Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போக்குவரத்து பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் 17 வயது இளைஞன் பலி - பிரான்ஸ் தலைநகரில் கலவரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

28 JUN, 2023 | 05:02 PM
image
 
போக்குவரத்து பொலிஸாரின் எச்சரிக்கையை மீறிச்செல்ல முயன்ற 17 வயது இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸ் தலைநகரில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

பொலிஸார் கார் ஒன்றின் வாகனச்சாரதியை நோக்கி  துப்பாக்கியை இலக்குவைப்பதையும்,அதன் பின்னர் துப்பாக்கி சத்தம் கேட்பதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

அதன் பின்னர் அந்த கார் ஒரு இடத்தில் மோதி நிற்கின்றது.

இதன்போது 17 வயது இளைஞர் மார்பில் துப்பாக்கி சூட்டுகாயங்களுடன் உயிரிழந்துள்ளார்.

இளைஞன் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் கொலை குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தொடர்ந்து நன்டெரே நகரில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன பாரிசிற்கு மேற்கில் உள்ள அந்த நகரில் குழப்பங்களை ஏற்படுத்தியமைக்காக 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த வருடம் பிரான்சில் பொலிஸாரினால் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டாவது சம்பவம் இது.

கடந்த வருடம் 13 பேர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

https://www.virakesari.lk/article/158793

  • Replies 184
  • Views 10.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் சிறுவனை சுட்டுக்கொன்ற அதிகாரி மன்னிப்பு கோரினார்; 421 பேர் கைது

Published By: SETHU

30 JUN, 2023 | 09:36 AM
image
 
பிரான்ஸில் 17 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற பொலிஸ் அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளார்.

பாரிஸின் புறநகரான நான்டரேவில், கடந்த செவ்வாய்க்கிழமை நகரில் போக்குவரத்து பொலிஸாரின் எச்சரிக்கையை மீறிச்செல்ல முயன்ற 17 வயது சிறுவன் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தான். 

அல்ஜீரிய, மொரோக்கோ வம்சாவளியைச் சேர்ந்த நாஹெல் எம். எனும் சிறுவனே சுட்டுக் கொல்லப்பட்டுளளான்.

இச்சிறுவன் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் கொலை குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்களால் பெரும் எண்ணிக்கையான கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 

இச்சம்பவங்கள் தொடர்பில் 421 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரெஞ்சு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, மேற்படி சிறுவனை சுட்டுக்கொன்ற பொலிஸ் அதிகாரி இச்சம்பவத்துக்காக மன்னிப்பு கோரியுள்ளார். 

இச்சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் விளக்கப்பட முடியாததும் மன்னிக்கப்பட முடியாததுமாகும் என பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் கூறியுள்ளார். எனினும், இச்சம்பவத்தை தொடர்ந்து நடைபெறும் வன்முறைகளை நியாயப்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/158890

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நான் பார்த்த விடயம் என்னவென்றால்

கொளுத்தப்பட்டது அனைத்தும் அவர்கள் வீட்டை சுற்றி தான். 

பாதிப்பு யாருக்கு??

பஸ் இல்லை

ரெயில் இல்லை

கடை இல்லை

வேலை இல்லை

தீனி இல்லை

யாருக்கு???

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஈடுபடுவது “வட ஆபிரிக்கர்” மட்டுமா? அல்லது ஏனைய இனத்தினருமா?

12 minutes ago, விசுகு said:

இதில் நான் பார்த்த விடயம் என்னவென்றால்

கொளுத்தப்பட்டது அனைத்தும் அவர்கள் வீட்டை சுற்றி தான். 

பாதிப்பு யாருக்கு??

பஸ் இல்லை

ரெயில் இல்லை

கடை இல்லை

வேலை இல்லை

தீனி இல்லை

யாருக்கு???

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விசுகு said:

இதில் நான் பார்த்த விடயம் என்னவென்றால்

கொளுத்தப்பட்டது அனைத்தும் அவர்கள் வீட்டை சுற்றி தான். 

பாதிப்பு யாருக்கு??

பஸ் இல்லை

ரெயில் இல்லை

கடை இல்லை

வேலை இல்லை

தீனி இல்லை

யாருக்கு???

எனக்கும் இந்த தனியார் சொத்துக்களை நாசமாக்குவதன் நியாயம் புரிவதில்லை.

அமெரிக்காவில், மினசோட்டாவில் ஜோர்ஜ் fப்ளொய்ட் கொல்லப் பட்டதன் பின்னர், சில மினியாபொலிஸ் நகர வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப் பட்டன. அவற்றுள் ஒன்று அந்த சமூகத்தினர் சில நூறுபேருக்கு வேலையும் வாழ்வும் வழங்கி வந்த Target வர்த்தக நிலையம். எப்படி யோசிக்கிறார்கள்? என்ன தான் நன்மை இப்படி நாசம் செய்வதால்? 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

இதில் ஈடுபடுவது “வட ஆபிரிக்கர்” மட்டுமா? அல்லது ஏனைய இனத்தினருமா?

எல்லோரும் சேர்ந்து கொள்வார்கள்

கொழும்பில் 83இல் எம்மை யார் அதிகம் தாக்கினார்கள்.

சந்தர்ப்பம் தேடி காத்திருந்து பகை முடிப்பர்

ஆனால் இதில் வளர்ந்து வரும் எம்மவர் மீதான எரிச்சலும் தீர்க்கப்பட போகிறது 😭

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எல்லோரும் சேர்ந்து கொள்வார்கள்

கொழும்பில் 83இல் எம்மை யார் அதிகம் தாக்கினார்கள்.

சந்தர்ப்பம் தேடி காத்திருந்து பகை முடிப்பர்

ஆனால் இதில் வளர்ந்து வரும் எம்மவர் மீதான எரிச்சலும் தீர்க்கப்பட போகிறது 😭

☹️ போராட்டம், கலவரம், புரட்சி பிரென்ஞ் மக்களுக்கு புதிதல்ல. இதுவும் கடந்து போகும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

☹️ போராட்டம், கலவரம், புரட்சி பிரென்ஞ் மக்களுக்கு புதிதல்ல. இதுவும் கடந்து போகும்.

நல்ல வடிவாக துடைத்து விடுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இதில் நான் பார்த்த விடயம் என்னவென்றால்

கொளுத்தப்பட்டது அனைத்தும் அவர்கள் வீட்டை சுற்றி தான். 

பாதிப்பு யாருக்கு??

பஸ் இல்லை

ரெயில் இல்லை

கடை இல்லை

வேலை இல்லை

தீனி இல்லை

யாருக்கு???

கடையின் பூட்டை வெட்டி கொள்ளை அடிப்பதையும் பார்த்தேன். இது அமெரிக்காவிலும் நடந்தது. இவர்கள் தருணம் பார்த்து கொள்ளை அடிக்கும் கும்பல். இவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

கடையின் பூட்டை வெட்டி கொள்ளை அடிப்பதையும் பார்த்தேன். இது அமெரிக்காவிலும் நடந்தது. இவர்கள் தருணம் பார்த்து கொள்ளை அடிக்கும் கும்பல். இவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள்.

இங்கே 2012 இல் நடந்தது. அநேகம் திருட்டு போனது எலக்ரோனிக் சாதனங்கள். எல்லாம் கொள்ளை போன பின் வேறு வழி இல்லாமல் ஒருவர் கடையில் புகுந்து 10 கேஜி பாஸ்மதி அரிசியை தூக்கி கொண்டு நடந்தார். 

  • கருத்துக்கள உறவுகள்

மொஸ்கோ எரியும் என்று காத்திருந்த.. மேற்குலக ஜாம்பவான்களுக்கு.. இது சகிக்கக் கூடிய ஒன்றாக இருக்காது.

பிரான்ஸ் பொலிஸ் மீது இனத்துவேசக் குற்றச்சாட்டை ஐ நா சுமத்தியுள்ளது. உடனடியாக.. அதை பிரான்ஸ் நடப்பு அரசு மறுதலிச்சிருக்குது.

இந்தக் கலவரம் தொடங்கி 3 நாளாகுது. யாழில் முடிந்த அளவு பலரும் அடக்கி வாசிச்சினம்.

1 hour ago, goshan_che said:

☹️ போராட்டம், கலவரம், புரட்சி பிரென்ஞ் மக்களுக்கு புதிதல்ல. இதுவும் கடந்து போகும்.

தனக்கு தனக்கென்றால் சுளகு படக்குப் படக்கென்றுமாம்... பழமொழி தான் நினைவுக்கு வருகுது. 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nedukkalapoovan said:

மொஸ்கோ எரியும் என்று காத்திருந்த.. மேற்குலக ஜாம்பவான்களுக்கு.. இது சகிக்கக் கூடிய ஒன்றாக இருக்காது.

பிரான்ஸ் பொலிஸ் மீது இனத்துவேசக் குற்றச்சாட்டை ஐ நா சுமத்தியுள்ளது. உடனடியாக.. அதை பிரான்ஸ் நடப்பு அரசு மறுதலிச்சிருக்குது.

இந்தக் கலவரம் தொடங்கி 3 நாளாகுது. யாழில் முடிந்த அளவு பலரும் அடக்கி வாசிச்சினம்.

தனக்கு தனக்கென்றால் சுளகு படக்குப் படக்கென்றுமாம்... பழமொழி தான் நினைவுக்கு வருகுது. 

spacer.png

ஒரு பிள்ளையின் இழப்பு என்பதன் தார்ப்பரியம் அறிவேன்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை எல்லாமே வீட்டில் தான் கற்பிக்க படுகிறது தொடங்கப்படுகிறது. 

17 வயதில் சாரதி அனுமதிப்பத்திரம் கூட இல்லாமல் மிகவும் விலை உயர்ந்த ஆடம்பரமான காரும் வாழ்வுக்கும் பழக்கி பொதுமக்களுக்கு ஆபத்தான நபரை வீதியில் விட்டது பெற்றோர் செய்ய மிகப்பெரிய தவறாகும்.  

இது எனது தனிப்பட்ட கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, nedukkalapoovan said:

மொஸ்கோ அல்ல புட்டினின் கிரெம்ளின் எரியும்..இப்ப தள்ளி போட்டிருக்கு🤣.

மொஸ்கோ எரியும் என நான் காத்திருக்கவில்லை. சாதாரண ரஸ்ய மக்கள் மீது எனக்கு வெறுப்பும் இல்லை.

புட்டினின் படைகளும், பிரிகோசினின் படைகளும் மோதிக் கொண்டால் - அதன் மூலம் உக்ரேனுக்கும், ரஸ்யாவுக்கும் கூட விடிவு ஏற்படும் என்பதே என் எதிர்பார்பாக இருந்தது.

அப்பிறம் மக்கள் ஒரு விடயத்தை ஒட்டி கலவரத்தில் இறங்குவதற்கும், ஒரு கூலிப்படை தன்னை வளர்த்து அழகு பார்த்த நாட்டின் விமானப்படையையே கொன்றொழித்து கலகம் செய்வதும் வேறுபட்ட விடயங்கள் தானே நெடுகஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்போதும் சொல்வது தான்

எனது நான்கு பிள்ளைகளையும் நாட்டுக்கு நற்பிரசைகளாக உருவாக்கியுள்ளேன். இதுவே ஒவ்வொரு பெற்றோரும் இந்த பூமிக்கு செய்ய வேண்டியது. 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

ஒரு பிள்ளையின் இழப்பு என்பதன் தார்ப்பரியம் அறிவேன்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை எல்லாமே வீட்டில் தான் கற்பிக்க படுகிறது தொடங்கப்படுகிறது. 

17 வயதில் சாரதி அனுமதிப்பத்திரம் கூட இல்லாமல் மிகவும் விலை உயர்ந்த ஆடம்பரமான காரும் வாழ்வுக்கும் பழக்கி பொதுமக்களுக்கு ஆபத்தான நபரை வீதியில் விட்டது பெற்றோர் செய்ய மிகப்பெரிய தவறாகும்.  

இது எனது தனிப்பட்ட கருத்து.

அதற்காக மிக அருகில் துப்பாக்கியை வைச்சு சுட்டுக்கொல்வது என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. சரணடைந்த போராளிகளை தலையில் துப்பாக்கியை வைச்சு சுட்டுக்கொன்ற சிங்களவனுக்கும் இவங்களுக்கும் என்ன வித்தியாசம்..??!

19 minutes ago, goshan_che said:

ஒரு கூலிப்படை தன்னை வளர்த்து அழகு பார்த்த நாட்டின் விமானப்படையையே கொன்றொழித்து கலகம் செய்வதும் வேறுபட்ட விடயங்கள் தானே நெடுகஸ்.

அது புட்டின் வளர்த்தது என்றால்.. இது மக்ரோன் வளர்த்தது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புட்டின் ஜனாதிபதியாக இருந்தால் இதெல்லாம் நடக்குமா????? சொல்லுங்கள் மக்களே? :cool:

Bild

தயவு செய்து  இப்படியான வன்முறைகளை ஜனநாயகம்,தனிமனித உரிமை என பினாத்த வேண்டாம் என வேண்டிக்கொள்கின்றேன்.    :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

புட்டின் ஜனாதிபதியாக இருந்தால் இதெல்லாம் நடக்குமா????? சொல்லுங்கள் மக்களே? :cool:

Bild

தயவு செய்து  இப்படியான வன்முறைகளை ஜனநாயகம்,தனிமனித உரிமை என பினாத்த வேண்டாம் என வேண்டிக்கொள்கின்றேன்.    :rolling_on_the_floor_laughing:

காவல்துறை மற்றும் அரசே அநீதி இழைத்தாலும் தட்டிக்கேட்கும் நிலை தான் இந்த ஐனநாயகம். அதை செய்வதும் செய்ய அனுமதிப்பதும் ஐனநாயக விழுமியங்கள். அதை அனுபவிப்பவர்கள் நாம்.

ஆனால் அதையும் மீறி இவை ஐனநாயக மற்றும் சட்டத்தின் ஓட்டைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி நடக்கும் ஒரு வித பழிவாங்கல்.

ஆனால் ஐனநாயக மற்றும் சட்டத்தின் படி கொஞ்சம் தாமதமாக ஆனால் மிகவும் காட்டமாக தண்டிக்கட்டு தூக்கி வெளியே எறியப்படுவார்கள். கவலை வேண்டாம் அண்ணா.

🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

அதற்காக மிக அருகில் துப்பாக்கியை வைச்சு சுட்டுக்கொல்வது என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. சரணடைந்த போராளிகளை தலையில் துப்பாக்கியை வைச்சு சுட்டுக்கொன்ற சிங்களவனுக்கும் இவங்களுக்கும் என்ன வித்தியாசம்..??!

அது புட்டின் வளர்த்தது என்றால்.. இது மக்ரோன் வளர்த்தது. 

https://www.instagram.com/reel/CuGNuCeIQqc/?igshid=MTc4MmM1YmI2Ng==

இது தான் நான். 

கனக்க எழுத விரும்பவில்லை 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, விசுகு said:

காவல்துறை மற்றும் அரசே அநீதி இழைத்தாலும் தட்டிக்கேட்கும் நிலை தான் இந்த ஐனநாயகம். அதை செய்வதும் செய்ய அனுமதிப்பதும் ஐனநாயக விழுமியங்கள். அதை அனுபவிப்பவர்கள் நாம்.

ஆனால் அதையும் மீறி இவை ஐனநாயக மற்றும் சட்டத்தின் ஓட்டைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி நடக்கும் ஒரு வித பழிவாங்கல்.

ஆனால் ஐனநாயக மற்றும் சட்டத்தின் படி கொஞ்சம் தாமதமாக ஆனால் மிகவும் காட்டமாக தண்டிக்கட்டு தூக்கி வெளியே எறியப்படுவார்கள். கவலை வேண்டாம் அண்ணா.

🤣

பிரான்ஸ்ல் இது முதல் தரமா இல்லையே. எதற்கெடுத்தாலும் கடை எரிப்பும்,களவும் அடாவடித்தங்களும் என்றால்.....????????

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

பிரான்ஸ்ல் இது முதல் தரமா இல்லையே. எதற்கெடுத்தாலும் கடை எரிப்பும்,களவும் அடாவடித்தங்களும் என்றால்.....????????

இடைக்கிடையே நாட்டை கழுவி துப்பரவு செய்ய வேண்டும் அல்லவா??

அவர்களாகவே வந்து முகம் காட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இளைஞைனை மடக்கிப்பிடிக்காமல் சுட்டுக் கொன்றதை ஏற்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு பிரான்சில் உள்ள ஆங்கர்ஸில், கடைகள் மற்றும் வணிகங்களை 
சூறையாடும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக உள்ளூர்வாசிகள் போராடுகிறார்கள்.
(மேலே உள்ள இணைப்பை... கிளிக் பண்ணி காணொளியை பார்க்கவும்.)

ஒரே இரவில், பிரெஞ்சு இஸ்லாமிய கலகக்காரர்கள் கட்டிடங்களை எரித்தனர், கொல்லப்பட்டனர், காயப்படுத்தினர் மற்றும் பிரெஞ்சு உள்ளூர் மக்களை காயப்படுத்தினர், கடைகளை சூறையாடினர், வாகனங்களை அழித்தார்கள் மற்றும் ஒவ்வொரு பெரிய பிரெஞ்சு நகரத்திற்கும் கழிவுகளை இட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இது சிரியா, ஈராக் அல்லது ஆப்கானிஸ்தான் அல்ல. 
9% மக்கள் முழு நகரங்களையும் வீழ்த்திய பிரான்ஸ் இதுதான்!

CNN & BBC இப்போது எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்

Image

ஹிஜாப் அணிந்த பெண்கள், ஜாரா கடையில் கொள்ளையடிக்கிறார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றிரவு பிரான்ஸில் நடந்த கலவரத்தின் போது 
பாரிஸ் மிருகக்காட்சிசாலையில் இருந்து 3 சிங்கங்கள், 
ஒரு யானை மற்றும் ஒரு வரிக்குதிரை விடுவிக்கப்பட்டு 
இப்போது அவை பாரிஸ் தெருவில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.