக்கும் யுக்கிரேனின் எதிர்காலம் மோசமாக இருக்க போகிறது, மேற்கு நாடுகள் வழங்கும் டிப்ளீடட் யுரேனியம் கொண்ட ஆயுதங்கள் நீண்டகால அடிப்படையில் சுற்று சூழல், விவசாயம் என்பவற்றினை பாதிக்கும் என கூறுகிறார்கள்.

உலக அரசியலில் சிக்கி அப்பாவி மக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

15 மாதங்களுக்கு மேலாக நடைபெறும் யுத்தத்தால் பாதிக்க படடது ரஷியாவும் உக்கிரேனும் மட்டுமல்ல . இதன் தாக்கம் உலகம் முழுக்க  எதிரொலித்து .பாதிக்கப்பட்ட்து . லாபம் அடைந்த்து ஆயுத வியாபாரிகள். உள்ள பழசு புதுசு எல்லாம் அடித்துக் கட்டி பெரும் லாபம் பார்த்துக் கொண்டார்கள். இனியாவது போர் ஓய்ந்தால் மனித இனத்துக்கு கிடைக்கும் நிம்மதிப்பெருமூச்சு. ஆயுத  வியாபரிகள் விடுவார்களா ?  தன் மூச்சு கொண்ட  தலைவர்கள்  பணிவார்களா? மனித இனத்தின் நிலை  மாறுமா?   .    

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2023 at 09:34, தமிழ் சிறி said:

ரஷ்ய ஆயுதங்களின் தரம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

16 மாதங்களுக்கு முன்பு  175 ஆயிரம் படைகளுடன் உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்ய சென்ற போது பலவீனமான ஆயுததத்துடனா சென்றது? இந்த சர்வாதிகாரியின் பொய் பிரசாரங்கள் ரஷ்யாவிலேயே கலைகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/6/2023 at 09:25, நிலாமதி said:

15 மாதங்களுக்கு மேலாக நடைபெறும் யுத்தத்தால் பாதிக்க படடது ரஷியாவும் உக்கிரேனும் மட்டுமல்ல . இதன் தாக்கம் உலகம் முழுக்க  எதிரொலித்து .பாதிக்கப்பட்ட்து . லாபம் அடைந்த்து ஆயுத வியாபாரிகள். உள்ள பழசு புதுசு எல்லாம் அடித்துக் கட்டி பெரும் லாபம் பார்த்துக் கொண்டார்கள். இனியாவது போர் ஓய்ந்தால் மனித இனத்துக்கு கிடைக்கும் நிம்மதிப்பெருமூச்சு. ஆயுத  வியாபரிகள் விடுவார்களா ?  தன் மூச்சு கொண்ட  தலைவர்கள்  பணிவார்களா? மனித இனத்தின் நிலை  மாறுமா?   .    

சிறந்த கருத்து,

அணுவாயுத கழிவினை கொண்டு உருவாக்கபடும் இந்த ஆயுதங்கள் பெரும்பாலும் யுத்தம் நடைபெறும் பிரதேசங்கள் பெரும்பாலும் இரஸ்சியர்கள் வாழும் பிரதேசமாக உள்ளமையால் உக்கிரேன் அரசு எவ்வாறு இலங்கையில் வடகிழக்குல் உயிரியல் குண்டு, இரசாயன குண்டுகளை மாற்றான் தாய் மனப்பான்மையுடன்  வீசியது போல இந்த ஆயுதங்களையும் பயன்படுத்துகிறது, அதனை வழங்கும் மேற்கு நாடுகளும் எங்கோ உக்கிரேனில் பயன்படுத்தும் இந்த ஆயுதங்களால் தமக்கு பாதிப்பில்லை என கருதிகிறார்கள் அண்மையில் இரஸ்சிய உக்கிரேனிய  ஆயுத கிடங்கு ஒன்றினை தகர்த்த போது ஏற்பட்ட காலாண் புகை மேக மூட்டமாகி ஐரோப்பா நோக்கி நகர்வதாக கூறினார்கள். 

மழை நீருடன் கலந்து குடி தண்ணீராக மாறினால் எப்படி ஆபிரிக்க நாடுகளில் சுத்தமான குடிநீருக்கு மக்கள் அவலப்படுகிறார்களோ அதே போல் ஒரு நிலை ஏற்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

உண்மை தான்....

On 15/6/2023 at 00:34, vasee said:

உலக அரசியலில் சிக்கி அப்பாவி மக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுகிறார்கள்.

இதுவும் உண்மை.....ஆனால் 1.     ரஷ்யா பிரதமர் சொல்லி உள்ளார்  ஜேர்மனியை  தக்குவோம்.   என்று 

2...  செயற்கையாக சுனாமி ஏற்படுத்தி. லண்டன் மாநகரை   கடலில் மூழ்கடிப்போம். என்று  ரஷ்யா   மிரட்டி உள்ளது  

3....போலந்து நாட்டையும்   தாக்குவோம்.  என்று கூறியுள்ளார்கள். 

 ரஷ்யா   உக்ரேன் கைப்பற்றி  ....அதன் பின்    அமைதியாக  இருக்குமா   ????. 

இல்லை ஒருபோதும் இருக்க போவதில்லை....இது தான்  ஐரோப்பியர்கள் நிலைப்பாடு  ..     சரி ஒரு கதைக்கு     உங்கள் கோரிக்கைப்படி. உக்கிரேனுக்கு ஆயுதம்   கொடுக்காமல் விட்டுவிட்டார்கள்.  என வைத்து கொள்வோம்.....நிச்சயம் ரஷ்யா  உக்ரேனை கைப்பற்றும்   ...இது பற்றி எமக்கு எந்தவொரு கவலையும் இல்லை   ......அதன் பின்    பிரித்தானியா....ஜேர்மனி   போலந்து.......இப்படி ஏதாகினும் ஒரு நாட்டை   அல்லது பல நாடுகளை     ரஷ்யா    தாக்கினால்.   என்ன செய்ய முடியும்??? அந்த நேரத்தில்   உங்கள் கேள்விகள் எப்படி இருக்கும்??

போரை விரும்பவில்லை   ....நம்பிக்கையீனமும்.   ..தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமும் ஏற்பட்டு உள்ளது   ..சும்மா வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது    ஐரோப்பாவில் நான்கு ஐந்து வருடங்களில்  ஆட்சி மாற்றம் ஏற்படும்    எனவே… செயல்பாடுகளில் சிறு மாற்றங்கள் ஏற்படும்.....ரஷ்யா அப்படி அல்ல   ஒரே செயலாற்றம்  30. வருடங்களுக்கு இருக்கும்   ....எனவேதான் வெற்றி வாய்ப்புகள் அதிகம்   பிழை சரிக்கு. அப்பால்   ...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

சிறந்த கருத்து,

அணுவாயுத கழிவினை கொண்டு உருவாக்கபடும் இந்த ஆயுதங்கள் பெரும்பாலும் யுத்தம் நடைபெறும் பிரதேசங்கள் பெரும்பாலும் இரஸ்சியர்கள் வாழும் பிரதேசமாக உள்ளமையால் உக்கிரேன் அரசு எவ்வாறு இலங்கையில் வடகிழக்குல் உயிரியல் குண்டு, இரசாயன குண்டுகளை மாற்றான் தாய் மனப்பான்மையுடன்  வீசியது போல இந்த ஆயுதங்களையும் பயன்படுத்துகிறது, அதனை வழங்கும் மேற்கு நாடுகளும் எங்கோ உக்கிரேனில் பயன்படுத்தும் இந்த ஆயுதங்களால் தமக்கு பாதிப்பில்லை என கருதிகிறார்கள் அண்மையில் இரஸ்சிய உக்கிரேனிய  ஆயுத கிடங்கு ஒன்றினை தகர்த்த போது ஏற்பட்ட காலாண் புகை மேக மூட்டமாகி ஐரோப்பா நோக்கி நகர்வதாக கூறினார்கள். 

மழை நீருடன் கலந்து குடி தண்ணீராக மாறினால் எப்படி ஆபிரிக்க நாடுகளில் சுத்தமான குடிநீருக்கு மக்கள் அவலப்படுகிறார்களோ அதே போல் ஒரு நிலை ஏற்படலாம்.

மிகவும்  பக்கசார்பான
நேர்மையற்ற  கருத்து

வாழைப்பழத்தில்  ஊசி  ஏற்றுவது போல்  இல்லாமல்
உங்களது கருத்தையும  நிலைப்பாட்டையும் நேர்மையுடன் முன்  வைக்கும் மனநிலைக்கு நீங்கள்  வுருவது  எப்போ???

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Kandiah57 said:

இதுவும் உண்மை.....ஆனால் 1.     ரஷ்யா பிரதமர் சொல்லி உள்ளார்  ஜேர்மனியை  தக்குவோம்.   என்று 

2...  செயற்கையாக சுனாமி ஏற்படுத்தி. லண்டன் மாநகரை   கடலில் மூழ்கடிப்போம். என்று  ரஷ்யா   மிரட்டி உள்ளது  

3....போலந்து நாட்டையும்   தாக்குவோம்.  என்று கூறியுள்ளார்கள். 

 ரஷ்யா   உக்ரேன் கைப்பற்றி  ....அதன் பின்    அமைதியாக  இருக்குமா   ????. 

இல்லை ஒருபோதும் இருக்க போவதில்லை....இது தான்  ஐரோப்பியர்கள் நிலைப்பாடு  ..     சரி ஒரு கதைக்கு     உங்கள் கோரிக்கைப்படி. உக்கிரேனுக்கு ஆயுதம்   கொடுக்காமல் விட்டுவிட்டார்கள்.  என வைத்து கொள்வோம்.....நிச்சயம் ரஷ்யா  உக்ரேனை கைப்பற்றும்   ...இது பற்றி எமக்கு எந்தவொரு கவலையும் இல்லை   ......அதன் பின்    பிரித்தானியா....ஜேர்மனி   போலந்து.......இப்படி ஏதாகினும் ஒரு நாட்டை   அல்லது பல நாடுகளை     ரஷ்யா    தாக்கினால்.   என்ன செய்ய முடியும்??? அந்த நேரத்தில்   உங்கள் கேள்விகள் எப்படி இருக்கும்??

போரை விரும்பவில்லை   ....நம்பிக்கையீனமும்.   ..தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமும் ஏற்பட்டு உள்ளது   ..சும்மா வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது    ஐரோப்பாவில் நான்கு ஐந்து வருடங்களில்  ஆட்சி மாற்றம் ஏற்படும்    எனவே… செயல்பாடுகளில் சிறு மாற்றங்கள் ஏற்படும்.....ரஷ்யா அப்படி அல்ல   ஒரே செயலாற்றம்  30. வருடங்களுக்கு இருக்கும்   ....எனவேதான் வெற்றி வாய்ப்புகள் அதிகம்   பிழை சரிக்கு. அப்பால்   ...

ஒரு பக்கம் ரஷ்யா கறள் புடிச்ச ஆயுதத்தை வைச்சு சண்டை புடிக்குது, உக்ரேனோட தாக்கு புடிக்கேலாமல் தள்ளாடுது எண்டு கதை போகுது

இன்னொரு பக்கம் ரஷ்யா ஜேர்மனிக்கு அடிக்கப்போகுது.போலந்துக்கு அடிக்கப்போகுது லண்டனுக்கு சுனாமி விடப்போகுது எண்டு வேறை ஜில்மா கதை வேறை....
எதையும் யதார்த்தமாய் யோசிச்சு கதை விடணும். இல்ல ஆதாரத்தோட ரீல் விடணும். :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.