Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஸ்ஸிய அரசுக்கெதிராகத் திரும்புகிறதா வாக்னர் கூலிப்படைப்பிரிவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகோஸின் பிரச்சனை யின் பெரும் பகுதி - முடிவை அடைந்துள்ளது. அதவது, வாக்னர் ஐ ருசியா மரபு வலி படைக்குள் உள்வாங்குதல், இதுவே இந்த பிரச்சனையின் தொடக்கமும்.

வாக்னர் க்கு அதிகாரம் மாறுவதை எந்த அரசும் விரும்பாது.

ஏனெனில், வாக்னர் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கப்பட்டு அமைக்கப்பட்ட இராணுவ குழு இல்லை.

இது அரசுகளுக்கு இடையே உள்ள எழுதப்படாத ஒப்பந்தம் - எவ்வளவு பகை இருந்தாலும். அதாவது, உள்ளே இருந்து வரும் எந்த அச்சுறுத்தலையும் எந்த அரசும் மற்ற அரசுக்கு வருவதை விரும்பாது.

வாக்னர் க்கு அரசியலில் செல்வாக்கு இல்லை. வாக்னர் இந்த பெரும்பகுதி ருஷ்யா இராணுவத்துக்கு உள்ளவங்க விரும்பியமை, அவள் கடலை அமைப்பு மாறுவதை எதிர்க்கவில்லை.  

உண்மையில், வாக்னர் ஐ கையாண்ட  விதம் ருசியாவை இன்னமும் பலப்படுத்தி உள்ளது. 

அடிபட்டு இருந்தால், ருசியா பலவீனம் அடைந்து இருக்கும்.

  • Replies 231
  • Views 15.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

இவை பற்றி ஊகமாகவே இப்போதைக்கு சொல்ல முடியும்.

பிரிகோஜினுக்கு கிரம்ளின் உள்ளே இருந்து போதிய சமிக்ஞை காட்டப்பட்டிருக்கிறது. 

மஸ்கோ உள்ளே போவது நோக்கம் அல்ல. மஸ்கோ வாசல் வரை வா- நாம் புட்டினை அழுத்தி - மாற்றத்தை ஏற்படுத்துவோம் என புட்டினுக்கு நெருக்கமான, ஷிகோ, கரிஸ்மோவ் அல்லாத வேறு ஒருவர் அல்லது சிலர் வாக்கு கொடுத்திருக்க கூடும்.

ஏதோ காரணத்தால் இது பிசகிவிட (புட்டின் சென் பீட்டர்ஸ் பேர்க் போய் பங்கரில் பதுங்கி கொண்டார்) - பிரிகோசின் கலகத்தை கைவிட நேர்ந்துள்ளது.

இப்போதைக்கு இதுவே நடைமுறை சச்த்தியமான விளக்கமாக நான் கருதுவது.

வரும் நாட்களில் பிட்டின் களை எடுப்பார். அதுவும் நல்லதுதான் - ரஸ்யாவுக்குள் மேலும், மேலும் பலமான பிட்டின் எதிரிகளை அது உருவாக்கும்.

பிகு

பொருளாதார தடை வேலை செய்யவில்லை என நீங்கள் அடிக்கடி எழுதுவீர்கள். ரஸ்ய பணக்கார வர்க்கத்தின் வயிற்றில் அடித்து அவர்களை பிட்டினை அகற்றியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளுவதே இந்த தடைகளின் பிரதான நோக்கம். காலம் எடுத்தாலும் - இது வேலை செய்யும்.

வணக்கம் @பெருமாள். கோப்பி மேசின் ஒண்டு வாங்கி வைத்துள்ளேன். கொஸ்டா, ஸ்டார் பக்ஸை விட திறம் கோப்பி வெறும் 30 பென்ஸ்தான்.

அதுசரி திண்ணையை பூட்டி போட்டினம் போல? உங்கள் கைங்காரியமோ🤣.

நன்றி @island

22 hours ago, goshan_che said:

இது எனது இன்றைய நேற்றைய எதிர்பார்ப்பல்ல. புட்டினின் அழிவு அல்லது அகற்றம், உள்ளே இருந்துதான் நடக்கும் என நான் ஒரு வருடம் முதலே யாழில் எழுதியுள்ளேன். ஒரு அணு ஆயுத நாட்டின் தலைமை அப்படி மாறுவதுதான் சாத்தியம்.

அதே போல் கிர்கின், பிரிகோஜின், மெட்வெடேவ், பாட்டிருசேவ், போன்றவர்களின் பெயரை கூறி இவர்கள் பிட்டினுக்கு ஆப்படிப்பார்கள் எனவும் கூறினேன், அப்போ பலர் கோசான் மேற்கின் கதையாடலை காவுகிறார் என உதாசீனம் செய்தார்கள்.

ஆனால் நேற்று ? பிரிகோஜின் கலகம் செய்ய, கிர்கின் ஆதரித்தார், மெட்வெடெவ் குடும்பத்தோடு மாஸ்கோவை விட்டு வெளியேறினார், பாட்டிருசேவ் முதல் நாளே கசகஸ்தான் சென்று தங்கினார்.

இவை இவர்கள் எல்லாருமே புட்டினை தருணத்தில் கைவிடுவார்கள் என்பதை உணர்த்தியது.

இவர்கள் மட்டும் அல்ல, மாஸ்கோவை நோக்கிய நகர்வில் மூன்று ஒப்லாஸ்ட் எனப்படும் மாவட்டங்களை வாக்னர் கைப்பற்றியது. அதில் ஒன்றில் இருந்த பிராந்திய இராணுவ தலைமையகத்தையும். 

இவை எதை காட்டுகிறது? புட்டினுக்காக போராட எந்த தரைப்படையும் தயாரில்ல்லை. விமானப்படை மட்டுமே போரிட்டது.

பேப்பரில் எத்தனை மில்லியன் சிப்பாய்களும் இருக்கலாம் அதில் பலர் உக்ரேனில், ரஸ்யாவில் இருக்கும் எவரும் புட்டினுக்காக ஒரு பிஸ்டோலை கூட தூக்கவில்லை. ரோஸ்காடியா எனப்படும் ஆயுத போலிஸ் மட்டுமே களத்துக்கு வந்தது.

போராட போவதாக சொல்லிய காடிரோவின் செச்சின் அணி, கடைசிவரை போராடும் இடத்துக்கு போகவே இல்லை. போவது போல் போக்கு காட்டியதோடு சரி.

முழுப்பலமும் உக்ரேனில் என்பதால் மொஸ்கோவில் குப்பை லாரிகளை வீதிக்கு குறுக்கே நிறுத்தி வாக்னரை எதிர் கொள்ளும் அவல நிலையில் இருந்தார்கள்.

என்னை பொறுத்தவரை புட்டினை விட மோசமான கிருமி பிரிகோஜின். ஆகவே புட்டினை அவர் பிரிதியீடு செய்வதை நான் விரும்பவில்லை. 

ஆனால் பின் வாங்கினாலும் - இந்த சதி புரட்சி பிட்டினின் இயலாமை, கையாலாகதனத்தை முழு ரஸ்யாவுக்கும் காட்டி விட்டது.

புட்டின் பிம்பத்தின் பாதியை செலன்ஸ்கியும், மீதியை பிரிகோசினும் உடைத்துள்ளார்கள்.

ரஸ்யாவில் ஜனநாயக மாற்றத்தை விரும்பும், ஐரோப்பாவில் வீம்பு யுத்தத்தை தவிர்க்க விரும்பும், உக்ரேனிய தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை பேணப்பட வேண்டும் என நினைக்கும் என்போன்றோருக்கு இது நல்ல செய்திதான்.

Death by a thousand cuts, ஆயிரம் சின்ன வெட்டுக்களால் நேரும் சாவு. புட்டினின் அரசியல் இப்படித்தான் முடியும். 

உங்கள் கருத்திற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

மேற்குலக வித்துவான்கள்.. உக்ரைனின் தோல்வியை இயலாமையை மறைக்க இதை தூக்கிப் பிடிக்கினம்.

வாக்னர் குழு ரஷ்சிய படைகளுடன் சேர்ந்து போரிடும் பல குழுக்களில் ஒன்று. அதில் ரஷ்சியாவுக்கு எதிராக மேற்குலகின் தூண்டலில் ரஷ்சியாவுக்கு உள்ளேயே பிரிவினை வேண்டிப் போராடிய செச்சின் அமைப்புக்களும் சாரும். 

வாக்னர் குழு கூடிய தன்னிச்சையாக செயற்பட அனுமதிக்கப்பட்டது. அது கூலிக்கு அமர்த்தப்பட்ட குழு ஆகினும்.. ரஷ்சிய குற்றவாளிகளை தெரிந்தெடுத்து பயிற்சி கொடுத்து உருவாக்கப்பட்ட அமைப்பு. ரஷ்சியாவே ஆயுதங்களும் வாகனங்களும் வழங்கியுள்ளது. 

பார்முட் நகரை வெற்றி கொள்ள இந்தப் படை அதிகம் பயன்படுத்தப்பட்டாலும்.. ரஷ்சிய இராணுவ அதிகாரிகள்... ரஷ்சிய இராணுவத்தின் தங்களின் புகழை அதிகரிக்கும் வகைக்கு இறுதி நேரத்தில் செயற்பட்டதால்.. வாக்னர் குழு இழப்புக்கள் மத்தியில் தான் பார்முட் நகரைக் கைப்பற்றி.. நீண்ட யுத்தத்தில் ரஷ்சியாவின் வெற்றியை உறுதி செய்ய உதவினர்.

ஆனாலும்.. ரஷ்சிய உளவு பிரிவுகள்.. இந்த கூலிக்குழுக்களால் ஆபத்து வரும் என்பதற்கு அண்மையில்.. ரஷ்சிய எல்லைக்குள் திட்டமிட்டு ஊடுருவித் தாக்குதல் நடத்திய உக்ரைனின் கூலிப்படைகளுக்கும்.. இவர்களுக்கும் தொடர்புகள் இருக்க சந்தேகிக்கப்பட்ட நிலையில்..

இந்த இராணுவக் குழுக்களை நேரடியாக ரஷ்சிய பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. ஏனைய குழுக்கள்.. அதற்கு இசைய... வாக்னர் குழு அதற்கு இணங்க மறுத்த நிலையில் தான்..

வாக்னர் குழு தன்னிச்சையாக.. ரஷ்சிய இராணுவ தளபதிகளுக்கு எதிராகக் குற்றம் சுமத்திக் கொண்டு அவர்களை பதவி கவிழ்க்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு மாஸ்கோவை நோக்கி போக முற்பட்டனர்.

அவர்கள் ஒன்றும் போரிட்டோ.. உக்ரைனின்... அமெரிக்காவின் ஆயுதங்களோடோ போகவில்லை. ரஷ்சிய படைகள் அளித்த ஆயுதங்கள் கனரக வாகனங்களோடு போயினர். ஆனாலும்.. எங்கும் சண்டையிடும் நோக்கில்.. ஆயுதங்களைப் பாவிக்கவில்லை. அதேபோல்.. ரஷ்சிய படைகளும் சரி.. பொலிஸும் சரி.. மக்களும் சரி.. இவர்களை எதிரிகளாகவும் பார்க்கவில்லை. அவர்கள் நாட்டுக்காகச் செய்த தியாகத்தி தான் மெச்சினர்.

வாக்னர் குழு தலைவன் என்ற தனிமனிதனின் செல்வாகினை நிலை நிறுத்த மேற்கொள்ளப்பட்ட ஒரு நகர்வாகத்தான் இதனைப் பார்க்க முடியுமே தவிர ரஷ்சிய அரசுக்கு எதிரான நடவடிக்கையாக இது வாக்னர் குழு தலைவர் உட்பட யாராலும் சொல்லப்படவில்லை.

இதில் புட்டினின் சாதுரியம்.. மக்களுக்கோ.. ரஷ்சிய படைகளுக்கோ.. வாக்னர் குழுவினருக்கோ.. இதர ரஷ்சிய ஆதரவுக் குழுக்களுக்கோ.. எந்த இழப்பும் இல்லாமல்.. பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது தான்.

இதன் மூலம்.. மேற்குலகம் எதிர்பார்த்த ரஷ்சிய படைகளுக்கு எதிராக வாக்னர் குழு சண்டையிட்டால்.. மாஸ்கோவை பிடிக்கப் போனால்.. ரஷ்சிய படைகளை உக்ரைனில் இருந்து பின்வாங்க வேண்டி வரும்.. அல்லது ரஷ்சிய படைகளின் பல.. கவனம் சிதையும்.. இந்த நேரத்தில்.. தாங்கள் உக்ரைனின் சொலக்கியின் படைகளிடம் எதிர்பார்க்கும் வெற்றியை சுவைக்கலாம்.. மேற்குலக மக்களை ஏய்க்கலாம் என்று கனவு கண்டனர்.

ஆனால்.. புட்டின் சாமர்த்தியமாக காய் நகர்த்தி மோதல்கள் இன்றி எல்லாத்தையும் 24 மணி நேரத்துக்குள் முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார்.

வாக்னர் குழு அல்லாமல்.. வேறு உக்ரைன் சார்ப்புக் குழுக்கள் நுழைந்திருந்தால்.. அண்மையில் அப்படி நுழைந்து அழிந்து போன உக்ரைனின் ஊடுருவல் அணிக்கு நடந்த கதிதான் நிகழ்ந்திருக்கும். மாஸ்கோ செல்லும் வழியில் செல்லக் கூட காலம் இருந்திருக்காது. ஆனால்.. வாக்னர் குழுவை ரஷ்சியா எதிரியாகப் பார்க்கவில்லை. புட்டினும் பார்க்க விரும்பவில்லை. அதற்கு காரணம்.. வாக்னர் குழு ரஷ்சிய மக்களால் கட்டி அமைப்பட்ட ஒரு தனியார் இராணுவக் குழு. வாக்னர் தலைவர் புட்டினை ஒருபோதும் குற்றம் சாட்டியதில்லை. இராணுவ தலைமைகள் சிலவற்றோடு தான் அவருக்கு முரண்பாடிருந்தது. அவர்கள் மாஸ்கோவை தளமாகக் கொண்டியங்கிய படியால் தான்.. வாக்னர் மாஸ்கோ நோக்கி தன் படையோடு போனார்.

அப்படி போயிருந்தாலும்.. இராணுவத் தலைமைகளை அகற்ற கோரி இருப்பாரே தவிர.. ஒருபோதும்.. புட்டினையோ.. புட்டின் ஆட்சியையோ கவிழ்க்க நினைத்திருக்கமாட்டார். மேற்குலகம் ஊதிப் பெருப்பிப்பது போல ஒன்றும் நடந்திருக்காது. நடக்கவும் விட்டிருக்க மாட்டார்கள்.

இது ஒரு சதிப்புரட்சியாகவே உணரமுடியவில்லை அதற்கான காரணமாகவே சதிப்புரட்சி என்பது எவ்வாறு இருக்கும் என்பதற்கு உதாரணமாக வல்கரே என்ற கிட்லருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட நடவடிக்கையினை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட வல்கரே என்ற திரைப்பட ரெய்லரை இணைத்திருந்தேன் ( அது நீக்கப்பட்டுவிட்டது) ஆனால் ஊடகங்கள் இதனை ஒரு சதிப்புரட்சியாகவே ஆர்பரித்தன.

*****

அத்துடன் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தமக்கு சதிப்புரட்சிக்கான துப்பு கிடைத்தது என இது ஒரு சதிப்புரட்சியாகவே  உறுதிப்படுத்திவிட்டார்கள்.

Edited by நியானி
அநாவசியமான காணொளி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இணையவன் said:

இது தவிர பிரெஞ்சு தொலைக்காட்சியில் 2009 ற்குப் பின்னர் இலங்கை சென்ற நிருபர்கள் தாம் நேரில் கண்டவற்றையும் ஒளிப்படக் கருவியை மறைத்தும் எடுத்து அங்கு தமிழருக்கு நடக்கும் கொடுமைகளைக் காட்டியுள்ளன. குறிப்பாக இராணுவம் ஆக்கிரமித்த பொரதுமக்கள் இருப்பிடங்கள் தொடர்பானவை.

ரஷ்யா ,பெலரூஸ் ,சீனா ,வட கொரியா , ஈரான் ஊடக நிருபர்கள் எல்லாம் யாழ்பாணத்தில் நின்று  தமிழர்கள் துன்பங்களை சேகரித்து தங்களது நாடுகளுக்கு அனுப்பி அந்த நாடுகளும் அதை ஒலிபரப்பி கொண்டு தான் இருக்கின்றனர். நாங்கள் தான் மொழி விளங்காத காரணமாக அவற்றை கேட்பது இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ரஷ்யா ,பெலரூஸ் ,சீனா ,வட கொரியா , ஈரான் ஊடக நிருபர்கள் எல்லாம் யாழ்பாணத்தில் நின்று  தமிழர்கள் துன்பங்களை சேகரித்து தங்களது நாடுகளுக்கு அனுப்பி அந்த நாடுகளும் அதை ஒலிபரப்பி கொண்டு தான் இருக்கின்றனர். நாங்கள் தான் மொழி விளங்காத காரணமாக அவற்றை கேட்பது இல்லை.

ஆ.....அப்படியா? இது எனக்கு இவ்வளவு நாளும் தெரியாமல் போச்சே!
நன்றி உங்கள் தகவலுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2023 at 10:13, குமாரசாமி said:

அரசியல் கொலை கொள்ளை எல்லா நாடுகளிலும் இருக்கின்றது. அதை ஏன் ரஷ்யாவில் மட்டும் நடக்கின்றது என்ற பிரமையை ஊடகங்களும் நீங்களும் உருவாக்குகின்றீர்கள்??

பைடனின் உக்ரேன் ஊழல்பற்றி யாருமே வாய் திறப்பதில்லை.
ஒரு பக்க நியாயத்திற்கு நான் என்றுமே எங்குமே எதிரானவன்.

டிரம்பின் மற்றும் MAGA கார்ரின் கதையை நம்பினால், Fox News பாரத்தால் இப்படித்தான். உங்கள் மேல் ஒரு மரியாதை உள்ளது, ஆனால் மாஜரி கிரீன், லோரன் போபர்ட் மாதிரி கதைப்பதை பார்த்தால்….. 

9 hours ago, குமாரசாமி said:

வாக்னர் வெளிக்கிட்டு போய் சேர்ந்த இடம் வேற எண்ட மாதிரி கதை போகுது

Bild

ஏன் சொல்வதில்லை? 😎
தமிழர்கள் பயங்கரவாதிகள் என்பதால் தானே? :cool:

எனக்கும் இந்த சந்தேகம் உள்ளது, காலம் பதில் சொல்லும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இது ஒரு சதிப்புரட்சியாகவே உணரமுடியவில்லை அதற்கான காரணமாகவே சதிப்புரட்சி என்பது எவ்வாறு இருக்கும் என்பதற்கு உதாரணமாக வல்கரே என்ற கிட்லருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட நடவடிக்கையினை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட வல்கரே என்ற திரைப்பட ரெய்லரை இணைத்திருந்தேன் ( அது நீக்கப்பட்டுவிட்டது) ஆனால் ஊடகங்கள் இதனை ஒரு சதிப்புரட்சியாகவே ஆர்பரித்தன.

*****

அத்துடன் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தமக்கு சதிப்புரட்சிக்கான துப்பு கிடைத்தது என இது ஒரு சதிப்புரட்சியாகவே  உறுதிப்படுத்திவிட்டார்கள்.

சுயதணிக்கை செய்யமுயன்றேன் முடியவில்லை, நிர்வாகத்தின் முடிவிற்கு எதிராக செயற்படமாட்டேன். உண்மையாக நகைசுவைக்காக அந்த காணொளியினை பதிந்து நகைசுவைக்காக என பதிந்த காணொளி என குறிப்பிட்டேன், ஆனால் அது ஒரு சிரமத்தினை கொடுக்கும் விடயமாகிவிட்டதற்கு மன்னிப்பு கோருகிறேன்.

எனது பதிவுகள் யார் மந்தையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.

எதிர்காலத்தில் முடிந்தளவு பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளமுயற்சிப்பேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, இணையவன் said:

இதற்குப் பதில் எழுதினாலும் நீங்கள் வாசிக்கப் போவதில்லை. இன்னொரு திரியில் இதே கேள்வியைக் கேட்பீர்கள். இருந்தாலும் - 

செய்தி எடுப்பதற்கு நிருபர் வேண்டும். மேற்கு ஊடக நிருபர்கள் யாழ்ப்பாணத்தில் நின்று செய்தி சேகரிப்பதற்கு யார் பணம் கொடுப்பது ? இலங்கைத் தமிழரின் செய்தியை அக்கறையோடு வாசிக்கும் நாலைந்து பேருக்காகப் பணம் செலவிடுவார்களா ?

2009 ற்கு முன்னர் பிரான்சில் இருந்த புலிகளின் அமைப்பினர் அடிக்கடி போர் நிலவரத்தை பிரெஞ்சு ஊடகங்களுக்கு அனுப்புவார்கள். அவர்கள் அதை அப்படியே இலங்கைத் தூதரகத்துக்கு அனுப்பி ஒப்புதல் கேட்பார்கள், செய்தி வெளியே வராது. ஏனென்றால் புலிகள் அங்கீகரிக்கப் படாத அமைப்பு. அதையும் மீறி சில செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

இது தவிர பிரெஞ்சு தொலைக்காட்சியில் 2009 ற்குப் பின்னர் இலங்கை சென்ற நிருபர்கள் தாம் நேரில் கண்டவற்றையும் ஒளிப்படக் கருவியை மறைத்தும் எடுத்து அங்கு தமிழருக்கு நடக்கும் கொடுமைகளைக் காட்டியுள்ளன. குறிப்பாக இராணுவம் ஆக்கிரமித்த பொரதுமக்கள் இருப்பிடங்கள் தொடர்பானவை.

இதைவிட முக்கியமானது, இலங்கையிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட தமிழ் அரசியல் கட்சி வெளிநாட்டு ஊடகங்களோடு தொடர்பு வைத்து அடிக்கடி அங்கு நடைபெறும் சீர்கேடுகளை அனுப்ப வேண்டும். ஆனால் இப்படி நடப்பதாகத் தெரியவில்லை.

(பிற்குறிப்பு : ரஸ்யா ஆபிரிக்காவிலிருந்து தங்கம் கடடத்துவது பற்றித் தேடிப்பாருங்கள். குறிப்பாக அங்கு வக்னர் என்ன செய்தவர்கள் என்பதை. இதைப் பற்றி விவாதிப்பதற்கான திரி இது இல்லை)

இன்று நீங்கள்  எனக்கு பதில் எழுதியதை வாசித்து புதிய தகவல்களை அறிந்து கொண்டேன்.
நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

இது ஒரு சதிப்புரட்சியாகவே உணரமுடியவில்லை அதற்கான காரணமாகவே சதிப்புரட்சி என்பது எவ்வாறு இருக்கும் என்பதற்கு உதாரணமாக வல்கரே என்ற கிட்லருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட நடவடிக்கையினை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட வல்கரே என்ற திரைப்பட ரெய்லரை இணைத்திருந்தேன் ( அது நீக்கப்பட்டுவிட்டது) ஆனால் ஊடகங்கள் இதனை ஒரு சதிப்புரட்சியாகவே ஆர்பரித்தன.

*****

அத்துடன் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தமக்கு சதிப்புரட்சிக்கான துப்பு கிடைத்தது என இது ஒரு சதிப்புரட்சியாகவே  உறுதிப்படுத்திவிட்டார்கள்.

வசி,

சினிமா படங்களில் வரலாற்றை தேடாமல் (பிறகு இணைப்பு நீக்கப்பட்டது என தேம்பாமல்) - குறைந்த பட்சம் விக்கிபீடியாவிலாவது இணைப்பை கொடுங்கள்.

நீங்கள் சொல்லும் நாசிகளுக்கு எதிரான சதிக்கு, பெயர் 20th of July Plot.

ஆனால் இது பிரிகோசினின் கலகம் அளவுக்கு முன்னேறவில்லை. 

இந்த சதி முயர்சியை - சதி புரட்சியின் வரைவிலக்கணம் என கூறும் நீங்கள்,

பிரிகோசின் ரஸ்ய அணு ஆயுத முகாம், ஒரு நகர் என பலதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து - மாஸ்கோவின் எல்லைக்கு வந்து, புட்டினை லூக்காவிடம் தூது போகும் படி செய்த நிகழ்வை சதி புரட்சியே இல்லை என்கிறீர்கள்🤣.

இப்பெல்லாம் முன்னர் போல் நடுநிலையாக சிந்திக்கிறேன், கேள்விகள் கேட்டு தெளிவடைகிறேன் என்ற பாவனையை கூட நீங்கள் கைவிட்டு விட்டிடீர்கள் என நினைக்கிறேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகோசினுக்கும் அன்ரனி பிளிங்கனுக்கும் இடையில் ஒரு டீல் போகிறதாம். ஊர்ஜிதப்படுத்தாத செய்தி. யாராவது கேள்விப்பட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nunavilan said:

பிரிகோசினுக்கும் அன்ரனி பிளிங்கனுக்கும் இடையில் ஒரு டீல் போகிறதாம். ஊர்ஜிதப்படுத்தாத செய்தி. யாராவது கேள்விப்பட்டீர்களா?

$ 6.5 பில்லியனை கொடுத்து விட்டு அமெரிக்கா நாக்கு வழிக்கிறது.

புட்டினும், பிரிகோஜினும் சேர்ந்து பிளிங்கனுக்கு நாமம் போட்டு விட்டார்கள்.

இப்படியும் கேள்விப்பட்டேன்🤣.

காதல் தோல்விக்கு opium

போரில் தோல்வி நெருங்கினால் copium 🤣

  • கருத்துக்கள உறவுகள்

———

1. இது சதி/கலகம் அல்ல

2. இதன் பின் புட்டின் மேலும் வலுவடைந்துள்ளார்.

இவ்வாறு இங்கே கருத்து எழுதியோருக்கு👇 ராஸ்ய தேசிய தொலைக்காட்சியில், பிரதான பிரச்சாரகர் Solovyov யின் நிகழ்சியில் சொல்லப்பட்டது.

1. உலகம் பார்த்து கொண்டிருக்க, ரஸ்யாவின் அதிகாரத்துக்கும், புட்டினின் அதிகாரத்துக்கும் விழுந்த பெரிய அடி இது

2. இது நன்கு திட்டமிட்ட ஒரு நடவடிக்கை

அதே போல - வாக்னர் பெலரூசில் இருந்து கியவை தாக்கும் என நினைப்போருக்கு….

பிரிகோஜின் மீதான தேசதுரோக வழக்கு வாபஸ் வாங்க படவில்லை என ரஸ்யாவின் முண்ணனி செய்தி அமைப்புகள் பல எழுதியுள்ளன. 

  • கருத்துக்கள உறவுகள்

அதே நிகழ்சியில் - இன்னொரு டூமா பிரதிநிதி

”பிரிகோசினும், உட்கினும் தலையில் சன்னங்களை வாங்கி கொள்வதே அவர்களுக்கான தீர்வாக அமையும்”

யார் இந்த உட்கின்? இவர் பிரிகோசினுடன் சேர்ந்து வாக்னர் குழுவை உருவாக்கிய co-founder.

பிரிகோசின் ரோஸ்டொவ் நகர், முகாமை கைப்பற்ற - பிறிதொரு படை இவர் தலைமையில்தான் மொஸ்கோ விரைந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய செய்தி

சொய்கோ இன்று வெளியில் வந்துள்ளார்.

புட்டின், மேட்வெடேவ், கரிஸ்மோவ், பிரிகோசின் - இன்னும் சாமத்திய  சடங்கு முடியவில்லை🤣.

  • கருத்துக்கள உறவுகள்

வாக்னர் எழுச்சி- புட்டினின் அதிகாரத்தில் ஏற்பட்ட விரிசல் - அவுஸ்திரேலியா

Published By: RAJEEBAN

26 JUN, 2023 | 12:43 PM
image
 
வாக்னர் எழுச்சி புட்டினின் அதிகாரத்தில் ஏற்பட்ட ஒரு விரிசல் என அவுஸ்திரேலிய  பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

வாக்னர் கூலிப்படையினரின் எழுச்சி புட்டின் அரசாங்கத்தை பலவீனப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

புட்டின் தற்போதும் ரஸ்யாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றார் ஆனால் இராணுவத்தின் மனஉறுதி சிதைவடைகின்றது என  அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர்தெரிவித்துள்ளார்.

ரஸ்யா இந்த கலகத்திற்கு பின்னர் பலவீனமாக உள்ளதா என்ற கேள்விக்கு ஆம் என்பதே எனது பதில் என ரிச்சட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவில் என்ன நடக்கின்றது என்பதை முழுமையாக தெரிந்துகொள்வது  கடினம் என குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் வாரஇறுதியில் குறிப்பிடத்தக்க சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

சில நாட்களிற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பு எவ்வளவு ஒழுக்ககேடானது என்பதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் ரிச்சட்மார்லஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் நீண்டதூரம் செல்லவேண்டியுள்ளது புட்டின் இன்னமும் அதிகாரத்தில் உள்ளார், இந்த மோதல் முடிவடைவதற்கு  பல காலம் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ள மார்லஸ் புட்டினின் கட்டிடத்தில் ஒரு விரிசல் விழுந்துள்ளது. ஆனால் அது எவ்வளவு பாரதூரமானது, முக்கியமானது என்பதை காலம்தான் சொல்லவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/158614

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தலைமைக்கு, சத்தியப்பிரமாணம் செய்த முக்கிய பீடம், எப்படி அதை மீறியது. அந்த மீறுதல் எப்படி ஒரு குழுமத்துக்கான குணாதியங்களை காட்டுகிறது என்ற கருத்தை புரியாமல், அல்லது புரிந்து கொண்டு, விதண்டா வாதத்துக்காக ருசியா தலைமையை, தலைவராவது ஒப்பிட்டது  என்ற புனைகதை.

விடயம் விளங்காவிட்டால் விலத்தி இருந்து இருக்க வேண்டும்.

தலைமை ஒன்றுக்கு சத்தியப்பிரமாணம் செய்தால், முடியாவிட்டால், விலத்துவதே சரி, தலைமை தவறு செய்வதாக உணர்ந்தாலும். சுட்டிக்காட்டலாம்.

பிரிகோஸின் செய்தது - மன்னிப்போ , வேறு வழிகளோ கொடுக்கப்பட்டு இருந்தாலும் நேட்டோ இடம் போய்  இருக்கலாம் - அதை செய்யவில்லை.

ருசிய அரசு, நாடு நலன், அவர் நலன் என்பதை அறிந்தவர்.

அனால், கருணாவுக்கு - விலத்துவதற்கு  கொடுக்கப்படும் - கருணா சென்றது எதிரியின் பக்கம்.

அதை தவிர, கருணாவின் முடிவு - ஓர் போக்கை தமிழரில் உருவாக்கி விட்டது - துரோகம் செய்து விட்டு மீண்டும் அரசியலுக்குள் வரலாம (கருணாவுக்கு சிறு ஆதரவு கூட இல்லை?) ,  ஏனெனில் கருணா வகித்த பொறுப்பு அவ்வளவு கனதியானது. 

 எனவே நாட்டுக்கு தமிழர் இன்னமும் தகுதி மனம், மதியளவில் அடையவில்லை.  

அரசியலில் ஓரங்கட்டுதல் என்பபாதை தமிழர் கருணாவுக்கு செய்யமுடியாமல் இருக்கும் போது, எனவே, நாயே உனக்கும் ஒரு நாடா என்ற புலிகளின் பாடல் வரி அர்த்திலும் கேவலமான நிலை தமிழர்களுக்கு.  யதார்த்தம்.

மறுவளமாக, பிளேயர், புஷ்கு எதிராக இப்படை நடந்து இருந்தால், நடத்தியவரை நல்லவர்  என்று சொல்லி இருப்பார்களா இதை கொண்டாடுபவர்கள்?

உங்களின் பார்வையில் புட்டின் பிடிக்கவில்லை என்பதற்காக, இதை வரவேற்றபது, உங்களின் அரசுகளுக்கு, நீங்கள் சகிக்காத வேளையில், எதிராக இப்படி நடந்தால் வரவேற்றபதுக்கு சமம்.  

தேசிய ஒழுங்கு மீறுதல், தலைமையை எதிர்த்தல், அதுவும் இராணுவ அடிப்படையில் இக்கட்டான நிலைமைகளில் ,  எப்படி சம்பந்தப்பட்ட தரப்புகளால் கையாளப்படுகிறது என்பது, அநேகமாக, அந்தந்த தேசிய குழுமத்தின் வரலாறை தீர்மானித்து இருக்கிறது. 

ருஷ்யார்களுக்கு (நாட்டுக்கு, அரசுக்கு) தகுதி இருக்கிறது - பிரிகோஸின் க்கு ஒன்றுமே இன்னமும் நிச்சயம் இல்லை மிகவும் அழுத்தமான , ஆபத்து வேலை - அனால் அவர் நேட்டோ இடம் செல்லவில்லை - முடிவு கொலை ஆயினும்.

  • கருத்துக்கள உறவுகள்

வக்னர் கூலிப் படையினரின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி வெற்றிபெறவில்லை என்பதில்  யாழ் கள புலம்பெயர்ஸ் பலர் மிகுந்த ஏமாற்றமடைந்திருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. 

😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, Kadancha said:

உங்களின் பார்வையில் புட்டின் பிடிக்கவில்லை என்பதற்காக, இதை வரவேற்றபது, உங்களின் அரசுகளுக்கு, நீங்கள் சகிக்காத வேளையில், எதிராக இப்படி நடந்தால் வரவேற்றபதுக்கு சமம்.  

சரியான பார்வையும் கருத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டு விட்டது.

புட்டின், பிரிகோசின் இருவருமே கிருமிகள்.

ஒரு கிருமி, இன்னொரு கிருமியின் மீது பாய்ந்து பிராண்டி அதில் இரெண்டு கிருமியுமே, முன்னரை விட வலுவிழந்து போனால் சந்தோசமே.

ஆனால் புட்டின்/தலைவர், கருணா/பிரிகோசின் ஒப்பீடு அபத்தமே.

தலைவரையும், கருணாவையும் இணைத்தது இனவிடுதலை என்ற உயரிய நோக்கம்.

கருணா ஒரு கூலிக்கு மாரடிக்கும் கூலிபடையின் தலைவனாக கிழக்கு அணிகளை வழி நடத்தவில்லை.

பிரிகோசின் அப்படி அல்ல. வாக்னர் பி எம் சி என்பது ஒரு காசு கொடுத்தால் போராடும் கைக்கூலி கும்பல்.

அவர்களுக்கு ஆபிரிக்காவில் கொந்திராக்ட் கொடுத்தால் அங்கே போவார்கள், சிரியாவில் கொடுத்தால் அங்கே, உக்ரேனில் கொடுத்தால் அங்கே.

வாக்னர் ஒரு கூலி கும்பல்.

அதன் தலைவர் பிரிகோசின்.

வாக்னருக்கும், ரஸ்யா/புட்டினுக்கு இடையே இருந்தது - சண்டை பிடிக்கும் வர்த்தக ஒப்பந்தம்.

ஜெயந்தன், அன்பரசி படையணிகள் ஒரு நாடற்ற, ஒழுக்கமான, இன உணர்வால் உந்தபட்ட, தலைமைக்கும், நாட்டுக்கும் சத்தியபிரமாணம் செய்த மரபுவழி இராணுவத்தின் படைப்பிரிவுகள்.

அதன் கட்டளை தளபதியாக தலைவர் நியமித்தவர் கருணா.

இந்த அடிப்படை கூட விளங்காமல் ஒப்பீடு செய்துவிட்டு…இதில் புலிகளின் பாடல் வேறு உவமை🤦‍♂️.

பாடல் வரிகளை முழுமையாக தருகிறேன்,

இடையிடையே யாரும் சீந்தாமல் தானாக புகுந்து றோ-மாதாவுக்கு தேர் இழுப்பவர்கள் உட்பட - தொப்பி பொருந்துபவர்கள் போட்டு கொள்ளலாம்🤣.

பாடல்

நாயே உனக்கும் ஒரு நாடா?

எச்சில் நாடும் உனக்கு வரலாறா?

சோற்றில் விழைந்த சதை கூடு,

உன்னை சும்மா விடுவதே கேடு.

பிகு

கேட்பவர் அப்போ என்ன செய்தாரோ யாமறியோம்.

ஆனால் பிலேர், புஷ் அநியாய படை எடுப்பை எதிர்த்த போராட்டங்களில் நான் பங்கெடுத்துத்துளேன். முன்னர் இதை பற்றி எழுதியும் உள்ளேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

ஒரு தலைமைக்கு, சத்தியப்பிரமாணம் செய்த முக்கிய பீடம், எப்படி அதை மீறியது. அந்த மீறுதல் எப்படி ஒரு குழுமத்துக்கான குணாதியங்களை காட்டுகிறது என்ற கருத்தை புரியாமல், அல்லது புரிந்து கொண்டு, விதண்டா வாதத்துக்காக ருசியா தலைமையை, தலைவராவது ஒப்பிட்டது  என்ற புனைகதை.

விடயம் விளங்காவிட்டால் விலத்தி இருந்து இருக்க வேண்டும்.

தலைமை ஒன்றுக்கு சத்தியப்பிரமாணம் செய்தால், முடியாவிட்டால், விலத்துவதே சரி, தலைமை தவறு செய்வதாக உணர்ந்தாலும். சுட்டிக்காட்டலாம்.

பிரிகோஸின் செய்தது - மன்னிப்போ , வேறு வழிகளோ கொடுக்கப்பட்டு இருந்தாலும் நேட்டோ இடம் போய்  இருக்கலாம் - அதை செய்யவில்லை.

ருசிய அரசு, நாடு நலன், அவர் நலன் என்பதை அறிந்தவர்.

அனால், கருணாவுக்கு - விலத்துவதற்கு  கொடுக்கப்படும் - கருணா சென்றது எதிரியின் பக்கம்.

அதை தவிர, கருணாவின் முடிவு - ஓர் போக்கை தமிழரில் உருவாக்கி விட்டது - துரோகம் செய்து விட்டு மீண்டும் அரசியலுக்குள் வரலாம (கருணாவுக்கு சிறு ஆதரவு கூட இல்லை?) ,  ஏனெனில் கருணா வகித்த பொறுப்பு அவ்வளவு கனதியானது. 

 எனவே நாட்டுக்கு தமிழர் இன்னமும் தகுதி மனம், மதியளவில் அடையவில்லை.  

அரசியலில் ஓரங்கட்டுதல் என்பபாதை தமிழர் கருணாவுக்கு செய்யமுடியாமல் இருக்கும் போது, எனவே, நாயே உனக்கும் ஒரு நாடா என்ற புலிகளின் பாடல் வரி அர்த்திலும் கேவலமான நிலை தமிழர்களுக்கு.  யதார்த்தம்.

மறுவளமாக, பிளேயர், புஷ்கு எதிராக இப்படை நடந்து இருந்தால், நடத்தியவரை நல்லவர்  என்று சொல்லி இருப்பார்களா இதை கொண்டாடுபவர்கள்?

உங்களின் பார்வையில் புட்டின் பிடிக்கவில்லை என்பதற்காக, இதை வரவேற்றபது, உங்களின் அரசுகளுக்கு, நீங்கள் சகிக்காத வேளையில், எதிராக இப்படி நடந்தால் வரவேற்றபதுக்கு சமம்.  

தேசிய ஒழுங்கு மீறுதல், தலைமையை எதிர்த்தல், அதுவும் இராணுவ அடிப்படையில் இக்கட்டான நிலைமைகளில் ,  எப்படி சம்பந்தப்பட்ட தரப்புகளால் கையாளப்படுகிறது என்பது, அநேகமாக, அந்தந்த தேசிய குழுமத்தின் வரலாறை தீர்மானித்து இருக்கிறது. 

ருஷ்யார்களுக்கு (நாட்டுக்கு, அரசுக்கு) தகுதி இருக்கிறது - பிரிகோஸின் க்கு ஒன்றுமே இன்னமும் நிச்சயம் இல்லை மிகவும் அழுத்தமான , ஆபத்து வேலை - அனால் அவர் நேட்டோ இடம் செல்லவில்லை - முடிவு கொலை ஆயினும்.

திரும்பவும் உங்களுக்கு ஆரம்பத்தில் இருந்து விளக்க வேண்டியிருப்பது யாருடைய துரதிர்ஷ்டம் என எனக்கு விளங்கவில்லை. ஆனால், கோசான் உட்பட பலர் இங்கே தமிழில் எழுதியிருப்பதன் மொழி பெயர்ப்பு😎 இது:

- புட்டினும், பிரிகோஷினும் அவர்களது உலகப் பார்வையில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இதனால் இருவருக்கும் மூக்கு முகரை எந்த வழியில் போனாலும், சாதாரணமாக உலக ஸ்திரத் தன்மையை விரும்புவோர் மகிழ்வது இயல்பு - அதையே யாழிலும் காண்கிறீர்கள்.

- ஆனால், புட்டினிடம் இருந்து அணுஆயுத சுவிச் பிரிகோசினிடம் போவதை மேற்கும் வரவேற்காது, உலக ஸ்திரத்தன்மையை விரும்பும் யாரும் வரவேற்கார்கள்.

- இந்தக் குழப்பத்திற்கு முதன்மைக் காரணம் என்னவென்று உங்களுக்கு இன்னும் உறைக்கவில்லை: ஒரு அணுவாயுத வல்லரசு சகட்டு மேனிக்கு ஜெயிலில் இருந்து வந்த கிரிமினல்களுக்கு இராணுவ , ஆயுத வல்லமையைக் கொடுத்து விட்டு இது நடக்காதென எதிர்பார்க்க இயலாது. எனவே, அதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.

- இத்தகைய அவதானிப்புகளைக் கண்டு இங்கே உணர்ச்சி மயமாகப் பொங்கி எழுந்து கோவிப்போர் யாரென்று பார்த்தால் "புட்டினைத் தனிப்பட விரும்பும்" உறவுகளும், வேறு காரணங்களுக்காக சில யாழ் உறுப்பினர்களின் மண்டையை பிறஷர் வாஷர் கொண்டு கழுவ முயலும் உறுப்பினர்களும் தான்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் எங்கே கருணாவை அரசியலில் ஓரம் கட்டாமல் விட்டார்கள்?

எந்த தேர்தலில் தமிழர்கள் கருணாவை வெல்ல வைத்தார்கள்?

கருணா அடைந்த அரசியல் பதவிகள் எல்லாமுமே இலங்கை அவருக்கு கொடுத்த நியமன பதவிகள்.

2002 இல் இருந்து 2023 வரை கிழக்கு தமிழ் மக்கள் கருணாவை ஒரு தேர்தலிலும் வெல்லவிடவில்லை.

பிட்டினுக்கும், பிரிகோசினுக்கும் நல்லவன் பட்டம் கட்டுவதற்காக தமிழ் மக்களின் அரசியல் ஓர்மத்தை பொய்யாக பழித்து எழுதும் அளவுக்கு இருக்கிறது சிலரின் நிலமை.

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டுங்கோங்க மக்களே,

பொம்பிளை வியாபாரம் உட்பட, உலகம் எங்கும் கெட்ட பெயர் எடுக்கும் வெறி குட்டி இனம் ருசியர்களுக்கு நாடு காண தகுதி உள்ளதாம்…

1948 இல் இருந்து நியாயமான வழிகளில், பின்னர் ஒழுக்கமான ஒரு இராணுவத்தை கட்டி எழுப்பி போராடி, றோவின் சதிகளுக்கு மத்தியில், உலகமே எதிர்த்து நின்றும், கடும் அழிவை சந்தித்தும், முட்டாள், சுயநல, துரோக அரசியல்வாதிகளை தாண்டியும்….

இன்னும் இன வேட்கையோடு இருக்கும் எமது மக்கள் நாடு காண தகுதியற்றவர்களாம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி பிரசுரித்து இருந்தது முன்னாள் ரஷ்யா அரசு / புடின் ஆலோசகரின் கருத்தை.

அவரே சொல்லி இருப்பது - புடின் பல பிழைகளை விட்டுள்ளார். அனால் , மிகப் பெரிய பிழை, மேற்ககாய் நம்பியது. 

முன்னாள் ஆலோசகர் இப்படி சொல்வது - ருசியா தலைமைப் பீடத்தில் கருது வேறுபாடுகள் இருக்கலாம் - அனால் உக்கிரைன் / மேற்கத்தி பொருத்தவரையில்  போக்கு  ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கிறது.

பிபிசி பிரசுரித்து இருந்தது முன்னாள் ரஷ்யா அரசு / புடின் ஆலோசகரின் கருத்தை.

அவரே சொல்லி இருப்பது - புடின் பல பிழைகளை விட்டுள்ளார். அனால் , மிகப் பெரிய பிழை, மேற்ககாய் நம்பியது. 

முன்னாள் ஆலோசகர் இப்படி சொல்வது - ருசியா தலைமைப் பீடத்தில் கருது வேறுபாடுகள் இருக்கலாம் - அனால் உக்கிரைன் / மேற்கத்தி பொருத்தஸ்வரையில் இணைப் போக்கு  ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கிறது.

மற்றது 

uk இந்த இபோதைய இராணுவத்தளபதி சொல்வது.

பிரிகோஸின் பிரச்னை - எப்படி இப்போதுள்ள வினைத்திறனை விட கொடிய வினைத்திறனுடன் உக்கிரைன் இறந்வ நடவடிக்கையை  என்பதை பற்றியதே.

https://www.bbc.co.uk/news/live/world-europe-66006142

uk படைத்துறையின் கணிப்புகள், uk அரசாங்கத்தை விட, அநேகமாக சரியாகவே இதுவரை வந்துள்ளது. 

"Speaking in London at the Land Warfare Conference hosted by the Royal United Services Institute think tank, he noted the dispute inside Russia, which led to the failed mutiny, was not about ending the war in Ukraine but about how to fight it better."

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

வக்னர் கூலிப் படையினரின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி வெற்றிபெறவில்லை என்பதில்  யாழ் கள புலம்பெயர்ஸ் பலர் மிகுந்த ஏமாற்றமடைந்திருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. 

😁

அதிலும்… வாங்கி வைத்த “பொப் கோர்ன்” எல்லாம், திண்டு முடிப்பதற்குள்….
சக்கு பிடிச்சுப் போச்சு…. எண்ட கவலையும், கன பேர் முகத்தில் இருக்கு. பாவங்கள்…. 😂
”குட் லக் நெக்ஸ்ட் ரைம்” என்று அவர்களுக்கு ஆறுதல் சொல்வதை தவிர வேறு வழி இல்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kadancha said:

பிபிசி பிரசுரித்து இருந்தது முன்னாள் ரஷ்யா அரசு / புடின் ஆலோசகரின் கருத்தை.

அவரே சொல்லி இருப்பது - புடின் பல பிழைகளை விட்டுள்ளார். அனால் , மிகப் பெரிய பிழை, மேற்ககாய் நம்பியது. 

முன்னாள் ஆலோசகர் இப்படி சொல்வது - ருசியா தலைமைப் பீடத்தில் கருது வேறுபாடுகள் இருக்கலாம் - அனால் உக்கிரைன் / மேற்கத்தி பொருத்தவரையில்  போக்கு  ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கிறது.

பிபிசி பிரசுரித்து இருந்தது முன்னாள் ரஷ்யா அரசு / புடின் ஆலோசகரின் கருத்தை.

அவரே சொல்லி இருப்பது - புடின் பல பிழைகளை விட்டுள்ளார். அனால் , மிகப் பெரிய பிழை, மேற்ககாய் நம்பியது. 

முன்னாள் ஆலோசகர் இப்படி சொல்வது - ருசியா தலைமைப் பீடத்தில் கருது வேறுபாடுகள் இருக்கலாம் - அனால் உக்கிரைன் / மேற்கத்தி பொருத்தஸ்வரையில் இணைப் போக்கு  ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கிறது.

மற்றது 

uk இந்த இபோதைய இராணுவத்தளபதி சொல்வது.

பிரிகோஸின் பிரச்னை - எப்படி இப்போதுள்ள வினைத்திறனை விட கொடிய வினைத்திறனுடன் உக்கிரைன் இறந்வ நடவடிக்கையை  என்பதை பற்றியதே.

https://www.bbc.co.uk/news/live/world-europe-66006142

uk படைத்துறையின் கணிப்புகள், uk அரசாங்கத்தை விட, அநேகமாக சரியாகவே இதுவரை வந்துள்ளது. 

"Speaking in London at the Land Warfare Conference hosted by the Royal United Services Institute think tank, he noted the dispute inside Russia, which led to the failed mutiny, was not about ending the war in Ukraine but about how to fight it better."

வழமையாக நீங்கள் செய்வது போல எதிர்கருத்தாளர் சொன்னதையே திரும்பவும் சொல்லி, அவசியமற்ற திசையில் திரியை இழுக்கிறீர்கள்:

 பிரிகோசின் திடீரென சமாதானப் புறாவாக மாறியதால் புட்டினை எதிர்க்கவில்லை என்பது உண்மை - அதைத் தான் நாமும் சொல்கிறோம். ஆனால், உக்ரைனை அடிப்பதில் யார் பெரிய பிஸ்தா என்ற போட்டி யாருக்காக என நினைக்கிறீர்கள்? உள்ளூரில் இருக்கும் ரஷ்யர்களுக்காகத் தானே? இதைத் தான் புட்டினே "முதுகில் குத்தினான்" என்றார். நீங்களோ, புட்டினை விட தீவிரமாக ரஷ்யாவுக்கு டமேஜ் கொன்ட்ரோல் செய்ய முற்படுவது போல அல்லவா தெரிகிறது?😂  

இந்தச் சந்தர்ப்பத்தில், மேற்கின் அணுவாயுத வல்லரசுகள் எப்படி ரஷ்யா போன்ற ஒரு பொறுப்பற்ற அரச கட்டமைப்பிலிருந்து வேறுபடுகின்றன என்பதற்கு ஒரு உதாரணம் : 1950 களில் கொரிய யுத்தத்தில் சீனாவின் படைகளை அமெரிக்கா தலைமையிலான ஐ.நா படைகள் சமாளிக்க இயலாமல் போன போது, பசுபிக் தளபதி ஜெனரல் மக் ஆர்தர் - சீனாவினுள் படைகளை அனுப்பவும், ஜப்பானில் செய்தது போல அணுவாயுதங்களைப் பாவிக்கவும் அமெரிக்கத் தலைமையை வலியுறுத்துகிறார். அமெரிக்க ஜனாதிபதி இதை அடியோடு நிராகரித்து விட்டு, ஜெனரல் மக் ஆர்தரைப் பதவியிருந்தே அகற்றி விடுகிறார்.

இந்த கட்டமைப்பு நிர்வாகத்தை ரஷ்யா போன்ற நாட்டில்  எதிர்பார்க்க இயலாது. பிரிகோஷின் குழப்பம்  tip of the iceberg! .  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.