Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவுக்கு போக ஒரு வழி ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இங்க தமிழர்கள் களவாக வருகிறார்கள் பிடித்து குடுக்கவேணும் என்று சொல்லும் பலரும் தாங்கள் எப்புடி கனடாவுக்கோ வேறுநாட்டுக்கோ வந்தார்கள் என்பதை மறந்து எழுதுகிறார்கள்..

எதை எப்பொழுது செய்தாலும் அதை ஓரளவுக்கேனும் நேர்மையாக செய்ய வேண்டும், தவிர அவாப்பட்டு செய்து எல்லாவற்றையும் இழந்து தற்கொலை செய்யும் நிலைக்கு போகக் கூடாது என்ற நோக்கில் சொன்னால் அதற்கும் சாதி முத்திரை குத்தி எழுதுவது ஏன் என்று தெரியவில்லை.

2 கோடி கொடுத்து களவாய் வந்து அல்லது வராமல் நடுக்கடலில் சாவதை விட 50 லட்ஷம் செலவு செய்து நேர்மையாக வரலாமே என்று சொன்னால் அதில் என்ன தவறு கண்டீர்கள்?

இங்கே களவாய் ஏமாத்தி கூட்டி வரும் ஏஜென்ட் மாரால் எம்மாற்றப் பட்டு வாழ்வில் இனி எழவே முடியா நிலைக்கு சென்ற மக்களின் கண்ணீர்க்கு என்ன பதில்? 

  • Replies 77
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இப்போது இப்படி விசிற் விசாவில் வந்திறங்கியவர்களுக்குப் புதுத் தலைவலி வந்திருக்கு அப்படி வந்தவர்கள் வதிவிடவிசா பெறவேண்டுமாகில் வேலை கண்டுபிடிக்கவேண்டும் அப்படி வேலைக்குச் சேர்க்கவேண்டுமாகில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் கனடா டாலர் வேலை தருனருக்குக் கொடுக்கவேண்டும் எனும் ஒரு வியாபாரமும் ஆரம்பிச்சிருக்கு யாழ்ப்பாணத்திலிருந்து அண்மையில் இப்படி வந்த பெடியன் ஒருவன் தலையில அடிச்சு அழுகிறான், காசுபாக்க இப்ப புதுவழி ஒன்று கிடைச்சிருக்கு நம்மட ஆக்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2023 at 00:27, தனிக்காட்டு ராஜா said:

யாழ்ப்பாணத்துல முட்டி மோதுறாங்களாம்  ஆனால் யாரோ ஒருத்தன் கோடிக்கணக்கில் அடிச்சுட்டு கிளம்பி இருக்கான் 30 லட்சம் , 15லட்சம் கொடுத்த கடிதங்கள் பிரசுரமாகிறது முகநூலில் 

எனக்கு இங்கு எற்படும் அனுபவத்தை க்தையாக எழுதமுடியும்...முடிவாக என்ன நடக்குது என்பதை  இறுதியில் எழுதுகிறேன்...இந்த அனுபவத்தில்  நேரடியாக  ஈடுபட்டுள்ளேன்..நடப்பது என்னவென்று அறிவோம் ..அனுபவத்தை பாடமாக மற்றவர்களுக்கு படிப்பிப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2023 at 07:21, பாலபத்ர ஓணாண்டி said:

வழிகள் பிழை, யாரவது ஏமாற்றுகிறார்கள் அல்லது நல்ல தகவல்கள் அப்படிப்பட்டவற்றைன்சொல்லுங்கள்.. அதவிட்டிட்டு எதுக்கு பதிவுக்கு பதிவு வந்து கனடாவுக்கு வந்து குவிந்துவிடுவார்கள்.. கனடாவும் சிறிலங்கா ஆகிவிடும்… இஞ்ச எதுக்கு வாறாங்கள் ஊரில கிடக்கிறதுக்கு எண்டமாதிரி எதுக்கு வகிறு எரிஞ்சு எழுதுறியள்.. என்ன கனடா என்ன உங்கட அப்பன் ஆத்தாவீட்டு சொத்தா..? இல்லா கனடா முன்னம் வந்த ஆக்களுக்குதான் இனி வாறாக்களுக்கு இல்லை எண்டு அரசாங்கம் சொல்லி இருக்கோ..? யூறோப்பில தமிழ் ஆக்களுக்கு ஒரு பெரிய எண்ணம் இருக்கு.. அதாவது 83 க்கு முன்னம் படிக்க வந்து செட்டில் ஆன ஆக்கள் 83 க்கு பிறகு அகதியா வந்து செட்டில் ஆன ஆக்களை தாழ்த்தப்பட்ட ஆக்கள் போல பாக்குறது.. 83 க்கு பிறகு அகதியா வந்து புள்ளைகுட்டி பெத்து செட்டில் ஆன ஆக்கள் இப்ப ஸ்டுரண்டா வாற ஆக்களை ஏதோ தாழ்த்தப்பட்ட ஆக்கள மாதிரி நினைக்கிறது.. இப்பிடி ஏதோ ஒரு வியாதி உங்கள மாதிரி இந்த திரிகளில் இப்ப என்னத்துக்கு வெளிநாடு வாறாங்கள் கனடா வாறாங்கள் எண்டு கனடால இருந்து கொண்டே எழுதுற ஆக்களுக்கு இருக்கு..

இங்க தமிழர்கள் களவாக வருகிறார்கள் பிடித்து குடுக்கவேணும் என்று சொல்லும் பலரும் தாங்கள் எப்புடி கனடாவுக்கோ வேறுநாட்டுக்கோ வந்தார்கள் என்பதை மறந்து எழுதுகிறார்கள்..

அய்யா ..இந்தவழியில் எவ்வளவு ஏமாற்று வேலை நடக்கிறது என்பதை நான் கண்கூடகப் பார்க்கின்றேன்.. அனுபவம் பெறுகின்றேன் ..அப்படியிருந்தும்..உறவுகளுக்காக முயல்கின்றேன்...என்னைப்போல் எமது இனம் ஆயிரக்கணக்கில் லைனில் நிக்குது...ஆனாலும் ...தண்டச் செலவு என்பதையும் உணர்கின்றேன்....உதவியின்மூலம் நன்மைகிடைத்தால் மகிழ்வேன்..பத்துலட்டசம் கணக்குச் சொன்னது எனது இப்போதைய அனுபவத்தை வைத்துத்தான்...உதாரணமாக போம் ஒன்று நிரப்ப 1000டொலர் ஆகிவிட்டது ..நேற்றைய தினம் அவரிடம் போனபோது போம் நிரப்ப திகதி கேட்டபோது செப்டெம்பர் 27 ம்திகதிதான் தந்தார்...இப்ப விளங்குதா நான் சொன்ன 10 லட்சக் கணக்கு..

Edited by alvayan
எழுத்துப் பிழை திருத்தல்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, alvayan said:

எனக்கு இங்கு எற்படும் அனுபவத்தை க்தையாக எழுதமுடியும்...முடிவாக என்ன நடக்குது என்பதை  இறுதியில் எழுதுகிறேன்...இந்த அனுபவத்தில்  நேரடியாக  ஈடுபட்டுள்ளேன்..நடப்பது என்னவென்று அறிவோம் ..அனுபவத்தை பாடமாக மற்றவர்களுக்கு படிப்பிப்போம்

ம் விபரமாக எழுதுங்கள் பலருக்கு உதவலாம் அல்லவா

  • கருத்துக்கள உறவுகள்

களவாக வரவேண்டாம்’  ..சிங்களவர். வருவது போல்  நேர்மையாக  ..சட்டத்தின் படி வாருங்கள்… என்று கூறும்போது  அதை விளங்கிக் கொள்ள முடியவில்லை    அது விளக்கவில்லை. என்பதும் தெரியாது     நீங்கள் எப்படி போனீங்கள். என்று  திருப்பி கேட்கின்றார்கள். ??. நாங்கள் வந்த போது 

1...இலங்கையில் போர் நடத்தது.  

2...மக்கள்  அடிக்கடி இடம்பெயர்ந்து வாழவேண்டிய சூழ்நிலை இருந்தது 

3....இன்றைய நிலையில்  வெளிநாட்டு வாழ்கின்ற இலங்கை தமிழர்கள்  அனுதினமும். ஆயிரக்கணக்கானோர் இலங்கைக்கு சுற்றுலா வருகிறார்கள்    

4...அன்று  வேலைவாய்ப்பு தேடி  நேர்மையாக  வரும் வாய்ப்புகள் இருக்கவில்லை  ...இன்று வாய்ப்புகள் நிறையவே உண்டு”    ஆனால்  தகுதி வேண்டும்  

வாருங்கள்…   நேர்மையாக வரவேண்டாம்’  .பல கோடிகள் கொடுத்து களவாக வாருங்கள்…   அனுபவங்களை பெறுங்கள்.  வெளிநாட்டில் வாழ்ந்து விட்டு ஊரில் போய் இருப்பவர்களுக்கும்.  புரியவில்லை..தெரியவில்லை என்றால்    மற்றைய மக்களுக்கு எப்படி புரியும் ??தெரியும்??

குறிப்பு...எனது மகள்   இரண்டு வயது இருக்கும் போது   அடுப்பு   சுவிட்சை நிறுத்திய  பின்பும்  கொஞ்சம் வினாடிகள் சிவப்பு ஆக தெரியும்....அதை  தொட்டு  பார்க்க  அவளுக்கு ஆசை   நாங்கள்  சுடும்  தொடக்கூடாது   என எச்சரிக்கை செய்தோம்   ..எங்களை ஏமாற்றி விட்டு ஒரு நாள்   தொட்டு விட்டாள்.  கை  பெரிய தொப்பளமாக. வீங்கி விட்டது ....அதன் பிறகு     எங்களுக்கு அவள் சொல்லி தர தொடங்கி விட்டாள்.... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, alvayan said:

அய்யா ..இந்தவழியில் எவ்வளவு ஏமாற்று வேலை நடக்கிறது என்பதை நான் கண்கூடகப் பார்க்கின்றேன்.. அனுபவம் பெறுகின்றேன் ..அப்படியிருந்தும்..உறவுகளுக்காக முயல்கின்றேன்...என்னைப்போல் எமது இனம் ஆயிரக்கணக்கில் லைனில் நிக்குது...ஆனாலும் ...தண்டச் செலவு என்பதையும் உணர்கின்றேன்....உதவியின்மூலம் நன்மைகிடைத்தால் மகிழ்வேன்..பத்துலட்டசம் கணக்குச் சொன்னது எனது இப்போதைய அனுபவத்தை வைத்துத்தான்...உதாரணமாக போம் ஒன்று நிரப்ப 1000டொலர் ஆகிவிட்டது ..நேற்றைய தினம் அவரிடம் போனபோது போம் நிரப்ப திகதி கேட்டபோது செப்டெம்பர் 27 ம்திகதிதான் தந்தார்...இப்ப விளங்குதா நான் சொன்ன 10 லட்சக் கணக்கு..

இந்த படிவம் நிரப்புவதற்கு 500, 1000 டொலர்கள் என்பதை மட்டும் கொஞ்சம் விளக்குங்கள். இது கனேடிய கனேடிய குடிவரவுத்தளத்தில் இருந்து எடுக்கப் படும் படிவமா அல்லது வேறெதுவும் சுயதயாரிப்பான படிவமா?

4 hours ago, Kandiah57 said:

களவாக வரவேண்டாம்’  ..சிங்களவர். வருவது போல்  நேர்மையாக  ..சட்டத்தின் படி வாருங்கள்… என்று கூறும்போது  அதை விளங்கிக் கொள்ள முடியவில்லை    அது விளக்கவில்லை. என்பதும் தெரியாது     நீங்கள் எப்படி போனீங்கள். என்று  திருப்பி கேட்கின்றார்கள். ??. நாங்கள் வந்த போது 

1...இலங்கையில் போர் நடத்தது.  

2...மக்கள்  அடிக்கடி இடம்பெயர்ந்து வாழவேண்டிய சூழ்நிலை இருந்தது 

3....இன்றைய நிலையில்  வெளிநாட்டு வாழ்கின்ற இலங்கை தமிழர்கள்  அனுதினமும். ஆயிரக்கணக்கானோர் இலங்கைக்கு சுற்றுலா வருகிறார்கள்    

4...அன்று  வேலைவாய்ப்பு தேடி  நேர்மையாக  வரும் வாய்ப்புகள் இருக்கவில்லை  ...இன்று வாய்ப்புகள் நிறையவே உண்டு”    ஆனால்  தகுதி வேண்டும்  

வாருங்கள்…   நேர்மையாக வரவேண்டாம்’  .பல கோடிகள் கொடுத்து களவாக வாருங்கள்…   அனுபவங்களை பெறுங்கள்.  வெளிநாட்டில் வாழ்ந்து விட்டு ஊரில் போய் இருப்பவர்களுக்கும்.  புரியவில்லை..தெரியவில்லை என்றால்    மற்றைய மக்களுக்கு எப்படி புரியும் ??தெரியும்??

குறிப்பு...எனது மகள்   இரண்டு வயது இருக்கும் போது   அடுப்பு   சுவிட்சை நிறுத்திய  பின்பும்  கொஞ்சம் வினாடிகள் சிவப்பு ஆக தெரியும்....அதை  தொட்டு  பார்க்க  அவளுக்கு ஆசை   நாங்கள்  சுடும்  தொடக்கூடாது   என எச்சரிக்கை செய்தோம்   ..எங்களை ஏமாற்றி விட்டு ஒரு நாள்   தொட்டு விட்டாள்.  கை  பெரிய தொப்பளமாக. வீங்கி விட்டது ....அதன் பிறகு     எங்களுக்கு அவள் சொல்லி தர தொடங்கி விட்டாள்.... 🤣

கந்தையா அண்ணா, 

இந்த விடயத்தில் எவ்வளவு சொன்னாலும் சிலர் நாம் சொல்லும் விடயங்களை குதர்க்கமாக எடுத்து, விதண்டாவாதம் தான் செய்வார்கள். ஓணாண்டி மட்டுமல்ல, ஊரில் உள்ள அனேகமானோர் இவ்வாறுதான் தமக்குள் நினைக்கின்றனர். 

நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் காரணங்கள் மிகச் சரியானவை. அவற்றுடன் இன்னும் ஒன்று, இன்று இருக்கும் பொருளாதார நெருக்கடியில் எந்த நாடும் அகதிகளை வாருங்கள் என்று வரவேற்கத் தயாரில்லை. நாட்டின் அரசு இதில் மென்போக்கில் இருந்தாலும், அந்தந்த நாடுகளில் வாழும் மக்கள் இனியும் வரவேற்கத் தயாரில்லை.  இதில் கனடாவும் விதி விலக்கல்ல.

நேற்று இங்கு வந்த முக்கிய செய்திகளில் ஒன்று, அகதிகளுக்கான Shelter homes ளில் இன்னொன்றையும் பூட்டி விட்டனர் என்பது. அத்துடன் நயாகரா தொடக்கம் Ajax வரையுள்ள நகர பிதாக்கள் (மேயர்கள்) தங்களால் நிரம்பி வழியும் அகதிகளால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க முடியவில்லை என்று பெடரல் அரசிடம் உதவி கோருகின்றனர்.

இங்கு, உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்கு என்று உணவு வங்கிகள் (Food bank) சில உள்ளன. முன்னர் இதில் தங்கி இருப்பவர்கள் மிகக் குறைவு. ஆனால், கடந்த ஆண்டின் கோடையில் இருந்து இந்த வங்கிகளில் உணவைப் பெறுகின்றவர்களின் வரிசை நீண்டுக் கொண்டே செல்கின்றது. உள்ளக பொருளாதார நிலை இவ்வாறு இருக்க, மேலும் அகதிகளையும், களவாக வருகின்றவர்களையும் வரவேற்க அரசுகள் தயாரில்லை. இதனால் தான் அண்மையில் ருடோ அரசு, அமெரிக்க எல்லை கடந்து களவாக கனடாவுக்குள் நுழைகின்றவர்களை மீண்டும் அமெரிக்காவுக்கு அனுப்பும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. 

கனடா அரசு பெரும் எண்ணிக்கையில் மாணவர் வீசாக்களை வழங்கி தகுதியானவர்களை (cream) உள்ளே அரவணைத்துக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஒரு கனடிய பிரஜையின் பிள்ளைக்கு கனடிய அரசு பாலர் வகுப்பில் இருந்து 12 ஆம் ஆண்டு வரைக்கும் இலவசமாக கல்வி ஊட்ட பெருமளவு பணத்தை செலவழிக்கின்றது. ஆனால், மாணவ வீசா பெற்று வருகின்றவர்களுக்கு இப்படி செலவழிக்க தேவையில்லை என்பதுடன், மூன்று மடங்கு அதிகமாக கல்வி கற்க கட்டணம் அறவிட்டு அவர்கள் மூலம் பெருமளவு வருமானத்தையும் பெற்றுக் கொள்கின்றது, இவ்வாறு student visa களில் வந்தவர்களில் 90 வீதமானோர் முதலில் work permit பெற்று பின் நிரந்தர வதிவுடமை வீசா (PR) பெற்று ஈற்றில் சிட்டிசன் ஆக மாறுவதால், அவர்கள் கனடாவுக்கு வருமானவரி கட்டுகின்றவர்களாகவும், ஜிஎஸ்ரி கட்டுகின்றவர்களாகவும் ஆகி மேலும் நன்மை அடைகின்றது கனடா.

Shelter home மூடல்:

https://www.cp24.com/news/with-another-toronto-shelter-hotel-to-close-residents-call-for-action-from-new-mayor-1.6481804

Ajax மேயர் உதவி கோரல்

https://globalnews.ca/news/9833538/ajax-ont-refugees-shelter-crisis/

36 minutes ago, Justin said:

இந்த படிவம் நிரப்புவதற்கு 500, 1000 டொலர்கள் என்பதை மட்டும் கொஞ்சம் விளக்குங்கள். இது கனேடிய கனேடிய குடிவரவுத்தளத்தில் இருந்து எடுக்கப் படும் படிவமா அல்லது வேறெதுவும் சுயதயாரிப்பான படிவமா?

6 வருடங்களுக்கு முன் என் மச்சான் தன் தாயை சுப்பர் வீசாவில் கூப்பிட தமிழ் லோயர் ஒருவரது அலுவலகம் சென்று அவரிடம் உதவி பெற முற்பட்டார். அந்த லோயர், இப்படி Forms களை நிரப்ப கேட்ட கட்டணம் $850 CAD. 

நான் பின்னர் அந்த Forms களை நிரப்பி கொடுத்தேன். 3 மாதங்களில் தாய் இங்கு வந்தடைந்தார்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிழலி said:

அப்ப நான் ஊகித்தது போல, கனேடிய குடிவரவுத் தளத்தில் இருக்கும் விண்ணப்பத்தில், விண்ணப்பதாரியின் தகவல்களை நிரப்பத் தான் இந்தத் தொகை! இதற்குத் தான் 1000 டொலர்கள் எடுக்கிறார்கள் என்றால் இந்தப் பகல் கொள்ளைக்காரர்களின் குடும்பத்தின் வயிற்றில் இந்தப் பணம் ஒட்டாதென்று தான் நினைக்கிறேன் - இப்படிப் பகல் கொள்ளை அடித்துக் கொண்டு எப்படித் தான் இரவில் தூங்குகிறார்கள் இவர்கள்?   

மறுபக்கம் விண்ணப்பதாரிகளிடம் கேட்பது:  

1. அமெரிக்காவில் இருப்பது போல, மொழிப் பிரச்சினை காரணமாக உதவி தேவைப்படும் குடியேறிகளுக்கு உதவும் அரசுசாரா அமைப்புகளின் சேவையைப் பெற முடியாதா?

2. குடும்பத்திலிருக்கும் இளையோரின் உதவி மொழிப்பிரச்சினையுடையோரின் விண்ணப்பங்களை நிரப்ப உதவாதா? 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, நிழலி said:

நன்றிகள் பல கோடி.....உங்கள் பதிலுக்கும்  நேரத்திற்கும்  🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இந்த படிவம் நிரப்புவதற்கு 500, 1000 டொலர்கள் என்பதை மட்டும் கொஞ்சம் விளக்குங்கள். இது கனேடிய கனேடிய குடிவரவுத்தளத்தில் இருந்து எடுக்கப் படும் படிவமா அல்லது வேறெதுவும் சுயதயாரிப்பான படிவமா?

அந்த போமில் என்ன சூட்சுமம் இருக்கென்று  அறிவதற்கே முயல்கின்றேன்...2 மணித்தியாலம் அவருடன் செலவழித்து போம் நிரப்ப வேண்டும் ..அதுவும் ஒன் லைனில் . கையில் என்ன தேவை என்பதைக் குறிப்புக்களூம் தந்துள்ளனர்...ஒரு 2 கிழமை இருக்கு..இந்த திகதிகூட எங்கள் அயலவர் ஒருவர் சிபார்சின் மூலம் கிடைத்தது..கனடா வரும் வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதற்காக ...தெரிந்தும் ..இந்தவழியை தேர்வு செய்தேன்...பார்ப்பம் என்ன நடக்குது என்பதை...தோல்வியிலும் முடியலாம்...ஒரு சிலருக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே இம்முயற்சி...இதில் சுத்து மாத்து என்பதற்கு இடமில்லை...முறையான் அழுத்தமான போம் நிரப்பல் என்பதே  முழுக்காரணம்...சந்தர்ப்பம் இருக்கும்போது அதை பயன்பட்த்த்வே முனைகின்றேன்...அதிர்ஸ்டம் அவங்கள்  பக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

மறுபக்கம் விண்ணப்பதாரிகளிடம் கேட்பது:  

1. அமெரிக்காவில் இருப்பது போல, மொழிப் பிரச்சினை காரணமாக உதவி தேவைப்படும் குடியேறிகளுக்கு உதவும் அரசுசாரா அமைப்புகளின் சேவையைப் பெற முடியாதா?

2. குடும்பத்திலிருக்கும் இளையோரின் உதவி மொழிப்பிரச்சினையுடையோரின் விண்ணப்பங்களை நிரப்ப உதவாதா? 

35 வருடம் இந்தநாட்டில் வாழ்பவர்களுகு மொழிதடையாக இருக்காது  என்பது என் கருத்து...பிள்ளைகழும் அந்த தகுதிகள் கொண்டவர்கள்தான்...ஆனால் இந்தவிடையத்தில் போம் நிரப்ப  உள்ள சூட்சுமத்தை கில்லாடிகளால் தான் முடியும் என்பதே எனது கருத்து..சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தாவிடின் பின் கவலைப்படவேண்டிவரும்..முயல்வோம் ..முடிந்தால் அவர்களும் வரட்டுமே

51 minutes ago, Justin said:

அப்ப நான் ஊகித்தது போல, கனேடிய குடிவரவுத் தளத்தில் இருக்கும் விண்ணப்பத்தில், விண்ணப்பதாரியின் தகவல்களை நிரப்பத் தான் இந்தத் தொகை! இதற்குத் தான் 1000 டொலர்கள் எடுக்கிறார்கள் என்றால் இந்தப் பகல் கொள்ளைக்காரர்களின் குடும்பத்தின் வயிற்றில் இந்தப் பணம் ஒட்டாதென்று தான் நினைக்கிறேன் - இப்படிப் பகல் கொள்ளை அடித்துக் கொண்டு எப்படித் தான் இரவில் தூங்குகிறார்கள் இவர்கள்?   

மறுபக்கம் விண்ணப்பதாரிகளிடம் கேட்பது:  

1. அமெரிக்காவில் இருப்பது போல, மொழிப் பிரச்சினை காரணமாக உதவி தேவைப்படும் குடியேறிகளுக்கு உதவும் அரசுசாரா அமைப்புகளின் சேவையைப் பெற முடியாதா?

2. குடும்பத்திலிருக்கும் இளையோரின் உதவி மொழிப்பிரச்சினையுடையோரின் விண்ணப்பங்களை நிரப்ப உதவாதா? 

படிவங்களை நிரப்புதல் மட்டுமல்ல, ஸ்பொன்சர் கடிதம் எழுதுதல், சரியான ஆவணங்களில் இருந்து குடும்ப வருமானத்தை கணித்து போடுதல் (T4 / Tax statements), புகைப்படங்களின் அளவு சரியாக இருக்குதா என பார்த்தல் போன்றவையும் அடங்கும். கொஞ்சம் சினம் பிடித்த வேலை இது. படிவங்களில் கேட்கப்படும் கேள்விகள் சில சற்று குழப்பமானவையும் உண்டு. பொறுமையாக நிரப்ப வேண்டும்.

என் நண்பரின் தாயாருக்காக நான் நிரப்பிக் கொடுத்த படிவங்கள். Application form முடன் இவை தேவை.

1. Invitation letter
2. Declaration: Signed and attested by barrister - Attestation கட்டாயம் தேவை என்று இல்லை. கொடுத்தால் நல்லது
3. Proof of relationship: Birth certificate to show  relationship
4. Proof of visa status : Landing paper (Permanent residence) / passport
5. Proof of Income:
6. Proof of property: property tax 

Edited by நிழலி
விடுபட்டதை சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, alvayan said:

அந்த போமில் என்ன சூட்சுமம் இருக்கென்று  அறிவதற்கே முயல்கின்றேன்...2 மணித்தியாலம் அவருடன் செலவழித்து போம் நிரப்ப வேண்டும் ..அதுவும் ஒன் லைனில் . கையில் என்ன தேவை என்பதைக் குறிப்புக்களூம் தந்துள்ளனர்...ஒரு 2 கிழமை இருக்கு..இந்த திகதிகூட எங்கள் அயலவர் ஒருவர் சிபார்சின் மூலம் கிடைத்தது..கனடா வரும் வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதற்காக ...தெரிந்தும் ..இந்தவழியை தேர்வு செய்தேன்...பார்ப்பம் என்ன நடக்குது என்பதை...தோல்வியிலும் முடியலாம்...ஒரு சிலருக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே இம்முயற்சி...இதில் சுத்து மாத்து என்பதற்கு இடமில்லை...முறையான் அழுத்தமான போம் நிரப்பல் என்பதே  முழுக்காரணம்...சந்தர்ப்பம் இருக்கும்போது அதை பயன்பட்த்த்வே முனைகின்றேன்...அதிர்ஸ்டம் அவங்கள்  பக்கம்

நான் ஊகிப்பது: அதில் ஒரு சூட்சுமமும் இருக்காது. உங்களுக்கு ஆர்வமிருந்தால், அந்த விண்ணப்பத்தின் எண்ணைத் தேடிக் கண்டறிய முயலுங்கள். உதாரணமாக IMM0008. இது பொதுவாக எல்லா விண்ணப்பங்களோடும் நிரப்ப வேண்டிய ஒரு படிவம். இது போல ஒரு IMM எண் இருக்கும். கீழே இருக்கும் இணைப்பையும் நேரம் கிடைக்கையில் பாருங்கள்.

https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/news/video/forms-basics.html

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Justin said:

அப்ப நான் ஊகித்தது போல, கனேடிய குடிவரவுத் தளத்தில் இருக்கும் விண்ணப்பத்தில், விண்ணப்பதாரியின் தகவல்களை நிரப்பத் தான் இந்தத் தொகை! இதற்குத் தான் 1000 டொலர்கள் எடுக்கிறார்கள் என்றால் இந்தப் பகல் கொள்ளைக்காரர்களின் குடும்பத்தின் வயிற்றில் இந்தப் பணம் ஒட்டாதென்று தான் நினைக்கிறேன் - இப்படிப் பகல் கொள்ளை அடித்துக் கொண்டு எப்படித் தான் இரவில் தூங்குகிறார்கள் இவர்கள்?   

மறுபக்கம் விண்ணப்பதாரிகளிடம் கேட்பது:  

1. அமெரிக்காவில் இருப்பது போல, மொழிப் பிரச்சினை காரணமாக உதவி தேவைப்படும் குடியேறிகளுக்கு உதவும் அரசுசாரா அமைப்புகளின் சேவையைப் பெற முடியாதா?

2. குடும்பத்திலிருக்கும் இளையோரின் உதவி மொழிப்பிரச்சினையுடையோரின் விண்ணப்பங்களை நிரப்ப உதவாதா? 

இங்கு ஜேர்மனியில் ஒருவர்  அகதிகளுக்குகான கோரிக்கை  எழுத்து கொடுப்பவர்   கிட்டத்தட்ட 2000 யூரோ    அது அநேகமாக ஏற்றுக்கொள்ளப்படும்.  காரணம் என்ன  சட்டத்தின்படி  அகதி அஸ்தஸ்து கொடுக்கபடுமே     அதற்கு அமைய எழுதி கொடுப்பார்.  ..நிராகரிக்கப்படும் பட்சத்தில்   அவரே. மருத்துவரிடம் அழைத்து சென்று   குறிப்பிட்ட நபருக்கு  முளையிலேயே சுகமில்லை    அதாவது மனநலம்  பதிக்கப்பட்ட நபர் என்று   மருத்துவ சான்றிதழ் பெற்று   இங்கே இருப்பதற்கான விசாவை எடுத்து தருவார்   ...இதுக்கு 2000 என்ன 4000 கொடுக்கவும் ஆள்கள் உண்டு”   இது உண்மை  நீங்கள் நம்பவில்லை என்று நான் கவலைப்படமாட்டேன். 🤣😂

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் எழுதிக்கொண்டிருப்பது ஊரிலிருப்பவர்களின் குரலாக.. எனக்கு இதில் எழுதிக்கொண்டிருக்கவேண்டிய தேவை இல்லை.... நானும் என் பிள்ளைகளும் ஜரோப்பா குடியுரிமை எடுத்து வச்சுக்கொண்டு எல்லா சுகபோகங்களை அனுபவித்துவிட்டு நாளைக்கு ஒரு பிரச்சினை எண்டால் எந்த நாட்டுக்கும் போகக்கூடிய நிலைமையில் இருந்துகொண்டு மற்றவர்களை போகாதே ஊரில் இரு வெளிநாடு போனால் ஊரில் தமிழரின் சனத்தொகை குறைந்துவிடும் எண்டு சொல்லமாட்டன்.. சனத்தொகை கூடவேணும் எண்டால் வெளிநாட்டில் இருப்பவர்களிடம் ஊரில் வந்து இருங்கள் எண்டு கேட்பேன்.. ஏனெனில் நாளைக்கு பிரச்சினை எண்டால் அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் மறுபடியும் வெளிநாடுகளுக்கு வந்துவிடலாம்.. அப்பிடி ஒரு நிலமைககு ஊரில் இருப்பவர்களும் வரட்டுக்கும் என்றே நான்(ஊரில் இருப்பவர்களும் நினைக்கிறார்கள்) நினைப்பேன்.. இப்ப ஊரில் பிரச்சினை இல்லை ஏன் வெளிநாடு வாறியள் எண்டு சொல்லும் வெளிநாடுகளில் குடிஉரிமை பெற்று இருப்பவர்கள் ஊரில் பிரச்சினை இல்லை என்றால் பிள்ளைகுட்டியளோட ஊருக்கு போய் இருக்கலாம்தானே.. தாங்கள் மட்டும் போகமாட்டினமாம் தங்கட பிள்ளையள் இங்க நல்ல வாழ்க்கை வாளோணும் ஆனா ஊரில் இருக்கிறவன் அங்கையே இருந்து சனத்தொகையை கூட்டவேணும்,.. ம்ம்.. நல்லா இருக்கு இந்த நியாயம்..😂

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிலரை தவிர இங்கு பலரும் எழுதும் அட்வைஸ் நேர்மையாக வருபவர்களில் மிக உயர் தகுதி உள்ளவர்களுக்கே எழுதுகிறார்கள் அட்வைஸ் எழுதுகிறார்கள்.. இங்கு யாழில் எழுதும் 99 வீதம் பேரும் இந்த உயர் தகுதி உள்ளவர்கள்.. நமக்கு நோர்மலாயே தெரியவேணும் இந்த உயர்தகுதிக்கு உரிய்வர்களாக நாங்கள் மாறும்போதே நமக்கு அறிவு எங்கயோ வளர்ந்திருக்கும்.. இந்த அட்வைஸ் எதுவும் தேவைப்படாது இந்த உயர்தகுதி உடையவர்களுக்கு.. நான் எழுதுவது எல்லாம் இந்தளவு IQ இல்லாத சாதாரண மக்களை மனதில் வைத்துக்கொண்டே.. அவர்கள் எப்படியாவது நேர்மையான வழியிலோ(டிரைவர்,முதியோர்களைபராமரிப்பார்கள்..எக்ஸட்ரா) அல்லது களவாகவோ(விசிட் விசாவில் வந்து அகதியாகவோ) வந்து செட்டிலாகட்டும் என்ற எண்ணத்திலேயே.. 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நியாயமான கருத்துக்கள் தான்! ஆனால், கல்வி, தொழில், மொழியறிவு ரீதியில் எல்லா மட்டத்திலும் இருப்போரிடையே பரிமாற்றம் இருந்தால் நல்லதென நினைத்தேன். உங்கள் கருத்தைப் பார்த்த பின்னர் அப்படியல்ல என்று புரிந்தது! 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இந்தப் பகல் கொள்ளைக்காரர்களின் குடும்பத்தின் வயிற்றில் இந்தப் பணம் ஒட்டாதென்று தான் நினைக்கிறேன் - இப்படிப் பகல் கொள்ளை அடித்துக் கொண்டு எப்படித் தான் இரவில் தூங்குகிறார்கள் இவர்கள்?   

இப்படிபட்டவர்களிடம் நிர்வாகம் சென்றால் மோசடிகளில் இந்தியாவையே முறியடித்துவிடுவார்கள்.

3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அவர்கள் எப்படியாவது நேர்மையான வழியிலோ(டிரைவர்,முதியோர்களைபராமரிப்பார்கள்..எக்ஸட்ரா) அல்லது களவாகவோ(விசிட் விசாவில் வந்து அகதியாகவோ) வந்து செட்டிலாகட்டும் என்ற எண்ணத்திலேயே.. 

விளங்கி கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இங்கு நான் எழுதிக்கொண்டிருப்பது ஊரிலிருப்பவர்களின் குரலாக.. எனக்கு இதில் எழுதிக்கொண்டிருக்கவேண்டிய தேவை இல்லை.... நானும் என் பிள்ளைகளும் ஜரோப்பா குடியுரிமை எடுத்து வச்சுக்கொண்டு எல்லா சுகபோகங்களை அனுபவித்துவிட்டு நாளைக்கு ஒரு பிரச்சினை எண்டால் எந்த நாட்டுக்கும் போகக்கூடிய நிலைமையில் இருந்துகொண்டு மற்றவர்களை போகாதே ஊரில் இரு வெளிநாடு போனால் ஊரில் தமிழரின் சனத்தொகை குறைந்துவிடும் எண்டு சொல்லமாட்டன்.. சனத்தொகை கூடவேணும் எண்டால் வெளிநாட்டில் இருப்பவர்களிடம் ஊரில் வந்து இருங்கள் எண்டு கேட்பேன்.. ஏனெனில் நாளைக்கு பிரச்சினை எண்டால் அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் மறுபடியும் வெளிநாடுகளுக்கு வந்துவிடலாம்.. அப்பிடி ஒரு நிலமைககு ஊரில் இருப்பவர்களும் வரட்டுக்கும் என்றே நான்(ஊரில் இருப்பவர்களும் நினைக்கிறார்கள்) நினைப்பேன்.. இப்ப ஊரில் பிரச்சினை இல்லை ஏன் வெளிநாடு வாறியள் எண்டு சொல்லும் வெளிநாடுகளில் குடிஉரிமை பெற்று இருப்பவர்கள் ஊரில் பிரச்சினை இல்லை என்றால் பிள்ளைகுட்டியளோட ஊருக்கு போய் இருக்கலாம்தானே.. தாங்கள் மட்டும் போகமாட்டினமாம் தங்கட பிள்ளையள் இங்க நல்ல வாழ்க்கை வாளோணும் ஆனா ஊரில் இருக்கிறவன் அங்கையே இருந்து சனத்தொகையை கூட்டவேணும்,.. ம்ம்.. நல்லா இருக்கு இந்த நியாயம்..😂

ஓணாண்டி. நீங்கள் வெளிநாட்டில் வாழ்ந்திருகிறீர்கள்  உங்களுக்கு வெளிநாடு பற்றி தெரியும்...எந்தவொரு இலங்கை தமிழனும்   இலங்கையிலிருந்து தமிழர்களை அழைத்து  விசா வழங்கும் ஆற்றல்மிக்கவர்களில்லை    ..நீங்கள் ஏன் இலங்கை தமிழர்களை நீங்கள் இருந்த நாட்டில் குடியமர்த்தவில்லை  ?? அல்லது எத்தனை ஆயிரக்கணக்கானோரை குடியமர்த்தியுள்ளீர்கள்??    

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண மக்களை மனதில் வைத்துக்கொண்டே.. அவர்கள் எப்படியாவது நேர்மையான வழியிலோ(டிரைவர்,முதியோர்களைபராமரிப்பார்கள்..எக்ஸட்ரா) அல்லது களவாகவோ(விசிட் விசாவில் வந்து அகதியாகவோ) வந்து செட்டிலாகட்டும் என்ற எண்ணத்திலேயே.. 

 செட்டிலாவது முன்பு போல இலகுவாக இல்லை என்பது தான் சொல்ல விழைகிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரு சிலரை தவிர இங்கு பலரும் எழுதும் அட்வைஸ் நேர்மையாக வருபவர்களில் மிக உயர் தகுதி உள்ளவர்களுக்கே எழுதுகிறார்கள் அட்வைஸ் எழுதுகிறார்கள்.. இங்கு யாழில் எழுதும் 99 வீதம் பேரும் இந்த உயர் தகுதி உள்ளவர்கள்.. நமக்கு நோர்மலாயே தெரியவேணும் இந்த உயர்தகுதிக்கு உரிய்வர்களாக நாங்கள் மாறும்போதே நமக்கு அறிவு எங்கயோ வளர்ந்திருக்கும்.. இந்த அட்வைஸ் எதுவும் தேவைப்படாது இந்த உயர்தகுதி உடையவர்களுக்கு.. நான் எழுதுவது எல்லாம் இந்தளவு IQ இல்லாத சாதாரண மக்களை மனதில் வைத்துக்கொண்டே.. அவர்கள் எப்படியாவது நேர்மையான வழியிலோ(டிரைவர்,முதியோர்களைபராமரிப்பார்கள்..எக்ஸட்ரா) அல்லது களவாகவோ(விசிட் விசாவில் வந்து அகதியாகவோ) வந்து செட்டிலாகட்டும் என்ற எண்ணத்திலேயே.. 

எனது  சகோதரம்   சுவிஸ் நாட்டில்  வயோதிபர் இல்லத்தில் வேலை செய்தவர்.   கனடாவில்   வேலைவாய்ப்பு இருந்தும்கூட  வேலை செய்ய அனுமதிக்கவில்லை  மூன்று ஆண்டுகள் சொந்த செலவில் படித்து தான் வேலை செய்தார்  அதுக்கும்  வேறு நாட்டுகாரர்கள் கடும் போட்டி    இந்த வேலையும் உயர்

தகுதியானது 

நாங்கள்  இங்கே வந்த முறையையும்.  வாழ்கின்ற வாழ்க்கையையும் கடுமையாக விமர்சிப்பது  சிறந்த சிந்தனைகள் இல்லை. எங்களுக்கு யார்  உதவி செய்தார்கள்..எவருமில்லை  நாங்களும் பல கஸரங்களுக்கு மத்தியில் காடு மலை கடல்  எல்லாம் கடந்து    நாளை என்ன நடக்கும்  என்று தெரியாமல் வந்தோம்    சந்தப்பங்களையும்.  இருக்கும் நாட்டில் உள்ள சட்டங்களையும் சரியான முறையில் பயன்படுத்தினோம்   இன்று அனேகமாக முகவர்கள்தான் மக்களை  சட்டத்துக்கு புறம்பாகவும்  சந்தர்ப்பங்களை பிழையுடன் விளங்கபடுத்தி   ஏமாற்றி உழைக்கிறார்கள். இதன் விளைவாக  அண்மையில்  சாவகச்சேரி கல்வயலை  சேர்ந்த மூன்று அல்லது நாலு  பிள்ளைகளின்  தகப்பன். வியட்னாம் நாட்டில் தற்கொலை செய்தார்  ..ஏன்  கனடா  வர முடியவில்லை??  பதில் தருக. ..நாங்களும்  இலங்கையில் இருப்பவர்கள் இங்கே குடியேறுவதை விரும்புகிறோம்   ...அதன் காரணமாக நேரத்தை செலவிட்டு எழுதுகிறோமில்லையா?? சட்டம் என்ன என்பதை சொன்னால்    நாங்கள் விரும்பவில்லை என பொருள் கொள்ள கூடாது 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2023 at 23:01, விளங்க நினைப்பவன் said:

கந்தையா அண்ணா,
பாலபத்ர ஓணாண்டி சொல்ல வந்த கருத்து சாமானியன் அவர்களுக்கானது அல்ல என்றே நம்புகிறேன்.

ஆமாம் 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2023 at 09:31, சுவைப்பிரியன் said:

கந்தையர் .ஓணான்டி சொன்னது வணங்காமுடி சொன்ன கருத்துக்கு.அவர் என்ன சொன்னவர் என்டு ஒருக்கா வடிவாய் பாருங்கோ.அவர் சொன்னதின் சாரம்சம்.நாட்டில் உள்ளவர்கள் வெளியேறக்கூடாது என்ற அடிப்படையில்.அதுக்குத்தான் ஓன்னான்டியர் வெளி நாட்டில் வசித்துக் கொன்டு ஊரில் இருப்பவர்களை வெளிகிட வேண்டாம் என்று சொன்னால் தவறாக விழங்கப்படும் என்று.

சொன்ன விடயம் எனக்கு விளங்கியது   பெயரை மாறி எழுதி விட்டேன்    இருப்பினும் கருத்துகள் எங்கிருந்தும்   எழுதலாம்    இல்லையா??   இலங்கையில் இருந்து கொண்டு வாய்ப்புகள் இருக்கும் போதும்  வெளிநாடு போகாதே என்பது எப்படி சரியாககும்??     வெளிநாட்டு இருந்து கொண்டு   வாய்ப்புகள் இல்லாத போது  வாராதே என்பது  எப்படி பிழையாகும்.??

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எப்படியாவது நேர்மையான வழியிலோ(டிரைவர்,முதியோர்களைபராமரிப்பார்கள்..எக்ஸட்ரா) அல்லது களவாகவோ(விசிட் விசாவில் வந்து அகதியாகவோ) வந்து செட்டிலாகட்டும் என்ற எண்ணத்திலேயே.. 

 முதலில் விசிட்டிங் விசாவில்  வந்தால் அகதி அந்தஸ்து கிடைப்பது என்பது குதிரை கொம்பு, திருப்பி அனுப்பப்பட எல்லா காரணங்களும் அதிகாரிகளுக்கு இருக்கும். அப்படியும் அகதி அந்தஸ்து கிடைத்தாலும் அதன் பிறகு பி ஆர் எடுப்பது என்பது பல வருட காத்திருப்பு. ஆகவே  அந்த வகையில் இங்கே வந்து வாழ முனைவது வலியைத் தரும்.

 ஆனால் விசிட்டிங் விசாவில் வந்து அதன்பின்னர்  உங்களிடம் ஒரு 30 லிருந்து 50 ஆயிரம் டாலர் வரை இருந்தால்  பல தொழில் நடத்துவோர் உங்களுக்கு வேலை தரலாம் அந்த வேலை ஒரு மூன்று வருடங்களில் உங்களுக்கு பிஆர் எடுத்து தரலாம்.

 இன்னொரு மிக இலகுவான வழி ஒன்று உண்டு. ஆனால் அதை செய்வதற்கு முயற்சி இல்லை. ஸ்டுடென்ட் விசாவில் வருவது தான் அது. உங்களுக்கு 20 -25 வயதுக்குள் இருந்தால் IELTS எக்ஸாம் கொடுத்து குறைந்தது 6 புள்ளிகளாவது எடுத்து இருந்தால் இங்கே சமையல்காரர் ஆக படிக்கவோ, அல்லது நோயாளிகளை பராமரிப்பது சம்பந்தமாக படிக்கவும்  வரலாம், அதை படித்து முடிப்பதற்கு ஆகக்கூடியது 20,000- 30,000  டாலர்ஸ் வரை தான் முடியும். தவிர படிக்கும் காலத்தில் பகுதி நேர வேலையும் செய்ய முடியும். அந்தப் பகுதி நேர வேலை உங்களுடைய  சாப்பாடு தங்கமடத்துக்கு போதுமானதாக இருக்கும். ஆனால் வந்து படித்து முடிந்து முழு நேர வேலை கிடைக்கும் வரையும் உங்களால் உங்கள் குடும்பத்துக்கோ வேறு யாருக்கோ எந்த உதவியும்  செய்ய முடியாது. படிப்பு முடிந்ததும் உடனே நல்ல வேலையும் கிடைக்கும், அடுத்த ஓரிரு வருடங்களுக்குள் கனடியன் PR கிடைத்துவிடும். இப்படி யாருக்காவது வருவதற்கு விருப்பமும் தகுதியும் முயற்சியும் இருந்தால் அறியத் தாருங்கள் நானே முன் ஒன்று உதவி செய்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.