Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண மோசடி… பாலியல் அத்துமீறல்கள்- லண்டன் சாமியார் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பண மோசடி… பாலியல் அத்துமீறல்கள்- லண்டன் சாமியார் கைது

June 27, 2023
 
spacer.png

சரவண பாபா அப்பாவிப் பெண்களைக் குறிவைத்து, அவர்களை உளவியல்ரீதியாக அடிமைப்படுத்தி, பாலியல் இச்சைக்குப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

பிரேமானந்தா, நித்தியானந்தா, ஆசாராம் பாபு வரிசையில் பாலியல் சர்ச்சையில் வசமாகச் சிக்கியிருக்கிறார் ‘லண்டன் சாமியார்’ சரவண பாபா. இவரது பாலியல் அட்டூழியங்கள் லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்களிடையே பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பான புகாருடன் அவர்கள் நமக்கு அனுப்பிய வீடியோக்கள் ஒவ்வொன்றும் அச்சிலேற்ற முடியாத ஆபாச ரகம்.

இது குறித்து பெயர் வெளியிட வேண்டாம் எனும் கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய லண்டன் வாழ் இலங்கைத் தமிழர் ஒருவர், “பிரேமானந்தாவின் பாலியல் குற்றங்களைத் தோலுரித்ததே ஜூ.வி-தான். அந்த பிரேமானந்தாவுக்கு நெருக்கமான ஒருவரின் உறவினருக்கு லண்டனில் ஒரு வீடு இருக்கிறது. அங்குதான் இந்த சரவண பாபா தங்கியிருந்தார். கேரளாவைப் பூர்வீகமாகக்கொண்டவரான இவர், 2009 காலகட்டத்தில்தான் முதன்முதலாக லண்டனுக்கு வந்தார். இங்கிருக்கும் செல்போன் நிறுவனப் பிரமுகர் ஒருவரும், பிரபல ஹோட்டலின் ஃபிரான்சைஸ் அதிபர் ஒருவரும் சரவண பாபாவுக்கு ஆதரவளித்தனர் என அவர் தெரிவித்ததாக இந்தியாவின் பிரபல ஊடகமான ஜூனியன் விகடன் செய்தியில்  மேலும் பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி-ஜூனியன் விகடன்

https://www.vikatan.com/crime/gender/london-samiyar-saravana-baba-atrocities
 
https://www.ilakku.org/பண-மோசடி-பாலியல்-அத்துமீ/

  • கருத்துக்கள உறவுகள்

அலைக்கா லைக்கா

இலக்கியா சீரியல்

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் வசிக்கும்…..  ”உடான்ஸ் சாமியார்” இப்போ எங்கே….? 😂

வேறு படங்கள், வீடியோக்கள் ஒன்றும் அம்பிடவில்லையா.
இங்கிலாந்து உறவுகளே… சட்டு, புட்டு என்று ஒரு தேடுதல் வேட்டையில் இறங்கி
காணொளிகளை கைப்பற்றி, எமக்கும் காட்டுங்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

அலைக்கா லைக்கா

தமிழ்நாட்டின் எதிர்கால முதலமைச்சர்.   யாழ்ப்பாணத்தின் மருமகன்.  போற்றுவோம் வாழ்த்துவோம்......ஆகா ஓகோ!!

இலக்கியா சீரியல்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

இலக்கியா சீரியல்

தோசையோடு சாம்பர், சட்னி தவிர வேறு என்னத்தை சாப்பிடலாம்🤣?

3 hours ago, தமிழ் சிறி said:

லண்டனில் வசிக்கும்…..  ”உடான்ஸ் சாமியார்” இப்போ எங்கே….? 😂

வேறு படங்கள், வீடியோக்கள் ஒன்றும் அம்பிடவில்லையா.
இங்கிலாந்து உறவுகளே… சட்டு, புட்டு என்று ஒரு தேடுதல் வேட்டையில் இறங்கி
காணொளிகளை கைப்பற்றி, எமக்கும் காட்டுங்கள். 🤣

அழைத்தாயா மகனே?

புரிந்துகொள் பக்தா….

சரசமாடி மாட்டி கொள்பவன் சாதாரண சாமியார்,

உடுத்த உடை கூட அறியாமல் உறவு வைப்பவன் உடான்ஸ் சாமியார்🤣.

தெய்வீக சக்தி, கமெராவில் பிடிபடாது🤣

மங்களம் உண்டாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

பண மோசடி… பாலியல் அத்துமீறல்கள்- லண்டன் சாமியார் கைது

June 27, 2023
 
spacer.png

சரவண பாபா அப்பாவிப் பெண்களைக் குறிவைத்து, அவர்களை உளவியல்ரீதியாக அடிமைப்படுத்தி, பாலியல் இச்சைக்குப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

பிரேமானந்தா, நித்தியானந்தா, ஆசாராம் பாபு வரிசையில் பாலியல் சர்ச்சையில் வசமாகச் சிக்கியிருக்கிறார் ‘லண்டன் சாமியார்’ சரவண பாபா. இவரது பாலியல் அட்டூழியங்கள் லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்களிடையே பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பான புகாருடன் அவர்கள் நமக்கு அனுப்பிய வீடியோக்கள் ஒவ்வொன்றும் அச்சிலேற்ற முடியாத ஆபாச ரகம்.

இது குறித்து பெயர் வெளியிட வேண்டாம் எனும் கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய லண்டன் வாழ் இலங்கைத் தமிழர் ஒருவர், “பிரேமானந்தாவின் பாலியல் குற்றங்களைத் தோலுரித்ததே ஜூ.வி-தான். அந்த பிரேமானந்தாவுக்கு நெருக்கமான ஒருவரின் உறவினருக்கு லண்டனில் ஒரு வீடு இருக்கிறது. அங்குதான் இந்த சரவண பாபா தங்கியிருந்தார். கேரளாவைப் பூர்வீகமாகக்கொண்டவரான இவர், 2009 காலகட்டத்தில்தான் முதன்முதலாக லண்டனுக்கு வந்தார். இங்கிருக்கும் செல்போன் நிறுவனப் பிரமுகர் ஒருவரும், பிரபல ஹோட்டலின் ஃபிரான்சைஸ் அதிபர் ஒருவரும் சரவண பாபாவுக்கு ஆதரவளித்தனர் என அவர் தெரிவித்ததாக இந்தியாவின் பிரபல ஊடகமான ஜூனியன் விகடன் செய்தியில்  மேலும் பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி-ஜூனியன் விகடன்

https://www.vikatan.com/crime/gender/london-samiyar-saravana-baba-atrocities
 
https://www.ilakku.org/பண-மோசடி-பாலியல்-அத்துமீ/

ஆனாலும் இது ரொம்ப லேட். ஒரு மாசம் முன்னமே, பாபா நாக்கை சுழட்டும் வீடியோ வாட்சப்பில் வந்து விட்டதே ?

நம்ம துப்பறியும் சாம்பு @Nathamuni கண்ணில் மாட்டவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

ஆனாலும் இது ரொம்ப லேட். ஒரு மாசம் முன்னமே, பாபா நாக்கை சுழட்டும் வீடியோ வாட்சப்பில் வந்து விட்டதே ?

நம்ம துப்பறியும் சாம்பு @Nathamuni கண்ணில் மாட்டவில்லையா?

சாம்பு  கோத்தாவின் பக்கம் நிற்கிறார்.🙂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நம்ம துப்பறியும் சாம்பு @Nathamuni கண்ணில் மாட்டவில்லையா?

துப்பறியும் சாம்பு… கமுக்கமாக இருக்கிறதை பார்க்க,
திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி, அவரும் “சரவண பாபா” விடம் 
இழக்கக் கூடாதுகளை… இழந்து விட்டார் போலுள்ளது. 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்

Image

//லண்டனில் ஈழத்தமிழர்களிடம் காலை கழுவி குடிக்க ஆயிரம் பவுண்டுகள் வசூலித்த, கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்த சற்குரு சிறீ சரவண பாபா சுவாமி நேற்று பொலிசாரால் கைது. அண்மையில் இவர் சம்பந்தப்பட்ட பல பாலியல் வீடியோக்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. // Worldwide Tamils

இந்தச் சாமியார்... கேராளவை சேர்ந்தவர் என்று, ருவிற்றரில் உள்ளது.

கேரளா சாமியாரிடம்... ஏமாந்த ஈழத்தமிழன் என்றால்... இன்னும் கேவலமாக இருக்கு.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

sri saravana baba says about murugan temples

👉 https://www.facebook.com/varathan.manickalingam/videos/239683625374086  👈

👆சாமிய நம்பு ,சாமியாரை நம்பாதே என்று சொன்னால் எவன் கேட்குறான் ?😡
இலண்டனில் சில ஈழத்தமிழர் தலையில் நன்றாக மிளகாய் அரைத்து கோடியில் புரளும் கேரளத்து ஆசாமி ..

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

தோசையோடு சாம்பர், சட்னி தவிர வேறு என்னத்தை சாப்பிடலாம்🤣?

தோசையோடு பழைய மீன் குழம்பு பிரமாதமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

தோசையோடு பழைய மீன் குழம்பு பிரமாதமாக இருக்கும்.

எப்ப பார்,எங்கை பார், நேரகாலம் இல்லாமல் நாங்கள் தின்னுறதிலையே குறியாய் இருப்பம்...:beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

எப்ப பார்,எங்கை பார், நேரகாலம் இல்லாமல் நாங்கள் தின்னுறதிலையே குறியாய் இருப்பம்...:beaming_face_with_smiling_eyes:

இந்த வயிற்றுக்காகத் தானே இவ்வளவு பாடும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

தோசையோடு பழைய மீன் குழம்பு பிரமாதமாக இருக்கும்.

3 minutes ago, குமாரசாமி said:

எப்ப பார்,எங்கை பார், நேரகாலம் இல்லாமல் நாங்கள் தின்னுறதிலையே குறியாய் இருப்பம்...:beaming_face_with_smiling_eyes:

தோசையும்… மீன் குழம்பும் தோதான கூட்டாளிகளா?
ஓரு நாளும் சாப்பிட்டு பார்த்ததில்லை, ஒரு முறை முயற்சி பண்ணி பார்க்க வேண்டும். 🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த வயிற்றுக்காகத் தானே இவ்வளவு பாடும்.

வயித்துக்கு இல்லை நாக்குக்கு.....நாக்கும் மூளையும் தான் எல்லாம் கேக்குது. வயிறு இல்லை :face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, தமிழ் சிறி said:

தோசையும்… மீன் குழம்பும் தோதான கூட்டாளிகளா?
ஓரு நாளும் சாப்பிட்டு பார்த்ததில்லை, ஒரு முறை முயற்சி பண்ணி பார்க்க வேண்டும். 🙂

எண்ணைத்தோசை,முட்டைத்தோசை இன்னும் பிரமாதம்......:beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

துப்பறியும் சாம்பு… கமுக்கமாக இருக்கிறதை பார்க்க,
திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி, அவரும் “சரவண பாபா” விடம் 
இழக்கக் கூடாதுகளை… இழந்து விட்டார் போலுள்ளது. 😂🤣

அலைக்கா…அலைக்கா…என்று மேலே மீரா போட்ட பாடலையும், சாம்பு அவர்கள் முன்னர் யாழில் எழுதிய கருத்துக்களையும் கூட்டி, கழித்து பார்த்தால்…இந்த கணக்கு சரி வரும் போலவும் கிடக்கு🤣

6 hours ago, ஈழப்பிரியன் said:

தோசையோடு பழைய மீன் குழம்பு பிரமாதமாக இருக்கும்.

அபச்சாரம்…அபச்சாரம்…தோசைக்கு எப்பவும் சைவம்தான் சைட் டிஷ் எண்டு வேதங்களில் கூட எழுதி இருக்கு🤣

53 minutes ago, குமாரசாமி said:

எண்ணைத்தோசை,முட்டைத்தோசை இன்னும் பிரமாதம்......:beaming_face_with_smiling_eyes:

முட்டை தோசை மட்டும் விதி விலக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

அபச்சாரம்…அபச்சாரம்…தோசைக்கு எப்பவும் சைவம்தான் சைட் டிஷ் எண்டு வேதங்களில் கூட எழுதி இருக்கு🤣

முட்டை தோசை மட்டும் விதி விலக்கு 

பைபிளில் கூட…. நமது தோசையை பற்றி எழுதியுள்ளார்களா. 😮
றொம்ப… ஆச்சரியமாக இருக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

அலைக்கா…அலைக்கா…என்று மேலே மீரா போட்ட பாடலையும், சாம்பு அவர்கள் முன்னர் யாழில் எழுதிய கருத்துக்களையும் கூட்டி, கழித்து பார்த்தால்…இந்த கணக்கு சரி வரும் போலவும் கிடக்கு🤣

வழக்கமாக… @Nathamuni, இப்படியான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து,
முதல் ஆளாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்.
“சரவண பாபா” விடயத்தில்…. அவர் மௌனமாக இருப்பது ஆச்சரியமளிக்கின்றது.
அதுகும்… அவர் பேட்டையில், லண்டனில் நடந்த விடயம் என்பதால்…
காலில் சலங்கை கட்டி… ஒரு ஆட்டம் போட்டிருக்க வேண்டிய ஆளின் மௌனம்
நமக்கு  பலத்த சந்தேகத்தை எழுப்புகின்றது. 😎

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

பைபிளில் கூட…. நமது தோசையை பற்றி எழுதியுள்ளார்களா. 😮
றொம்ப… ஆச்சரியமாக இருக்கு. 🤣

வேதங்களின் வகைகள்
  • ரிக் வேதம்
  • யசுர் வேதம்
  • சாம வேதம்
  • அதர்வண வேதம்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:
வேதங்களின் வகைகள்
  • ரிக் வேதம்
  • யசுர் வேதம்
  • சாம வேதம்
  • அதர்வண வேதம்

ஈழப்பிரியன்…. நான் சும்மா, @goshan_cheக்கு கடுப்பு ஏற்றுவதற்காக,
அவர்  வேதம் என்றதற்கு…. பைபிளை இழுத்து எழுதினேன்.
அதோடை…. தலை விறைச்சு, ஆள் எஸ்கேப். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

வழக்கமாக… @Nathamuni, இப்படியான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து,
முதல் ஆளாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்.
“சரவண பாபா” விடயத்தில்…. அவர் மௌனமாக இருப்பது ஆச்சரியமளிக்கின்றது.
அதுகும்… அவர் பேட்டையில், லண்டனில் நடந்த விடயம் என்பதால்…
காலில் சலங்கை கட்டி… ஒரு ஆட்டம் போட்டிருக்க வேண்டிய ஆளின் மௌனம்
நமக்கு  பலத்த சந்தேகத்தை எழுப்புகின்றது. 😎

அய்க்....

நான் தான் முதன் முதலா, இலண்டணில் ஓர் சாமியார் பத்தி பலான வீடியோக்கள் திரியுது, தாரும் பார்த்தனியளே எண்டு கேக்க, ரெண்டு நாளா யாரும் கண்டு கொள்ளவில்லை.

பிறகு பெருமாள் தான், அதெல்லாம் இங்கே இணைக்க முடியாத வேற ரகம் என்றார்.

யாருக்கும் ஆர்வமில்லை, சிலவேளை, வீடியோக்கள், எரிச்சலில் உடான்சு சாமியார் சிஸ்யர்கள் தில்லாலங்கடி வேலையாயிருக்கலாம் என்று நிணைத்து விட்டுவிட்டேன்.

போலீஸ் கைதின் பின் தான் உண்மை என புரிந்தது.

பலான சாமியார் கைதான பின்னர் உடான்ஸ்சர் தலை காட்டுவதால், உள்ள இருப்பதன்.. சிக்க வைத்ததன் பின்னால்.... இவர்தானோ என்று நிணைப்பதுடன், ஆச்சிரமத்தை இவரே பொறுப்பெடுக்க கோரிக்கை வைக்கிறோம்.

அதெல்லாம் இருக்க, வடை, போண்டா வித்து வந்த காசு இந்த சாமியார் அநுக்கிரகத்தால என்று தீவிரமாக நம்பின சம்பல் செயின் ஓனர் முன்னின்று மூன்றரை மில்லியனுக்கு வாங்கின பார்ணற் ஆசிரமம்....

அபசாரம்.... அபசாரம்... நன்னா வாயை கழுவுங்க.....அதெல்லாம், உங்களுக்கு எதுவும் இல்லை, என்பெயரில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற லபக்கிய, லார்டு லபக்குதாஸ் சாமியார், உள்ள இருப்பதால், ஆச்சிரம காணியை கிளப்ப காசு குடுத்த பார்ட்டிகள் அந்தரப்படுகினமாம். வங்கீலயும் நல்ல காசு இருக்குதாம். ஆனால் சாமியார், உள்ள இருந்து கொண்டே, காசை எறிந்து, நல்ல புரோகிராசியை பிடித்து வெட்டி ஆடுகிறாராம்.

இதுக்கு முன்னம், காயத்திரி என்ற சாமியம்மா. கணவர் ரவிக்குமார்.....Edgware பக்கம் … சுருட்டினார்கள். கடைசியில் பெட்டிசம், டீபோட்.

அதுக்கு முன்னர் ஈஸ்காம் பக்கம் நாடி யோதிடம்.... யெயசங்கர் கோஸ்டி..... சில மாதங்களில் பல லட்சம் பவுண்கள்..... கடைசியில் பெட்டிசம், IT raid, டீபோட்.

இந்த மூன்று பார்ட்டிகளும் தென் இந்தியா... 🤪

ஆக...... இந்த கேசில.... 16 வயசு சிறுமியை (ஒன்றுக்கும் அதிகம் என்கிறார்கள்) பீடீத்த தரித்திரம் போய், சிறப்பான எதிர்காலம் அமைய அர்த்த சாம பூசை, பிரார்தணை என்று, பாலியல் வன்புணர்வு வரை போனதால், பிணை கிடைக்காத விளக்க மறியல் என்கிறார்கள். விபரம் நீதிமன்று வரும் போதே தெரியவரும்.

'மொட்டைச் சாமியார், குட்டைல விழுந்தாராம்'

* இது தவிர விம்பிள்டன் பிள்ளையார் கோவில் அய்யர், இலங்கையர் அல்ல... அந்த மொரீசியஸ் பெண்.... கணவருடன் பிரச்சணை.... வீட்டிலிருந்து வெளியேற்றிய பின்னர் வீட்டில், பூசை ஒன்று செய்ய அய்யரை கூப்பிட்டிருக்கிறார். போன இடத்தில, செய்ய வேண்டிய பூசையை விட்டுட்டு, பெண் தனியாக இருக்கிறார் என்று வேற பூசைக்கு முயல, உருட்டுக்கட்டை சாத்து வாங்கி.... போலீஸ் வந்து.... உள்ளே...

வேறு கோவில் பிரதம குருவான தமையன், ஓடிவந்து, ஊரில் பிள்ளை குட்டிக்காரன் என்று கதறி மன்னிக்குமாறு கோரி, பெண் முறைப்பாட்டை மீளப்பெற்றதால் தப்பி, ஊர் போய் சேர்ந்தார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

அதானே,

அஜால் குஜால் மேட்டரை பற்றி நாதம் கதைக்காமால் எப்படி 🤣?

நாதம் சொல்லி இருக்கிறார் - இவையள்தான் புட்டி(ன்) மயக்கத்தில அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டினம்🤣

11 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்…. நான் சும்மா, @goshan_cheக்கு கடுப்பு ஏற்றுவதற்காக,
அவர்  வேதம் என்றதற்கு…. பைபிளை இழுத்து எழுதினேன்.
அதோடை…. தலை விறைச்சு, ஆள் எஸ்கேப். 😂

இப்பதான் விறைப்பு எடுபட்டது (தலையை சொன்னேன்).

தோசையை பற்றி அல்ல, அப்பத்தை பற்றித்தான் பைபிளில் சொல்லப்பட்டுள்ளது🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அதானே,

அஜால் குஜால் மேட்டரை பற்றி நாதம் கதைக்காமால் எப்படி 🤣?

நாதம் சொல்லி இருக்கிறார் - இவையள்தான் புட்டி(ன்) மயக்கத்தில அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டினம்🤣

உங்களுக்கு நம்ம அருமை புரியுது... ஆர்வமா கேட்டு போட்டு, பஸ் எரிஞ்சதை விடுப்பு பார்த்துக்கொண்டு நிக்கிறார்.... நம்ம பாஸ்... 😁

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பணம் - பக்தி – பாலியல்: ஓம் சரவணபவ!
பல மில்லியன் பவுண்கள் என்ன ஆகும்?

இன்றைய பொருளாதாரக் கொள்கைகளை இரு நுறு ஆண்டுகளுக்கு முன் விமர்சித்து, அதற்குத் துணைபோகின்ற மதம் ஒரு “அபின்” என்றவர் அரசியல் பொருளாதாரச் சிந்தனையாளர் கார்ள் மார்க்ஸ். வறுமை – பக்தி – பட்டினியில் கிடந்தால் யேசுவைச் சந்திக்கலாம் என்று போதித்த கென்ய மதக் குழுத் தலைவர் போல் மக்கன்சி ன்தன்கே பல நூறு ஏழைகள் பட்டினி இருந்து சாவதற்குக் காரணமானார். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது பிணை மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சியற்ற கல்வியில் வறுமைப்பட்ட சமூகத்தில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்பார்க்கக் கூடியதே.

ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக, பணம் - பக்தி – படுக்கையில் கடவுளை (தன்னை)ச் சந்திக்கச் சொன்னார் லோக்கல் (local) முருகக் கடவுள் ஓம் சரவணபவன் என்று அறியப்பட்ட முரளிகிருஸ்ணன் புலிக்கள் (புலிக்கள் தெற்கு ஆசியாவில் பொதுவான ஒரு குடும்பப் பெயர்). இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றது லண்டனில் செழிப்பான செல்வந்தர்கள் மிக்க மேற்கு லண்டன் உள்ளாட்சிப் பிரிவுகளில். பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட ஓம் சரவணபவ, பிணை மறுக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 5இல் ஆரம்பிக்கப்படும் வழக்கின் முடிவு வரை தடுத்து சிறை வைக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த ஓம் சரவணபவ?

இந்திய கேரள மாநிலத்தின் பாலக்காட்டைச் சேர்ந்த முரளிகிருஸ்ணன் புலிக்கள் என்பவர் லண்டனில் ஓம் சரவணபவ என்றொரு மதக்குழுமத்தை உருவாக்கி உள்ளார். 1979 மே மாதம் பிறந்த, தற்போது 45 வயதுடைய முரளிகிருஸ்ணன் புலிக்கள் 2009இல் லண்டன் வந்து தன்னுடைய மதக்குழுமத்தை லண்டனிலும் ஸ்தாபித்துள்ளார். அதற்கு முன்னரேயே தென்னிந்தியாவில் இவர் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டு துரத்தப்பட்டவர். இவர் லண்டனில் இருந்து கொண்டு இந்தியாவில் கடவுச்சீட்டு தொடர்பில் போட்ட விண்ணப்பத்திற்கு எதிராக கேரளா நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. அதற்கு காரணம் கேரளா பொலிஸ் பிரிவில் முடிவடையாத கிரிமினல் வழக்கு ஒன்று இவருக்கு உள்ளது. இந்தப் பின்னணியில் தற்போது ‘விஸிற்றர் விசாவில் - visitor visa’ லண்டனில் வாழும் முரளிகிருஸ்ணனுக்கு பிரித்தானிய உள்துறை அமைச்சும் விசா மறுத்து இருந்தது. ஆனால் லண்டனில் அவரைச் சுற்றியிருந்த செல்வந்தர்களின் அணைவால் அவர் விசாவைப் புதுப்பித்துக் கொண்டு இருந்தார்.

யார் இவரை லண்டனில் காலூன்றச் செய்தது?

பாலியல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு துரத்தப்பட்ட ‘ஜீலேபிசாமி ‘ என்று அறியப்பட்ட முரளிகிருஸ்ணனுக்கு அடைக்கலம் வழங்கியவர் பிற்காலங்களில் தேவா அம்மா ஆகிய தெய்வதீஸ்வரி செல்வேந்திரன். தெய்வதீஸ்வரியின் முன்னாள் கணவர் கிழக்கு லண்டனில் பெற்றோல் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர். பணவசதி உள்ளவர். ஹரோவில் ஒரு ப்ரன்சைஸியாக தபாலகம் ஒன்றையும் நடத்தி வருபவர். பணவசதி படைத்த தெய்வதீஸ்வரி ஜீலேபி சாமியுடைய பக்தையாகி கேரளா சென்று தரிசனம் பெற்று வருபவர். தெய்வதீஸ்வரி தற்போது விவாகரத்து ஆன போதும் இன்றும் முன்னாள் கணவர் செல்வேந்திரனின் பெயரையே பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இப்போது தேவா அம்மா ஆகிய தெய்வதீஸ்வரி முன்னாள் கணவரின் சகோதரணுடன் வாழ்கின்றார். தேவா அம்மா முரளிகிருஸ்ணனுடைய பக்தி மார்க்கத்தில் தன்னுடைய மகள் கௌசல்யாவையும் இணைத்துக்கொண்டுள்ளார். மகளின் கணவரும் இந்த மதக்குழுமத்தில் இணைந்துகொண்டார்.

இவர்களால் உருவாக்கப்பட்டது தான் ஓம் சரவணபவ சேவா ரஸ்ட். இது பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழவின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் நான்கு ரஸ்டிகள் உள்ளனர் அவர்கள்: முரளிகிருஸ்ணன் புலிக்கள் (ஓம் சரவணபவ), தெய்வதீஸ்வரி செல்வேந்திரன் (தேவா அம்மா), கௌசிகா செல்வேந்திரன் (தேவா அம்மாவின் மகள்), பேராசிரியர் ராம்நாத் நாராணயசாமி (தேவா அம்மாவின் மருமகன்)

கோவிட் பெருநோய் காலத்தில் ஆலயங்கள் பூட்டப்பட்டு ஆலயங்களின் வருமானம் வீழ்ச்சியடையை ஓம் சரவணபவ சேவா ரஸ்டின் வருமானம் எகிறி 2021இல் ஒரு மில்லியனைத் தாண்டியது. இது உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட கணக்கு அறிக்கை. இந்த ரஸ்டின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் கணக்காளர் ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் இதற்குள் வராத பணம் இதனைக் காட்டிலும் பத்து மடங்கு இருக்கும் எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அதாவது பத்து மில்லியன் பவுண்கள் இந்தக் குழுமத்திடம் இருப்பதாகக் கணிப்பிட்டார்.

ஏன் ஓம் சரவணபவனிடம் செல்கின்றனர்?

ஆரம்பத்தில் யாருக்கும் ஓம் சரவணபவனுடைய பின்னணி தெரிந்திருக்கவில்லை. ஓம் சரவணபவனிடம் மற்றவர்களைக் கவருகின்ற ஒரு ஆளுமை இருப்பதாகக் குறிப்பிடுகின்றார், தனியனாக தன்னுடைய இரு விசேட தேவைகளுடைய பிள்ளைகளையும் வளர்த்து வரும் ஆன்மீக ஈடுபாடுடைய ஒருவர், அவர் மேலும் குறிப்பிடுகையில் அவர் பேச்சாற்றலுடையவராகவும் மற்றையவர்களோடு பேசுகின்ற போதே அவர்களை மதிப்பீடு செய்து பேசக்கூடியவராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இவற்றுக்கும் மேலாக எவ்வாறோ மற்றையவர்களின் மனப்பதிவுகளை வாசிக்கவும் செய்கின்றார் என்கிறார், ஓம் சரவணபவ தன்னுடைய கடந்த காலம் பற்றிக் மிகத்துல்லியமாகக் குறிப்பிட்டதாக தேசம்நெற் இடம் அவர் தெரிவித்தார். இது போன்ற காரணங்களாலும் பெரும்பாலானவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாலும் அழுத்தங்களுடன் வாழ்வதாலும் அவர் மீது ஈர்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தான் ஈர்க்கப்பட்டதற்கு தன்னுடைய நெருக்கடிகளும் தனக்கிருந்த அழுத்தங்களும் கூடக் காரணம் என்றவர் அவரிடம் இருந்த சில திறமைகளை அவர் மிகச் சாதுரியமாகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். பல பெண்கள் அவரிடம் செல்வதற்கு அவர்கள் முகம் கொடுக்கும் குடும்ப நெருக்கடிகளும் மன அழுத்தங்களுமே காரணம் என்கிறார் அவர்.

ஏன் செல்வந்தர்கள் விட்டில் பூச்சிகளாக ஓம் சரவணபவனிடம் வீழ்ந்தனர்?

பணம், அது இல்லாதவர்களுக்கு, பணம் குறைவாக உள்ளவர்களுக்கு அதனை அடைவது அவசியமானது. அது உந்துதலைக் கொடுக்கும். அதனை அடைவது ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் பணம் படைத்தவர்களுக்கு பணம் பெருக்குவது கிளர்ச்சியையோ மகிழ்ச்சியையோ குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படுத்துவதில்லை. அதனால் அவர்கள் அந்தக் கிளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் வெளியே தேடுவார்கள். போதைப்பொருள் (drugs), கம்பிளிங் (gambling), சொப்பிங் (shopping), பார்டியிங் (partying) என்று அதில் ஆன்மீகமும் ஒன்று. ஆனால் இவர்கள் தங்களுக்குள்ள பண அந்தஸ்தை பயன்படுத்தியே அக்கிளர்ச்சியைத் தேடுவார்கள். அதன் மூலம் ஒரு சமூக அங்கிகாரத்தையும் அந்தஸ்தையும் விரும்புவார்கள். இந்தச் செல்வந்தர்களின் இந்தப் பலவீனத்தை ‘ஓம் சரவணபவ’ முதலீடாக்கியது. ‘ஓம் சரவணபவ’ மட்டுமல்ல சுவாமி பிரேமானந்தா, நித்தியானந்தா, மேல்மருவத்தூர் அம்மா சாமி, சற்குரு ஜக்கி முதல் ஆலயங்களில் உள்ள ஐயர்கள் வரை எல்லோரும் இந்தச் செல்வந்தர்களில் அல்லது செல்வந்தர்களாக தங்களை பாவனை செய்ய விரும்புபவர்களை இந்த ரெக்னிக்கை வைத்துத் தான் வீழ்த்துகிறார்கள்.

இதனையே ஓம் சரவணபவ மிகக் கச்சிதமாக பயன்படுத்தினார். உங்களுக்கு என்ன தெரியும் என்பது முக்கியமல்ல உங்களுக்கு யாரைத் தெரியும் என்பது தான் முக்கியம். லண்டனில் கும்பிடுவதற்கு சாமியில்லாமல் கேரளாவரை சென்று தரிசனம் பெற்ற தெய்வதீஸ்வரியை கணக்குப் பண்ணி வளைத்துப் போட்டார் ஓம் சரவணபவ. ஒரு வர்த்தகப் பிரமுகரின் மனைவியாக இருந்தவரின் நட்புவட்டம் குசெலினிகளாக இருக்க வாய்ப்பில்லை. தெய்வதீஸ்வரி ‘நான் பெற்ற இன்பம் பெறுக செல்வந்தர்காள்! என்று லண்டனில் உள்ள தமிழ் வர்த்தகப் புள்ளிகளுக்கு ஓம் சரவணபவாவை அறிமுகப்படுத்தினார். சாமியை வீட்டுக்கு அழைத்து பூஜை நடத்துவது செல்வந்தக் குடும்பங்களின் மத்தியில் அவர்களின் அந்தஸ்தை உயர்த்தியது.

கிளே ஹோலில் நடந்த இவ்வாறான பூஜையில் ஒரு குடும்பத்தினரைக் கொண்டு இறக்கிவிட்ட ரக்ஸி  றைவர் (taxi driver) தேசம்நெற் க்கு தெரிவிக்கையில் ஓம் சரவணபவவை வீட்டுக்கு அழைத்த குடும்பத்தினர் அவருக்கு 2,500 பவுண்கள் வழங்கியவையாம். அந்தப் பூஜைக்கு வந்திருந்த குடும்பங்கள் 500, 1000 பவுண்கள் என்ற வழங்கியவையாம் என்றார். அன்றைய இரு மணிநேரத்தில் ஓம் சரவணபவவின் கலெக்சன் 10,000 பவுண்கள் என்றும் தெரிவித்தார். ‘சுவாமியின்’ காலைக் கழுவிக் குடித்ததற்கு கட்டணம் 10,000 பவுண்கள்.

லண்டனின் பெரும் வர்த்தகப் புள்ளிகள் சாமியின் வலையில் வீழ்ந்தனர். லைக்கா மோபைல் நிறுவனத்தின் முக்கியஸ்தர் பிரேம், சம்பல் நிறுவனத்தின் உரிமையாளர்கள், மற்றும் வர்த்தக உரிமையாளர்கள், கணக்காளர்கள், மருத்துவர்கள் என்று பணத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பலர் ஓம் சரணவபவ வுக்கு ‘ஓ’ போட்டனர். அவர்களுடைய துணைவியரும் அவர்களோடு சேர்ந்து ‘ஓ’ போட்டனர். அவருடைய காலைக்கழுவிக் குடித்தனர். தாங்கள் குடித்தது காணாது என்று அவரை புங்குடுதீவு, நயினாதீவு என்று இலங்கைக்கு கூட்டிச் சென்று அங்குள்ளவர்களுக்கும் குடித்துக் காட்டி அவர்களையும் அந்தக் கால் கழுவிய தண்ணியைக் குடிக்க வைத்தனர்.

எவ்வாறு ஓம் சரவணபவ நிர்வாணமானார்?

ஓம் சரவணபவ ஹரோவில் உள்ள பிரிஸ்டன் ரோட்டில் கடை விரித்தார். ஆச்சிரமம், கோயில் கட்டினார். படுக்கையும் விரித்தார்.

பக்தைகள் ஆச்சிரமத்தில் கூடிய நேரம் செலவழித்தனர். கணவன்மாருக் கதைப்பதற்கு நேரமும் பொறுமையும் இல்லை. சாமிக்கு வேலையா வெட்டியா காலை நீட்டிக்கொண்டு நல்லா கதை கேட்டார். அவர்களுக்கு கதை விட்டார். முருகப்பெருமானோடு ஐக்கியமாக்கினார் ஓம் சரவணபவ! யாமிருக்கப் பயமேன்!! சில குடும்பங்களையும் பிரித்து மேய்ந்தார் என்று தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

“களவு செய்துவிட்டு அதனைவிட்டுவிட்டால் பிடிபடுவது கஸ்டம் என்பது வர்த்தகர்கள் நன்கு அறிந்த தொழில் ரகசியம். ஓம் சரவணபவவிற்கு ஓவர் கொன்பிடன்ட். அல்லது அவரும் செல்வம் - செல்வாக்கு - செக்ஸ் என்ற போதைகளுக்கு அடிமையானார். இப்போது சாமிவேசம் குறைந்து சுயரூபம் வெளிவரத் தொடங்கியது. அவருடைய நடவடிக்கைகள் எல்லை மீறியது”  என்கிறார் எட்ச்வெயரைச் சேர்ந்த ரரின் சொக்கலிங்கம்.
"மிகக் கீழானவர்களை விமர்சிக்க தமிழர்கள் ஒரு மோசமான சொல்லாடல் வைத்துள்ளனர். ‘சாப்பிட்ட கோப்பையிலேயே பேழ்கிறான்’. அது தான் ஓம் சரவணபவ மாட்டக் காரணம். பெரும்புள்ளிகளின் குடும்பங்களிலேயே, அக்குடும்பப் பெண்களிலேயே, அவர்களின் பிள்ளைகளிலேயே கை வைத்தார் ஓம் சரவணபவ. அப்போது தான் அவருக்கு ஏழரைச் சனி ஆரம்பித்தது. மற்றவர்களுக்கு நடக்கும் போது கண்டும் காணாமல் இருந்தவர்கள் தங்கள் குடும்பங்களில் என்றதும் பதறினர். அதே சமயம் தங்கள் குடும்ப உறுப்பினர்களது பெயர் வெளிவராமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தனர்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஓம் சரவணபவாவுடன் லைக்காவுக்கு என்ன சம்பந்தம்?

ஓம் சரவணபவா பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாதவர்களின் ஆன்மீக குரு. அந்த வலையில் லைக்கா சுபாஸ்கரனின் வலது கரமான பிரேம் மற்றைய செல்வந்தர்கள் போல் வீழ்ந்தார். தன்னுடைய வீட்டுக்கும் ஓம் சரவணபவவை அழைத்து காலைக் கழுவிக்கு குடித்தார். மற்றைய செல்வந்தர்கள் போல் தன்னுடைய வங்கிக் கணக்கும் இரட்டிப்பாகும் புண்ணியம் கூரையை பிய்த்துகொண்டு வளரும் செய்த பாவம் செய்கின்ற பாவம் செய்யப் போகும் பாவம் எல்லாவற்றிலும் இருந்தும் விடுதலை கிடைக்கும் என்று மற்றவர்களைப் போல் தானும் நம்பினார். அது மட்டுமல்லா சுபாஸ்கரனும் ஓம் சரவணபவ சுவாமியை தன் வீட்டுக்கும் அழைத்து அதையே செய்தார். விஸ்கி அடித்த கூட்டம் சரவணபவனின் கால் கழுவிய தண்ணி அடித்தது.

இப்போது இந்த வழக்கு விடயத்தில் லைக்கா தொடர்ந்தும் மௌனமாகவே உள்ளது. இது பற்றி பேராசிரியர் பெக்கோ என்ற புனைப்பெயரில் எழுதிவருபவர் நகைச்சுவையாக வருமாறு குறிப்பிட்டார்: “ஓம் சரவணபவ சுவாமியின் வழக்கை சுபாஸ்கரன் சுவாமியும் பிரேம் சுவாமியும் நடத்துவதாக முன்னாள் போட்டியாளரான லெப்ரா பாஸ்கரன் சுவாமி ஐபிசி  ஊடாக கசியவிடுவதாக ஒரு தகவல். லைக்காவின் அபிமானி கண்ணன் சுவாமி அதிர்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதகமாக லைக்காவைக் காப்பாற்ற நாலுவரி போட ஹரோ ஜெ சுவாமி பொங்கி எழ லண்டனில் சுவாமிகளின் மோதல் உக்கிரமடைந்துவிட்டது.  இதுக்குள் தேவா அம்மா இடையாள சைக்கிளோடி ஆட்டையைப் போட்டுவிட்டா என்று ஜெவாலு சாமி பீலிங்கில தண்ணி அடிக்கிறார். சுவாமியின் கால் கழுவின தண்ணியல்ல.”

அடுத்தது என்ன?

ஓம் சரவணபவனினால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறைந்தது மூவர் முரளிகிருஸ்ணன் புலிக்கள்க்கு எதிராக குற்றம்சுமத்தியுள்ளனர்.  பாலியல் வல்லுறவு, பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் முரளிகிருஸ்ணன் புலிக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இவர்களின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டும்  உள்ளது.
யூன் 12ஆம் திகதி ஈலிங் மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் முரளிகிருஸ்ணன் புலிக்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. அவருக்கு பிணையும் மறுக்கப்பட்டது.

அதற்கு ஒரு மாதத்திற்குப் பின் யூலை 10 ஹரோ கிறவுண் கோர்ட்டில் முரளிகிருஸ்ணன் புலிக்களின் பிணை மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவருக்கு பிணை மறுக்கப்பட்டது. முரளிகிருஸ்ணன் புலிக்கள் அரச தரப்பின் சாட்சியங்களை தொந்தரவு செய்வார் என்ற அச்சத்தின் அடிப்படையிலும் பிணை மறுக்கப்பட்டிருக்கலாம் என ஓம் சரவணபவ வின் முன்னாள் பக்தர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

முரளிகிருஸ்ணன் புலிக்களின் வழக்கு டிசம்பர் 5 முதல் ஆறு நாட்கள் நடைபெறுவதற்கு திகதியிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முரளிகிருஸ்ணன் புலிக்கள் விடுதலையாவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாகவும் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டால் தண்டனைக்காலம் முடிவடைந்ததும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்படுவார் என்றும் சட்டவல்லுனர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

முரளிகிருஸ்ணன் புலிக்கள் பிணை மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது அவருடைய வழக்கில் பல்வேறு நெருக்கடிகளையும் ஏற்படுத்தி இருக்கும். ஏனெனில் பொது அமைப்புகளின் ஆணைக்குழுவுக்கு வழங்கிய கணக்கறிக்கையில் அவர்களுடைய பெரும்பாலான சொத்துக்கள் பணம் அல்லது இலகுவில் பணமாக்கக் கூடியதாகவே உள்ளது. மேலும் கணக்கறிக்கைக்கு புறம்பான பெருமளவு நிதியும் வெளியே உள்ளது. இவற்றில் பெருமளவு பங்கை தேவா அம்மா என்ற தெய்வதீஸ்வரியே கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இந்த வழக்குக்கான செலவை யார் செலவு செய்கின்றார்கள் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஓம் சரவணபவ சேவா ரஸ்ட் செலவழிக்கின்றதா அல்லது லைக்கா போன்ற பக்தர்கள் செலவு செய்கின்றார்களா? ஓம் சரவணபவவின் கணக்குக்கு உட்பட்ட, உட்படாத பல மில்லியன் அசையும் அசையா சொத்துக்களுக்கு என்ன நடக்கும்? இவ்வாண்டு முடிவுக்குள் பல முடிச்சுகள் அவிழும். பல முடிச்சவிக்கிகளும் வெளித் தெரிவார்கள்.

லண்டனில் தமிழர்கள் மத்தியில் இவ்வாண்டு நீதிமன்றம் வந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் லண்டனின் செல்வச் செழிப்பு மிக்க பகுதிகளான ஹரோ பார்னற் பகுதியில் இருந்தே வந்துள்ளது. தற்போது ஓம் சரவணபவ சுவாமியும் அவ்விடத்திலேயே கோயில் ஆச்சிரமம் வைத்து வாழ்பவர். பிரேமகுமார் ஆனந்தராஜா, சுப்பிரமணியம் சதானந்தன் ஆகியோர் ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்கள். யாழ் இந்ததுக்கல்லூரி பழைய மாணவர்கள் பள்ளி நண்பர்கள். அப்பிரதேசத்திலேயே வாழ்ந்தவர்கள். பிரேமகுமார் ஆனந்தராஜா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பின்பும் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கிய ஆன்மீக கனவான்களும் கனவாட்டிகளும் இந்தப் பிரதேசத்திலேயே வாழ்கின்றனர்.

இப்பகுதியில் இன்னும் சில ஆன்மீக வாதிகள், கலைஞர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வைத்தால் தங்களையே தூற்றுவார்கள் என்பதால் பல இளம்பெண்கள் தங்கள் மௌனத்தை கலைக்கத் தயங்குவதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகின்றது.

பாலியல் குற்றவாளி பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு 42 பேர் நற்சான்றிதழ் வழங்கியமை ஏற்கனவே தேசம்நெற் இல் அம்பலப்படுத்தப்பட்டது. தற்போது முரளிகிருஸ்ணன் புலிக்கள்க்கும் ஆதரவாக பலர் செயற்பட்டு வருகின்றனர். தங்களுடைய தேவைகளை லாபங்களைக் கருதாமல் அனைத்து வகையான பாலியல் சுரண்டல்கள், பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் எதிரான எண்ணம் அனைவரிடமும் ஏற்பட வேண்டும்.

நன்றி-தேசம் நெற்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.